Loading

குளிர் ஊசி !❄️

எடின்பர்க் ஏர் போர்ட்டில் இறங்கியவுடன் எங்கு எவரும் வேறு மொழியில் பேசி தன்னை இன்னும் சங்கடத்தில் தள்ளுவாரோ என்ற பயமே இல்லாமல் தைரியமாக  எஸ்கலேட்டரின் வழியாக இறங்கினாள்.

“நாம புதுசா வந்திருக்கோம்னு முகமே காட்டி கொடுத்திருச்சுனா நம்மள தூக்கிட்டு போய் எங்க வேணாலும் விட்டுவிட்டு வந்துடுவாங்க “

காலகாலமாக நமது முன்னோர்கள் சொல்லிக் கொடுத்த ஞாபகம் தானாக மனதை ஆர்பாட்டம் செய்ய, தனது முகப் பாவனைகளை மாற்றிக் கொண்டு கம்பீரமாக நடந்து வந்தாள்.

தனது மனதே தனது செயலை நினைத்து குட்டி கொண்டாலும் “வேறு வழி இல்லை இப்படி தான் இருக்க வேண்டும் “மனதிற்கே அறிவுரை கூறினாள். அங்கு அனைவரும் ஆங்கில மொழி தான் பேசுவார் என்கின்ற தைரியம் வேறு இருந்தது.

ஆனால், அதை பொய்யாக்கும் பொருட்டு ஒரு ஸ்காட்டிஸ் பையன் அவளின் பெயரை தாங்கிய போர்டை  கையில் ஏந்தி அவளுக்காக காத்திருக்கொண்டிருக்க, அவனைக் கண்டு அவனின் அருகில் சென்று சிரித்துக் கொண்டே ,” ஹாய், ஐ ஆம் ஜனனி “

அவளை ஏற இறங்க பார்த்தான் அப்புதியவன். அதில் சங்கடமாக நெளிந்தவள் சட்டென்று சுதாரித்து சுற்றி இருக்கும் இடம் கருதாமல் “ஹாய், மீ ஜனனி ” அவனுக்கு ஒரு வேளை காது கேட்காதோ என்று சத்தமாக கூறினாள்.

அதில் அவன் காதை குடைந்தான். அதில் புருவம் சுருக்கி மூக்கு விடைக்க அவனை பார்த்து விட்டு , ” யூ ஆர் நாட் டெஃப் . தென் ஒய் டிட் யூ ரியாக்ட் லைக் தெட் ( நீ தான் செவிடன் இல்லையே. அப்பறம் ஏன் நீ அப்படி ரியாக்ட் செஞ்ச ?) ?” என்று கோபமாக இல்லாமல் பாவமாக கேட்டாள். அதற்கும் அவனிடம் பதில் இல்லை.

ஒரு பெருமூச்சை விட்டு தனது ஆருயிர் தோழியான மாயாவிற்கு அலைபேசியில் அழைத்தாள். அவள் எடுக்கும் நொடி வரை மனதிற்குள் திட்டுவதற்கு ஒத்திகைப் பார்த்து கொண்டாள். அவள் எடுத்த நொடி “ஏண்டி இவளே….. ” என்று தொடங்கும் முன், “வந்துட்டேன் வந்துட்டேன் “என்ற குரல் அலைபேசியினுடேயே பின் பக்கத்திலும் கேட்டது. திரும்பியவுடன் “வெல்கம் மச்சான்” என்று மாயா கூறி அணைக்க வர, ஜனனி மாயாவின் தலையில் நங்கென்று கொட்டினாள்.

அதில் கண் கலங்கி, ஒரு நொடிக்கு அவளின் உடல் அதிர்ந்தது. தன்னை நிலைப்படுத்தவே நேரம் எடுத்தது. அதற்குள் அந்த ஸ்காட்டிஸ்  காளை ” மேஜிக் , ஆர் யூ ஓகே ? ” என்று கூறி, மாயாவின் தலையை வருடினான்.

அதன் பின்பே மாயாவிற்கு சுயநினைவு வந்து “ஏன் மச்சான் அடிச்ச? ” என்று பாவமாக கேட்டாள். ஜனனி ஏற இறங்க மூச்சு வாங்கி கொண்டு “பின்ன , இந்த லூசுப்பையனுக்கு போர்ட்டு கொடுத்தியே? அவனுக்கு வாசிக்க தெரியுமானு கேட்டீயா ? அது கூட வேணாம், ஒருத்தன் பேசுனா திரும்ப பேசனும்னு கூட தெரியலை. இவனலாம் எதுக்கு வேலைக்கு வச்சிருக்க ? தூக்குடி மொத “என்று அவள் பாட்டிற்கு கூறிக் கொண்டே போக, மாயா காதில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு யாரிடுமோ பேசிக் கொண்டிருந்தாள்.

திரும்பி பார்த்த ஜனனி, “ச்சை…. தனியாவா பேசிக்கிட்டு இருந்தோம். இந்த ஊரு நம்மள என்ன நினைச்சிருக்கும் ” என்று அவளுக்கு அவளே கேள்வி கேட்டு கொண்டாள். தனியாக பேசியதை மற்றவர்கள் தப்பாக நினைத்திருப்பார்களோ என்று நினைத்தையும் வாய்விட்டு அவளே பேசிக் கொண்டதை வினோதமாக பார்த்தான் அந்த காளை.

