Loading

 

 

தன்னை மிரட்சி கலந்த பயத்துடன் பார்த்தவளின் நினைவுகளை ஒருமுறை எண்ணிப் பார்த்துக்கொண்டே படுத்திருந்தவனை, ஒரே நொடியில் கீழே இழுத்து தள்ளியிருந்தது பெண்ணவளின் கரங்கள். முன்பு நடந்த நினைவுகளிலிருந்து முற்றிலும் வெளியே வந்தவன், மிரட்சியுடன் எதிரில் இருந்தவளைப் பார்த்தான். அவளை சந்தித்த நினைவில் ஆழ்ந்தவனுக்கு, இந்த திடீர் செயல் எதிர்பாரா நேரத்தில் நடந்துவிட்டதால் தலையும் புரியாமல், வாலும் புரியாமல் திருதிருவென விழித்தான். இருந்தும் அவனுக்கு கோபம் வராமல் இல்லை.

 

சற்று முன்பு குளியலறைக் கதவைத் திறந்துக் கொண்டு வெளியே வந்திருந்தாள் மதுவர்ணிகா. உற்சாகமாக தனது கட்டிலில் குப்புறக் கவிழ்ந்து படுத்திருந்தவனைக் கண்டு கடும் கோபம் கொண்டவளுக்கு அவனை அடித்து நொறுக்கும் அளவிற்கு ஆத்திரம் வந்தது. ஆதலால் தான் அடுத்த நொடியே, அவனை முழு பலம் கொண்டு இவள் கீழே தள்ளியிருக்க, கட்டிலின் மறுபுறமாக பொத்தென்று அவன் விழும் சூழல் ஏற்பட்டிருந்தது.

 

“ஏய் என்னடி, நினைச்சுட்டு இருக்க?” என்று ஒரு கையால் முதுகைப் பற்றிக்கொண்டு அவன் எழ முயற்சிக்க, அவனது இடுப்பிலோ வலி உண்டானது.

 

“அய்யோ ராமா…” என்றவன் முகம் சுருக்கினான் வலியில்.

அவனை இகழ்ச்சியாக பார்த்தவளோ, அவன் முன் சொடுக்கிட்டாள்.

 

“நான் சாதாரணமா சொல்லும் போதே கீழ படுத்திருந்தால், இப்படி ஒரு விசயமே நடந்திருக்காது. மிஸ்டர் நந்தா… உங்களுக்கான இடம் கட்டாந்தரை தான். பஞ்சு மெத்தைக் கிடையாது. இப்போ உனக்கு புருஞ்சிருக்கும்னு நினைக்குறேன். இனி உங்க தகுதிக்கு ஏத்த மாதிரி நடந்துக்கோங்க.” என்றவளின் எள்ளலான பார்வை அவனை அசிங்கப்படுத்தியிருக்க, கண்கள் எல்லாம் சிவந்தது அவனுக்கு.

 

அவளோ அலட்சியத்துடன் கட்டிலை நோக்கிச் செல்ல, விருட்டென்று எழுந்திருந்தான் நந்தா. அடுத்த கணமே அவன் சொடுக்கிட்டு அழைக்க, அவளோ, ஒரு வித அலட்சியத்துடன் அவனைத் திரும்பி பார்த்தாள்.

 

“என்ன?” என்றாள் திமிராக.

 

“அது ஒண்ணும் இல்லை மேடம். என் தகுதியை ரொம்ப அழகா புரிய வெச்சுட்டீங்க. என் தகுதிக்கு இந்த ரூம் கூட ஓவர் தான். நான் ஒண்ணு பண்றேன் வெளியே தூங்குறேன். என்ன மாமனாரோ, மாமியாரோ பார்த்தால் கேள்வி வரும்? அது நீங்க சமாளிச்சுக்கோங்க. சரி நான் வரட்டா.” என்றவன் கதவை நோக்கிச் செல்ல, 

 

“எங்க போற? நில்லு. இப்போ உனக்கு என்ன தான் பிரச்சனை?” என்றாள் கலவரத்துடன். அவன் வெளியே போய் படுத்தால், இவளது குட்டு வெளிப்பட்டு விடுமே என்ற பயம் அப்பட்டமாக பெண்ணவள் முகத்தில் தெரிந்தது.

