விழியால் தொட்ட அழகே – 3

Loading

அத்தியாயம் – 3

“பார்வையாலேயே பொசுக்கிடுவ போலயே, நான் சும்மா டீஸ் பண்ணேன் மா, இப்படியெல்லாம் முறைக்காதே” என்று கேலி தொனியில் கூறியவனை, அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தவள், வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்,…

“என்ன நித்து கோச்சுகிட்டியா” அவனது நித்து என்ற அழைப்பில் விறுட்டென்று அவன் முகத்தை நோக்கியவள்,…”என் பேரு நித்யஸ்ரீ, நித்யான்னு கூப்பிடுங்க, இல்ல ஸ்ரீன்னு கூப்பிடுங்க, இந்த நித்து சத்துலாம் வேணாம்” என்றாள் சிறுகுரலில்,…

“என் பொண்டாட்டியை நான் எனக்கு பிடிச்ச மாதிரி தான் கூப்பிடுவேன், இதை பத்தி அப்புறம் ஆர்கியூ பண்ணிக்கலாம், ரொம்ப நேரமா ஏதோ சொல்ல வந்தியே அதை ஜவ்வா இழுக்காம சட்டுனு சொல்லு கேட்போம்” அவன் கேட்ட பிறகு தான் அவளுக்கு அதனை பற்றிய நினைவே வந்தது, கரங்களை பிசைந்தபடி வாய் வரை வந்ததை சொல்ல முடியாமல் திணறியவளுக்கு எவ்வளவு முயன்றும் அதை பற்றி கூற வார்த்தைகள் வெளிவரவில்லை,…

“நான்… நாளைக்கு சொல்லட்டுமா?” தன்னால் இன்று நிச்சயமாக சொல்ல முடியாது என்பதை உணர்ந்து, ஒரு நாள் நன்றாக மனதை திடப்படுத்திக் கொண்டு பிறகு சொல்லலாம் என்று முடிவெடுத்தாள்…

அவனும் “ஓகே” என்று தோள்களை குலுக்கியவன்…. “இப்போ என்ன பண்ணலாம்” என்றான் குறும்பு பார்வையுடன்,…

அவனது கேள்வியில் பதற்றப்பட்டவள்,… “என்ன பண்ணனும், தூங்கனும்” என்றாள் மெல்லிய குரலில்,…

சின்னதாக சிரித்தவன்,.., “இந்த ஜூவல்ஸ் பட்டுபுடவை இதோடையே படுத்துக்க போறியா? இல்ல சேஞ்ச் பண்ணிட்டு வரியா?” என்றான்….

“அது” அதற்கும் விழித்தவள், அவனது பார்வை தன் மீதே நிலை குத்தி இருப்பதை கண்டு கொண்டு,… “நீங்க தூங்குங்க, நான் மாத்திக்கிறேன்” என்றாள்….

“லைட் ஆஃப் பண்ணாம எனக்கு தூக்கம் வராது” அவன் உதட்டை பிதுக்கவும், அவளுக்கு தான் திண்டாட்டமாகி போனது, அவன் முன்னிலையில் நிற்கவே ஒரு மாதிரி கூச்சமாக இருந்தது, இதில் நகைகளை கழட்டிவிட்டு, தன் உடை எங்கே என்று என தேடி போய் மாத்தனும், அதை நினைத்தாளே அவளுக்கு என்னவோ செய்தது உள்ளுக்குள்,…

“கஷ்டமா இருந்தா நான் வேணும்னா” அவன் வார்த்தையை முடிக்கும் முன்னே,… “இல்ல வேணாம்” என்று அவசரமாக மறுத்தவள்…  “நானே பார்த்துகிறேன்” என்றாள்…

அவன் தலைக்கு கரத்தினால் முட்டுகைகொடுத்து படுத்துக் கொண்டான் அவளை வெறிக்க வெறிக்க பார்த்துக் கொண்டே, இப்படி பார்த்தால் அவளால் எப்படி தன் வேலையை செய்ய முடியும், கூச்ச நிலையிலேயே நின்றாள், ஆங்காங்கே தலையை நிமிர்த்தி நிமிர்த்தி பார்த்து விட்டு கீழே குனிந்தபடி இருந்தாள், அவளது செயல்கள் ஒவ்வொன்றும் அவனை ரசிக்க வைக்க, அவள் படும் பாடு தெரிந்தும் தெரியாமல் அவளை அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான்,…

