Loading

          நீயின்றி நானில்லையே 👫

 

அத்தியாயம் – 3 

 

     மறுநாள் காலையில் வழக்கம் போல காலை 12.00 மணிக்கு சாரி சாரி மதியம் 12.00 எழுந்து வந்தாள் நீது . சாதாரண நாளே 11.00 எனும்போது நேற்றைய களேபரத்தின் களைப்பில் ஒருமணிநேரம் அதிகமாக தூங்கினாள் நீது 🤭 . மதிய உணவு தயாராகி இருக்க பிரபஞ்சனிடம் ” Good morning bro ” 🙄 என்றிட ,” ஓய் கல்யாணம் ஆகிடுச்சு இனியும் ப்ரோவா 😪 ” என்றான் . 

 

   ” சரி போட்டு செல்லம் ” நீது .

 

    “சரி போய் குளிச்சிட்டு வா . பசி தாங்கல . நீ இல்லாம சாப்பாடு தர மாட்றாங்க 😪 ” பிரபஞ்சன்

 

   ” சரி வெயிட் பண்ணு . இதோ சட்டுனு ஹாஃப் அன்ட் ஆர் ல வந்துடுறேன் . ” நீது 

 

   ” எல்லாம் என் நேரம் ” பிரபஞ்சன் . 

 

       கால் மணிநேரத்தில் தன் வேலை அனைத்தையும் முடித்து வந்து சேர்ந்தாள் . கீழே சென்று உணவருந்தி விட்டு வர நேற்று கல்யாணத்தில் தாலி எடுத்துக் கொடுத்த ஐயர் கால் மேல் கால் போட்டு சிக்கன் பீசை திருடி ” ஆகா ஆகா என்ன ஒரு அருமை … ஸ்… ஆ… ” என்று உண்டு கொண்டிருக்க நீது பேவென பார்த்துக் கொண்டிருந்தாள் . 

 

   இதை கவனித்த அந்த ஐயர் , ” என்னமா இப்படி பாக்குற . டேய் பிரபஞ்சா அவளுக்கு என்ன வேண்டுமோ குடுடா . மை வயிறு பாவம் ” 

 

  ” ஏன் பெரியப்பா … அங்கிட்டு போங்கோ போங்கோ ” ஆதிரன் . 

 

  ” வா தங்கச்சி . நீ எனக்கு என்ன முறையோ நான் உனக்கு என்ன முறையோ அதுலாம் எனக்குத் தெரியாது . பட் நீயும் நானும் அண்ணா தங்கச்சி . நம்மலாம் ஒரு கூட்டணி . அண்ட் பாவம் . சரி பிரபஞ்சனும் என்னோட சாரி நம்மளோட அணி ‌ . ஓகே 👍 ” ஆதிரன் 

 

    ஒன்றும் புரியாமல் நீது நிற்க பிரபஞ்சன் , ” போகப் போக உனக்கே புரியும் ‌ 😇 ” என்றான் . 

 

அந்த நேரத்தில் சமுத்திராவும் அனுஷியாவும் ஓடி வர அவர்களும் இந்தக் கூட்டத்தில் இணைய ” வாங்க எல்லாரும் நம்ம மீட்டிங் போடுற ப்ளேஸ்க்கு போவோம் . அண்ணி ரொம்ப குழம்பி இருக்காங்க . அங்க போய் எல்லாத்தையும் சரி பண்ணலாம் ” சமுத்திரா 

 

   அந்த இடத்திற்கு சென்றதும் பேச ஆரம்பித்தனர் . 

 

   ” அண்ணி இப்ப சொல்லுங்க . உங்களுக்கு என்ன தான் பிரச்சினை. ஐ மீன் என்ன குழப்பம் . ட்ரெயின் ல ஏறியது ல இருந்து முகம் ரொம்ப கேவலமா இருக்கு. இப்ப லைட்டா பல்ப் எரிஞ்சுட்டு இருக்கு . பட் உங்க முகம் க்ளியரா இல்ல . என்ன ஆச்சு னு சொல்லுங்க . எங்களால் முடிஞ்சா நாங்க சொல்லுறோம் ” அனுஷியா 

 

     ” ஏய் வாலு வந்த உடனே பிரச்சனை பிரச்சனை னு கேட்டுட்டு இருந்தா அவங்க பயப்படமாட்டாங்களா என்ன . முதல் ல நீ யாரு மத்தவங்க எல்லாம் யாரு னு சொல்லுங்க . ” என்று புதிதாய் ஒரு குரல் அறிமுகமானது .       

 

      திரும்பிப் பார்க்க நெடுநெடுவென வளர்ந்த ஒருவன் நன்கு கம்பீரமான பார்வை . தீ கங்கு கண்கள். பார்வையிலே உண்மை மற்றும் பொய்யை பிரித்தறியும் கண்கள் ‌ . இறுகிய புஜங்கள் என்று ஒருவன் பார்க்க அரக்கன் என்றும் இல்லாது அசுரன் என்றும் இல்லாது ஒருவன் வந்தான் . 

