Loading

மக்களே… கதைக்கு போறத்துக்கு முன்னாடி முந்தைய யூடிக்கு ஒரு சின்ன விளக்கம்.

 

நிறைய பேர் கேட்டு இருந்தீங்க… சாதாரணமா ஃபிட்ஸ் வரது கோமாக்கு கொண்டு போகுமான்னு… அதுக்கு தான் விளக்கம் தரலாம்னு இருக்கேன்…

 

ஒருத்தர் கோமாவுக்கு போறதுக்கு பல காரணங்கள் இருக்கு…

 

ப்ரைன்ல ஏற்படுற பாதிப்பால தான் கோமா ஏற்படும். 

 

ப்ரைன்ல பிரஷர் அதிகரிப்பு, ப்ளீடிங், ஆக்ஸிஜன் இழப்பு… இப்படி பல காரணங்களால ப்ரைன் பாதிக்கப்பட்டு கோமாவ ஏற்படுத்தும்…

 

ப்ரைன்ல ஏற்படுற இந்த பாதிப்பு தற்காலிகமாகவோ, திரும்ப வரக் கூடியதாகவோ, இல்ல நிரந்தரமா கூட இருக்கலாம்…

 

ஒரு தடவை ஃபிட்ஸ் வரதால கோமா ஏற்படாது…  

 

ஆனா தொடர்ந்து வரது… அப்படின்னா ஒரு தடவ ஃபிட்ஸ் வந்துட்டு சின்ன கெப்ல திரும்ப ஃபிட்ஸ் வரும் போது அந்த தாக்கத்துல இருந்து ப்ரைன் மீட்கப்படுவதை அது குறைக்கும்… 

 

இதனால கோமா ஏற்படும்.

 

இதுல கூட சிதாராவுக்கு ஃபிட்ஸ் வந்துட்டு அவ அதுல இருந்து வெளி வர முன்னாடியே திரும்ப ஃபிட்ஸ் வருது… அதனால அவ கோமா ஸ்டேஜுக்கு போறதா தான் சொல்லி இருக்கேன்…

 

உங்க எல்லோருடையும் கேள்விக்கு பதில் கிடைச்சிடுச்சுன்னு நினைக்குறேன்… இன்னும் ஏதாவது க்ளியர் இல்லன்னா கேளுங்க… நான் கண்டிப்பா விளக்கம் கொடுக்குறேன்… ☺️ நன்றி….

 

❤️❤️❤️❤️❤️

 

பிரணவ் சென்றதும் சிதாரா இருந்த அறைக்குள் நுழைந்தான் ஆர்யான்.

 

எப்போதும் தான் ஏதாவது சொன்னால் தன்னுடன் ஒன்றுக்கொன்று பேசி சீண்டிக் கொண்டிருப்பவள் இன்றோ தன்னைக் கூட உணராது அமைதியாக படுத்து இருக்கிறாள்.

 

சிதாராவை இந் நிலையில் கண்ட ஆர்யானின் மனம் கனத்தது.

 

அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவனின் கன்னம் தாண்டி கண்ணீர் வடிந்தது.

 

அவள் கரத்தை எடுத்து தன் கைக்குள் வைத்துக் கொண்ட ஆர்யான் இத்தனை நாளும் தன் மனதில் பூட்டி வைத்திருந்தை எல்லாம் சிதாராவிடம் கொட்ட ஆரம்பித்தான்.

 

“மினி… நான் இது வரைக்கும் உன் கிட்ட இதெல்லாம் சொல்லி இல்ல… ஆனா இப்போ தோணுது முன்னாடியே உன் கிட்ட எல்லாம் சொல்லி இருக்கலாமோன்னு… உனக்கு ஒன்னு தெரியுமா மினி… உன்ன முதன் முதலா பாத்த அந்த நிமிஷம் என் மனசுக்குள்ள இனம் புரியாத உணர்வு… அதுக்கு என்ன பேர்னு எல்லாம் அப்போ தெரியல… ஆனா எனக்கு அந்த ஃபீல் பிடிச்சிருந்தது… உன்ன பார்க்கும் போது நீ ரொம்ப ரிசர்வ்ட் டைப்னு நெனச்சேன்.. அதான் உன்ன கிண்டல் பண்ணி பேச வைக்க பாத்தேன்… பட் என்னால நீ ஃபிட்ஸ் வந்து கீழ விழுந்ததும் ரொம்ப கஷ்டமா இருந்தது மினி…” என்ற ஆர்யான் சிதாராவின் கரத்தில் முத்தமிட்டான்.