நேரங்கள் கடந்ததே தவிர, அவள் நகைகளை கழட்வும் இல்லை, அவன் அவளை பார்ப்பதை நிறுத்தவும் இல்லை, தன்னை நினைத்து சிரித்துக் கொண்டவன் அவள் இன்னமும் சிலை போல் நின்றிருப்பதை கண்டு,… “ட்ரஸ்ஸிங் ரூம் அங்கே இருக்கு, உள்ளே இருக்க வாட்ரோப்ல உன்னோட திங்ஸ் எல்லாம் இருக்கு” அவன் சொன்னது தான் தாமதம், விறுவிறுவென்று அவ்வறைக்குள் நுழைந்து கொண்டாள், அவள் ஓடும் வேகத்தை கண்டு ரிஷியின் உதட்டில் பெரிய புன்னகை ஒன்று வந்து ஒட்டியது,…

அடுத்த அரை மணி நேரத்திற்கு பிறகு தான் ட்ரஸ்ஸிங் அறையை விட்டே வெளிவந்தாள் நித்யா, வேண்டுமென்றே மெதுமெதுவாக தன் வேலைகளை செய்து முடித்தவள், ‘அவன் தூங்கிருக்கணும்’ என்ற பிராத்தனையோடு வெளிவந்தவள், அவன் படுத்தவாக்கிலேயே போனை நோண்டி கொண்டிருப்பதை கண்டு, நம் பிராத்தனை அனைத்தும் வீணாக்கி விட்டதே என்பது போல் நின்றாள் பரிதாபமாக,…

போனிலிருந்து கண்ணை விலக்கி மனைவியை பார்த்தான், பூனம் சேலை ஒன்றை கட்டியிருந்தாள், நகைகள் அனைத்தும் கழட்டபட்டிருந்தது, கழுத்தில் அவன் கட்டிய மஞ்சள் கயிரோடு சேர்த்து அவள் எப்போதும் அணிந்தே இருக்கும் மெல்லிய சங்கிலி ஒன்று கழுத்தை சற்று ஒட்டினால் போல் தொங்கி கொண்டிருந்தது, தலையிலிருந்த மல்லிகை சரம் அப்படியே தான் இருந்தது, தற்போது வேறு விதமான அழகோடு தெரிந்தாள், அப்படியே அள்ளி முத்தமிடனும் போலிருந்தது அவனுக்கு, பயந்து விடுவாளே என்று தன் உணர்ச்சிகளை கட்டு படுத்திக் கொண்டு, தொண்டையை செருமியவாறு,… “இந்த நைட்டி போடுற பழக்கம் எல்லாம் இல்லயா?” என்றான், அந்த உடையில் அவள் எப்படி இருப்பாள் என்று பார்க்கணுமென்ற ஆசையில்,…

“வீட்ல போடுவேன், இங்க” என்று தயங்கி நிறுத்தியவள்,… “இங்க எனக்கு நைட்டி போட ஒரு மாதிரியா இருக்கு” முதலில் நைட்டியை தான் கையில் எடுத்தாள், உறக்கத்தில் உருண்டு பிரண்டு படுக்கும் போது எதுவும் எசக்கு பிசக்காகி மேலே ஏறி விடுமோ என்று பயந்து அதை எடுத்த இடத்தில் வைத்து விட்டாள்,…

“என்ன மாதிரியா இருக்கு, இங்க நான் தானே இருக்கேன்” அவன் கூர்மையான பார்வையில் வினவ,… ‘அது தானே எனக்கு பிரட்சனை’ என்று முணங்கினாள் வாய்குள்ளேயே…

“என்ன? என்ன சொன்ன” அவள் உதட்டசைவில் ஏதோ பேசியது போல் உணர்ந்தவன், காதில் விழாததால் அவளிடம் வினவ,… “ஒ.. ஒன்னுமில்ல, எனக்கு இதுவே கம்ஃபர்டபுலா தான் இருக்கு” என்றாள் சின்ன குரலில்,…

“சரி ஏன் அங்கேயே நிற்கிற வா” அவன் அழைக்க,… “என்ன? எதுக்கு?” விழிகள் அகல விரிந்தது அவளுக்கு….

