Loading

தேசம் 13

 

வெளியில் சென்றவனை எதிர்பார்த்து வெகுநேரமாக வாசலில் அமர்ந்திருந்தாள் பிரார்த்தனா. நேரம் கடந்ததே தவிர அவன் வரவில்லை. அவசரப்பட்டு விட்டோமோ என்ற ஆதங்கத்தோடு இருந்தவளை தூக்கம் மெல்ல ஆட்கொள்ள ஆரம்பித்தது. அறைக்கு சென்று படுக்க விருப்பம் இல்லாது அப்படியே தன் கால் முட்டியில் முகம் வைத்து உறங்கினாள். 

 

நள்ளிரவு நேரம் என்பதற்கு பொருத்தமாக இருட்டில் கேட்டது ரீங்கார சத்தங்கள். எங்கும் நிசப்தமான இரவு. சில்லென்ற காற்று மேனியை தழுவிய படி விளையாடிக் கொண்டிருந்தது. இவைகளுக்கு மத்தியில் கொசுக்களும் பிரார்த்தனாவை தொட்டு ரசிக்க, எங்கே இருக்கிறோம் என்பதை மறந்து துயில் கொள்கிறாள் சின்னவள். 

 

 

காற்றுக்கு கேட்டது அந்த காலடி சத்தம். மெல்ல நடக்கிறான் என்றாலும் அழுத்தமாக நடக்கிறான். ஷூ கால்கள் திடமாக இருப்பதால் சிறு புல்வெளி நொந்து போனது. முழுவதும் கருப்பு உடையில் தன்னை மறைத்துக் கொண்டு நின்றவன் எதிரில் அமர்ந்த நிலையில் பிரார்த்தனா. 

 

வழக்கமாக குரோதத்தோடு பார்க்கும் அந்த விழியில் இன்றும் குரோதம். சுற்றும் முற்றும் ஆராய்ந்த அந்த கருப்பு உருவம் அவள் அருகில் அமர்ந்து கையை சீண்டியது. தூக்கத்தில் இரண்டு முறை தட்டி விட்டவள் மூன்றாவது முறை தலை உயர்த்தி, “ஆஆஆஆஆஹாஆஹாஆஆஆ…” கூச்சலிட்டாள். 

 

அவள் வாயை மூடிய அந்த உருவம், “என்கிட்ட இருந்து தப்பிச்சு புருஷன் கூட நிம்மதியா வாழலாம்னு பார்த்தியா. அது ஒரு காலமும் நடக்காது. உன் கண்ணு முன்னாடி அவன கொன்னுட்டு போக வந்திருக்கேன்.” என்றதோடு அவளை அள்ளி தோளில் போட்டது.

 

சத்தம் கொடுக்க முடியாத நிலையில் தன் கைகளால் எதிர்ப்பு தெரிவிக்க, உள்ளிருக்கும் சோபாவில் தூக்கி போட்டு கழுத்தை நெறித்தது. தப்பிப்பதற்காக பல முயற்சிகளை செய்தவள் முகமூடியை பிடித்து விட்டாள்.

 

அதுவரை கொடுத்த அழுத்தத்தை விட அதிக அழுத்தம் கொடுத்தது அந்த உருவம். அதில் அவள் கைகள் பெரும் சேதாரத்தை சந்தித்து சோர்வை தத்தெடுக்க, அந்த உருவம் கை கால்களை கட்டியது. மங்கலான இரவு வெளிச்சத்தில் நிற்கும் அந்த உருவத்தை கண்டு அஞ்சி நடுங்கியவள் விடும்படி தலையாட்ட,

 

“எங்க உன் புருஷன்?” கணீர் குரல் வீட்டை அலற விட்டது.

 

“அவனுக்கு எவ்ளோ தைரியம் இருத்தா நான் சொன்னதை மதிக்காம உன் கூட சந்தோசமா வாழுவான்.” என்றதும் பிரார்த்தனா குழப்பமாக நோக்கினாள்.

 

“என்ன பார்க்குற? உன்ன டார்ச்சர் பண்ண சொல்லி சொன்னேன். செய்யலன்னா உயிரோட இருக்க மாட்டான்னு வார்னிங் கொடுத்தேன். என் மனைவிய ஒன்னும் செஞ்சிடாத நீ சொல்ற எல்லாத்தையும் செய்றன்னு சொல்லிட்டு எனக்கே தெரியாம உன்ன இங்க கூட்டிட்டு வந்துட்டான்.” 

