Loading

  இரவின் பிடியில் இருவரும்  அண்ணனும் தம்பியும் இருந்தார்கள். தன் மீது ஏதோ பாரத்தை உணர்ந்த தேவ் மெதுவாக கண் முழிக்க, தன்னுடைய அருமை தம்பிதான் தன் மீது காலையும் கையும் போட்டுக்கொண்டும், தூக்கத்திலும் தன்னுடைய அண்ணனை பிரியமாட்டேன் என்பது போல , தன்னுடைய அண்ணனுடைய கையை இறுக்கமாக பிடித்துக்கொண்டு இருந்தான். 

           அவனுடைய கையையும் , காலையும் தன் மீது இருந்து எடுத்து மெதுவாக கீழே பெட்டில் வைத்து விட்டு மீண்டும் உறங்க ஆரம்பித்தான். தன்னுடைய கையை பிடித்து இருந்த அவனின் கையை மட்டும் விலக்காமல் அப்படியே விட்டுவிட்டான். 

        “ஆ, அண்ணா!” என்று கத்தியபடி அலறி எழுந்தான் . 

       தேவ் , வேகமாக எழுந்து லைட் போட்டுவிட்டு அவனின் முதுகை ஆதரவாக தட்டி கொடுத்து விட்டு , அவனுக்கு தண்ணீர் எடுத்து கொடுத்தான். 

        தண்ணீர் டம்ளரை வாங்கியவனின் கைகள் நடுங்க , அப்படியே தண்ணீர் டம்ளரை கீழே விட்டான். 

      வேகமாக கீழே விழுந்த டம்ளரை பிடித்தான் தேவ். அவன் வேகமாக பிடித்தும் தண்ணீர் சிறிது கீழே கொட்டி விட்டது.  

     “என்ன டா’ புஜ்ஜி ? என்ன ஆச்சு? மறுபடியும் வேறு டம்ளரில் தண்ணீர் ஊற்றி தன்னுடைய தம்பியை குடிக்க வைத்தான். அவன் குடித்து முடித்ததும் டம்ளரை டேபில் மீது வைத்துவிட்டு , அவனை தலையை தன்னுடைய தோளிலே சாய்த்துக் கொண்டு , அவனுடைய தலையை மென்மையாக வருடி கொடுத்தான். 

         தன்னுடைய தாய் தந்தை இருவரும் சொந்த ஊரில் உள்ள பிசினெஸ்களை பார்த்துக்கொள்ள வே நேரம் போதவில்லை. அவர்களுடைய கம்பெனியின் கிளை ஒன்று சென்னையில் இருந்தது.

        தங்களுடைய அனைத்து கம்பெனிகளையும் தன்னுடைய கண் அசைவில் வைத்து ரன் செய்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய தம்பிக்காக இந்த சென்னையில் இப்பொழுது வந்து இருக்கிறான். தன்னுடைய தம்பியை செல்லமாக ”புஜ்ஜி” என்றே அழைப்பான். 

       புஜ்ஜி ,சொந்த ஊரிலே டாக்டர் (எம்.பி.பி.எஸ்) படித்து விட்டு , எம்.டி படிக்க சென்னைக்கு வந்தான். சென்னையில் ஒரு பிரபளமான தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்ந்தான். 

        இருவரும் இதுவரை அதிகமாக பிரிந்து இருந்தது இல்லை. அதனால் இருவரும் முடிவு எடுத்து சொந்த ஊரில் இருந்த பிசினெஸ் எல்லாம் தன்னுடைய பெற்றோரை பார்த்துக்க சொல்லிவிட்டு , சென்னையிலே ஒரு வீடு வாங்கி , அந்த வீட்டிலே இருவரும் இருக்கிறார்கள். 

         தேவ்க்கு எப்பொழுதும் தன்னுடைய தம்பி ஒரு குழந்தை தான். 

