Loading

 

 

எபிலாக்

 

சில வருடங்களுக்குப் பிறகு…

 

“ஹே வாலுங்களா,  எங்க இருக்கீங்க ரெண்டு பேரும்? என்னை அலைய வைக்குறதே பொழப்பா போச்சு!” என்று புலம்பிக் கொண்டே எங்கள் அறையை மீண்டும் அடைந்தேன்.

 

ஆம் மீண்டும்! முதலில் இங்கிருந்து தான் என் தேடல் துவங்கியது. வீடு முழுவதும் தேடிய பின்னும் பலனில்லாததால் மீண்டும் அறைக்கே வந்துவிட்டேன்.

 

அங்கு ராகுலோ அவனிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவாறு ‘ஹாயாக’ கிளம்பிக் கொண்டிருந்தான்.

 

“ஹ்ம்ம், நான் மட்டும் இன்னும் கிளம்பாம அந்த வாலுங்களை தேடிட்டு இருக்கேன். சார் அதுக்குள்ள கிளம்பியாச்சு!” என்று முணுமுணுத்துக் கொண்டே கட்டில் அருகில் குனிந்து தேடினேன்.

 

“உஃப், நான் சின்ன வயசுல பண்ணதை எனக்கே ரெண்டு மடங்கா திருப்பி கொடுக்குதுங்க. ஷப்பா முடியல!” என்று மீண்டும் முணுமுணுத்தவாறே நிமிர்ந்தேன்.

 

அங்கு பின்னிருந்து என்னை இடையோடு கட்டிக்கொண்டு என் காதில் அவன் இதழ் உரச, “எனி ஹெல்ப் பப்ளி?” என்றான்.

 

அவன் பெர்ஃப்யூம் வாசத்திலும் அணைப்பின் மென்மையிலும் மயங்க துடித்த மனதை கடிவாளம் இட்டு கட்டிவைத்து அவனை கஷ்டப்பட்டு விலக்க முயன்றேன். முயற்சி மட்டுமே! அதற்கு அவன் சிறிதும் அசைந்தானில்லை.

 

“மேடம் என்ன ரொம்ப டென்ஷனா இருக்கீங்க போல! உன்னை ரொம்ப படுத்துறாங்களா குட்டீஸ் ரெண்டும்?” என்று அவன் வினவ, “ம்ம்ம், நீங்களும் ஒன் வீக் அங்க இங்கன்னு போயிடுறீங்க. அத்தைக்கும் இவங்களை சமாளிக்குறது கஷ்டம். சாண்டி வேற ஆஃப்டர் பிரெக்னன்சி பிரேக் எடுத்துருக்கா. இந்த சிசுவேஷன்ல பசங்க வேற சேட்டை பண்றாங்க. சில நேரங்கள்ல குட்டிப் பசங்க இந்த வயசுல  சேட்டை தான் பண்ணுவாங்கன்னு பொறுமையா இருந்தாலும், பல நேரங்கள்ல என்னையும் அறியாம கோபப்படுறேன்.  இப்போவே ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கேனோ? அப்படி இருந்தா பசங்க என்கிட்ட ஒட்டாமையே போயிடுவாங்களோன்னு பயமா இருக்கு ரணு! நான் வேணா கொஞ்ச நாள் பொடிக்லயிருந்து பிரேக் எடுக்கவா?” சில நாட்களாக என் மனதை அரித்துக் கொண்டிருந்த விஷயத்தை அவனிடம் கூறினேன்.

 

“சாரி நிது மா,  நீ எவ்ளோ நாள் இதை நினைனச்சு கஷ்டப்பட்டியோ? நானும் வேலை டென்ஷன்ல உன்னையும் குட்டீஸையும் சரியாவே கவனிக்கல. நீ எதுக்கு டா பிரேக் பத்தியெல்லாம் யோசிக்கிற? இனிமே நானும் கொஞ்சம் சீக்கிரம் வந்து நம்ம குட்டீஸை பார்த்துக்குறேன். பப்ளி நீ தேவை இல்லாம பயப்படுற. நீ திட்டி கொஞ்ச நேரம் தான் ரெண்டும் கோவமா இருக்குதுங்க. அடுத்த நிமிஷமே நீ வேணும் அவங்களுக்கு! விளையாட, சாப்பிட, தூங்க எல்லாத்துக்கும் நீ வேணும். அப்பறம் எப்படி உங்கிட்ட ஒட்டாம இருப்பாங்க? உண்மைலேயே நீ நம்ம பசங்களை எவ்ளோ அழகா ஹேண்டில் பண்ற தெரியுமா? இனிமே நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன். ஆனா, அதுக்கு  எனக்கு எனர்ஜி ஏத்துற மாதிரி ஏதாவது வேணும்.”

