என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம்-22

Loading

 

முகம் 22

 

இப்படியே மூன்று மாதம் கடந்திருந்தது. அதன்பின் அவளைக் காண அவன் செல்லவில்லை. சித்தார்த்திடம் கேட்டுக்கொள்வான் அவ்வளவே!

 

அந்த அளவுக்கு வேலை அவனை இழுத்துக் கொண்டது.

 

அன்று பிடிக்கப்பட்ட அந்தக் குற்றவாளியின் மூலம் இன்னும் சில தவறுகள் வெளியே வந்திருந்தது.

 

இப்போது ஐ.ஜி வரதராஜனை அதற்காகவே சந்திக்க சென்று கொண்டிருக்கிறான்.

 

அப்போது சித்தார்த் அவனுக்கு அழைக்க, உயிர்பித்து காதில் வைத்தான்.

 

அவனோ எடுத்த எடுப்பில் “ஏன்டா டேய் அன்னைக்கு அவ்வளவு பேசிட்டுப் போன, இப்போ என்னனா கண்டுக்கவே மாட்டேங்கிற என்ன ஐடியா இருக்க நீ?” என்று காய,

 

இவனும் விடாமல் புன்னகையுடன் “என்ன மச்சான் சொன்னேன். தெளிவா சொன்னா தானடா புரிய, நீ தலையும் இல்லாம வாலும் இல்லாம கேட்டா நான் என்ன சொல்றது?” என்றான் தெரிந்து கொண்டே வேண்டுமென்று…

 

சித்தார்த் “அதான் உன் லவ் மேட்டர்” என்க,

 

“அச்சச்சோ, அது லவ்வா அப்போ?” என்றதும் சித்தார்த் பல்லைக் கடிக்கும் சத்தம் இங்கே வரை கேட்டது இவனுக்கு…

 

“மச்சான் எனக்கென்னவோ உனக்கு இன்னொரு பல்லு செட்டு வேணும் போல தோணுதுடா. துவா வேற உன் சிரிப்பு தான் அழகுன்னு சொல்லுவா எதுக்கும் பார்த்துக்கோ” என்ற தீரனை ஒன்றும் பேச முடியாமல் மௌனம் காத்தான் சித்தார்த்.

 

பின்னே ஒரு முறை பேசியதற்கே வைத்து செய்கிறான். இதில் இன்னும் பேசி மாட்டிக்கொள்ள அவனுக்கு என்ன வேண்டுதலா???

 

நண்பனின் அமைதியை உணர்த்தவனோ “அட போடா சித்து, உனக்கு என்மேல பாசமே இல்ல. இதே இந்த நேரம் என் ஜோதிகா இங்க இருந்திருந்தான்னா…” என்று இழுக்க,

 

சித்தார்திற்கோ ‘இவன் ஏதோ யோசித்து விட்டான்’ என்று புரிந்து போனது.

 

என்ன பேசுவது என்று தெரியாமல் “என்னடா மச்சான் இப்படி சொல்லிட்ட, எனக்கு உன் மேல் இல்லாத பாசமா” என்று ஒரு நடிப்பைப் போட,

 

“பாசம் இருந்தா நீ இப்படி இருப்பியா? நான் லவ் பண்றேன்னு சொல்லி எவ்வளவு நாள் ஆயிடுச்சு. ஆனா நீ அத பத்தி எதுவுமே கேட்க மாட்டேங்கிற” என்று சலித்துக் கொள்ள,

 

“அதான் கொஞ்சம் நேரத்துக்கு முன்ன கேட்டேனேடா” என்க,

 

“என்ன கேட்ட?” என்றான் இவன்.

 

“அதான் உன் லவ் பத்தி, அவளை ஏன் பார்க்க வரலன்னு கேட்டேனே” என்று அவன் சொல்ல,

 

“நீதான் சின்னப்புள்ளன்னு சொன்னியேடா மச்சான். நீ சொல்லி எத நான் கேக்காம இருந்திருக்கேன். அதான் உன் சின்னப்பொண்ணு கொஞ்சம் வளரட்டும்னு வெயிட் பண்ணுறேன். ஒருவேள நீ சொன்ன மாதிரி இன்ஃபெக்சுவேஷனா இருந்தா என்ன பண்றது?” என்று நண்பன் பிபியை ஏற்றினான்.

 

அன்று அவன் பேசியதற்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தீரன் அவனை ஒரு வழியாக்கிக் கொண்டுதான் இருந்தான்.

 

“டேய் யப்பா ராசா… தீரா… ஜெயதீரா… அவமேல உள்ள ஒரு பாசத்துல தெரியாம பேசிட்டேன். ஆளவிடுடா” என்று அலற,

 

“யார்கிட்ட பேசுறோம்னு பார்த்து பேசணும். அப்பறம் துவா மேல உனக்கும் அதே இன்ஃபெக்சுவேஷன் டேஷ் தான் இருக்குனு அவ மடையக் கழுவ வேண்டி வரும்” என்றவன்

 

“இவரு ஸ்கூல் போற புள்ளைய விரும்புவாராம். நாங்க காலேஜ் போற புள்ளைய பார்க்க கூடாதாம். அன்னைக்கு முதல் தடவ ப்ரொபோஸ் பண்ணதுனால நல்ல மூட்ல இருந்துட்டேன் இல்லனா கைமா தாண்டி மாப்பிள்ளை நீயி” என்றான்.

