என் உள்ளத்தை ஈர்த்த பூமுகம் -26

Loading

 

முகம் 26

 

அன்று அதிகாலை சென்னை பேருந்து நிறுத்தத்தின் அருகே எப்போதும் போலக் கடையைத் திறக்க வந்த அந்த மனிதரின் நாசியை வழமைக்கு மாறான ஏதோ ஒரு வாடை குப்பென்று தாக்க,

 

“ச்சே, இந்த காப்பிரேஷன் காரங்ககிட்ட எத்தனை வாட்டி சொன்னாலும் இந்தக் குப்பையைக் கிளீன் பண்ணவே மாட்டானுங்க, நாத்தம் குடல பிடுங்குது” என்றவர், அவர் பாட்டுக்கு பேசிய படியே கடையின் கதவினை திறந்து, அன்றைய கணக்கு வழக்கைப் பார்க்கத் தொடங்கினார்.

 

அது ஒரு பெட்டிக்கடை. அருகிலே பேருந்து நிருத்தம் இருப்பதால் ஓரளவுக்கு அவருக்கு வருமானம் தரும் வகையில் தான் அந்த இடம் இயங்கிக் கொண்டிருந்தது.

 

கடந்த ஒரு வாரமாக கடும் மழை அதன் ஆதிக்கத்தை செலுத்தி தனிந்திருக்க, பக்கத்தில் இருக்கும் குப்பை போடும் காலி இடம் சிறிது பள்ளமாக இருந்ததில் நீர் தேங்கி விட்டது.

 

கடை நடத்துப்பவருக்கு அருகில் வீசும் துர்நாற்றம் சற்று வியாபாரத்தைக் குறைத்தது எனலாம்.

 

அதனாலேயே கடந்த மூன்று நாட்களாக குப்பை அகற்றும் அமைப்புக்கு விடாமல் அடித்துக் கொண்டிருக்கிறார்.

 

அங்கு வேலை செய்யும் ஒருவன் இவரிடம் இதற்காக பணமும் வாங்கி இருக்க, இன்று வீசிய அதிக நாற்றம் தாங்காமல் அவனுக்கு மீண்டும் அழைத்தார்.

 

எடுத்த எடுப்பில் “காசு வாங்கிட்டு வேலைய காட்டுற பார்த்தியா குமரா?” என்றார் காட்டமாய்…

 

அந்தப்பக்கம் இருந்தவனோ, “அண்ணே, என்னப் போய் அப்படி நினைச்சிட்டல்ல நீ, உனக்கு மட்டும் தான் இந்த மழைல பிரச்சனையா? சுத்தி உள்ள எல்லாருக்கும் அதே தான். ஒன்னொன்னா முடிச்சிட்டு வரணும்ல, இதோ இன்னைக்கு உன் இடத்தப் பத்தி தான் சூப்பர்வைசர் கிட்ட பேசி இருந்தேன். இன்னைக்கே அனுப்புறேன்னு சொன்னாரு, அதுக்குள்ள தம்பிய சந்தேகப் பட்டுட்ட பார்த்தியா?” என்றான் குற்றச்சாட்டுடன்…

 

அதற்கு அந்தக் கடைக்காரரோ “சரி சரி குமரா, இங்க இன்னைக்கு அதிகமா கப்பு தாங்கல. அதான்டா கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். நேத்தும் சரியா யாவாரம் கூட இல்லை, பத்தாதுன்னு இன்னைக்கு ஒரே காக்கா கூட்டமா வேற இருக்கு. மழை வர முன்னவே இங்க குப்பை எல்லாம் எடுக்கணும்னு யோசிச்சு வெச்சிருந்தேன் மழை வந்து எல்லாத்தையும் கெடுத்துடிச்சு” என்றவர்,

 

“ஏதாச்சும் உள்ள செத்து கித்து கிடக்கும் போல. ஒரு நாய் இங்க தான் சுத்திட்டு இருந்திச்சு, உள்ள விழுந்திருக்குமாக்கும். அது போய் விழுந்து செத்துட்டு, நம்ம உயிரையும் வாங்குது. கொஞ்சம் சீக்கிரம் வரச் சொல்லு குமரா” என்று அவனை ஒருவாறு சமாளித்துப் பேசி வைத்து, அடுத்த வேலையைப் பார்க்க தொடங்கினார்.

 

அடுத்த பத்து நிமிடத்தில் அவர்களது வண்டி வந்துவிட, அதில் குமரன் என்று அழைக்கப்பட்டவனும் இருந்தான் போலும், இவருக்கு கையசைத்துச் செல்ல, அவருக்கோ அப்போதுதான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

 

அடுத்துக் கடந்த நிமிடங்களில் வேலை மும்முரமாக நடக்க, கொஞ்சம் கொஞ்சமாய் கூட்டம் கூடத் தொடங்கியது.