 

 

கருப்பு உருவம் சொன்னதை கேட்டவள் முற்றிலும் நொருங்கி போனாள். இவன் சொல்லித்தான் இதையெல்லாம் தன்னவன் செய்தானா? எந்த தவறும் செய்யாதவனை நம்பாமல் நோகடித்து விட்டேனே. மனம் உடைந்து காலடியில் விழுந்தவன் மனம் எவ்வளவு வலித்திருக்கும். 

 

“ஏய்! அவனை கொன்னு உனக்கு தண்டனை கொடுக்கவா? இல்ல உன்ன அவன் கண்ணு முன்னாடி கொன்னு அவனுக்கு தண்டனை கொடுக்கவா.”

 

‘அவர விட்டுடு ப்ளீஸ்’ என்ற உணர்வை புரிந்து கொண்ட அந்த உருவம் வீடு முழுவதும் சரவணப் பொய்கையை தேடி வந்து. எங்கும் கிடைக்காமல் கையில் இருக்கும் கத்தியை எடுத்து விசினான் அங்கே இருக்கும் அவன் புகைப்படத்தில். 

 

அவை சரியாக சரவணப் பொய்கை கழுத்தில் சொருகி நின்றது. அச்செயலை பார்த்ததும் கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டவள் கத்த முடியாமல் கதறி அழுதாள்.

 

“உஷ்ஷ்ஷ்!” என வாயில் விரல் வைத்து நிறுத்த உத்தரவிட்டவன்,

 

“பார்க்க பயமா இருந்தா கண்ண மூடிக்க. சத்தமே இல்லாம வந்த வேலையை முடிச்சிட்டு கிளம்பிடுவேன்.” என்றான்.

 

 

‘அவர விட்டுடு’ கண்ணால் சைகை செய்து பாவமாக தலையாட்ட, மறைத்து வைத்திருந்த இன்னொரு கத்தியை எடுத்து அவள் கழுத்தில் வைத்தான்.

 

தலையாட்டியதை நிறுத்தியவள் கீழ்க்கண்ணால் கத்தி இருக்கும் இடத்தை பார்க்க, “அவன விடனும்னா நீ சாகணும்.” என்றிட, பதில் சொல்ல முடியாமல் பயத்தில் வெடவெடத்து போனாள். 

 

 

கத்தியை அப்படியே மேலெடுத்து வந்தவன் கண் இமையில் வைத்து, “நீயா அவனா?” என புருவத்தை நோக்கி தட்டினான். 

 

உச்சகட்ட பயத்தில் கண்கள் தானாக மூடிக் கொள்ள அடுத்து அவள் திறக்கும் பொழுது முழு இருட்டாக இருந்தது. முதலில் புரியாமல் மிரண்டவள் புரிந்து கொண்டாள் கண் கட்டி இருப்பதை. பக்கத்தில் அந்த உருவத்தின் மூச்சுக்காற்று மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என்ன நடக்குமோ என்ற விபரீத பயத்தில் அவள் இருக்க,

 

“தனா!” என்றவன் குரல் தூக்கிப் போட வைத்தது. 

 

 

‘உள்ளே வராதே’ என பிரார்த்தனா தலையசைக்க பக்கத்தில் இருந்த அந்த உருவம் நகைத்தது. திராணியற்ற நிலையில், “ம்ம்ம்” ஓசை எழுப்ப,

 

“டேய்! யாருடா நீ? என் பொண்டாட்டிய எதுக்கு கட்டி வச்சிருக்க.” உள்ளே வந்தவன் கேட்டான்.

 

கணவன் குரலை கேட்டதும் ஆர்ப்பரிக்கும் அருவி போல் பயத்தில் துள்ளி குதித்தாள். அதன் பின் அவளுக்கு எந்த சத்தமும் கேட்கவில்லை. சில நொடிகள் கழித்து அதை உணர்ந்தவள் செவியில் தன்னைப் போல் ஓசை கொடுக்கும் கணவன் ஓசை கேட்டது. கூடவே பொருட்கள் உடையும் சத்தமும் கேட்டது.

 

 

“ஏய்! பிரார்த்தனா உன் புருஷன் சாகுற சத்தத்தை கேளு.” 

 

‘அய்யோ! கடவுளே காப்பாத்து அவர…’ கடவுளிடம் வேண்டுதல் வைத்துக் கொண்டிருக்கும்போது மீண்டும் சத்தம் கேட்டது. இருவரும் அடித்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தது. 

