Loading

 

 

ஈர்ப்பு 17

 

அன்று இரவு அனைவரும் சாப்பிடும்போது எனக்கெதிரே அமர்ந்திருந்த அபியின் முகத்தைப் பார்த்தேன்.

 

‘ஏன் நமக்கு மட்டும் இந்த மூஞ்சி ஏதோ ஃப்ராட் வேலை பண்ற மாதிரி தெரியுது? சம்திங் ஃபிஷி! ம்ம்ம், கண்டுபிடிப்போம்.’ என்று நான் மனதிற்குள் திட்டம் வகுக்க, என் அம்மா என் தலையில் தட்டி, “சாப்பிடும்போது தான் பெரிய சயின்டிஸ்ட் மாதிரி யோசிக்க வேண்டியது. தட்டை பார்த்து சாப்பிடு டி ஃபர்ஸ்ட்.” என்று பாசமாக கூறினார்.

 

‘ச்சே, நம்ம ஒன்னு யோசிச்சா இந்த உலகம் சும்மா இருக்காதே!’ என்று நானும் சும்மா இருக்காமல் என் அலைபேசியில் தேடி தேடி இந்த பாட்டை போட்டேன்.

 

உலகத்தின் வலியெல்லாம்

வந்தால் என்ன உன்முன்னே

பிரசவத்தின் வலியை தாண்ட

பிறந்த அக்கினி சிறகே எழுந்து வா

 

 

‘அக்கினி சிறகே எழுந்து வா’ என்று நானும் பாட, என் அம்மா சமையலறையிலிருந்து, “இப்போ நான் எழுந்து வந்தேன் அந்த மொபைல் சுக்குநூறா ஆகிடும். ஒழுங்கா சாப்பிட்டு இடத்தை காலி பண்ணு.” என்று மீண்டும் பாசத்தால் என்னை கட்டிப்போட, ‘ம்ம்ம், இன்னைக்கு இது போதும், மீதிய நாளைக்கு பார்த்துக்கலாம்.’ என்று முடிவெடுத்து உணவில் கவனத்தை திருப்பினேன்.

 

 

என் எதிரில் இருந்த அபியோ தட்டிற்குள்ளேயே சென்றுவிடுவதை போல குனிந்த தலை நிமிராமல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, ‘இவன் எதுக்கு புது பொண்ணு புகுந்த வீட்டுல சாப்பிடுற மாதிரி தலை குனிஞ்சு சாப்பிடுறான்?’ என்று எண்ணியவாறே சற்று குனிந்து அவனை நோக்கினால், அவன் உடலோ சிரிப்பதினால் குலுங்கிக் கொண்டிருந்தது.

 

“டேய் அண்ணா, சிரிக்கிறதா இருந்தா முகத்தை பார்த்தே சிரி. நான் ஒன்னும் தப்பா நினைச்சுக்க மாட்டேன்.” என்று கூறினேன்.

 

“அட லூசு, நீ மாட்டினதும் இல்லாம என்னையும் எதுக்கு டி மாட்டிவிடுற? எரும சைடுல பாரு!” என்று மெல்லிய குரலில் கூறினான்.

 

‘எதுக்கு இப்போ எனக்கு பக்கத்துல பேய் இருக்க மாதிரி ஹஸ்கி வாய்ஸ்ல பேசிட்டு இருக்கான்?’ என்று நினைத்தவாறே திரும்பினால், அங்கு என் அப்பா கடுமையான முகத்தோடு என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

 

‘அச்சோ ஹிட்லர்! எப்போ வந்தாருன்னு தெரியலையே. அவரு வந்தது தெரியாம  சிங்கப்பெண்ணேனு பாட்டு போட்டு சவுண்ட் வேற கொடுத்துட்டேனே. சும்மாவே சாப்பிடும் போது பேசுனா திட்டுவாரு, நான் கத்த வேற செஞ்சுருக்கேன்! இன்னைக்கு என்னை வச்சு செய்யப் போறாருனு நினைக்கிறேன். சீக்கிரம் சாப்பிட்டுட்டு இடத்தை காலிப் பண்ணனும்.’

 

சாப்பிட்டு முடித்த அபி கை கழுவ எழப்போக அவனைக் கண்களாலேயே கெஞ்சி அமரச் சொன்னேன். பின்னே, ஹிட்லரிடம் யார் தனியா மாட்டுவது? விரைவாக உண்டுவிட்டு கை கழுவச் சென்றேன்.

