Loading

 

 

ஈர்ப்பு 23

 

அடுத்த நாள் காலை, ‘என்ன டா இது மிசஸ். ஹிட்லர் இன்னும் அவங்க சுப்ரபாதத்தை பாட ஆரம்பிக்கல?’ என்று நினைத்தவாறே எழுந்தேன்.

 

அப்போது தான் எனக்கு முதல் நாள் நடந்தவை ஞாபகம் வந்தது. ‘ச்சே, இதை மறந்துட்டேனே!’ என்று தலையில் அடித்துக் கொண்டு வேகவேகமாக கிளம்பினேன்.

 

நான் நினைத்தது போல ஷீலா கூடத்தில் இல்லை. அவளை தவிர அனைவரும் உணவு உண்டு கொண்டிருந்தனர். அதில் முதல் ஆள் என் அத்தை தான்!

 

‘ஹ்ம்ம், உண்மைலேயே ஷீலாக்கு அம்மா இவங்க தானா?’ என்று வெறுப்புடன் நினைத்துக் கொண்டேன்.

 

நான் என் அம்மாவிடம் சென்று ஷீலாவை பற்றி விசாரித்தேன்.

 

“அவ நைட் சரியா தூங்கலன்னு லேட்டா வரேன்னு சொல்லிட்டா.” என்று அவர் கூற, “சரி ம்மா, நான் அவளை பார்த்துட்டு வரேன்.” என்று அத்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு, ஷீலாவின் அறைக்கு சென்றேன்.

 

அங்கு அவள் ஜன்னல் அருகில் நின்று வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள்.

 

“ஹாய் ஷீலா, குட் மார்னிங்.” என்று சற்று உற்சாகமாக நான் கூற, அவளோ என்னளவு உற்சாகம் இல்லை என்றாலும், லேசான புன்னகையுடன், “குட் மார்னிங் நதி.” என்றாள்.

 

“ஹே உனக்கு பசிக்கலையா? காலைல பாலாவது குடிச்சியா?” என்று நான் விசாரிக்க, “இப்போ தான் நதி குடிச்சேன். நேத்து தூங்க லேட்டாச்சு. அதனால இன்னைக்கு எல்லாமே லேட். சோ, கொஞ்ச நேரம் கழிச்சு சாப்பிட்டுக்குறேன்.” என்றாள்.

 

“ம்ம்ம் சரி, ரொம்ப லேட்டாகாம பார்த்துக்கோ. அப்பறம் உள்ள இருக்க ஜூனியர் என்ன சொல்றாங்க?” என்று அவளின் வயிற்றை பார்த்து நான் வினவ, அவளோ மெல்லிய சிரிப்பை உதிர்த்தாள்.

 

“பேபி மூவ்மெண்ட்ஸ் ஏதாவது தெரிஞ்சுதா?”என்று அவளின் வயிற்றில் கைவைத்து ஆர்வமுடன் நான் வினவ, “ம்ம்ம் அதெல்லாம் நல்லா உதைப்பாங்க. இப்போ ரெஸ்ட் எடுத்துட்டு இருக்காங்கன்னு நினைக்குறேன்.” என்று அவளும் பேசினாள்.

 

இவ்வாறு அவளிடம் சிறிது நேரம் பேசி அவளை சற்று இயல்பாக்கி விட்டு பொடிக்கிற்கு கிளம்பினேன்.

 

*****

 

பொடிக் உள்ளே கால் வைத்ததும், “ஹே எருமை, உன்னை நேத்து கால் பண்ண சொன்னா பண்ணாம இப்போ சாவகாசமா ஆடி அசைஞ்சு வர.” என்று கடிந்து கொண்டாள் என் ஆருயிர் தோழி.

 

‘இவ வேற என்ன நடந்ததுன்னு தெரியாம திட்டிட்டு இருக்காளே?’ என்று நினைத்த நான், “ஹே லூஸி, ஃபர்ஸ்ட் என்ன உள்ள நுழைய விடு டி!” என்று பதிலுக்கு திட்டினேன்.