 

தன்னவனுக்கு எதுவும் ஆகக்கூடாது என பயந்து அமர்ந்திருக்க, “ஆஆஆஆ” அலறியது அந்த உருவம்.

 

“என்னை போன் பண்ணி மிரட்டுனது நீயாடா? உன் பேச்சைக் கேட்டு தனாவ எவ்ளோ கஷ்டப்படுத்துனேன் தெரியுமா. அவ எந்த தப்பும் செய்யாத அப்பாவிடா. அவளுக்கு ஒரு வாய் சோறு கூட போட விடாம கொடுமை படுத்த வச்சிட்டியே. எவ்ளோ தைரியம் இருந்தா என் வீட்டுக்குள்ள வந்து என் பொண்டாட்டிய கட்டி வச்சிருப்ப. யாருடா நீ எதுக்காக இதெல்லாம் பண்ற?” என்றதோடு அடிக்கும் சத்தம் கேட்டது.

 

“உனக்கு பயந்தெல்லாம் இனி எதுவும் பண்ண போறது இல்ல. உன்னால ஆனதை பார்த்துக்கடா”

 

 

“ஆஆஆஆ” என்ற சத்தம் மட்டும்தான் அந்த உருவத்திடமிருந்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. 

 

 

திடீரென்று, “தனா!” என்ற அகோர குரல் அவள் காதை நிறைத்தது. 

 

‘சரவணா!’ எல்லாம் முடிந்து விட்டது என்று முடிவுக்கு வந்தவள் கட்டிய துணிக்குள் தன் கண்ணீரை தாரை வார்த்தாள். 

 

“இன்னைக்கு தப்பிச்சி இருக்கலாம். என்னைக்கா இருந்தாலும் என் கையால தான் உனக்கும் உன்னை கல்யாணம் பண்ணவனுக்கும் சாவு.” என்றதோடு அந்த உருவம் ஓடும் சத்தம் கேட்டது.

 

சிறிது நேரம் கழித்து பிரார்த்தனாவை தொட்ட அவள் கணவன், “தனா உனக்கு ஒன்னும் இல்லையே” கேட்க, எதையோ கேட்டு தலையாட்டினாள். 

 

“இருடா அசையாத” என்றவன் கை கால்களை விடுவித்து கண் கட்டை அவிழ்க்க, பொறுமை இல்லாமல் அவளே அவிழ்க்க தொடங்கினாள். ரத்த வெள்ளத்தில் அவள் முன் அமர்ந்திருந்தான் சரவணப் பொய்கை.

 

 

“அய்யோ சரவணா!” கட்டி அணைத்து அந்த ரத்தத்தை தொட்டு பார்க்க, “ஒன்னும் இல்லடா… அவன் கூட சண்டை போடும்போது கத்தியால குத்திட்டான்.” புன்னகைத்தான்.

 

 

மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு தீவிர சிகிச்சைக்கு பிறகு நலமாக அவள் முன்பு படுத்திருந்தான். வார்த்தைகள் எதுவும் இன்றி கட்டி அணைத்து தன் பயத்தையும் அவன் மீது கொண்டுள்ள காதலையும் காட்டினாள். தட்டிக் கொடுத்து சமாதானம் செய்து,

 

“உன்ன தனியா விட்டுட்டு போயிருக்கக் கூடாது மன்னிச்சிடு.” என்றான்.

 

“என்னால தான் உங்களுக்கு இப்படி ஆகிடுச்சு” 

 

“நான் உனக்கு கொடுத்த கஷ்டத்தை விட இது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லை.” பெருத்தன்மையாக விட்டுக் கொடுத்தவன்,

 

“யார் அவன்?” விசாரித்தான்.

 

“யாருன்னு தெரியலங்க அன்னைக்கு கல்யாணம் அப்போ கடத்தினான். அப்புறம் ஒரு நாள் வீட்டுக்கு வந்தான். அத்தோட இன்னிக்கு தான் அவனை பார்த்தேன்.” என்றவள்,

 

“இவன முன்னாடியே உங்களுக்கு தெரியுமா” 

 

“சத்தியமா இல்ல தனா. அடிக்கடி போன் பண்ணி உன்ன எதாச்சும் பண்ண சொல்லுவான். செய்யலன்னா கொல பண்ணிடுவேன்னு பயமுறுத்துவான். அதுக்கு பயந்து தான் பண்ண கூடாத எல்லாத்தையும் பண்ண. இப்பவாது என்னை நம்பு தனா” கை பிடித்து அழுக ஆரம்பித்தான். 

