Loading

குமரி – 9

சென்மொழி அடம்பிடிக்க, நாச்சியார் கடுகடுவென நின்று கொண்டிருந்தார். கூட்டமாக இருப்பதை உணர்ந்து பாரியும், அரசியும் அவ்விடத்திற்கு வந்தனர்.

இவர்கள் மூவர் நிற்கும் தோரணையக் கண்டு பதறிய அரசி முல்லையிடம் வினவினார். “அது ஒன்னுமில்லை மா! நேத்து நீங்க சொன்னீங்க அங்க போனா வெளியே வர முடியாதுனு அதனால அப்படி அவ தங்குறதுக்கு இஷ்டம் இல்லையாம். இங்கையே இருக்காளாம். அப்போ அப்போ போன்ல பேசிக்க சொல்றா. அதான் அம்மா கோபமா பேசுறாங்க” என்று அரை மணி நேரமாக நடக்கும் சம்பாஷனைகளை விளக்கினாள் முல்லை.

பாரி சிரித்து விட்டு நகர, சென்மொழிக்கு இன்னும் கோபம் வந்தது. அதைப் புரிந்து கொண்ட அரசி தான் சென்மொழியின் அருகில் வந்து “நான் சொன்னது எஸ்டேட்குள்ள  போனா வேற எங்கையும் தங்க முடியாதுனு தான் சொன்னேன். வெளியவே வர முடியாதுனு சொல்லல . சரியா தாயி! நீ எப்போ வேணாலும் இங்க வரலாம் ” என்று குமடை பிடித்து முத்தம் கொடுத்தார்.

அப்பொழுது தான் சென்மொழிக்கு முகத்தில் சிரிப்பு என்பதே வந்தது.அவளை சமாதானம் செய்து அனுப்பி விட எத்தனித்த நேரம் செம்பியா வேகமாக ஓடி வந்து சென்மொழியிடம் நெருங்கி சந்தனத்தை கையில் கொடுத்தான். அதை அவள் எடுத்து தன் நெற்றியில் இட்டுக் கொண்டாள்.

அந்நேரம் அவளை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த செம்பியா திடீரென்று ஏதோ உள்ளுணர்வு தோன்ற நிமிர்ந்து வடக்கில் உள்ள மலையை பார்த்தான். இரு ஆன்மாக்களும் கண்களுக்கு தெரிந்தது. அவை முல்லையின்  பாதுகாவலர்கள் போல் இரு புறமும் வந்து நின்றது. அதன் பின்பே உன்னிப்பாக கவனித்தான் முல்லையை.

அவனால் ஊகிக்க முடியாத அளவிற்கு மனதில் மகிழ்ச்சி ஊற்று பெருக்கி ஓடியது. யாரிடம் சொல்வது என்றும் தெரியவில்லை. தன் மக்களுக்கு தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவார்கள் என்று நினைத்து சொல்ல போகும் நேரம் சென்மொழி ஆசனையும், முல்லை இரு ஆன்மாகளையும் பார்த்து கண் ஜாடை செய்தனர்.

ஆசன் அவன் கை பிடித்து நிற்கும் சமயம் , இரு ஆன்மாக்களில் பெண் ஆன்மா அசரிரீ போல் ” வேண்டாம் செம்பியா, அம்மையைப் பற்றி நம் மக்களுக்கு தெரிவதற்கு முன்பு நம் அனைவருக்கும் வேலைகள் உள்ளது. அதை முடித்து விட்டு கூறுவோம். அது வரை பொறுமை வேண்டும் செம்பியா . புரிந்து நடந்து கொள் ” என்று கூறியது.

ஆசன் பின்பு அவன் மீதிருந்து கையை எடுக்க , செம்பியாவிற்கு கண் விழித்தது போன்று இருந்தது. கண்களை சுழல விட்டான். இரு ஆன்மாக்களும் கண்களுக்கு புலப்படவில்லை. உடனே முல்லையைப் பார்த்தான். முல்லை சிரித்தாள். அவனும் சிரித்து விட்டு ஆசனை பார்க்க, அவர் புன்னகைத்தார்.

அரசி முதலில் இருந்து செம்பியனின் முகப்பாவனைகளை கவனித்து கொண்டே இருந்தவள் பின்பு கேட்டுக் கொள்ளலாம் என்று மனதில் குறித்து கொண்டார்.