 

என் பின்னே வந்த அபி, “இவ்ளோ பயம் இருக்குறவ எதுக்கு வாய தொறக்குற?” என்று கேட்டான்.

 

“யாருக்கு பயம்? அதுக்கு பேரு மரியாதை ப்ரோ! அதெல்லாம் உனக்கு தெரியாது. உன் ஆளுக்கும் தெரியாது!” கடைசி வாக்கியத்தை மட்டும் வாய்க்குள்ளேயே முணுமுணுத்தேன்.

 

“என்ன சொன்ன?” என்று அவன் வினவ, “ப்ரோ, ஒரு தடவை உதிர்த்த பொன்மொழிகள் எல்லாம் மறுமுறை கூற இயலாது!” என்று நாவை துருத்தி அவனை வெறுப்பேற்றினேன்.

 

அபியோ, “செந்தமிழ் வேற!” என்று தலையில் அடித்துவிட்டு சென்றான்.

 

“உன் மேல டவுட் எனக்கு அதிகமாகுது ப்ரோ!” என்றவாறே அவன் முதுகை வெறித்தேன்.

 

 

*****

 

அன்று காலை பால்கனியில் உலவிக் கொண்டிருக்கும்போது எதிர் வீட்டில் நேஹாவைப் பார்த்தேன். இங்கிருந்தே “ஹாய்” என்றேன். அவளும் மறுமொழி கூறிவிட்டு எதுவோ சைகையில் கூற, எனக்கு தான் எதுவும் புரியவில்லை. அவளிடம், ‘நான் கீழே வருகிறேன்’ என்று சைகை செய்துவிட்டு கீழே சென்றேன்.

 

நான் வாசலுக்கு சென்றபோது அங்கு ஆனந்த் அவன் வண்டியை நிறுத்திவிட்டு வந்தான். என்னைப் பார்த்ததும், “எங்கேயாவது வெளிய போறீங்களா மேடம்?” என்றான் அவனின் வழக்கமான புன்சிரிப்போடு.

 

“ஹே, வாங்க சார். உங்களை நேத்து ரெஸ்டாரண்ட்டுக்கு வாங்கன்னு சொன்னா இப்போ வந்துருக்கீங்க.” என்றவாறே அவனை வரவேற்றேன்.

 

“நேத்து கொஞ்சம் பிஸி. அதான் எனக்கு பதிலா என் பங்கை நீயே தின்னுட்டன்னு கேள்வி பட்டேன்.” என்றதும் அவனை லேசாக அடித்தேன்.

 

அப்போது தான் என் பார்வை வட்டத்துக்குள் விழுந்தாள் நேஹா. அவள் எங்களையே குறுகுறுவென பார்ப்பதை உணர்ந்தேன். சட்டென்று அவளை காக்க வைத்தது ஞாபகம் வந்தது எனக்கு.

 

“ஆனந்த், நீ உள்ள போ. நான் வந்துடுறேன்.” என்று நான் கூற, என் பார்வை செல்லும் திசையை பார்த்த அவனும் திரும்பிப் பார்த்தான். அவன் பார்வையை உணர்ந்து, “என் பிரெண்ட் நேஹா, நான் தான் அவளை வெயிட் பண்ண சொன்னேன்.” என்றேன்.

 

“ஹே ரிலாக்ஸ், யூ கேரி ஆன். நான் உள்ள ஆன்ட்டியோட ஸ்பெஷல் காபியை குடிச்சுட்டு இருக்கேன்.” என்று கூறிச் சென்று விட்டான் ஆனந்த்.

 

நான் நேஹாவிடம் சென்று, “சாரி நேஹா, ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனா?” என்று கேட்டதும் நேஹாவோ, “ச்சே, அதெல்லாம் இல்ல. நீங்க யாருகிட்டயோ பேசிட்டு இருந்தீங்களே, உங்க பிரெண்டா?” என்று வினவினாள்.

 

“ம்ம்ம் ஆமா, நாங்க பிரெண்ட்ஸ் ஆனது பெரிய ஸ்டோரி. அதை அப்பறம் சொல்றேன். நீ எதுக்கு என்கிட்ட இவ்ளோ ஃபார்மலா பேசுற? சும்மா நீ வா போன்னே பேசு.” என்று நான் கூற, “அச்சோ நான் அப்படி பேசுறது அத்துக்கு தெரிஞ்சா பெரிய லெக்க்ஷரே கொடுத்துருவாங்க.” என்றாள் நேஹா.

