Loading

“யார் நீ? எதுக்கு இங்க வந்து இருக்க? உனக்கு என்கிட்ட இருந்து என்ன வேணும்?” என்றே வாள்விழியால் கூறு போட்டான் ஜிஷ்ணு தர்மன்.

உயிர் பயத்தில், வியர்த்துக் கொட்டியபடி எதிரில் நின்றவனோ, “சார்… நான்… நான்… உண்மையா டெலிவரி பாய் தான் சார்!” என நடுங்கினான்.

அழுத்தப் பார்வையில் ஆதிக்கம் கலந்து இளிவாய் இதழ் விரித்த ஜிஷ்ணு, இரு விரல் கொண்டு அவன் அணிந்திருந்த பிரபல உணவு விற்பனை டீ ஷர்ட்டை இழுத்துப் பிடித்தான்.

“இந்த டீ – ஷர்ட்ல கம்பெனி லோகோ தப்பா இருக்கு. அதாவது, அவசரமா என்ன பார்க்க வர்றதுக்காக பிரிண்ட் செஞ்சது. ரைட்டா…?” புருவம் நெறித்து வினவியதில் அவன் அரண்டான்.

மேலும் அவனை பீதியாக்கும் பொருட்டு, “நீ வண்டில என் வீட்டு வாசலுக்கு வரும் போது கையில பாக்ஸ் இல்ல. உள்ள வரும் போது தான், பல்சர்ல வந்த ஒருத்தன் இதை குடுத்துட்டு போயிருக்கான். அதை பிக் அப் பண்ணிட்டு நீ உள்ள வந்து இருக்க… இது ரைட்டா?” என்ற ஜிஷ்ணுவின் விழிகள் நெருப்பை உமிழ்ந்தது.

அந்நேரம், “ஜீ… மினிஸ்டர் லைன்ல இருக்காரு!” என ஜிஷ்ணுவின் அடியாள் ஒருவன் அலைபேசியை நீட்ட, “ம்ம்…” என்ற உறுமலுடன் அதை வாங்கியவன், தீவிரத்துடன் ஏதோ பேசிக்கொண்டிருக்க,

அவனிடம் சிக்கிய பரத் தான், காதினுள் வைத்திருந்த மைக்ரோ ப்ளூ டூத்தில் “மாட்டிக்கிட்டோம்… வசு இப்ப என்ன பண்ண?” என்றான் கலவரமாக.

பல்சரில் அமர்ந்திருந்து ஜிஷ்ணுவின் பேச்சுக்களை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த வசுந்தரா, “ஒன்னும் பண்ண முடியாது. அவன்கிட்டயே சாவு. நான் வேற ஆள் வச்சு பாத்துக்கிறேன்” என அசட்டையாக கூறி விட்டு போனை கட் செய்ய, பரத்திற்கு விழி பிதுங்கி விட்டது.

🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎🤎

“வணக்கம் ஜீ… இந்த மாதிரி சின்ன கேசுக்கு எல்லாம் நீங்க ஏன் கோர்ட்டுக்கு வந்துட்டு இருக்கீங்க. நாங்க பாத்துப்போம்ல…” என்றபடி அந்த தொகுதி எம் எல்.ஏ வான ஜிஷ்ணு தர்மனுக்கு கும்பிடு போட்டான் கட்சி ஆள் ஒருவன்.

“நீங்க ஒழுங்கா பாத்துருந்தா நான் ஏன் இங்க வர போறேன்…” எரிமலையாக நின்றவனை, தலையை சொரிந்த படி பார்த்தவன், “ஜீ நீங்க மட்டும்
‘ம்ம்’ ன்னு சொல்லிருந்தா உங்களுக்கு எதிரா கேஸ் போட்ட பொம்பளையை போட்டு தள்ளிருப்பேன். ஆளுங்க இப்ப கூட ரெடி தான். இங்கேயே வச்சு போடட்டா… என்றான் விசுவாசமாக.

அதற்கு ஜிஷ்ணு பதில் கூறும் முன்பே, கம்பீரமான பெண் குரல் ஒன்று அருகில் ஒலித்தது.

“இங்க வச்சே மர்டர் பண்ண போறீங்களா? வெரி நைஸ். எங்க பண்ணுங்க பாப்போம்…” திமிராக ஜிஷ்ணுவை கண்டவளை, அவனும் அடக்கப்பட்ட கோபத்துடன் வெறித்தான்.