 

அதுவரை அவன் சொன்னவற்றை காதலுடன் கேட்டுக் கொண்டிருந்த நான், அவன் கடைசியாக கூறியதைக் கேட்டதும் திரும்பி பொய்யாக முறைத்தேன்.

 

“ஓய் என்ன, உனக்கு டென்ஷன்ஸ் குறையணுமா வேண்டாமா?” என்று அவன் கண்ணடிக்க, “போற போக்க பார்த்தா, டென்ஷன்ஸ் குறைக்குற மாதிரி இல்ல, ‘டென் சன்ஸ்’ தான் உருவாவாங்க போல!” என்று முணுமுணுக்க, “ஹே பப்ளி இது கூட நல்ல ஐடியா தான். பத்தா இருந்தா அது பழகிடும்ல!” என்றான் அவன்.

 

அதை கேட்டு அவனை அடிக்க துரத்த, சிறிது நேரம் எனக்கு ஆ(ஓ)ட்டம் காட்டியவன், கடைசியில் என்னை மீண்டும் அவன் கைவளைவிற்குள் கொண்டு வந்தான்.

 

“என் பப்ளிக்கு இப்போ டென்ஷன் குறைஞ்சுருச்சா?” என்று என்னை அவன் மார்பில் சாய்த்தபடி வினவ, “ம்ம்ம்…” என்றவாறு அவனை இறுக்கி கட்டிக் கொண்டேன்.

 

“அப்போ சரி இன்னைக்கு கோட்டாவ ஆரம்பிச்சுடலாமா?”

 

“என்ன கோட்டா?”

 

“ம்ம்ம் கிஸ் கோட்டா! நீ தரயா, இல்ல நானே தரட்டா?”

 

“ஹலோ, நான் அதுக்கு ஒத்துக்கவே இல்ல.”

 

“நீ ஒத்துகிட்டா என்ன ஒத்துக்காட்டி எனக்கென்ன? எனக்கு எப்படி வசூலிக்கணும்னு தெரியும்.” என்றவாறு கைகளை மேலே தூக்கி நெட்டி முறித்தான்.

 

‘ஒரு கிஸ்ஸுக்கு எதுக்கு இவ்ளோ ஓவரா சீன் போடுறான்?’ அதை வெளியே கேட்கவும் செய்தேன்.

 

“கிஸ்னா கிஸ் மட்டுமா?”

 

“ஹே பேட் பாய், நான் டிரஸ் மாத்திட்டேன்.”

 

“ஹே நான் கிஸ் அண்ட் ஹக்னு சொல்ல வந்தேன். மேடம் வேறெதோ நினைச்சீங்க போல!”

 

“எப்போ பார்த்தாலும் என் வாயை கிண்டுறதே வேலையா போச்சு!”

 

“இதுக்கு தான் நீயே பண்ணுன்னு சொன்னேன்.”

 

நானும் அவன் கன்னத்தில் பட்டும் படாமல் முத்தம் வைக்க, “என்னாது இது?” என்றான் வேகமாக.

 

“ஹ்ம்ம் கிஸ்ஸு!” என்று நான் உதட்டை குவிக்க, “நான் உனக்கு சரியாவே ட்ரைனிங் கொடுக்கல போலயே. ஹ்ம்ம், இப்போ கொடுத்துட்டா போச்சு.” என்றவாறே என்னை நெருங்கி, என்னிரு கன்னங்களையும் பற்றி என் இதழை நோக்கி குனியும் வேளை, “நண்டிட்டா…ஆ…” என்ற அலறலில் அடித்துப் பிடித்து விலகினோம் இருவரும்.