“தூங்குறதுக்கு தான் வேற எதுக்கு, நீ தான் ஒரு நாள் டைம் கேட்டிருக்கள்ல” என்கவும் தான் அவளுக்கு மூச்சே சீரானது, இன்று கடத்தி விடலாம், நாளை எப்படியாவது மனதில் உள்ளதை சொல்லிவிடனும் என்ற முடிவுடன், கட்டிலில் வந்து அமர்ந்தாள்,..

அவன் இடது பக்கத்தில் படுத்திருந்ததால் இவள் வலது பக்கம் வந்து அமர்ந்தாள், விசாலமான கட்டிலில் நடுவில் கொஞ்சம் அதிக இடம் இருந்தாலுமே, அவனுடன் ஒரே கட்டிலில் படுக்க கூச்சமாக இருந்தது, அதனால் அமர்ந்தே இருந்தாள்,…

“என்ன யோசனை? தூங்குற ஐடியா இல்லயா? இல்லனா நாம” அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை சட்டென்று புரிந்து கொண்டவள்,… “இல்ல.. எனக்கு தூக்கம் வருது” என்றவாறு அவசரமாக படுத்துக் கொண்டாள்,…

மறுபடியும் அதே மந்தகாச புன்னகையை வெளியிட்டவன்,…. “இந்த அலங்காரம் எல்லாம் வேஷ்டா போச்சு பாரு உன்னால, என் பாட்டியும் தாத்தாவும் எனக்காக பண்ண ஏற்பாட்டயெல்லாம் வீணாக்கிட்ட நீ, இதுக்காக நாளைக்கு  உனக்கு பெரிய பனிஷ்மெண்ட் இருக்கு” கட்டிலில் செய்திருந்த அலங்காரங்களை சுட்டி காட்டி, அவன் கிண்டலான குரலில் தான் கூறினான், அவள் தான் திகைத்து போய்,… “என்ன? பனிஷ்மென்ட்டா அதெல்லாம் வேணாமே” என்றாள் கெஞ்சும் பார்வையால்…

“அதெல்லாம் முடியாது, பனிஷ்மெண்ட் தரது தரது தான்” என்று கண்டிப்புடன் கூறியவனை பாவமாக பார்த்து வைத்தாள் நித்யா, ரிஷிக்கு தான் அவளது ஒவ்வொரு முகபாவனையும் அவனை என்னென்னவோ செய்ய வைத்தது, இப்படி டைம் கேட்டு என் உணர்வுகளை வெளிக்காட்ட விடாம கட்டி போட்டு விட்டாளே ராட்சசி என்று மனதால் புலம்பினான்,…

“என்ன? அப்படி பார்க்கிறீங்க” மல்லாக்க படுத்திருந்தவள், தலையை மட்டும் திருப்பி, கரத்தால் முட்டுக்கொடுத்து தன்னை பார்த்தபடி படுத்திருந்தவனின் பார்வையில் தடுமாறி அவனிடமே வினவினாள்,…

“நீ ரொம்ப அழகா இருக்க? அதான் பார்க்கிறேன்” என்றான்,…

அவனது இந்த வாக்கியம் அவளை கவர்ந்தது, அதன் விளைவால் அவள் முகம் கொஞ்சமாய் சிவந்தது, இதழில் ரொம்ப சின்ன அளவில் புன்னகை தோன்றியது, மனம் ஒரு மாதிரி என்னவோ செய்தது,…

தன் சொல் அவள் மனதை பாதிக்கிறது, அதனை கண்டுகொண்ட அவனது இதழில் கர்வ புன்னகை,…

மேலும் அவளை அவன் நோண்டவில்லை,… “குட் நைட்” என்றுவிட்டு விட்டத்தை பார்த்தபடி படுத்துக் கொண்டவன், அவள் அனுமதியுடன் விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை எரிய விட்டவன், கண்ணை மூடிய கொஞ்ச நேரத்தில் தூக்கமும் வந்து விடவே தூங்கியும் விட்டான், நித்யா தான் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தாள், புது இடம், தாலி கட்டியவன் பக்கத்தில் வேறு படுத்துக் கொண்டிருக்கிறான், போதாததிற்கு பகல் நன்றாக தூங்கிவிட்டாள், அவளுக்கு எப்படி உறக்கம் வரும்,…