 

“அவமானப் படுத்துறதுக்கும் ஒரு எல்லை இருக்கு மது. இதுக்கு மேலேயும் அவமானப்படணும்னு அவசியம் இல்லை எனக்கு. இப்போவே போறேன். நான் யாருனு சொல்றேன்.” என்றவன் கத்திக்கொண்டே அங்கிருந்து செல்ல முற்பட, இவள் செய்வதறியாது தவித்தாள்.

 

“ஏய், என்ன பேசுற நீ? உனக்கு எவ்ளோ பணம் வேணாலும் தரேன்னு சொல்லிருக்கேன். அப்புறம் ஏன் இப்படி நடந்துக்குற?”

 

“நீ கொடுக்குற பணத்துக்காக என் தன்மானத்த விட்டுக்கொடுத்து கேவலப்பட முடியாது. சரி தான் போடி.” என்றவன் கதவை திறந்து வெளியேறி இருக்க, அவனைத் தடுக்க, அவன் பின்னே விரைந்தாள் மது.

 

வெளியே வந்தவனோ தனது மாமானாரின் அறை நோக்கி நகர, ஓடி வந்தவள், அவனது கைகளைப் பற்றி தடுத்தாள். 

 

“எதுனாலும் நம்ம பேசி தீர்த்துக்கலாம். ப்ளீஸ்.”

 

“நம்ம பேசுனது போதும். இனி உங்க அப்பன் கிட்ட பேசிக்குறேன். போடி.” 

 

“நந்து, ப்ளீஸ் புருஞ்சுக்கோங்க.” இறங்கி வந்து பேசுபவளை புருவம் தூக்கிப் பார்த்தவன் மனமோ, ‘அப்படி வா வழிக்கு. நந்தாகிட்டயே வேலையைக் காட்டுறியா? கெஞ்சுடி நல்லா.’ மனதில் நினைத்துக் கொண்டான்.

 

“வாட் டிட் யூ சே?” என்றான் நக்கலாக.

 

“விளையாடாதீங்க ப்ளீஸ். மரியாதையா உள்ள வந்திடுங்க?”

 

“என்ன மிரட்டுறீங்களா மேடம்?”

 

“சத்தியமா இல்லை.” 

 

“எப்படியும் உள்ள கூப்பிட்டு இன்சல்ட் பண்ணப்போற? அதுக்கு ஒரேயடியா நான் உண்மையை சொல்லிட்டு போயிடுறேன். ஆளை விடுங்கடா சாமி. மூச்சு முட்டுது.” என்றவன் பெண்ணவளின் கைகளை உதறிவிட்டு, மாமானாரின் அறைக்கதவினைத் தட்டப் பார்க்க, அதிர்ந்தவள் அடுத்த நொடியே அவனை இழுக்க முயற்சி செய்தாள்.

 

அவனது இடுப்பினை சுற்றி வளைத்துப் பற்றிக் கொண்டவள்,அவனை இழுக்க, அவள் ஏற்படுத்திய நெருக்கத்தில் கூச்சத்தால் நெளிந்தான் நந்தா.

 

“நீ சொன்னா உன்னையும் சும்மா விட மாட்டாங்க‌. அப்புறம் கடைக்கு திருட வந்தது நீதான்னு நான் சொல்லிடுவேன். இரண்டுக்கும் சேர்த்து நீ களி தான் திங்கணும். இது எல்லாம் உனக்கு தேவையா சொல்லு.”

 

“என்ன மது, மிரட்டுறியா?”

