Loading

1945ல் காலத்தில் நடந்த சம்பவம் இது. எமிலி நம்ப கதையோட நாயகி. எமிலியும் அவ அம்மாவும் அவ அப்பா இருக்க இடத்துக்கு போய்ட்டிருக்காங்க. எமிலியோட அப்பா இறந்துடார் அவங்க அம்மா இரண்டாவது திருமணம் பண்ணிகிட்டாங்க.இப்போ அவங்க கர்ப்பமா இருக்காங்க.அவங்க இரண்டாவதா திருமணம் பண்ணவங்க பெயர் லுயிஸ் ஆர்மில ஜென்ட்ரலா இருக்கார்.லுயிஸ் சரியான சைகோ அவன் எங்க இருக்கானோ அங்க தான் இவங்களும் இருக்கனும். அப்படி தான் இப்போ போர் நடக்குர இடத்துக்கு இவங்கள வர சொல்லிடான். இப்போ இவங்க அங்க தான் போய்டு இருக்காங்க.
எமிலி, ’’ஏன் மா இவர் நம்பள அங்க வர சொன்னார் ’’,அம்மாட கேட்டா.
அம்மா ,’’ அவர் அப்படி தான் மா நம்ப விதி இது ‘’.
எமிலி அம்மாக்கு வாந்தி வந்துச்சு வண்டிய நிறுத்திட்டு ரெண்டு பேரும் கீழ இறங்குனாங்க அங்க ஓரு சிலை இருந்துச்சு அதோட ஓரு கண் கீழ விழுந்து இருந்துச்சு அத எடுத்து அந்த சிலைள வெச்சா வெச்ச உடனே அந்த சிலையோட வாய்ல இருந்து ஓரு தேவதை பூச்சி வெளிய வந்துச்சு.
எமிலி, ‘’ அம்மா நான் கதைல வந்த பூச்சிய பார்த்தேன் ’’
அம்மா, ‘’ காட்டுல நிறைய பூச்சி இருக்கும் பார்த்து இரு ‘’.
எமிலியும் அவங்க அம்மாவும் கிளம்பிடாங்க அவங்க கூடவே அந்த தேவதை பூச்சியும் வந்துச்சு.இவங்க ரெண்டு பேரும் அவங்க போக வேண்டிய இடத்துக்கு வந்துடாங்க.அந்த லுயிஸ்க்கு இவங்க மேல பாசமலாம் இல்ல தன்னோட குழந்தைகாக மட்டும் தான் பாசமா இருக்குர போல நடிக்கரான். அங்க ஓரு வளைவு இருக்கிறத எமிலி பாக்கிறா அங்க போலம்னு பார்க்கிறா அப்போ அங்க வந்த ஜெஸ்சி (லுயிஸ் சர்வன்ட்) ,
” அங்க போக கூடாது மா வா நம்ப உள்ள போலாம் ” .

இரவு……
ரெண்டு பேரும் நல்ல தூங்கிடு இருக்காங்க அப்போ அந்த தேவதை பூச்சி எமிலிகிட்ட வந்துச்சுது.
எமிலி , ‘’ அச்சோ ‘’.
தேவதை பூச்சி , ‘’ பயப்படாத என் கூட வா ஓரு இடத்துக்கு கூப்பிட்டு போறேன் ‘’.
எமிலி , ‘’ எங்க ‘’ .
தேவதை , ‘’ வா சொல்றேன் ‘’.
தேவதை பூச்சி எமிலிய அந்த வளைவுகிட்ட கூட்டிடு போச்சு அங்க ஓரு குகை இருந்துச்சு அதுக்குள்ள கூட்டிடு போச்சு ரொம்ப தூரமா போனாங்க பூமீயோட அடி பகுதிக்கு போய்ட்டாங்க.
எமிலி , ” இங்க யார் இருக்க ” .
தேவதை , ” வா சொல்றேன் அங்க பாரு ” .
அங்க ஒரு ஜந்து இருந்துச்சு அதை பார்த்து எமிலி பயந்துட்டா .

எமிலி , ” ஐயோ காப்பாத்துங்க ” .

ஜந்து , ” பயப்படாத இளவரசி ” .

எமிலி , ” நானா ” .