நாளை அவனிடம் தன் மனதில் உள்ளதை எப்படி கூற போகிறோம்? தான் கூறியதை அவன் எப்படி எடுத்து கொள்ள போகிறான்? எந்த ஒரு கணவனும் எதிர்பார்க்காத ஒன்றை அவள் கூற போகிறாள், அதை கேட்டு அவன் அடிப்பானா? திட்டுவானா? என்ன செய்தாலும் பரவாயில்லை, ஆனால் ஒன்று கண்டிப்பாக அவன் தன்னை விரட்டி விட்டுவிடுவான், இது தானே தனக்கும் வேண்டும், சிரித்த முகம் மாறாமல் ஜாலியாக பேசுபவனின் கொடூர முகத்தை நாளை பார்க்க போகிறோம், கடவுளே நீ தான் எனக்கு துணை நிற்கணும்’ மனதால் பேசியபடி இருந்தவள் நடு ஜாமத்தில் தான் உறங்கினாள், ஆனால் ஆழ்ந்த தூக்கம் இல்லை, சட்டு சட்டென்று விழிப்பு வந்து கொண்டே இருந்தது,…

பறவைகள் கீச்சிடும் சத்தத்திலும் ஜன்னல் வழியாக வந்த வெளிச்சத்திலும் விடிந்ததை அறிந்து கொண்டவள், நிர்மலமான முகத்துடன் உறங்கி கொண்டிருந்தவனை ஒருநொடி நின்று பார்த்தாள்,… தூக்கத்திலும் ஒரு வித கம்பீரம் தெரிந்தது, ஆஜாகுபாவனான அவனது உடல் அவளை கொஞ்சம் மிரள செய்தது, முறுகேறியிருந்த அவனது புஜத்தை கண்டு, அவன் கரத்தினால் தன்னை ஒரு அறை அறைந்தால் கூட, மயங்கி விடுவோம் என்று தோன்றியது,….

‘கடவுளே என்னை காப்பாத்து, இவர் ஏன் இப்படி உடம்பை வளர்த்து வச்சிருக்காரு பாடிகார்ட் மாதிரி, நல்லா தான் இருக்கு, ஆனாலும் பயமாவும் இருக்கே, ச்சே எல்லாம் இந்த அம்மாவாலயும் அண்ணனாலயும் வந்தது, என்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாங்களே’ என கண்ணீர் விடாத குறையாக புலம்பியவள்,… ‘என்ன ஆனாலும் இன்னைக்கு என் மனசுல உள்ளதை சொல்லிடனும், அதுக்கு முன்னாடி இவர் எழுவதற்குள் நாம ரூமை விட்டு போய்விடனும், அது தான் நமக்கு நல்லது, நைட் எப்படியும் இங்க தானே வந்தாகனும், அப்போ பேச வேண்டியதை பேசிக் கொள்ளலாம்’ என்று எழுந்து முதலில் குளிக்க சென்றாள், வேறு புடவை மாற்றி வந்தவள், தலையை அவசர அவசரமாக உலர வைத்து விட்டு, சென்டர் க்ளிப் ஒன்றை மாட்டிக் கொண்டு,  கையில் இரண்டிரண்டு வளையல்கள், காதில் ஜிமிக்கி, கழுத்தில் இருந்த தாலிகயிறும் மெல்லிய சங்கிலியுமே போதுமானதாக இருக்க, ஒரு முறை நிலை கண்ணாடியில் தன்னை பார்த்தவள், சற்று திருப்தியாக இருக்கவும், வேக வேகமாக அறையை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்க இருந்த நேரம், சரியாக “எங்கே போறீங்க மேடம் இவ்வளவு அவசரமா?” ரிஷியின் குரல் கேட்டு, தொண்டையில் எச்சில் விழுங்க அடுத்த அடி எடுத்து வைக்காமல் நின்றுவிட்டாள்,…

