Loading

 

 

ஈர்ப்பு 25

 

அபியும் ப்ரியாவும் பேசிக் கொண்டிருந்த வேளையில், எனக்கு போரடித்ததால், பால்கனியில் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது எதிர் வீட்டு வாசலில் ஆனந்த் பைக்கை நிறுத்துவது தெரிந்தது! நேஹா அங்கு இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது!

‘ஆஹா, பயபுள்ள அன்னைக்கு எஸ்கேப் ஆகிடுச்சு. இன்னைக்கு விடக் கூடாது!’ என்ற முடிவுடன் நான் இருந்த இடத்திலிருந்தே விசில் அடித்தேன். அவனோ சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, நடக்க ஆரம்பிக்க, மறுபடியும் விசில் அடித்தேன். இம்முறை என்னை கண்டுகொண்டான்.

அவனிடம் சைகையிலே மொட்டைமாடிக்கு வருமாறு கூறினேன். அவனோ சைகையிலேயே வேலை இருப்பதாகக் கூறினான். ஒரு நொடி அவனை முறைத்து விட்டு, ‘நேஹா’ என்று அழைக்கப் போக, அவன் தலையிலடித்துக் கொண்டு வருவதாக கூறினான்.

“என்ன சார், அன்னைக்கு ஏதோ மூட் சரி இல்ல. அதனால இன்வெஸ்டிகேஷனை விட்டுட்டேன். ஆனா, அதுக்கு அப்பறம் ஆளையே காணோம்!”

“அ.. அது வந்… வந்து நதி எனக்கு டைம் இல்ல!”

“ஓஹ், எதிர்த்த வீட்டுக்கு வர டைம் இருக்கு. ஆனா, இங்க வர டைம் இல்லயா?”

“அச்சோ இவ கிட்ட நானே வாயை கொடுத்து மாட்டிக்கிட்டேனே. இப்போ அங்க எதுக்கு போறன்னு கேட்பாளே?” என்று அவன் முணுமுணுக்க, “சார் என்ன முணுமுணுக்குறீங்க? சரி நான் இப்போ கூப்பிட்டதுக்கு வேலை இருக்குன்னு சொன்னீங்களே, அப்படி என்ன வேலை அந்த வீட்டுல உங்களுக்கு?” என்று அவன் நினைத்ததையே கேட்டேன்.

‘ஐயையோ கேட்டுட்டாளே!’ என்று மனதிற்குள் புலம்பியவன், “அது… நா…நான் நேஹா…” என்று கூறியவாறு வெட்கப்பட்டான்.

“ஹலோ என்னாது இது? தயவு செஞ்சு வெட்கமெல்லாம் படாதீங்க!”

“நான் நேஹாவை பார்க்கத் தான் வந்தேன். போதுமா? பதில் சொல்லிட்டேன்ல நான் கிளம்புறேன்.” என்று வீராப்பாக சொல்லிவிட்டு அவன் கிளம்ப முற்பட, “சார் எங்க கிளம்புறீங்க? ஃபர்ஸ்ட் கொஸ்டின்னுக்கு தான் ஆன்ஸர் பண்ணிருக்கீங்க. மத்ததுக்கெல்லாம் யாரு ஆன்ஸர் பண்ணுவா?” என்று அவனை தேங்க வைத்தேன்.

“சரி மா நான் கிளம்பல. நீ கேளு! எல்லாம் என் தலை விதி!”

“என்ன அங்க சத்தம்?”

“ஹிஹி, ஒன்னும் இல்லயே, ஒன்னுமே இல்ல!”

“ஹ்ம்ம், நேஹாக்கும் உங்களுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்? ஃபர்ஸ்ட் அவளை எங்க பார்த்தீங்க? எப்போ பார்த்தீங்க?’