 

அங்கு வாசலில், தன் முயல் குட்டி கண்களை உருட்டியவாறு எங்களை முறைத்துக் கொண்டிருந்தாள் எங்களின் செல்ல மகள் பூர்வி. அவள் அருகில் அவளின் கைப்பிடித்து அவளிற்கு சற்றும் சளைக்காதவாறு முறைத்துக் கொண்டிருந்தான் எங்களின் செல்ல மகன் ப்ரித்வி.

 

ஒரு நொடி திகைத்த நான், இத்தனை நேரம் அவர்களை தேடித் தேடி ஏற்பட்ட சோர்வினால், சிறிது கோபத்துடன், “என்ன டி வாலு? என்னையே பேரு சொல்லி கூப்பிடுற! அதுவும் என் பேரை யாரும் இவ்ளோ கொடுமை படுத்திருக்க மாட்டாங்க.” என்று கத்த, “இது தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சொல்றது. சின்ன வயசுல எங்களை எவ்ளோ பாடு படுத்துன? அதான் உன் பிள்ளையும் உன்னை விட இரு மடங்கு வாலா இருக்கு!”  என்றவாறே வந்தான் அபி.

 

அவன் அப்படி சொல்லவும், நானும் ராகுலும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம்.

 

*****

 

நான் நிறைமாதமாக இருந்த நேரம்…

 

“நிது மா, இந்த நேரத்துல மனைவிக்கு வர ஆசையெல்லாம் கணவன் நிறைவேத்தி வைக்கணுமாமே. உனக்கு அப்படி ஏதாவது ஆசை இருக்கா?” என்று எதிர்பார்ப்புடன் அவன் கேட்க, “அது… வந்து…” என்று எப்படி சொல்வதென்று தெரியாமல் இழுத்தேன்.

 

“ஹே பப்ளி, என்கிட்ட சொல்ல உனக்கு என்ன தயக்கம்?” என்று அவன் வினவ, “ம்ம்ம் நம்ம இந்த குழந்தையோட இன்னொரு குழந்தையையும் தத்தெடுத்து வளர்க்கலாமா?” என்றேன் சற்று தயங்கியவாறே.

 

அவன் முகம் யோசனையை தத்தெடுக்க… “சாரி ரகு, உங்களுக்கு பிடிக்கலைனா வேண்டாம்.” என்று நான் சொல்ல, “ஹே நிது மா… எவ்ளோ நல்ல விஷயத்தை சொல்லிருக்க. நான் கூட இப்படியெல்லாம் யோசிச்சது இல்ல. நான் யோசிச்சது கூட, தத்தெடுக்க என்னென்ன ஃபார்மாலிட்டிஸ், அப்பறம் தத்தெடுக்குறது குழந்தை பொறந்தவுடனே தத்தெடுக்கலாமான்னு தான் யோசிச்சேன்.” என்றதும், அவனை கட்டிக்கொள்ள முடியாததால் அவனை பாவமாக பார்க்க, அவனோ புன்னகையோடு என்னை பின்னிலிருந்து அணைத்துக் கொண்டான்.

 

இவ்வாறு ப்ரித்வி பிறந்த அன்று ஒரு அநாதை ஆஸ்ரமத்தில், பிறந்து சில மணி நேரத்திலேயே அங்கு விடப்பட்ட குழந்தையான பூர்வியை தத்தெடுத்தோம்.

 

இது எங்களின் நெருங்கிய வட்டத்தினரை தாண்டி வேறு யாருக்கும் தெரியாது. அவர்களை பொறுத்தவரை பூர்வியும் ப்ரித்வியும் அன்-ஐடென்டிகல் ட்வின்ஸ்!

 

*****

 

நாங்கள் இருவரும் கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்திற்கு வர, அங்கு பூர்வி மற்றும் ப்ரித்வியை கிளப்பிக் கொண்டிருந்தான் அபி. இருவரும் சரியான மாமா பைத்தியம்! அவன் எது சொன்னாலும் கேட்டுக் கொள்வார்கள்.

 

“எப்படி டா அண்ணா, உன்கிட்ட மட்டும் இவ்ளோ சமத்தா இருக்காங்க? இவங்களை கிளப்ப ஒரு மணி நேரமா போராடுறேன். ஆனா உன்கிட்ட பத்தே நிமிஷத்துல கிளம்பிடுறாங்க. அப்படி என்ன டா அண்ணா பண்ண என் பசங்கள?” என்று நான் வினவினேன்.