 

         நீது முதல் பார்வையிலேயே பயந்து விட்டாள் . கிட்ட தட்ட மயங்குவாள் போலும் . அவள் குணம் அறிந்ததாலே பிரபஞ்சன் தயார் நிலையில் இருந்தான் . 

 

          ” ஹாய் டா அண்ணா . அண்ணி எங்க. ஏன் இப்ப வந்த… 1 வருடம் கழித்து வர்றது ” பிரபஞ்சன் 

 

           ” என்ன அண்ணா உன்ன எவ்வளவு மிஸ் பண்ணுனோம் தெரியுமா நேத்தைக்கு ” அனுஷியா .

 

          ” கூல் கூல் . முதல் ல நீது கிட்ட பேசுங்க பாவம் அவ தான் முழிச்சுகிட்டே இருக்கா ” 

 

    ” இது தான் எங்க அண்ணன் நிரஞ்சன் . பிரபஞ்சனோட அண்ணா . நான் அனுஷியா . இது சமுத்திரா . இது ஆதிரன் . அந்தா ஒருத்தன் மரம் பின்னாடி நின்று வௌவால் மாதிரி சிக்னல் குடுக்குறானே அது சமுத்திராவோட அண்ணா சமுத்திரன் ‌. அந்தா ஃபோன் அண்ட் லேப்டாப் தான் கதி னு இருக்குறானே ஒரு குரங்கு 🐒 அது என் அண்ணன் அபிமன்யு. இவ்வளவு தான் நீங்க தெரிஞ்சுக்க வேண்டிய லிஸ்ட் . இவங்க அம்மா அப்பா லிஸ்ட் பிறகு சொல்லுவோம் . 😇 ” அனுஷியா .

 

       ” சரி ம்மா இனி உன் சந்தேகம் என்ன . ” நிரஞ்சன்

 

        ” ஓய் என்ன ஆச்சு 🙄 ” பிரபஞ்சன்

 

         ” என்ன எதுக்கு ஏமாத்துன ? கீர்த்தி எங்க ? நான் நீ சொன்னதுக்கு ஒத்துக்காததும் என்னோட பேரண்ஸ் கிட்ட போயிட்டல ‌… எதுக்கு பிபின் ங்குற பெயர் ல வந்த . முதல் ல நீ யாரு ? இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் அ நீ எப்படி மாறுன ? உன் பணம் பாத்து கட்டிக்கிட்டேன் னு நினைக்கிறியா . எனக்கு மாப்பிள்ளை யாரு னு கூட சுத்தமா தெரியாது . அப்புறம் நீ இவ்வளவு பெரிய பிஸ்னஸ் மேன் னு நேத்து சந்திரா சொல்லி தான் தெரியும் . கல்யாணம் ஆகப் போற என்ன அவ குழப்புனதுமே புரிஞ்சுகிட்டேன் யாரோ என்ன குழப்ப பாக்குறாங்க னு . அப்புறம் நீ தான் என்ன கஷ்டப்படுத்த பாக்குறியோ னு நினைச்சேன் . அப்புறம் நிச்சயம் நடக்கும் ப உன்ன பாத்ததும் சுத்தமா குழம்பிட்டேன் . இப்ப உங்க அண்ணன் அ பாத்த பிறகு நான் நானா இல்ல . ” நீது . 

 

      ” தங்கச்சி மா இதுக்கு எதுக்கு அழகுற ” என்றபடி வந்தது ஒரு குரல் . கூடவே கொஞ்ஞை மொழி பேசித் தத்தித் தவளும் ஒரு குழந்தையும் அழுகையை மட்டுமே மொழியாகக் கொண்ட பிறந்த பிஞ்சுக் குழந்தையும் . 

 

     ” இது என்னோட மனைவி தமிழினி ” நிரஞ்சன் ‌

 

       ” மீ தமிழினி . நான் உன் கேள்விக்குப் பதில் சொல்றேன் . 

 

       பிரபஞ்சன் படிச்ச அதே காலேஜ் ல தான் நானும் படிச்சேன் . சரியா சொன்னா பிரபஞ்சனோட தோழி நான் . இவனோட ஃபோன் ல தான் மை புருஷன் தட் மீன்ஸ் நிரஞ்சன் முதல் ல பாத்தாரு . அங்கிருந்து துளிர்த்த காதல் கீதம் இப்ப இரண்டு குழந்தைக்குத் தாய் நான் .

 

      பிரபஞ்சன் அண்ட் நிரஞ்சன் இரட்டையர்களா இருந்தாலும் கூட அவங்க குடும்பம் இது கிடையாது . இது மிஸ்டர் ஆதிரன் என்கிற மை ஆதிப்பாண்டியோட வீடு ” தமிழினி 

 

     ” ஏய் அக்கா உன்ன கொல்லப் போறேன் . எங்கப் போனாலும் ஆதிப் பாண்டி னு கூப்டு என் இமேஜையும் என் பெயரோட இமேஜையும் டம்மி ஆக்குற ” ஆதிரன் . 