ஜந்து , ” ஆமா இளவரசி .நீங்க பாதாள உலகத்துல இருந்து பூமியை சுற்றி பார்க்க வந்தீர்கள் உங்களோட கால அவகாசம் முடிந்தும் நீங்கள் பாதாள உலகத்திற்கு திரும்பாததால் பூமியிலே மாட்டிக்கொண்டீர்கள் . நீங்கள் எடுத்த ஒவொவ்ரு ஜென்மமும் பாதாள உலகத்துக்கு வரமுடியவில்லை இது தான் தங்களின் கடைசி ஜென்மம் இந்த ஜென்மத்தில் நீங்கள் வரவில்லை என்றால் இனி எப்பொழுதும் வரவே முடியாது இளவரசி ” .

எமிலி , ” உண்மையாவே சொல்றிங்களா ” .

ஜந்து , ” ஆமாம்” .

எமிலி , ” நான் என்ன செய்யணும் ” .

ஐந்து , ” நீங்கள் மூன்று பரீட்ஷையில் ஜெயிக்க வேண்டும் ” .

எமிலி ,” என்ன பரீட்ஷை ” .

ஜந்து , ” சொல்கிறேன் முதல் இந்த காட்டுக்குள்ள ஒரு சதுப்பு இருக்கு அதுக்குள்ள ராட்சஸ தவளை இருக்கு அதோட வயித்துக்குள்ள தங்க சாவி இருக்கு அதை முதலில் எடுத்துட்டு வாருங்கள் இளவரசி “.

எமிலி , ” நான் எடுத்துட்டு வரேன் ” .

எமிலி மெதுவா அவங்க தங்கியிருக்க இடத்துக்கு வந்துட்டா அவங்க அம்மா கூட வந்து தூங்கிடா .

அடுத்த நாள் காலை ……

அன்னிக்கு இரவு விருந்து ஏற்பாடு பண்ணிருக்காங்க அதுக்காக எமிலியும் அவங்க அம்மாவும் தயார் ஆகிட்டு இருகாங்க.

எமிலி , ” அம்மா நான் வரல ” .

அம்மா , ” எமிலி உன் அப்பாவை பத்தி தெரியும்ல”.

எமிலி , ” அவர் எனக்கு அப்பா இல்லை ” .

அம்மா , ” நீ பேசுறது சரில்லை ” .

எமிலி , ” உண்மை தான அம்மா சொல்றேன் அவர்க்கு நம்பள கண்டாலே பிடிக்காது உன்ன கூட பாப்பாக்காக தான் பாத்துகிற போல நடிக்கிறார் உங்களுக்கு இது புரிய மாட்டேங்குது ” .

அம்மா , ” நீ சொல்றது உண்மை தான் நமக்கு வேற வழி இல்லை நீ விருந்துக்கு தயாராகு ” .

விருந்து ஆரம்பம் ஆகிடுச்சு எல்லாரும் மது சாப்பிட்டு இருந்தாங்க எமிலி இதை பயன்படுத்தி அந்த இடத்தைவிட்டு வெளிய வந்துட்டா . அந்த ஜந்து சொன்ன சதுப்புக்கு எமிலி வந்துட்டா .

எமிலி , ” எங்க இருக்கு ” .

அப்போ அங்க வந்த தேவதை அவளுக்கு வழி காட்டுச்சு அதை வெச்சு எமிலி அங்க போய்ட்டா சதுப்புக்குள போன அந்த இடமே சேரா இருந்துச்சு .

எமிலி உள்ள போன போயிட்டே இருந்தா ரொம்ப நேரம் கழுச்சு அந்த தவளைய பாத்துட்டா தவளை பார்க்கவே பயங்கரமா இருந்துச்சு ….அது எமிலி கன்னத்துல இருந்த பூச்சிய அதோட நாக்குல எடுத்து சாப்பிடிச்சு ….அப்போ தான் எமிலிக்கு யோசனை வந்துச்சு மூணு கல்லை பூச்சியோட சேர்த்து அதுக்கு குடுத்துட்டா அதை சாப்பிட உடனே அந்த தவளை வாந்தி எடுத்துருச்சு அதுல தங்க காசும் இருந்துச்சு .

எமிலி , “இதை தான் எதிர் பாத்தேன் ” .

அதை எடுத்துக்கிட்டு எமிலி வெளிய வந்தா அவங்க இடத்துக்கு போலாம்னு நெனைக்கிறப்போ அங்க ஜெஸ்ஸியா பார்த்த ரொம்ப பதட்டமா போய்ட்டு இருந்த எமிலியும் பின்னாடியே போன ஜெஸ்ஸி போனது புரட்ச்சி பண்றவங்க இடத்துக்கு , ஆமா ஜெஸ்ஸி அந்த புரட்சி பண்றவங்க கூட்டத்தை சேர்ந்தவை தான் பிரிட்டிஷ் ஆர்மி கூட இருந்து அவங்க என்ன செய்றங்கனு தெரிஞ்சுக்க தான் இவங்க கூட இருக்கா .

ஜெஸ்ஸி ,” அவங்க நமக்கு குடுக்கிற சாப்டுல விஷம் வெக்கிறதா பேசிக்கிறாங்க அதுனால எதும் புதுசா வந்த சாப்பிடாதீங்க ” .

எமிலி பாத்துட்டு தான் இருந்தா அவளுக்கு ஜெஸ்ஸி மேல சந்தேகம் இருந்துச்சு லூயிஸ் அந்த ஊர்க்கரங்களுக்கு சாப்பாடு தரக்கூடாதுனு சொன்னான் ஆனா அந்த ஊர்காரங்களுக்கு சாப்பாடு போயிடு தான் இருக்கு அதுக்கு ஜெஸ்ஸி தான் காரணம்னு லூயிஸ்க்கு தெரியாது .

ஜெஸ்ஸி ,” கால் எப்படி இருக்கு ” .

அங்க இருக்க அவங்க தாத்தாட கேட்ட ,அவர் காலுல அடி பட்டு அந்த காயம் பெருசு ஆகிடுச்சு இப்போ எதுமே பண்ணமுடியாதுனு டாக்டர் சொல்லிட்டார் கால எடுக்கணும், பிரிட்டிஷ் ஆரமிக்கு இருக்க டாக்டர் தான் இந்த புரட்சி பண்றவங்களாகும் வைத்தியம் பாக்குறார் இது எதுமே அந்த லூயிஸ்கு தெரியாது .

ஜெஸ்ஸி பேசிட்டு இருந்து கெளம்பிட்டா போகுறப்போ எமிலி பின்னாடி வரத பாத்துட்டா .

ஜெஸ்ஸி , ” ஏன் என் பின்னாடி வர இங்க என்ன பண்ற நீ ”

எமிலி , ” இல்லை அது “.

ஜெஸ்ஸி, “நான் யாரோட பேசுனனு பார்த்தியா “.

எமிலி , ” ம்ம்ம் ” .

ஜெஸ்ஸி , ” உங்க அப்பாகிட்ட சொல்லுவியா ” .

எமிலி , ” அவர் என் அப்பா இல்லை நான் சொல்லவும் மாட்டேன் நீங்க நல்லவங்க அதுனால நான் சொல்லமாட்டேன் ” .

ஜெஸ்ஸி , ” ரொம்ப நன்றி சரி வா போலாம் ” .

ரெண்டு பெரும் அவங்க இருக்குற இடத்துக்கு வந்தாங்க அங்க எமிலி அம்மா எமிலிய திட்டுனாங்க விருந்து நடக்குறப்போ எங்க போனினு, அவளை அவங்க அறைக்கு கூப்டு போய்ட்டாங்க

இரவு …..

தூங்கிட்டு இருந்த அப்போ அந்த ஜந்து அவளை தேடி அறைக்கே வந்துடுச்சு …..

எமிலி , ” இங்க ஏன் வந்த ” .

ஜந்து ,” தங்க சாவி எடுத்துட்டியா “.

எமிலி , ” எடுத்துட்டேன் இந்தா” .

ஜந்து , ” குடு உன்னோட ரெண்டாவுது பரிட்சைக்கு தயாரா ” .

எமிலி ,” நான் தயார் தான் ” .

ஐந்து , ” சரி நாளைக்கு என்னோட இடத்துக்கு வா சொல்றேன் ” .

எமிலி , ” சரி வரேன் ” .

அந்த ஜந்து அங்க இருந்து போய்டுச்சு எமிலி அடுத்து என்னனு நெனைச்சுட்டே தூங்கிடா .
அடுத்த நாள் காலை ,

எமிலி அப்போ தான் எழுந்தா பக்கத்துல அவங்க அம்மாவை காணோம் எங்க போங்கன்னு தேடிட்டு வெளிய வந்தா அப்போ ஜெஸ்ஸி இவை கிட்ட வந்தா .

ஜெஸ்ஸி , ” உன் அம்மாக்கு உடம்பு சரில அவங்கள டாக்டர் பாத்துட்டு இருக்காங்க ” .

எமிலி, ” என்ன ஆச்சு நல்லா தான் இருந்தாங்க ” .

அப்போ தான் டாக்டர் வெளிய வந்தார் லூயிஸ் அவர்கிட்ட என்ன ஆச்சுன்னு கேட்டான் அதுக்கு அவர் அவங்க ரொம்ப வீக்கா இருக்காங்க அதுனால அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும் இல்லைனா அவங்களுக்கும் அவங்க வயித்துக்குள்ள இருக்க குழந்தைக்கும் பெரிய ஆபத்து அப்டினு சொன்னார் .

லூயிஸ் , ” பாத்தியா உன் கூட இருந்தா என் புள்ளைக்கும் உடம்பு சரி இல்லாமை போய்டும் இனி நீ தனியா படுத்து தூங்கு புரித்தா ஜெஸ்ஸி இவளை வேற அறைக்கு கூப்டு போ ” .

ஜெஸ்ஸி அவளை வேற அறைக்கு கூப்டு போய்ட்டா .

ஜெஸ்ஸி , ” இங்க பாரு அவர் சொன்னதுலம் பெருசா எடுத்துக்காத சரியா நீ இங்கயே இரு கொஞ்ச நாளைக்கு “.

எமிலி , ” ம்ம்ம் சரி ” .

இரவு ,

எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருந்தாங்க அப்போ அந்த தேவதை பூச்சி வந்து எமிலிய கூப்பிடுச்சு எமிலியும் யாராவது வரங்களான்னு பாத்துட்டு அவங்க இருக்க இடத்தை விட்டு வெளிய வந்தா நேரா அந்த ஜந்து இருக்க இடத்துக்கு போன இவளுக்காக அது காத்துட்டு இருந்துச்சு .

ஜந்து , ” வா வா உன்னோட அடுத்த பரிட்சைக்கு தயாரா ” .

எமிலி , ” என் அம்மாக்கு உடம்பு சரில்ல எனக்கு அழுகையா வருது ” .

ஜந்து , ” என்ன இளவரசி அழாதீங்க நான் ஒன்னு தருவேன் அதா நான் சொல்ற படி செஞ்சேங்கான உங்க அம்மாக்கு உடம்பு சரி ஆகிடும் ” .

எமிலி , ” நிஜமாவா நான் கண்டிப்பா செய்றேன் சொல்லு ” .

அந்த ஜந்து எமிலி கைல ஒரு வேர் குடுத்துச்சு அதா பாலுல ஊறவெச்சு அதுல ரெண்டு சொட்டு ரத்தம் விட்டு அவங்க அம்மா படுத்திருக்க கட்டிலுக்கு கீழ வெக்க சொல்லுச்சு எமிலியும் சந்தோசமா அதா வாங்கிட்டு அவ தங்கியிருக்க இடத்துக்கு வந்துட்டா அந்த ஜந்து சொன்ன மாறியே செஞ்சா அடுத்த நாள் காலைலயே அவங்க அம்மா சரி ஆகிட்டாங்க எமிலிக்கு அவ்ளோ சந்தோசம் .

லூயிஸ் அந்த புரட்சி பண்றவங்கள தேடி காட்டுக்குள்ள போனான் அங்க அவங்க கூட்டத்துல ஒருத்தன் கைல அடிபற்றுக்கு அதுக்கு மருந்து போட்டுட்டு இருந்தான் அவனை அப்டியே இவங்க இடத்துக்கு தூக்கிட்டு வந்துட்டாங்க அது வேற யாரும் இலை ஜெஸ்ஸியோட தம்பி தான் அவனை கொடுமை படுத்துறங்க அவங்க ஆளுங்களாம் எங்க இருக்காங்கனு சொல்ல சொல்லி அவன் வாயவே திறக்கலை அவன் சாகுற நிலைமைல இருக்கான் . லூயிஸ் டாக்டரை வர சொல்றான் .

டாக்டர் , ” என்ன வர சொன்னிங்களா ” .