 

சித்தர்த்தோ “உன் கால்ல வேணா விழுறேன் என்னை விட்டுடுடா” என்க,

 

“படுத்தே விட்டானய்யா” என்று கலாய்த்த தீரனோ,

 

“நீ ஒரு ஆணியையும் புடுங்க வேணா, நான் ஏற்கனவே சொன்னது போல அவகிட்ட என்னப் பத்தி நாலஞ்சு பிட்டப் போடு” என்க,

 

“போட்டுட்டே தான் இருக்கேன் எந்த மாற்றமும் இல்ல, அதுலயும் உன்னப்பத்தி பெருமையா வேற பேசணுமே அதான் கஷ்டமா இருக்…” என்று ஆரம்பித்தவன் சட்டென அமைதியாகி விட,

 

சத்தமாய் சிரித்த தீரனோ “அலெர்ட்டா இருக்க போலயே மச்சான், நான் வேணா உன்ன பத்தி துவா கிட்ட பதனி விக்கவா?? பதனி… பதனி…” என்று வேறு சொல்லிக் காட்ட, நொந்தே விட்டான் சித்தார்த்.

 

‘போயும் போயும் இவன் தங்கச்சியாவா துவா நீ பிறந்து தொலைக்கணும் படுத்துறானே… தலவலிக்குதுடா தலைவலிக்குது’ என்று எண்ணிக்கொண்டவனோ

 

“அது ஒன்னுமில்ல மச்சான், உன்னப் பத்தி பேசுனாலும் ஒரு ரியாக்ஷன் வரமாட்டேங்கிது அத தான் சொன்னேன்” என்று சொல்லு,

 

“கோபப் படாம கேட்டுகிறதே முதல் வெற்றி தான்டா, முதல்ல ஐயாவ பத்தி பெருமையா நீ பேசு, என்னப்பத்தியே யோசிச்சா, ஆட்டோமேட்டிக்கா நான் அன்னைக்கு பண்ணது ப்ரொபோஸ் தான்னு அந்த மரமண்டைக்கு புரிஞ்சு, அவளே தேடி வருவா” என்றவன்,

 

“ரொம்ப தேங்க்ஸ்டா மச்சான்” என்க,

 

“எதுக்குடா?” என்று அப்பாவியாய் சித்தார்த் கேட்டு வைக்க,

 

“கேஸ் ஒன்னு மச்சான். ஒரு மூனு மாசமா மண்டை சூடாகி போய் கிடந்தேனா, அப்பப்போ நீயா வந்து தலையைக் கொடுத்து என்னை கூல் பண்ணிட்டு போறியா? அதான் அந்த தேங்க்ஸ்” என்றவன்,

 

“அடிக்கடி ஃபோன் போடு மச்சான் பிரீயா பேசுவோம்…” என்றபடி அழைப்பைத் துண்டித்த தீரனின் முகம் முழுவதும் புன்னகை தான்.

 

சற்று முன்னர் இருந்த அழுத்தம் எல்லாம் எங்கோ சென்றிருந்தது.

 

பழனி அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “என்ன பழனி?” என்று கேட்க,

 

அவரோ “பாவம் சார் உங்க ஃபிரண்ட்” என்றார்.

 

அதில் சிரித்தவனோ “அவனா பாவம், அவன் நம்மள பாவம் ஆக்காம இருந்தா சரிதான் கேடிப்பய பழனி அவன். இது என்ன பிரமாதம் இத விட ஸ்பெஷல் ஐட்டமா இன்னொருத்தன் இருக்கான். அவன் இவன விட டேஞ்சர் பார்ட்டி” என்றான்.

 

ஜோதியை எங்கே தான் அவன் நினைவு படுத்த மறந்திருக்கிறான்??

 

அவன் கூட இல்லை என்று என்றும் இவனுக்குத் தோன்றியதே இல்லை…

 

எப்போது எது செய்தாலும் ‘டேய் ஜோதிகா…’ என்று ஆரம்பிப்பவன் அருகில் அவன் இருப்பது போலவே பேசுவான். திடீரென அவன் அருகில் இல்லை என்று ஞாபகம் வந்தால் போதும், அழைத்து வம்பிழுத்து, தேன்மொழியிடம் மாட்டி விட்டு இப்படி அவனை ஒரு வழியாக்கி விடுவான்.