 

   ” விடுடா . 

 

       ஆதிரனோட அம்மாவும் நிரஞ்சன் அப்பாவும் அண்ணன் தங்கைகள் . நிரஞ்சன் அப்பா குடும்பத்தை எதிர்த்து ஏழையான சாரதி அம்மாவ காதல் கல்யாணம் பண்ணிகிட்டாங்க . அதனால அவங்க அப்பா தன்னோட சொத்துல பங்கு குடுக்கல . ஆனா நிரஞ்சன் அப்பா படிக்கும்போதே வேலை செஞ்சு வீட்டுக்குத் தெரியாம தனியா ஒரு வீடு கட்டி வச்சுருக்காங்க . அதுதான் வேலூர் ல உள்ள வீடு . ஆதிரன் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிரஞ்சனை ரொம்ப பிடிக்கும் ‌ . பிரச்சனை க்கு மத்தியில் நிரஞ்சன் அப்பா அம்மாவ கூட்டிட்டு தனியா வந்து வாழ ஆரம்பிச்சாங்க ‌ . நிரஞ்சனோட தாத்தா கோபத்தில் மொத்த சொத்தையும் ஆதிரன் அம்மா பெயருக்கு எழுதி வச்சாங்க . ஆனா நிரஞ்சனோட தாத்தா இறந்த பிறகு தான் அதை அவங்க உபயோகிக்க முடியும் னு கண்டிஷன் இருந்துச்சு . இத்தனை வருஷம் அவங்க தனியா இருந்தாங்க . நிரஞ்சன் அண்ட் பிரபஞ்சன் நல்லா படிக்க ஆரம்பிச்சு காலேஜ் போற வயசு ல அவங்க அப்பா ஒரு விபத்து ல தவறிட்டாரு . தனியா நின்னப்போ ஒரு தனியார் நிறுவனத்திடம் பேசி அவங்க மூலம் ஆதிரன் அம்மா இவங்க இரண்டு பேர் படிப்புக்கும் ஏற்பாடு பண்ணுறாங்க ‌ . சமுத்திரா படிச்சது ஸ்காலர்ஷிப் ல தான் . ஸ்கூல் நிர்வாகம் பாத்துக்கிச்சு . அவ ஸ்கூல் முடிச்சுட்டு வரும்போது அவ மார்க் வச்சு கவர்மெண்ட் ல ஃபீரீ அட்மிஷன் கிடைச்சு . அப்படியே அவ படிப்பு போச்சு . நிரஞ்சன் எம் . பி .ஏ முடிச்சு தனியா ஒரு சின்ன கம்பெனி ஸ்டார்ட் பண்ணினான் . அண்ட் ஆதிரன் தன்னோட கம்பெனி நடத்த முடியாம இருந்த நிலைல அதுல சேர்ந்து ஹெல்ப் பண்ண ஆரம்பிச்சான் . பிரபஞ்சன் உன்னோட காலேஜ் ல மேற்படிப்பு படிச்சான் . நிரஞ்சனோட தாத்தா 10 வருஷம் முன்னாடியே இறந்தாரு . அவரு இறந்ததும் முதல் வேலையா ஆதிரன் அம்மா அவங்க சொத்துல இருந்து சரிபாதி பிரிச்சு சாரதி அம்மா பெயர் ல எழுதி வச்சாங்க . அப்புறமா ஆதிரன் , நிரஞ்சன் அண்ட் பிரபஞ்சன் சேர்ந்து தங்களோட கம்பெனி அ இணைச்சு மொத்த வேலையும் பாக்க ஆரம்பிச்சாங்க . கொஞ்சம் நாள் ல கம்பெனி பெருசாச்சு . நாங்களும் வசதி ல உயர்ந்தோம் . வந்த லாபத்தைச் சரி பாதியாக பிரிச்சுக்குறோம் . அவ்வளவுதான் டா . ” என்று முடித்தாள் தமிழினி . 

 

 

 

      ” எனக்கு அது ஒரு பிரச்சினை இல்ல இல்ல . எனக்குத் தேவையானது என்கிட்ட ஏன் இவன் பிபின் ங்குற பெயர் ல வந்தான் . என்ன ஏன் ஏமாத்துனான் . அதுக்குதான் பதில் தேவை . ” என்று கத்தினாள் நீது . 

 

      ” அது … அது .. அது வந்து மா … ” நிரஞ்சன் 

 

 

 

பதிலை எதிர்பார்ப்போம் … 

 

 

தொடரும்… 🤗

 

மக்களே கதை பிடிச்சிருக்கா … நல்லா போகுதா … உங்களுடைய மேலான கருத்துகளை சொல்லிட்டுப் போங்கப்பா 🙈🤗

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்