 

ஆர்யான், “நீ கண்ண தெறந்து என்னைப் பார்க்கும் வரை நான் நானாவே இல்ல மினி… என்னால தான் உனக்கு இப்படி ஆச்சுன்னு குற்றவுணர்வா இருந்தது… உன் கூட ஃப்ரென்ட் ஆக காரணமே எனக்கு உன் கூடவே இருக்கனும் தோணினது தான் மினி… அன்னைல இருந்து உன் கூட ஸ்பென்ட் பண்ண ஒவ்வொரு நொடியையும் பொக்கிஷமா சேமிச்சு வெச்சேன்… நீ என் லைஃப்ல கிடைச்ச வரம் மினி… உன் கிட்ட என்ன அட்ரேக்ட் பண்ணின முதல் விஷயம் என்ன தெரியுமா… உன்னோட நெத்தில இருந்த அந்த குட்டி பொட்டு… டர்டிஷனல் ட்ரஸ்ல தேவதை போல இருந்தாய்… இதுக்கெல்லாம் மேல ஸ்பேக்ஸயும் தாண்டி உன் கண்ணுல தெரிஞ்ச பதட்டம்… உன் முகத்துல இருந்த அப்பாவித்தனம்… விட்டா சொல்லிக்கிட்டே போவேன் நான்…” என்று விட்டு புன்னகைத்தான்.

 

ஆனால் அவனின் கண்களோ கலங்கி இருந்தன.

 

“அன்னைக்கு நீ உன் பாஸ்ட் பத்தி சொல்லும் போது எனக்கு பிரணவ் மேல அப்படி ஒரு வெறி… அப்போவே முடிவு பண்ணேன் என் லைஃப்ல என்ன சிச்சுவேஷனா இருந்தாலும் உன்ன மட்டும் மிஸ் பண்ணிற கூடாதுன்னு… பிரணவ் பண்ணினது ரொம்ப தப்பு தான் மினி… ஆனா அவன் அப்படி பண்ணலன்னா நீ எனக்கு கெடச்சி இருக்க மாட்ட… நீ ட்ரடிஷனலா ட்ரஸ் பண்றது தான் எனக்கு உன் கிட்ட ரொம்ப பிடிச்ச விஷயம்… ஆனா ஏதோ காரணம் சொல்லி நீ அதையும் சேன்ஜ் பண்ணிட்ட… எனக்கு உன்ன பழைய மாதிரி பார்க்க ரொம்ப ஆசையா இருந்தது… அதனால தான் இந்த சேரிய கிஃப்ட் பண்ணேன்… ஒன்னு தெரியுமா மினி… நீ சாப்பிட்டு தூக்கி போடுற சாக்லேட் கவர்ஸ கூட உனக்கே தெரியாம  நான் எடுத்து பத்திரப்படுத்தி வெச்சிருக்கேன்… சின்ன புள்ள தனமா இருக்குல்ல… நீ ஒரு தடவ ஷாப்பிங் போய்ட்டு வரப்போ உன்னோட ஜிமிக்கி காணாம போனதா  சொன்னியே… வர வழில அது விழுந்திடுச்சு.. நீ கவனிக்கல… ரொம்ப நாளா அந்த ஜிமிக்கி என்ன டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தது… அதை கூட நான் தான் எடுத்து வெச்சிருக்கேன்… நீ பேசும் போது கூடவே பேசும் உன்னோட கண்கள்… கைய ஆட்டிக்கிட்டே பேசுறது… என்ன அடிக்கடி முறைக்கிற இந்த கண்ணு… தப்பு பண்ணிட்டு அப்பாவியா முகத்த வெச்சிக்கிறது… இப்படி உன் பக்கத்துல இருந்து உனக்கே தெரியாம ஒவ்வொன்னா சைட் அடிச்சி இருக்கேன்…” எனக் கூறிப் புன்னகைத்தான் ஆர்யான்.

 

ஆர்யான் அவ்வாறு கூறும் போதே உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் வடித்தான்.

 

அவன் சிதாராவின் கரத்தைப் பார்த்து பேசிக் கொண்டிருந்ததால் ஆர்யான் பேசப் பேச மூடியிருந்த சிதாராவின் கண்களிலிருந்து வடிந்த கண்ணீரைக் கவனிக்கவில்லை.

