Loading

அத்தியாயம் பன்னிரண்டு

கல்லூரி : 

      தன் கண்ணாவின் ஒரு சிரிப்பிற்காக காத்திருந்தாள் பேதை , அவளை காக்க வைக்காமல் சித் வந்து விட்டு அவளின் கவிதையை தான் தேடினான். அவனுக்கு தெரியுமே எப்போதும் எழுதி வைப்பவள் இன்றும் கண்டிப்பாக ஏதாவது வைத்திருப்பாள் என ,  தேடிய ஸ்டிக்கி பேப்பர் கிடைத்து விட முகம் முழுவதும் மகிழ்ச்சி கொள்ள ,  அதை எடுத்து  வாசித்தான் . வழக்கம் போல இன்றும்  புன்னகை சித்துவின் இதழில் தாண்டவமாடியது . அதை திருப்தியாக பார்த்து கண்களில் நிரப்பிக் கொண்டாள்  மகி. அவன் சுற்றி முற்றி மகியை தேட , மறைந்து சிரித்துக் கொண்டாள் . ஒரு ஏக்க பெரு மூச்சை விட்டவன் தன் வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான் . மகியும் கிளம்புவதற்கு தன் சீட்டாவை தேடி வந்தவள், அங்கு கோபத்துடன் தன் இரு தோழிகளும் பார்க்க , பல்லை இளித்து காட்டி 

” கிளம்பலாம் ” என்று தன் வண்டியை உயிர்ப்பிக்க , சந்தியா அவள் வண்டி சாவியை எடுத்துக் கொண்டாள் . 

” அடியேய் சாவியை குடு டி ” 

” அப்போ இந்த நம்பர்க்கு போண் செஞ்சு பேசு ” என்று மகி கையில் ஒரு நம்பரை கொடுத்தாள் சந்தியா .

” இது யாரோடது டி ” 

” ஹான் இது  உன் ஆளோடது ” என்று சொல்லவும். அவளுக்கு பதற்றம் முகத்தில் தோன்றியது , 

” நேர்ல யா டி பேச சொன்னா போன்ல தானே சொன்னா  எதுக்கு இவ்வளவு பதறுற ” என்று சௌமியும் கலாய்க்க, எங்கு அவள் எவ்வாறு பேச என்று யோசித்தாள் . 

” இத ஸ்ரீ ட சொல்லி கஷ்டப்பட்டு வாங்கிட்டு வந்தேன் டி , அவனுக்கு போன்  பண்ணி உன் காதலை சொல்லி விடு ” என்று சந்தியா கூற , அவளால் முடியவில்லை .  ஸ்ரீ பெயரை கூறியதும் மகி முகம் லேசாக மாறியது ஏனோ அவனை பிடிக்கவில்லை மகிக்கு , அவனின் பார்வையில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்பதை அவனுடன் பேச ஆரம்பித்த கொஞ்ச நாட்களில் அறிந்துக் கொண்டாள். சந்தியாவின் பெற்றோர் இறந்த போது உற்ற தோழனாய் அன்பை சொலுத்தினான் பிறகு அந்த அன்பை காதல் என கூறி அவனே காதலை சொல்ல சந்தியாவும் சம்மதம் கூறினாள். ஏனோ மகிக்கு இந்த காதலில் துளியும் பிடிக்கவில்லை, சமயம் பார்த்து ஸ்ரீ டைம் பாஸ் செய்வது போலவே தோன்றும் . ஸ்ரீ இவர்களுடன் பேசும் போது கண்களை பார்த்து பேசாதே மகிக்கு உறுத்தும் , அதனாலே அவன் மேல் துளியும் நல்ல மதிப்பு இல்லை , மாறிய முகத்தை சிறிது நேரத்தில் மறைத்து, சந்தியா கூறியதில் கவனம் செலுத்தினாள். தன்னவன்  குரலை கேட்கவும் பயமாக அல்ல பதற்றமாக இருந்தது .

