
அத்தியாயம் – 23
“ஏய் நித்து என்னடி ஆச்சு உனக்கு, நீ எப்போ என்னை கஷ்டப்படுத்தின÷” என்றான் அவளை தன்னிடமிருந்து பிரிக்க முயன்று கொண்டே,… உடும்பு போல அவன் இடையில் தன் கரங்களை கோர்த்து அவனை கட்டிக்கொண்டு நின்றவள், விசும்பியபடியே நடந்ததை சொன்னாள்,…
“இவ்வளவு தானா? நான் கூட என்னவோ ஏதோனு பயந்துட்டேன்” அவள் சொன்னதை கேட்டு அவன் அலட்சியமாக கூற,… “அப்படினா உங்களுக்கு என் மேல கோபமே இல்லயா” என்றாள் அப்பாவியாய்,…
“ப்ச்,… என் நித்து மேல என்னால எப்படி கோப பட முடியும்” என அவளது தலை கோதி அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன்,… “பொசுக்கு பொசுக்குனு எதுக்காக டேமை திறந்து விடுற நித்து, கோப படுறதா இருந்தா இதுக்கு தான் நான் கோப படனும்” என்றான்….
“எனக்கு ரொம்ப குற்றவுணர்வா இருக்கு, என் தோழிங்க சொன்ன பிறகு தான் நான் செஞ்ச தப்பை உணர்ந்தேன், அவ உங்களை பார்த்த சின்னதான பார்வைக்கே எனக்கு அவ்ளோ கோபம் வந்தது, ஆனா நீங்க, ப்ச் என்னால புரிஞ்சிக்க முடியுது நீங்க எவ்வளவு வருத்தபட்டிருப்பீங்கன்னு, நினைக்க நினைக்க எனக்கு மனசே ஆற மாட்டேங்குது” என்றாள் கேவலாய்,…
“நித்து நான் மைண்ட்ல ஒரு விஷயத்தை நல்லா தெளிவா பதிய வச்சுகிட்டேன்” என்றனிடமிருந்து விலகியவள், ‘எதை’ என கேள்வியாய் பார்த்தாள் அவனை,…
“நீ எனக்கு நிரந்தரம் இல்ல நித்து, அந்த கருணா எப்போ வந்து உன்னை கூப்பிட்டாலும் நீ போயிடுவனு எனக்கு தெரியும், ஸோ” என அவன் மேலும் ஏதோ பேச வரும் முன், காற்று கூட புகாத அளவிற்கு அவனை இறுக்கி அணைத்துக் கொண்டவள்,…. “வே… வேணாம் மித்து, நீங்க இதுக்கு மேல எதுவும் சொல்ல வேணாம், அன்னைக்கு… அன்னைக்கு நான் இருந்த நிலமை வேறு, அப்போ நான் என்னென்னவோ சொல்லிருக்கலாம், ஆனா இப்போ” என நிறுத்தியவள் கொஞ்ச நேரம் அமைதி காத்தாள்,…
“சொல்லு நித்து, இப்போ என்ன?” என்றான், அவள் தன்னுடனே வாழ்க்கை பூரா இருந்து விடுகிறேன் என்று சொல்லி விடமாட்டாளா என்ற ஏக்கம் எதிர்பார்ப்பு அவனுக்குள் எக்கசக்கமாய் இருந்தது,…
“மித்து” என்றாளே தவிர எதுவும் பேசவில்லை, அவள் ஏற்கனவே யோசித்து வைத்தது போல் கருணாவிடம் பேசி முடிவெடுத்து விட்டு கணவனிடம் கூறலாமா? அல்லது இப்போதே கூறிவிடலாமா? என்ற குழப்பங்கள் அவளுக்குள்….
“எனக்கு கொஞ்சம் டைம் தறீங்களா? நான் நான்” அவள் இழுக்க,… “யோசிக்கணுமா?” என்றான்….
அப்போது என்ன சொல்லி வைக்க என்பது தெரியாமல் அவள் ஆமா என்பது போல் தலையாட்ட, கசந்த புன்னகை புரிந்தான் அவளிடம்,… திருமணமாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது, ஆனால் இவளுக்கு யோசிக்க இன்னும் டைம் வேணுமாம், என் அன்பு பாசம் காதல் இதெல்லாம் அவளுக்கு இன்னமும் புரியவில்லையா? யோசிக்க இன்னும் டைம் கேட்கிறாளே! என்ற விரக்தியினால் வந்த சிரிப்பு அது..
அவளுக்கு தன்னை பிடித்திருக்கு, அவள் விழிகளில் தனக்கான காதலை பார்த்திருக்கிறான், ஆனாலும் அவள் வாய்மொழியாக சொல்லாமல் அவன் எதையும் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை, கல்யாணமான புதிதில் அவளது வார்த்தையால், தான் வருந்திருப்பேனோ என்று கவலை கொண்டு அழுபவள், அவள் மனதில் உள்ளதை வெளிப்படையாக தன்னிடம் கூற என்ன தயக்கம், அவளுடைய ‘பிடிச்சிருக்கு’ என்ற சின்ன வார்த்தைகாக தான் எந்தளவிற்க்கு ஏங்கி போயிருக்கிறேன் என்று அவளுக்கு புரியவில்லையா? இன்று வரை அவள் மனதில் உள்ளதை கூறாமல் தட்டிக் கழித்துக் கொண்டே வருவதற்கு காரணம் தான் என்ன? அந்த கருணாவா? அவனை விட்டுக்கொடுக்க அவள் விரும்பவில்லையா? அவனை காதலிக்கவில்லை, எங்களுக்குள் இருப்பது காதலையும் தாண்டிய பாசம் இருக்கு என்றாளே அதற்கு என்ன அர்த்தம்?
ஒரு நேரம் அவள் விருப்பப்படி விட்டுவிடலாமென்று தோன்றுகிறது, இன்னொரு நேரம் அவளை தன்னை விட்டு போக விடக்கூடாது என மனம் முண்டுகிறதே! ஏன் எனக்கு மட்டும் இத்தனை பெரிய சோதனை, உண்மை தெரிந்தும் அவளை கல்யாணம் செய்ததினால் எனக்கு கிடைத்த தண்டனையா இது? இல்லையென்றால் அந்த கருணாவின் இந்நிலைக்கு தானும் ஒரு காரணம் என்பதால் இறைவனே எனக்கு கொடுத்த தண்டனையா? என பலவாறாக யோசித்தாலும், அவனின் கரங்கள் மனைவியை அணைத்துக் கொண்டு தான் இருந்தது ஆதூரமாக….
“டேய் இங்க தான் இருக்கியாடா? உன்னை எவ்வளவு நேரமா தேடிக்கிட்டு இருக்கேன்” வருணேஷின் குரல் அருகில் கேட்கவே, இருவரும் மோனநிலையிலிருந்து வெளிவந்து சட்டென்று விலகி நின்றனர்,… அண்ணன் முன் கணவனை கட்டி அணைத்து நின்ற சங்கடத்தில் நித்யா ரிஷியின் பின்னால் மறைந்து கொள்ள, ரிஷியோ,.. “ஏன்டா இந்த கதவு தட்டிட்டு வர பழக்கம்லாம் கிடையாதா?” என்றான்,…
“நான் எதேர்ச்சியா வந்தேன், நீ உன் பொண்டாட்டி கூட இருபேன்னா நான் நினைச்சேன், சரி வா உன்கிட்ட நான் பேசணும்” என்றவன்,… “ஸ்ரீ உன்னை அம்மா கூப்பிட்டாங்க நீ போ” தங்கை சங்கடத்துடன் மறைந்து நிற்பதை கண்டு கனிவான குரலில் கூறினான்,…
அவள் ஓடி விட,… “என்னடா விஷயம், என்னை ஏன் தேடின” என்றான் ரிஷி,… அவனோ “ம்ம்ம்…. எனக்கு… எனக்கு ஒரு ஹெல்ப்” என்றான் முகத்தில் சோகம் தெரிய கொஞ்சம் தயக்கத்துடன்..
“என்ன ஹெல்ப்” அவன் இப்படியெல்லாம் தயங்கி தயங்கி கேட்க மாட்டானே, என்னவாக இருக்கும் என்ற யோசனையுடன் வினவினான் ரிஷி,…
“அது… அது வந்து” என சுற்றி தங்களின் அருகில் யாரும் நடமாடுகிறார்களா என்பதை ஒரு முறை பார்த்துக் கொண்டவன்,… “டேய் ரிஷி, விஷயம் என்னன்னா எனக்கு, எனக்கு ஃபர்ஸ்ட் நைட்டை பத்தின கொஞ்சம் டீடைல்ஸ் வேணும்” அவன் தயங்கி மெல்லிய குரலில் கேட்க, சீரியஸாக அவனை சில நொடிகள் நோக்கிய ரிஷி பின்பு குபீரென்று சிரித்து விட்டான்,…
“டேய் நீ இப்படி சிரிப்பனு தான், கேட்கலாமா வேணாம்னானு பல நேர யோசனைக்கு பிறகே வந்து கேட்டேன், எனக்கு நெருங்கிய நண்பன்னா அது நீதானேடா, அதுவும் கல்யாணமாணவன், எக்ஸ்பீரியன்ஸ் நிறைய இருக்கும்னு வந்து கேட்டா, சிரிச்சு என்னை இன்சல்ட் பண்ணுற போடா” அவன் கோபித்துக் கொள்ள,..
“கூல்டா மச்சான், சும்மா டீஸ் பண்ணுறதுகாக சிரிச்சேன், சரி சொல்லு உனக்கு என்ன தெரியணும் இப்போ” என்றான்
“இன்னைக்கு நைட் ஃபர்ஸ்ட் நைட் ஏற்பாடு பண்ணிருக்காங்கனு கேட்டதிலிருந்து நர்வசாவே இருக்கு, ஒருமாதிரி பதட்டம் இருந்துகிட்டே இருக்கு, இதுவரை இப்டியெல்லாம் நான் எதுக்கும் டென்ஷன் ஆனதில்ல, ஆனா இப்போ இந்த விஷயத்தால, ப்ச் நான் சொல்றது உனக்கு புரியுதுலடா” என்றான் நண்பனை வருத்தமான முகத்துடன் ஏறிட்டு….