 

குற்ற உணர்வில் தழுவி கொண்டவள் முகம் முழுவதும் முத்தம் வைத்து, “சாரி” என்றிட,

 

“அவன் சொன்ன மாதிரி என்னை கொன்னு இருந்தா என்ன பண்ணி இருப்ப தனா… தொல்ல விட்டதுன்னு சந்தோஷமா இருந்திருப்பியா.”  முறைத்தாள்.

 

“அவனுக்கும் உனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. நீ செத்து இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்னு நினைக்கிற தான…” என்றவன் கன்னத்தில் “சப்” என்று இரண்டு முறை அடித்தவள் வேகமாக அணைத்தாள்.

 

 

பதிலுக்கு மென்மையாக அணைத்து கொண்டவன் எதிரில் இருக்கும் கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான். அதில் தெரிந்த கள்ளம் மிதப்பாக அவனைக் கண்டு சிரிக்க, ஒரு முறை தன் மனைவி முகத்தை கண்ணாடி வழியாக பார்த்தவன் தனக்குத்தானே கண்ணடித்தான்.

 

 

“நம்ம வாழ்க்கையில எப்போ எது நடக்கும்னு தெரியாது. இதை எனக்கு சொன்னது கூட நீதான் தனா. நேத்து நடந்ததை பத்தியோ நாளைக்கு நடக்கப் போறதை பத்தியோ யோசிக்காம இன்னைக்கு இருக்கிற வாழ்க்கையை சந்தோஷமா வாழ்வோம். ஒருவேளை அவன் என்னை குத்தி இந்நேரம் என் உயிர் போயிருந்தா…” என்றதும் பிரார்த்தனா அவன் வாயை மூட,

 

“முடிஞ்சதுக்கு அப்புறம் வருத்தப்பட்டு பிரயோஜனம் இல்லை. இனிமேயாது ரெண்டு பேரும் சந்தோஷமா சேர்ந்து வாழ்வோம். நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு எனக்கு திரும்ப ஒரு வாய்ப்பு கொடு தனா. சத்தியமா இந்த முறை உன்ன ரொம்ப சந்தோஷமா பார்த்துப்பேன்.” என காதலோடு அந்த கையில் முத்தமிட்டான்.

 

 

விலகி நெற்றியில் முத்தமிட்டவள், “இந்த நிமிஷம் நீங்க சொன்ன வார்த்தையோட அர்த்தத்தை புரிஞ்சிக்கிட்டேன். இனிமே நமக்கு நடுவுல அவன் வராம இருந்தாலே போதும்.” மீண்டும் அணைக்க,

 

“யாரும் இனிமே நமக்கு நடுவுல வர மாட்டாங்க.” உச்சந்தலையில் முத்தம் வைத்து ஆதரவாக அணைத்தவன் எண்ணம் இறுக்கமாக இருந்தது.

 

கணவன் மீதுள்ள காதலில் அனைத்தையும் நம்பியவள் அப்படியே தன் நிலை மாறாமல் இருக்க, கண்ணாடியில் தெரிந்த அவன் உருவம்,

 

“உன் நடிப்புக்கு ஈடு இல்ல போடா” கேலி செய்தது.

 

தன் உருவம் தனக்கு கொடுத்த பட்டத்தை வெகு விமர்சையாக ஏற்றுக் கொண்டவன் இரு விழியில் தெரியும் சாமர்த்தியத்தை கண்டு சொக்கி போனான். ஒரு பக்கம் பிரார்த்தனாவின் பெற்றோர்களை சமாளித்தவன் இந்தப் பக்கம் மனைவி கொண்டுள்ள சந்தேகத்தையும் சமாளித்து விட்டான். இனி தன் கள்ளத்தனம் சிக்க வாய்ப்பே இல்லை என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் அவனே ஒரு நாள் ஆதாரமாக விழப் போகிறான்.

 

தேசம் 14

 

வீடு திரும்பிய பிரார்த்தனா மனம் அந்த கருப்பு உருவத்தையே சுற்றி வந்தது. எவ்வளவு யோசித்தாலும் அவன் யார் என்று தெரியவில்லை. திரும்பி வருவேன் என்று விட்டு சென்றிருக்கிறானே வருவானோ? கணவனுக்கு அவனால் ஆபத்து வருமோ? தன்னுடைய நடவடிக்கைகளை மிக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பது போன்ற பிரம்மை வேறு அவளை இம்சை செய்தது. அந்த கண்கள் என்னவோ நியாபகப்படுத்த முயற்சிக்கிறது. 