 

பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தவர்கள், பேருந்து வர தாமதமானதால் வேடிக்கை பார்க்க அங்கே கூடியதில் கடைக்காரருக்கு சற்று வியாபாரம் உயர்ந்தது.

 

துர்நாற்றம் வந்தாலும் வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் நின்றவர்களே அதிகம்…

 

சற்று முன் திட்டிய அந்த நாய்க்கு இப்போது கடைக்காரரின் நாவினால் ஒரு பாராட்டும் வைக்கப்பட்டது.

 

அவ்வளவு தான் மனிதன். இப்படி மாசு நிறைந்த மக்கள் இருக்கும் வரை மனிதநேயம் என்றும் கைக்கெட்டாத கானல் நீர் தான்.

 

உள்ளே இறங்கி நீரை அகற்றியபடி நின்ற ஒருவனோ “உள்ள ஏதோ செத்து கிடைக்கும் போல ண்ணா, ஜே.சி.பிய உள்ள விட்டு முதல்ல அத எடுங்க, இல்லனா இதுக்குள்ள நிக்கிறதே கஷ்டம்” என்றான் வெளியே இருப்பவர்களுக்கு கேட்கும் வகையில் சத்தமாக…

 

அவன் சொல்வதும் சரிதான் என்று உணர்ந்த சூப்பர்வைசரும் சம்மதமாய் தலையசைக்க, மண் தோண்டும் இயந்திரத்தை இயக்குபவரும் வேலையை ஆரம்பித்தார்.

 

சாதாரணமாகவே மக்கள் கூட்டம் திரளும், இதில் மண் தோண்டும் இயந்திரம் வேறு வந்திருக்கையில் சிறியவர்கள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள் என்று எந்த வேறுபாடும் இன்றி அனைவரும் வேடிக்கைப் பார்க்கத் தொடங்கி இருந்தனர்.

 

அருகில் பேருந்து நிறுத்தம் வேறு இருக்கையில் சேரும் ஆட்களுக்கா பஞ்சம்???

 

இயந்திரத்தை இயக்கிக் கொண்டிருந்தவருக்கு ஏதோ வித்தியாசமான தட்டுப்பட, அதுதான் இறந்த விலங்கின் உடல் என்பதை உணர்ந்தவர், இயந்திரத்தின் கையை மேலே உயர்த்த, பார்த்திருந்த அத்தனை பேரின் கண்களும் விரிந்தது.

 

உள்ளே நின்றிருந்த இருவரும் பயத்தில் நடுங்கித் தான் போயினர். அந்த உடலில் இருந்து சொட்டு சொட்டாய் விழும் நீர்த் துளி அவர்கள் மேலும் விழுந்ததில், அருவெறுப்பில் அலறியபடி அவர்கள் மேலே வர, அங்கிருந்த ஒருவன் உடனடியாக காவல்துறைக்குத் தகவலை அனுப்பி இருந்தான்.

 

அடுத்த அரைமணி நேரத்தில் காவல் துறையினரும், தேவையான மற்ற அதிகாரிகளும் அங்கே கூடி இருந்தனர்.

 

சிலர் அங்கிருந்து மக்களை அப்புறப்படுத்துவதிலும், சிலர் அங்குள்ள பாதைகளை அடைப்பதிலும், சிலர் விசாரணைக்கு தேவையான காணொளிப் பதிவை எடுப்பதிலும், சிலர் சுற்று வட்டாரத்தில் ஆதரங்களை தேடுவதிலும், இன்னும் சிலர் அந்த உடலை ஆராய்வதிலும் ஈடுபட்டிருக்க, ஏ.சி.பி விக்ரமன் அந்த உடலின் முன்னே தான் நின்றிருந்தான்.

 

அது ஒரு பெண்ணின் உடல். கிட்டத்தட்ட இருபதின் மத்தியில் வயது மதிக்கத்தக்கதாக இருக்கும் பெண்ணென கணிக்க கூடியதாகத் தான் இருந்தது அவளது தோற்றம்.

 

அந்த நேரம் விக்ரமனின் தொலைபேசி சினுங்க, அழைப்பை ஏற்றிருந்தான்.