 

பின் முதல் நாள் நடந்தவற்றை அவளிடம் சுருக்கமாக கூறினேன்.

 

“ஹ்ம்ம், என்ன தான் தப்பு பண்ணிருந்தாலும், ஷீலாக்கு இந்த பனிஷ்மெண்ட் கொஞ்சம் ஓவர் தான் நதி.” என்று சாண்டி கூற, நான் எதுவும் கூறாமல் அமைதியாக இருந்தேன்.

 

“சரி டி, நம்ம வேலையை பார்க்கலாம்.” என்று அவள் கூற, இருவரும் சில ஆயத்த வேலைகளைப் பார்த்தோம்.

 

அன்றைய நாளும் நன்றாகவே சென்றது.  வாடிக்கையாளர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

 

சற்று நேரம் ஓய்வாக அமர நான் எத்தனிக்க, “ஹாய்” என்ற கம்பீரக் குரல் என்னைத் தடுத்தது.

 

யாரென்று திரும்பிப் பார்த்தால், அங்கு ஆஜானுபாகுவாக கண்களில் கூலர்ஸுடன் உதட்டில் சிரிப்புடனும் நின்றிருந்தான் அவன்.

 

‘யாரா இருக்கும்?’ என்ற யோசனையுடன் அவனையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹலோ” என்று என் முன் கைகளை அசைத்தான் அவன்.

 

அதில் யோசனையிலிருந்து வெளிவந்த நான், “ஹான், யாரு நீங்க?” என்றேன்.

 

“ஹப்பா, நான் கூட நீங்க என் அழகுல மயங்கிடீங்களோன்னு நினைச்சேன்!” என்று அவன் கேலியாக சிரிக்க, பதிலுக்கு நான்  அவனை முறைத்ததும், “ஹே கூல், சும்மா சொன்னேன்.” என்றான்.

 

“ஓகே நான் என்னை ப்ரொபரா இண்ட்ரடியூஸ் பண்ணிடுறேன். ஐ’ம் கிருஷ்ணா.” என்று கை குலுக்குவதற்காக நீட்டினான்.

 

‘கிருஷ்ணா…’ என்று அந்த பெயரை உள்ளுக்குள் உச்சரித்துப் பார்த்தேன்.

 

‘ஒருவேளை இது க்ரிஷா இருக்குமோ? அவன் வேற ‘எக்ஸ்பெக்ட் மீ’ன்னு சொன்னானே!’

 

இவ்வாறு நான் யோசித்துக் கொண்டிருக்கும்போதே அங்கு வந்த சாண்டி அவன் கைகளை பிடித்து குலுக்கி, “ஹாய் க்ரிஷ், நான் சாண்டி.“ என்றாள்.

 

நானோ அவளைக் குழப்பமாகப் பார்த்தேன்.

 

‘இவளுக்கு இவனை தெரியுமா? எப்படி தெரியும்?’ என்று அடுத்த கேள்விக்கு என் நினைவை ஆக்கிரமித்துக்கு கொள்ள, அதை அவளிடம் முணுமுணுத்தேன்.

 

“சாண்டி, உனக்கு இவனை தெரியுமா?”

 

“ஏன் தெரியாது? நீ தான டி என்கிட்ட சொன்ன.” என்று கூறியவளை பார்த்து மீண்டும் குழம்பி, “என்னாது நான் சொன்னேனா? என்ன டி சொல்ற?” என்றேன்.

 

“ஹே நீ தான உன் பிரென்ட் க்ரிஷ் பத்தி சொன்ன.” என்று சாண்டி கூற, “அட எருமை, இது அந்த க்ரிஷ் இல்ல. இவரு பேரு கிருஷ்ணா.” என்றேன். ஆனாலும், என்னுள் குழப்பம் இருந்தது உண்மையே!

 

“வாட்?” என்றாள் அதிர்ச்சியுடன்.