 

இப்போதும் நண்பன் நினைவில் புன்னகை எழ, ‘இன்று அவனுடன் பேச வேண்டும்’ என்று மனதில் எண்ணிக்கொண்டபடி,

 

“சரி பழனி, நான் சார மீட் பண்ணிட்டு வரேன். நீங்க போய்ட்டு வன் ஹவர்ல வந்தா போதும்” என்றவன் அலுவலகத்தினுள் நுழைந்திருந்தான்.

 

 

 

 

நேரே அவரறைக்குச் சென்று அனுமதி வாங்கி உள்ளே நுழைந்தவன் “குட் மார்னிங் சார்” என்று அவருக்கு சல்யூட் வைத்து நிற்க,

 

வராதராஜனோ “வெரி குட் மார்னிங் மிஸ்டர் ஜெயதீரன். வெல்கம் அவர் டிபார்ட்மென்ட்” என்றவர் அவனுடன் கை குலுக்கி, “டேக் யுவர் சீட் யங் மேன்” என்றார்.

 

அவனும் அமர்ந்தவன், “சார் முக்கியமான விஷயம் பத்தி உங்ககூட பேசணும். அதான் நேத்து கால் பண்ண வேண்டியதாப் போச்சு” என்று அவனது அழைப்புக்கு விளக்கம் கொடுத்தான்.

 

“இதுல என்ன இருக்கு தீரன்” என்றவர், “தீரன்னு கூப்பிடலாம்ல” என்க,

 

புன்னகைத்தவன் “யா ஸ்யோர் சார்” என்றான்.

 

“எல்லாரும் டிபார்ட்மென்ட்க்கு அப்பறம் தான் குடும்பம்னு சொல்லுவாங்க பட் எனக்கு ரெண்டுமே ஒன்னுதான்” என்றவர்,

 

“என்னடா சார் இப்படி சொல்லுறாருன்னு பார்க்குறீங்களா?” என்க, அவனோ இல்லை என தலையசைத்து பின் ஆம் என்பதாய் அசைத்திருந்தான்.

 

அதில் சிரித்தவர் “இப்போ வரைக்கும் ரெண்டையும் ஒரே மாதிரி தான் பார்த்துக்கிறேன். என் பொண்டாட்டி என்னைப் பார்த்துகிறா” என்றார்.

 

அவன் அவரைப் புன்னகையுடன் பார்க்க, “நேத்து எங்களோட இருபத்தி ஆறாவது வெட்டிங் அனிவசரி அதான் கொஞ்சம் பிசி, மத்தபடி நான் பிரீ தான்” என்றவர்,

 

“நீங்க சொல்லுங்க தீரன் என்ன விஷயமா பேசணும்?” என்றார்.

 

நேற்று காலையில் இருந்து அவருக்கு அழைத்தவன் பேச முடியாமல் போனதில் அவரது தனிப்பட்ட எண்ணுக்கு அழைக்க வேண்டியதாய் போய்விட்டது அதனாலேயே அவன் விளக்கமும் கூட…

 

அவர் முன்னே ஒரு கோப்பினை வைத்து “சார் த்ரீ மந்த் முன்னாடி…” என்று ஆரம்பித்தவன் அன்று நடந்த அந்த சம்பவத்தை முழுமையாக சொல்லி முடித்தான்.

 

“வெல்டன் தீரன், இப்போ அவங்க எங்க? அதோட சம்பந்தப்பட்ட எல்லாரையும் அரெஸ்ட் பண்ணியாச்சா?” என்று கேட்க,

 

“யா சார், இப்ப வரைக்கும் மொத்தமா அஞ்சு பேரு மாட்டி இருக்காங்க, இவனுங்க ஜஸ்ட் ஒரு பணத் தேவைக்காக இப்ப கொஞ்சம் மாசங்களுக்கு முன்னால தான் இதப் பண்ணவே ஆரம்பிச்சிருக்காங்க சார். சோ அவனுங்களுக்கு மேல வேற யாரும் இருக்க வாய்ப்பில்லை” என்றான்.

 

வரதராஜனின் பார்வையோ அவன் மீது தான் குழப்பமாய் படிந்தது.

 

‘பிரச்சினை இல்லை என்கிறான் பிறகு என்ன பேச வேண்டும்?’ என்ற கேள்வி எழ,

 

“ஓகே தீரன், இதுல நான் ஹெல்ப் பண்ண என்ன இருக்கு?” என்றார் சந்தேகமாக…

 

“அவனுங்க பிரச்சனை இல்ல சார். பட் இந்த பிரச்சனையக் கண்டுபிடிக்க மூலக் காரணமே அவங்க தான். இந்த கேஸ் விசாரிச்சு மேல மூவ் பண்ணப்போ தான் சம்திங் பிஸி” என்றான்.

 

அவரோ அவன் சொல்வதை கேட்கும் பாவனையில் அமர்ந்திருக்க, மீண்டும் அவனே தொடங்கினான்.