 

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட ஆர்யான், “மினி… ஆரம்பத்துல எனக்கு உன் பக்கத்துலயே இருக்கனும்… உன் கூட டைம் ஸ்பென்ட் பண்ணனும்… உனக்கு எந்த கவலையும் வராம பாத்துக்கனும் இப்படி தான் நெனப்பேன்… ஆனா இது ஏன் எதுக்குன்னு எல்லாம் தெரியாது… ஆனா உனக்கு ஞாபகம் இருக்கா.. எங்க கல்யாணத்துக்கு முன்னாடி நீ ஒரு நாள் கோவத்துல என் கூட பேசாம இருந்தாய் தானே…” என்றவன் அன்று நடந்தைக் கூறினான்.

 

_______________________________________________

 

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சிதாரா, ஆர்யான் இருவருக்குமே விடுமுறை.

 

பல நாட்களாக சிதாரா ஆர்யானிடம் நியுயார்க்கில் மிகவும் பிரசித்தி பெற்ற Metropolitan Museum இற்கு அழைத்துச் செல்லக் கேட்டு இருந்தாள்.

 

ஆனால் ஆர்யான் வேலையில் பிஸியாக இருந்ததால் அவனால் சிதாராவை அழைத்துச் செல்ல முடியவில்லை.

 

அன்று இருவருக்கும் விடுமுறை என்பதால் முன் தினமே சிதாராவை அங்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுத்து இருந்தான்.

 

காலையிலேயே சிதாரா ஆவலுடன் தயாராகி ஆர்யானுக்காக காத்திருந்தான்.

 

ஆனால் நேரம் சென்றதே தவிர ஆர்யான் வரவில்லை.

 

பொறுத்துப் பொறுத்து பார்த்திருந்தவள் ஆர்யானுக்கு அழைத்துப் பார்க்க அழைப்பு ஏற்கப்படவே இல்லை.

 

மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய சற்று நேரத்தில் ஸ்விட்ச் ஆஃப் என்று வரவும் கடுப்பாகி விட்டாள்.

 

ஆர்யானுக்கு திடீரென ஆஃபீஸிலிருந்து மீட்டிங் என்று அழைப்பு வரவும் கிளம்பி விட்டான்.

 

இருந்த அவசரத்தில் சிதாராவிடம் கூட சொல்லவில்லை.

 

சரியாக அவன் மொபைலும் சார்ஜ் இல்லாமல் ஆஃப் ஆகி விட சிதாராவிடம் வாக்குக் கொடுத்ததையே மறந்து விட்டான்.

 

ஆர்யானின் வேலை முடியவே இரவானது.

 

அதன் பின் மொபைலை எடுத்துப் பார்க்க ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதைக் கண்டதும் தான் சிதாரா பற்றிய நினைவே வந்தது.

 

ஆர்யான், “ஷிட்…. இதை எப்படி மறந்தேன் நான்…” எனத் தலையில் கை வைத்தவன் அவசரமாக சிதாரா தங்கியிருந்த ஃப்ளாட்டிற்கு சென்றான்.

 

நெடு நேரம் அழைப்பு மணியை அழுத்த உள்ளிருந்த எந்தப் பதிலும் வரவில்லை.

 

மீண்டும் அழைப்பு மணியை அழுத்தக் கையை நீட்ட சரியாக கதவு திறக்கப்பட்டது.

 

சிதாரா கதவைத் திறக்கவும் ஆர்யான் அவளைப் பார்த்து இளித்து வைக்க அவனை முறைத்த சிதாரா வேகமாக கதவை அடைத்து பூட்டினாள்.

 

ஆர்யான் மினி மினி என அழைத்து கதவை தட்டித் தட்டி ஓய்ந்து போனவன் இதற்கு மேல் இரவு நேரத்தில் தான் இங்கு வெளியே நின்றால் சிதாராவுக்குத் தான் பிரச்சினை ஆகும் என சோகமாக வீட்டுக்கு கிளம்பினாள். 

 

வீட்டுக்குச் சென்றதும் முதலில் மொபைலை சார்ஜில் போட்ட ஆர்யான் சிதாராவுக்கு அழைத்தான்.

 

சிதாராவோ அவனின் அழைப்பைக் கண்டதும் துண்டித்து விட்டாள்.

 

மீண்டும் மீண்டும் அழைக்க கோவத்தில் மொபைலை ஸ்விச் ஆஃப் செய்து விட்டாள்.