“க்கும், அவ என்னை ஃபர்ஸ்ட் பார்த்தது அவங்க அப்பாவ ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணப்போ. ஆனா, நான் அவளை முன்னாடியே ராகுல் கூட பார்த்திருக்கேன். அப்போ அவளை லவ் பண்ற மாதிரி ஐடியாலாம் இல்லம் பட் பிடிச்சுருந்தது. ஆனா, ஹாஸ்பிடல்ல அவங்க அப்பாக்காக துடிச்சப்பவும், அந்த ரவுடிங்க மிரட்டுனப்போ பயந்தப்பவும், அவ ஃபியூச்சரை நினைச்சு சோர்ந்து போனப்பவும் அவ பட்ட கஷ்டத்துல இருந்து அவளை மீட்கணும்னு வெறியே வந்துச்சு. அப்போ தான் நான் அவளை அவ்ளோ தூரம் லவ் பண்ணுறேன்னு புரிஞ்சது. அவ அங்க இருந்தா அதையே நினைச்சு ஃபீல் பண்ணுவான்னு தான் அவளை இங்க அனுப்பி வச்சோம். உங்க கூட இருந்தா அதுலயிருந்து சீக்கிரம் மீண்டு வருவான்னு நினைச்சோம்.”

“ஓஹ், அப்போ என்னையும் ஏற்கனவே தெரியும் அண்ட் ராகுல் உங்க பிரெண்ட், அப்படி தான? என்னை எப்படி உங்களுக்குத் தெரியும்? ராகுல உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சிருந்தும் ஏன் அன்னைக்கு ஊட்டில தெரியாத மாதிரி நடந்துக்கிட்டீங்க?”

“அச்சோ, இவ வேற லாயர் மாதிரி கிராஸ் கொஸ்டின்ஸ் கேட்குறாளே!” என்று அவன் புலம்புவது எனக்கும் கேட்டது.

“அதெல்லாம் உன் ஆளு சொல்லி தான் மா செஞ்சேன். எதுனாலும் அவன் கிட்டேயே கேட்டுக்கோ. என்ன விட்டுடு!” என்று அவன் கெஞ்ச, “சரி போனா போகுதுன்னு உங்களை விடுறேன்.’ என்று நான் கூற, “ரொம்ப தேங்க்ஸ் டா நதி. நான் இப்போ கிளம்புறேன்.” என்று மீண்டும் கிளம்ப முயன்றான்.

“ஹலோ எங்க கிளம்பிடீங்க? அந்த ரெண்டு கொஸ்டின்ஸுக்கான ஆன்ஸர் தான் வேண்டாம்னு சொன்னேன். மீதி கொஸ்டின்ஸை நான் இன்னும் கேட்கவே இல்லையே!” என்று நக்கலாக கூறினேன்.

“ஐயோ இன்னமும் இருக்கா!” என்று சத்தமாகவே அலறிவிட்டான் அவன். அதில் சிரிப்பு வந்தாலும் கட்டுப்படுத்திக் கொண்டு அடுத்த கேள்வியைக் கேட்க துவங்கினேன்.

“டெல்லில அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு? அந்த பொறுக்கி என்ன ஆனான்? அவங்க அப்பாக்கு என்ன ஆச்சு?” என்று வரிசையாக நான் கேள்விகளை அடுக்க, “அதை தான் உன் பிரெண்ட் உன்கிட்ட சொல்லிருப்பாளே!” என்றான் அவன்.

“ஹ்ம்ம் சொன்னா தான், அதை எப்படி நீங்க அச்சீவ் பண்ணீங்கன்னு தெரிஞ்சுக்கணும்ல!” என்றேன் கிண்டலாக.

“ம்ம்ம், அந்த பொறுக்கியை போலீஸ் என்கவுன்டர்ல போட்டு தள்ளிட்டாங்க. அப்பறம் அந்த மந்திரியை ஊழல் வழக்குல சிக்க வச்சு, வெளிய வராத படி செஞ்சாச்சு.” என்றான் சற்றே பெருமையாக…

“ஓஹ், அவனை போட்டுத் தள்ளிட்டங்களா, இல்ல தள்ளிட்டீங்களா?”

