Loading

பழைய நினைவுகளில் மூழ்கி இருந்தவள் நள்ளிரவு மூன்றையும் தாண்டித் தான் உறங்கினாள்.

பார்க்கில் ஆள் நடமாட்டம் அதிகரிக்க அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினான் சஜீவ்.

ராஜாராம் ஜனனிக்கு அழைத்து நித்யா பாதுகாப்பாக இருப்பதாகவும் அவளை யாரும் தேட வேண்டாம் எனவும் கூறினார்.

சஜீவ் வீட்டை அடைய சரியாக அவன் மொபைல் சத்தமிட்டது.

எடுத்துப் பார்க்க ஆரவ் அழைத்திருந்தான்.

சஜீவ், “சொல்லுடா யுவி பத்தி ஏதாச்சும் தெரிஞ்சுச்சா…” என்க,

“ஹா.. ராஜுப்பா ஜனனிக்கு கால் பண்ணி நித்து சேஃப்டியா இருக்கிறதாவும் அவள யாரும் இனி தேட வேணாம்னும் சொன்னாருடா…” என ஆரவ் கூற,

சஜீவ் அவசரமாக, “யுவி எங்க இருக்கான்னு சொன்னாராடா..” எனக் கேட்டான்.

ஆரவ், “எதுக்கு அவள தேடிப் போய் கஷ்டப்படுத்தவா..” என்க,

“டேய்… என்னடா பேசுராய்…” என்க,

“சரி சரி.. நீ எதுவும் ஃபீல் பண்ணாத மச்சான்… அதான் ராஜுப்பா சொல்ட்டாருல… அவள் எங்கிருக்கான்னு எதுவும் சொல்லல.. ” என ஆரவ் கூற சரி என்று விட்டு ஃபோனை வைத்தான் சஜீவ்.

ஏதோ யோசனையுடன் உள்ளே வந்தவனை ஈஷ்வரியின் குரல் கலைத்தது.

“வந்துட்டியா கண்ணா… எங்கப்பா போய்ட்டு வர… நைட் வீட்டுக்கு கூட வரல.. அம்மா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா..” என்க,

சஜீவ், “எங்கயும் இல்லமா… கொஞ்சம் என்ன தனியா விடுங்க..” என்றதும்,

ஈஷ்வரியின் கெட்ட நேரம் அவர் வாய் அமைதியாக இருக்கவில்லை.

“அந்த சிறுக்கி மவ வந்ததுல இருந்து இவன் ஒரு மார்க்கமா தான் இருக்கான்… என் பையனுக்கு என்ன வசியம் பண்ணி வெச்சிருக்காலோ‌ தெரியல..” என ஈஷ்வரி தனக்குத் தானே மெதுவாகத் தான் கூறினார்.

ஆனால் அவர் கூறியது தெளிவாக சஜீவ்வின் செவியை அடைந்தது.

தன் அறைக்கு செல்ல படிக்கட்டில் ஏறிக் கொண்டிருந்தவன் வேகமாக கீழிறங்கி வந்து கண் மண் தெரியாத கோபத்தில்,

“இன்னும் உங்களுக்கு என்னம்மா பிரச்சினை… நீங்க சொன்னதெல்லாம் கேட்டு ஆடினதுனால தான் நான் இன்னெக்கி இந்த நிலமைல இருக்கேன்… என் வாழ்க்கை, சந்தோஷம், நிம்மதின்னு எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறேன்… இன்னுமா நீங்க மாறாம இருக்கீங்க..” என முதலில் கோபமாய் ஆரம்பித்து கவலையில் முடித்தான் சஜீவ்.

மகனின் கோவத்தில் ஒரு நிமிடம் அதிர்ந்து நின்றவர் பின் தனது வழக்கமான பல்லவியைப் பாடினார்.

“உன் நல்லதுக்கு தானேப்பா அம்மா எல்லாமே பண்ணேன்..” என்க,

ஏதோ கூற வந்தவன் பின் எதுவும் கூறாது வேகமாக அங்கிருந்து தன் அறைக்கு சென்றான்.

ஈஷ்வரி மனதில், “யாரு என்ன பண்ணாலும் இந்த வீட்டுல நான் நெனக்கிறது தான் நடக்கும்..” என தன் வேலையை பார்க்க கிளம்பினார்‌.