 

ஆர்யான், “ஹ்ம்ம்… உனக்கு தேவை தான்டா இது… கொஞ்சம் கூட அறிவு இல்ல.. மினிக்கு கொடுத்த வாக்கை மறந்துட்டியே…” எனத் தன்னையே கடிந்து கொண்டவன் இரவு உணவைக் கூட உட்கொள்ளாது உறங்கினான்.

 

இங்கு சிதாராவோ, “என்னமோ பெரிய இவன் மாதிரி உன்ன அங்க கூட்டிட்டு போறேன் மினி… இங்க கூட்டிட்டு போறேன் மினின்னு கதை விட்டான்… ஒழுங்கா சொன்ன இடத்துக்கே கூட்டிட்டு போகல… அதை கூட மறந்துட்டான்… உன்ன இந்த விஷயத்துல மன்னிக்கவே மாட்டேன் ஜிராஃபி..” என ஆர்யானை வசை பாடியபடி இரவைக் கழித்தாள்.

 

மறுநாள் காலையிலேயே ஆர்யான் சிதாராவைக் காணச் செல்ல அவளோ ஏற்கனவே யுனிவர்சிட்டி கிளம்பி இருந்தாள்.

 

அவளது அறை மூடி இருக்கவும், “என்ன இவ சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டா… எப்போவும் நான் தானே அவள பிக்கப் பண்ணுவேன்…. ஓஹ்… மேடம் கோவமா இருக்கீங்களா… ” என நினைத்து சிரித்தவன் சிதாராவைப் பார்க்க யுனிவர்சிட்டிக்கே சென்றான்.

 

ஆர்யான் யுனிவர்சிட்டிக்கு வெளியே நின்று சிதாராவுக்கு அழைக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை.

 

பின் கேட் கீப்பரிடம் கூறி அவளை வெளியே வரக் கூற சிதாரா மறுத்து விட்டாள்.

 

அன்று முழுவதுமே ஆர்யானின் கண்ணில் படாமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தாள் சிதாரா.

 

அன்று முழுவதும் சிதாராவுடன் பேசாது அவளைப் பார்க்காது இருந்தது ஆர்யானிற்கு ஏதோ இழந்தது போல இருந்தது.

 

தன் வீட்டில் கவலையாக இருந்த ஆர்யான், “மினிய பார்க்காம அவ கூட பேசாம இருந்தது ஏன் எனக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கு… அப்படியே என் ஹார்ட்ல இருந்து ஒரு பார்ட்ட பிய்ச்சி போட்டது போல இருக்கே… எனக்கு என்ன ஆகிடுச்சு..” என தன்னையே கேள்வி கேட்டுக்கொள்ள,

 

“ஏன்னா நீ அவளை காதலிக்கிறடா லூசுப் பையா…” என அவனின் மனசாட்சி பதில் அளிக்கவும் அதிர்ந்தான் ஆர்யான்.

 

“நா… நான்… மினிய காதலிக்கிறேனா… ஆமா… அவள முதல் தடவ பார்த்ததுமே அவள் என் மனசுக்குள்ள வந்துட்டா… நான் தான் இவ்வளவு நாள் இந்த ஃபீலிங்க்கு என்ன பேருன்னே யோசிக்காம இருந்தேன்…. மினி…” எனப் புன்னகைத்தவன் கண்களை மூடிக் கொண்டு சிதாராவுடன் கழித்த பொழுதுகளை எண்ணிப் பார்த்தான்.

 

பல நாள் கழித்து டயரியைக் கையில் எடுத்தவன் தான் சிதாராவைக் காதலிப்பதை அதனுடன் பகிரப் பார்த்தவன் நினைவு வந்தவனாக,

 

“இல்ல… இதை நான் முதல்ல மினி கிட்ட தான் சொல்லனும்… அவளோட கண்ண பார்த்து சொல்லனும்… அதுக்கு அவளோட ரியாக்ஷன ரசிக்கனும்…” என நினைத்தவன் டயரியை மூடி வைத்தான்.

 

ஆர்யான், “என்ன பண்ணி அவள சமாதானப்படுத்தலாம்…” என வெகுநேரம் யோசித்தவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.