தேவ்க்கு சிலம்பம் , கராத்தே , வாள்வீச்சு போன்றவற்றில் எல்லாம் ஆர்வம் அதிகம் . அதனாலே அதை எல்லாம் விரும்பி கற்றுக் கொண்டான்.

ஓட்டப் பந்தயம் நடந்தால் அதில் கலந்துக்கொண்டு தன்னுடைய திறமை எவ்வளவு உள்ளது என்று அவனே அறிந்துக் கொள்வான். அதற்காகவே அடிக்கடி ஓட்டப் பந்தயத்தில் கலந்துக் கொள்வான். ஆனால் யாருக்கும் இன்டர்வியு எல்லாம் கொடுக்க மாட்டான். ஓடும் போதும் , கோப்பையை வாங்கும் போதும் எடுக்கும் புகைப்படங்கள் மட்டும் தான் மறுநாள் செய்தித்தாளில் வரும். 

       புஜ்ஜியோ வளர்ந்த குழந்தை. நல்ல அறிவு , நல்ல படிப்பு இருந்த போதிலும் அவனை சுலபமாக ஏமாற்றி விடலாம். அவனுக்கு இளகிய மனது! அவனுடைய நண்பர்கள் சிலர் அவனின் இளகிய மனதை பயன்படுத்தி அவனிடம் ஏமாற்றி கொண்டே இருப்பார்கள்.   

           சில வருடங்களுக்கு முன்பே தன்னை பற்றியும் தன்னுடைய நண்பர்களை பற்றியும் புரிந்துக் கொண்டான். தன்னை சுற்றி இருக்கும் இத்தனை நண்பர்களில் ஒருவன் கூட என்னுடைய நட்புக்காக என்னிடம் பழகவில்லையா? என்னிடம் உள்ள பணத்திற்காக தான் என்னிடம் பழகினார்களா? அப்போ’ அவர்களுக்கு நான் தேவை இல்லை! என்னுடைய நட்பு தேவை இல்லை! என்னுடைய பணம் மட்டும் தான் தேவை! இவற்றை எல்லாம் நினைத்து…. நினைத்து பல நாட்கள் வருத்தப்பட்டு இருக்கின்றான் . யாரிடமும் சண்டை போடாமல் அங்க இருந்து கிளம்பிவிட்டான். அதே கல்லூரியில் மீண்டும் படித்தால் பழைய நியாபகங்கள் எல்லாம் மீண்டும்… மீண்டும் வந்து என்னை வருத்தப்பட வைக்கும் என்று நினைத்து தான் எம்.டியை அங்கு படிக்காமல் சென்னையில் வந்து படிக்கிறான்.  

        தேவ், தன்னுடைய தம்பியை குழந்தை என்று நினைத்து , அவனை தன்னுடைய மடியில் கிடத்தி தூங்க வைத்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய தம்பியின்  முதுகை  தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனும் உறங்கி போய் இருந்தான் .உட்கார்ந்த நிலையிலேயே ‘ 

          விடிவதற்குள் இரண்டு …. மூன்று முறை அலறி அடித்து கொண்டு எழுந்தான். புஜ்ஜி எழும்போது எல்லாம் அவனுக்கு தாயாக மாறி , அவனுக்கு ஆறுதல் அளித்துக் கொண்டு இருந்தான். 

          சூரியனின் ஒளி கண்ணை பறிக்க , அது வரை இமை மூடாது இருந்தவன் , மெதுவாக புஜ்ஜியை விட்டு விலகி சென்று , அவனுக்கு தேவையான காலை உணவுகளை செய்ய ஆரம்பித்தான். 

          தன்னுடைய தம்பிக்கு பிடித்த காலை உணவுகளை செய்துவிட்டு , குளிக்க சென்றான். சிறிது நேரத்தில் குளித்து முடித்துவிட்டு வந்தவன் ,பூஜை அறைக்கு சென்று கடவுளை வணங்கி “தன்னுடைய தம்பிக்காக கடவுளிடம் வேண்டுதல் ஒன்றை வைத்துவிட்டு , பூஜை அறையை விட்டு வெளியே வந்தான்”. 