 

அரக்கன் தன்னுடைய சுயநலத்திற்காக செய்த அனைத்தையும் அறியாது அவன் மீது பாவம் கொண்டாள். தன் காரியம் நன்முறையில் முடிந்த திருப்தியில் அன்றைய இரவு மருத்துவமனையில் நன்றாக உறங்கினான். இவள் தான் தூக்கத்தை தொலைத்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். 

 

விடிந்ததும் மருத்துவரிடம் பேசி வீட்டிற்கு வந்தவன் சில சாட்சிகளை அழிக்க முயன்றான். பிரார்த்தனாவோ அவனை எங்கும் நகர விடவில்லை. அதனால் அச்செயல் தடைபட தற்காலிகமாக வீட்டிற்குள்ளேயே அதை மறைத்து வைத்தான். இதுதான் தனக்காக வெட்டிக் கொண்ட குழி என்றறியாமல் தன்னோடு இருக்கும் மனைவியின் ஸ்பரிசத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான். 

 

“சரவணா”

 

“ம்ம்!”

 

“அவன் திரும்பவும் வருவானா?”

 

“எவன்?”

 

“அவன் தான்…கொலை பண்ண வந்தானே”

 

“திரும்ப எங்க வரது இங்க தான இருக்கான்.” 

 

“ஆஹான்!” என அவனை விட்டு விலகியவள், “என்ன சொல்றீங்க? அவன் இங்கயா இருக்கான். நீங்க பார்த்தீங்களா…” உதடு துடிக்க பயம் கொண்டாள். 

 

தன்னை தானே மனதினுள் கடிந்துக் கொண்டு, “அச்சோ! எதுக்கு இப்ப இவ்ளோ டென்ஷன் ஆகுற? இங்க இருக்கான்னா இங்க இல்ல… உன் சிந்தனையில இருக்கான்ற அர்த்ததுல சொன்னேன்.” சமாளித்தான்.

 

“அவனை மறக்க முடியலங்க. எதுக்காக என்னை கொலை பண்ண பார்க்கிறான்னு தெரியாம தலை வலிக்குது. அப்படி என்ன நான் அவனுக்கு பண்ணிட்டேன்.”

 

‘நீ பண்ணல…ஆனா பண்ணிட்டாங்க. பெத்தவங்க செஞ்ச பாவம் பிள்ளை தலையில விழும்னு சொல்றதுக்கான அர்த்தம் நீ தனா.’

 

“என்னங்க ஒன்னும் பேசாம இருக்கீங்க.”

 

“என்னமா பேச சொல்ற? எப்ப பாரு அவன் நினைப்புலையே இருக்க. இங்க ஒருத்தன் உனக்காக ஏங்கிட்டு இருக்கான்னு எப்படி புரிய வைப்பேன்.”

 

பயத்தை மறந்தவள் கண்களை சுருக்கி, “கிண்டலா உங்களுக்கு? நானே அவன் எதாச்சும் உங்களை பண்ணிடுவானோன்னு பயந்து நடுங்கிட்டு இருக்கேன். அது புரியாம அவன் நினைப்புல இருக்கன்னு சொல்றீங்க. அவனை நினைக்க அவனா என் புருஷன்.” முறைத்தாள்.

 

“ஹா…ஹா…! நீ பண்றதை பார்த்தா யார இருந்தாலும் அவனை தான் புருஷனா நினைப்பாங்க.” 

 

“ப்ச்! எருமை போ”

 

“பார்த்தியா அவனை ஒன்னு சொன்னதும் கோச்சிக்கிட்டு தள்ளி விடுற.”

 

“உங்களை…” என அடிக்க ஆரம்பித்தாள். 

 

சிலதை வாங்கிக் கொண்டு சிலதை தவிர்த்து போக்கு காட்டியவன், “இத்தனை நாளா என்னை கண்டாலே மூஞ்சிய திருப்பிட்டு போவ. இன்னைக்கு என்னமோ அவனை பத்தி சொன்னதும் அடிக்கலாம் செய்ற. இது ஒன்னு போதாதா தனா அவன் தான்…” என முடிக்காமல் கண் அடித்தான். 

