Loading

 கருவறையினுள்ளே!.. 

கருவறைக்குள் 

              சிறு 

                  துளியாக

                    தளிர்த்து வந்தோமே!..  

     வெளிச்சத்தை 

                    காணாத நாம், 

                      கருவறையினுள்

                                .        ஒடுங்கி 

                           இருந்தோமே!..

       நமக்கு பசிக்கும்  

                    போதெல்லாம், 

                                      சொல்ல முடியாமல்   

                                        உருண்டு 

                         புரண்டு கிடந்தோமே!..    

      நாம் கருவறையினுள்    இருந்தாலும் தனது

                உணர்வை தாய்க்கு                                               வெளிப்படுத்தினோமே!..

          அசைவை உணர்ந்த தாயோ!… 

                தம்முடைய பசியை   அறிந்து   உண்பாளே!.. 

             

      பத்து மாதங்கள் 

                 கருவறைக்குள்

                    அடைந்திருந்தோமே!…, 

தன்னை பாதுக்காப்பாக 

          காத்தவளே

               …தாயல்லவா..               

உனது  முகத்தை  பார்க்க 

                 ஆவலாக  

               .  .  இருந்தோமே!.

இருட்டில்  

    இருக்கிறோம் 

             .       என்றதை 

                 …. . …அறிந்தாயே!… 

பிரசவவலியை 

          கூட பெரிதும் 

               பொருட்படுத்தாமல்

                          மீட்டெடுத்தாயே!… 

அந்த நாள்  

      வந்ததுமே!…  

            மறுகணம் 

                 பொக்கிஷமான 

                       இடம்  பறிபோனதே!… 

மீண்டும்

    கருவறையில் 

             தங்குவதற்கு 

             இடம்  கிடைக்கும்மா!…. 

   பிஞ்சு 

      நெஞ்சங்களின் 

               எதிர்பார்ப்பு!..

……..இவை தானோ.. .

  

 

  

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்