 

“இந்த பிரச்சனை தெரிஞ்சப்பறம் இங்க சென்னைல உள்ள எல்லா ஆசிரமங்களுக்கும் ஸ்கூல்ஸ்ஸுக்கும் இந்த விசயத்தை தெரியப்படுத்தும்னு அவங்க எல்லாரையும் ஒரு மீட்டிங் ஏற்பாடு செஞ்சு வரவழைச்சிருந்தோம் சார். அதுக்கு ஏ.சி.பி விக்ரமன் கூட ஹெல்ப் பண்ணாரு” என்க,

 

வரதராஜனுக்கு விக்ரமனை தெரியும் என்பதால் தலையசைத்துக் கேட்டுக்கொண்டார்.

 

“மோஸ்ட்லி பெரும்பாலன ஆட்கள் வந்திருந்தாங்க, நாங்க விசயத்தோட டெப்த் பத்தி எக்ஸ்பிளைன் பண்ணி, எப்படி பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கணும்னு சொல்லிக்கொடுத்தோம். அன்ட் என்னோட ஃபோன் நம்பர் கொடுத்து எதுனாலும் தயங்காம கூப்பிடுங்கனு சொல்லி அந்த மீட்டிங்கும் முடிஞ்சிது சார்” என்றான்.

 

“ஓகே தீரன் இதுல என்ன?” என்று கேட்டவருக்கு உள்ளே ஏதோ பெரிதாய் விடயம் இருக்கிறது என்று புரிந்தது.

 

“அன்னைக்கு நைட் எனக்கு ஒரு கால் வந்திச்சு சார். பேர் சொல்லல, இன்னைக்கு வந்த ஒரு ஆசிரமத்துல இருந்து பேசுறதா சொன்னாங்க, அதுக்கு முந்தின வாரம் அவங்க ஆசிரமத்துல இருந்து ஒரு குழந்தை காணாமப் போனதா சொன்னாங்க” என்றான்.

 

“வாட், வன் வீக் போலீஸ்ல இன்ஃபோர்ம் பண்ணலயா? என்ன நிர்வாகம் பண்ணுறாங்க?” என்க,

 

“யாரோ பிரைவேட் நம்பர்ல இருந்து கூப்பிட்டு மிரட்டுனதாக சொன்னாங்க சார். நான் அவங்க ஆசிரமத்தோட டீடெயில்ஸ் கம்பல் பண்ணிக் கேட்டு, அடுத்த நாளே அங்கபோய் விசாரிச்சேன்” என்றவன்,

 

“பெரிசா இன்ஃபோமேஷன் அதுவும் கிடைக்கல, சோ அந்த குழந்தையோட டீடெயில்ஸ் எல்லாம் வாங்கிட்டு வந்துட்டேன் சார்” என்றான்.

 

“குட் தீரன், இதுக்கு சீக்கிரமே முடிவு எடுக்கலாம், அந்த ஆசிரமம் இருக்குற போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ கிட்ட இன்ஃபோர்ம் பண்ணிடுங்க. அவர் மூலமா இத மூவ் பண்ணுவோம்” என்று சொல்ல, அவனோ இடம் வலமாய் தலையசைத்தான்.

 

அவர் அவனை கேள்வியாய்ப் பார்க்க, “அதுமட்டும் இல்ல சார் இங்க பிரச்சனை, அன்னைக்கு மட்டுமில்ல, அந்த வாரம் ஃபுல்லா எனக்கு இருபதுக்கும் மேல கால்ஸ் வந்திச்சு, அதுவும் சேம் ப்ரோப்லம்” என்க,

 

“வாட்ட்ட்ட்…” என்று அதிர்ச்சியில் சத்தம் போட்டவர், அருகில் இருந்த தண்ணீரை குடித்து முடித்தார்.

 

ஓரளவு ஆசுவாசம் அடைந்ததும் “என்ன சொல்லுறீங்க தீரன், எப்படி அதுவும் அவ்வளவு குழந்தைங்க? இதுவரை எதுவுமே கடத்தப்பட்ட நியூஸ் வெளில வரலையே!” என்றார்.

 

“அதான் சார் என் டவுட்டாவும் இருந்திச்சு, எப்படி வெளில வாராம போகும்னு, ஒன்னு கடத்துனவன் குழந்தைங்கள வெச்சு அவன் தேவைய நிறைவேத்திக்க ஏதாச்சும் பண்ணி இருக்கணும். அப்படி வெளில தெரியிற போல எதுவுமே இந்த த்ரீ மந்த்ஸ்ல நடக்கல” என்று சிறிது நிறுத்தியவன்,

 

தயக்கத்துடன் “இல்ல சைக்கோ கில்லர் அப்படி எதுவும்னா, ஏதாச்சும் ஒரு விஷயமாவது வெளில வந்திருக்கும். அப்படிப்பட்டவங்க அவங்கள வெளிக்காட்டிக்கத் தானே நினைப்பாங்க. அப்படி எதுவும் இல்ல. அன்ட் அன்னைக்கு மிரட்டுறதுக்காக வந்த கால் இந்த மூனு மாசத்துல மறுபடியும் வரவே இல்ல” என்றான்.