“புரியுது, ரொம்ப நல்லாவே புரியுது, நிறைய ஆம்பிளைங்களுக்கு ஏற்படுகிற பதட்டம் தான் இது, பொண்ணுங்களுக்கு மட்டுமா இதை நினைச்சு பதட்டம் பயமெல்லாம் இருக்கும், ஆம்பிளை பசங்களுக்கும் இருக்க தான் செய்யும், என்ன ஒன்னு அவங்க முகத்தின் மூலமே வெளிப்படையாக காமிச்சிடுறாங்க, நாம தான் மறைச்சு வச்சு புலம்புவோம், சரிடா இதுக்கா இவ்ளோ ஃபீல் பண்ணுற நீ, இப்போவே ஏன்டா இப்படி வியர்த்து கொட்டுது” என சிரித்தான் ரிஷி,…
“அப்படினா உனக்கும் இப்படி தான் இருந்ததா டா” வருணேஷ் வியர்வை வழிந்த முகத்தை துடைத்தபடி வினவ,… “ம்ம்” என அங்கிருந்த ஜன்னலின் விளிம்பில் போய் அமர்ந்தபடி, தன் முதல் இரவு நாளை எண்ணி நினைத்து பார்த்தான், அவன் இதழில் அழகாக புன்னகை படர்ந்தது,….
“அந்த நாளை எண்ணி ஃபீல் பண்ணி சிரிச்சது போதும், முதல்ல எனக்கு பதில் சொல்லுடா” என்றான் நச்சரித்தபடி….
“மச்சான் என்ன சொல்றது எப்படி சொல்றதுன்னு தெரியல, எங்க விஷயத்துல நடந்தது வேறு, என்ன இருந்தாலும் நான் உன் தங்கச்சி புருஷன்டா, என்கிட்ட இப்படியெல்லாம் கேட்கிறது நாகரிகம் இல்ல, ஒழுங்கா ஓடி போயிடு” பொய்யாக மிரட்டினான் ரிஷி,….
“இப்போ தான் நீ என் தங்கச்சி புருஷன், பல வருடமா என்னோட நண்பன் நீ, நான் பேசிக்கிட்டு இருக்கிறதும் என் நண்பன் கிட்ட தான், கொஞ்சம் தைரியம் கொடுக்கிற மாதிரி ஏதாவது பேசுடா, என் ஃபர்ஸ்ட் நைட்ல ஏதாச்சும் சொதப்புச்சு, அப்புறம் அந்த சாபம் எல்லாம் உனக்கு தான் வந்து சேரும்” அவன் சிரிக்காமல் பாவமான முகத்துடன் சொல்ல,…. “ஏன்டா உன் ஃபர்ஸ்ட் நைட் சொதப்புனா அதுக்கு நான் என்னடா பண்ணுவேன், எல்லாம் உன் கையில தான் இருக்கு” என்றவன், தன் பக்கமிருந்து நண்பனுக்கு சில ஆலோசனைகளை கூற, வருணேஷின் முகம் பிரகாசமானது,…
“தேங்க்ஸ்டா மச்சான்” என நண்பனின் கன்னத்தில் சந்தோஷமாக அவன் முத்தம் வைக்க,… “அடச்சீ பார்க்கிறவங்க தப்பா நினைக்க போறாங்கடா, உன்னால என் பேரும் கெட்டு போக போகுது, பாரு” என்றான் கன்னத்தை துடைத்துக்கொண்டு,…
சிரித்தவன், பின்பு நண்பனை நோக்கி “ஸ்ரீ ரொம்ப மாறிட்டா இல்லடா, அவ இந்த கல்யாண வாழ்கையை மனபூர்வமாவும் ஏத்துகிட்டா, உங்க ரெண்டு பேரையும் இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்குடா” என்றான்,…
ரிஷி எதையோ சிந்தித்த படி, அவனுக்கு பதில் கூறாமல் மெல்லிய புன்னகையுடன் நிற்க அவனது அந்த புன்னகையே வருணேஷை கலவரமாக்கியது,.. “என்னடா,…. மறுபடியும் ஏதாச்சும் பிரட்சனையா? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பார்த்தேனடா அவ முகத்துல இருந்த அபரிமிதமான பூரிப்பை, என்ன என்கிட்ட ஏதாச்சும் மறைக்கிறியா?” என்றான்,..
“இன்னைக்கு கருணாக்கு சர்ஜரி” ரிஷி உணர்வு துடைத்த முகத்துடன் கூற,… “அதுக்கு என்னடா இப்போ, எவனுக்கு சர்ஜரி நடந்தா உனக்கென்ன” என்றான் வருண் சிறு கோபத்துடன்,…
“மறந்துட்டியா வருண், கருணாவோட நிலமைக்கு நான் தான் காரணம்” ரிஷி வருத்தம் தேய்ந்த குரலில் கூற,… “இன்னும் இதை நீ விடலையாடா? அவனோட நிலைமைக்கு கண்டிப்பா நீ காரணம் இல்ல, இதை ஆயிரம் முறைக்கு மேல உன்கிட்ட நான் சொல்லிட்டேன்” என்றான்,…..