லூயிஸ் , ” ஆமா இவன் உயிரோட இருக்கணும் நான் அவனை இன்னும் கொடுமை படுத்தனும் அவனை சரி பண்ணுங்க ” .

டாக்டர் அவன் கிட்ட போனாங்க அவன் என்ன கொன்னுடுங்கனு டாக்டர்கிட்ட கேக்குறான் டாக்டரும் அவன் படுற கஷ்டத்தை பாக்க முடியமா விஷஊசி போட்டுட்டார் அப்போ அந்த லூயிஸ் டாக்டரோட பைல இருந்து ஒரு மருந்தை எடுக்கிறான் அந்த மருந்தும் இவங்க பிடுச்சுட்டு வந்தவன் கைல இருந்த மருந்தும் ஒரே மருந்து லூயிஸ் தெருஞ்சுகிட்டான் .

லூயிஸ் , ” நீங்க தான் இவங்களுக்கு வைத்தியம் பாக்குறீங்களா ” .

டாக்டர் , ” ஆமா நான் தான் பாக்குறேன் உன்னால என்ன பன்ன முடியுமோ அத பனிக்கோ ” .

டாக்டர் அவரோட பைய எடுத்துட்டு வெளிய வந்துட்டார் லூயிஸ் அவரை கூப்பிட்டான் என்னனு திரும்பி இவர் பாக்கவும் இவரை சூட்டுடான் அவர் அங்கேயே இறந்துட்டார் இதுலாம் ஜெஸ்ஸி பாத்துட்டு தான் இருந்தா அவனால எதும் செய்ய முடில அழுதா.
அன்னிக்கு ராத்திரி நல்லா தூங்கிட்டு இருந்த எமிலி அப்போ அந்த ஜந்து அங்க வந்துச்சு .

ஜந்து , ” இளவரசி இன்னும் நீங்க ரெண்டாவது பரீட்சை செய்யல ” .

எமிலி , ” ஆமா நான் செய்றேன் என்ன செய்யணும்னு சொல்லு ” .

ஐந்து , ” நான் உங்களுக்கு ஒரு மந்திர குச்சி தரேன் அத ஏதாது சுவற்றில் கதவு மாறி வரைங்க அங்க ஒரு கதவு வரும் அதுக்குள்ள போய் அங்க இருக்க தங்க கத்திய எடுத்துட்டு வாங்க முக்கியமான விஷயம் அங்க சாப்பிடுறதுக்கு நிறைய இருக்கும் அதுலாம் எதுமே சாப்பிட கூடாது புரித்தா ” .

எமிலி , ” ஏன் சாப்பிட கூடாது ” .

ஐந்து , ” சொல்றத மட்டும் செய்ங்க இளவரசி எதும் சாப்பிட கூடாது சரியா ” .

எமிலி , ” சரி ” .

ஜந்து அவகிட்ட அந்த மந்திர குச்சியை குடுத்துட்டு போய்டுச்சு எமிலி அதேயே பாத்துட்டு இருந்தா அவ பக்கத்துல இருந்த சுவற்றுல ஒரு கதவு வரைஞ்சா ஒரு கதவு வந்துச்சு அதுக்குள்ள போன அவகூடயே மூணு தேவதை பூச்சி வந்துச்சு உள்ள போனாங்க அங்க ஒரு அரக்கன் உக்காந்துருந்தான் அவன் முகத்துல கண்ணு இல்லை சிலை மாறி உக்காந்திருந்தான் தேவதை பூச்சிங்க அந்த தங்க கத்தி இருக்க இடத்துக்கு கூப்டு போச்சுங்க எமிலி அந்த கத்திய எடுத்துட்டா திரும்பி போறப்போ எமிலி ஜந்து சொன்னதை மறந்துட்டு அங்க இருக்க சாப்பிடற பொருளை எடுத்து சாப்பிடுடா அவ சாப்பிட உடனே அந்த அரக்கனுக்கு உயிர் வந்துடுச்சு அந்த மூணு தேவதை பூச்சியும் எவ்ள காப்பாத்த அந்த அரக்கன் கிட்ட சண்டை போட்டுச்சு அதுல ரெண்டு தேவதை பூச்சிய அந்த அரக்கன் சாப்பிடன் எமிலியும் ஒரு தேவதை பூச்சியும் தான் தப்பிச்சாங்க .