 

“அத்து வா யாரு அது?” என்று கண்களை சுருக்கியபடி நான் வினவ, “ராகுல் அத்து தான். அத்தான்னு கூப்பிட ஒரு மாதிரி இருந்துச்சா, அதான் இப்படி அதை சுருக்கிட்டேன். ஒரு தடவை இப்படி தான் அத்தான்னு கூப்பிட பிடிக்கலன்னு ராகுல்னு கூப்பிட்டதுக்கு ரெண்டு மணி நேரம் நான்-ஸ்டாப்பா அட்வைஸ் பண்ணாரு. அன்னைக்கு இப்படி கூப்பிட ஆரம்பிச்சது தான் இப்போ வர கன்டினியூ ஆகிட்டு இருக்கு.” என்றாள் நேஹா.

 

அவள் ராகுலை அத்து என்று விழித்தது முதலில் சிறிது உறுத்தினாலும், அவள் அவனின் அத்தை மகள் என்பது நினைவு வந்து அந்த உறுத்தலை மறையச் செய்தது.

 

“என்ன நதி அக்கா அப்படியே ஸ்டன்னாகி நிக்குறீங்க?” என்று அவள் என்னை உலுக்க, அவளின் ‘அக்கா’ என்ற அழைப்பு எனக்கு பிடித்திருந்தது.

 

‘ராகுல் அத்தான்னா நான் அக்கா தான!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டேன்!

 

“ஒன்னும் இல்ல நேஹா, சரி நீயும் வா எங்க வீட்டுக்கு போலாம். நீ இன்னும் எங்க வீட்டுக்கு வந்ததில்லல.” என்று நான் அவளை அழைக்க, “இல்ல நதிக்கா, இன்னொரு நாள் வரேன். உங்க பிரெண்ட் வேற வந்திருக்காங்க. நீங்க அவங்களை பாருங்க.” என்று நேஹா தவிர்த்தாள்.

 

“ஆனந்துக்காக நீ தயங்க வேண்டாம். வா உனக்கும் அவனை இண்ட்ரோ கொடுக்குறேன். இன் ஃபாக்ட் உன் ‘அத்து’க்கு கூட ரொம்ப தெரிஞ்சவங்க தான்.” என்றேன்.

 

இதைச் சொன்னதும் அவள் வீட்டிற்கு வர சம்மதித்தாள்.

 

“நதிக்கா, நீங்க அவங்களை ஒரு தடவை மரியாதையா கூப்பிடுறீங்க, இன்னொரு தடவ மரியாதை இல்லாம பேசுறீங்க?” என்று அவள் வினவ, “அது அப்படியே பழகிடுச்சு நேஹா. இதெல்லாம் உன் அத்து கிட்ட சொல்லிடாத. அப்பறம் எனக்கும் லெக்க்ஷர் எடுத்துடப் போறாரு.” என்று சிரித்துக் கொண்டே கூறினேன்.

 

“நதிக்கா என் அத்துவையே கிண்டல் பண்றீங்களா? இருங்க உங்களை அத்துகிட்ட சொல்றேன்.” என்று கேலிப் பேசிக் கொண்டே இருந்தவள், இடையிலேயே மௌனமாகிப் போனாள்.

 

என்னவென்று பார்த்தபோது அவளின் பார்வை நேர்கோட்டில் இருந்து சிறிதும் விலகாமல் வெறித்துக் கொண்டிருந்தது.

 

‘இவ யாரை இப்படி பார்க்குறா?’  என்று நினைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தபோது, அங்கு ஆனந்த் இவளுக்கு சற்றும் குறையாத பார்வையோடு இவளை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

‘இதனென்ன ரெண்டு பேரும் இப்படி பார்த்துட்டு இருக்குங்க! நம்ம தான் நந்தி மாதிரி இங்க நின்னுட்டு இருக்கோமோ? ச்சே, இப்போ கூட ‘நந்தி’னு தான் தோணுது. எல்லாம் அந்த சாண்டியோட வேலை. இப்போ இவங்க ரெண்டு பேரையும் அவங்க ட்ரீம்ஸ்லயிருந்து வெளிய கொண்டு வரணுமே.’ என்று நினைத்த நான், செருமினேன்.