 

அவ்வளவு நேரமும் எங்களை சுவாரசியமாக பார்த்துக் கொண்டிருந்தவனை நோக்கி இருவரும் சமாளிப்பு புன்னகை புரிந்தோம்.

 

“என்னங்க உங்க பிரெண்ட் தான் பேச மாட்டிங்குறாங்க. நீங்க நல்லா தான பேசுனீங்க, இப்போ என்னாச்சு ஸ்டன்னாகிட்டீங்க?” என்றான் அவன் சாண்டியை நோக்கி.

 

“அப்படி எல்லாம் இல்லங்க… சாரி… உங்களை வேறு யாரோன்னு நினைச்சு பேசிட்டேன்.” என்றாள் சாண்டி.

 

“ஓஹ், அப்போ அந்த க்ரிஷ் கிட்ட தான் பேசுவீங்களா? இந்த கிருஷ்ணா கிட்ட பேச மாட்டீங்களா? என்றான் அவன்.

 

‘என்னாது இது? என்னை நடுல நிக்க வச்சுட்டு இதுங்க ரெண்டும் பேசிட்டு இருக்குதுங்க!’ என்று விழித்தேன் நான்.

 

‘இது சரிப்பட்டு வராது. இடையில புகுந்து நம்ம பெர்ஃபார்மனஸை போட்டுட வேண்டியது தான்!’ என்று எண்ணிய நான், “ஹலோ, உங்க பேரு சொன்னா தெரியுறதுக்கு நீங்க என்ன ப்ரைம் மினிஸ்டரா?” என்றேன் நக்கலாக.

 

“ஹாஹா, அவ்ளோ பெரிய ஆள் இல்ல மா. இங்க வெறும் டி.எஸ்.பியா இருக்கேன்!” என்றான்.

 

அதைக் கேட்டு இருவரும், “டி.எஸ்.பியா?’ என்று வாயை பிளந்தோம்.

 

“அதுக்கு எதுக்கு ரெண்டு பேரும் இவ்ளோ ஷாக் ஆகுறீங்க? போலீஸ் பார்த்து ஷாக் ஆகுறீங்கன்னா ஏதாவது தப்பு பண்ணிருக்கீங்களா ரெண்டு பேரும்?” என்றான் சற்று முறைத்தபடி.

 

‘அச்சோ இவன் போலீஸ்னு தெரியாம கிண்டல் பண்ணிட்டேனே. கோபத்துல ஜெயில்ல போட்டுடுவானோ?’ என்று உள்ளுக்குள் பயம் எழ, என் அருகில் நின்ற சாண்டியும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள் என்பது அவள் முகத்தைப் பார்த்தாலே தெரிந்தது.

 

“ஹலோ என்ன ரெண்டு பேரும் பதில் சொல்லாம, ஒருத்தர் மூஞ்சிய இன்னொருத்தர் பார்த்துட்டு இருக்கீங்க?” என்று அவன் வினவினான்.

 

நாங்கள் இருவரும் அவன் தற்போது பேசிய தோரணையில் பயந்தது என்னவோ உண்மை தான்! அவன் மறுபடியும் எதுவோ சொல்ல(திட்ட) ஆரம்பிக்கையில், “ஹே க்ரிஷ், அதுக்குள்ள உள்ள வந்துட்டியா?” என்ற சத்தத்தில் மூவரும் வாசலை பார்த்தோம்.

 

அங்கு ராகுல் நின்றிருந்தான். லைட் ப்ளூ ஷர்ட் – க்ரே பேண்ட் காம்பிநேஷனில் எப்போதும் போல் அழகாக நின்றிருந்தான். என் மனமோ சற்று முன் நடந்த கலவரத்தை கருத்தில் கொள்ளாமல் அவனிடம் மயங்கிக் கிடந்தது!

