Loading

குளிர் ஊசி – 6 ❄️

“ஆஆ….. அம்மா ….. “

“ஏய் சீட்டு தான இடிச்சது எதுக்கு இவ்ளோ கத்துற? ” சரண் அவளின் அலறலில் பரபரத்து விட்டான்.

பின்னிருந்து தோளைச் சுரண்டிய மாயா, ” இப்படிலாம் இங்க கத்த கூடாது. புரியுதா…..” என்று பாவமாக கேட்டாள்.

அதன் பின்பே தான் கத்தியது அவ்வளவு தூரம் ஒலி எழுப்பி இருக்கிறது என்று புரிந்து “கொஞ்சம் ஓவரா போய்டோமோ ? ” …. என்று வினவ,

“ரொம்ப ” என்று லாரா பதில் மொழிய, “ஹேய் நீ தமிழ் படம்லாம் பாப்பீயா? ” ஆச்சர்யமாக கேட்டாள் ஜனனி.

“தமிழ் பேசுறதே அதனால தான் ” சிரித்துக் கொண்டே கூறினாள்.

இதற்கு மேல் இருந்தால் மித்ரன் கோபப்படுவான் என்றும், ஜனனி பேசிக் கொண்டே இருப்பாள் என்று சரண் தான் “வெல்கம் டூ மை ஹோம் பம்கின் ” என்று கூறி வெளியில் இறங்கினான்.

அதன் பின்பே அனைவரின் பேச்சும் நின்று மூவரும் கீழே இறங்கினர். டிக்கியைத் திறந்து பொருட்களை எடுக்க, ஜனனி சார்லி , மித்ரன் மற்றும் லாரா மூவருக்கும் பொதுப்படையாக கூறி விடைபெற்றுக் கொண்டாள்.

லாராவும் அங்கேயே விடைபெற்றுக் கொள்ள, சார்லி மற்றும் மித்ரன் காரை பார்க் செய்து விட்டு சரண் மற்றும் மாயா குடி கொண்டிருக்கும் வீட்டிற்கு எதிரில் உள்ள அப்பார்டமெண்டிற்குள் நுழைந்தனர்.

முன்பு இருந்த குறும்பும், குழந்தை தனமும் காணாமல் போகி இருந்தது இருவருக்கும். அமைதியாக இருவரும் உள்ளே நுழைய சார்லி தன்னை சுத்தபடுத்தி கொள்ள அவனின் அறைக்கு சென்று விட்டு , ஹாலிற்கு அரை மணி நேரம் கழித்து வந்தான்.

சென்ற போது இருந்த தோரணையிலேயே இருந்தான் மித்ரன். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் இருக்கும் ஆளுயுரக் போட்டோவா வீற்றிருப்பத்தையே கண்ணெடுக்காமல்  பார்த்துக் கொண்டிருந்தான்.

பெருமூச்சு விட்டு, தனது தலையை இடவலமாக அசைத்துக் கொண்டே மித்ரனின் அருகில் நின்று சார்லியும் அப்போட்டோவைக் கண்டான்.

அதில் ஒரு வயதானவர் கம்பீரமாக நின்றுக் கொண்டிருந்தார். அவரது தோரணையில் கம்பீரம் நிறைந்து வயது குறைந்து இருந்தது. அவரின் அருகில் பெண்மைக்கு இலக்கணமாக நின்று கொண்டிருந்தார் ஒரு பெண்மணி.

அப்பெண்னின் இரு பக்கவாட்டிலும்  இருவர் நின்றுக் கொண்டிருந்தனர். அக்கம்பீர மனிதனின் கால் பக்கத்தில் ஒரு ஆங்கில சிறுவன் கையில் விரலை சப்பிக் கொண்டு, கசங்கிய ஆடைகளை போட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அதனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்த இருவரின் பின் இருந்து “ச்சீ…….”என்ற ஒலி எழுப்பியதில் பயந்து இருவரும் திரும்பி பார்க்க, அங்கிருப்பவனைக் கண்டு அதிர்ந்தனர்.

