என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -27

Loading

 

முகம் 27

 

 

அந்தக் குடோனில் தீரன் கால் மேல் கால் போட்டபடி விசிலடித்து அமர்ந்திருக்க, கடுப்போடு அந்த குடோனுக்குள் நுழைந்தது அந்த உருவம்,

 

அங்கே மயங்கிக் கிடந்த விஷால், மூர்த்தி இருவரையும் எரிச்சலுடன் பார்த்தபடி, அவன் முன்னே வந்து நிற்க,

 

இருக்கையில் அமர்ந்திருந்த அவரது சரி பாதியானவரோ ‘நீயா?’ என்ற கேள்வியுடன் தன் முன்னே நிற்பவரைத் தான் பார்த்திருந்தார்.

 

அதனை சிறிதும் சட்டை செய்யமல், அங்கே பாதி ஒடுங்கிய நிலையில் நின்றிருந்தவளையும் அவள் அருகே நின்றிருந்த மயலையும் ஒருவித குரோதத்தோடு பார்த்திருந்தது அந்த உருவம்.

 

அவர்கள் இருவரும் அவரைப் புழுவை விட கேவலமாய்ப் பார்க்க, அவரது மகள்கள் மனதில் அவர் மீதிருந்த நல்ல எண்ணம் யாரோ துணி வைத்துத் துடைத்தது போலானது.

 

அந்தப் பார்வை எல்லாம் அவரை என்ன செய்திடப் போகிறது.

 

விடயம் உறுதியாகும் வரை நடித்தார். இனிமேல் நடிக்க என்ன இருக்கிறது என சுய குணம் வெளியே வந்திருந்தது.

 

“என் அக்கா எங்க?” என்று கேட்க,

 

“அதுக்குள்ள என்ன அவசரம், மருமகன் கூட இவ்வளவு நாள் விளையாடிட்டீங்க இப்போ ஆதாரத்தோட சிக்கி இருக்கும் போது உங்க முகத்தைப் பார்த்து ரசிக்கத் தோணுதே!” என்றான் தீரன்.

 

அதில் அவன் முன் நிற்பவர் கோபமாக “இன்னைக்கு ஆதரத்தை கண்டு பிடிச்ச உன்னக்கே அவ்வளவு இருக்குன்னா? என் பொண்ணுங்கள ஏமாத்தி, ஏன் என்னை கட்டிக்கிட்டு வந்த இந்த ஜீவனை ஏமாத்தி, இத்தன வருசமா உன் கண்ணுக்குள்ள விரலை விட்டு ஆட்டி இருக்கேன். இவ்வளவு பண்ண எனக்கு எவ்வளவு இருக்கும்?” என்றார் அப்போதும் மாட்டிவிட்டோமே என்கிற பயம் சிறிதும் இன்றி…

 

தவறு செய்தவன் தானே பயப்பட வேண்டும், அவர் தான் உலகத்தை சுத்தப்படுத்தும் வேலை செய்கிறாரே!

 

ஆம், அவர் கொள்கைப்படி குறைபாடு உள்ளவர்கள் வாழவோ இனப் பெறுக்கம் செய்து அடுத்த சந்ததியை உருவாக்கவோ தகுதி இல்லாதவர்கள்.

 

எந்த குறைபாடும் இல்லாத மரபணுவை கொண்ட அவர் போல் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் மட்டுமே வாழ உருவாக்கப்பட்டது என்று முழுமையாக நம்புபவர்.

 

“எதுக்காக இதெல்லாம் பண்ணீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” என்றான் தீரன்.

 

அவரோ “வை நாட்?” என்றவர் “பட் அதுக்கான நேரம் எங்கிட்ட இல்ல, இந்த உலகத்தை அழிவுல இருந்து காப்பாத்தி குறைபாடே இல்லாத உலகத்தை உருவாக்கவே இந்த பூமில பிறந்த ஆளு நான். குறைகள் உள்ளவங்களுக்கு அதிசயமா குறையே இல்லாம பிறந்த கடவுள் நான்” என்க,

 

கேட்டுக்கொண்டிருந்த அத்தனை பேருக்கும் அவர் பைத்தியம் போலத்தான் தெரிந்தார்.

