Loading

அடுத்த நாள் காலை அனைவரும் பரபரப்பாக நிச்சயதார்த்தத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

 

 

 

ஜனனியின் அறையில் நித்யா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.

 

 

 

தோழிகள் யாரும் அவளை தொந்தரவு செய்யவில்லை.

 

 

 

ஜனனியை அஞ்சலி தயார்ப்படுத்திக் கொண்டிருக்க,

 

 

 

“ஜனனி.. நித்தி நைட் எங்க போயிருந்தா?லேட் ஆகி தான் வந்தா.. வந்ததும் தூங்கிட்டாள்.. ரொம்ப டையர்டா வேற இருந்தாள்..” என திவ்யா கேட்க,

 

 

 

என்ன கூறி சமாளிக்க என புரியாமல் ஜனனி முழிக்க அஞ்சலி,

 

 

 

“பங்ஷன் டைம் என் கிட்ட வீட்டுக்கு போய் ஏதோ திங்ஸ் எடுக்கனும்னு சொன்னாள்.. ஒரு வேளை வீட்டுக்கு போயிருந்தாளோ என்னவோ..” என்க,

 

 

 

“ஆமா.. வீட்டுக்கு போய் வர்ரேன்னு எனக்கு மெசேஜ் பண்ணி இருந்தா..” என அதையே ஆமோதித்து சமாளித்தாள் ஜனனி.

 

 

 

திவ்யா, “சரி ஜனனி… நீ ரூம்லயே இருந்துக்கோ.. வெளிய பிரியாக்கா சாரும்மாவுக்கு (சாருமதி-ஜனனியின் தாய்) ஹெல்ப் பண்ணிட்டு இருக்கா.. நாங்களும் போய் அவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறோம்.. நித்தி எந்திரிச்சா அவளயும் சீக்கிரம் ரெடி ஆக சொல்லு..” என அஞ்சலியையும் அழைத்துக்கொண்டு வெளியே சென்றாள்.

 

 

 

அவர்கள் கிளம்ப நித்யா கண் விழித்தாள்.

 

 

 

அவள் அருகில் சென்ற ஜனனி, “ஆர் யு ஓக்கே நித்து.. நைட் என்ன நடந்துச்சி?” என்க அவளை நோக்கி ஒரு வெற்றுப் புன்னகையை நித்யா உதிர்க்க,

 

 

 

“எதையும் மனசுக்குள்ளே வெச்சிக்கிட்டு கஷ்டப்படாதே நித்து.. யாரு கிட்டயாச்சும் அதை வெளிப்படுத்தினா தான் கொஞ்சம் சரி ஆறுதலா இருக்கும்..” எனக் கூறி அவள் தோள் தொட,

 

 

 

தாயைத் தேடும் குழந்தையைப் போல ஜனனியை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள் நித்யா.

 

 

 

“முடியல ஜெனி என்னால.. எனக்கு மட்டும் ஏன் டி இவ்வளவு கஷ்டம்.. நான் யாருக்கு என்ன கெடுதல் பண்ணினேன்.. எல்லோரும் சந்தோஷமா இருக்கனும்னு தானே எதைப் பற்றியும் யோசிக்காம ஜீவிக்கு கூட ஹெல்ப் பண்ணினேன்.. இப்போ அவங்க எல்லாரும் சந்தோஷமா இருக்காங்க..‌ நான் மட்டும் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்..” என கதறி அழ அவள் தலையை ஆதரவாக தடவிய ஐனனி,

 

 

 

“முதல்ல இந்த தண்ணிய குடி..” என க்ளாஸில் நீரை வழங்கி அவளை பருக வைத்து விட்டு,

 

 

 

“நீ யாருக்கும் எந்த கெடுதலும் பண்ணல நித்து.. உன்னோட பாசம் உண்மையானது.. கடவுள் நல்லவங்களை ரொம்ப சோதிப்பான்.. ஆனா கை விட மாட்டான்.. இந்த கஷ்டம் எல்லாம் சீக்கிரம் உன்ன விட்டு போயிரும்..”

 

 

 

(அவள் அறியவில்லை நித்யா இதை விட அதிகமாக தன் வாழ்வில் கஷ்டங்களை அனுபவிக்க இருக்கிறாள் என்று..)

