Loading

“டேய் தேவா என்னோட பேரன் என்னடா செய்யான். ”

“அம்மா இத்தனை நேரம் ரகளை பண்ணிட்டு இப்பதான் தூங்கினான். என்னால சமாளிக்க முடியலை மா எப்படி தான் புவி அவனை சமாளிச்சாலோ தெரியலை”.

“இன்னும் புவி வேலையில் இருந்து வரலையாடா..”

“இல்லை மா வர்ற நேரம் தான். நிறைய வேலை வாங்கறாங்க போல இருக்கு அவ்வளவு டயர்டாக வர்றா பார்க்கவே பாவமாக இருக்கு”.

” நேரம் ஆகிடுச்சே சமையல் இனிதான் வந்து செய்யணுமா”.

“இல்லமா எனக்கு தெரிஞ்ச மாதிரி செஞ்சு வைக்கிறேன். சமயத்தில் வாய்ல வைக்க முடியலை.. எப்படி தான் சாப்பிடறாளோ.. இந்த லாக்டவுன்ல அவளுக்கும் வேலை போய் இருந்தா..நினைச்சே பார்க்க முடியலை”.

“ஏண்டா இப்படி பேசுற.. எல்லாம் சரி ஆகிடும்.”

“நானும் அதை தான் நினைக்கிறேன் மா..மேலிடத்தில் பேசி இருக்கிறேன். பார்க்கலாம் என்ற நடக்கிறதுன்னு”.

“மறுபடியும் வேலைக்கு கூப்பிடுவாங்க தேவா..மனசை விட்டுடாதே.‌”

“இல்ல மா..எத்தனையோ நாள் அவளோட சமையலை அப்படி பேசி இருக்கிறேன். இன்றைக்கு நான் சமைக்கும் போது தான் அதோட சிரமம் புரிந்து. ஒருநாள் கூட அவ சமையலை பாராட்டியது இல்லை.இன்றைக்கு என்னோட சமையலை சாப்பிடும் போது முகம் சுளிச்சது இல்லை.நல்லா இருக்குனு சாப்பிடறா..சரி மா போனை வைக்கிறேன்.அவ வர்ற நேரம் ஆச்சு” சொன்னபடி போனை வைக்க.. வாசலில் கேட்டுக் கொண்டிருந்தவளின் கண்கள் அவளையும் அறியாமல் கலங்கியது.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

14 Comments

  1. salma amjath khan

    Nice story sis…. Intha website la Nan padikura mudhal story ungalodathu thn. Arumai…. Ithu maamiyar kum purunja nalla irukum…. All the best for your bright future sis….

  2. உண்மை தான் அக்கா . வேலைக்கு போற பெண்களோட வலியை சொல்லி மாறாது . அங்கேயும் வேலை செய்து இங்கேயும் வேலை செய்து ரொம்ப கஷ்டப்படுவாங்க 😔😔😪😪 . ஆனா இதை புரிஞ்சுக்க தான் யாருக்கும் முடிவதில்லை 😤🤧🤧😐😐

    நல்ல அழுத்தமான கதை . 👏👏👏

  3. இது நிறைய வீடுகளில் நடக்கின்ற ஒரு சம்பவம் எந்தக் கணவனும் தன் மனைவியின் சமையலை பாராட்டியது கிடையாது. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் வரும்போது அதை உணர்வது பெரிய விஷயம். அருமை சகோதரி

  4. சும்மாவா சொன்னாங்க தலைவலியும் காய்ச்சலும் அவனவனுக்கு வந்தாதான் தெரியும்னு..தேவாக்கு மனைவியோட இடத்துல வந்து சமைச்ச பிறகுதான் அதோட அருமை புரியுது..அருமையான படைப்பு சிஸ்

  5. 150 வார்த்தைகளில் கதை எழுதறது கொஞ்சம் சிரமம்தான்..அதுக்குள்ள அழகா ஒவ்வொரு தரும் திறம்பட கதை சொல்லி இருக்காங்க.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..