 

ஜோதியோ அவர் பேச்சில் கோபம் கொண்டு அடிக்கவே பாய்ந்து விட்டான். சித்தார்த் தான் அவனை அடக்க வேண்டியாதாய் போனது.

 

“ஜோதி, அமைதியா இரு, எல்லாம் சொல்லணும்ல இத்தனை நாளா மண்டைய உடைச்சு தேடுன உண்மை எல்லாத்தையும் நான் தெரிஞ்சிக்கணும்” என்றவன் குரலில் சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.

 

அது அவரைப் பாதிக்குமா என்ன? அவர் அப்படியே நிற்க, அவனோ “உனக்கு உன் அக்கா கங்கா வேணும்னா எனக்கு இந்த விஷயம் எல்லாம் நிச்சயம் வேணும்” என்றான்.

 

அவருக்குத்தான் தான் கங்கா என்றாளே உயிர் ஆகிற்றே!

 

“என்ன தெரிஞ்சிக்கணும் உனக்கு? என் டைம் வேஸ்ட் பண்ணாம கேளு” என்றவர் அங்கே ஒரு இருக்கையைப் போட்டுக்கொண்டு அமர்ந்தார்.

 

அவருக்கோ சொல்லி முடித்துவிட்டு அவர் அக்கா கங்காவுடன் அங்கிருந்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே!

 

“உங்களோட இந்த பைத்தியக்காரத்தனம் ஆரம்பிச்சது எப்போ?” என்க, மற்றவர்களுக்கோ நேர்காணலை கேட்பதைப் போல் தான் இருந்தது.

 

உண்மையில் நேரடி நேர்காணல் தான் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆம் நீதிபதி மற்றும் காவல் துறையினரும் தீரனின் பட்டன் கேமரா மூலம் அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தனர். அதோடு கிருபன் இன்பன், மலர்,சிவா, தேன்மொழி, அரவிந்த், மீனா என அவர்கள் வீட்டு சிரியவர்களும் இணைந்தே இருந்தனர்.

 

அத்தனையும் விட, இந்த காணொளி அனைத்து சமூக வளயத்தலங்களிலும் நேரடி ஒளிபரப்பு வேறு செய்யப்படுகிறது.

 

தீரன் இதற்கு முதலில் மறுப்பு சொல்லி இருக்க, வராதராஜன் தான்

 

“மக்கள் ஒருத்தர கண்மூடித்தனமா நம்புறத நிறுத்தணும் தீரன், என்ன நடந்தாலும் கேள்வி கேட்டு தங்களோட நியாயத்தை நிலை நாட்டிக்கணும். இதோ டாக்டர் தானேனு இலவச மருத்துவம்னு போன அந்தக் குழந்தைகளோட எதிர்காலம். அதப்போல இன்னும் பல குழந்தைகளோட எதிர்காலம் இதுல அடக்கி இருக்கு, அதுக்கு நிச்சயம் இந்த விஷயம் வெளியே வந்தே ஆகணும்” என்றவர் அவன் முகம் தெளிவில்லாமல் இருந்ததில்

 

“இது சென்சிடிவ் இஸ்சுனு எனக்குப் புரியாம இல்லை தீரன். நமக்குமே உள்ள இன்னும் என்ன விஷயம் இருக்குனு தெரியாது தான். ஆனா, இதுல உலகத்தோட பார்வைக்கு வரணும். மக்களுக்கு பயம்னு ஒன்னு வந்தா தன்னால எதிர்த்து கேள்வி கேக்க ஆரம்பிப்பாங்க. இது தான் நீதிபதியோட முடிவும் கூட” என்று அவனைச் சம்மதிக்க வைத்திருந்தார்.