லாஸ் ஏஞ்சல்ஸ்

நள்ளிரவைத் தாண்டி உறங்கிய நித்ய யுவனி மறுநாள் காலை அழைப்பு மணி ஓசையில் கஷ்டப்பட்டு விழிகளைத் திறந்தாள்.

ஏற்கனவே காய்ச்சல் வேறு இருக்க ஒழுங்காக தூங்காததால் தலைவலி வேறு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

கண்களைக் கசக்கிய வண்ணமே சென்று கதவைத் திறந்தவள் முன் சித்தார்த் நின்றிருந்தான்.

தூக்கக் கலக்கத்துலேயே, “என்ன சித்.. இவ்ளோ ஏர்லியா வந்திருக்காய்…” என்க,

சித்தார்த், “மேடம் கொஞ்சம் கண்ண திறந்து மணிய பாக்குறீங்களா?” என நக்கலாக கூற,

திரும்பி கடிகாரத்தை பார்த்தவள் அதிர்ந்தாள்.

“என்ன பத்து மணியாச்சா… இவ்வளவு நேரம் தூங்கி இருக்கேனா… லெவன் அ க்ளாக் ஆக கிட்ட ஹாஸ்பிட்டல்ல இருக்கனுமே..” என நித்யா கூற,

“ஆமா.. இவ்வளவு நேரமா என்ன தூங்கி இருக்க.. நீ தான் ரொம்ப பன்ச்சுவாலிட்டியான ஆளாச்சே..” என்க,

“நைட் தூங்க ரொம்ப லேட் ஆகிடுச்சு… என்ட் லேசா ஃபீவர் இருந்தது வரும்போதே… அதான் கொஞ்சம் தூங்கிட்டேன்… ஓக்கே சித் நீ வெய்ட் பண்ணு.. நான் சீக்கிரம் குளிச்சி ரெடி ஆகிட்டு வரேன்..” என்று விட்டு சென்றாள் நித்யா‌.

நித்ய யுவனி குளித்து தயாராகி வரும் போது கிச்சனில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க சென்று பார்த்தாள்.

அவள் வரும் அரவம் கேட்டு திரும்பிய சித்தார்த், “தலைவலின்னு சொன்னியே நிது… சுக்கு காபி போட்டிருக்கேன்… குடி சரியாகிடும்…” என நித்யாவின் கையில் காபி கப்பைத் திணித்தான்.

பின் இருவரும் கிளம்பி மெடிக்கல் கேம்ப் நடக்க இருந்த ஹாஸ்பிட்டல் சென்றனர்.

இங்கு சஜீவ்வோ நித்யாவின் நினைவில் வாடி இருந்தான்.

_______________________________________________

Flashback

மறுநாள் காலை சீக்கிரமே எழுந்து பள்ளிக்கு சென்றவள் ஜனனி வரும் வரை காத்திருந்தாள்.

சற்று நேரத்தில் ஜனனி வந்து நித்யா இருந்த மேசையிலே பேக்கை வைக்க நித்யா அவளைப் பார்த்து புன்னகைத்தாள்.

அவளோ பேக்கிலிருந்த புக்கை எடுத்து ஏதோ நோட்ஸ் எழுத ஆரம்பித்தாள்.

நித்யா ஜனனியின் கையை மெதுவாக சுரண்ட அவள் தட்டி விட்டாள். 

மீண்டும் மீண்டும் செய்ய கடுப்பான ஜனனி நித்ய யுவனியைப் பார்த்து,

“என்ன உனக்கு இப்ப பிரச்சினை… ஒரு வேலையா இருக்கேன் தெரியுதுல… திரும்ப திரும்ப டிஷ்டர்ப் பண்றாய்..” என்க,

முகம் வாடிய நித்யா, “எனக்கு ஒரு பிரச்சினையுமில்ல.. நேத்துல இருந்து நீ என் கூட பேசவே இல்ல… எனக்கு எவ்வளோ கஷ்டமா இருந்துச்சி தெரியுமா…” என்க,

ஜனனி, “நான் பேசலன்னா என்ன… அதான் நீ புதுசா யாரு யாரு கூடவோ பேச ஸ்டார்ட் பண்ணி இருக்கல்ல…” என்க,

நித்யாவிடமிருந்து அவசரமாக, “அவர் ஒன்னும் யாரோ இல்ல…” எனப் பதில் வந்தது.