தேவதை பூச்சி , ” ஏன் இப்படி பண்ண சாப்பிடாதான்னு சொன்னாங்களா ” .

எமிலி , ” நான் மறந்துட்டு சாப்பிட்டேன் ” .

தேவதை பூச்சி , ” உன்னால ரெண்டு தேவதை செத்துப்போச்சு ” .

அப்போ அங்க அந்த ஜந்து வந்துச்சு தேவதை பூச்சி நடந்ததா எல்லாத்தியும் சொல்லிடுச்சு ஜந்துக்கு கோவம் வந்துடுச்சு

ஜந்து , ” நான் சொன்னதை நீ மீறிட்ட உனக்கு பாதாளத்துக்கு போக தகுதியே இல்லை இனிமே என்னை பார்க்க வராதே குடு அந்த கத்திய ” .

அந்த கத்திய வாங்கிட்டு அது அங்க இருந்து போய்டுச்சு எமிலிக்கு ரொம்ப கஷ்டமா போச்சு அந்த ஜந்து சொல்றதை கேட்டுருந்த இப்போ இவ்ளோ பிரச்சனை வந்திருக்காதுல அதை நினைச்சு வருத்தப்பட்டுட்டு இருந்தா இப்படியே படுத்து தூங்கிட்டா .

அடுத்த நாள் காலை ,

அவங்க அம்மா கத்துற சத்தம் கேட்டுச்சு என்னனு போய் பார்த்த அவங்களுக்கு வயிறு வலுச்சுது இவை அவங்க கட்டிலுக்கு கீழ போய் பார்த்த அந்த வேரு வாடி போயிருந்துச்சு அதன் இவங்களுக்கு மறுபடியும் வலி வந்திருக்கு வேகமா அந்த வேர எடுத்து பாலுல நனைச்சு ரத்தத்தை விட்டு மறுபடியும் கீழ வெக்க போன அப்போ அந்த லூயிஸ் அங்க வந்தான் .

லூயிஸ் , ” என்ன இது ” .

எமிலி , ” அது வந்து ” .

லூயிஸ் , ” இங்க பாரு இந்த மாறி ஏதாது பன்னிட்டு இருந்த கொன்றுவேன் உன்ன புரித ” .

இவங்க சத்தம் கேட்டு அவங்க அம்மா முழுச்சுட்டாங்க தன் பொண்ணை ஏதாது பன்னிடுவானோனு பயந்து எழுந்து வந்தாங்க ,

அம்மா , ” நீங்க விடுங்க நான் பேசிக்கிறேன் நீங்க போங்க ” .

லூயிஸ் ரெண்டு பேத்தையும் முறைச்சுட்டு போய்ட்டான் ,

அம்மா , ” என்ன பண்ற நீ ” .

எமிலி , ” அம்மா இது உங்க நலத்துக்காக தான் ” .

அம்மா , ” என்ன என் நலத்துக்கா ஏன் தான் இப்படி பண்றயோ ஏற்கனவே இருக்க பிரச்சனை பத்தாதா நீ வேற ஏன் இப்படி பண்ற என்னால முடில ” .

எமிலி , ” அம்மா இது வெச்ச அப்பறம் தான் உங்களுக்கு உடம்பு சரி ஆச்சு ” .

அம்மா , ” போதும் நிறுத்து இதுக்கு மேல ஏதும் பேசாத ” .

அந்த வேரை அவ கைல இருந்து வாங்கி பக்கத்துல இருக்க நெருப்புல தூக்கி போட்டுட்டாங்க நெருப்புல விழுந்த உடனே அது துடுச்சுது அது துடிக்க துடிக்க இவங்க வயித்துல இருக்க குழந்தையும் வலில துடிக்க ஆரமிச்சுது .

அம்மா , ” ஆஅஹ்ஹ்ஹ வலிக்குது ” .

இவங்க கத்துனதுல எல்லாரும் வந்தாங்க இவங்கள வேகமா வேற அறைக்கு கூப்டு போனாங்க பனி குடம் உடைஞ்சுடுச்சு குழந்தை பிறக்க போகுது அரைமணி நேரம் கழுச்சு ஒரு லேடி வந்தாங்க குழந்தையை லூயிஸ் கைல குடுத்தாங்க எமிலி அம்மா இறந்துட்டாங்க , ஆனா அதைப்பதிலாம் லூயிஸ்கு கவலை இல்லை எமிலி அம்மாக்கு இறுதி சடங்கு செஞ்சு முடுச்சுட்டாங்க இப்போ எமிலி லூயிஸ் ஓட வளர்ப்புல தான் இருந்தா அவளுக்கு சுத்தமா அவன் கூட இருக்க பிடிக்கல வேற வழி இல்லாமை இருக்கா .