       ஹாலில் இருந்த ஷோபாவில் உட்கார்ந்துக் கொண்டு தன்னுடைய அலுவலக ஃபைல்களை பார்த்துக்கொண்டு இருந்தான். தன்னுடைய பி.ஏவிற்கு அழைப்பு விடுத்து “இன்று என்னால் அலுவலகம் வர முடியாது! எதாவது இம்ப்பார்ட்டன் என்றால்? எனக்கு போன் செய்யுங்கள்!” என்று கூறி தன்னுடைய போன் அழைப்பை கட் செய்துவிட்டு மீண்டும்  ஃபைல்களில்  தன்னுடைய கவனத்தை புதைத்தான். 

          மெதுவாக கண்களை திறந்தவன், சுற்றும் முற்றும் கண்களை மெதுவாக சுழல விட்டான். தலையில் வலி ஒன்று தோன்ற , தனது இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்தான். மெதுவாக வாஷ் ரூம் சென்று வந்தவன் மீண்டும் “தொப்” என்று கட்டிலில் அமர்ந்தான்.சிறிது நேரத்தில் தேவ் கையில் சூடான சுக்கு காபி போட்டுக்கொண்டு வந்து கொடுத்தான். கூடவே தலைவலி மாத்திரையும் கொடுத்து புஜ்ஜியை சாப்பிட சொன்னான். 

       தன்னுடைய அண்ணன் கொடுத்ததை மறுக்காமல் வாங்கியவன் தன்னுடைய அண்ணனை பெருமையுடன் பார்த்துக்கொண்டே “அவன் கொடுத்த மாத்திரையை போட்டுக் கொண்டு , காபியையும் குடித்தான்”. 

         அவனுடைய பார்வையை உணர்ந்தவன் “என்னடா? என்னையே பார்த்துக்கொண்டு இருக்க? வேற ஏதாவது வேண்டுமா டா?”

      எப்படி அண்ணே! எனக்கு தேவையானதை இப்படி பார்த்து…. பார்த்து செய்யுற? இப்ப கூட நான் உன்கிட்ட எனக்கு தலை வலிக்கிறது என்று சொல்லாமலே “நீயே எனக்கு மாத்திரை கொண்டு வந்து கொடுத்த?”

        தேவ் , சிரித்துக்கொண்டே “நீ எழும் போதே நான் பார்த்துவிட்டேன் டா” 

           அப்போ’ எப்ப பாரு என்னுடைய நினைப்பாகவே இருக்கியா அண்ணா?

      தன்னுடைய பார்த்து “நீ என்னுடைய குழந்தை டா! உனக்கு தான் டா எப்பவும் என்னிடம் முதல் இடம் “

         உனக்கு கல்யாணம் ஆனாலும் நான் தான் உனக்கு பர்ஸ்ட் “ஆ”  அண்ணா!

        எனக்கு எப்பவும் நீ தான் டா பர்ஸ்ட்! போதுமா? 

       தன்னுடைய தமையனின்  வயிற்றிலே முகத்தை புதைத்துக் கொண்டு “லவ் யு அண்ணா” 

      அவனின் தலைமுடியை ஆதரவாக வருடிவிட்டு “நீ நல்லா ரெஸ்ட் எடு , எதாவது வேண்டும் என்றால் என்னை கூப்பிடு “நான் ஹாலில் தான் இருக்கேன். 

        சரி என்று தலையை வலதுபுறமாக அசைத்தான். 

        மறுபடியும் ஹாலில் வந்து தன்னுடைய ஆபிஸ் பைல்களை பார்க்க ஆரம்பித்தான்.   

🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

      “ஹலோ” மிஸ் வதனி…. ஹலோ!!…. ஹலோ!!! மிஸ் வதனி… வதனி  “என்ன இந்த பெண் கூப்பிட…. கூப்பிட திரும்பிக் கூட பார்க்காமல் போய்க் கொண்டே இருக்காள்? “.