 

அவனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் முழங்கையை இடித்த சாண்டி, “அடியேய், இங்க என்ன பிரச்சனை நடக்குது, நீ உன் பாட்டுக்கு சைட் அடிச்சுட்டு இருக்க. ஆனாலும், இந்த ரணகளத்துலயும் உனக்கு ஒரு கிளுகிளுப்பு  கேட்குது இல்ல!”  முணுமுணுத்தாள்.

 

அவளை பார்த்து இளித்துவிட்டு, மறுபடியும் என் வேலையை தொடர்ந்தேன்.

 

‘அடிப்பாவி, அது எப்படி  இப்படி கொஞ்சமும் வெட்கமே இல்லாம ஜொள்ளு விடுற!’ என்று என் மனசாட்சியும் அதன் பங்குக்கு என்னை கிண்டல் செய்ய, ‘ப்ச், வந்துட்டியா, என்ன டா இன்னும் காணோமேன்னு நினைச்சேன். உன்னை வச்சுட்டு நிம்மதியா சைட் அடிக்கக் கூட முடியல!’ என்று புலம்பினேன்

 

‘அட லூசே, அந்த போலீஸும் உன் ஆளும் ஏதோ ரொம்ப நாள் தெரிஞ்ச மாதிரி  பேசிட்டு இருக்காங்க. அதை எல்லாம் கவனிக்காம நீ உன் ஆளை சைட் அடிச்சிட்டு இருக்க?’ என்று அவ்வபோது ஜேம்ஸ்பாண்டாய் மாறும் மனசாட்சி எடுத்துக் கூற, ‘அட ஆமால, இவங்க ரெண்டு பேருக்கும் எப்படி பழக்கம்?’ என்று நான் யோசித்துக் கொண்டே அவர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

 

“ம்ம்ம், ஆமா மச்சான், இங்க பார்க்க வந்த வேலைய சீக்கிரம் முடிச்சிட்டு ஸ்டேஷன் போகணும்…” – அவன் ‘பார்க்க வந்த வேலை’ என்று குறிப்பிடும் போது எங்களை அளவெடுத்துக் கொண்டே கூறினான்.

 

அவனின் பதிலில் நானும் சாண்டியும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்துக் கொண்டோம்.

 

“ஹாய் சாண்டி, இப்போ எதுக்கு பேயறஞ்ச மாதிரி இருக்க? இவன் ஏதாவது சொன்னானா?’ என்றான் ராகுல், அங்கிருந்த கிருஷ்ணாவை சுட்டிக்காட்டி.

 

‘ஓஹ் சார், அவங்க தொங்கச்சி கிட்ட தான் கேட்பாராமா? என்கிட்டலாம் கேட்க மாட்டாங்களோ?’ என்று அவனை முறைத்துவிட்டு (அவன் பார்க்காதபோது தான்!) சாண்டியின் பக்கம் திரும்பிக் கொண்டேன்.

 

சாண்டியோ, “அவங்க போலீஸ்ன்னு….” என்று இழுக்க, “அட, அதுக்குள்ள சார் போலீஸ்ன்னு கெத்து காமிச்சுட்டானோ? இவன் ஏற்கனவே உங்களுக்கு தெரிஞ்சவன் தான்.” என்றான் ராகுல்.

 

நானும் என் மூளையை கசக்கி யோசித்தேன். எவ்வாறு யோசித்தாலும் அவனை பார்த்த ஞாபகம் இல்லை.

 

“சில பேரு இல்லாத மூளையை போட்டு குழம்பிட்டு இருக்காங்க. நானே சொல்லிடுறேன்!” என்று ராகுல் என்னை சீண்டினான்.

 

‘அடப்பாவி, எனக்கா மூளை இல்லன்னு சொல்ற? எனக்கும் நேரம் வரும், அப்போ வச்சுக்குறேன் உன்னை!’ என்று மனதிற்குள் முணுமுணுத்தபடி அவனை முறைத்தேன்.

 

அவனோ நான் முறைத்ததை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், என்னை நோக்கி கண்ணடித்து விட்டு அவர்கள் புறம் திரும்பினான்.