 

அடுத்த நாள் காலை யுனிவர்சிட்டி கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்த சிதாரா, “லூசு ஜிராஃபி… ஃப்ரெண்ட் கோவமா இருக்காளே அவள சமாதானம் பண்ணனும்னு அறிவிருக்கா… கொஞ்சம் நேரம் ட்ரை பண்ணிட்டு போய்ட்டான்… திரும்ப வருவான் தானே… அவனுக்கு இருக்கு..” என்றவள் வெளியேற கதவைத் திறக்க வாசலில் நின்றவனைக் கண்டு அதிர்ந்தாள்.

 

ஆர்யான் அவள் முன் கை ஆட்டவும் தன்னிலை அடைந்த சிதாரா அவனை முறைக்க,

 

ஆர்யானோ பட்டென நெடுஞ்சாண் கிடையாக அவள் காலில் விழுந்து விட்டான்.

 

“டேய்… வளர்ந்து கெட்டவனே… என்னடா பண்ற… முதல்ல எழுந்திரிடா.. யாராவது பார்த்துட போறாங்கடா..” என சிதாரா பதறியபடி கூற,

 

“சாரி மினி… நேத்து சடன்னா ஆஃபீஸ்ல இருந்து கால்.‌.. அர்ஜன்ட் மீட்டிங்னு சொல்லி… அதான் இருந்த டென்ஷன்ல உன்ன மியூசியம் கூட்டிட்டு போறேன்னு சொன்னதையே மறந்துட்டேன்…” என்றான் ஆர்யான்.

 

சிதாரா, “நீ இப்போ எழுந்திரிக்கலன்னு வை… என்னைக்குமே உன்ன மன்னிக்க மாட்டேன் ஜிராஃபி…” என மிரட்டவும் அவசரமாக எழுந்து கொண்டான்‌.

 

சிதாரா ஆர்யானை முறைத்து விட்டு உள்ளே செல்ல அவளைப் பின் தொடர்ந்த ஆர்யான்,

 

“பேசு மினி… அதான் சாரி சொல்றேன்ல… பேசுடி…” எனக் கெஞ்ச சிதாராவோ உதட்டை சுழித்தாள்.

 

ஆர்யான், “வேணும்னா நான் தோப்புக்கரணம் போடவா..” என்றவன் இரு காதையும் மாற்றி பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட,

 

ஆர்யானின் செய்கையில் வந்த சிரிப்பை அவன் காணாதவாறு அடக்கினாள் சிதாரா.

 

சற்று நேரம் கழித்து ஆர்யான், “முடியல மினி… சாரி.. மன்னிச்சிட்டேன் சொல்லு… எங்க அம்மா கூட என்ன இப்படி பண்ண வெச்சி இல்லடி… ” என சோகமாகக் கூறவும் அவனைப் பார்த்து சிரித்த சிதாரா,

 

“சரி சரி போதும் எழுந்திரு.. மன்னிச்சிட்டேன்… ரொம்பத் தான் சீன் போடுற..” என்றாள்.

 

தோப்புக்கரணம் போடுவதை நிறுத்திய ஆர்யான் அவளை நெருங்கி, “நிஜமா மன்னிச்சிட்டியா மினி… என் மேல இருந்த கோவம் போயிடுச்சா…” என கண்கள் மின்னக் கேட்கவும்,

 

எக்கி அவனின் தலை முடியைக் கலைத்து விட்ட சிதாரா, 

 

“உன் கிட்ட எப்படி ஜிராஃபி நான் கோவமா இருக்க முடியும்… நீ தான் ஏதாவது கோமாளித்தனம் பண்ணி என்னை சிரிக்க வெச்சிடுவியே… நீ அன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொல்லிட்டு வராம இருந்தியே.. அதான் உன்ன கொஞ்சம் சுத்தல்ல விட்டேன்…” என்றாள்.

 

ஆர்யான், “தேங்க் யூ மை டாலி…” என சிதாராவை அணைத்துக் கொண்டான்.

 

ஆர்யானின் டாலி என்ற அழைப்பில் புருவம் சுருக்கிய சிதாரா, “என்னடா புதுசா டாலின்னு எல்லாம் சொல்ற… என்னாச்சு..” என்க,

 

அவளை விடுவித்தவன், “டேய் ஆரு… உணர்ச்சி வசப்பட்டுட்டியே… சீக்கிரம் ஏதாவது சொல்லி மினிய சமாளிடா..” என நினைத்தன் அவளைப் பார்த்து சிரித்தான்.