          இவளை எப்படி தான் அவளிடம் பேசுவது ? தனக்குள் புலம்பிக் கொண்டே அவளின் பின்னே சென்றான் பாபு. 

       பாபு , அவள் வேலை செய்யும் அதே அலுவலகத்தில் வேறொரு டீம்ல் வேலைச் செய்கின்றான். 

      இன்றும் அவள் தன்னை திரும்பிக்கூட பார்க்காமல் போனதை நினைத்து மிகவும் வருத்தத்துடன் சென்று தனது நாற்காலியில் உட்கார்ந்தான் . 

        பாபுவின் பின்னே சில அடி தூரம் இடைவெளி விட்டு நடந்து வந்தான் மித்ரன். சோகமான முகத்துடன் உட்கார்ந்துக் கொண்டு இருக்கும் பாபுவின் அருகில் சென்று , “ஹாய்” ஐயம் மித்ரன் .புதியதாக இந்த அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கின்றேன். 

       மரியாதை நிமிர்த்தமாக பாபு எழுந்து நின்று “ஹாய் சார்! ஐயம் பாபு”

     உட்காருங்க பாபு’ எழுந்து எல்லாம் நிற்க வேண்டாம். மரியாதை மனதில் இருந்தால் போதும்.

       சார், நீங்க குருப் லீடர் . நான் குருப் மெம்பர். நான் எப்படி உங்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துக் கொள்வது?

        மித்ரன், அங்கு இருந்த மற்றொரு நாற்காலியை எடுத்து பாபுவின் அருகில் போட்டுக்கொண்டு , பாபுவை அவனுடைய இருக்கையில் உட்காரவைத்து விட்டு , தானும் இருக்கையில் உட்கார்ந்து பாபுவை பார்த்து சினேகமாக புன்னகை செய்தான். 

        பாபுவும் பதிலுக்கு சினேகமாக புன்னகை செய்தான். 

      என்ன ஆச்சு பாபு? ஏன் உங்க முகம் சோகமாக இருக்கிறது? ஏதாவது பிரச்சனையா ?

       அது வந்து …. சார் என்று பாபு இழுக்க ,

       என்ன பிரச்சனை என்று ஏதாவது சொன்னால் தானே தெரியும்! அப்பொழுது தானே உதவி செய்ய முடியும்.

        சற்று தயங்கி பின், நான் வதனியிடம் பேசவேண்டும் என்று முயற்ச்சி செய்துக்கொண்டு இருக்கின்றேன் . ஆனால் என்னுடைய முயற்ச்சி எல்லாம் தோல்வியிலே போய் முடிகிறது. 

      நீங்க எதற்காக மிஸ் வதனிடம் போய் பேசவேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? 

         இந்த அலுவலகத்தில் இருக்கும் எல்லோரும் அனைவருடனும் சகஜமாக பேசி பழகுவார்கள். ஆனா இதில் வதனி மட்டும் விதிவிலக்கு. அவளுடைய டீம் மெம்பர்ஸ் கிட்ட மட்டும் தான் பேசுவாள் . அதுவும் ஒன்று இரண்டு வார்த்தை மட்டும். எம்.டி கிட்டவும் அதே மாதிரிதான் ஒரு வார்த்தை இல்லை என்றால் இரண்டு வார்த்தை. இந்த அலுவலகத்திற்கு வந்து சில மாதங்கள் தான் ஆகிறது. எப்பவும் எதையோ இழந்த மாதிரி , சரியாக சொல்லவேண்டும் என்றால் நடை பிணம் போல் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.

        மித்ரன், நீங்க மிஸ் வதனியை காதலிக்கிறீர்களா ? 

      என்னது ? நானா? அதிர்ச்சியோடு மித்ரனை பார்த்து பாபு கேட்க. 

       மித்ரனும் அவனையே தான் கேள்வி பார்வையுடன் பார்த்துக்கொண்டு இருந்தான். 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்