பேசிக் கொண்டே வலது புறம் தலையை மட்டும் திருப்பியவள் தோள்பட்டையில் தனது தாடையை ஒட்டி வைத்து, கண்களை சுருக்கி வலப் புருவத்தை ஏற்றி அவனை கண்களாலேயே  பஸ்பம் ஆக்குவது போல் பார்த்தாள்.

“எவ்ளோ பாத்தாலும் அவன் எரிஞ்சுர மாட்டான் பம்கின் ” என்று தலையில் அடித்தான் மாயாவின் கணவனும், ஜனனியின் தோழான சரண்.

அவள் வெடுக்கென்று அவனின் கையை தள்ளி விட்டு, கொணட்டி கொண்டு திரும்பி கொண்டாள். சரண் சிரித்துக் கொண்டே அவளின் அருகில் வந்து இடித்துக் கொண்டே நிற்க, இவள் தள்ளி கொண்டே போக, ஒரு நேரத்தில் ஜனனி அவளின் உயரத்தை விட இரண்டு அடி அதிகமாக இருக்கும் தனது நண்பனை எக்கி அவனின் முடியை பிடிக்க முயற்சித்தாள்.

அதைப் புரிந்துக் கொண்டு, இவனும் தலையை எக்கி அவளுக்கு போக்கு காண்பித்து கொண்டிருந்தான். அதில் இன்னும் சிறிதளவு கோபம் அதிகரிக்க, அவனின் கையில் தனது கூர் நகங்களால் கீறி எடுத்தாள். அதில் துடிக்க, இதை அனைத்தும் மேட்ச் நடப்பது போல், கையில் ஸ்டார்பக்ஸ் கப்பசினோவை (Capuccino) குடித்து கொண்டே பார்த்துக் கொண்டிருந்தாள்.

இதனைக் கண்ட பொங்கி எழுந்து, வேண்டுமென்றே மாயாவின் அருகில் செல்ல, இதைப் புரியாத ஜனனி அவனை அடிக்கும் நோக்கமே இருக்க , அவன் இழுத்த இழுப்பிற்கு சென்றுக் கொண்டிருந்தாள். ஆனால், மாயா மனைவி அல்லவா? அதனால், சரியாக அவன் நெருங்கும் சமயம் நகர, சரண் மாயாவின் காலடியில்  கிடக்க, அவனின் மேல் கால் இடறி ஜனனி விழுந்தாள்.

இதைக் கண்டு சிரித்த மாயா, அவர்கள் நிமிரும் நேரம், தன் முன் நெற்றி முடிக்கற்றை ஊதினாள்.

சுற்றியிருந்தவர்கள் அனைவருக்கும் இவர்கள் காட்சி பொருளாக மாறினர். ஆனால், இதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் மூவரும் அவர்களின் உலகில் சஞ்சரித்து கொண்டிருந்தனர்.

குசலம் விசாரிப்பில் இருந்து எதிர்வீட்டி குமரசேன் கள்ளக் காதல் வரை பேசிக்கொண்டிருந்தனர்.

அந்த ஸ்காட்டிஸ் பையன் மனதில் என்ன நினைக்கிறான்  என்பதை பிரதிப்பலிக்காதவாறு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான் இவர்களின் சம்பாஷணைகளை.

பின்பு, இவர்கள் பேச்சில் ஈடுபடாமல் சுற்றிலும் தன் கண்களை சூழல விட்டான். அங்கு ஒரு பிரிட்டானிய பெண்மணி வந்துக் கொண்டிருந்தாள். அதில் சின்ன கீற்றாக புன்னகை எழ, அதோடு ஆர்வமும் தொற்றிக் கொள்ள அவளின் அருகில் செல்வதற்கு எழ , தனது கண்ணாடியை கழற்றி கொண்டு புருவ முடிச்சோடு அந்த  பெண்மணியை தாண்டி ஸ்காட்டிஸ் பையனின் அருகில் வந்தான் ஒருவன்.

அதில் மனதில் பறந்த றெக்கைகள் அனைத்தும் ஒடுங்கியது. எரிச்சல் மேலோங்க, இவர்கள் மூவரின் செயல் இன்னும்  எரிச்சலை உண்டாக்கியது. அதோடு வந்தவள் ஹலோ மிஸ்டர் ராக்கி ! ஹவ் ஆர் யூ சார்? என்று  அவள் கேட்டவுடன்,

“வெரி பேட் லாரா . தென் வாட் வில் யூ டூ ஃவார் மேகிங் மை மொமண்ட் டு பி  குட்? ” ( நல்லா இல்லை. அதனால், நான் நன்றாக இருக்க என்ன செய்வாய் ? ) என்று அவன் எகத்தாளமாக கேட்க,

“ஹம்ம்….. டு பி குட், ஸ்டடி வெல் ” ( நல்லா இருக்க , நீ நல்லா படிக்கணும்) என்று லாரா பதில் கூறுவதற்கு முன் , அப்புதியவன் பதில் கூறினான்.இதில் விழி பிதுங்கி நின்றாள் லாரா.

இங்கு மூவரின் சம்பாஷனைகள் கடுமையாகவும் , தீவிரமாக இருக்க, அதற்கு நேர் எதிரில் கலகலப்பும், தித்திப்பும் நிறைந்து இருந்தது. இவர்கள் அறுவரும் ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை.

பார்க்கும் சமயம் எவ்வாறு இருக்கும்?

கீர்த்தி ☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்