 

அந்த சத்தத்தில் தன்னிலை அடைந்த இருவரும் உடனே அவர்கள் பார்வையை மாற்றிக் கொண்டனர். மறுமுறை இருவரின் பார்வையும் ஒன்றோடொன்று கலக்கவில்லை. கலந்துவிடாதவாறு அவர்கள் கவனமாகப் பார்த்துக் கொண்டனரோ!

 

‘இவங்க பார்க்குறதை பார்த்தா இது தான் அவங்க ஃபர்ஸ்ட் மீட்டிங் மாதிரி தெரியலையே. ஒருவேளை இவங்க ரெண்டு பேருக்கும் இடையில ஏற்கனவே சம்திங் சம்திங் இருக்குமோ?’ என்ற சந்தேகம் வலுத்தது எனக்குள்.

 

“என்ன ஆனந்த் வாசலுக்கே வந்துட்ட?” என்று நான் வினவ, “ஹ்ம்ம், நானும் நீ வருவ வருவன்னு பார்த்துட்டு இருந்தேன். ஆனா நீ உன் பிரெண்ட் கூட பேச்சுல ஐக்கியமாகிட்ட. அதான் உன்கிட்ட சொல்லிட்டு கிளம்பலாம்ன்னு வெளிய வந்தேன்.” என்றான்.

 

“ஹே சாரி சாரி, வா உள்ள போலாம்.” என்று கூறி, அங்கு உள்ளே வரலாமா வேண்டாமா என்று குழம்பிக் கொண்டிருந்த நேஹாவையும் இழுத்துக் கொண்டு உள்ளே சென்றேன்.

 

அங்கு என் அம்மா என்னை திட்ட காத்துக் கொண்டிருக்க கண்களாலேயே என் அருகிலிருந்த நேஹாவைக் காட்டி அமைதியாக இருக்குமாறு சைகை செய்தேன்.

 

‘நல்ல வேளை நேஹா இருந்ததுனால தப்பிச்சேன்!’ என்று மானசீகமாக பெருமூச்சு விட்டுக்கொண்டேன்.

 

என் அம்மா நேஹாவை யாரென்று தெரியாமல் விழிக்கவும், “ம்மா, இது நேஹா. என் பிரெண்ட்.” என்று அவளை அறிமுகப்படுத்தினேன்.

 

“நல்லா இருக்கியாமா? உங்க வீடு எங்க இருக்கு? இப்போ என்ன பண்ற?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.

 

“ம்மா ஒவ்வொன்னா கேளுங்க. பாவம் அவ பயந்துடப் போறா.” என்று நான் கூற, “நான் நல்லா இருக்கேன் ஆன்ட்டி. நான் நதி அக்காவோட ஜூனியர். இப்போ ஹாஸ்டல தான் இருக்கேன். அப்பா டெல்லில இருக்காங்க. எதிர்த்த வீடு எங்க அத்தை வீடு தான், இப்போ ஸ்டடி லீவுங்கிறதால இங்க வந்திருக்கேன்.” என்று நேஹாவும் பவ்யமாக பதிலை கூறினாள்.

 

“ஓஹ், ராகுல் தம்பி சொந்தமா நீ. அந்த தம்பி மாதிரி நீயும் நல்லா படிச்சு முன்னேறனும்.” என்று என் அம்மா கூற, ‘அச்சோ எங்க அம்மா அவங்க ‘ராகுல் தம்பி’ பெருமையை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க! என்று மனதிற்குள் அலறிய நான், “ம்மா, இப்படி பேசிட்டே இருக்கீங்க. காஃபி எல்லாம் போட்டு தர மாட்டீங்களா?” எப்படியாவது அம்மாவின் பேச்சை தடை செய்ய வேண்டுமெனக் கேட்டேன்.

 

“ஏன் நீ சும்மா தான இருக்க. உன் பிரெண்ட்டுக்கு நீ போட்டுத் தர வேண்டியதானா.” என்று என் பக்கமே திரும்ப, “ஏன், அதை குடிச்சிட்டு இனிமே வீட்டுப் பக்கமே வரமாட்டேன்னு அவ ஓடுறதுக்கா?” என்றேன் வேகமாக.

 

“இருபத்திரெண்டு வயசாச்சு இன்னும் காஃபி போடத் தெரியல!” என்று அவர் என் புகழைப் பாட, “போதும் போதும் என்னை புகழ்ந்தது. போய்  காஃபியை போடுங்க…” என்று விரட்டினேன்.