“ஹே நான் ஒன்னும் பண்ணலமா. என் பிரென₹ண்ட்… க்கும், போலீஸ் பிரெண்ட் தான் என்கவுண்டர் பண்ணது!”

“யாரு உங்க பிரென்ட் கிருஷ்ணாவா?”

‘ப்ச், இவ ரொம்ப நோண்டுறாளே!’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவன், “ம்ம்ம், அதெல்லாம் உன் பின்னாடி நல்லவன் மாதிரி நிக்குறானே அவன் கிட்ட கேளு. என்னை ஆளை விடு மா தாயே!” என்றான் அவன்.

“ச்சே, நானே என் லவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலான்னு வந்தா, இதுங்க ரெண்டு பேரும் சேர்ந்து அதை கெடுக்குறதுக்கே இருக்குதுங்க!” என்று புலம்பியவாறே அவன் செல்ல, அவனை அழைக்க திரும்பிய நான் பார்த்தது அங்கு சுவற்றில் ஸ்டைலாக காலை மடக்கி என்னை பார்த்துக் கொண்டிருந்த ராகுலை தான்.

அவன் பக்கம் செல்ல துடித்த பார்வையைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனுக்கு மறுபுறம் திரும்பி நின்றேன். இரண்டு நொடிகள் ஆனதும், அன்று மாதிரி இன்று எதுவும் நடக்காததால் பெரும் ஆசுவாசத்தோடும் சிறிது ஏமாற்றத்தோடும் நின்றிருந்தேன்.

‘அன்னைக்கு மாதிரி இன்னைக்கும் நடக்கணும்னு தான எதிர்பார்த்துட்டு இருந்த?’ என்று என்னை நன்கு அறிந்து வைத்திருந்த மனசாட்சி கிண்டலடித்தது.

‘அதெல்லாம் ஒன்னும் இல்லையே!’ என்று அதனோடு நான் வாதாடிக் கொண்டிருந்தபோது, என் பின் அரவம் உணர்ந்தேன். அவனே தான்!

‘போச்சு, இன்னைக்கு என்ன செய்ய காத்திட்டுருக்கானோ?’ என்று உள்ளுக்குள் பரபரப்பும் ஆவலும் உண்டாக, “க்கும்…” என்று செருமி அவன் இருப்பை உணர்த்தினான்.

நானோ நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.

“மேடம் ஏதோ என்கிட்ட கேட்கணுமாமே?” என்று அவன் குரல் கிண்டலாக ஒலித்தது.

‘இவனை பார்த்தாலே சாதாரணமா பேசுறது கூட மறந்து போய்டும். இதுல இவன் கிட்ட நான் என்ன கேட்க போறேன்?’ என்று நினைத்து அமைதியாகவே இருந்தேன்.

சில நொடிகள் கழித்து மீண்டும் அவன் குரல் ஒலித்தது.

“என்ன மேடம் பேச்சே காணோம்? இவ்வளவு நேரம் ஆனந்தை போட்டு அந்த பாடு படுத்துன. இப்போ என்ன ஆச்சு?” என்று மீண்டும் கேலியாக பேச, ‘ஹும் உன்னை பார்த்தா வாயிலயிருந்து வெறும் காத்து தான் வருது!’ என்று மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுத்துக் கொண்டேன்.

“இவ்வளவு நேரம் வாயடிச்ச அந்த வாயாடி எங்க? என்னை பார்த்து பயந்துட்டியா, இல்ல…” என்று இழுத்து கொஞ்சம் இடைவெளி விட்டு, “மயங்கிட்டியா?” என்றான் என் காதருகே கிசுகிசுப்பாக.

‘அச்சோ, இவன் என்ன அடுக்கிட்டே போறான்! இப்போ நான் வாயை திறந்து பேசலைனா என்னையவே ‘நான் அவன் கிட்ட மயங்கிட்டேன்’னு ஒத்துக்க வச்சுடுவான் போல!’ என்று நான் பதற, என் மனசாட்சியோ அசால்ட்டாக, ‘அப்போ நீ அவன் கிட்ட மயங்கலையா?’ என்றது.