 

“அவங்க பிள்ளையயும் இவன் தான பார்த்துக்குறான். அதான் அந்த எக்ஸ்பிரியன்ஸா இருக்கும். என்ன அபி கரெக்ட்டா?” என்று ராகுல் கூற, “ஹே சும்மா இரு டா, அவ காதுல விழுந்துடப் போகுது. இப்போ தான் அங்கேயிருந்து எஸ்கேப் ஆகி இங்க வந்திருக்கேன்.” என்றான் அபி.

 

“என்ன டா அண்ணா ஆச்சு?”

 

“எப்பவும் போல தான், அவளுக்கு கரெக்ட்டா ட்ரெஸ் சூஸ் பண்ணி கொடுக்கலையாம். அபு குட்டியை மட்டும் கரெக்டா கிளப்பிடுறேனாம். அதுக்கு காலைலயிருந்து ஒரே புலம்பல் தான்!” என்றான்.

 

சலிப்பாக கூறுவது போல இருந்தாலும், அவேன் உள்மனம் மகிழ்வுடனே இருந்தது என்பதை அவன் முகம் காட்டிக் கொடுத்தது.

 

“க்கும், என்ன அங்க சத்தம்?” என்று ப்ரியாவின் குரல் கேட்க, “ரியா பேபி உன்னை பத்தி தான் டா பெருமையா சொல்லிட்டு இருந்தேன்.” என்று உடனே சரணடைந்தான்.

 

அவர்களின் சண்டையில் தலையிடாமல் அவள் கையிலிருந்த ஆறு மாதக் குழந்தையான அபூர்வாவை வாங்கி கொஞ்சிக் கொண்டிருந்தேன்.

 

நான் அபூர்வாவை தூக்கி வைத்திருப்பதை பார்த்ததும், கோபத்தில் என்னை விட்டு தள்ளியிருந்த பூர்வி மெல்ல என்னிடம் வர, அவள் பின்னாடியே வால் பிடித்துக் கொண்டு ப்ரித்வியும் வந்தான்.

 

ஆனால், நானோ அவர்களை கண்டு கொள்ளாமல் இருப்பதை போன்று நடிக்க, சிறிது நேரம் பொறுத்திருந்த என் பொறுமைசாலி மகள், “நித்தும்மா, பாப்பா எக்கு காமி…” என்க, அருகிலிருந்த ப்ரித்வியும், “எக்கும் எக்கும்…” என்று ஒத்தூத, சிரிப்பை அடக்கிய நான், “நீங்க தான் என்மேல கோபமா இருக்கீங்கள.” என்றேன்.

 

உடனே, “பூவி பாப்பா கோம் இல்ல.” என்று அவள் கூற, அவனும், “பித்வி பாப்பா கோம் இல்ல.” என்று கூறினான். அதை கேட்ட அனைவரும் நகைத்தோம்.

 

பின் இருவருக்கும் சமமாய் கீழே அமர்ந்து, அபூர்வாவை மடியில் படுக்க வைத்து அவர்களை பார்க்கச் செய்தேன்.

 

இருவரும் அப்பிஞ்சின் இரு கைகளை பற்றிக் கொள்ள அந்த குட்டியோ தன் பொக்கை வாயை திறந்து சிரித்தது…

 

“பபிம்மா (பப்ளி தான் இங்கு பபி ஆகிவிட்டது)” என்றவாறே வந்தான் ஷீலாவின்  மூன்று வயது மகன் மிதுன்.

 

“ஹே மிது குட்டி, வாங்க வாங்க… அம்மா எங்க?” என்று நான் வினவ, “ம்மா தாத்தா பாட்டி கூட டாட்டா போயிட்டாங்க.” என்றான் அவன்.

 

நான் ப்ரியாவை பார்க்க, “ஆமா நதி, அவ அவங்க கூட முன்னாடி போறேன்னு சொன்னா. சார் அவகிட்டயிருந்து எஸ்கேப்பாகி வந்திருப்பாங்க.” என்றாள்.