 

கூடவே ஊருக்கு நல்லவர் வேஷம் போடும் அவர் முகத்திரையை கிழிக்கவுமே இந்த திட்டம்.

 

அதனையும் விட, அவர் செய்தவற்றை அவர் வாயால் கேட்டாலேயன்றி அனைத்தையும் அறிந்து கொள்வது கடினம் என்பது தீரனுக்குத் தெரியும்.

 

அதனாலேயே அவனின் இந்த அமைதி, இல்லை என்றால் இருக்கும் கோபத்துக்கு வயதாவது ஒன்றாவது என அடித்து துவைத்திருப்பான்.

 

சில மணி நேரங்களின் முன் அவன் கண்டு கொண்ட உண்மை அவனை மொத்தமாய் கூறு போட்டிருந்தது.

 

அந்தக் குழந்தைகளை பார்த்தவன் கண்களில் இரத்தம் தான் வந்திருக்கும் என எண்ணும் அளவுக்கு வேதனை அவன் முகத்தில்…

 

அந்தப் பிஞ்சுகள் ஒவ்வொருவரின் பாதத்திலும் முத்தமிட்டு மன்னிப்பு கேட்டிருந்தான். இவ்வளவு நாளாய் அந்த நரகத்தில் அவர்களை இருக்கவிட்டதில் வெட்கி,

 

ஒரு காவல் அதிகாரியாய் இவ்வளவு ஆண்டுகள் தோற்று விட்ட உணர்வு அவனுள்…

 

அவன் முன்னே அமர்ந்திருந்தவர் பேசத் தொடங்கினார்.

 

“உங்கள போல சுயநலமான ஆட்களுக்கு அது பைத்தியக்காரதனம் தான் ஆனா பொதுநலமா உலகத்தை யோசிக்கிற எங்களுக்கு அது உணர்வோட ஊடுருவுன விஷயம்” என்க, தீரனின் நாடி நரம்பு எல்லாம் புடைத்தது.

 

அவனுக்கோ ‘யார் பொதுநலவாதி நீயா??’ எனக் கத்த வேண்டும் போலிருந்தது.

 

ஆனால் அவன் முன்னே அமர்ந்திருப்பது மனிதர் இல்லையே, எல்லா ஜீவராஸியையும் விட கேவலமான ஜென்மம்.

 

“என் வீட்டுல நானும் என் கங்காவும் தான். அவ என் அக்கா. அவளுக்கு இப்படி இருக்குறதுனால என்கூட விளையாடவே வரமாட்டா? ஊர்ல எல்லா குழந்தைகளும் அவங்க அப்பா அம்மா கூட சந்தோசமா இருக்கும் போது, நான் என் நடக்க முடியாத, பேசமுடியாத என் அப்பாவுக்கும், கண் தெரியாத என் அம்மாவுக்கும் இப்படி இருக்குற என் கங்காவுக்கும் அவங்க தேவைங்கள செஞ்சிட்டு இருந்தேன்”

 

“என் பாட்டி சொல்லிட்டே இருப்பாங்க, ‘இவங்க ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்க வேணாம் சொந்தம் வேற குழந்தையும் அப்படியே பிறக்கும்னு கேட்டாங்களா? அவதான் வேணும்னு கட்டிக்கிட்டாளேன்’னு எங்கம்மாக்குத் திட்டு விழும். அஞ்சு வயசுல இருந்து அத தான் கேட்டு வளர்ந்தேன். அது என் மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு” என்று பழையவைகளை பேசும் போது அத்தனை நேரம் இருந்த கம்பீரம் அத்தனையும் குறைந்து அவரிடம் ஒரு வித நடுக்கம். மீண்டும் அந்த ஆறு வயதுக்கே சென்றுவிட்டார்.