என் மனசாட்சி கூறி(வி)யதை டீலில் விட்டு அவனை நேருக்கு நேர் பார்க்க திரும்பினேன்.

என் போதாத காலம், நான் திரும்பும் போது கீழேயிருந்த கம்பியைக் கவனிக்காமல் இடறி அவன் மீதே சாய்ந்தேன். அவனும் இப்படி நடக்கும் என்று அறியாததால் நாங்கள் இருவரும் பேலன்ஸ் இல்லாமல் கீழே விழுந்தோம். அவன் கீழே, நான் அவன் மேலே!

ஒரு நிமிடம் இருவருக்கும் அதிர்ச்சி தான். எனக்கோ உடல் முழுவதும் நடுங்கியது. நிமிர்ந்து அவன் முகத்தை பார்க்க கூட முடியவில்லை. அவ்வளவு வெட்கம்! கண்களை மூடியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்திருந்தேன்.

“க்கும், மேடம் நான் ஒன்னும் உன் பெட் இல்ல. எவ்ளோ நேரம் இப்படியே இருப்ப? பார்க்க தான் குட்டியா இருக்க. ஆனா, என்ன வெய்ட்டு!” என்றான் சிரித்துக் கொண்டே.

முதல் வரியில் நாணி என்னையே திட்டிக் கொண்டிருந்தவள், அவனின் இரண்டாவது வரியில் அவனை முறைத்துக் கொண்டே எழுந்தேன்.

“ஹலோ என்ன நீ எழுந்தா போதுமா? என்னை யாரு தூக்கி விடுவா?” என்று அவன் வினவ, அவனை முறைத்துக் கொண்டே அவனுக்கு கை கொடுத்து தூக்கி விட முயன்றேன்.

‘அம்மாடி நல்லா ‘ஹல்க்’ மாதிரி இருக்கான்!’ என்று கூறிக் கொண்டேன்.

அவன் எழுந்ததும் என்னை பார்த்து விஷமச் சிரிப்புடன், “ம்ம்ம் கேளு.” என்றான். அவன் கண்களோ என்னை மேலிருந்து கீழாக அலசியது.

நானோ சற்று முன்பு நடந்த சம்பவத்திலிருந்தே வெளிவரவில்லை.
கீழே விழுந்ததில் எசகு பிசகாக அவன் கைகள் என் மேனியில் பதிய, அந்த இடங்களிலெல்லாம் இன்னமும் குறுகுறுப்பு இருப்பதை போன்று உணர்ந்தேன். இதில் அவன் பார்வை வேறு என்னை இம்சிக்க, என்ன கேட்க வேண்டும் என்பது மறந்து தான் போனது.

‘இப்போவே எஸ்கேப் ஆகுறது தான் கரெக்ட். இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா நானே ஏதாவது பண்ணிடுவேன்!’ என்று நினைத்துக் கொண்டு, “இ.. இல்.. இல்ல… எனக்கு வேலை இரு…இருக்கு. நான் கி..கிளம்புறேன்.” திக்கித் திணறி ஒருவாறு அவன் முகம் பார்க்காமல் உரைத்து விட்டு வேகமாக அவனை விட்டு ஓடி வந்தேன்.

அவன் சிரிப்போ என்னை தொடர்ந்தது. அதில் எனக்கும் மெல்லிய புன்னகை தோன்றியது.

*****

என் வீட்டிலோ அப்போது தான் ப்ரியாவும் அபியின் அறையிலிருந்து வெளிவந்தாள்.

என் பதட்டத்தை மறைத்து அவளிடம், “என்ன டி முகத்துல தவுசண்ட் வாட்ஸ் பல்பு எரியுது! என்ன சக்ஸஸா?” என்று நான் வினவ, வெட்கத்துடன் தலையசைத்தாள் ப்ரியா.