நாச்சியார் இருவரையும் கிளம்ப கூற, முல்லை என்ன நினைத்தாலோ, செம்பியாவை நோக்கி, “நீங்க எங்களை உங்க குல கோயிலுக்கு கூட்டிக்கிட்டு போறீங்களா? ” என்று கேட்டாள்.

நாச்சியார் தான் பொங்கி விட்டார். ” இரண்டு பேரும் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? நேத்து போக வேண்டியது. இன்னமும் லேட் பண்ணா என்ன அர்த்தம்? ” என்று மனதில் தோன்றியதை சுற்றம் அறியாமல் பேசினார்.

அவர் பேசியது அரசிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. இவ்வளவு பார்த்து பார்த்து செய்தும் இப்படி பேசுகிறாரே என்று . ஆனால், நாச்சியாரின் பதற்றம் இவர்கள் மூவருக்கு தான் தெரியும். எஸ்டேட்ற்க்குள் நுழைந்து விட்டாள் வெளியில் வரத் தேவையில்லை. நம்மளை தேடியும் யாரும் வர மாட்டார் என்கிற நம்பிக்கையில் சீக்கிரமாகவே அவ்விடத்துக்கு செல்ல வேண்டும் என்று துடிக்கின்றார்.

ஆனால், முல்லையின் பேச்சில் மனது இறங்கி நாச்சியார் ஒத்துக்கொள்ள , செம்பியா, முல்லை, சென்மொழி, நாச்சியார் பயணம் மேற்கொண்டனர். ஆசன் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை கூடவே அவரும், பாரியையும், அரசியையும் அழைத்து சென்றனர்.

அனைவரும் நீரோடையின் வடக்கு கரை வழியே சென்று மலை மீது ஏறி தெற்கு பாதைக்கு செல்ல நடுவில் நீர்வீழ்ச்சி தங்களின் மேல்  தண்ணீர் தூவி தங்களை ஸ்நானம் செய்ய வைத்து சுத்தப்படுத்தியது போன்று உணர்வு அனைவருக்கும்.

தெற்குப் பாதைக்கு வந்து பாறையின் மேல் ஏறி வந்தவுடன் இருபத்தி ஐந்து படிகள் கொண்ட ஒரு இடம் இருந்தது. அப்படிகள் அனைத்தும் கற்களால் செய்தது. அதில் சிறப்பு அம்சமே அதில் நீர் கசிந்து கொண்டே இருந்தது. ஒவ்வொரு படிகளிலும் நீர் ஊற்று இருந்தது. அதைத் தாண்டி மேலே ஏறிய பொழுது மூன்று புறங்களிலும் மூன்று மரங்கள் தலை தூக்க, கற்சிலையில் ஆனா ஒரு பழங்குடியின பெண்  நின்று கொண்டிருந்தாள்.

அதில் அப்பெண் பின் கொசுவம் வைத்து சேலை கட்டியிருந்தாள். இடுப்பில் கத்தியும், ஒரு கையில் குச்சியும், மறுகையில் தீப்பந்தமும், கரிய குழல்கள் காற்றில் ஆட , நெற்றியில் சந்தனத்தால் பட்டையிட்டு கம்பிரமாக நின்றுக் கொண்டிருந்தாள் குறிச்சி குமரி.

அவளைக் காண காண சென்மொழிக்கு நீர் பெருக்கெடுத்தது. முல்லைக்கோ சொல்லில் அடங்கா இன்பம். தன் மக்களை நினைத்து கர்வம் கொண்டாள். அவர்கள் இன்னும் மென்மேலும் வளர வேண்டும் என்று மனதில் பிரார்த்தனை செய்தாள்.

அப்பொழுது அங்கு காற்று பலமாக வீச, மும்மரங்களில் ஒரு மரம் அசைய ஒரு பாறையின் மேல் முல்லை மொழியாள் ❤️ வேந்தர் என்று எழுதியதை பார்த்தாள். பார்த்தவுடன் அவள் கண்கள் சிவந்தது.  “உன்னை இந்த ஜென்மத்தில் கண்டவுடன் கொன்று விடுகிறேன் வேந்தா ” என்று மனதினுள் குளுரைத்து கொண்டாள்.