நித்யா குளித்து முடித்து வெளிவந்த போதே ரிஷி விழித்து விட்டான், அமைதியாக அவளது செயல்களை ரசித்துக் கொண்டிருந்தான், நிதானம் இல்லாமல் அவசரஅவசரமாக அவள் செய்த ஒவ்வொரு வேலைகளையும் குறுஞ்சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தவன், அவள் வெளியேறிய சமயம் தான்  தடுத்து நிறுத்தியிருந்தான்,…

அவள் பதில் பேசாமல் கரங்களை பிசைந்த நிலையில் நிற்க, அவனோ… “உங்களை தான் கேட்கிறேன், புருஷன் இங்க இருக்கேன், என்னை கொஞ்சம் கூட மதிக்காம இவ்வளவு அவசரமா எங்கே கிளம்புறீங்க” படுக்கையை விட்டு எழுந்து சோம்பல் முறித்தபடியே வினவினான்,….

“அது… நீங்க தூங்கிட்டு இருந்தீங்க, அதான் டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு, கீழே பாட்டிக்கு ஹெல்ப் பண்ணலாம்னு” என்று இழுத்து இழுத்து பேசியவள், அவனது இடுங்கிய பார்வையை கண்டு வாயை மூடிக் கொண்டாள்,…

“பாட்டிக்கு ஹெல்ப் பண்ண கீழே நிறைய பேர் இருக்காங்க, எனக்கு தான் யாரும் இல்ல” அவன் ஏதோ குதர்க்கமாக கூற,.. அது புரியாதவள்.. “உங்களுக்கு…” என திணறிவிட்டு.. “உங்களுக்கு என்ன ஹெல்ப் தேவை படுது?” என்றாள்,…

“என்ன நித்து இப்படி கேட்டுட்ட, நான் குளிக்கனும், அதுக்கு நீ” என முழுதாக சொல்லாமல் நிறுத்தியவனை அவள் அழுவது போல் பார்த்து வைத்தாள்,..

காலையிலேயே அவளை சீண்ட வேண்டாம் என நினைத்தவன்,… “சரி சரி ஒப்பாரி வச்சிடாத” என்று அவளை நெருங்கி வந்தவன்,…. “நமக்கு நேத்து தான் மேரேஜ் ஆகிருக்கு, ஸோ இப்படிலாம் டக்குனு வெளியே போனேன்னு வையேன் பாட்டிக்கு சந்தேகம் வந்திடும்” தன்னை விட்டு சற்று இடைவெளியில் நின்று கூறியவனை,… ‘என்ன சந்தேகம் வரும்’ என்ற பார்வையில் பார்த்து வைத்தாள் அவள்…

“அதான் மா, நமக்கு இன்னும் ஃபர்ஸ்ட் நைட் நடக்கலங்கிற உண்மை அவங்களுக்கு தெரிஞ்சிடும்” என்றவனை மலங்க மலங்க பார்த்தாள்…

“தன்னோட பேரனும் பேத்தியும் இன்னும் வாழ்க்கையை ஆர்மபிக்காம இருக்காங்களேனு மனசு கஷ்டப்படும் இல்லயா? நிச்சயம் பாட்டி உன்னோட முகத்தை ஆராய்வாங்க, பாட்டி அனுபவசாலி இல்லயா, முகத்தை பார்த்தே அனைத்தையும் கண்டுபிடிச்சிடுவாங்க, ஸோ நீ அவங்க என்ன கேட்டாலும் கொஞ்சம் வெட்கப்பட்டுகிட்டே பேசு ம்ம்ம்” என்று சொல்ல,.. “என்ன? ஆனா எனக்கு அதுலாம் தெரியாது” அவள் பாவமான முகத்துடன் கூறிய மறுநொடி, அவளது பட்டு கன்னத்தில் பளிச்சென்று ஒரு முத்தம் வைத்தான் அவன், இதை எதிர்பார்க்காதவளின் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் அகல விரிய,… “இப்போ போ” என்று அனுப்பி வைத்தவனின் முகத்தில் ஒரு நிறைவு தெரிய,  விசிலடித்தபடியே குளியலறை நோக்கி சென்றான்,…

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
8
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்