 

 

 

“நீ இவ்வளவு யோசிச்சி வேதனப்படுற அளவுக்கு நைட் அப்படி என்ன தான் நடந்துச்சி..யாருக்கும் சொல்லாம நீ எங்க கிளம்பி போனாய்..” எனக் கேட்க தன் அழுகையை அடக்கியவாறு இரவு நடந்ததைக் கூறத் தொடங்கினாள்.

 

 

 

மண்டபத்திலிருந்து வெளியேறிய நித்யா காரை வேகமாக ஒட்டியபடி எங்கு செல்கிறோம் என்பது கூட யோசிக்காது பாதை செல்லும் திசையில் சென்று கொண்டிருந்தாள்.

 

 

 

கண்களில் ஒரு வித வெறுமையுடன் ஓட்டியபடி இருந்தவளை பின்னிருந்து ஒலித்த ஹார்ன் ஒலி மீட்டெடுத்தது.

 

 

 

தான் எங்கு செல்கிறோம் என சுற்றி பார்வையை சுழல விட்டவளின் கண்களில் பட்டது ஒரு கடற்கரை.

 

 

 

காரை கடற்கரை பக்கம் திருப்பிச் சென்றவள் அதனை அங்கு நிறுத்தி விட்டு கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினாள்.

 

 

 

அலைகள் வந்து கால்களை தொட்டுச் செல்ல அவள் நினைவுகளோ பின் நோக்கி நகர்ந்தது.

 

 

 

எட்டு வருடங்களுக்கு முன் அவனை முதன் முதலாக சந்தித்த போது அவள் துளியும் எண்ணியிருக்க மாட்டாள் அவன் தனக்கு இத்தனை வலிகளையும் வேதனைகளையும் கொடுத்து விட்டு போய் விடுவான் என்று.

 

 

 

கண்களில் கண்ணீர் ஆறாக ஊற்றெடுக்க கடற்கரை மணலில் அப்படியே அமர்ந்து விட்டாள்.

 

 

 

சிறகு முளைத்த பட்டாம் பூச்சியாய் சுற்றித் திரிந்தவள் மனதில் காதல் என்பதை விதைத்து விட்டு அது துளிர் விட்டு விருட்சமாய் வளர்ந்த பின் வேரோடு பிடுங்கி எறியப்பட்டது.

 

 

 

அப்படி ஒரு நாள் அவள் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் அவள் இன்று இத்தனை வலிகளை சுமந்திருக்க வேண்டியதில்லை.

 

 

 

விதி யாரை விட்டது.

 

 

 

நினைவுகளின் தாக்கத்தில் இருந்தவளை அவனது யுவி என்ற அழைப்பு நிகழ்வுக்கு கொண்டு வந்தது.

 

 

 

ஐந்து வருடங்களுக்கு முன் எந்த அழைப்பு அவள் உயிர் வரை தீண்டிச் சென்றதோ இன்று அதே அழைப்பு அவள் உடலை தீயிட்டு கொளுத்தியது போல் வேதனைக்குட்படுத்தியது.

 

 

 

மீண்டும் அவன் அழைக்க திரும்பிக்கூட பாராது,

 

 

 

“எதுக்கு என் பின்னாடி ஃபளோவ் பண்ணிட்டு வந்தாய்.. ஏன் நான் நிம்மதியா இருக்கிறது பிடிக்கலயா… இல்ல இன்னும் ஏதாச்சும் சொல்ல மிச்சமிருக்கா?” அவள் வார்த்தைகளில் அவ்வளவு வலி.

 

 

 

அவனால் அதை நன்கு உணர முடிந்தது.

 

 

 

“என்னோட முகத்த பார்த்து பேசக் கூட பிடிக்கலயா யுவி..” என அவள் பின்னிருந்து சஜீவ் கேட்க,

 

 

 

அவ்வளவு நேரம் வேதனையில் கிடந்தவள் சட்டென திரும்பி, “நெவர் கால் மீ யுவி அகைன்… ஐயம் நித்யா… நித்ய யுவனி.. அன்டர்ஸ்டேன்ட்…” என விரல் நீட்டி எச்சரிக்க, அவள் கண்கள் கோபத்தில் சிவந்திருந்தது.

 

 

 

வார்த்தைகளில் அவ்வளவு கடுமை.

 

 

 

இதற்கு முன் என்றுமே பார்த்திராத நித்ய யுவனியாய் சஜீவ்வின் கண்களுக்கு தெரிந்தாள் அவள்.