 

“எச்சரிக்கை கொடுக்கிறேன். நான் சொல்றத கேளு நந்து. கட்டில் தான, வா நீ தாராளமா படுத்துக்கோ.” என்றவள் இழுத்துக்கொண்டே கெஞ்ச, சரியாக கதவை திறக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நொடியே சுதாரித்தவள், அவனை கட்டி அணைத்தபடி அவனது மார்பில் சாய்வது போல நின்றுக் கொண்டாள்.

 

கதவை திறந்த அவள் அன்னை பிரபாவதியோ, இருவரும் நிற்பதைக் கண்டு அதிர்ச்சியுடன் முகத்தை திருப்பிக் கொண்டார்.

 

முதலில் அவரது செயலை உணர்ந்திடாதவனோ, மாமியாரின் முகப்பாவத்தைக் கண்டு புரிந்துக் கொண்டது மட்டுமின்றி கூச்சத்தில் சங்கடத்துடன் தலை கவிழ்ந்தான்.

 

பிரபாவதி குரலை செரும, அவனை விட்டு விலகி நின்றவள், “மம்மி, அது தண்ணிக் குடிக்க வெளியே வந்தோம். கரப்பான் பூச்சிய பார்த்து பயந்துட்டேன். இவரு சமாதானம் படுத்துனாரு.” என்று அசடு வழிந்தபடி கூறும் மதுவைக் கண்டு புன்னகைத்தார் பிரபா.

 

“சின்னப் பிள்ளையாவே இருக்கியே வருணி. மாப்பிள்ளையை கூட்டிட்டு உங்க அறைக்கு போங்க. சத்தம் கேட்டதுனால தான் நானும் வெளியே வந்தேன்.” என்று புன்னகையுடன் கூறினார்.

 

“அத்தை இது வேற?” என்று இவன் கூறும்முன்னே அவனது கைகளைப் பற்றியவள், 

 

“வாங்க நீங்க.” என்று இவனது கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு சென்றாள் மது.

 

செல்லும் இருவரையும் புன்னகையுடன் பார்த்தபடி பிரபா நிற்க, தாமோதரனோ தன் மனைவியை அழைக்க, “இதோ வரேங்க.” என்று கூறியபடி கதவை அடைத்துக் கொண்டு சென்றார் பிரபாவதி.

 

இங்கு தனது அறைக்குள் அவனை அழைத்து வந்தவுடன், முதலில் கதவை அடைத்தவள், அவனை முறைத்துக் கொண்டே மன்னிப்பையும் கேட்டாள்.

 

“அய்யா சாமி, நான் சொன்னது தப்பு தான். நீ தாராளமா பெட்ல படு.” என்றாள் முறைத்துக் கொண்டே.

 

“அப்படி எல்லாம் முடியாது‌. கட்டந்தாரையை கேவலப்படுத்திட்டு. இந்த குப்பை பஞ்சு மெத்தையில படுக்கணும்னு எனக்கென்ன தலையெழுத்தா?” என்றான் தெனாவெட்டாக.

 

“அப்போ உன் இஷ்டம். கீழ படுத்துக்கோ. நான் மேல படுத்துக்கிறேன். குட் நைட்.” என்றவள் உறங்குவதற்காக செல்ல, அவளது சேலையை பற்றி இழுத்திருந்தான் நந்தா.

 

ஆணவனின் திடீர் செயலில் முன்னேறி சென்றவள், இரண்டு அடிகள் தடுமாறி பின்னோக்கி நகர்ந்தாள். அவளது விழிகள் அதிர்ச்சியுடன் அவனைத் திரும்பிப் பார்த்தது. 

 

“மேடம் எங்க போறீங்க? கட்டாந்தரையின் மகிமை உங்களுக்கு தெரிய வேண்டாம்?” என்றான் ஒற்றைக் கண் சிமிட்டி.

 

“இல்லை, அதை தெரிஞ்சு நான் என்ன பண்ண போறேன். முதல்ல புடவையை விடு.” 