 

ஷீலா இப்போது ஒரு நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறாள். தனி மனித ஒழுக்கம் இல்லாததால் தான் தற்போதைய இளம் வயதினர் கெட்டுப் போகிறார்கள், அதற்கு காரணம் அவர்களின் பெற்றோர்களின் சரியான வளர்ப்பின்மை தான் என்பது அவள் மனதில் பதிந்து போனதால், அவள் எப்போதும் மிதுனிடம் கண்டிப்பே காட்டுவாள்.

 

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டோம். ஆனால் அதற்கு, “என்னை மாதிரி நிலைமை, வேற எந்த பொண்ணுக்கு என் பையனால வரக்கூடாது. அதுக்கு இப்படி இருக்குறது தான் கரெக்ட்.” என்று பேசி எங்களை சரி கட்டிவிடுவாள்.

 

அதனால் மிதுன் மற்ற எல்லாருக்கும் செல்லப் பிள்ளையானான். எங்கள் வீட்டில் முதல் குழந்தை என்பதால் கூடுதல் செல்லம். அவன் அம்மாவிடம் மட்டும் சிறிது பயம் இருக்கும். நான் அவன் வயிற்றில் இருக்கும்போதே அவனிடம் பேசியதாலோ என்னவோ, சிறு வயதிலிருந்தே என்னிடம் நன்றாக ஒட்டிக்கொள்வான்.

 

பூர்வியும் ப்ரித்வியும், இவன் பின் மிது மிது என்று சுற்றுவார்கள். இவனும் அவர்களை விட ஒன்றரை வயதே மூத்தவனாக இருந்தாலும், பொறுப்பாக பார்த்துக் கொள்வான்.

 

“எல்லாரும் கிளம்பலாமா?” என்றான் ராகுல்.

 

நாங்கள் பதில் சொல்வதற்குள், பூர்வியும் ப்ரித்வியும், “நா தா முன்னாடி…” என்று கத்திக் கொண்டே ஓட, மிதுன் அவர்களின் பின், “ஓடக் கூடாது புவி, ரித்து…” என்று கத்திக் கொண்டே ஓடினான்.

 

நாங்கள் சிரித்துக் கொண்டே பின் தொடர்ந்தோம்.

 

அங்கு யார் முன் பக்கம் உட்காருவது என்று பெரிய போட்டியே நடந்தது. பூர்வியும் ப்ரித்வியும் நான் – நீ என்று சண்டை போட, மிதுன் பாவமாக அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“ரெண்டு பேரும் முன்னாடி உட்காருங்க.” என்றால், அதற்கும் “நா மட்டும்… நா மட்டும்…” என்று அடம்பிடிக்க, பொறுத்து பார்த்த நான், “நானும் அபு குட்டியும் தான் முன்னாடி உட்காரப் போறோம்.” என்று சொன்னதும், அவர்கள் இருவரும் அழுகைக்கு தயாராக, அபியோ, “நதி, இப்போ எதுக்கு ரெண்டு பேரையும் அழ வச்சுட்டு இருக்க?” என்று என்னை அதட்டினான்.

 

“அதென்ன இப்போவே இவ்ளோ அடம்?” என்று நான் கேட்க, “ஏன் நீ கூட தான் என்கிட்ட சண்டை போட்ட!” என்றான் அபி.

 

“அபிண்ணா…” கடந்த கால நினைவுகளில் சிணுங்கினேன் நான்.

 

ஒரு வழியாக போகும்போது பூர்வியும் மிதுனும் முன்பக்கம் உட்காருமாறும் வரும்போது ப்ரித்வியும் மிதுனும் உட்காருமாறும் ஒரு சமாதான உடன்படிக்கைக்கு ஒத்துக்கொள்ள வைத்தான் ராகுல்.

 

*****

 

அந்த மண்டபத்தில் கார் நின்றதும், குட்டீஸ் அனைவரும் குதித்திறங்கி ஓட, பின்னாடி அபுவை கையில் வைத்தவாறு இறங்கிய நான், “மெதுவா போங்க… விழுந்துடாதீங்க.” என்று கத்தினேன்.

 

அங்கு வரவேற்பாய் வைக்கப்பட்டிருந்த அலங்கார பலகையில், “ஆனந்த் வெட்ஸ் நேஹா” என்று மலர்களால் எழுதப்பட்டிருந்தது.