அதே சமயத்தில் , சரண் தலையை கையில் வைத்துக் கொண்டு ஹால் சோபாவில் அமர்ந்திருந்தான். இறங்கியவுடன் வெளியில் பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மாயா , வீட்டை அடைந்த பொழுது அவரை வரவேற்றது சரணின் இவ்வதாரத்தைத் தான்.

அதில் புருவம் சுருக்கி சரணின் அருகில் சென்று அவனின் தோளைச் சுரண்ட , சரண் அரண்டு கத்தி விட்டான். அதில் மாயாவும் கத்தி விட்டாள்.
உள்ளிருந்து வெளியில் வந்த ஜனனி , சரணுடன் மாயாவையும் திட்டி விட்டு உள்ளே சென்றாள்.

அவள் ஏப்ரான் அணிந்து கிட்சனுக்குள் நுழைவதைக் கண்டு திடுக்கிட்டு மாயாவும் சமையலறைக்கு சென்று எட்டிப் பார்க்க, ஜனனி ஸ்டவ்வை பற்ற வைக்க தெரியாமல் இருப்பது சாதாரணம், லைட்டர் எதுவென்று தெரியாமல் இருப்பதே அசாதாரணம் என்று நினைக்கும் பொருட்டு ஜனனி தன் கண்முன் இருக்கும் லைட்டரை விட்டு சுற்றி தேடிக் கொண்டிருந்தாள்.

அதை கண்டு ஆச்சர்ய படாமல் “ஹப்பாடா ” என்று வாய் அசைத்து விட்டு சத்தமில்லாமல்  வெளியேறிவள்  போய் நின்றாள் தன் கணவனின் முன் .

சரணிடம் ஒன்னும் ஆகாது விடுடா என்று கூறி அவனின் அருகில் அமர்ந்து நெட்ஃபிளிக்ஸில் சீரியஸ் பார்க்க தொடங்கினாள் அதுவும் வாங்கி வந்த சிப்ஸை எடுத்துக் கொண்டு. புரிந்தும் புரியாமலும் சரணும் சேர்ந்துக் கொண்டான்.

கதையின் வீரியம் அதிகமாக அதிகமாக அசையாமல் நேரம் போவது தெரியாமல் இருவரும் பார்த்துக் கொண்டிருக்க , சிப்ஸில் இன்னொரு கையும் உள்ளே நுழைந்தது. அதை முதலில் கண்டு கொண்ட சரண் ஜனனியின் கையில் அடித்தான். ஆனால், அவளோ “ச்ச….. ” என்று கூறி அவள் பாட்டிற்கு படத்தை ரசித்துக் கொண்டிருந்தாள்.

நேரம் நேரம் செல்ல செல்ல, கதையின் இறுதியில் பயம் தொற்றி சரணை இடித்துத் தள்ளி மாயா மற்றும் சரணிற்கு இடையில் அமர்ந்து கால்களை மடிக்கி கைகளால் முட்டுகையிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

முகத்தை சரணின் புறம் திரும்பி வாயைப் பிளக்க , சரண் “என் தலையெழுத்து ” என்று கூறி அவளுக்கு சிப்ஸை ஊட்டிக் கொண்டிருந்தான்.

படம் முடிந்த பின்பே திரும்பி பார்த்த மாயா, ஜனனியும் அமர்ந்திருப்பதைக் கண்டு “என்ன ஜனனி இவ்வளவு சீக்கிரம் சமைச்சுட்டியா ? வாவ் யூ ஆர் ரியலி கிரேட் “என்று கூறி அவள் எழ , சிறிதும் அசைந்து கொடுக்காமல் “சமைக்க தான் போனேன் பட் இங்க இருக்கிற ஸ்டவ் யூஸ் பண்ணத் தெரில. அதான் பண்ணல ” என்று இறுதி வார்த்தையை வாயிலேயே முழுங்கினாள்.