 

இறுதியில் அவன் செய்த செயலால் குழம்புவது நான் தான். குழம்பியவாறே அவன் கூற வருவதை கேட்டேன்.

 

“இவன் தான் ஜீவியோட அண்ணன் கிருஷ்ணன். என்னோட பெஸ்ட் பிரெண்ட். அப்பறம் இந்த ஏரியாவோட புது டி.எஸ்.பி.” என்று அவனின் நண்பனை அறிமுகப்படுத்தினான்.

 

‘ஜீவியின் அண்ணன்’ என்றதில் சாண்டியின் பக்கம் குனிந்து, “ஓஹ், சார் ‘பார்க்க வந்த வேலை’ இது தானா! நம்ம தான் தப்பா புரிஞ்சுகிட்டோம் டி சாண்டி.” என்றேன் நமுட்டுச் சிரிப்போடு.

 

அவள் என்னை முறைத்ததும், அவளிடமிருந்து சற்று தள்ளி நல்ல பிள்ளையாக நின்று கொண்டேன்.

 

“என்ன பிரதர், ஜீவி உங்களை யாருக்கிட்டயும் பேசாத உம்மணாமூஞ்சின்னு சொன்னா, ஆனா பார்த்தா அப்படி தெரியலையே?” என்று நான் நக்கலாக வினவ, “, சிஸ்டர் இது ஜீவி சொன்னதா, இல்ல நீங்களா சொல்றதா?” என்றான் கிருஷ்ணா.

 

“எல்லாம் மிக்ஸ்ட் ரிவியூஸ் தான் ப்ரோ!” என்று கண்ணடித்தேன் நான்.

 

“நீங்க இவ்ளோ பேசுறீங்க, உங்க பிரெண்ட் என்ன பேசவே மாட்டிங்குறாங்க. ஜீவி என்னமோ உங்க பிரெண்ட் தான் நல்லா பேசுவாங்கன்னு புகழ்ந்தா. இங்க அப்படியே ஆப்போசிட்டா இருக்கு.” என்று அவன் சாண்டியை பார்த்துக் கொண்டே என்னிடம் வினவினான்.

 

அதில் கோபம் வரப்பெற்ற சாண்டி, “சாருக்கு என்ன வேணும்ன்னு நீயே பார்த்துக்கோ. எனக்கு உள்ள வேலை இருக்கு.” என்று கூறியவாறு உள்ளே சென்று விட்டாள்.

 

‘என்னமோ இவளுக்கு மட்டும் தான் வேலை இருக்குற மாதிரி பில்ட்-அப் கொடுத்துட்டு போறா?’ என்று நினைத்த நான், “க்கும், எனக்கும் வேலை இருக்கு. நானும் போறேன்.” என்றேன்.

 

“சிஸ்டர், இதென்ன பழிக்கு பழியா? வந்ததும் உங்களை கடுப்பேத்துனேன்னு இப்போ என்ன வெறுப்பேத்துறீங்களா?”என்றான் கிருஷ்ணா.

 

“ஹாஹா, ப்ரோ என்ன பாவமா முகத்தை வைக்க ட்ரை பண்றீங்களா? ஆனா உங்களுக்கு அது செட் ஆகல! கடுப்பு… வெறுப்பு… என்ன ப்ரோ எதுகை மோனையா! கலக்குங்க ப்ரோ. அப்பறம் இதுக்கே பயந்தா, உங்க ஆளு ட்ரைலர் தான் காட்டிருக்கா, மெயின் பிக்சர் இதை விட பயங்கரமா இருக்கும்.” என்றேன்.

 

“என்ன சிஸ்டர் ஒரு பேச்சுக்காகவாவது நல்லதா சொல்லக் கூடாதா? இப்படி பயமுறுத்துறீங்க!” என்று அவன் வேண்டுமென்றே பயந்ததை போல் நடிக்க, “என்ன டி.எஸ்.பி சார் கிரிமினல்ஸூக்கு எல்லாம் பயப்படாத நீங்க ஆஃப்டர் ஆல் ஒரு பொண்ணுக்கு பயப்படுறதா!” என்றேன்.