“ப்ச்…. அவன் உயிர் பிழைச்சு, சக மனிதனை போல சகஜமா நடமாட ஆரம்பிச்சா தான் என் மனசுக்குள்ள என்னை போட்டு உறுத்திக்கிட்டு இருக்க உறுத்தல் நீங்கும்” என்றான்,…
“அவன் உயிரோட வந்தா கண்டிப்பா ஸ்ரீக்கு குடைச்சல் கொடுப்பான், சந்தோசமா நகர்ந்துகிட்டு இருக்க உங்க வாழ்க்கையில அவனால பிரட்சனை வரும், அவன் சர்ஜரி ஃபெயிலியர் ஆனா நான் சந்தோஷ படுவேன்” என்றான் வருணேஷ்…
நண்பன் தன் வாழ்க்கை மற்றும் தங்கையின் வாழ்க்கையை நினைத்து பயம் கொண்டு ஆதங்கத்தில் இப்படி பேசுகிறான் என்பது புரிந்தது ரிஷிக்கு, அவனிடம் மேலும் கருணாவை பற்றி பேசி இந்த நல்ல நாளில் அவனை டென்ஷன் படுத்த விரும்பவில்லை, ஆகையால் தன் துன்பத்தை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டவன், வருணேஷை அழைத்து சென்று மற்ற இரு தோழர்களுடனும் ஐக்கியமானான், நண்பர்களுடன் ஒன்று சேர்ந்ததும் அவனின் மனதில் இருந்த கவலை எல்லாம் மறந்து போனது போல் இருக்க, சந்தோஷமாக சிரித்து பேசி மகிழ்ந்தான் அவர்களுடன்..
*********
“நித்து ஏய் நித்து” ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்தவளை ஹஸ்கி வாய்சில் அழைத்து எழுப்பிக் கொண்டிருந்தான் ரிஷி மித்ரன், அவளோ கணவன் செய்த வேலையால் சோர்வில் அயர்ந்து உறங்கி கொண்டிருந்தாள், கொஞ்சம் கூட விழிப்பு வரவில்லை,…. “ஏய் கும்பகர்ணி எழுந்துடுடி” விடாமல் மீண்டும் மீண்டும் அவளை எழுப்ப, அவளோ,… “மித்து தூக்கமா வருது, தூங்க விடுங்க” என தூக்கத்திலேயே சிணுங்களுடன் கூறிவிட்டு, ஒருங்களித்து படுத்துக் கொள்ள, ‘இவள் எழ மாட்டாள்’ என தலையை சிலுப்பிக் கொண்டவன் அவளை கரங்களில் அள்ளிக் கொண்டான்,…..
அரை உறக்கத்தில் இருந்தவளும், அவன் தன்னை தூக்கிக் கொண்டதை உணர்ந்து, தூக்கம் முழுவதுமாய் கலைந்து, விழிகளை திறந்தவள்,… “ஐயோ மித்து என்ன பண்ணுறீங்க, என்னை விடுங்க, நான் தூங்கனும்” என்றாள் அவள் கரங்களிலிருந்து இறங்க முயற்சி செய்தபடி,…
அவனோ அவளை விடாமல் பிடித்திருந்தபடி,… “தூக்கமாடி முக்கியம், முதல்ல தூக்கத்தை தூர போடு” என்றவன், அவளை கையில் ஏந்தியபடியே அறையை விட்டு வெளியேறினான்,…
“என்ன பண்ணுறீங்க நீங்க, யாராவது பார்க்க போறாங்க, என்னை இறக்கி விடுங்க” அவள் சொல்ல சொல்ல கேட்கமால் அவளை தூக்கிக் கொண்டு மேல்மாடி படிக்கட்டுகளில் ஏறினான் ரிஷி,…..
“மேல எங்க போறீங்க, ஐயோ திடீர்னு என்னாச்சு உங்களுக்கு, அடுத்த ராத்திரில என்னை தூக்கிட்டு எங்க போறீங்க” அவள் நிறுத்தாமல் புலம்ப,… “ம்ம்ம்… அப்படியே உன்கூட சேர்ந்து மாடியிலிருந்து குதிக்க போறேன்” அவன் தீவிரமான முகத்துடன் கூற,…”கடவுளே” என விழிகளை பெரிதாக விரித்தாள் அவள்,…
“மித்து…மித்து… வேணாம், எனக்கு பயமா இருக்கு, ஏன் திடீர்னு இவ்ளோ கொடூரமான முடிவு” அவன் உண்மையாக சொல்கிறான் என்ற பயத்தில் அவள் விட்டால் அழுது விடுபவள் போல் கெஞ்ச,… “அடிப்பாவி அப்படினா நான் சொன்னதை உண்மைன்னு வேற நம்புறியா நீ” என்றான்
“அப்போ சும்மாவா” அவள் பெருமூச்சு விட்டபடி கேட்க,…”நீ வாயை மூடிக்கிட்டு அமைதியா வரலன்னா உண்மையாக்கிடுவேன்” அதற்கு பிறகு அவள் வாயை திறக்கவே இல்லை, அவன் மொட்டமாடியின் கதவு பக்கம் வரவுமே,… “இந்த நேரத்துல ஏன் டெரர்ஸ்க்கு” என்றாள் குழப்பமாய்,…
“சொல்றேன், அதுக்கு முன்னாடி கண்ணை மூடு” அவன் அதிகாரமாய் கூற,… “ஏன்” என்றாள் புரியாமல்,…
“கேள்வி கேட்காம நான் சொன்னதை செய்டி, இல்லனா தூக்கி கீழ போட்டுடுவேன்” அவன் மிரட்டலுக்கு பயந்து வேகமாக விழிகளை மூடிக் கொண்டாள் நித்யா,….