 

“குட் மார்னிங் சார். ஸ்பாட்ல தான் இருக்கேன் இப்போதைக்கு யாருன்னு தெரியல சார். டெட் பாடி ஒரு பொண்ணோடது. கிட்டத்தட்ட ஒரு இருபது டு இருபதஞ்சுக்குள்ள வயசு இருக்கும். முகம் கொஞ்சம் ரொம்பவே சிதைஞ்சிருக்கு சார், வான்டெட்டா தெரியக்கூடாதுனு சிதைச்சிருக்காங்க. அன்ட் ஃபொரன்சிக் ஆஃபீசரோட கைடென்ஸ்படி மெர்டர் மோஸ்ட்லி டுவெல்வ் ஹவர்ஸ் பிஃபோர் தான் நடந்திருக்க வாய்ப்பிருக்கு, அன்ட் பாடில நாலு இடத்துல கன் ஷூட் நடந்திருக்குறதுக்கான மார்க்ஸ் இருக்கு, மோர் இன்வெஸ்டிகேஷனுக்கு ஜெனரல் ஹாஸ்பிடல் அனுப்ப ஏற்பாடு நடக்குது சார்” என்று குறித்த அந்த நேரத்துக்குள் சேகரித்த அனைத்துத் தகவலையும் அவரிடம் கூறினான்.

 

அந்தப்பக்கம் இருந்த ஐ.ஜி வரதராஜனோ “ரீசண்டா ஏதாச்சும் மிஸ்ஸிங் கேஸ் ரிப்போர்ட் ஆகியிருக்கா விக்ரம்?” என்று கேட்க,

 

“நோ சார், எனக்கு தெரிஞ்சு இப்போதைக்கு இல்லை, பக்கத்துல உள்ள போலீஸ் ஸ்டேஷன் எல்லாத்துக்கும் இன்ஃபோர்மேஷன் அனுப்பி இருக்கேன். சீக்கிரமே அதுக்குரிய டீடைல்ஸ் உங்களுக்கு நான் ரிப்போர்ட் பண்றேன் சார்” என்றான்.

 

“ஓகே விக்ரம். ஈமீடியட்டா என்னனு பார்த்து எனக்கு ரிப்போர்ட் பண்ணுங்க? ஒன்னு விட்டா ஒன்னுனு நடந்துட்டே தான் இருக்கு” என்றவர் அழைப்பைத் துண்டித்தார்.

 

அடுத்த வேலைகள் சடுதியில் நடக்க, இத்தனை நேரம் கிடைத்த அனைத்துத் தகவலையும் ஒரு அறிக்கையில் கைப்பட எழுதியவன்,

 

அங்கிருந்த அந்த கடைக்காரரிடமும், கார்ப்பரேஷன் வாகன ஓட்டுனர் மற்றும் வேலை செய்தவர்களில் ஒருவரிடமும், மேலும் அவர்களுக்குத் தகவல் சொன்ன நபரிடமும், அவனுடன் வந்த போலீசார் இருவரிடமும் என மொத்தமாக ஆறு பேரின் சாட்சி கையெழுத்தை வாங்கி, இறப்பு விசாரணை (பஞ்சநாமா) அறிக்கையை தயாரித்தான்.

 

________________

 

 

 

அங்கே முரளிதரனோ கடும் கோபத்தில் மகனிடம் கத்திக் கொண்டிருந்தார்.

 

“என்ன விஷால் பண்ணி வெச்சிருக்க நீ? அறிவு இருக்காடா உனக்கு?” என்று கத்தியவர் அங்கும் இங்கும் நடந்தபடி,

 

“இது மட்டும் பாட்னருக்குத் தெரிஞ்சா என்ன ஆகும்னு கொஞ்சமாச்சும் யோசிச்சியாடா, ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்சு கடைசில அவர் விசயத்துலயே கைய வெச்சிருக்கியே!” என்று மீண்டும் அவர் அதே பல்லவியைப் பாட,

 

“டாட், ரிலாக்ஸ்… எதுக்கு இந்த டென்ஷன், கூலா இருங்க. அவளோட அழகுக்கு அவ பின்ன நாய் மாதிரி நான் காத்துட்டு இருந்தா, அவ யாரையோ காதலிச்சு கலயாணமும் பண்ணிப்பாளாம். அத நான் பார்த்துட்டு இருக்கணுமா? எனக்கு அவ அழக அனுபவிக்கணும். சோ நான் பண்ணது என்னப்பொறுத்த வரை தப்பே இல்ல, ஆனா அவளை ஃபிரஷா அனுபவிக்கவே முடியலன்னும் போது தான் அந்த நாய் மேல கோபமா வருது. அவனை விட்டிருக்க கூடாதுப்பா அவனையும் சேர்த்து போட்டிருக்கணும்” என்றான் கடும் கோபத்துடன்…

 