 

 

“அய்யோ! அப்படி சொல்லாதீங்க சரவணா கடுப்பா இருக்கு.” 

 

“அப்படி தான் சொல்லுவேன். என்னை விட அவன் தான உனக்கு முக்கியம். அவன் மட்டும் உண்மைய சொல்லாம போயிருந்தா இந்நேரம் நான் தான் உன்ன கொல்ல பார்த்தேன்னு வாய் கூசாம சொல்லி இருப்ப.” 

 

 

பொறுமை துறந்து அடி வெளுத்தவள், “உங்களை அந்த அளவுக்குலாம் என்னைக்கும் நான் நினைக்க மாட்டேன். ஏன் அப்படி பண்றீங்கன்னு தெரியாம குழம்பி போய்ட்டேன் அவ்ளோதான். இதான் சாக்குன்னு ஓவரா பேசாதீங்க.” என்றாள்.

 

“ஏதோ ஒன்னு போ… கடத்தி கொல்ல பார்த்தவனை விட நான் என்ன அப்படி பண்ணிட்டேன். இவ்ளோ நாள் தள்ளி வச்சு தண்டனை கொடுக்கிற.”

 

அவனோடு விளையாடிக் கொண்டிருந்த பிரார்த்தனா இவ்வார்த்தைக்கு பின் மௌனமாகி விட்டாள். சரவணனனை பார்க்காமல் தலை குனிந்தவாறு இருக்க, 

 

“ஓய்!” தலை நிமிர்த்தியவன் அதிர்ந்தான். 

 

இரண்டு கண்ணிலும் கண்ணாடி போன்று நீர் பளபளத்தது. அவனை பார்த்ததும் அந்த நீர் கண்ணை விட்டு கீழ் இமை தாண்டி கன்னம் வழியாக அவன் கையை நனைத்தது. 

 

“சாரி” என உதடுகள் துடிக்க, “நான் விளையாட்டுக்கு பேசுனதை சீரியஸா எடுத்துக்கிட்டியா.” கேட்க,

 

“எதுவா இருந்தாலும் சொன்னது உண்மை தான. யார் உங்களை சந்தேகப்பட்டிருந்தாலும் நான் பட்டிருக்க கூடாது. ஏன் அப்படி செய்றீங்கன்னு புரிஞ்சுக்காம நான ஒன்ன நினைச்சு உங்க மனச காயப்படுத்திட்டேன்‌. எனக்காக என்னை கஷ்டப்படுத்தி நீங்களும் கஷ்டப்பட்டு எவ்ளோ வேதனையை அனுபவித்து இருப்பீங்கன்னு இப்ப புரியுதுங்க. உங்களை புரிஞ்சிக்காம கஷ்டப்படுத்துனதுக்கு என்னை மன்னிச்சிடுங்க சரவணா” வெதும்பி அவனிடமே சரணடைந்தாள்.

 

அவன் சொல்லும் சமாதானங்களை ஏற்றுக் கொள்ள மறுத்தாள். நொடிக்கு நொடி அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. எதிரில் இருந்தவனுக்கே சற்று குற்ற உணர்வு மேலோங்கியது. தன் மேல் மலையளவு நம்பிக்கை கொண்டுள்ளவளை தவறாக புரிந்து தவறிழைத்து விட்டேனே என வருந்தினான். கூடவே கடைசி வரை செய்த எதுவும் தெரியாமல் இருக்க வேண்டும் என்ற பயமும் சேர்த்துக் கொண்டது. 

 

 

“அழாத தனா” கண் துடைத்து,

“நீ கஷ்டப்பட கூடாதுன்னு தான் என் மேல தப்பான எண்ணம் வந்தாலும் பரவாயில்லைன்னு மனச கல்லாக்கிட்டு பண்ணேன். என்னை விட்டு ஒதுங்கி இருந்ததை விட இந்த அழுகை அதிகமான வலியை தருது. நான் உயிரோட இருக்க வரைக்கும் நீ சிரிச்சிட்டே இருக்கணும். அதுக்காக என்ன வேணாலும் செய்வான் இந்த சரவணப் பொய்கை.” என்று நெற்றியில் முத்தம் வைத்தான்.

 

 

“இனிமே கடவுளே வந்து உங்களை தப்புன்னு சொன்னாலும் நம்ப மாட்டேன். உங்களுக்கும் எனக்கும் நடுவுல யாரையும் வர விடமாட்டேன். இதுதான் உங்க காதலுக்கு நான் தர மரியாதை.” 