ஜனனி கோவமாக அவளை முறைக்க, “நான் என்ன சொல்ல வந்தேன்னா அவர் யாரோ இல்ல… எங்க சொந்தக்காரங்க ஆகப் போறவரு…” என்றாள் நித்யா.

ஜனனி புரியாமல் பார்க்க, “எங்க மாலதி அக்கா இருக்காங்கல்ல… நான் கூட சொன்னேனே டென்த் லீவுக்கு சித்தப்பா வீட்டுக்கு போனப்போ அக்காவோட ஃப்ரெண்டு வீட்டுக்கு போனோம்னு.. அங்க அவங்க அண்ணாவும் சர்வாவும் இருந்தாங்கன்னு.. அவங்க அண்ணா ராஜேஷும் மாலதி அக்காவும் லவ் பண்றாங்கலாம்..‌ ராஜேஷ் அண்ணா ரொம்ப நாளா அக்காவ வன் சைட்டா லவ் பண்ணி இருக்காங்க.. பட் அக்கா இப்ப ஒரு வாரத்துக்கு முன்ன தான் ஓக்கே சொல்லி இருக்காங்க… ராஜேஷ் அண்ணாவோட ஃப்ரெண்டு தான் சர்வா.. அதனால தான் பேசினேன்…” என்க,

“உனக்கு இந்த விஷயம் எப்போ தெரிய வந்துச்சி.. ” என ஜனனி கேட்க, “நேத்து…” என நித்யாவிடமிருந்து பட்டென பதில் வந்தது.

ஜனனி அவளை முறைக்க அப்போது தான் அவள் உளரியது நித்யாவுக்கு புரிய தலை குனிந்தாள்‌.

ஜனனி, “அப்போ நேத்து தான் உனக்கு இந்த விஷயம் தெரிய வந்திருக்கு.. பட் நீ அதுக்கு முன்ன இருந்தே நீ பேசிட்டு இருக்காய்..” என்க நித்யாவின் தலை தானாக ஆம் என்றது‌.

பின் ஜனனி, “இங்க பாரு நித்து… ராஜேஷூம் உங்க அக்காவும் லவ் பண்றாங்க சரி.. நீ அவரு கூட பேசினா ஏதோ பரவல்லன்னு ஒத்துக்க முடியும்… எதுக்காக அவரு ஃப்ரென்ட் கூட எல்லாம் பேச போறாய்… ஒரு தடவ தான் நீ அவர மீட் பண்ணி இருக்காய்.. என்ட் இட்ஸ் ஜஸ்ட் என் ஆக்சிடன்ட்… அதுக்காக அந்த பையன் மெசேஜ் போன்‌ பண்ணான்னு நீ ரிப்ளை பண்ண வேண்டிய அவசியம் என்ன…” என்க நித்யா தலை குனிந்தே காணப்பட்டாள்.

அவள் தாடை பற்றி தூக்கிய ஜனனி, “நித்து நீ ஒன்னும் சின்ன பொண்ணு கெடயாது… ஊரு உலகத்துல நடக்குறதெல்லாம் நாம பாத்துட்டு தானே இருக்கோம்… மொபைலுங்குறது ரொம்ப டேன்ஜரசான ஒன்னு… அதால நமக்கு எவ்வளவு நன்மை இருக்கோ அதே அளவு கெட்டதும் இருக்கு… அந்தப் பையன் கூட உனக்கு எந்த சம்பந்தமும் இல்ல.. பின்ன எதுக்காக நீ அந்தப் பையன் கூட பேசனும்… இந்தக் காலத்துல கூட இருக்குறவங்களயே நம்ப முடியாது… அப்படி இருக்கும் போது எங்கயோ இருக்குற ஒருத்தன் கிட்ட நீ எதை நம்பி உன்ன பத்தி எல்லா விஷயத்தேம் ஷேர் பண்றாய்… நீ இவ்வளவு நாளும் இதை பத்தி என் கிட்ட சொல்லாம மறச்சி இருக்க… அதுலயே தெரிஞ்சிக்க.. நாம நமக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க கிட்ட அவங்க திட்டுவாங்க ஆர் அவங்களுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு நெனச்சி ஒரு விஷயத்த மறக்கிறோம்னா அது நிச்சயம் தவறான விஷயமா தான் இருக்கும்… நான் உன் நல்லதுக்காக தான் சொல்றேன் நித்து…‌இனிமே அந்த பையன் கூட பேசாதே… ஃபர்ஸ்ட் அவன் நம்பர ப்ளாக் பண்ணு…” என்றாள்.