 

“நான் வளர வளர என்னோட வேலைகளும் அதிகமாச்சு, ஒரு நாள் கூடப் பேசிட்டு இருந்த பாட்டி இறந்துட்டாங்க, அவங்க இந்த உலகத்துக்கு வந்த நோக்கம் முடிஞ்சுது போய்ட்டாங்க, அப்படி என்னோட நோக்கம் என்னனு தேடுனப்போ அந்த ஆறு வயசுல, எனக்கு தோணுனது அவங்களுக்கு சந்தோசமான வாழ்க்கைய கொடுக்கணும்கிறது தான். அம்மாகிட்ட கேட்டேன். நிம்மதியா கண்ண மூடணும்னு சொன்னாங்க அப்பாவும் அதே தான். கங்கா மட்டும் தான் என்னோடவே இருக்கணும்னு கேட்டா” என்றவர் முகத்தில் ஒருவித குரோதம் தோன்றி இருந்தது.

 

“அவங்க சந்தோசமா செக்ஸ் வெச்சிக்கிட்டு வாழுறதுக்கு ரெண்டு குழந்தைங்களோட வாழ்க்கைய மொத்தமா அழிச்சிட்டாங்க, அவங்க மட்டும் குழந்தை பெத்துக்காம இருந்திருந்தா, என் கங்கா இன்னொருத்தருக்கு ஆரோக்கியமா பொறந்திருப்பா. நான் என் வாழ்க்கைல சிட்டுக் குருவியா சிறக்கடிச்சுப் பறந்திருப்பேன்” என்றவர்,

 

“அப்போ கூட, உங்க கூடவே இருக்குனும்னு ரெண்டு பேருமே சொல்லல, அவங்களுக்கு அவங்க நிம்மதியா வலி இல்லாத வாழ்க்கைக்கு போகணும், அதுக்கு சாகனும். அப்போ அவங்க மூலமா இந்த உலகத்துக்கு வந்த நாங்க???” என்று கேள்வியோடு நிறுத்தினார்.

 

“அப்போ முடிவு பண்ணுனேன் அவங்க மட்டுமில்ல இப்படி குறைபாடோட இருக்குற யாருமே உயிரோட இருக்கக்கூடாதுன்னு, அதுக்கு நானே ஆரம்பிச்சது தான் ஆப்ரேஷன் சி.ஈ. கிளீன் தி எர்த்” என்றவர் சத்தமாய் புன்னகைத்து,

 

“அதுக்காக என்னோட முதல் ப்ராஜெக்ட் என்னோட பெத்தவங்க தான், அவங்க கேட்ட மரணத்தை வலியோட பரிசா கொடுத்தேன். எங்கள விட்டுட்டு வலி இல்லாம வாழணுமாம் அப்போ வலியோட தானே சாகனும்” என்றவர் அத்தனை பேரின் கண்களுக்கும் கொடூரமாகவே தெரிந்தார்.

 

சற்று முன்னர் அவரது சிறுவயது கஷ்டங்களுக்கு மனம் வருந்தியவர்களின் கவலையோ, இந்த வார்த்தைகளில் மொத்தமாய் மறித்திருந்தது.

 

இத்தனை கொலைகள் இதனை கடத்தல்கள் என அவர் செய்த தவறுகள் பல, ஆனால் அபடிப்பட்ட அவரது கஷ்டம் இன்னொருவருக்கு கஷ்டமாய் இருந்தால் அதற்கு பெயர் தான் மனிதாபிமானம்.

 

அது இல்லாம போனதன் விளைவு, தான் அவர்கள் முன்னே அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் ஜீவனின் ஜீவனே சிதைந்து போன இடம்.