 

ஆம் மூன்று வருடங்கள் கழித்து இன்று தான் அவர்களின் திருமணம். என்ன தான் அவ்வப்போது ஆனந்த் எங்கள் ஒவ்வொருவரின் கல்யாணத்தின் போதும் தன் கவலைகளை வெளியே கொட்டினாலும், இத்தனை வருடங்கள், அவள் படிப்பை தொல்லை செய்யாமல், காத்திருந்து இதோ அவளை கரம் பிடிக்கப் போகிறான்.

 

உள்ளே சென்ற நாங்கள் அங்கு கண்ட காட்சி, மணமேடையில் ஆனந்தும் நேஹாவும் அமர்ந்திருக்க, ஆனந்தோ ஐயர் சொல்லும் மந்திரத்தை சொல்லாமல் நேஹாவை சைட்டடித்துக் கொண்டிருந்தான். அதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தோம் நாங்கள்.

 

அப்போது யாரோ என் தோளை தொட, அங்கு சாண்டி தன் இரண்டு மாதக் குழந்தை அக்ஷயுடன் நின்று கொண்டிருந்தாள்.

 

“ஹே சாண்டி, அண்ணா எங்க காணோம்?” என்று நான் அவளிடம் வினவ, “அவரு கார் பார்க் பண்ண போயிருக்காரு.” என்றாள் அவள்.

 

“இங்க தனியாவா வந்த?”

 

“இல்லையே ஜீவி…” என்று அவள் சுற்றி தேட, “ஹப்பா இப்போவாவது ஜீவின்னு ஒரு ஜீவனை கூட்டிட்டு வந்தோம்னு நினைச்சீங்களே!” என்று கூறியவாறு வந்தாள் ஜீவிதா. இப்போது ஜீவிதா இன்ஜினியரிங் ஃபைனல் செமஸ்டரில் இருக்கிறாள்.

 

அங்கு வந்த கிருஷ்ணா பொதுவாக எல்லாருக்கும் ஒரு ஹாய் சொன்னான்.

 

பின் அந்த திருமண கலாட்டாவில் எங்களை இணைத்துக் கொண்டோம்.

 

அவன் மேடை மீது செய்யும் அலப்பறைகள் தாங்காததால், மெதுவாக அவன் கவனத்தை ஈர்க்காதவாறு மேடைக்கு சென்றேன் நான்.

 

அப்போதும் அவன் கவனம் நேஹாவின் மீது மட்டுமே. மெல்ல அவன் அருகில் குனிந்து, “ஹே ஐயர் தாலி கொடுக்குறாரு பாரு, வாங்கி கட்டு!” எனவும், அவனும் அவளை பார்த்தவாறே தன் முன்னால் கைகளை தூக்கி தாலியை தேடினான்.

 

இன்னும் மந்திரத்தை முடிக்காத ஐயர், “இந்த புள்ளையாண்டான் என்ன பண்றான்?” என்று குழம்பியபடி கேட்க, பக்கத்திலிருந்த ஆனந்தின் அம்மாவோ, அவன் கைகளை பட்டென தட்டிவிட்டு, “டேய் ஒழுங்கா சுத்தி என்ன நடக்குதுன்னு பாரு டா. என் மானத்தை வாங்காத டா.” என்றார்.

 

அப்போதே சுயத்திற்கு வந்தவன், தன் முட்டாள் தனத்தை நினைத்து தலையை கோதியவாறு சமாளித்தான். அப்போது தான் என்னை கவனித்தான்…

 

‘இது உன் வேலையா?’ என்பது போல் பார்க்க, ‘ஆம், இதுவும் என் திருவிளையாடல்களுள் ஒன்று தான்!’ என்று அவனை நோக்கி பதில் பார்வை பார்த்தேன்.

 

அதற்கு பின்னும் கேலி கிண்டல்களுடன் அந்த திருமணம் முடிய, அனைவரிடமும் அவர்கள் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டிருந்தனர்.

 

சிறிது நேரத்தில் நாங்களும் மேடையேற, அந்த மேடையே களைக்கட்டியது.

 

அன்று புகைப்படம் எடுத்த அதே  போட்டோகிராஃபர்  தான் இன்றும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்.