🌿🌿🌿🌿🌿

அதே சமயம், மத்தக்கிரியில் மஞ்சுளா கண்கள் வீங்கி , கன்னம் சிவந்து, உதடு கிழிந்து ஒரு ஓரத்தில் அமர்ந்திருந்தாள். செழியனை காணவே அவளுக்கு பய பந்து உருண்டது. அவன் வெளியில் செல்லும் நேரம் மட்டுமே இவளால் மூச்சு விட முடிகிறது.

செழியனா இவ்வாறு இருக்கிறான் என்று அவளால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. அவ்வளவு குரோதமாக இருந்தான். காலையில் வேலைக்கு கிளம்பி சென்று விடுபவன் மாலை ஆறு மணி ஆனதும் சரியாக வீட்டை அடைந்து விடுவான். சாதாரண நாட்களில்  திருநீறு கூட வைக்காதவன் ஏன் கையெடுத்து  கூட சாமியை கும்பிடாதவன் இப்பொழுது எல்லாம் வந்தவுடன் தலை குளித்து உடல் முழுவதும் பட்டையடித்து யாகம் செய்து கொண்டே ஸ்லோகங்களை அச்சு பிசறாமல் கூறுகிறான்.

அது முடிந்த பின்பு, அவன் உண்டு விட்டு மஞ்சுளாவை மனதையும் உடலையும் வார்த்தையாலும், வன்மையாகவும் வருத்துகிறான். அடுத்த நாள் காலை எதுவும் நடவாதது போல் வேலைக்கு சென்று விடுகிறான்.

மஞ்சுளாவிற்கு தான் உடலும் , மனதும் வேதனை அடைந்தது. தனது பெற்றோர்கள் அல்லது தனது கணவர் வீட்டார் காப்பாற்ற மாட்டார்களா என்று சர்வ பொழுதும் இறைவனை வேண்டினாள். ஆனால், பலன் கிடைக்குமா என்று பரம்பொருளான சிவப்பெருமானுக்கே வெளிச்சம்.
இவ்வாறு இவர்கள் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது.

🌿🌿🌿🌿🌿

வேலூர் மாவட்டத்தில் கருணாகரன் காம்பவுன்டில் காவலுக்கு இருந்தவனோடு , கருணாகரனையும் நிற்க வைத்திருந்தான் அத்தலைவன். எவ்வளவு தேடியும் இம்மூவரும் பிடிபடவில்லை என்கின்ற கோபத்தில் இவர்களை விளாசிக் கொண்டிருந்தான். அவனுக்கு பணத் தேவை என்றால் செழியனை தேடி இருப்பான். ஆனால், அவனுக்கு போனது கெளரவம், பயம், நம்பிக்கை மற்றும் மரியாதை.

செழியன் கடன் வாங்கியவன் அவர்கள் ஓடியதற்கு இத்தலைவனை அசிங்கப்படுத்தி விட்டான்.அவர்கள் சென்றதால் இவன் மேல் உள்ள பயம் இத்தெருவில் மெல்லிசாக குறைந்தது. அரசியல் பக்கத்தில் கெத்தாக இருந்தவன் இச்சம்பவத்தினால் கௌரவம் குறைந்தது. வெறும் மூன்று பெண்கள் ஏமாற்றி விட்டனர் என்பதே இவனுக்கு இன்னும் அவன் மேல் கோபம் துளிர்விட்டது. அது வளர்ந்து இவனை மூர்க்கத்தனமாக மாற்றியது.

இதனை வேலனும் அமைதியாக பார்த்ததோடு, இரு ஆன்மாக்கள் மற்றும் கூட்டத்தோடு கூட்டமாக முல்லையின் தம்பி இன்பாவும் கண்டான்.

உண்மையில் அன்று இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் இவர்களால்  சென்றிருக்க முடியாது. குருட்டு நம்பிக்கையில் தான் புறப்பட்டனர். அவர்கள் பின் வாசல் வழியே வெளியே வரும் பொழுது இரு ஆன்மாக்களில் ஆண் ஆன்மா அக்காவலாளியை  மயக்கமடைய செய்தது.வேலன் கருணாகரனுக்கு மதுவைக் கொடுத்து போதையாகி படுக்க வைத்து விட்டான்.

இவர்கள் செல்லும் வழியில் எந்தவொரு இடையூரும் இல்லாமல் பெண் ஆன்மா பாதுகாத்தது. ஆனால், நாச்சியாரின் திட்டம் படி தான் இதுலாம் நடந்தது என்று அவர் பெருமையாக நினைத்து கொண்டிருக்கிறார்.

கீர்த்தி☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்