முரளியோ “ஏற்கனவே பண்ணதுல இருந்து தப்பிக்கப் பார்ப்போம் முதல்ல… கயல் விஷயம் என்னைக்கும் வெளில வரவே கூடாது விஷால். அந்த ஊர்ல இருந்து வந்து முழுசா ஒரு வாரம் கூட ஆகல, அதுக்குள்ள இப்படி இழுத்து வெச்சிருக்கியே!. எப்படியும் அவ கூட அவன் தானே இருந்தான் கொலை பண்ணது அவன் தான்னு ஆதாரத்த நாம கிரியேட் பண்ணுவோம்” என்றார் ஒரு மாதிரியான புன்னகையுடன்…

 

“அதுக்கு தான் நான் ஏற்கனவே ஸ்கெட்ச் போட்டுட்டுடேனே! அவன் தான் அவளை கொன்னதுனு மாட்டப் போறது உறுதி. என்னைக்கு எனக்கு முதல் அவளை அவன் எடுத்துகிட்டானோ அப்போவே அவன் முடிவ நான் எழுதிட்டேன்” என்றான் வஞ்சத்துடன்…

 

“விடு அதான் உனக்கு சாதகமா எல்லாம் நடத்திக்கிட்டியே!” என்க,

 

“கயல் மாதிரி ஒரு பொண்ணு கிடைக்க இந்த அளவுக்குக் கூடப் பண்ணலனா எப்படி டாட்” என்றவன், அவளது பெயர் சொன்னதும் வந்த உணர்வில் கண்களை மூடி ஆழந்த குரலில்,

 

“எப்படி இருந்தாலும் அவ ஒரு தீராத போதை டாட். உங்களுக்கும் அந்த போதை என்னனு தெரியுமே! உங்களுக்குக் கூட அவ மேல ஆசை இருந்திச்சுல்ல, அப்போ மகனோட ஆசை என்னனு புரிய வேணாமா? கூல் டாட். இந்த விஷயம் உங்க பாட்டனருக்கு நிச்சயம் தெரிய வராது. ஐ ப்ரோமிஸ் யூ. பிரீயா இருங்க, நான் பார்த்துக்கிறேன்” என்றான்.

 

மகனோடு சேர்ந்து அப்பாவி பெண்களைச் சுகித்த போது வராத வெட்கமா, மருமகளாக வர இருந்தவளின் மீது தன் ஆசையை மகன் கண்டு கொண்டதில் வந்து விடப்போகிறது???

 

அதனை புறம் தள்ளியவரோ “எப்படி விஷால் மறைக்கிறது? விஷயம் வெளில தெரிஞ்சா நிச்சயம் இது நம்ம வேலை தான்னு பாட்டனருக்கு டவுட் வந்துடுமே!” என்க,

 

“தெரியாம பார்த்துப்பேன் டாட், அப்படி தெரிஞ்சாலும் எனக்கு பயம் இல்ல, உங்க பாட்னர் பண்ணுற அத்தனை இல்லீகல் வேலைக்குரிய ஆதாரமும் நம்ம கிட்ட இருக்கும் போது, நமக்கென்ன பயம் பார்த்துக்கலாம்” என்றான் அத்தனை கூலாய்…

 

தகப்பனோ “இதுல இந்த மயல் வேற தேவை இல்லாத கேள்வி எல்லாம் கேக்குறா? ரொம்ப அழகா இருக்காளே எப்போவாச்சும் என் ஆசைக்கு யூஸ் பண்ணிக்கலாம்னு விட்டு வெச்சா, அவள என்னையே மோப்பம் பிடிக்கப் பார்க்குறா? அவ நமக்கு ஆபத்துனு ஏதாச்சும் பண்ணப் பார்க்குற நேரம் நீ இழுத்துவிட்ட பிரச்சனைல வேற அவளை இப்போ ஒன்னும் பண்ண முடியாது, சீக்கிரம் வந்த வழில போய்ட்டான்னா அவ உயிராவது மிஞ்சும்” என்றார்.

 

அவனோ “அவ மேலையும் ஒரு கண்ணு வெச்சிருக்கேன் டாட், கொஞ்சம் இவ பிரச்சனை முடிஞ்சதும் அவளையும்….” என்று இழுக்க, முரளியின் கண்களிலும் ஆசை வெறி தெரிந்தது.

 

“ஓகே முதல்ல இதுல இருந்து வெளில வரணும், எல்லாத்தையும் பிளான் பண்ணி பண்ணு, ஒன்னு மிஸ் ஆனாலும் மாட்டிக்க வாய்ப்பிருக்கு. போலீஸ் கிட்ட இருந்தும் தப்பிக்கணும்” என்றார்.