 

“இட்ஸ் டேஞ்சரஸ் தீரன், நீங்க விசாரிச்ச வரைக்கும் உங்களோட சஸ்பெக்ட் என்னவா இருக்கு?” என்று கேட்டார். நிச்சயம் அவன் எதையோ கண்டுபிடித்திருக்க கூடும் என்ற நம்பிக்கையில்…

 

“மொத்தம் முப்பதியொரு குழந்தைங்க சார். எல்லாருக்கும் வயசு அஞ்சுக்கு கீழ தான். அவங்க எல்லாருமே ஏதோ ஒரு வகைல டிபெக்ட் உள்ள குழந்தைங்க தான். அன்ட் அவங்கல்ல இருபத்தி ஒன்பது பேருக்கு பேரண்ட்ஸ் இல்ல, அன்ட் அந்த மீதி ரெண்டு பேரும் பேரண்ஸ் மூலமா பார்த்துக்க முடியலன்னு அந்ததந்த ஆசிரமதுக்கு வந்தவங்க” என்றான்.

 

“அவ்வளவு குழந்தைங்களா? சோ யாருமே கேள்வி கேட்க மாட்டாங்கன்னு பாதிக்கப்பட்ட, யாரும் இல்லாத குழந்தையை டார்கெட் பண்ணி இருக்காங்க” என்றவர் யோசனையில் ஆழ,

 

“எக்ஸாட்லி சார், ஒரு ஆசிரமத்துல இருந்து ஒரு குழந்தையதான் கடத்தி இருகாங்க, சோ இன்னும் அதே ஆசிரமங்கல்ல இதே ஒத்துப்போற பேக்டோட குழந்தைங்க இருக்கத் தான் செய்றாங்க, சோ இப்போ நாம கண்டிபிடிக்க வேண்டியது அந்த முப்பதொரு குழந்தைங்களும் மத்தவங்கள்ல இருந்து எந்த ஒரு விஷயத்துல மாறுறாங்க என்கிறது தான். அதுதான் இந்த கேஸ்ல அடுத்து நம்மல மூவ் பண்ண வைக்கப்போற க்ளூ” என்றான்.

 

“அந்த சின்னப்பொண்ணு அடிபட்டத நீங்க பார்த்திருக்கலனா இந்த கொடூரம் வெளில வந்திருக்காதுல தீரன்” என்ற வரதராஜன் ‘இத்தனை நடந்திருக்கிறதே என?’ மலைத்துத்தான் போயிருந்தார்.

 

“கடவுளே இத வெளில கொண்டு வரணும் நினைச்சிருக்காரு போல சார். சீக்கிரமே குற்றவாளி யாரு அவனோட மோடிவ் என்னனு கண்டுபிடிக்கிறேன் சார்” என்றவன் எழுந்து அவருக்கு சல்யூட் வைக்க,

 

“கண்டிப்பா உங்களால முடியும், இதுக்கான என்ன வேணும்னாலும் என்ன கேளுங்க தீரன்” என்றவர் அவனுக்கு விடை கொடுத்திருந்தார்.

 

_________________

 

மேலும் சில நாட்கள் கடந்திருந்தது. இந்த வழக்கு அவன் பெரிதும் மண்டையைக் குடைய வைத்திருந்தது.

 

எதிலிருந்து ஆரம்பிக்க என்றே புரியாமல் அவன் தவித்துத் தான் போயிருந்தான். மூளை சூடாகிப் போனதில், பார்த்துக் கொண்டிருந்த கோப்பினை அப்படியே வைத்து எழுந்தவன், பழனியிடம் வண்டிச் சாவியை வாங்கி நேரே அவளைத் தேடித் தான் சென்றிருந்தான்.

 

‘அவளாக தன்னிடம் வரட்டும்’ என்ற அவனது காத்திருப்பு நேற்றே முற்றுப் பெற்றிருந்தது.

 

நேற்று காவல் நிலையத்தில் ஏதோ சொத்துத் தகராறைத் தீர்த்து வைத்துக்கொண்டிருக்க, சித்தார்த்தின் எண்ணில் இருந்து அவனுக்கு விடாமல் அழைப்பு வந்து கொண்டே இருந்தது.

 

இரண்டு மூன்று முறை துண்டித்தும் பார்த்து விட்டான். ஒவ்வொரு இரண்டு நிமிட இடைவெளியில் ஒரு அழைப்பு என விடாமல் வந்துகொண்டே இருந்தது.

 

‘என்னாச்சு இவனுக்கு, ஏதும் எமர்ஜென்ஸியா இருக்குமோ?’ என்று எண்ணிய, அந்த வழக்கை ஒன்னொரு அதிகாரியிடம் கொடுத்தவன், ஜீப்பை இயக்கியபடி அழைப்பு விடுத்து இயர்ஃபோனை காதில் மாட்டிக்கொண்டான்.