“உன்னை இறக்கி விட போறேன், கண்ணை திறக்க கூடாது நான் சொல்லும் வரைக்கும்” என்ற கண்டிஷனோடு அவளை மெதுவாக தரையில் நிற்க வைத்தான்,… “மித்து என்ன பண்ண போறீங்க, எனக்கு பயமா இருக்கு, கண்ணை திறக்கட்டுமா” என்றாள் இறக்கி விட்டவனின் கரத்தை விடாமல் இறுக்கி பிடித்தபடி,…
“இன்னும் டென் செக்கேன்ட் தான் நித்து,” என்றவன், தன் கையில் கட்டியிருந்த வாட்ச்சை பார்த்தவாறே… “டென், நைன், எய்ட், செவன், சிக்ஸ், ஃபைவ், ஃபோர், த்ரீ, டூ ஒன்” என்று கூறிக் கொண்டு வந்தவன், மணி இரவு பன்னிரெண்டை தொடவும், “மெனிமோர் ஹேப்பி ரிட்டன்ஸ் ஆஃப் தி டே மை டியர் நித்து டார்லிங்” அவள் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டு, அவன் உற்சாக குரலில் சொன்னது தான் தாமதம் ஆச்சரியமாக விழிகளை திறந்தாள் நித்யா,….
திறந்தவளின் கண்கள் முதலில் கூச, பிறகு ஒரு கையால் வெளிச்சம் வந்த திசையை மறைத்தபடி கொஞ்சம் கொஞ்சமாக முழுதாக விழிகளை திறந்து பார்த்தவள் அசந்து போய் நின்றாள், அந்த மொட்டை மாடி அந்த இரவு வேளையில் கண்ணிற்கு குளுமை தரும் விதமாய் அழகாக ஜொலித்துக் கொண்டிருந்தது, அழகாக குட்டி குட்டி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தரை முழுக்க ரோஜா இதழ்களால் பரப்பி வைக்கப்பட்டிருந்தது,..
அது மட்டும் இல்லாமல் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தோரணம் அமைத்து, அதில் ஆங்காங்கே அவளது புகைப்படங்கள் தொங்கி கொண்டு அலங்கரிக்கப்பட்டது மட்டும் இல்லாமல் அவள் பெயர் பதிக்கப்பட்ட கேக் ஒன்றிருந்தது வெல்வட் துணி கொண்டு அழகாக அலங்கரிக்கபட்டிருந்த அந்த டேபிளின் மீது,…
“மித்து” என அழைத்தவளுக்கு ஆச்சரியத்துடன் மகிழ்ச்சியும் சேர்ந்து கொள்ள, சந்தோசத்தில் கண்ணீரும் வெளிப்பட்டது,… அவள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, அவளது வீட்டில் ஒருநாளும் இப்படியெல்லாம் அவள் பிறந்தநாளுக்கு ஏற்பாடு செய்ததுமில்லை, அவளே பல சமயம் தன் பிறந்த நாளை மறந்து போயிருப்பதுண்டு, தாய் தான் நினைவூட்டுவார், தமையன் அவளுக்கு பிடித்த ஏதாவது ஒரு பொருள் வாங்கி வந்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து கூறுவான் அவ்வளவே,….
இன்று அவள் காண்பது அவளுக்குள் மட்டற்ற மகிழ்ச்சியை அள்ளி தந்தது, கணவனின் மார்பில் சாய்ந்து கொண்டாள், அழவில்லை, அழவும் தோன்றவில்லை, நிமிடங்கள் கடந்தும் அவனை விட்டு விலகவில்லை, அவனது மார்சட்டையை கரங்களால் பிடித்துக் கொண்டு, அவனுடைய வாசத்தை நுகர்ந்து கொண்டு, கண்கள் மூடிய நிலையில் நின்றாள்,….
“நித்து என்னாச்சு, உனக்கு பிடிச்சிருக்கா?” என்றான், “ஏன் ஏன் மித்து, ப்ச் இதெல்லாம் எப்போ பண்ணீங்க, எனக்காக மெனக்கெட்டு எதுக்காக இதெல்லாம் பண்ணிருக்கீங்க, எனக்கே என் பிறந்தநாள் நியாபகம் இல்ல, உங்களுக்கு எப்படி தெரிஞ்சது” என்றாள் அவனை விட்டு கொஞ்சமும் விலகாமல்,….