 

“போலீஸா??, காமெடி பண்ணாதீங்க டாட். உங்க பாட்டனருக்கே ஆப்பு எங்கிட்ட இருக்குனு சொல்லுறேன். இதுல இத்தனை வருஷம் அவர் செய்ற தப்பையே கண்டு பிடிக்காம இருக்க போலீஸ் பத்திப் பேசிட்டு இருக்கீங்க, விளையாடாதீங்க டாட். நம்ம பண்ணத தெரிஞ்சிக்கவே நாளாகும்” என்று அவன் சிரிக்க,

 

“விஷால் விஷயத்தோட சீரியஸ்னஸ் தெரியாம பேசிட்டு இருக்க நீ, ஆதாரத்தை வெச்சு மிரட்டுறது இப்போதைக்கு புத்திசாலித்தனம் இல்ல, பணம் அளவுக்கு அதிகமா வர்றதே அதுக்காக தான். சோ கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணு” என்க,

 

காரின் சாவியை விரல் நுனியில் சுழற்றியவனோ “சில் டாட், ஊர்மிய உங்க ரூமுக்கு அனுப்பி வெச்சிருக்கேன் என்ஜோய்” என்றவன் தந்தைக்குக் கண்ணடித்து “எனக்காக உங்க கனவுக் கண்ணி ஷில்பா வெயிட்டிங்” என்றான்.

 

அதில் சிரித்த தந்தையோ “யூ டூ என்ஜோய் மை டியர் சன். நெக்ஸ்ட் மந்த் ஷில்பா கூடத் தான் மால்டீவ்ஸ் போக பிளான் போட்டிருக்கேன். அவகிட்ட சொல்லிடு” என்றவர் அடுத்த பெக்கை குவளையில் ஊற்றிக் கொண்டார்.

 

__________________

 

 

 

அங்கே அறை மொத்தமும் இருளில் இருக்க, கண்களை சிரமப்பட்டு திறந்தவனுக்கு தலை ‘விண் விண்’ என்று வலித்தது.

 

கரங்களை அசைக்க அது முடியாமல் போனதில் முயன்று தலையில் வலித்த இடத்தில் கரத்தை வைத்தவனுக்கு சிறிது சிறிதாக உடலின் வலியும் உணரக் கூடியதாக இருக்க, அடுத்த பத்து நிமிடம் உணர்வு இருந்தும் அசைய முடியாமல் அப்படியே இருந்தான்.

 

இப்போது விழிகள் சற்று விரிந்து கொள்ள இடமளிக்க, மெல்லத் திறந்து இருளில் பார்வையைக் கூர்மையாக்கினான்.

 

இருக்கும் இடம் ஓரளவுக்குப் புரிய சட்டென நடந்தவை அனைத்தும் ஞாபகம் வந்ததில் அவன் உதடுகள் “பொம்மை” என உச்சரித்தது.

 

மனது முழுவதும் காதலுடன் இணைந்தவர்கள், அடுத்த நாள் எழுந்த போது தான் அந்த கோர நிகழ்வு மொத்தமாய் நிகழ்ந்திருந்தது.

 

இதோ அவள் அவனுடன் இல்லை என்பதை அவன் உணர்வுகள் சொன்னாலும் மனமோ பைத்தியமாய் அவளையே தேடியது.

 

எத்தனை போராட்டத்தின் பின் அவர்கள் இணைந்து கொண்டனர், ‘இப்படி ஒரு நாள் வாழவா அவையெல்லாம்?’ என்ற கேள்வி அவன் கண்ணீரைக் கன்னம் தொட வைத்திருந்தது.

 

இவ்வளவு உணர்வு வந்தும் அவனால் அசையத்தான் முடியவில்லை…

 

அவன் பொம்மையின் நினைவு ஒன்றே சுவாசம் போல் அவள் பேரையே சொல்லிக் கொண்டிருந்தவன் விழிகள் சோர்வில் மீண்டும் மூடிக்கொண்டாலும் மனது நடந்தவைகளை அசை போட்டது.

 

___________________

 

அன்று ஊரில் வைத்து அவன் முடிவெடுத்திருந்ததன்படி முதலில் கோதையிடம் தான் பேசினான்.

 

அவரும் முதலில் கோபப்படவே செய்தார். அடித்தார், பின் ஏன் சொல்லவில்லை என கயலை அழுதார். பின்னர் மகளுக்காக யோசித்தார்.

 

இப்படித்தான் நான் பெரிதாய் நினைத்து பயந்துகொள்ளும் விடயம் சிறு தூசு போல நிமிடத்தில் சரியாகும்.

 

ஆனால் பிரச்சனை வெடித்து என்னவோ அவன் வீட்டில் தான்.

 

 

அங்கே பெரிய வீட்டின் முன்னறையில் பெரியவர்கள் அமர்ந்திருக்க, சக்திவேலோ கோபத்தை அடக்கிக் கொண்டிருந்தார்.