அபியும் அவளின் பின்னே அறையிலிருந்து வெளிப்பட்டான், சிறிது வெட்கத்துடன் தான்!

“ப்ரோ…” என்று நான் ஆரம்பிக்கும் போது வாசலில் என் அப்பாவின் சத்தம் கேட்டு அனைவரும் அமைதியானோம்.

அவர் உள்ளே வந்ததும், ப்ரியாவை பார்த்து நலம் விசாரித்தார். சிறிது நேரத்தில் ப்ரியா கிளம்புவதாக கூறவும், “இந்த நேரத்துல தனியா எப்படி மா போவ?” என்றார் என் அப்பா.

“ஆட்டோல தான் போகணும் அங்கிள்.” என்று ப்ரியா கூற, “இந்த நேரத்துல ஆட்டோல போறது சேஃப் இல்ல மா. ஏன் டி இதெல்லாம் சொல்ல மாட்டியா. உன் பையனை போய் பத்திரமா விட்டுட்டு வர சொல்லு.” என்று ப்ரியாவிடம் ஆரம்பித்து அம்மாவிடம் முடித்தார்.

‘இதெல்லாம் நம்ம லிஸ்ட்லேயே இல்லையே’ மொமெண்ட் எனக்கு!

இருவரையும் குறுகுறுவென நான் பார்க்க, அவர்களோ அசட்டு சிரிப்புடன் விடைபெற்றனர்.

அவர்கள் பைக்கில் ஒன்றாக செல்வதை பார்த்த எனக்கு தேவை இல்லாமல் மொட்டை மாடியில் நடந்தது நினைவு வந்து வெட்கம் வந்தது.

*****

அன்று இரவு என் அறையில் கட்டிலில் மல்லாக்க படுத்து விட்டதை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தேன். பின் சுயத்திற்கு வந்து, ‘இப்படி அதையே நினைச்சு சிரிச்சுட்டு இருந்தா, எல்லாரும் லூசுன்னு சொல்வாங்க.’ என்று நினைத்து, அந்த சூழ்நிலையை மாற்ற அலைபேசியினுள் புகுந்தேன்.

முகநூலில் அன்றைய அறிவிப்புகளை பார்த்துக் கொண்டிருந்தபோது க்ரிஷ் ஆன்லைனில் இருப்பது தெரிந்தது.

‘ஹ்ம்ம், இவன் கிட்ட கொஞ்ச நேரம் மொக்க போட்டா நிம்மதியா தூங்கலாம்!’

நான் : ஹாய்…

க்ரிஷ் : ஹாய் மேடம், என்ன பண்றீங்க?

நான் : அதெல்லாம் இருக்கட்டும். யாரோ ‘பொடிக்’க்கு நாளைக்கு கூட வருவேன். ‘எக்ஸ்பெக்ட் மீ’ன்னு டயலாக் விட்டாங்களே, அந்த நல்லவன ஆளையே காணோம்?

க்ரிஷ் : ஹலோ மேடம், யாரு சொன்னா நான் ‘பொடிக்’க்கு வரலன்னு. இன்னைக்கு நான் வந்தும் மேடம் தான் என்னை கண்டுக்கல. ஆக்ஷுவலி நான் தான் உன் மேல கோபமா இருக்கணும்.

நான் : வாட்??? நீ இன்னைக்கு வந்தியா? இம்பாசிபில்! அது எப்படி உன்னை கவனிக்காம விட்டேன்!

‘ஒருவேளை நம்ம ஸ்டோர் ரூமுக்குள்ள ரொமான்ஸ் பண்ணிட்டு இருந்தப்போ வந்திருப்பானோ? அச்சோ இப்படி புலம்ப விட்டுட்டானே!’

க்ரிஷ் : அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் சொன்ன மாதிரியே வந்தேன். நீ தான் என்னை கவனிக்கல.

நான் : ப்ச், நீ உன் ஃபோட்டோவை அனுப்பியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா?