 

 

எந்த தடை தயக்கமின்றி இறுக்கமாக அணைத்து நெற்றியில் முத்தமிட்டவள் கன்னம் கழுத்து என காதலை தொடர்ந்தாள். இதை எதிர் பார்க்காதவன் கண்களை மூடிக் கொண்டு முழு சுகத்தை அனுபவித்தான். மூடி இருக்கும் இமை மீதும் எச்சில் வைத்தவள்,

 

“லவ் யூ சரவணா” என்றுவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள். 

 

 

இந்த முறை பெறுவதை மட்டும் செய்யாமல் கொடுக்கவும் துணிந்தான். வெட்ட வெளியில் இருவரும் அமர்ந்திருக்க காற்று தள்ளாட வைத்தது முத்த பாரம் தாங்காமல். வீசும் காற்றில் பறந்த முடிகளை தன் உள்ளங்கை கொண்டு அடக்கியவன் குங்குமம் வைக்கும் வகுட்டில் ஆரம்பித்து ஒவ்வொரு இடமாக மாறினான். 

 

இருபுருவ மாத்தி காதலோடு வாங்கிக் கொள்ள, நுனி மூக்கு சிவந்தது. கன்னம் முழுவதும் அவன் எச்சிலே நிறைந்திருந்தது. உதட்டுக்கு கீழ் அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்தவன் இதழை நோக்கினான் ஆர்வமாக. அதுவரை சிரிப்போடு அவனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தவள் வெட்கத்தோடு தலை குனிய, நிமிர்த்தி புருவம் உயர்த்தினான். 

 

தலையாட்டி ஒன்னும் இல்லை என்றவள் முகம் ஓராயிரம் கதை சொன்னது. அத்தனையும் புரிந்து போனது தொடர்புடையவனுக்கு. பதிலுக்கு காதல் கதை சொல்லி சிலிர்க்க வைத்தவன் உதட்டை மெல்ல நெருங்க, தாக்கு பிடிக்க முடியாமல் தப்பித்து ஓட பார்த்தாள். 

 

முழுவதும் விலகும் முன் கை பிடித்தவன் தன் மீதே விழ வைத்தான். ஒடுங்கி மடியில் அடங்கிய பிரார்த்தனா ஓர விழியில் பார்க்க முடியாமல் பார்க்க, இரு கண்களும் மூடிக் கொண்டது உதடு படும் அவஸ்தையை காண முடியாமல். 

 

கீழ் உதடு போதும் எனும் வரை சுவை நிரப்பி மேல் உதடை காட்டிக் கொடுக்க, மீசைக்குள் சிக்கி தவிக்கும் பாவமான நிலை அதற்கு. திருமணம் முடிந்து வரும் முதல் காதல் சங்கதி என்பதால் இருவரின் உணர்வுகளும் சரிசம அளவில் போட்டி போட்டது. யார் யாரை முத்தத்தால் தோற்கடிக்க போகிறார்களோ என்ற ஆர்வத்தில் இரவு நிலவன் பல்லை கடித்தான்.

 

 

பிடிவாதம் கொண்டவன் வெற்றி பெற்று அவளை சோர்வடைய செய்தான். மூச்சு வாங்க மார்பில் கிடந்தவள் சட்டையை ஒதுக்கி அங்கிருந்த முடிகளில் கோலம் போட்டாள். சிறு இடைவெளி விட்டவன் இடுப்பில் கை வைக்க, முகம் நிமிர்ந்து பார்த்தாள். 

 

“ம்ம்!” என்று காதோரம் கிசுகிசுத்தான்.

 

பதிலுக்கு கன்னத்தில் முத்தம் வைத்து மார்பில் அடங்கி போக, இரு கைகளிலும் தேர் ஆனாள் பிரார்த்தனா. அறைக்கு அழைத்து சென்றவன் நேரத்தை வீணாக்காமல் செயலில் இறங்க, திக்குமுக்காடி முழுவதும் அவன் வசம் மயங்கினாள். 

 

 

கணவன் காதலில் கசிந்திருகி காணாமல் போனவள் மீட்டெடுத்தாள் ஆட்சி செய்து. இரவு நேர நிமிடத்தை கூட அலட்சியம் செய்யாமல் இருவரும் இணைந்து காதலை கடந்து தாம்பத்ய உறவை தொடங்கினார்கள். எல்லாம் முடிந்தபின் வெற்றுடல் இருவரையும் வரவேற்றது. சோர்ந்து மஞ்சத்தில் இருந்தவளை அள்ளி தன் மேல் போட்டவன் வருடி பழைய நிலைக்கு கொண்டு வந்து,

 

“தனா” என பொறுமையாக அழைக்க, “ம்ம்” என்றவள் குரலில் அவ்வளவு இனிப்பு. 

 

அதை உணர்ந்ததும் உணர்வு மேலோங்கி அணைப்பை இறுக்கியவன் இதழை நோகடித்து, “எந்த நெருடலும் இல்லாம தான என் கூட இருந்த” கேட்க, பதில் சொல்லி உள்ளம் குளிர வைத்தாள் இதழ் மூலம். 

 

மோகம் முழித்துக் கொண்டு மெத்தை சுகம் வேண்டும் என்றது. தாமதிக்காமல் உடனே களத்தில் இறங்கினான். முதலில் இருந்து ஆரம்பித்தது அவன் விளையாட்டு. முழு ஒத்துழைப்பு கொடுத்து இரண்டாம் நிலையை கடக்க உதவினாள். கட்டியவள் கொடுக்கும் பச்சை கொடியில் முத்திரை பதிக்க முயன்றவன் செவியில் ஓசை. 

 

சுயநினைவு பெற்று இருவரும் கைபேசியை பார்த்தார்கள். சரவணப் பொய்கைக்கு தான் அந்த அழைப்பு. எண்ணை பார்த்ததும் படபடப்பு தொற்றிக் கொண்டது. அவசரமாக அவளை விட்டு எழுத்தவன் அழைப்பை துண்டித்தான். 

 

அவன் எழுந்த வேகத்தில் மிரண்டவள் என்னவென்று கேட்க, நிதானம் அடைந்து உள்ளுக்குள் மூச்சிழுத்து விட்டவன்,

 

“ஆபிஸ்ல வேலை ஒன்னு பென்டிங் வச்சிருந்தேன் தனா. இன்னைக்குள்ள முடிக்க சொன்னாங்க நடந்த கலவரத்துல மறந்துட்டேன்.” சமாளித்தான். 

 

“அதுக்காங்க பேய பார்த்த மாதிரி எந்திரிச்சிங்க.”

 

‘பேய் தான் உன் அப்பன் பேய்’ 

 

“சரவணா!” 

 

“ஆஹான்! என்ன தனா?”

 

“அய்யோ! நான் தான்… பயந்து சாகதீங்க. வேலையை ராத்திரிக்குள்ள முடிச்சிடலாம். டென்ஷன் ஆகாம பொறுமையா பண்ணுங்க. நான் டின்னர் ரெடி பண்ணிட்டு வரேன்.” என அவள் நகர, யாருக்கோ அழைத்தான்.

 

 

“டேய்! சொன்னது என்னாச்சு” 

 

“அப்பவே அந்த வேலை முடிஞ்சுது சார்.”

 

“என்னடா முடிஞ்சுது. அவன் எனக்கு போன் பண்றான் பாரு. நல்லவேளை அவ பார்க்கல இல்லன்னா எல்லாம் கெட்டு போயிருக்கும். திரும்ப ஒரு தடவை போன் பண்ணி பேசு.”

 

“சரிங்க சார்…காசு கொஞ்சம் ஆகுமே.” என எதிரில் ஒருவன் இழுக்க,

 

“கொஞ்ச காசு என்ன கோடி காசு கூட தருவேன். வாங்க தான் உன் உசுரு இருக்காது. மூடிக்கிட்டு சொன்னதை செய்டா. இனி அவன் கால் எனக்கு வர கூடாது, புரிஞ்சுதா?” என கரகரக்க,

 

“வராது சார்” என்றதோடு அழைப்பு நின்றது. 

 

‘சாமி

நாதன்… நீ கிட்ட வராத வரைக்கும் உன் பொண்ணுக்கு பிரச்சனை இல்ல. அவளை தான் மன்னிச்சு இருக்கனே தவிர உன்ன இல்ல. என் கையால உசுர விட ஆசைப்படாம இருக்குறது நல்லது.’ என்ற கள்ளனின் எண்ணம் அறியாது சமைத்துக் கொண்டிருந்தாள் பிரார்த்தனா. 

 

தேசம் தொடரும்…

 

அம்மு இளையாள்.

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
3
+1
1
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்