 

 

 

சஜீவ், “ப்லீஸ் யுவி..” என்றதும் அவள் முறைக்க,

 

 

 

“சாரி.. நித்யா.. எனக்கு புரியிது நான் உன்ன எவ்வளவு கஷ்டப்படுத்திட்டேன்னு.. பட் அந்த நேரத்துல எனக்கு வேற வழி தெரியல… அம்மா என்னால கஷ்டப்படுறத என்னால பாக்க முடியல.. அதனால தான் அன்னெக்கி நான் அப்படி பேசிட்டேன்..” என்க,

 

 

 

“நான் உங்கள எதுவுமே கேக்கல மிஸ்டர். சஜீவ் சர்வேஷ்.. நீங்க உங்க அம்மாக்கு பிடிச்ச மாறியே இருங்க.. இப்போ மட்டும் எதுக்காக வந்தீங்க.. என்னோட நீங்க பேசினது அவங்களுக்கு தெரிஞ்சிச்சுனா ரொம்ப கஷ்டப்படுவாங்க இல்லையா…” என நக்கலாக கூற,

 

 

 

“இல்ல யுவி.. என்ன மன்னிச்சிரு.. அம்மா கூட நான் பேசுறேன்.. என்னால நீ இல்லாம இருக்க முடியாது..ப்ளீ……” அவன் கூறி முடிக்க முன்னே அவன் கன்னம் எரிந்தது.

 

 

 

தன் கன்னத்தைப் பிடித்தவாறு கண்கள் கலங்கிய நிலையில் தலையை நிமிர்த்த, நித்யாவோ ஆத்திரத்தின் உச்சியில் இருந்தாள்.

 

 

 

ஆம் நித்யா தான் அவனை அறைந்திருந்தாள்.

 

 

 

“இந்த அறைய அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி நான் தந்து இருக்கனும்.. எப்படிடா கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி சொல்றாய்.. தான் காதலிச்சவன்னு கூட பார்க்காம வாய்க்கு வந்ததெல்லா பேசி என்ன உயிரோட கொன்னுட்டு இப்போ ஈஸியா வந்து மன்னிப்பு கேட்டதும் நான் எல்லாமே மறந்துட்டு உன்ன ஏத்துக்கனுமா.. எத்தனை தடவை தான் மன்னிக்கிறது.. தெரியாம பண்ணினா மன்னிக்க முடியும்.. ஆனா ஒரே தப்ப திரும்ப திரும்ப தெரிஞ்சே பண்ணினா என்ன அர்த்தம்.. அப்படி இருந்தும் உன்ன ஒவ்வொரு தடவையும் எல்லாம் மறந்து நான் மன்னிச்சிருக்கேன்.. ஒருத்தர கொன்னுட்டு அந்த பிணத்தைப் பார்த்து மன்னிப்பு கேட்டா செத்தவங்க எழுந்து வருவாங்களா.. நீ மன்னிப்பு கேக்குறதும் அப்படி தான் இருக்கு… இங்க பாரு சர்வேஷ்.. உன்ன காதலிச்ச நித்யா செத்துட்டா..சாரி சாரி கொன்னுட்டாய்… இப்போ சொல்லுறாய் தானே அம்மா கூட பேசுறேன்னு.. இதயே நீ அஞ்சி வருஷத்துக்கு முன்னாடி பண்ணி இருந்தாய்னா நான் ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்.. இனிமே மன்னிப்பு அது இதுன்னு கேட்டுட்டு என் பக்கம் திரும்ப வந்துராதே.. அம்மா பேச்சை கேட்டுட்டு அம்மா புள்ளையாவே இருந்துக்கோ… ஐ டோன்ட் கேர்.. பாய்…” என்ற நித்யா திரும்பிக் கூட பார்க்காது கிளம்பினாள்.

 

 

 

அவள் செல்லும் திசையை கையாலாகாத்தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சஜீவ்.

 

 

 

கடற்கரையிலிருந்து கிளம்பிய நித்யா எப்படி மண்டபம் வந்து சேர்ந்தாள் என்பதே தெரியாது.

 

 

 

நடு இரவில் அறைக்குச் சென்ற போது திவ்யா பேசியதற்கு பதில் கூட கூறாது அப்படியே கட்டிலில் சரிந்தாள்.