க்ரிஷ் : மேடம் தான் பெரிய ஜீனியஸ் ஆச்சே. என்னை கண்டுபிடிக்க உனக்கு ஃபோட்டோ வேணுமா என்ன?

‘ஆஹா, இந்த உலகம் இன்னுமா நம்மள நம்புது!’

நான் : ஹ்ம்ம், அது என்னவோ உண்மை தான். இன்னைக்கு ஏதோ பேட் மூட்ல இருந்ததால உன்னை கண்டுபிடிக்க முடியல.

க்ரிஷ் : பேட் மூடா! ஆனா, உன் ‘பொடிக்’ல வேற மாதிரி பேசிகிட்டாங்களே.

‘அச்சோ நம்ம ரொமான்ஸ் அதுக்குள்ளயா பரவிடுச்சு!’

நான் : யாரு என்ன சொன்னாலும் நம்பிடுவியா?

க்ரிஷ் : ஹாஹா சொன்னது இல்ல. உன் மூஞ்சிலேயே தெரிஞ்சுதே!

‘அடச்சே, அவ்ளோ ஒப்பனாவா தெரிஞ்சுருக்கு! இப்போ ஏதாவது சொல்லி சமாளிக்கணுமே. என்ன சொல்லலாம்?’

நான் : அதெல்லாம் இப்போ எதுக்கு? இப்போ என்ன, உன்னை கண்டுபிடிக்கணும் அவ்ளோ தான, நாளைக்கு சிசிடிவி கேமராவை செக் பண்ணா தெரிஞ்சுடப் போகுது.

க்ரிஷ் : உன்னை போய் ஜீனியஸ்ன்னு சொன்னேன் பாரு, அதை வாபஸ் வாங்கிக்குறேன்.

நான் : ஏன்… ஏன்… ஏன்?

க்ரிஷ் : பின்ன சிசிடிவி கேமரால செக் பண்றதெல்லாம் கண்ணு இருக்க யாரு வேணாலும் செய்யலாம். அதுக்கு எதுக்கு உனக்கு ‘ஜீனியஸ்’ன்னு பட்டம்?

நான் : ஹலோ நான்லா ‘பார்ன் ஜீனியஸ்’!

க்ரிஷ் : நான் ஒத்துக்க மாட்டேன்.

நான் : ஓஹ், சார் ஒத்துக்கணும்னா என்ன செய்யணும்?

க்ரிஷ் : சிசிடிவியை செக் பண்ணாம என்ன யாருன்னு கண்டுபிடி. அதுவும் ஒன் வீக்ல.

நான் : கண்டுபிடிச்சா?

க்ரிஷ் : நீ என்ன சொன்னாலும் செய்யுறேன்.

நான் : சூப்பர், இந்த டீல்லுக்கு நான் ரெடி.

க்ரிஷ் : அப்படி நீ கண்டுபிடிக்கலைனா நான் சொல்றதை நீ செய்யனும். என்ன ஓகேவா?

‘ஆத்தாடி இவன் ஏதோ பிளான் பண்ணிட்டான் போலயே! இவன் சொல்றதை பார்த்தா இதுல ஏதாவது வில்லங்கம் இருக்குமோ. ப்ச், அதான் ஒன் வீக் இருக்குல. கடைசில எதுவும் கை குடுக்கலைனா இருக்கவே இருக்கு சிசிடிவி!’

க்ரிஷ் : ஹலோ மேடம், என்ன ரிப்ளை காணோம், பயந்துட்டீயோ?

நான் : ஓய், யாருக்கு பயம்? நான் ரெடி. எப்படியும் இதுல தோற்கப்போறது நீ தான்.

க்ரிஷ் : ஆஹான் பார்ப்போம்!

அப்போது தான் என் மூளைக்கு ஒன்று உரைத்தது.

‘ஒருவேளை அவன் ‘பொடிக்’கே வரலைனா எப்படி கண்டுபிடிக்கிறது?’

நான் : ஹே நீ ‘பொடிக்’க்கு வரலைனா நான் எப்படி உன்னை கண்டுபிடிக்கிறது?