 

“என்ன மா பண்ணுறது, வெளிய தான் போலீஸ்னா புலி. வீட்டுல எப்பவும் எலி தான!” என்று அவன் சிரிக்க, “பொழச்சுக்குவீங்க போலீஸ்கார்!” என்று நானும் அவன் சிரிப்பில் கலந்து கொண்டேன்.

 

எதேச்சையாக திரும்பியபோது என் கண்ணில் பட்டது கோபமாக எங்களை பார்த்துக் கொண்டிருந்த ராகுல் தான்.

 

‘இவன் எதுக்கு முறைச்சு பார்க்குறான்? எதுக்கும் இப்போ இங்கேயிருந்து எஸ்கேப் ஆகிடுவோம்!’ என்று எண்ணிய நான், “சரி வாங்க ப்ரோ, உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லுங்க.” என்று கிருஷ்ணாவிடம் வினவினேன்.

 

“ஹலோ சிஸ்டர், இது உங்களுக்கே நியாயமா இருக்கா? இப்படி உங்க கூடவே நான் பேசிட்டு இருந்தா, எப்போ  உங்க பிரெண்ட் கூட பேசுறது, எப்போ லைஃப்ல நெக்ஸ்ட் ஸ்டேஜ்ஜுக்கு போறது?” என்று கிருஷ்ணா வினவ, ‘அடப்பாவிங்களா, அதுக்குள்ள ரொமான்ஸ் சீன்னா!’ என்று மனதிற்குள் எண்ணினேன்.

 

அவனை பார்த்து இளித்தவாறே, “போங்க ப்ரோ, உள்ள தான் உங்க எதிர்காலம் இருக்கு. போய் நல்லா ஃப்யூச்சரை பிளான் பண்ணுங்க.” என்றேன் சிறிது கடுப்புடன்.

 

“நான் என் ஆள பார்க்க போறேன். நீங்க உங்க ஆளுக்… க்கும், என் பிரெண்டுக்கு என்ன வேணும்னு பாருங்க.” என்றவாறே உள்ளே சென்றான்.

 

‘ஐயையோ, இவன் வேற கோர்த்துவிட்டுட்டு போய்ட்டானே!’

 

நான் அவனை ‘என்ன வேண்டும்’ என்பது போல் பார்க்க, அவனோ ஒரு பெருமூச்சு விட்டு, சில புது கலெக்ஷன்ஸ் பற்றி கேட்டான். அவன் கேட்டவை எல்லாம் நேற்று தான் வந்தன. அவை எல்லாம் இன்னும் பிரிக்கப்படாமல் ‘ஸ்டோர் ரூம்’மிலேயே வைக்கப் பட்டிருந்தன.

 

அவனிடம் கூறிவிட்டு அவற்றை எடுக்கச் சென்றேன்.

 

அங்கு அவன் கேட்ட உடைகள் எல்லாம் மேல் ரேக்கில் அட்டைப்பெட்டியினுள் இருந்தன.

 

‘ம்ச், இதை யாரு மேல வச்சது? எனக்கு எட்டவும் மாட்டிங்குது! இதுக்கு தான் அம்மா காம்ப்ளான் கொடுத்தப்போவே குடிச்சிருக்கணும். இப்போ பாரு, ஒரு அட்டைப்பெட்டி கூட நம்மள கேலி பண்ற மாதிரி உச்சில இருக்கு!’

 

இவ்வாறு புலம்பியபடியே எக்கி எக்கி அதை எடுக்க முயன்று கொண்டிருந்தேன். அப்போது வெகு அருகில் குப்பென்று வீசிய சுகந்தத்தில் திகைத்தேன். அது எனக்கு பழக்கமான வாசனையே, ஆம் இது அவனின் பெர்ஃப்யூம் வாசமே!