 

“போட்டோ ப்ளீஸ்…” என்று அவர் கேட்க, “இன்னைக்கு எப்படி எங்களை பிரிக்கிறீங்கன்னு பார்க்குறேன் டா.” – இந்த குரல் ஆனந்தினது அல்லாமல் வேறு யாருடையதாக இருக்கும்?

 

அபி – ப்ரியா திருமணத்திலும் சரி, கிருஷ்ணா – சாண்டி  திருமணத்திலும் சரி அவனும் நேஹாவும் தனித்தனியாக தான் நின்றனர். அந்த கடுப்பில் தான் இப்போது இப்படி கூறினான்.

 

ஆனால், அதற்கும் ஆப்பு வைக்கும் விதமாக, ஆனந்த் – நேஹாவிற்கு நடுவில், பூர்வி, ப்ரித்வி மற்றும் மிதுன் நின்றிருக்க, அவனோ பாவமாக எங்கள் அனைவரையும் பார்த்தான்.

 

பின் என்னிடம், “அது எப்படி உன்னை மாதிரியே, உன் பசங்களும், என் லவ்வை பிரிக்குறதிலேயே குறியா இருக்காங்க?” என்று அவன் புலம்ப, அதில் அனைவரும் சிரிக்க, அந்த தருணமும், அழகிய புகைப்படமாக எடுக்கப்பட்டது.

 

ஒரு வழியாக கல்யாண கலாட்டாவை முடித்துவிட்டு, அனைவரிடமும் விடைபெற்று, வீட்டிற்கு வந்தோம்.

 

*****

 

இரவு…. அன்றைய நாள் அதிகம் விளையாண்டதால் ஏற்பட்ட களைப்பினால் படுத்ததும் உறங்கி விட்டனர் பூர்வி மற்றும் ப்ரித்வி.

 

அவர்களை தூங்க வைத்துவிட்டு, ராகுலை தேடினேன். அவனோ பால்கனியில் நின்று என்னுடைய ‘எக்ஸ்-ரூம்’மின் பால்கனியை பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“என்ன சார், இன்னும் எதிர் வீட்டு பொண்ணை சைட்டடிக்கிறதை விடலையா?” என்று நான் கேட்க, அவனோ என்னை மேலிருந்து கீழ்வரை விழுங்கும் பார்வை பார்த்துவிட்டு, “ஹ்ம்ம், என் வைஃப் என் உரிமை! நான் சைட்டடிப்பேன், இல்ல இப்படி ஹக் பண்ணுவேன், இல்ல இப்படி கிஸ் கூட பண்ணுவேன்.” – பண்ணுவேன் பண்ணுவேன் என்று சொல்லியே அனைத்தையும் செய்துவிட்டான்.

 

“ச்சே ஃப்ராட்!” என்று அவனை செல்லமாக கொஞ்சிக் கொண்டேன்.

 

“பப்ளி, நீ ஹாப்பியா இருக்கீயா?” என்று அவன் கேட்க, ‘இப்போ எதுக்கு?’ என்னும் விதமாய் அவனை பார்த்தேன்.

 

அவனோ ‘பதில் கூறு’ என்று மௌனமாய் என்னையே பார்த்திருந்தான்.

 

“எனக்கென்ன ரொம்ப ஹாப்பியா இருக்கேன். என்னோட அன்பான அப்பா – அம்மா, எப்பவும் சண்டை போட்டாலும் பாசமா இருக்குற அண்ணன், எப்பவும் என்னோடு சேர்ந்து சேட்டை பண்ற என் பிரெண்ட்ஸ், என்னை சமத்தா ஹேண்டில் பண்ற மாமியார், எனக்குன்னு க்யூட்டா ரெண்டு குட்டீஸ், எல்லாத்துக்கும் மேல, எனக்கு ஆல்-இன்-ஒன்னாக இருக்கும் என் ஹல்க், இப்படி இத்தனை பேர் என்னை பார்த்துக்க இருக்கும்போது, நான் எப்படி சந்தோசம் இல்லாம இருப்பேன்?” என்றேன் மன நிறைவோடு.