 

அவருக்கு மனதே ரணமாய்ப் போயிருந்தது. வாழ்வில் அடுத்த அடி அவருக்கு…

 

மீனாட்சி இன்பனை அறைந்தே விட்டார் “என்னடா நீங்க ரெண்டு பேரும் வளர்ந்துட்டீங்கன்னு இப்படிதான் காட்டுவீங்களா?? உன் அண்ணன் ஒரு பக்கம் நீ ஒரு பக்கம்னு இந்த மனிசன் பந்தாடுறதப் பார்க்கவா நான் இருக்கேன்?” என்று கோபத்தில் பல அடிகள் விழுந்தது, அனைத்தையும் வாங்கியபடி அவன் இருக்க, அவன் கரத்தை இறுக்கப் பற்றி இருந்தாள் கயல்.

 

அப்போதும் விடவில்லை மீனாட்சி “வீட்ல வயசுக்கு வந்த புள்ளைங்க ரெண்டு இருக்கு, அவங்களப் பத்தியும் நீங்க யோசிக்க மாட்டீங்க, உங்க வாழ்க்கை தான் உங்களுக்கு பெரிசுல, உன் அண்ணனுக்கு தம்பின்னு நிரூப்பிக்கிறியா?” என்றார்.

 

அத்தனை பேச்சுக்கும் அவனிடம் மௌனம் மட்டுமே!

 

மீனாட்சி இன்னும் அழ, சக்திவேலின் “மீனாட்சி” என்ற ஒற்றைக் குரலுக்கு அமைதியாய் அமர்ந்தார்.

 

அதுவரையும் நாகரீகம் கருதி அமைதியாய் அமர்ந்திருந்த கோதை பேச ஆரம்பித்தார்.

 

“எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, எனக்கே நேத்து நைட் தான் விஷயமே தெரியும். நம்ம புள்ளைங்க அவங்களே அவங்க வாழ்க்கைய தீர்மாணிக்கிற அளவுக்குப் போயாச்சு” என்றவர் அங்கே இன்பனின் தோள் வளைவுக்குள் நின்றிருக்கும் மகளைத்தான் பார்த்தார்.

 

“இதுல நாம அவங்க பக்கம் தான் யோசிக்கணும், ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணி வெச்சிடலாம். நான் ஊருக்கு போய் கயல் அப்பா கூடப் பேசிட்டு உங்களுக்கு சொல்லுறேன்” என்க,

 

சக்திவேலோ “இவங்க கல்யாணம் நடக்கணும்னா, உங்க ரெண்டாவது பொண்ணு இந்த வீட்டுக்கு வரணும்” என்றார்.

 

கோதையும் சிறு புன்னகையுடன் “அது நடந்தா எங்களுக்கும் சந்தோசம் தான். அவங்களுக்குள்ள ஏதோ பிரச்சனை அத இவ்வளவு தூரம் இழுத்துட்டாங்க, இனியாவது பெரியவங்க நாம தான் சேர்த்து வைக்கணும்” என்றவர் அங்கிருந்து கிளம்பி இருந்தார்.

 

கயலுக்கோ பெரிய நிம்மதி, இதனை விட அவள் பெரிதாய் எதிர்பார்த்தாள் ஆனால் இதோடு முடிந்ததே என்ற சந்தோசம்.

 

இன்னும் தந்தை என்ன சொல்வார் என்ற பயம் உள்ளே இருக்கவே செய்தது.

 

 

 

விடயம் கேள்விப்பட்டு இன்பனுக்கு அழைத்திருந்தான் தீரன்,

 

“என்னடா இன்பா நடக்குது? உனக்கு கல்யாணம் நடக்கணும்னா அவ நம்ம வீட்டுக்கு வரணும்னு மீசை சொல்லிட்டாராம். என்னடா உன் கல்யாணத்துக்கு என்ன பாலியாடா ஆக்கப் பார்க்குறீங்களா? இந்த சித்து என் கைல மாட்டுனான் செத்தான் அவன். மீசைக்கு தகவல் கொடுக்குறாராமா அவரு வரட்டும் பாத்துக்கிறேன். அவ என்ன ஐயரா அவ இல்லாம கல்யாணம் நடக்காம இருக்க” என்று கேட்டதில் இன்பன் சிரித்து விட்டான்.