“ஆன் பண்ணத் தெரியலைனா என்னையோ இவனையோ கூப்பிட்டு கேட்டா சொல்ல போறோம் “

” அதுக்கு தான் வந்தேன். படம் பார்த்துக்கிட்டு இருந்தீங்க. அதை நானும் பார்த்தேன். நல்லா இருந்துச்சு அந்த சீன். இந்த சீன் முடிச்சுட்டு கூப்பிடலாம்னு உட்காந்தேன் “

“சீன் முடிஞ்சவுடனே கூப்பிட்டிருக்காலேமே?”

“அடுத்த சீனும் நல்லா இருந்துச்சு . நான் என்ன செய்ய? “

“இப்படியே போய் படத்தையும் முடிச்சாச்சு, சிப்ஸையும் முடிச்சாச்சு ” என்று கூறி சிப்ஸ் பாக்ஸ்ஸை காண்பித்தான்.

“சரி…. இப்பவும் ஒன்னுமில்லை. நான் ஆன் பண்ணித் தரேன். நீ சமை …. “என்று கூறி மாயா கிச்சனுக்கு செல்ல போக, தடுத்து நிறுத்திய ஜனனி “அதான் லேட் ஆகிடுச்சே… வெளியிலேயே வாங்கி சாப்பிடுவோம் “

” வெளியிலேயா ? ” என்று மாயா புருவம் உயர்த்தி கேட்க,

“ஆமாம், சரண் தான் சொன்னான் ” என்று கூறி சிரித்தாள்.

“ஆனால் , நீ சமைக்க காய்கறிலாம் வெட்டி வச்சிருப்ப . அது வேஸ்ட் ஆகிடும். வா, நாங்க இரண்டு பேரும் ஹெல்ப் பண்ணுறோம் ” என்று சரணை  பார்க்க, சரணும் எழுந்துக் கொண்டான்.

ஜனனி அசையாமல் அவ்விடத்திலேயே அமர்ந்திருக்க, புருவம் இடுங்க மாயா பார்த்து விட்டு ,அவளின் அருகில் வந்து அவளின் தாடையை நிமிர்த்தி “இனிமே சமைக்க போறேனு சொன்ன அவ்ளோ தான். நாங்களே கஷ்டப்பட்டு லவ்வை பண்ணி இப்போ தான் கல்யாணம் பண்ணிருக்கோம் . நீ எங்களை கொல்ல பாக்குற “

“கொலை கேசுல உள்ள போகவும் வாய்ப்பு இருக்கு பாப்பு ” என்று சரணும் ஆமோதித்தான்.

இருவரின் சம்பாஷனைகளை கண்டு மூக்கு விடைக்க ஜனனி அமர்ந்திருக்க,

“டொய்ங் ….. ” என்று காலிங் பெல் அடித்தது .

சரணை கதவைச் சாற்றி விட்டு ஜனனியின் அருகில் வந்து அவளுக்கு பிடித்து சிக்கன் பிட்ஷா, அல்ஃரெடோ பாஸ்தா, ஹார்லிக் பிரட் ஆகியவை கடை பரப்பினான்.

அவையின் சுவையில் மெல்ல மெல்ல அவள் கோபம் குறைந்தது. இறுதியில் மூவரும் சிரித்து மகிழ்ந்து உண்டு அவரவர் அறையில் நித்திரையில் ஆழ்ந்தனர்.

ஜனனியின் ஜன்னலில் எட்டிப் பார்த்த நிலவு அவள் உறங்கி கொண்டிருப்பதைக் கண்டு புன்னகை சிந்தி விட்டு, மித்ரனின் அறையில் எட்டிப் பார்த்தது. நிலவின் வரவை எதிர்ப்பார்த்து காத்திருப்பது போல் நின்றுக் கொண்டிருந்தான். அவனைக் கண்டு வருந்திய நிலவு இருவருக்கும் பொதுவாக தென்றலை வீசியது.

அதில் மித்ரனுக்கு மனம் லேசாகுவது போன்ற பிரம்மை. ஜனனிக்கு அன்னையின் மடி போன்ற பிரம்மை.

மறுநாள் விடியல் எவ்வாறு இருக்கப் போகிறது ?

கீர்த்தி ☘️

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்