 

“அதுக்கு நான் தேர்ந்தெடுத்த படிப்பு தான் இந்த மெடிசின். மக்கள் அவங்களோட உடம்ப நம்பிக்கையா கொடுக்குறது எங்ககிட்ட மட்டும் தானே! அதான் வெறித்தனமா படிச்சேன்” என்றவர்,

 

“அப்படி இருக்குற எல்லாரையும் கொல்லணும்னா இன்னும் பல நூறு வருசங்கள் ஆகும் அதே மாதிரி புதுசா உருவாகிகிட்டே தான் இருப்பாங்க, அதனால நான் தேர்ந்தெடுத்த டார்கெட் தான் குறைபாடு உள்ள குழந்தைங்க, அவங்க மூலமா இன்னொரு உயிர் இந்த உலகத்துக்கு வாராத தடுக்க அவங்கள கருவுலேயோ இல்லை, பிறந்து சில வருசங்கல்லயோ அழிச்சா அடுத்து சில காலத்துக்கு அப்பறம் வரபோற ஜெனரேஷன் மொத்தமா மரபணு குறைகள் இல்லாதவங்களா தான் இருப்பாங்க” என்க, அங்கே அதனைக் கேட்டுக் கொண்டிருந்த அரவிந்தின் கரங்களோ மனைவியை ஆதுரமாக வருடிக் கொண்டது.

 

அந்த உருவமோ விடாமல் பேசிக்கொண்டே இருந்தது “சொல்லவே எவ்வளவு நல்லா இருக்குல, குறைகள் இல்லாத உலகம் அப்படினா? எந்தத் தப்புமே நடக்காது. மெடிக்கல் மாஃபியா இருக்காது. ஆர்கான் தெஃப்ட் இருக்காது. இன்னும் ஏன் மக்களுக்குள்ள போட்டி பொறாமை எதுவுமே இருக்காது. எல்லாருமே நல்லா படிப்பாங்க, எல்லாருமே வேலை செய்வாங்க ஏற்றதாழ்வு எதுவுமே இருக்காது. உலகமே பூங்காவா மாறும். இங்க இந்த சென்னைல என்ன மாதிரி ஒரு கடவுள் இருக்குற போல ஒவ்வொரு இடத்துலயும் ஒருத்தர் இருந்தா போதும். சீக்கிரமே இந்த அச்சீவ்மென்ட்ட அடைஞ்சிடலாம்” என்றார் கண்களில் ஆசை மின்ன…

 

அதுவரை அமைதியாக இருந்த தீரன் “உன்ன மாதிரி ஒருத்தர் இருக்குறதே இந்த உலகத்தோட சாபம் இதுல இன்னும் நிறைய பேரா, உன்னோட வக்கிரங்களை வெளிப்படுத்த கொள்கை எங்குற போர்வைல உன்ன நீ மறைச்சி அதப் பெருமையா வேற பேசுற, சுத்த பைத்தியக்கார தனம்” என்று அவன் காதில் அமைதியாய் இருக்கும்படி வரதராஜன் பேசுவதைக் கூட பொருட்படுத்தாமல் வெடித்திருந்தான்.

 

கோபப்பட்டவரோ “வார்த்தையை பார்த்து பேசணும் மிஸ்டர் தீரன், உங்களுக்கு என்ன தெரியும் எங்க கொள்கை பத்தி, யுஜீனிக் கொள்கை என்கிறது முழு உலகத்தையும் ஒரு காலத்துல ஆட்டப் படைச்சது, என்ன நம்ம முடியலையா? அமெரிக்காவில் 1900–1970 இல் அறுபதாயிரத்துக்கும் மேல மனநோயாளிகள், காது கேக்காதவங்க பார்வை குறைபாடு உள்ளவங்க, ஏன் சமூகத்தில் வறுமை நிலை இருக்குறவங்க இப்படி எல்லாருமே கரு உருவாக்கக் கூடாதுனு கட்டாய சட்டமே இருந்திச்சு. அதோட அங்க சில மாநிலங்களில் ‘மோசமான மரபியல் உடையவர்கள் திருமணம் செய்யக்கூடாது’ அப்படினு சட்டமே இருந்திச்சு”

 