 

“அப்படி எல்லாம் விட முடியாது. நான் சொல்லித் தரேன் மகிமையை.” என்றவன் பெண்ணவளின் முந்தானையை மடித்தபடி அவளிடம் நெருங்கினான். அது மட்டுமின்றி, கையிலிருந்த முந்தானையை அவளது தோள்பட்டை மீது போர்த்தி விட்டவன், அவளை பார்க்க, அவளோ புரியாது விழித்தாள்.

 

அடுத்த நொடியே அவளை விடுத்து மெத்தையின் மீது விரிக்கப்பட்டிருந்த படுக்கை விரிப்பினை இழுக்க, விரிப்பின் மீது அலங்காரத்திற்கு தூவப்பட்டிருந்த மலர்கள் அனைத்தும் பறந்ததில் இவள் மீதே விழுந்தது. கண்களை சுருக்கிக்கொண்டு கேள்வியாய் அவள் நோக்க, அவனோ பதிலை தனது சைகையின் மூலம் உணர்த்தியிருந்தான். 

 

பளிங்கு தரையில் போர்வையை விரித்தது மட்டுமின்றி ஒரு ஓரத்தில் ஒரு தலையணையும், அதன் மற்றொரு ஓரத்தில் இரண்டாவது தலையணையும் வைத்து விட்டு அவளை பார்த்தாள்.

 

“மேடம் டிசோசா உங்களுக்கான படுக்கைவிரிப்பு ரெடி. தூங்குங்க.” என்றவன் புருவத்தை காட்ட,

 

“கீழ எல்லாம் என்னால படுக்க முடியாது.” என்றாள் மறுப்பாக.

 

“ரைட்டு நான் அங்கிள் கிட்ட பேசிக்குறேன். மிஸ்டர் தாமோதரன்.” என்றவன் கூச்சலிட்டு நகர, அவனது கரத்தினைப் பற்றியவளோ வேறு வழியின்றி தலையாட்டினாள்.

 

“சரி நான் படுக்கிறேன். நீ தள்ளி போ.” சிணுங்கிவிட்டே வேண்டா வெறுப்பாக அவள் படுத்துக் கொள்ள, அதன் பின்னரே அப்பெரிய விரிப்பின் ஓரத்தில் படுத்துக் கொண்டான் நந்தா.

 

‘எனக்கே ஆப்பு வைக்க பார்த்தியா? வெச்சேன்னா பெரிய ஆப்பா? என்ஜாய் பொண்டாட்டி.’ மனதில் அவளை மானசீகமாக அவன் கூறிவிட்டபடி, கண்களை மூடினான்.கண்கள் மூடிய நிலையிலிருந்தாலும் அவன் மனம் அவளையே நினைத்தது. 

 

‘கொஞ்சம் திமிரு அதிகம் தான். பட் அழகி தான் என் செல்ல ராட்சசி.’ என்றான் அவளையும் கீழே படுக்க வைத்துவிட்ட மகிழ்ச்சியில்.

 

அவளுக்கோ தூக்கம் வர மறுத்தது. மறுபுறமாக திரும்பிப் படுத்தவளது கண்களிலிருந்து நிற்காமல் கண்ணீர் தரைப் புரண்டது. விருப்பமின்றி நடந்தேறிய கல்யாணம், அதைவிட இவனது அத்துமீறல் எதுவுமே அவளுக்கு பிடிக்கவில்லை. தன் வாழ்வில் மட்டும் ஏன் இந்த சோதனை? என்ற கவலை அவளையும் மீறி மனதில் தோன்ற, ரணத்துடனே படுத்தாள் மதுவர்ணிகா.