” சரி நா வீட்ல போய் கண்டிப்பா பேசுறேன் இப்போ சாவிய குடு ” 

” அதெல்லாம் இல்ல இப்போ பேசு ” என்று சந்தியாவும் , ” எங்க முன்னாடி பேசு என்று சௌமியாவும் கேட்க 

” லவ்வர்ஸ் குள்ள ஆயிரம் இருக்கும் டி  அதெல்லாம் உங்க முன்னாடி பேசுறதா ” என கனவுடன் கூறினாள் 

” என்ன என்ன சொல்லுறா பாருங்க இங்க ஒருத்திக்கு பேசவே வக்கு இல்லையாம் அவளுக்கு  ” என்று மகியை சௌமி  வாய்விட்டு கூறிக் கொண்டு அவளை பார்க்க  , 

” உருட்டலாம் டி ஆனா இந்த அளவுக்கு ஆகாது ” என்று சந்தியாவும்  கூறி சிரித்தாள்.  அதில் சௌமி சத்தமாக சிரித்து விட , சந்தியாவும் சௌமியாவும் ஹைஃபை அடித்து சிரித்தனர் . மகி உதட்டை பிதுக்கி சந்தியா அசந்த நேரத்தில் சாவியை பிடுங்கி பறந்து விட்டாள் . மற்ற இருவரும் ஒருவரை ஒருவர் பாவமாக பார்த்தனர் , இன்றாவது எப்படியாவது தன் தோழியின்  காதலை  தெரிவிக்க வைத்து விட வேண்டும் என்று நினைத்து கடவுளிடம் ஒரு வேண்டுதலை போட்டனர் . அவர்கள் போட்ட  பிளான் புஸ் என்று ஆகிவிட இருவரும் தங்கள் வீட்டை நோக்கி பறந்தனர் . 

மகி வீடு: 

எப்போதும் போல்  வீட்டிற்கு வந்து தன் தந்தையிடம் பேசி சிரித்தவள் , பல  ரகலைகளையும் சேட்டைகளையும் செய்து தன் தாய் செல்வியிடம் திட்டுக்களை வாங்கி , தன் அறைக்குச் சென்றாள் .

கையில் தன்னவன் நம்பரை வைத்துக்கொண்டு தைரியத்தை வரவழைத்து தன் அழைபேசியில் நம்பரை டைப் செய்து விட்டாள் call செய்யும் பட்டனை அழுத்தாமல் தினறி கொண்டு இருந்தாள் . அப்போது அவள் தோளில் ஏதோ அமற பதறி போனை கீழே போட்டுவிட்டாள் .

” ஐயோ பட்டு இப்படி தான் வந்து பயம் காட்டுவியா ” என்று அதை கையில் வைத்துக்கொண்டு அதை முறைக்க , அதுவோ மகியை பார்த்து சிரித்தது . பட்டு 

” பயப்படாத மகி அழுத்து  ” என்பது போல் அவள் கையில் இருந்து குதித்து மகியின் போன் பக்கத்தில் சென்று அமர்ந்துக் கொண்டு தன் இறக்கைகளை அடித்துக் கொண்டிருந்தது . 

மறுபடியும் கையில் போனை எடுத்து அழுத்தப் பார்க்க அந்த நேரம் சந்தியா போன் செய்து விட அவளுக்கு ஐயோ என்றிருந்தது . சலிப்புடன் அதை எடுத்து காதில் வைத்தாள் 

” சொல்லும் டி ” 

” என்னத்த சொல்ல நீ தான் சொல்லனும் என்ன  பேசிட்டியா ” என்று சந்தியா கேட்க

” கிளிச்சுருப்பா ” என்று சௌமி கை தட்டிச் சிரித்தாள் . 

மகி ” அடியே காலேஜ் தான்  கலாக்குரிங்கனு பார்த்தா  இப்போ கான்பிரன்ஸ் போட்டு கலாய்கிரிங்களா ” 

” அத விடு பேசுனியா இல்லையா ” 

” அது ..அது ..” 

” சந்தியா இவ இழுக்குறதுல இருந்து  தெரியலையா இன்னும் பேசல ” என்று அவள் தலையில் அடித்து கொள்ளும் சத்தம் மறு முனையில் கேட்கும் அளவு சத்தமாக அடித்தாள் . 

” ஐயோ எனக்கு பயமா இருக்கு டி  ” 

” இன்னும் கொஞ்ச நாள் தான் இருக்கு     தெரியும்ல அது மனசுல வைச்சிட்டு  பேசு டி ” என்று சந்தியா கெஞ்சாத குறையாய் கேட்டாள் . 

” அவன  பாக்க முடியாதுல சே ” என்று மகி வருத்தமாக கூற , 

” நீ இப்போ அவன் ட பேசலேனு வை அப்பறம் எப்பையும் பாக்க முடியாது மாறி ஆகிடும்  சோ ஒழுங்கா பேசு ” என்று சௌமியாவும் தன் பங்கிற்கு கூற 

” சரி டி ரெண்டு பேரும் ஓட்டாதிங்க கண்டிப்பா பேசிடுவேன் ” என்று அவர்களின் அழைப்பை துண்டித்து , திரும்பவும் தன்னவனின்  அழைக்க முயற்ச்சித்தாள் . எங்கே அவன் நம்பரை பார்த்ததும் இதயம் அளவு மீறி துடித்து அவளை பாடாய் படுத்தியது . ஒரு முடிவுக்கு வந்தவளாய் அவன் எண்ணிற்கு எப்பவும் போல கவிதையை அனுப்பலாம் அவன் ஏதாவு பதில் அனுப்பினால் பிறகு எப்படியாவது பேசிவிடுவோம் என்று முடிவுக்கு வந்து  அவனுக்கான கவிதையை டைப் செய்தாள் . 

பானம் எதுவும் இன்றி

 நின் பார்வையால் ஏறுதடா போதை!!

சூடான மூச்சுக்காற்று போதுமடா

என் ஜுரத்தை குறைக்க..

இசைகளையும் என் செவி ஏற்க மறுக்கிறதே ? 

நின் வாய்மொழி கேட்டபிறகு !

ரனன்குலஸ்க்கு இனணயோ ? 

உன் இதழ் மலர்கள் !!

சிங்கமும் தோற்குமடா

நின் நடையின் முன் ..!! 

வார்த்தைகள் இல்லை

உன்னை வர்ணிக்க…

என் உயிர் கண்ணாவிற்கு 😍💋……

ஒரு வழியாக எழுதி விட்டாள் . ஆனால் , அதை அனுப்பவும் முடியாமல் அனுப்பாமல் இருக்கவும் முடியாமல் கைகளுக்கும் ஜுரம் வரும் அளவு குளிர்ந்து விட்டது . பிறகு தன்னை சமன் படுத்திக் கொண்டு சித்திற்கு புலனாய்வுக்கு அனுப்பி விட்டாள் . அவளில் போதா காலோமோ என தெரியவில்லை சித் அவன் அலுவலகத்தில் இருந்ததால் போனை கவனிக்க நேரமில்லை .  அவனுக்கு சென்று விட்டதாய் ஒரு டிக் காட்டி விட , செல்பேசியை தொடர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தாள் . கொஞ்சம் நேரத்தில் படபடப்பு குறைந்து விட , தோட்டத்திற்கு சென்றாள் . 

அங்கோ வந்த செய்தியை பார்த்து சந்தோஷம் பொங்க சித் அழைத்தே விட்டான் மகிக்கு . மகியின் அறையில் செல்பேசி கத்திக் கொண்டே இருக்க, தோட்டத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டவள் தந்தையிடம் கதை அளந்து விட்டு , சரி படிக்கலாம் என்று அவள் அறைக்குச் வர , போன் அடிப்பதை பார்த்து அதனை கையில் எடுத்தவள் கையில் மீண்டும் குளிர்ந்து, கைகளும் கால்களும் பதற்றத்துடன் நடுங்க , வேர்த்து வடிந்தது. இதயம் பன்மடங்காக அடித்து கொள்ள அதை அப்படியே டேபிளில் வைத்து விட்டாள் . சித் கிட்டத்தட்ட முப்பது  முறை அழைத்திருந்தான் . பின்னே இருக்காதா தன்னை பைத்தியமாக காதலித்து தன்னையும் அவள் புறம் சாய்த்து விட்டாள் , இன்று தன்‌ மனம் கவரந்தவளை கண்டுகொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தாங்காது அழைத்துக் கொண்டு இருந்தான் .‌ அதை எடுத்து பேசும் தைரியம் பாவம் மகிக்கு இல்லை  .

சித்தும் தயக்கம் புரிந்தது போல அவனும் அடுத்த முறை அழைக்காமல் செய்தியாய் அனுப்பினான் .

” தினமும் பார்த்து காதலிச்சா பத்தாது என் முன்னாடி வரனும் எப்போ வர போறிங்க மேடம் 😌❤️ ” என்று அவனும் சிறிது ஆர்வத்துடன் மகிக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான் . அவளும் ஆவளுடன் படித்து விட்டு தன்னை திடப்படுத்தி  , ஒரு முடிவை எடுத்து விட்டாள் 

” ஒரு நாள் பொறுத்துக் கொள்ளவும் !!