 

பின், “அது ஒன்னுமில்ல மினி.. சும்மா தான்… ஆமா நீ எங்க கிளம்பிட்ட..” எனப் பேச்சை மாற்ற,

 

“உன் கூட பேசிட்டு இருந்ததுல அதை கூட மறந்துட்டேன் பாரு… யுனிக்கு தான் கிளம்பினேன்..‌டைம் ஆச்சு… என்ன ட்ராப் பண்ணி விடு..” என்றாள் சிதாரா.

 

ஆர்யான், “இன்னைக்கு யுனி கட் பண்ணிடு மினி.. நானும் லீவ் போட்டுட்டேன்…” என்க,

 

அவனைப் புரியாமல் பார்த்த சிதாரா, “எதுக்கு ஜிராஃபி லீவ் போடனும்..” என்றாள்.

 

அவளைப் பார்த்து புன்னகைத்த ஆர்யான், “Metropolitan Museum போலாம்…” என்க சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் சிதாரா.

 

அன்றைய நாள் முழுவதும் சிதாராவுடனே கழித்த ஆர்யான் சிதாரா அறியாமல் அவளை ரசித்தான்.

 

_______________________________________________

 

அன்றைய தினத்தைப் பற்றி சிதாராவிடம் கூறிய ஆர்யான், “அதுக்கப்புறம் பிரணவ்வால உனக்கு ஏதாவது ஆபத்து வரும்னு தான் நம்ம கல்யாணம் பண்ணிக்க மாமா கிட்ட பேசினேன்… இந்த கொஞ்சம் நாளா நீ காட்டின நெருக்கத்துல ரொம்பத் தவிச்சிட்டேன்… காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டும் அதை உன் கிட்ட சொலல் முடியாம இருந்தேன்.. யாராலையும் உனக்கு எந்தக் கஷ்டமும் வரக் கூடாதுன்னு நெனச்சேன்… ஆனா கடைசியில என்னாலையே நீ இன்னெக்கி இந்த நிலமைல இருக்க…” என்று அழுதவன்,

 

“மினி… நான் உன்ன காதலிக்கிறேன்… உன் மேல பைத்தியமா இருக்கேன்… ஐ லவ் யூ மினி… யூ ஆர் மை பேபி டால்… நீ தான் எனக்கு எல்லாமே மினி… உனக்கு ஒன்னுன்னா நிச்சயம் என்னால தாங்க முடியாது மினி.. ப்ளீஸ் என் கிட்ட திரும்ப வந்துடுடி… நீ இல்லாம சத்தியமா என்னால வாழ முடியாது… எனக்கு நீ வேணும் மினி… லைஃப் லாங் வேணும்… என் ஃப்ரென்டா… என் லைஃப் பார்ட்னரா.. என் சண்டக்காரியா… எனக்கு அம்மாவா எல்லாமுமா நீ வேணும்டி… எழுந்திரு மினி… எழுந்து என் கூட சண்டை போடு… பேசு மினி…” என்று கண்ணீர் வடித்தவன் சிதாராவின் வயிற்றில் தலை வைத்து ஒரு கரத்தில் அவள் கரத்தைப் பிடித்துக் கொண்டவன் மறு கரத்தால் சிதாராவைச் சுற்றி கை போட்டு அணைத்துக் கொண்டான்.

 

ஆர்யானின் சூடான கண்ணீர்த்துளிகள் சிதாராவின் வயிற்றை நனைக்க அவள் விரல்கள் மெதுவாக அசைந்தன.

 

❤️❤️❤️❤️❤️

 

சாரி மக்களே… யூடி லேட் ஆகிடுச்சு… ஃபைனல் எக்சேம் நெருங்கிடுச்சு… ஸ்டடீஸ்ல கொஞ்சம் பிஸியா இருக்கேன்… அதான் யூடி டைப் பண்ண டைம் கிடைக்கல… 

 

– Nuha Maryam –

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
0
+1
0
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    1 Comment

    1. மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர் அனைவரும். காதலோடு சேர்த்து குடும்ப உறவுகளின் உணர்வுகளை உணர்த்திய தங்களின் எழுத்து நடையும், வசனமும் மிகவும் அசத்தல். இனிமையாக அதே நேரம் அழுத்தமாக அமைந்தது கதைக்கரு. மேலும் பல பல படைப்புகளுடன் எழுத்தாளரை எதிர்பார்க்கிறேன். மனம் நிறைந்த வாழ்த்துகள்.