 

ஒரு வழியாக என் அம்மாவை சமாளித்து திரும்பினால் இருவரும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

 

“என்ன… என்ன சிரிப்பு உங்க ரெண்டு பேருக்கும்? அப்பறம் இங்க நடந்த விஷயம் கடுகளவு கூட வெளிய கசியக் கூடாது!” என்று தீவிரமாக நான் கூற, “கசிஞ்சா?” என்று ஆனந்த் சிரிப்புடன் வினவ, “அப்படி கசிஞ்சுருச்சுனா இந்த நதியோட மானம் காத்தோட போய்டும்.” என்று நான் கூற, எங்கள் மூவரின் சிரிப்பு சத்தம் அந்த கூடத்தையே நிறைத்துக் கொண்டிருந்தது.

 

“என்ன இங்க சிரிப்பு சத்தம் அதிகமா இருக்கு?” என்று கேட்டவாறே உள்ளே நுழைந்தான் அபி. வீட்டில் எதுவோ எடுக்க வந்திருந்தான்.

 

“ஹாய் ஆனந்த், எப்படி இருக்கீங்க? நேத்து பார்ட்டியை மிஸ் பண்ணிடீங்க.” என்றவாறே இருவரும் கை குலுக்கிக் கொண்டனர்.

 

“நீ வேற மாதிரி பார்ட்டி வச்சிருந்தேனா மிஸ் பண்ணாம கலந்துருப்பாங்க.” என்றவாறே என் கைகளைக் குடிப்பது போல செய்துக் காட்டினேன்.

 

“ஆமா ஆமா, என்னை விட உங்க தங்கச்சி தான் நிறைய மிஸ் பண்ணிருக்காங்க போல. அடுத்த தடவை உங்க தங்கச்சி கேட்டான்னு உங்க அப்பா கிட்ட பெர்மிஸன் வாங்கி அந்த பார்ட்டியை வச்சுடுங்க.” என்று சிரிக்காமல் கூற, அதைக் கேட்டு என் முகம் போன போக்கில் அனைவரும் சிரித்தனர். அவர்களை முறைக்க முயன்று தோற்று போய் நானும் சிரித்து விட்டேன்.

 

அப்போது என் அம்மா காஃபியை எடுத்து வந்தவாறே, “என்ன நடந்துச்சுன்னு இப்படி சிரிக்குறீங்க? அபி நீ எப்போ வந்த?” என்றார்.

 

“இப்போ தான் ம்மா வந்தேன். எதுக்கு சிரிச்சோம்னு கேட்டிங்கள, அது…” என்று என்னைப் பார்த்தவாறே கூறப் போக, நான் வேகவேகமாக என் அம்மா அருகில் சென்று அவரிடமிருந்து காபியை வாங்கிவிட்டு, “அபி அண்ணா டையர்ட்டா வந்திருக்கானே, அவனுக்கு காபி போடுங்க.” என்று மறுபடியும் சமையலறைக்கு அனுப்பினேன்.

 

பின்பு அவர்களிடம் திரும்பி நான் ஏதோ கூறப் போகும் முன், என்னை முந்திக் கொண்டு, “’இந்த விஷயம் நமக்குள்ளேயே இருக்கட்டும்!’ – இதை தான சொல்லப் போற” என்ற ஆனந்தை அடிக்கத் துரத்தினேன்.

 

அடுத்து கழிந்த கால் மணி நேரம், அபிக்கு நேஹாவை அறிமுகப்படுத்தி, என் அம்மாவின் ‘ராகுல் புராணத்தை’ கொஞ்சம் சலிப்பாகவே கேட்டு, அவர் கொண்டு வந்த காபியை குடித்து என்றவாறு கழிந்தது.

 

அபி ரெஸ்டாரண்ட்டிற்கு கிளம்ப, ஆனந்தும் கிளம்புவதாகக் கூறினான். அவன் என்னிடமும் அம்மாவிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப எத்தனிக்க, எதிரில் இருந்த நேஹாவிடம் ஒரு நொடி தயங்கி நின்றான். அவளிடம் கண்களால் விடைபெற்றுக் கிளம்பினான். அவளும் லேசாக தலையசைத்து வழியனுப்பினாள்!

 

‘என்னது இது? இங்க இன்னொரு லவ் ஸ்டோரி இருக்கும் போல! ஹ்ம்ம், இவங்களாம் கண்ணாலேயே பேசிக்குறாங்க. நமக்கு மட்டும் ஏன் இப்படி பட்ட சீன்லாம் ட்ரீம்ஸோட நின்னுடுது? நிஜத்துல நடக்கவே மாட்டிங்குது.’ என்று பெருமூச்சு விட்டேன்.