இரவு ,

லூயிஸ் அவன் அறைல படுத்திருந்தான் அப்போ அவனை கொலை பண்ண ஒரு உருவம் உள்ள வந்துச்சு அதா அவன் பாத்துதான் அந்த உருவத்தை பிடுச்சு முகத்துல இருக்க துணிய விலக்கி பார்த்தான் அது ஜெஸ்ஸி .

லூயிஸ் , ” நீ எதுக்காக என்ன கொலை பண்ண முயற்சி பண்ண ” .

ஜெஸ்ஸி , ” என் தம்பிய நீ கொன்னுட்டா உன்ன உயிரோட விடமாட்டேன் ” .

லூயிஸ், ” ஓஓ நீயும் அந்த புரட்சி பண்றவங்க கூட்டாளிய உன்னை உயிரோட விடமாட்டேன் ” .

அவளை பிடுச்சு கட்டி வெச்சுட்டான் அவ தம்பிய கொடுமை பண்ண மாறி இவளையும் கொடுமை பண்ண .

இங்க எமிலியோட அறைல அவ படுத்துருந்தா அங்க அந்த ஜந்து வந்துச்சு ,

ஜந்து , ” இளவரசி ” .

எமிலி , ” என்னோட அம்மா இறந்துட்டாங்க ” ,

ரொம்ப அழுதா ஜந்து அவளை சமாதானம் பண்ணுச்சு ,

ஜந்து , ” உன்னோட மூணாவுது கடைசி பரீட்சை நீ தயாரா ” .

எமிலி , ” ம்ம்ம் தயார் ” .

ஐந்து , ” ஆனா நான் சொல்றதை தான் கேக்கணும் மாத்தி செய்ய கூடாது சரியா ” .

எமிலி , ” சரி ” .

ஜந்து , ” நான் இப்போ கெளம்பறேன் கொஞ்ச நேரம் கழுச்சு நீ உன் தம்பிய எடுத்துட்டு நம்ப இடத்துக்கு வந்துடு ” .

எமிலி , ” ஆனா எதுக்கு என் தம்பி ” .

ஐந்து , ” இப்போ தான சொன்னேன் ஏதும் கேக்க கூடாதுனு ” .

எமிலி ” சரி நான் கூப்டு வரேன்” .
அந்த ஜந்து போன கொஞ்ச நேரத்துல எமிலி அவளோட குட்டி தம்பிய எடுத்துட்டு அந்த இடத்துக்கு போக வெளிய வந்தா அவ குழந்தையோட வெளிய வந்ததா லூயிஸ் பாத்துடான் . ஜெஸ்ஸியா கொடுமை பண்ணலாம்னு கட்டிப்போட்டு வெச்சுருந்தான் அதை கழட்டிட்டு ஜெஸ்ஸி தப்புச்சிட்டா அவளை தேடி வெளிய வந்தப்போ தான் எமிலிய பாத்துதான் .

லூயிஸ், ” என் குழந்தையை தூக்கிட்டு இவை எங்க போற ” .

அவ பின்னாடியே போனான் எமிலி அந்த ஜந்து இருக்க இடத்துக்கு வந்துட்டா அந்த ஜந்து இவளுக்காக காத்துட்டு இருந்துச்சு .

ஜந்து , ” வா வா ” .

எமிலி , ” தம்பி எதுக்கு ” .

ஐந்து , ” இங்க பாரு ” .

எமிலி , ” என்னது இது”

ஜந்து , ” இந்த கதவுல உண்மையா யாருக்கும் கேடு நினைக்காம இருக்க மனசோட உள்ளவங்கலோட ரத்தத்தை இந்த கதவு மேல விடணும் அப்போ தான் உங்களால் பாதாள உலகத்துக்கு போக முடியும் இந்த குழந்தைக்கு தான் மனசுல எந்த தீங்கும் நினைக்காம இருக்கு அதுனால இந்த குழந்தையோட ரத்தம் இந்த கதவு மேல படனும் அதுக்கு தான் எடுத்துட்டு வர சொன்னேன் ” .