 

அந்தப்பக்கம் எடுக்கப்பட, “என்னாச்சு சித்து, காலேஜ்ல தானே இருக்க இதோ நான் வந்துட்டே இருக்கேன்” என்று விடாமல் பேச,

 

“ஐயோ வேண்டாம் வராதீங்க” என்றொரு கிசுகிசுப்பான குரல் வர,

 

ஜீப்பை ஓரம் கட்டியவன், “மயிலு…” என்று ராகம் மீட்டி அழைக்க, அந்தப்பக்கம் மௌனம், லேசாய் மூச்சு விடும் சத்தம் கேட்க, இங்கே ஒருவனின் உடலில் உஷ்ணம் ஏறியது.

 

‘ஐயோ, இவ எப்போ வளர்ந்து நான் எப்போ என் குழந்தைங்கள வளர்க்க, ரொம்ப கஷ்டம்டா தீரா, ஒரு ப்ரொபோஸ் புரியவே இவ்வளவு நாள் ஆகி இருக்கே! உன்னோட ஒலிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதே!’ என்று அவன் எண்ணியபடியே அமைதியாய் இருக்க,

 

“ஹலோ…” என்று மீண்டும் அதே கிசுகிசுப்பான குரல்…

 

“இப்படி பேசி சாவடிக்கவாடி எனக்கு கூப்பிட்ட, அன்னைக்கு நான் உனக்கு என்ன சொன்னேன்னு இப்போவாச்சும் புரிஞ்சிதா?” என்று கேட்க,

 

அவளிடம் “ம்ம்ம்ம்…” என்ற சத்தம்.

 

“என்னத்த புரிஞ்சிதோ, முன்னங்காம என்னனு சொல்லு?” என்க,

 

“இப்படி பேசினாலும் திட்டுறீங்க, ம்ம்ம் சொன்னாலும் திட்டுறீங்க” என்று மீண்டும் அப்படியே பேச,

 

“ஓஓ மை காட், சத்தமா பேச என்னடி உனக்கு? எங்க இருக்க, சித்து அவன் ஃபோன் உன்கிட்ட கொடுத்துட்டு எங்க போய் இருக்கான்?” என்று அவனுள் இருக்கும் காவலன் எட்டிப் பார்க்க,

 

“நான் கிளாஸ்ல பெஞ்சுக்கு கீழ இருக்கேன். சித்து அவன் கிளாஸ்ல, அவன் ஃபோன நான் சுட்டுட்டேன்” என்று கேட்ட அத்தனை கேள்விக்கும் பதில் வந்தது. இந்த முறை விடாமல் சற்று பெரிய வசனம் பேசியதில் சத்தம் வெளியே கேட்டும் விட்டது.

 

பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரோ “மயல் கெட் அவுட்” என்று சத்தமாய் சொல்ல, இங்கே கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு சிரிப்பை அடக்க முடியாமல் போனது.

 

இப்போதும் அவன் சிரித்துக்கொண்டே இருக்க, “நான் வெளில வந்துட்டேன்” என்றாள்.

 

“எனக்கு அந்த குரல் தான் வேணும் என்ன பண்ணலாம், மறுபடியும் கிளாஸுக்கே போறியா?” என்று கேட்க,

 

“ம்ம்ம்கூம் மேடம் திட்டுவாங்க” என்றாள்.

 

“கஷ்டம்டா தீரா…” அவனே அவனுக்கு பாவப்பட்ட தருணம் அது. அவனுக்கோ விளையாடமல் பேச வராது, இவளுக்கோ அதனை புரிந்து கொள்ள விபரம் பத்தாது.

 

ஜோதி சித்து இருவரின் சாபமும் இந்த விடயத்தில் நன்றாகவே வேலை செய்திருந்தது.

 

‘எந்த நேரத்துல இவனுங்க ரெண்டு பேரும் பொண்டாட்டி பின்னால அலையனும்னு சொன்னாங்களோ, பளிச்சிடும் போலயே, இவளுக்கு நான் பேசுறத புரிய வைக்கவே இவ பின்னாடியே அலையனும் போல’ எண்ணியவன்,

 

“கிளாஸுக்கெல்லாம் போக வேணாம். ஏன் எனக்கு கால் பண்ண?” என்று கேட்க,

 

“நான் ரெண்டு தடவ உங்களப் பார்க்க, ஸ்டேஷன் வந்தேன் தெரியுமா நீங்க இல்லை” என்று சோகமாய் சொல்ல, அவனுக்குத்தான் அது புது விடயம் ஆகிற்றே!

 

‘அவள் தேடி வந்தும் தான் இல்லாமல் போய் விட்டோமே’ என்ற கவலையும் ‘வந்தவளை ஏமாற்றதுடன் அனுப்பி விட்டோமே என்ற வருத்தமுமே அவனிடம் நிறைந்திருந்தது.