 

சிறு மௌனத்தின் பின் “ண்ணா அப்பா…” என்று இன்பன் இழுக்க,

 

“பாவம் தான்… நான் பண்ண அதே தப்பா தான் நீயும் பண்ணி இருக்க, மனிசன் உடைஞ்சி போயிருப்பாரு, உன் கல்யாணம் நடந்த அன்னைக்கே எனக்கு தெரியும்” என்க,

 

“அண்ணா…” என்றான் இன்பன் அதிர்ச்சியுடன்…

 

“எனக்கு தெரியாம பண்ணுறோம்னு உனக்கு எண்ணம் வேறையா? அப்பாக்குத் தெரிஞ்சா ஃபீல் பண்ணுவாறேன்னு, அவருக்கா தெரியும் போது பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன். அதுவும் கயல் தான்னு தெரிந்ததும் எனக்கு நிம்மதி தான். கயல் நல்ல பொண்ணு, முக்கியமா அவ அக்கா மாதிரி பிடிவாதம் இல்ல” என்றவன் குரலில் இருந்தது என்ன என்பது அவனுக்கே தெரியவில்லை

 

“அப்பா சொல்லுற மாதிரி எல்லாம் அவகூட என்னால திருப்பி சேர்ந்து வாழ முடியாது இன்பா. அவர் கேட்டதுல அது ஒன்னு என்னால பண்ண முடியாது. ஆனா அவர் ஆசைப்பட்ட படி இந்தக் கேஸையாவது முடிச்சிட்டு அவர் கூட பேசணும்டா இன்பா” என்றான்.

 

“ஃபீல் பண்ணாதீங்க ண்ணா சீக்கிரமே பேசலாம்” என்க,

 

“நான் தாத்தாகிட்ட பேசி உங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுறேன். நீ டென்ஷனாகாம இரு அண்ணா இருக்கேன்ல பார்த்துகிறேன்” என்று அழைப்பைத் தூண்டித்தான்.

 

இவனோ “உங்க கல்யாணம் என் கல்யாணத்தோட சேர்த்து நிச்சயம் நடக்கும் ண்ணா” என்று சொல்லிக்கொண்டான்.

 

 

 

அடுத்த நாள் மருத்துவ முகாம் முடிந்து அவர்கள் கிளம்பி விட, கிருபன், இன்பன் இருவரும் சென்னை கிளம்பி விட்டனர்.

 

அடுத்து வந்த இரண்டு நாட்கள் அவளை சந்திக்க எவ்வளவு அழைத்தும் கயல் வருவதாக இல்லை என்றதும் அவளது தாயிடமே போய் நின்றான்.

 

அவரும் திருமணமணவர்களை இனி பிரித்து வைத்து என்ன செய்திட முடியும் என்பதால் போக அனுமதித்திருக்க, அவன் தங்கி இருந்த வீட்டுக்குத்தான் அவளை அழைத்து வந்திருந்தான்.

 

“ஏன் முகி இப்படி பண்ணுறீங்க, அம்மா என்ன நினைப்பாங்க? நம்மள ஏத்துக்கிட்டாங்கன்னாலும் முன்ன மாதிரி என்கிட்ட பேச மாட்டேங்கிறாங்க. எனக்காகவே வாழுறவங்க அவங்க, அவங்கள கஷ்டப்படுத்திட்டோம்னு பீல் ஆகுது” என்றவள்,

 

“அப்பா கூட ‘என் ரெண்டு பொண்ணுங்களும் என் பேச்சை எப்போவும் கேக்க போறதில்ல, அவங்க விருப்பம். என்னை எதிர்பார்க்க வேணாம் நீங்களே பண்ணுங்கன்னு’ அம்மாகிட்ட சொல்லி இருக்காங்க. நாம நீங்க சொன்ன மாதிரி வீட்ல சொல்லியே கல்யாணம் பண்ணி இருக்கலாமோ” என்க,

 

“எல்லாமே நடந்து முடிஞ்சிடிச்சேடா பொம்மை, இப்போ ‘அப்படி செஞ்சிருக்கலாம் இப்படி செஞ்சிருக்கலாம்னு’ வெறும் ‘லாம்’ போடுறதுல எந்த யூஸ்ஸும் இல்ல, இப்போ இருக்குற வாழ்க்கைய சந்தோசமா வாழுவோமேடா. நாம எதிர்பார்த்தத விட சேதாரம் கம்மின்னு சந்தோசப் படுவியா அத விட்டுட்டு” என்றான் அவளை இலகுவாக்கும் பொருட்டு…

 

“மயல் கல்யாண விஷயத்துல அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருந்தாங்க முகி, அவளும் கடைசில ரெஜிஸ்டர் மேரேஜ் தான் பண்ணிக்கிட்டா, அம்மா சொல்லித்தான் அதுவே எனக்கு தெரியும். அதான் கொஞ்சம் பயந்துட்டேன்” என்றவள்,

 

“சாரி முகி உன்னையும் உன் அம்மாகிட்ட அடிவாங்க வெச்சுட்டேன்ல” என்று அன்று மீனாட்சி அறைந்த கன்னத்தை இன்று வருடினாள்.