எமிலி , ” நான் பாதாள உலகத்துக்கு வரலானாலும் பரவலா என் தம்பியோட ஒரு சொட்டு ரத்தம் கூட கீழ விழ நான் ஒதுக்க மாட்டேன் ” .

இவை பேசிட்டு இருக்கும் போதே லூயிஸ் அங்க வந்துட்டான் அவன் கண்ணுக்கு அந்த ஜந்து தெரில வேகமா பொய் எமிலிகிட்ட இருந்து குழந்தையை வெடுக்குனு பிடுங்குனான் கொஞ்ச தூரம் முன்னாடி போய்ட்டான் போயிடு திரும்பி எமிலிய பார்த்தான் பட்டுனு எமிலிய சூட்டுட்டான் எமிலியோட நெஞ்சுலயே சூட்டுட்டான் அங்கேயே எமிலி கீழ விழுந்துட்டா . அங்க இருந்து வெளிய வந்த லூயிஸ் அவன் முன்னாடி புரட்சி பண்றவங்க இருந்தாங்க லூயிஸ்கு புருஞ்சுடுச்சு தான் சாக போறோம்னு அவன் குழந்தையை ஜெஸ்ஸி கைல குடுத்தான் .

லூயிஸ், ” என் குழந்தையை நல்லா வளத்துங்க அவன் பெருசு ஆனா அப்பறம் அவன் அப்பாவை பத்தி அவனுக்கு சொல்லி வளத்துங்க ” .

ஜெஸ்ஸி , ” உன்ன மாறி ஒருத்தன அவனக்கு நாங்க சொல்ல மாட்டோம் அவன் நல்லவனா வளரட்டும் உன்ன மாறி வளர கூடாது ” .

அவனை அங்கேயே சுட்டு கொன்னுட்டாங்க ஜெஸ்ஸி வேகமா எமிலிய பக்க உள்ள ஓடி வந்தா ,

எமிலி அப்போ தான் கண்ணு முழுச்சா அவளை சுத்தி ஒரே தங்கமா இருந்துச்சு எல்லா பொருளும் தங்கமா இருந்துச்சு ,

எமிலி , ” நான் எங்க இருக்கேன் ” .

ஜந்து:” இளவரசி இது தான் பாதாள உலகம் ” .

எமிலி; “நான் வந்துட்டான்னா ” .

ஜந்து , ” ஆமா இளவரசி நீங்க ஒருவேளை உங்க தம்பியோட ரத்தத்தை குடுத்துருந்தா நீங்க இனிமே எப்போவுமே பாதாள உலகத்திற்கு வந்துருக்க முடியாது நீங்க அப்டி செய்யல யாருக்கும் தீங்கு நினைக்காம இருக்கும் மனசு தான் வேணும் அது உங்களுக்கு இருக்கு இளவரசி அதான் நீங்க எங்க வந்துடீங்க ” .

ஜெஸ்ஸி வந்து பாத்தப்போ எமிலி இறந்து இருந்தா அவன் சுடவும் அவ நெஞ்சுல இருந்த ரத்தம் அவ கைல பட்டு அந்த மந்திர கதவுல பட்டு அவளுக்கு அவ உலகத்துக்கு போக வழி கிடைச்சிருச்சு .

பல ஜென்மமா அவளோட உலகத்துக்கு போகாம இருந்த எமிலி அவளோட கடைசி ஜென்மத்துல அவ உலகத்துக்கு வந்துட்டா அவளோட அம்மா அப்பபோட சந்தோசமா இருந்தா .

முற்றும்………….

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

4 Comments

  1. எமிலி,ஜந்து,தேவதை பூச்சி,பாதாள உலகம் எல்லாம் அருமையா இருந்துச்சு சிஸ்..தவளைட இருந்து தங்க காசு எடுத்தது செய்😂😂..தங்ககத்தி எடுக்கும்போது எமிலி சாப்பிட்டது(சோறு முக்கியம் பிகிலு)…லூயிஸ் மனைவி இறந்ததுக்கு பீல் பண்ணவே இல்ல..எமிலி கடைசில பாதாள உலகம் போய்ட்டா..அழகிய படைப்பு சிஸ்.. வாழ்த்துக்கள்