 

“அச்சோ என் மயிலு என்னத் தேடி வந்திச்சா? சாரி எனக்கு தெரியலடா, ஒரு கேஸ் விஷயமா கொஞ்சம் ஓடிட்டு இருக்கேனா அதனாலயா இருக்கும்” என்றான்.

 

அவளுக்கோ ‘அவன் கொஞ்சலில் கொஞ்சம் கெஞ்சலில் கொஞ்சம்’ என பட்டாம்பூச்சி வயிற்றை சுற்றி வளைத்தது.

 

அதான் தாக்கத்தில் இந்தமுறை சிறிது தைரியமாக “நீங்க ஏன் என்ன இவ்வளவு நாளா பார்க்க வரல?” என்றாள்.

 

அவனோ “பார்டா, என்னை மிரட்ட வேற செய்வியா நீ? நல்லா இருக்கே, எங்க டேய் தீரா ஏன்டா வரலன்னு கேளு பார்ப்போம்?” என்க,

 

“ம்ம்கூம்” என்றாள் அவள்.

 

“அப்போ இரு இப்போவே வரேன், நேர்லயே கேட்டுகிறேன்” என்று ஜீப்பை இயக்க,

 

“இல்ல இல்ல, வேணாம் சொல்லுறேன்” என்றவள் சிறு அமைதியின் பின், “ஏன் ஜெய் என்ன பார்க்க வரல” என்க, அவன் அங்கே சில்லு சில்லாய் நொறுங்கிக் கொண்டிருந்தான்.

 

அவன் எதுவும் பேசவில்லை, அழைப்பைத் துண்டித்திருந்தான்.

 

அவனுக்கு உணர்வுகளை வார்த்தையால் அவளிடம் விளக்கிட முடியும் என்று தோன்றவே இல்லை…

 

அவள் அவன் பெயரை அப்படி உச்சரிப்பாள் அவன் எண்ணி இருக்கவே இல்லையே!

 

‘டேய் சித்து உன் சின்னப்பொண்ணு எனக்கு செல்லப் பேர் வைக்கிற அளவுக்கு பெரிய பொண்ணாகியாச்சு” என்று சொல்லிக் கொண்டவனுக்கு,

 

அவள் மீண்டும் அவன் பெயர் உச்சரிக்கும் போது விழிவழி, அவனை முதலில் ஈர்த்த அந்த விழிகளின் மூலம் அதனை உணர ஆசை பிறந்திருந்தது.

 

அப்போதே அவளிடம் செல்ல இருந்தவனை வேலை தடுத்து நிறுத்த, திடீரென அழைப்பை துண்டித்ததில் ‘பயந்து இருப்பாளென’ அவளது எண்ணுக்கே ஒரு குறுஞ்செய்தி அனுப்பி விட்டு காவல் நிலையதுக்கே கிளம்பி இருந்தவன், இதோ ஒரு வாரத்தின் பின் இன்று தான் அவளை தேடி சென்று கொண்டிருக்கிறான்.

 

 

 

கல்லூரியினுள் நுழைந்தவன், அவளுக்கு அழைப்பை விடுத்து, அவள் அமரும் மரத்தின் கீழே அமர்ந்தான்.

 

அவளோ அழைப்பைத் துண்டித்து, ‘கிளாஸ்ல இருக்கேன்’ என்ற குறுஞ்செய்தி வந்தது அவளிடம் இருந்து,

 

“பரவாயில்லை, அன்னைக்கு பேசுன போலவே பேசு” என்று இவன் அவனுப்ப,

 

அவளோ “பயம்” என்பது போல் முகச்சின்னத்தை (எமோஜி) அனுப்பியவள்,

 

‘மயலை மர்கயா பண்ணிடுவாங்க, இந்த மேம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று குறுஞ்செய்தியும் அனுப்பி இருந்தாள்.

 

அவனோ “இப்போ பேசலனா, என்னோட மயில நானே மர்கயா பண்ணிடுவேனே! இப்போ நான் கால் பண்ணுவேன் நீ பேசணும்” என்று அனுப்பியவன், அடுத்த நிமிடம் அழைத்திருந்தான்.

 

அவளோ “சொல்லுங்க” என்க,

 

“நீ இப்படி பேசுறப்போ ஒரு மாதிரி நல்லா தான்டி இருக்கு, நீ என்ன பண்ணுற இப்போ ஒரு பாட்டு பாடி மாமாவ குஷிப்படுத்துற சரியா?” என்று கேட்டான்.

 

“செத்தேன் நானு, ப்ளீஸ் ப்ளீஸ்” என்று அவள் கெஞ்ச,

 

“ஓகே பொழச்சி போ, இப்போ மாமாக்கு ஒரு கிஸ் குடு பார்ப்போம்” என்றான் புன்னகையுடன்…

 

“இதுக்கு நான் பாடியே இருப்பேன் பாடவா” என்க,

 

“நான் பாட சொல்லும் போது நீ பாடல, சோ எனக்கு இப்போ பாட்டுக் கேக்குற மூட் போயிடுச்சு. கிஸ் தான் வேணும்” என்றான்.