 

“இன்னைக்கு என்ன ஸ்பெஷல் தெரியுமா?” என்று அவன் கேட்க, ‘நாளைக்கு என்ன ஸ்பெஷல்னு கேட்டா  அதுல ஒரு நியாயம் இருக்கு.   (நாளை எங்களின் மூன்றாவது ஆண்டு திருமண நாள்)’ இவ்வாறு நான் யோசித்துக் கொண்டிருக்க, அவனோ என்னை கண்டு கொள்ளாமல் அவனே பேச ஆரம்பித்தான்… “மூணு வருஷத்துக்கு முன்னாடி, இதே நாள் இதே டைம்ல தான் அங்கேயிருந்து” என்று எதிர் வீட்டு பால்கனியைக் காட்டி, “என் பப்ளி எனக்கு ‘ஐ லவ் யூ’ சொன்னா.” என்றான்.

 

நான் அவனையே காதலுடன் பார்த்திருக்க, அவன் என்னை அவன் கைப்பிடிக்குள் கொண்டுவந்து, “எனக்கு எப்படி இருந்துச்சு தெரியுமா? நான் தான் இந்த உலகத்துலயே ரொம்ப ஹாப்பியான பெர்ஸன் மாதிரி இருந்துச்சு.  அன்னைக்கு மட்டும் உன்னை பார்க்காம இருந்துருந்தா, என் லைஃப் எப்படி இருந்துருக்கும்னு யோசிச்சு பார்க்கவே பயமா இருக்கு. நீ உண்மைலேயே ஒரு ஏஞ்சல் தான்.” என்றான் என்னை இறுக்கி கட்டிக் கொண்டு.

 

அவன் உணர்ச்சி வயப்பட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து அவன் முதுகை  வருடி அவனை சமன்படுத்த முயன்றேன்.

 

“என் மனசுல ஏஞ்சலா நினைச்சுட்டு இருந்த உன்னையே லவ் பண்ணி, உனக்காக வெயிட் பண்ணி, இப்போ கல்யாணமும் பண்ணி, நமக்கு ரெண்டு குட்டீஸ் இருக்காங்கங்கிறத என்னால நம்பவே முடியல. எல்லாம் கனவு மாதிரி இருக்கு.”

 

அவனை இப்படியே விட்டால் சரிப்படாது என்று நினைத்து, “ஆமா என்னாலையும் நம்பவே முடியல!” என்றேன்.

 

அதை கேட்ட அவன் என்னை விலக்கி முகத்தை பார்க்க, நான் சிரிப்பை அடக்கிக் கொண்டு, “நான் எவ்ளோ குட்டி பொண்ணா இருக்கேன். எனக்கு ரெண்டு குட்டீஸ்னு என்னால நம்பவே முடியல!” என்றேன் உதட்டைப் பிதுக்கியவாறு.

 

அவனோ சிரித்துக் கொண்டே, “ஆஹான், நீ குட்டி பொண்ணா! சரி வா செக் பண்ணி பார்த்துடலாம்.” என்றான்.

 

“ச்சீ போடா ஹல்க்.” என்று சிணுங்கினாலும் வாகாக அவன் தோள்களில் சாய்ந்து கொண்டேன்.

 

கனவே தடுமாறி நடந்தேன்

நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே…

தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே…

மேலும் மேலும் உருகி உருகி

உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்?

ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

இதயத்தை என்ன செய்வேன்?

 

என்று அவன் பாட, அவனை நிமிர்ந்து பார்த்து கண்ணோடு கண் நோக்கி,

 

உன் விழிகளில் விழுந்து நான் எழுகிறேன்

எழுந்தும் ஏன் மறுபடி விழுகிறேன்

உன் பார்வையில் தோன்றிட அலைகிறேன்

அலைந்தும் ஏன் மறுபடி தொலைகிறேன்

ஓர் நொடியும் உன்னை நான் பிரிந்தால்

போர்க்களத்தை உணர்வேன் உயிரில்

என் ஆசை எல்லாம் சேர்த்து ஓர் கடிதம் வரைகிறேன் அன்பே

 

என்று நானும் பாட, அவன் என் நெற்றியில் முத்தம் பதித்தான். அது சொன்னது உன்னை எப்போதும் பிரியேன் என்று!

 

ஆம், அவன் என்னையும், நான் அவனையும் இறுதிவரை ஈர்த்துக் கொண்டே இருப்போம்!!!

 

இப்படிக்கு,

நந்திதா ராகுல் கிருஷ்ணன்…

 

முற்றும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
34
+1
2
+1
4

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்