“பொண்டாட்டியோட பிறந்தநாளை புருஷன்காரன் தெரிஞ்சுக்காம இருப்பானா, மத்ததை அப்புறம் பேசிக்கலாம், கேக் உருகுது, வா வந்து கட் பண்ணு” அவளை கையோடு அழைத்து வந்தவன், கேக்கின் அருகில் நிற்க வைத்து, மெழுகுவர்த்தியை ஏற்றி, அது அணையாதவாறு கரங்களால் தடுப்பு போட்டவன், “ம்ம்ம் கேண்டிலை அணைச்சுட்டு கட் பண்ணு நித்து” என்றான்,…
விழிகளில் மொத்தமாக காதலை தேக்கி வைத்து அவனை பார்த்து மெலிதாய் புன்னகைத்தவள், மெழுகுவர்த்தியை ஊதி அணைத்துவிட்டு, அவனோடு சேர்ந்து கேக்கை வெட்டி, அவனுக்கு எடுத்து ஊட்டினாள், அவனும் அவளுக்கு மீண்டுமொருமுறை பிறந்தநாள் வாழ்த்து கூறியபடி ஊட்டி விட்டான்,… அவளுக்காக பார்த்து பார்த்து வாங்கிய டைமண்ட் கற்கள் பதித்த அவனுடைய முதல் எழுத்தும், அவளுடைய முதல் எழுத்தும் பதிக்கப்பட்டிருந்த சங்கிலியை அவள் கழுத்தில் அணிவித்து விட்டான், நித்யாவிற்கு சர்பிரைஸிற்கு மேல் சர்பிரைஸ் கிடைக்கவும் திக்குமுக்காடி போனாள், இருவரும் விடியும் வரை அங்கு தான் இருந்தனர், அவன் மடியில் அமர்ந்து ஒரு குழந்தை போல் அவன் மார்பில் தலை வைத்து சாய்ந்து கொண்டிருந்தாள் இரவு முழுக்க, நிறைய பேசினார்கள் இருவரும், கொஞ்சமாய் கொஞ்சி கொண்டனர், ரிஷியின் மார்பை விட்டு விலகவே இல்லை அவள், அன்றைய இரவு இருவருக்கும் மறக்க முடியாத இரவாக அமைந்து போனது,….
நாட்கள் மிகவும் சந்தோசமாக தெளிந்த நீரோடை போல் சென்றது அவர்களின் வாழ்வில், முன்னே எல்லாம் ரிஷி தான் அவளை நாடி வருவான், இப்போதெல்லாம் நித்யா கணவன் வேலை முடிந்து எப்போது வருவான் என எதிர்பார்த்து காத்திருந்து, அவன் வந்ததும் வராததுமாகவே தன் அன்பான செயலால் அவனை திக்கு முக்காட வைத்து விடுவாள், தற்போதெல்லாம் அவனை விட்டு கொஞ்ச நேரம் பிரிந்திருக்கவே மனம் அவ்வளவு ஏங்கி போனது அவளுக்கு, இப்போதெல்லாம் கணவன் அருகிலேயே இருக்க வேண்டும் என உள்ளம் தவியாய் தவித்து போனது, அவள் கேட்டதற்காக தன் கடமையை தள்ளி வைத்து விட்டு அவள் கணவன் இருநாட்கள் விடுப்பு போட்டு விட்டு அவள் கூடவேயும் இருந்துவிட்டான், ஆனாலும் அவளது ஏக்கம் குறையவில்லை ஏனோ…..
இந்நிலையில் தான் மனமாற்றத்திற்காக தாய் வீட்டிற்க்கு வந்தாள் நித்யா, அண்ணி திவ்யாவுடன் அவளுக்கு நேரம் கலகலப்பாகவே கடந்தது, இருவரும் செந்தூரத்தை பேசி பேசியே காதில் ரத்தம் வராத குறையாக ஆக்கினர், செந்தூரம் அன்று மகளுக்கு பிடித்தமான உணவை மருமகளின் துணையுடன் சமைத்து விருந்தே வைத்து விட்டார், அண்ணியுடனும் தாயுடனும் கதைத்தபடி சாப்பிட்டு கொண்டிருந்த நித்யாவிற்க்கு திடீரென்று குமட்டல் ஏற்படவும் குளியலறைக்குள் ஓடி சென்று வாந்தி எடுத்தாள், செந்தூரமும் திவ்யாவும் பதறியடித்துக் கொண்டு அவளருகில் வந்தவர்கள் அவளுக்கு உதவி புரிந்தனர்,….
சோர்வாய் இருந்த மகளை பாய்விரித்து அமர வைத்த செந்தூரம்,…”என்னடாம்மா என்ன பண்ணுது” என கவலையுடன் கேட்க,… “ஒன்னுமில்லமா, சாதாரண வாந்தி தான்” என்றாள் புடவை தலைப்பாள் தன் முகத்தை துடைத்துக்கொண்டு….