நாளை வெய்யோன் மயங்கும் நேரம் நாழிகை ஐந்து  , பல வண்ணப் பூக்கள் இருக்கும் இடம் ?? ” 

என்று  தன்னை சமன் படுத்தி அனுப்பினாள் , கூடவே ஒரு வரைபடைத்தையும் அனுப்பினாள் . சித் முதல் சந்திப்பின் போது பார்த்து தான் ஆனால் , கொஞ்சம் மாற்றம் செய்து வரைந்திருந்தாள் . ஆண் தயங்கி கொண்டு நிற்பதை  அப்படியே வரைந்து , ஒரு பெண் இதயத்தினுள் இருந்து கைகொடுத்து இழுப்பது போல் வரைந்து அனுப்பினாள் . அதை பார்த்த  சித் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி  அந்த ஓவியத்தை பார்த்ததும் அழகில் கண்கள் விரிந்தது தன் ஓவியத்தையும் எவ்வளவு இரசித்திருக்கிறாள் இவள் தனக்கானவள் என்று முடிவு செய்து 

” கண்டிப்பா ” என்று அனுப்பிவிட்டான் . 

அடுத்து அவளும் எதுவும் அனுப்ப வில்லை , சித்தும் நாளை தன் மனம் கவர்ந்தவளை நேரில் பார்த்து நிறைய பேசலாம் என்று நினைத்துக் கொண்டான் . அடுத்த நாள் இருவரின் நாட்களும்  மாறப்போவது தெரியாமல் நிம்மதியாகவும் சந்தோசத்துடன் உறங்கச் சென்றனர் . 

____

மறுநாள் அவர்களை காக்க வைக்காமல் வெய்யோன் அதன் கதிர்களை புமி மாதாவிற்கு வழங்கி விடிய ,   காதல் இதயங்களும் கஷ்டப்பட்டு விழித்துக் கொண்டது . இரவு முழுவதும் இருவரும் தூங்கினாள் தானே , மகியோ நாளை என்ன ?..எப்படி ?? பேச வேண்டும் என்று பேசி பார்த்துக் கொண்டு இருக்க, சித்தோ தன்னவள் எவ்வாறு இருப்பாள் என்று கற்பனைகளை கண்டு உறங்க மறுத்தான் . 

எப்பொழுதையும் விட வேகமாக எழுந்தனர் இருவரும் . 

இங்கு மகியோ அவனுக்கு பிடிக்கும் என்று அடர் பச்சை நிற டாப்சை ,  வெள்ளை நிற பேண்ட் அனிந்து  , லேசாக ஒப்பனை செய்து கொண்டு தன் முகத்தை ஒரு முறைக்கு முன்னூறு தடவை பார்த்து விட்டு கீழே சாப்பிட சென்றாள் . 

கதிரவன் தன் மகளை பார்த்துவிட்டு 

” என்ன மகி முகத்துல ஒரு பல்ப் எரியுது ” என்றார் சரியாக , எவ்வளவு கட்டுப் படுத்தியும் அவள் முகம் காட்டிக் கொடுத்தது . மகி தினற

” அது …அது ஒன்னும் இல்லை அப்பா , உங்களுக்கு ஒரு பொண்ண பாத்துட்டேன் .அவங்களை கரெக்ட் பன்ன போறேன் ” என்று பதட்டத்துடன் ஆரம்பித்து நக்கலாக முடித்தாள் . 

” ஐயோ மகி சத்தமாக பேசாத அப்பறம் உங்க அம்மா சோறு போட மாட்டா ” என்று கூட , இருவரும் சிரித்தனர் .

” அப்பா அமிழ் எங்க ” 

” இப்போ தான் டா சாப்பிட்டு கிளம்பி போனா ” என்றார் கதிரவன் கூறும்போது , மகி தலையில் ஒரு கொட்டு விழுந்தது.

” அடியேய் அவ எப்படி சமத்தா சாப்பிட்டு போறா நீ பேசி பேசி சாப்பிட அரைமணி நேரம் இழுத்தா எப்ப கிளம்புவ ” என்று செல்வி தான் வந்திருந்தார் . 

” கொட்டிட்டே இருக்காத மா ” என்று தலையை தேய்த்துக் கொண்டு மீண்டும் பேச்சுடனே உண்டாள் .

சிறிது நேரத்தில் உண்டு முடித்தவள் வெளியே செல்லாமல் மீண்டும் தன் அறைக்குச் சென்று முகத்தை ஒரு முறை சரி செய்து கல்லூரிக்கு சீட்டாவில் கிளம்பினாள் . 