ஜனனி கூறிய அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தாள் நித்ய யுவனி.

ஏனோ அவளுக்கு சஜீவ்வை தவறாக எண்ண மனம் வரவில்லை.

அதே நேரம் தன் உயிர்த்தோழியின்‌ பேச்சையும் தட்ட முடியவில்லை.

அதனால் எதுவும் கூறாது அமைதியாக இருந்தாள்.

ஜனனி மீண்டும் ஏதோ கூற வர அதற்குள் வகுப்பிற்குள் ஆசிரியர் நுழைந்திருந்தார்.

அதனால் இருவரின் கவனமும் அவர் பக்கம் சென்றது.

வகுப்புகள் அனைத்தும் நிறைவடைய நித்ய யுவனி, ஜனனி இருவரும் வெளியே வந்தனர்.

நித்யா யோசனையூடே இருக்க ஜனனி அவள் தோள் தொட்டு, “நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சி இருக்கும்னு நம்புறேன்…” என்க, அவளைப் பார்த்து புன்னகைத்தாள் நித்யா.

வீட்டுக்கு வந்தவள் அமைதியாக தன் அறைக்கு செல்ல,

“யுவனிம்மா… இங்க வாடா… அப்பா உனக்கு என்ன வாங்கி இருக்கேன் பாரு…” என்க,

தன் யோசனைமிலிருந்து வெளி வந்தவள் தந்தையுடன் நேரம் செலவழித்தாள்.

இரவானதும் அறையில் படித்துக் கொண்டிருந்தவள் மொபைலில் நோட்டிஃபிகேஷன் ஒலி வர, 

யாரென்று பார்க்க சஜீவ் தான் மெஸேஜ் செய்திருந்தான்.

அவனுக்கு பதில் அனுப்ப மொபைலை கையில் எடுத்தவள் பின் ஜனனி கூறியது நினைவு வரவும் மொபைலை ஆஃப் பண்ணி வைத்து விட்டு படித்தாள்.

இங்கு சஜீவ்வோ நித்யாவுக்கு இரண்டு மூன்று மெஸேஜ் போட்டுப் பார்க்க பதில் வராமல் போக பின் தன் வேலையில் மூழ்கினான்.

அதன் பின் வந்த நாட்களில் சஜீவ் வேலையில் பிஸியாக நித்யாவுடன் தொடர்பு கொள்ள நேரம் இல்லாமல் போனது.

நித்யாவும் சஜீவ் மெசேஜ், கால் செய்தால் எப்படி தவிர்ப்பது என யோசித்துக் கொண்டிருந்தவள் அவனிடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் அழைப்பும் வராமல் போக அதுவும் நல்லதுக்கு தான் என்று நினைத்து அமைதியாக இருந்தாள்.

எந்த பிரச்சனையும் இன்றி சென்ற இருவரின் வாழ்விலும் விதி சுசித்ராவின் ரூபத்தில் விளையாட ஆரம்பித்தது.

❤️❤️❤️❤️❤️

மக்களே… ஃப்ளாஷ்பேக் ஆரம்பிச்சிடுச்சு… இனி வரும் அப்டேட்ஸ் ஃப்ளாஷ்பேக்காக இருக்கும்… படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க… மறக்காம Votes & Comments பண்ணுங்க… நன்றி… 

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
2
+1
1
+1
3

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    4 Comments

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    2. Archana

      Eeswari char en ipdi irritate panranga avanga pasanga mela pasama irukaratha kamichu ovrah panranga😤.

      1. Nuha Maryam
        Author

        Pasangaluku nalladhu panradha nenachi thangaloda suyanalathala awan life a spoil panra parents um irukkanga thane sis… Not everyone..