“இந்தா ஸ்ரீ இந்த எலுமிச்சை சர்பத்தை கொஞ்சம் குடி, வாய்க்கு நல்லா இருக்கும்” என கலந்து எடுத்து வந்த சர்பத்தை தன் நாத்தனாருக்கு கொடுத்தாள் திவ்யா, அவளும் மறுக்காமல் வாங்கி குடிக்க,… “இப்போ தான் இப்படி இருக்காமா, சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலயா?” மகளின் சோர்வான முகத்தை பார்க்க முடியாமல் அவள் தலையை கோதி கவலையுடன் விசாரித்தார் செந்தூரம்,…
“தெரியலமா, நேத்து ரெண்டு முறை வாந்தி எடுத்தேன், இன்னைக்கு நல்லா தான் இருந்தேன், என்னமோ தெரியல சாப்பிட்டு இருக்கும் போதே குடலை பிரட்டிடுச்சு” மகளின் சொல்லில் அவருக்கு மூளையில் மின்னல் வெட்டியது போல் ஒரு விஷயம் தோன்ற, தாமதிக்காமல்,… “ஸ்ரீமா கடைசியா நீ எப்போ தலைக்கு குளிச்ச” என்றாள்,…
“இன்னைக்கு தான்” அவள் தோளை குலுக்க,… “அத்தை உன்கிட்ட எப்போ வீட்டுக்கு விலக்கானன்னு கேட்கிறாங்க, இருந்தாலும் உன் அலப்பறைக்கு அளவே இல்லை ஸ்ரீ” அவள் தலையில் செல்லமாக தட்டி சிரித்தபடி கூறினாள் திவ்யா,…
“அதுமா,..” என யோசித்தவள்,… “ரெண்டு மாசம் இருக்கும்” என்றாள், செந்தூரத்திற்கு மகிழ்ச்சி தாளவில்லை, எதற்கும் டாக்டரிடம் பரிசோதனை செய்து கொண்டு உறுதி படுத்திக் கொள்ளலாம் என நேரங்காலத்தை கடத்தாமல் அந்நேரமே மகளை பக்கத்திலுள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றார் மருமகளின் துணையுடன்,…
செந்தூரம் நினைத்தது முழுக்க முழுக்க சரி என்பது போல் மருத்துவர் நித்யாவின் கர்ப்பத்தை உறுதி செய்தார், செந்தூரம் மகளை உச்சி முகர்ந்தார் சந்தோஷகண்ணீருடன், திவ்யா அவளை அணைத்து வாழ்த்து கூறினாள் முகம் கொள்ளா புன்னகையுடன், நித்யாவிற்கு தான் நம்பவே இயலவில்லை அவளுக்குள் ஒரு உயிர் ஜனித்திருப்பதை,….
அவளின் குழந்தை, அவள் கணவனின் உயிரணுவால் விளைந்த குழந்தை, அவள் இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, தன் தட்டையான வயிற்றை தொட்டு பார்த்தாள், அவ்வளவு பூரிப்பு, இன்னும் தன் குழந்தையை உணராத போதே இவ்வளவு பூரிப்பு என்றால், குழந்தை தன் அசைவை வெளிப்படுத்தும் போது? நினைக்க நினைக்க மனம் என்னவோ செய்தது, இதை சந்தோசம் என்று மட்டுமே சொல்லி விட முடியாது, அதற்கும் மேல் விவரிக்க முடியாத உணர்வுகளை உணர்ந்தாள், தன் வயிற்றில் கணவனின் மகவு, இதை அவனிடம் கூறினால் அவன் எதிர்வினை எப்படி இருக்கும், பல கோணங்களில் யோசித்து பார்த்தாள், முகம் ரத்தமாய் சிவந்து போனது,…
செந்தூரம் மகளை நேராக அவளது வீட்டிற்கே அழைத்து வந்துவிட்டார், செவ்வந்தியிடமும் தர்மாவிடமும் இச்சந்தோஷமான செய்தியை பகிர்ந்து கொண்டார், அவர்களுக்கும் ஆனந்த கண்ணீர் வெளிப்பட்டது, பேத்தியை உச்சி முகர்ந்து வாழ்த்து கூறி ஆசீர்வதித்தனர், அவர்களின் பலநாள் கனவு இன்று நிறைவேறி விட்டது, தன் கொள்ளு பேரனையோ பேத்தியையோ இன்னும் சில மாதங்களில் கையில் தூக்கி வைத்து கொஞ்ச போகிறார்கள், நினைக்கவே மனம் லயித்து போனது, செந்தூரமும் திவ்யாவும் கொஞ்ச நேரத்தில் கிளம்பி விட்டனர் நித்யாவிற்க்கு சில அறிவுரைகளை வழங்கிவிட்டு, நித்யாவிற்கு எதுவும் காதில் விழவில்லை, அவள் தன் கணவனுக்காக காத்திருந்தாள், போனில் அழைத்து கூற அவளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை, ஆதலால் அவன் வரும் வரை காத்திருந்தாள், அவளை பல நேரம் ஏங்க வைத்து விட்டு அவள் கணவனும் வந்தான், வாசலிலேயே தனக்காக காத்திருக்கும் மனைவியை விழிகள் சுருங்க பார்த்தான், அவன் வருவதற்கு முன் அவளே அவன் அருகில் வந்து சேர்ந்து விட்டாள்,…
மனைவியின் முகத்தில் தெரிந்த அளவுக்கதிகமான சந்தோஷம் அவனுக்குள் பல கேள்விகளை ஏற்படுத்தியது,… “நித்து,… என்ன ஏதாவது சந்தோசமான விஷயமா?” என்னவாக இருக்கும் என அவனால் யூகிக்க முடியவில்லை, அதனால் அவளிடமே கேட்டுவிட்டான் நேரிடையாக,…
“மித்து” என்றாளே தவிர அவளால் சட்டென்று சொல்லிவிட முடியவில்லை அந்த சந்தோஷமான விஷயத்தை, கொஞ்சம் வெட்கம் அவளை சொல்ல விடாமல் தடுக்க, “மித்து… மித்து” என்றவாறே நின்றாள் தயக்கத்தோடு,…
“என்னடி வெட்கமெல்லாம் படுற, என்ன விஷயம்” அப்போதும் விளங்காமல் தான் கேட்டான் அந்த முட்டாள் போலீஸ்க்காரன்,….