 

என் கைகள் அந்தரத்தில் இருக்க, என் இரு பக்கமும் அவன் இரு கைகள் என்னை அணைத்தவாறே மேலே இருந்த பெட்டியை எடுக்க முயன்றன. அவனின் அந்த முயற்சியில் தடுமாறியதென்னவோ நான் தான்.

 

அவன் மூச்சுக்காற்று என் காதோரம் உரச, அவன் உடலோ என் பின்புற உடலோடு ஒட்டி இருக்க, அந்த நிலையை ஒரு நொடி கண் மூடி அவதானிக்க முயன்றேன். அதன் உஷ்ணம் தாங்காது என் கன்னங்கள் சிவந்தன. அதிலும் எனக்கு பிடித்த அவன் பெர்ஃப்யூமின் வாசனை என்னை மயக்கத்திற்கே கொண்டு சென்றது.

 

அதே நிலையில் கண் மூடி கிறங்கி நான் நிற்க, அவன் மூச்சுக்காற்று இம்முறை பலமாக என்னை தாக்க, நான் என்னை கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருக்க, அப்போது அவன் உதிர்த்த சொற்கள் என்னுள்ளே பனியை தூவியது போல் சிலிர்க்கச் செய்தன.

 

“டாம் யூ ஆர் கில்லிங் மீ!” என்று கூறியவாறே ஒரு நீண்ட பெருமூச்சுடன் என்னை விட்டு விலகினான்.

 

அவன் அகன்றதும் தான் நான் என் கண்களை திறந்தேன். அப்போதும் அவனை காண முயற்சிக்காமல் அவனுக்கு மறுபக்கம் திரும்பி நின்றிருந்தேன்.

 

என் கன்னங்களோ சற்று முன் நிகழ்ந்த நிகழ்விலிருந்து விடுபடாதவாறு  சிவப்பு வண்ணத்தை இன்னும் பூசியிருந்தன. அவன் மூச்சுக்காற்றை இன்னமும் என் காதோரம் நான் உணர்ந்தேன். இதற்கு மேல் அவனோடு இதே அறையில் இருக்க என்னால் இயலாது என்று எண்ணி வெளியே செல்ல திரும்பினேன்.

 

அங்கு ராகுலும் கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருந்தான். அவனின் முகத்திலும் லேசாக வெட்கம் படர்ந்திருந்தது.

 

ஆண்களின் வெட்கமும் அழகு தான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன் இன்று!

 

முடியைக் கோதியபடி தலையை அங்கும் இங்கும் அசைத்து நடந்ததை மனதில் ஓட்டிப் பார்த்து சன்ன சிரிப்புடன் இருக்கும் அவனை பார்த்து மறுபடியும் மொத்தமாக அவனில் தொலைந்தேன் நான்!

 

என் பார்வையை உணர்ந்த அவனும் பதில் பார்வை பார்த்தான். இம்முறை தலை குனியவில்லை நான்! அவன் பார்வையை எதிர்கொண்டிருந்த என்னை கண்டு அவன் புருவம் உயர்த்த, வெட்கப் புன்னகை புரிந்தேன் நான்.

 

அவன் என் அருகில் நெருங்க, நான் பின்னால் விலக, அழகாக ஆரம்பித்தது அந்த நாடகம்.  சுவர் தடுக்க நின்ற நான் அவனை ஏறிட்டுப் பார்க்க, அவனோ தன் வெண்பற்கள் மிளிர சிரித்துக் கொண்டிருந்தான்.

 

அவனின் சிரிப்பில் என் உதடுகள் என் அனுமதியின்றியே அவனுடன் சேர்ந்து சிரித்தன.

 

“ஐயோ, பைத்தியமா ஆக்கிட்ட டா என்ன!” என்று மனதிற்குள் பேசுவதாக நினைத்து சத்தமாக பேசிவிட, “வாட் கம் அகைன்.” என்றான்.