“என்ன மிஸ்டர் ஜிஷ்ணு தர்மன் உங்க ஆளுக்கு ‘ம்ம்’ ன்னு சொல்லுங்க. வெயிட் பண்றாருல பாவம்…” என உச்சுக்கொட்டி பாவம் போல அவனை கேலி செய்திட,

அவளின் கேலிதனில் விழி உயர்த்தியவன், “ம்ம்…” என்றான் நக்கல் நகையுடன்.

அதில் அவன் கத்தியை எடுத்து அவளை நோக்கி குத்த வர, ஒரு நொடி அவள் முகத்தில் அதிர்வு படர்ந்தாலும்
மறுநொடியே லாவகமாக அக்கத்தியை தடுத்து அந்த அடியாளை ஓங்கி எத்தியதில் அவன் நான்கு அடி தள்ளி சென்று விழுந்தான்.

அவளோ கர்ஜனையாக, “கருப்பு கோர்ட்டு போட்ட பொண்ணு தான… ஈசியா தூக்கிடலாம்ன்னு நினைச்சீங்களாடா? உங்க அரசியல் செல்வாக்கையும் பலத்தையும் இந்த தாராகிட்ட காட்டாதீங்க…” என அடியாளை மிரட்டுவது போல ஜிஷ்ணுவை தெனாவெட்டாக ஏறிட்டவள்,

“இந்த கேஸ்ல, நான் ஜெய்ப்பேன் தர்மா. உண்மையை வெளியுலகுக்கு தெரியப்படுத்தி, உனக்கு எதிரா ஆதாரம் இல்லைன்னா கூட பொய்யா கூட உன்ன ஃப்ரேம் பண்ணி உள்ள தள்ளி தூக்கு தண்டனை வாங்கி குடுப்பேன். அதுவரை என் சுண்டு விரலை கூட உன்னால ஒன்னும் பண்ண முடியாது…” என்றவள் விழி இடுங்க ரௌத்திரத்தை கக்கினாள்.

இதனைக் கேட்ட ஜிஷ்ணுவோ, “ஹ ஹ ஹ ஹா ஹா…” என வாய் விட்டே சிரித்து விட்டு, கண்ணிமைக்கும் நேரத்தில், அவள் கரத்திலிருந்த கத்தியை அவன் கரங்களில் மாற்றி இருந்தான்.

கூடவே, அவளை தன் கைவளைவுக்குள் சுற்றி வளைத்து, கத்தியை நேராக அவளின் வயிற்றுக்கு அருகில் வைத்து அழுத்தினான்.

“இப்போ கூட சத்தமில்லாம குத்தி போட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்டி. ஆனா என் கிட்டயே சவால் விடுறீல சவாலு. பாப்போம்டி என் வெள்ளை சட்டை ஜெய்க்குதா இல்ல உன் கருப்பு கோர்ட்டு ஜெய்க்குதான்னு…” அமைதியாகவே சீறியவன், அவள் அணிந்திருந்த வக்கீல் கோர்ட்டை கோடு கிழித்தான்.

அப்போதும் சிறு அதிர்வை தவிர அவள் விழிகளில் பயம் இல்லை. அவனிடம் இருந்து விடுபட முயன்றவளுக்கு தோல்வியே கிட்ட, அவன் தான், அவளை பார்த்தபடியே அவளின் சுண்டு விரலில் லேசாக கீறினான்.

“சுண்டு விரலை கூட தொட முடியாதோ இப்போ ரத்தமே வர வச்சுட்டேன்…” என்ற ஆணவம் அவனிடம் தெறிக்க வெற்றிப் புன்னகை சிந்தினான்.

வலியில் கையைப் பிடித்துக் கொண்டு அவனை தீயாக முறைத்தபடி நகர போனவள், அவன் கண்ணிமைக்கும் நேரம், அவன் கையில் இருந்த கத்தியைக் கொண்டே அவனின் மணிக்கட்டை பதம் பார்த்தாள்.

“ஏய்…” என ஜிஷ்ணு பல்லைக் கடிக்க, அவளோ அவனிடம் இருந்து கடன் வாங்கிய வெற்றிப் புன்னகையை உதட்டில் ஏற்றி,

“இந்த வக்கீல் வசுந்தராகிட்ட மோதாதீங்க அரசியல்வாதி அடியாளே… எனக்கு சுண்டு விரல் போனா உனக்கு கையே போகணும்…” என கர்வத்துடன் நிற்க, ஜிஷ்ணு அவள் கழுத்தில் கத்தியை வைத்திருந்தான்.

“எனக்கு கை போனா உனக்கு உயிரே போகனும் டி…” என்று வெறுப்பை உமிழ்ந்தவனை அவளும் வெறுப்புடன் நோக்கினாள்.

அத்தியாயங்கள் விரைவில்…
டின் பீர் வெடி…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
4
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments