Loading

கமலம் பாட்டி உலுக்கியபின்னரே 

நிகழ்காலத்திற்கு வந்தார் வேலப்பர்…..

 

    தன் தாயைப் பார்த்து அமைதியாகவும் …., அதே சமயம் குழப்பமான மனநிலையுடன் பார்த்துக் கொண்டு இருந்தார்….

 

 

கமலம், … வேலப்பனின் முகத்திற்கு முன்னே சொடக்கிட்டு…., என்னடா…! இன்னும் எம்புட்டு நேரம்தான் இங்கு நிக்கிறதா…? உத்தேசம்……. இப்ப எதுக்கு பேந்த பேந்த முழித்துக்கொண்டு நிக்கிற….?….. சோலி எதுவும் இல்லையா….?…. எதாவது சாப்பிட்டியா…? …கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக…..

 

வேலப்பன்…., “அம்மா ” இன்னும் சாப்பிடல…?….

 

கமலம்….. , என்னடா சொல்ற…? இன்னும் சாப்பிடலையா…?…. மனது சற்றே பதட்டப்பட ……. மணி என்ன ஆகுது “இப்பவே பத்து ஆச்சு”…… இன்னும் சாப்பிடாமா என்ன பண்றடா…..? ….. நான் போனதில் இருந்து இப்படியே தான் நின்றுக்கொண்டு இருக்கியா…..?… –

 

 

 வேலப்பன்… தலையை மட்டும் ஆட்ட…

 

கமலம்…… அப்போ என் மருமகளும் இன்னும் சாப்பிடலையா…..?

 

வேலப்பனின் தலை ஆமாம் என்று ஆட்ட….

 

கமலம், தலையை தலையை மட்டும் ஆட்டாதடா ….. நீ என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது….. என் மருமகளை சாப்பிட வெச்சு,….. நீயும் சாப்பிடற..! புரிஞ்சுதா….. இங்க பாரு நீயும் உன் பொண்ணும் என்ன பண்ணுவீங்களோ எனக்கு தெரியாது….?….. என்னுடைய மருமகளை கஷ்டப்படுத்தினீங்கள் என்றால் , நான் சும்மா இருக்க மாட்டேன்….புரியுதா….! ஊர்ல எத்தனையோ மருமகள்கள் இருக்காங்க …. எப்ப பாரு சண்டைபோட்டுக்கொண்டே….. வீட்டை பிரிக்கிறது….., அனுசரித்து போகாம…, வேலை செய்யாம…., இன்னும் எப்படியோ எல்லாம் இருக்காங்க….. நம்ம பக்கத்துவீட்டு பழநியை ஆஸ்பெட்டல்ல சேர்த்தாங்க போன மாசம்….. இன்னமும் அந்த வீட்டு மருமக “ஒரு எட்டு போய் பார்க்கல,…அங்க இருக்கிறவங்களுக்கு தன் மகளைப் பற்றி புலம்ப மட்டுமே முடிந்தது…., பழநியோட வீட்டினருக்கு தன் வீட்டு மருகளிடம் பேச சற்றி பயமாக இருந்தது……., நாம் எதாவது கேட்டால் குடும்பம் பிரிந்துவிடும் என்ற எண்ணம் தான் …… ஆனால், என்னுடைய மருமகள் அப்படியா இருக்கா…?….. எனக்கும் என்னுடைய மருமகளுக்கும் ஆயிரம் சண்டை வந்தாலுமே,…. அவ என்னை ஒரு இடத்திலுமே , யாருகிட்டையும் விட்டு கொடுத்ததேயில்லை….. அந்த விசயம் உனக்கும் நல்லா தெரியும் தானே….?…. “சரி என்பது போல , தலையை மட்டும் வலதுபுறமாக, ஆட்டிக்கொண்டிருந்தார் , வேலப்பன்….. கமலா பாட்டி …., தன் மகனைப் பார்த்து தலையை தலையை ஆட்டாதே…..”போய் என் மருமகளை சாப்பிடவை” புரியுதா….?…..என்று கத்திவிட்டு சென்றுவிட்டார்…… அவருக்கு தெரியும் தன் மகனைப் பற்றியும் ,மருமகளைப் பற்றியும் …… இத்தனை வருடங்களில் இருவருக்கும் சண்டைகள் வரும் ……, ஆனால், அந்த சண்டையின் கால முடிவு சில நிமிடங்களே தான்…. இந்த முறை மட்டுமே சில மணிநேரங்களாக சண்டையின் காலம் நீண்டுகொண்டே இருக்கிறது…. இந்த சண்டைக்கு முக்கிய காரணம் தன்னுடைய பேத்திதான் என்று அவருக்கும் தெரியும்…… இப்பொழுது வீட்டில் ஏற்ப்பட்ட பிரச்சனை சீக்கிரமாய் ஒரு தீர்வு காண வேண்டும் என்று கடவுளிடம் ஒரு வேண்டுதல் வைத்தார்…….. 

 

  சிறிது நேரம் அமைதியாக சிந்தித்த வேலப்பன், ஒரு முடிவு எடுத்தவராய் …., தன் மனைவி இருக்கும் அறைக்கு சென்றார்….. பாதி தூரம் சென்றபிறகு தான் நியாபகம் வந்தது…., தன்னுடைய மனைவி இந்த பிரச்சனையில் இன்னும் சாப்பிடவில்லை என்று…… இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்று நினைத்து ….., தன்னையே திட்டிக்கொண்டார்….. உடனடியாக சமையற்கட்டுக்கு சென்றவர், ஒரு தட்டினில் உணவை எடுத்து வைத்துக்கொண்டு, தன் மனைவியிடம் சென்றார்…. அந்த அறையில் தன் மனைவியைப் பார்க்கும்போது , அவருக்கு தன்னுடைய இதயம் சற்று வலிப்பதாக தோன்றியது…… கண்ணம்மா , கால்கள் இரண்டையும் நீட்டி வைத்துக்கொண்டு, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்துக்கொண்டு, கண்கள் இரண்டையும் மூடி அமைதியாக உட்கார்ந்துக்கொண்டிருந்தார்….. அவர் எவ்வளவு வேதனையில் உள்ளார் என்பதை, அவரின் முகமே காட்டிக்கொடுத்தது….. தன் கையில் இருந்த உணவுத் தட்டை அருகில் இருந்த மேசையின் மீது வைத்துவிட்டு…., தன் மனைவியின் அருகில் உட்கார்ந்தார்….. மெதுவாக தன் மனைவியின் கால்களை தன் மடியின் மீது வைத்துக்கொண்டு, கால் பாதங்களுக்கு மிதமான அழுத்தம் கொடுத்தார்….., கண்ணம்மா கண்களை திறக்காமலே…., இது யாருடைய பரிசம் என்று தெரிந்துக்கொண்டார்…. தன் மனைவிடம் இருந்து எந்த பதிலும் வராததைக் கண்டு , ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டார்…. தன் மனைவியின் அருகில் சென்றவர் , அவருடைய கைகளை தன்னுடைய கைகளுக்கு இடையே கொண்டு வந்தவர்…., “கண்ணம்மா”…..”கண்ணம்மா”….. இங்க பாருமா ,……. இப்படி என்கிட்ட சண்டைப் போட்டு, நீ தனியா வந்து உட்கார்ந்து இருக்கியே ….? என்னோட நிலமை என்னனு உனக்கு புரியுதா…..?…… நீ என்கிட்ட பேசலனா?…… என் மனசு எவ்வளவு கஷ்டப்படும்னு உனக்கு தெரியாதா….?….. தெரிஞ்சும் இப்படி பண்றீயா…..?…… வருத்தத்துடன் பேசிக்கொண்டே போக….., தன் கணவன் பேசுவதையே அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார்…….

 

வேலப்பன், நீ என்ன திட்ட , அடிக்க எல்லா உரிமையும் உண்டு மா….., ஆனா என் முகத்தை கூட பார்க்க பிடிக்காமா “இப்படி கண் மூடி உட்கார்ந்துக்கொண்டிருக்கிறது ” எனக்கு இதயத்தில் வலி கொடுக்கிறது ……நானே கொஞ்சம் வயசான மனிதன் மா….. எனக்கு கொஞ்சம் கருணைக்காட்டக்கூடாதா…?…..