 

‘அச்சோ சத்தமா சொல்லிட்டேனோ?’ என்று நான் பதற, “இல்ல நீ சத்தமா சொல்லல.” என்று என் உதட்டை வருடியவாறே, “ஆனா, உன் லிப் மூவ்மெண்ட் வச்சு கண்டுபிடிச்சுட்டேன்.” என்றான்.

 

“ஹான்…” என்று நான் வாய் பிளக்க, “எதுக்கு இப்போ இந்த ரியாக்ஷன்?” என்றவாறே  மேலும் என் அருகில் வர, நான் கண்களை இறுக்கி மூடிக் கொண்டேன்.

 

அங்கு சீரான வேகத்தில் சரியான தாளத்தில் எங்கள் இதயங்கள் துடிக்கும் ஓசை மட்டுமே கேட்டது. அவன் அருகில் வருவதை உணர்ந்த என் ஐம்புலன்களும்  எதையோ எதிர்பார்த்திருக்க, என் காதிற்கு கேட்டதென்னவோ ஏதோ கீழே விழுகும் சத்தம் தான்.

 

பட்டென்று நான் கண்ணை திறந்து பார்க்க, அங்கு விழுந்து கிடந்தது சற்று முன்னர் எதை தேடி இந்த அறைக்கு வந்தேனோ, அதே அட்டைப்பெட்டி தான். கொஞ்ச நேரத்திற்கு முன்பு, அதை எடுக்க முயன்று பாதியிலேயே விட்டதால், இப்போது அது எங்கள் அடுத்த முயற்சியை தடுத்துவிட்டது போல!

 

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம். அப்போது வெளியில் கேட்ட, “என்ன டி ஆச்சு?” என்ற சாண்டியின் பதட்டமான குரலில் இருக்கும் இடமும் சூழ்நிலையும் புரிந்து, அவனிடம் கண்களால் விடைபெற்று அவசரமாக வெளியே சென்றேன்.

 

“ஹே நதி என்ன சத்தம் அது?” என்று சாண்டி வினவ, “ஒன்னும் இல்ல டி… ஒரு அட்டைப்பெட்டி மேல் ரேக்ல இருந்துச்சு. அதை எடுக்குறப்போ தான் கை தவறி கீழே விழுந்துடுச்சு.” என்று நான் கஷ்டப்பட்டு சமாளித்துக் கொண்டிருக்க, அவளின் பார்வை என்னை தாண்டி செல்வதை உணர்ந்து திரும்பிப் பார்த்தேன்.

 

அங்கே ராகுலும் அதே அறையிலிருந்து வெளியே வந்தான்.

 

சாண்டியோ என்னை பார்த்து நக்கல் சிரிப்பு ஒன்றை சிந்தினாள்.

 

ராகுல் கிருஷ்ணாவிடம் செல்ல, சாண்டி என்னிடம், “ஹே என்ன டி, இன்னைக்கு ஹெவி பெர்ஃபார்மன்ஸ் போல!” என்று கூற, “க்கும், அதான் அதுக்குள்ள நீ கத்திட்டல!” என்று என் அனுமதியின்றியே வார்த்தைகள் வெளிவந்தன.

 

“ஓஹோ, அப்போ மேடமுக்கு டைம் தான் பத்தலன்னு சொல்லு. இப்போ மேடம் எங்க இருக்கீங்கன்னு தெரியுதா?” என்று மேலும் கேலி செய்ய, “அடிங்…” என்று அவளை துரத்தினேன்.

 

சில நொடிகளில் இருவரும் சோர்ந்து போய் நாற்காலியில் அமர்ந்தோம்.

 

அப்போது தான் கிருஷ்ணா நினைவிற்கு வர, “ஹே உன் லவ் ஸ்டோரி என்னாச்சு?” என்று சாண்டியிடம் வினவ, அவளோ என்னை முறைத்தாள்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
6
+1
27
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்