 

“இரு நான் கிருபாவ கால் பண்ணி கூப்பிடுறேன். ரெண்டு நாளைக்கு இந்தப் பக்கம் வந்துடாதன்னு அவனை பார்சல் பண்ணி அனுப்புனா, நீ என்னடான்னா இன்னும் சோக கீதம் வாசிச்சிட்டு இருக்க” என்க, பட்டென சிரித்து விட்டாள்.

 

அவள் சிரிப்பில் கலந்தவன், அவளுள் கலக்கும் ஆசையில் “தாலி காட்டுனாத்தான் தொட விடுவேன்னு ஏதாச்சும் கொள்கை வெச்சிருக்கியா பொம்மை?” என்றவனின் பார்வையில் தெரிந்த காதல், அவன் முகம் பார்க்கும் தைரியத்தை அவளிடமிருந்து பிரித்திருந்தது.

 

மெல்ல அவன் நெஞ்சம் மீது அவள் அச்சாரம் வைத்து ‘அப்படி எந்த கொள்கையும் இப்போதைக்கு இல்லை உன்னை கொள்ளை கொள்வதைத் தவிர’ என அந்த முத்தம் சொன்னதோ என்னவோ???

 

மொத்தமாய் ஒரு மௌனப் போர் இருவரிடமும், இரண்டு வருடக் காதல் சங்கீதத்துடன் கானம் இசைக்க, அந்த மகுடிக்குக் கட்டுண்டு இரண்டு உள்ளங்கள் ஒன்றாக பின்னிக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தது.

 

அவளை நெருங்கியவன் விலக முடியாத சுழலுக்கு மாட்டிக்கொள்ள, விடியும் வரை வெளியேற அவனும் முயலவில்லை அவளும் விடவில்லை…

 

அதிகாலை, இருவரும் களைப்பில் உறங்கிக் கொண்டிருக்க, திடீரென கேட்ட சத்தத்தில் இருவரும் விழிக்க,

 

என்னவென்று உணரும் முன் சிலர் உள்ளே நுழைந்த சத்தம் கேட்டதும் பயந்தவளோ அவளது ஆடையை சரி செய்து கொண்டாள்.

 

“ஒன்னுமில்லடா இரு நான் என்னனு பார்க்குறேன்?” என்றவன் மெல்ல கதவை திறக்க அதில் கை வைக்க, எங்கிருந்தோ அந்த அறைக்குள் புகுந்த ஒருவன், இவன் கரத்தைப் பிடித்துக்கொண்டு அவன் தலையில் கட்டை ஒன்றால் அடித்துக் கதவைத் திறக்க, இதுக்கே காத்திருந்தவன் போல் இன்னொருத்தன் இன்பன் கரத்தில் ஊசி ஒன்றை இறக்கி இருந்தான்.

 

கண்கள் சிறிது சிறிதாய் பார்வையை இழக்க, அவனோ முயன்று கண்சிமிட்டிக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான்.

 

இந்த கயவர்களிடம் அவளை தனியே எப்படி விட்டுச் செல்வான் அவன்???

 

அவர்களை அடிக்கக் கையை உயர்த்த நினைக்கிறான் ஆனால் முடியவில்லை..

 

ஒரு நிலைக்கு மேல் நிற்கவே முடியாமல் விழிகள் சொருக மயங்கி விழுந்திருந்தான்.

 

கண்கள் மூடும் நேரத்தில் அவன் பார்வை அவளைத் தொட்டது. அவளோ பயந்து மருகும் பார்வையில் நின்றிருக்க, அவனைத் தாண்டிக் கொண்டு நால்வர் அவளருக்கே போவது தெரிந்தது.

 

அவன் எழ போராடினாலும் அவன் உடல் அதற்கு ஒத்துழைக்கவே இல்லை…

 

_________________

 

 

நினைவுகள் அறுந்து, மீண்டும் கண்ணைத் திறந்தவனுக்கு இப்போது உடல் கொஞ்சமாய் ஒத்துழைக்க, தரையோடு தரையாய் ஊர்ந்து சென்றவன் அவன் தொலைபேசியில் இருந்தது தீரனுக்கு அழைத்திருந்தான்.

 

அவனோ எடுத்து “சொல்லு இன்பா” என்க,

 

இவனோ “அண்ணாஆஆஆஆ” என்று ஒட்டுமொத்த கோபம் வலி இரண்டையும் கொட்டி இருந்தான்.

 

 

ஈர்க்கும்…

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்