“ஜெர்மனில ஹிட்லர் அவனோட இனவாத சிந்தனைக்கு யூஜீனிக்ஸ் கொள்கைய தான் ஒரு கருவியாகப் பயன்படுதினார். ஏன் இன்னும் ஸ்வீடன், கனடா, ஆஸ்திரேலியா இப்படி எத்தனையோ நாடுகள் சொல்லலாம், எல்லாம் அந்த மனித உரிமைனு ஒன்ன கொண்டு வந்ததுல அழிஞ்சது” என்றார் எரிச்சல் குரலில்…

 

“ஏன் நம்ம நாடு இப்போவும் சொந்தத்துல கல்யாணம் பண்ணா குழந்தைக்கு ஆபத்துனு சொல்லறது கூட அதோட ஆரம்பம் தான். இங்க யாருக்கு தான் நல்லா ஆரோக்கியமாக இருக்கணும்னு ஆசை இல்லாம இருக்கு?” என்று கேட்டவர்,

 

“நீங்க எல்லாரும் நீங்க ஆரோக்கியமா இருக்கணும்னு யோசிப்பீங்க நான் எல்லாரும் நல்லா இருக்கணும்னு யோசிக்கிறேன். அவ்வளவு தான்” என்றார்.

 

அவர் அத்தனையையும் வருடம் முதற்கொண்டு விளக்கமாய் சொன்னதில், அவர் அந்தக் கொள்கை என்னும் பைத்தியக்காரத்தனத்தில் பெரிதாய் ஊடுருவி இருக்கிறார் என்று புரிந்தது.

 

 

தீரனுக்கு பொறுமை போய் விட்டது. “வாட் ரப்பிஸ் சார், இத இன்னும் கேட்டுட்டு இருக்குற பொறுமை நிச்சயம் எனக்கில்லை சார், இப்படிப் பட்டவங்க தான் இந்த உலகத்துல வாழவே கூடாது” என்றான்.

 

“ஹாஹாஹா, பார்த்தியா இவ்வளவு நேரம் நான் சொல்லும் போது தப்பா தெரிஞ்ச இந்த வார்த்தை, நீ சொல்லும் போது இங்க இருக்குறவங்க கண்ணுல அது சரின்னு தெரியுது. தட்ஸ் இட், உன்னப் பொறுத்த வரை நான் தப்பு, சோ நான் சாகணும் என்கிறது உனக்கு சரின்னு படுற மாதிரி, எனக்குத் தப்பான ஜீனோட பிறந்தவங்களப் பார்த்தா தோணும். உங்க சட்டம் குற்றவாளிங்களுக்குத் தண்டனையா கொடுக்குற மரணத்தை நான் அவங்களுக்கு ஆழ்ந்த அமைதியாக் கொடுக்குறேன். அவங்களோட வலிய மறந்து ஒரு ஆத்ம சாந்தி” என்றார்.

 

தீரன் அவர் பேச்சில் மலைத்துத்தான் போய்விட்டான். எப்படிப்பட்ட கொடூர எண்ணம் இவரின் உள்ளே ஊடுருவி இருக்குறது என்று…

 

 

“இந்த உலகம் தப்ப மட்டும் தான் பார்க்கும், சரிய என்னைக்கும் யோசிக்காது, அதுக்காக தான் தப்பே இல்லாத ஒரு உலகம் வேணும்கிறேன்” என்றவர்,

 

“இன்னைக்கு வரைக்கும் எத்தனையோ குழந்தைங்கள பிறக்குறதுக்கு முன்ன கொன்ன அதே கை தான் அதைவிட அதிகமான ஆரோக்கியமான குழந்தைங்களுக்கு பிரசவம் பார்த்திருக்கு… சோ மாறவேண்டியது நான் இல்ல நீங்க” என்றபடி கொடூரத்தின் மொத்த உருவாய் அமர்ந்திருந்தார்.

 

அவர்…

 

கோதை…

 

பூங்கோதை…

 

பூங்கோதை ராம்பிரசாத்…

 

 

 

ஈர்க்கும்…

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்