 

கண்ணம்மா, தன்னுடைய கண்களை மெதுவாக திறந்து பார்க்க…., தன்னுடைய கணவனின் வருத்தம் நிறைந்த முகமே தென்பட்டது….. அமைதியாக தன்னுடைய கணவனின் மடியில் படுத்துக்கொண்டார்….. வேலப்பன், தன்னுடைய மனைவியின் தலையை , ஆதரவாக வருடிக் கொடுத்துக்கொண்டே இருந்தார்….. தன்னுடைய மனைவியை நினைத்து இதழின் ஓரத்தில் சிறு புன்னகை தோன்றியது….. சிறிது நேரம் கழித்து தன் மனைவியின் தலையில் ஒரு முத்தம் ஒன்றை வைக்க….., அவருடைய மனைவி தலையை நிமிர்த்தி அவரைப் பார்த்துக்கொண்டே இருக்க …… 

 

வேலப்பன், இங்க பாருங்க என்னுடைய அன்பு மனைவியாரே ….! என்னைப் இப்படி பார்க்காதீங்க…. எனக்கு நம்ம திருமண வாழ்க்கையின் தொடக்க பகுதி தான் நியாபகம் இப்ப வருது……

 

 

கண்ணம்மா, எழுந்து உட்கார்ந்துக்கொண்டு, அவரின் முதுகிலே நான்கு , ஐந்து அடிகளைக் கொடுத்துவிட்டு…… வரும் வரும் , நியாபகம் வரும்…… இங்க இப்ப என்ன பிரச்சனை ஒடுது …. உனக்கு திருமண வாழ்க்கை தொடக்கம் கேட்குதா….?….. 

 

    தன் மனைவி கொடுத்த அடிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு, சரி சரி என்னை அடிக்கணும்னு நினைச்சா “இந்த சாப்பாட்டை சாப்பிட்டு “, நல்லா தெம்பா அடி….. என்று அங்கிருந்த சாப்பாட்டு தட்டை சுற்றி காண்பித்தார்….. 

 

கண்ணம்மா, எனக்கு சாப்பாடு வேண்டாம்…. நான் சாப்பிட்டு என்னப் பண்ண போறேன்….. நான் சொல்றதைதான் , யாருமே கேட்கமாட்றீங்களே….’ என்று வருத்தப்பட…. 

 

வேலப்பன், “என் உயிரே நீ சாப்பிடாம…? எங்களை எப்படி பாதுகாப்ப…..? சொல்லு…. அப்பறம் என் பொண்ணுகிட்ட எப்படி பேசுவ…..?… நீ சாப்பிட்டா தான் நான் உயிர் வாழ முடியும்…..

 

கண்ணம்மா, இந்த மாதிரி வசனத்தையெல்லாம்….. எங்க இருந்து தான் பேச கத்துக்கிறயோ…? தெரியில…. நான் சாப்பிடனும்னா , நம்ம பொண்ணு வந்தவுடனே அவகிட்ட கல்யாணத்தைப் பத்தி பேசி” அவளை சம்மதிக்க வைக்கிறிங்கனு ” சொல்லுங்க….. நான் சாப்பிடுறேன்…..

 

வேலப்பன், இப்பொழுது தன் மனைவி சாப்பிடுவது தான் முக்கியம் என்று எண்ணி ” சரி மா நான் பேசுறேன்”….. இப்ப நீ சாப்பிடு என்று சாப்பாட்டு தட்டை எடுத்து ” சாப்பாட்டை எடுத்து தன் மனைவிக்கு ஊட்ட ஆரம்பித்தார்”….. கண்ணம்மாவும் சாப்பாட்டை எடுத்து தன் கணவருக்கு ஊட்ட ” வேலப்பனோ தன் மனைவியை பார்க்க….. 

 

கண்ணம்மா, என்ன பாக்குறீங்க நீங்க இன்னும் சாப்பிடலனு”…எனக்கு தெரியும்…. இந்தாங்க சாப்பிடுங்க என்று கையை நீட்ட….. தன் மனைவியை நினைத்து கர்வம் அதிகமானது….. அவருக்கும் தெரியும் இத்தனை வருட திருமண வாழ்க்கையில் ” தன் மனைவியின் புரிதல் தன் மீது எப்படி என்று “…. தன் மனைவியின் நெற்றியில் அழுந்த முத்தம் ஒன்றை வைத்துவிட்டு… – அவரை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டார்…… 

 

கண்ணம்மா” , சிறிது புன்னகையுடன் போதும் போதும் , இந்தாங்க சாப்பிடுங்க என்று ஊட்ட ஆரம்பித்தார்…. அந்த காதல் ஜோடிகள் உணவை மாறி மாறி ஊட்டிக்கொண்டிருந்தனர்…..” வாழும் காலத்திற்கு , அன்பு செய்ய வயது ஒரு பொருட்டல்ல “…..

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்