 

 

 

ஜனனியிடம் அனைத்தையும் சொல்லி முடித்த நித்யா, “ஜெனி.. இதோ.. இதோ.. இந்த கையால தான் நான் அவன அடிச்சேன்.. அவன் என்ன தப்பு பண்ணாலும் என்னால அவன வெறுக்க முடியலடி… இவ்வளோ நாளா அவன வெறுக்குறேன்னு சொல்லி என்ன நானே ஏமாத்திக்கிட்டு இருந்திருக்கேன்… அவன் என் பக்கத்துல இருக்கும் போது தான் எனக்கு இது புரிஞ்சுச்சி… அவன் என் முன்னால வரும் போது நான் ரொம்ப பலவீனமா ஆகுறேன் ஜெனி… எனக்கு என்னயவே பிடிக்கல.. நான் இப்படி எதையோ இழந்த மாதிரி இருந்துட்டு என்னையும் கஷ்டப்படுத்தி உங்க எல்லாரையும் கஷ்டப்படுத்திட்டு இருக்கிறது பிடிக்கலடி.. உனக்கு ஒன்னு தெரியுமா.. அவன் என்னோட உயிர்… நானே அவன அடிச்சிட்டேன்.. இதோ இந்த கையால தானே அவன அடிச்சேன்.. இந்த கைய…..” எனக் கதறியவாறு அருகிலிருந்த மேசையில் கையிலிருந்த க்ளாஸால் அடிக்க அது உடைந்து அவள் கைகளைப் பதம் பார்த்தது.

 

 

 

நித்தியாவின் மனக் குமுறல்கள் அவள் அழுவதனால் குறையும் என அவளை அழ விட்டு பார்த்துக் கொண்டிருக்க அவளின் திடீர் செயலில் கைகளில் இரத்தம் வடிய நின்றவளைக் கண்டு பதறிய ஜனனி,

 

 

 

“ஏய் லூசு.. என்னடி பண்ணிட்டாய்.. பைத்தியமா உனக்கு..” என்க,

 

 

 

“இதை விட அவனுக்கு வலிச்சிருக்கும் தானே ஜெனி..” என நித்யா கேட்க,

 

 

 

அவளுக்கு முதலுதவி அளித்தவாறே, “இவ்வளவு பாசத்த வெச்சிக்கிட்டு எதுக்குடி உன்னையும் கஷ்டப்படுத்திட்டு சஜீவ் அண்ணாவையும் கஷ்டப்படுத்துறாய்… அண்ணா கூட பேசி இருந்தா எல்லாமே ஓக்கே ஆகிரும் தானே டி..” என அவளும் கலங்கியவாறு கேட்டாள் ஜனனி.

 

 

 

“தெரியல ஜெனி.. அவன பார்க்குர ஒவ்வொரு தடவையும் அவன் அன்னெக்கி பேசினதும் அவன் சொன்ன வார்த்தைகளும் தான் ஞாபகம் வருது.. அந்த நேரத்துக்கு நான் இன்னும் அவன கஷ்டப்படுத்திருவேன்.. வேணாம் ஜெனி என்னால அவன மன்னிக்க முடியல.. இப்படி இருக்குறது தான் எல்லோருக்கும் நல்லது…. அவனாச்சும் ஹாப்பியா இருக்கட்டும்..” என்ற நித்யா, “ஹேய் ரொம்ப சாரி டி.. இன்னெக்கி உனக்கு நிச்சயதார்த்தம்.. நான் உன்ன வேற அழ வெச்சிட்டேன்.. ப்ரேம்ணாக்கு அவரு பொண்டாட்டிய நான் அழ வெச்சது தெரிஞ்சா நான் காலி.. சரி இரு நான் போய் குளிச்சிட்டு ரெடி ஆகிட்டு வரேன்… ரொம்ப லேட் ஆகிருச்சு…” என தன் கவலையை மறைத்துக் கொண்டு வெளியில் சிரித்தவாறு செல்லும் தன் தோழியை வேதனையுடன் பார்த்தாள் ஜனனி.

 

 

 

❤️❤️❤️❤️❤️

 

 

 

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
7
+1
7
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. கதை மாந்தர்கள் மனதை கொள்ளை கொண்டு விட்டனர். மனதிற்கு பிடித்தமான காதல் கதைக்களம். சிறப்பான எழுத்து நடை. மேலும் படைப்புகளை தொடர வாழ்த்துகள்.