 

“அதான், நைட் கொடுத்தேனே!” என்று சொல்ல,

 

“எது இந்த ஒருவாரமா நான் கெஞ்சிக் கேட்டு, நேத்து போன்ல ஏதோ உன் வாய வெச்சு துடைச்சியே அதுவா?” என்று கேட்டான் கேலியாய்.

 

“போங்க நான் இனி கிஸ் கொடுக்கவே மாட்டேன் நீங்க கலாய்க்கிறீங்க” என்று கோபம் கொள்ள,

 

“அதுக்கு நீ கிஸ்னு பேர் வெச்சதே தப்புங்கிறேன். இதுல தரமாட்டேன் வேறயா?” என்றவன்

 

“நீ வெளில வா, எப்போவும் நீ உட்காருற மரம்னு சொன்னியே, அங்க தான் உட்கார்ந்து இருக்கேன் சீக்கிரம் வா” என்றான்.

 

அவள் “கிளாஸ்…” என்று அவள் இழுக்க, “நானும் கிளாஸ் எடுக்கத்தான் போறேன் வா, இது உனக்கும் எனக்குமான பெர்ஸ்னல் கிளாஸ்” என்றான் அவளைப்போலவே அதே கிசுப்பான குரலில்…

 

அங்கே ஃபோனைக் காதில் வைத்து எழுந்து நின்றவளை, அந்தப் பேராசிரியர் முறைத்துக்கொண்டிருந்தார்.

 

“இர்ரெஸ்பான்ஸிபில் இடியட், கெட் லாஸ்ட்” என்று சொல்ல, அவள் காதிலோ “ஃபேர்ஃபெக்ட் டைமிங்” என்ற அவன் குரல் கேட்டது.

 

அடுத்த இரு வினாடிகளில் அவனை முறைத்தபடியே அவள் அங்கே வந்து “இப்போ சந்தோசமா?” என்று கேட்க,

 

“ரொம்ப…” என்றான் அவன்.

 

அதில் அவள் முகம் மலர்ந்து விட, எப்போதும் போல் அவள் கருவிழிகளில் ஈர்க்கப்பட்டவன், “உன் ஜெய் கூட வெளில போகலாம் வரியா?” என்றதும் பெண் மான் வெக்கத்துடன் தலை அசைத்தது.

 

‘உன் ஜெய்’ என்று அவன் விளித்தது அவளுள் என்னவோ செய்தது…

 

பதினெட்டு வயது மங்கைக்கு புதிதாய் பூத்த காதல் பல இரசாயணங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது.

 

அவளை முதன் முதலில் கோயில் ஒன்றுக்குத் தான் அழைத்துச் சென்றிருந்தான். மனது விட்டு பல விடயங்களை பேசி இருந்தனர்.

 

அவன் அவனைப் பற்றி சொல்ல, அவள் அவளைப் பற்றி எல்லாம் சொல்லி இருந்தாள்.

 

இதுவரை நாளும் அவள் திறக்காமல் இருந்த பக்கங்களைக் கூடத் திறந்து, அவனிடம் மனதால் மிக நெருங்கி இருந்தாள்.

 

கோயிலில் இருந்து நேரே உணவருந்த அழைத்துச் சென்றவன், பின்னே கடற்கரை சென்று மீண்டும் கல்லூரி விடும் நேரமே கல்லூரிக்கு அழைத்து வந்திருந்தான். அவள் அப்போதும் இறங்காமல் இருக்க,

 

“இறங்காம என் மயிலுக்கு என்ன யோசனையாம்?” என்று கேட்டான்.

 

அவளோ “கிளாஸ் எடுக்குறேன்னு சொன்னீங்களே…” என்று இழுக்க,

 

“அடிங்க, ஆளப்பாரேன் முளைச்சு மூனு இலை விடல இதுல இவளுக்கு கிஸ் கேக்குது, போடி இறங்கி” என்றவனது கரம் அவன் பேச்சுக்கு எதிர்மறாய் அவள் கரங்களைப் பிடித்திருந்தது.

 

“இங்க பாருங்க மயில் பேபி, நீங்க இந்த அளவுக்கு குட்டியா இருக்கீங்க இல்லையா?” என்று அவன் விரல்கள் கொண்டு சிறிது எனக் காட்டியவன்,

 

“அதனால கல்யாணத்துக்கு அப்பறம் புருஷன் பொண்டாட்டியா கிஸ் பண்ணிக்கலாம். இப்போ வேணும்னா சென்ட் ஆஃப் கிஸ் வேணா கொடுக்கவா?” என்றவன் அன்பு மிகுதியில் அவள் நெற்றியில் ஒற்றை முத்தம் இட்டிருந்தான். அவர்களின் காதலின் முதல் அத்தியாயம் ஆரம்பிக்கப் பட்டதற்கான அச்சாரம் அதுவோ???

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்