 

“என்னாச்சு நதிக்கா, எதுக்கு இந்த பெருமூச்சு?” என்று நேஹா வினவ, “ஒன்னும் இல்லையே.” என்று சமாளித்தேன்.

 

“நதிக்கா நான் கிளம்புறேன். வந்து ரொம்ப நேரம் ஆச்சு, நீங்களும் வீட்டுக்கு வாங்க.” என்று நேஹா கூற, “இன்னொரு நாள் கண்டிப்பா வரேன் நேஹா.” என்றேன்.

 

“நோ நோ இன்னொரு நாள்லாம் இல்ல இப்போவே வாங்க.” என்று நேஹா என் கையை பிடித்துக் கொள்ள, அவளிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் என் அம்மாவைப் பார்க்க, அவள் வேகமாக, “ம்மா, ப்ளீஸ் நதிக்காவை இப்போவே வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன்.” என்றாள் கெஞ்சலாக.

 

முதலில் மறுக்க வந்தவர், அவளின் ‘அம்மா’ என்ற விழிப்பில் சம்மதமாகத் தலையசைத்தார்.

 

‘போச்சு மதர் செண்டிமெண்ட்ல அம்மாவ கவுத்திட்டாளே! அச்சோ இப்போ அங்க ராகுல் இருக்கானான்னு தெரியலையே. கடவுளே அவன் இருக்கக் கூடாது.’ என்று நான் கடவுளிடம் வேண்ட, ‘இப்படி அவனுக்கு பயந்துட்டு இருந்தேனா, உனக்கு எப்படி ரொமான்டிக் சீன் நடக்கும்?’ என்று என் மனசாட்சி கிண்டல் செய்ய, எப்போதும் போல் அதை கண்டு கொள்ளாமல் ராகுலின் வீட்டிற்குச் சென்றேன்.

 

வெளியே கதவு பூட்டியிருந்ததால், அழைப்பு மணியை அடித்துவிட்டு காத்திருந்தோம்.

 

“நேஹா மா, எங்க போறேன்னு சொல்லிட்டு போறதில்லையா.” என்றவாறே கதவை திறந்தார் சுதா ஆன்ட்டி – ராகுலின் அம்மா!

 

“ஹே நதி, வா வா… ரொம்ப நாள் ஆச்சு உன்னை பார்த்தே.” என்று வரவேற்றார்.

 

சுதா ஆண்ட்டியை எனக்கு முன்பே தெரியும் – ராகுலின் அம்மா என்று தெரிவதற்கு முன்பே நாங்கள் இருவரும் ‘பிரெண்ட்ஸ்’. காய் வாங்க கடைக்குச் செல்லும்போது, சிறுவர்களுடன் விளையாடும்போது, எடை குறைக்க பூங்காவில் ‘வாக்கிங்’ செய்யும்போது போன்ற தருணங்களில் தான் சுதா ஆன்ட்டியை சந்திப்பேன். அவரும் என்னிடம் நன்றாக பேச எங்களுக்குள் ‘அலைநீளம்’ ஒத்துப்போனது.

 

ஒரு நாள் நாங்கள் இருவரும் கடையிலிருந்து ஒன்றாக நடந்து வந்து கொண்டிருந்தோம். அவர் எதிர் வீட்டைக் காட்டி, “இது தான் எங்க வீடு நதி மா. ஒரு நாள் வீட்டுக்கு வா.” என்றார். அப்போது தான் அவர் ராகுலின் அம்மா என்று தெரிந்தது.

 

நான் நிகழ்வுக்கு வந்த போது, நேஹா சுதா ஆண்ட்டியிடம், “ஓஹ், உங்க நதி வந்தவுடனே இந்த நேஹாவை கண்டுக்க மாட்டீங்களா?” என்றாள்.

 

“ஹே வாயாடி, உள்ள வாங்க ரெண்டு பேரும்.” என்று அவர் எங்களை வரவேற்க, ‘இந்த வீட்டுல இன்னும் என்னனென்ன ஆகப் போகுதோ!’ என்று எண்ணியவாறே வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றேன்.

 

ஈர்ப்பான்(ள்)…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
8
+1
20
+1
1
+1
1

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்