க்ரிஷ் : இதெல்லாம் டீல் அக்ஸப்ட் பண்ணுறதுக்கு முன்னாடியே யோசிச்சுருக்கனும். இப்போ யோசிச்சு நோ யூஸ்!

நான் : இது போங்காட்டம்!

க்ரிஷ் : சரி சரி, டென்ஷன் ஆகாத. இந்த ஒன் வீக்ல அன்டலீஸ்ட் ஒன்ஸாவது உன் ‘பொடிக்’க்கு வரேன், ஓகேவா?

நான் : ம்ம்ம்… ஓகே… ஓகே…

என் மனதில் அவனை எப்படி கண்டுபிடிக்க என்று இப்போதே யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

அப்போது தான் எனக்கு தோன்றியது, ‘க்ரிஷ் ஏன் கிருஷ்ணாவா இருக்கக் கூடாது? அவனும் இன்னைக்கு ‘பொடிக்’ வந்தான்ல!’

நான் : உன் ஃபுல் நேம் என்ன?

க்ரிஷ் : மேடம் என்ன போட்டு வாங்குறீங்களோ?

நான் : ஹிஹி, சும்மா தான் கேட்டேன்.

க்ரிஷ் : அதெல்லாம் நீ தான் கண்டுபிடிக்கணும்.

நான் : சரி சரி கண்டுபிடிச்சு தொலையறேன். ஹே நீ எங்க ஒர்க் பண்ற?

க்ரிஷ் : இதையும் நீ தான் கண்டுபிடிக்கணும்.

நான் : அடப்பாவி இதெல்லாம் உனக்கே ஓவரா இல்ல! எங்க ஒர்க் பண்றன்னு சொன்னா குறைஞ்சா போய்டுவ?

க்ரிஷ் : ஃபர்ஸ்ட் நான் யாரு கண்டுபிடி. அப்பறம் மத்ததெல்லாம் நானே சொல்றேன்.

‘ஐயோ அதை கண்டுபிடிக்க தான நான் கேட்குறேன். சரி வேற ரூட்ல ட்ரை பண்ணி பார்ப்போம்.’

நான் : ஹ்ம்ம், உனக்கு தங்கச்சி இருக்காங்களா? இதுக்கும் ‘நீ தான் கண்டுபிடிக்கணும்’னு சொன்ன டென்ஷன் ஆகிடுவேன்.

க்ரிஷ் : கூல், அதெல்லாம் தங்கச்சிங்க நிறைய பேரு இருக்காங்க.

‘என்னாது நிறைய இருக்காங்களா? அவனுக்கு ஜீவி ஒரே தங்கச்சி தான!’

நான் : ஓஹ், எத்தனை தங்கச்சிங்க உனக்கு?

க்ரிஷ் : அதெல்லாம் கவுண்ட் பண்றது ரொம்ப கஷ்டம்!

நான் : என்ன லூசு மாதிரி சொல்ற?

க்ரிஷ் : ‘ஆல் இந்தியன்ஸ் ஆர் மை பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்’ – கேள்வி பட்டதில்லையா!

அதைக் கேட்டதும் நான் பல கோப ஸ்மைலிக்களை அனுப்பினேன்.

க்ரிஷ் : வொய் ஆங்கிரி?

நான் : அப்போ இந்த கொஸ்டினுக்கும் ஒழுங்கா ஆன்ஸர் பண்ண மாட்ட.

க்ரிஷ் : நோ…

இப்படியே சிறிது நேரம் பேசி, நான் கடுப்பாகி முகநூலிலிருந்து வெளியேறி விட்டேன்.

‘அடேய் இப்படி என்னையே குழம்ப வச்சுட்டேல, உன்னை கண்டுபிடிச்சு, அதுக்கு அப்பறம் வச்சு செய்யுறேன்!’ என்று தீர்மானம் எடுத்துக் கொண்ட பின்பே உறங்கினேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
21
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்