 

‘நீ மட்டும் நல்லபடியா இருந்திருந்தால், நான் கஷ்டப்பட வேண்டிய அவசியமே இருந்திருக்காதே ரகு. ஏன் என் வாழ்க்கையில வந்த? உன்னை பழி வாங்கணும்னு இவனை போய் கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியமே எனக்கு இருந்திருக்காதே. உன்னை என்னைக்குமே மன்னிக்க மாட்டேன் ரகு. நீ என் வாழ்க்கையில வந்திருக்கக் கூடாது’ என்றவள் கண்ணீரைவிட்டபடி மானசீகமாக கேள்வியினைத் தொடுக்க, அவள் நினைத்த ரகுவாக பட்டவனோ ஒரு பெண்ணிடம் சல்லாபத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

 

மும்பை… 

 

தன் கையிலிருந்த பெண் பாவையினை தன் இரு கரம் கொண்டு வளைத்து தன் இதழோடு பொருத்தியிருந்தவன் முத்த யுத்தம் புரிய, அவனது கைப்பேசி சிணுங்கியது. கைபேசி சிணுங்கியும் அவனது தேடல் முடியாமலிருக்க, அவனது கரத்தினுள் சிக்கித் தவித்தவள், அவனை தன்னிடமிருந்து பிரித்து நிறுத்தினாள்.

 

“பேபி, போன் வருது கவனி.” என்றாள் கிறக்கமாக.

 

“அது அப்புறம் பார்த்துக்கலாம் பேப்ஸ்” என்றவன் அவளது இதழ் நோக்கி குனிய, அவனது கன்னத்தை தட்டி விட்டவள், கைப்பேசியைக் காணும்படி கண்களாலே கட்டளையிட, அவளது செயலில் கடுப்படைந்தவன், அவளை பளார் என்று அறைந்திருந்தான்.

 

பெண்ணவளோ அதிர்ச்சியில் உறைந்து நிற்க, அவளையும் மீறி கண்களில் கண்ணீர் கோர்த்துக் கொண்டது.

 

“எனக்கு கட்டளையிட உனக்கு ரைட்ஸ் இல்லை மானசா.” என்றான் சுட்டு விரலை நீட்டி கட்டளையாக.

 

அவனது செயலில் அவள் முகம் கருத்துப் போனது மட்டுமின்றி, வலியையும் கொடுத்தது. 

 

“பேபி, நான் உன் லவ்வர். எனக்கு எந்த உரிமையும் இல்லையா?” என்றாள் கண்களில் நீரோடு.

 

“வாட்? அந்த நினைப்பு வேற இருக்கா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ, ஜஸ்ட் சாதாரணமா தான் பழகுனேன்.இத்தோட நமக்குள்ள எதுவும் இல்லை. அண்ட் தாங்ஸ் ஃபார் யுவர் கோவப்ரேஷன்.” என்றவன் இதழை வளைத்து புன்னகைத்தபடி, அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்க, அவனை நம்பி வந்தவளோ, உணர்வுகளற்று உயிர் இருந்தும் உயிரை இழந்த வலியில் சிலை போல ஸ்தம்பித்து நின்றாள்.

 

“இல்லை…” என்றவள் கத்திய கத்தல் அந்த ஹோட்டல் அறையை அலறச் செய்தது.

 

அவனோ தனக்கும் அதற்கும் எந்த சம்மந்தமும் இல்லாததுப் போல, கைகளிலிருந்த கார் சாவியினை ஆட்டியபடி, கூலாக நடந்துச் சென்றவன், போனை எடுத்து நோண்டத் தொடங்கினான்.

 

முகப்புத்தகத்தினை திறந்தவனுக்கு, அடுக்கடுக்காக நோட்டிபிகேஷன் வர, ஒவ்வொன்றாக பார்த்தவன், இறுதியாக பார்த்த மதுவர்ணிகாவின் கல்யாண புகைப்படத்திலேயே அவன் பார்வை படிந்து நின்றது. 

 

“வாட் தி ஹெல்?” அவனது இதழ்கள் வம்படியாக அதிர்ச்சியில் கூற, அவன் மூளையோ யோசிப்பதை மறந்தது என்றால், அடுத்த நொடியே தனது கைப்பேசியை கீழே போட்டு உடைத்திருந்தான் ரகு என்கிற ரகுவரன்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்