“மித்து,… அது… நான், நீங்க, நாம” என இழுத்துக் கொண்டு வந்தவள், நிதானமாக மூச்சை இழுத்து விட்டு தன்னை சமன்படுத்திக் கொண்டு…”மித்து நீங்,..நீங்க அப்பாவாக போறீங்க, இல்லல்லா அப்பாவாகிட்டீங்க,” தன் தயக்கம், வெட்கத்தையை எல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு சொல்லிவிட்டாள் ஒருவழியாக,….
ரிஷியின் முகத்தில், அதிர்ச்சி, வியப்பு, திகைப்பு என முகபாவனை நொடிக்கு நொடி மாறிக்கொண்டே போக, “நி… நித்து,…என்ன சொன்ன?” அவனால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை, அவள் அவ்வளவு தெளிவாக எடுத்துரைத்த பிறகும் தன் காதில் தான் ஏதாவது தவறாக விழுந்து விட்டதா? இல்லை தான் தான் தவறாக புரிந்து கொண்டோமா? என்ற குழப்பத்தில் மீண்டும் வினவினான்,…
அவன் நிலை புரிந்தவள், அவன் அருகில் இன்னும் நெருங்கி வந்து, அவன் கரத்தை எடுத்து தன் மணிவயிற்றில் வைத்து,…”என் மித்துவோட அன்பால எனக்கு மிகப்பெரிய பொக்கிஷம் கிடைச்சிருக்கு, நம்ம இருவருக்குமிடையில இருக்கும் அன்பை இன்னும் இன்னும் மெருகேற்ற அந்த கடவுள் நமக்காக கொடுத்த நம்ம பாப்பா இப்போ இங்கே உள்ளே இருக்கு” அவள் விழிகளில் உணர்வுகள் பொங்க பார்வையால் தன் வயிற்றை காட்டி, அவன் கரத்தில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூறி முடிக்க, அவனுக்கோ மூச்சே முட்டியது போல் இருந்தது இச்செய்தி, அளவுக்கதிகமான சந்தோஷம் மூச்சு முட்ட செய்யும் என்பார்கள் அது போல தான் அவனுக்கும், சிரிக்கவும் முடியாமல், அழுகவும் முடியாமல் ஒரு மாதிரி மரத்து போன நிலையில் நின்றவன்,… “மித்து,… ஐ லவ் யூ” தன் விழிகளுக்குள் அவனது விழிகளை கலக்க விட்டு, ஆத்மார்த்தமாக வார்த்தை வழியாக இன்று வெளிப்படுத்தி விட்டாள் தன் மனதில் இருக்கும் காதலை,…
ஒரே சமயத்தில் இரட்டிப்பு சந்தோஷம், அவனுக்கு முடியவில்லை, என்ன யோசிக்க, இப்போ என்ன பண்ண ஒன்றும் தெரியவில்லை, அப்படியே நின்றுவிட்டான் கற்சிலையாக, மனைவியை அணைத்து என்னென்னவோ செய்ய வேண்டும் என்று உணர்வுகள் அவனை ஆட்டிபடைத்தாலும் மூச்சு முட்ட முட்ட கிடைத்த சந்தோசத்தில் சிலையாக நின்றவனின் உயரத்திற்கு எக்கி, அவனது கன்னம் பற்றியவள்,…. “எனக்கு உங்களை பிடிச்சிருக்கு, உங்களை தான் பிடிச்சிருக்கு, என் காதலும் எப்போதும் உங்களுக்கானது மட்டும் தான், என் உயிர் பொருள் ஆவி அனைத்தும் உங்களுக்காக மட்டுமே ஏங்கி போயிருக்கு” என்றவளை இதழில் கர்வ சிரிப்புடன் விழிகள் கலங்க பார்த்தவன், தாவி அணைத்துக்கொண்டான் அவளை, இறுகிய அணைப்பு தான், ஆனாலும் அவன் குழந்தை இருக்கும் வயிற்றை கொஞ்சமும் தொந்திரவு செய்யாமல் அணைத்திருந்தான், எத்தனை நாட்கள் ஏங்கி போயிந்திருக்கிறான் தன் மனைவியிடமிருந்து சின்னதாக ‘பிடித்திருக்கு’ என்ற ஒரு வார்த்தைகாக, அவன் குழந்தை வந்த நேரம் அவள் மனைவி மனதிலுள்ள காதலையும் மொத்தமாக வெளிப்படுத்தி விட்டாள், தன் குழந்தை இருக்கும் வயிற்றை அழுத்தம் கொடுக்காமல் மென்மையாக முத்தமிட்டான், தன் சந்தோஷ உணர்சிகளை அடக்க முடியாமல் அவளை தூக்கி தட்டாமலை சுற்றினான், அந்த நேரத்தில் தான் சத்தம் கேட்டு வந்தனர் மூத்தவர்கள், தன் பேரன் மற்றும் பேத்தியின் சந்தோசபரிமாறுதல்களை கண்டு வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டனர், இதே போல் இருவரும் எந்த குறையும் இல்லாமல் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று மனமார ஆசீர்வாதம் செய்தனர்,…. அதே நேரம் அவர்களின் வீட்டினுள் ஒரு ஜீப் நுழைந்தது, அதிலிருந்து இறங்கினான் கருணா…..