அங்கு சித்தோ பல சட்டைகளை மாத்தி விட்டான் , என்ன போடுவது என தெரியாமல் எல்லாச் சட்டையையும் போட்டு கலட்டினான் . 

” அடேய் ஏண்டா ..இப்படி அலங்கோலமா ரூமை மாற்றியிருக்க ” என்று சித்தின் தாய் கேட்க  , அதற்கு கொஞ்சம் வெட்கத்துடனே

” இன்னைக்கு உன் மருமகளை முதல் முதலாக பார்க்க போறேன் மா  ” என்றான் தரையில் கோலமிட்டு , அதில் ராதாவிற்கு தான் நெஞ்சு வலி வராதா குறையாய் இருந்தது . அவ்வளவாக பெண்கள் நட்பு சித்திற்கு இல்லை , இவன் ஒரு பொன்னை காதலிக்குறானா !! என்று சாக்  ஆகினார் ராதா . 

” அம்மா எந்த சட்டை போட்டு போக  நீ செலக்ட் பண்ணுமா  ” என்று அந்த கடினமான வேலையை தன் தாயிற்கு தந்தான் . அவரோ யோசிக்காமல் அடர் பச்சை நிறச் சட்டையை எடுத்துக் கொடுத்தார் . அதை வாங்கி அனிந்துக் கொண்டு அதற்கு சம்பளமாக தன் தாய் கன்னத்தில் ஒரு முத்தத்தை கொடுத்தவன் சாப்பிடாமல் தன் வண்டியை எடுத்துக் கொண்டு உற்சாகத்துடன் கல்லூரிக்கு புறப்பட்டான் . 

பார்க்காமல் காதலித்த இதயங்கள் சேருமா !!??

பிரியாமல் தொடரும் 😍💋….

உங்களின் புல்லட் வெடி 🎉

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    16 Comments

    1. Ennatha irunthalum aven phone pannupothu eduthu pesirukalam mahi konjam payama tha irukum but avanoda voice keta atha vida hpy ya irunthurupaa…❣️❣️ Enna oru nalla Amma payan love pannuranu sonnathum thitaama shirt la eduthu tharanga🥺 he is so lucky …💕 Mahi ya paaka pora avasarathala saptama poitiyepaaa ☹️saptu poirukalam la (nammaku sooru tha mukiyam )first time Mahi ya paaka porathu naala pasikalayo ennamoo😜😁 waiting for next epi❣️❣️❣️……..

    2. What is going to happen??
      Waiting for their meet…..
      🥰🥰🥰🥰🥰🥰

    3. Janu Croos

      ஓபனிங் எல்லாம் நல்லா தான் இருக்கு ஆனா ஃபினிஷிங் சரியில்லையே….இம்புட்யு பண்ணி என்ன பிரயோஜனம் அவன் அமிழ் தான் தன்னை லவ் பண்றாள்னுல நினைச்சுட்டான்….அவன் எத வச்சு அமிழ் தான் அவன லவ் பண்றாள்னு நினைச்சானோ….

    4. Archana

      இவ்வளவு அழகா அந்தபுள்ள மகி ப்ளான் போட்டும் விதி(ரைட்டர் தான்😝அந்த விதி) சதி பண்ணிடுச்சே. அவ அரைமணி நேரம் முன்னாடி போயிருந்தாளோ இல்ல அதுக்கடுத்து அவனுக்கு மெஸேஜ் போட்டு இருந்தாலும் பிரச்சனை வந்திருக்காதே🤣🤣🤣

    5. Sangusakkara vedi

      Acho pavam ivlo love panravana intha writer ji kavuthi vitranga…. Y writer ji sidh mela ivlo kvm…. Pavam haiyan ipo thn first time love panran…. Sari vidunga rendu perukkum mrg panni vachathala othukuren… Super ud sis

    6. அழகான, கருத்து நிறைந்த வரிகள். ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம் சொட்டுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    7. அழகான, கருத்து நிறைந்த வரிகள். ஒவ்வொரு வரியிலும் காதல் ரசம் சொட்டுகிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

    8. மிகவும் அழகான நாவல். படித்து முடிக்கும் வரையிலும் கதையினை விட்டு நகர இயலாதவாறு வெகு சுவாரஸ்யமாக அமைந்தது கதையின் போக்கு. எழுத்தாளருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    9. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். சமூக கருத்தை வலியுறுத்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.