Loading

           பகுதி-25

 

 

ஜீவன் உண்மையை மறைத்ததற்காக வேதாந்த் , அவனை அடித்து விட்டு ராமமூர்த்தியின் மரணத்தை வைத்து விளையாடி விட்டதாகக் குற்றம் சாட்டினான்.

ஜீவன் வேகமாக ,’அவரது மரணத்திற்குக் காரணம் வனஜா’ என்று கூறி அன்று நடந்த விஷயத்தை விளக்கினான்.

ஜீவனின் தந்தை ராமமூர்த்தி இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது.  ஜீவன் தன்னுணர்வு இன்றி அவரது அறையிலேயே முடங்கிக் கிடந்தான்.

அப்போது தான் ராமமூர்த்தியின் நண்பர் செவத்தையன் ஜீவனைக் காண வந்திருந்தார்.

“என்னய்யா இப்படி அறைக்குள்ளேயே அடைஞ்சு கிடந்தா சரியாப் போயிடுமா…? ,  அவன் செத்ததுக்கு நீ என்ன செய்யப் போற நிச்சயம் எனக்குத் தெரியும் அவனுக்கு இது இயற்கையான மரணம் கிடையாது. அவ தான் ஏதோ செஞ்சுட்டா” என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஜீவன் குழப்பம் அடைந்தவனாய்,” யார் அங்கிள்…  ? என் அப்பா  ஹார்ட் அட்டாக் ல தானே இறந்து போனார் நீங்க என்ன என்னென்னவோ சொல்றீங்க…? “என்றான்.

“அது தான் உங்களைப் பெத்துப் போட்டுட்டு ஓடிப் போனாளே …!, அந்தப் பொம்பளை அவ தான் யா காரணமா.  இருக்கணும்… அவ ஒரு ஆறு மாசமா தொல்லை பண்ணிட்டு இருந்திருக்கா!  போன வாரம் தான் அதைப் பத்தி என் கிட்ட பேசினான் தம்பி.  வனஜா தப்பை உணர்ந்துட்டேன் மன்னிச்சு ஏத்துக்கங்கனு வந்து கெஞ்சி இருக்கா !,  இவன் தான் இளகின மனசுக்காரனாச்சே ஏத்துப்பான்னு நம்பிக்கையில் வந்திருக்கா ஆனா உன்னையும் விழியையும் மனசுல வச்சுக்கிட்டு அவன் மறுத்திருக்கான் ஆனா அவ உனக்குப் பொண்ணு பார்த்தானே அவங்களை வனஜா தான் ஏற்பாடு பண்ணி கல்யாணம் வரைக்கும் கொண்டு வந்திருக்கா அந்தப் பொண்ணு வீட்டுக்காரங்க வந்து வனஜாவை ஏத்துக்கிட்டா தான் கல்யாணம் னு சொல்லி இருக்காங்க அதைச் சொல்லி புலம்பிட்டு இருந்தான் பா எனக்கென்னவோ அவ தான் ஏதோ பண்ணி இருப்பான்னு தோணுது…அவன் ரொம்ப நல்லவன் தம்பி . உன் அம்மாவை நீ மறுபடியும் ஏத்துக்காதே !  அவன் அறைக்குள் தேடிப் பாரு ஏதாவது ஆதாரம் கிடைக்கும்…  ஏன் இவ்வளவு உறுதியா நான் சொல்றேன் தெரியுமா… ?அவனைக் கல்யாண நேரத்தில் படுத்திடக் கூடாதுனு  ஹாஸ்பிடல் போய்ச் செக்கப் பண்ணி அழைச்சுட்டு வந்தேன்…  டாக்டர் அவன் ஆரோக்கியமா இருக்கிறதா சொன்னாங்க அப்புறம் எப்படித் திடீர் னு மாரடைப்பு வந்திருக்கும்” என்று தன் சந்தேகத்தைக் கேட்டு வைத்தார் செவத்தையன்.

ஜீவனுக்கு ‘வனஜா திரும்பி வந்து விட்டார்’ என்பதே புதிய தகவலாக இருக்கச் செவத்தையன் கூறிய அனைத்தும் அவனது நெஞ்சில் குத்தீட்டியாய் பாய்ந்தது. 

“நான் பார்த்துக்கிறேன் அங்கிள் நீங்க கிளம்புங்க இந்த ஜென்மத்தில் அவங்களை நாங்க ஏற்றுக் கொள்ள மாட்டோம் “என உறுதி கொடுத்து விட்டு அவரை அனுப்பி வைத்தான்.

அவர் சென்ற அடுத்த நொடி ராமமூர்த்தியின் அறையைச் சோதனை போட , அவரது அலமாரியில் இருந்து கிடைத்தது அவரது டைரியும் ஒரு  கைபேசியும்.

டைரியை பிரித்தவனுக்கு அதில் விவசாயம் செய்த கணக்கு, விழியின் திருமணச் செலவு ஜீவனின் படிப்புச் செலவு அவனுக்குத் திருமணத்திற்கு ஒதுக்கி வைத்த பண இருப்பு ஆயுள் காப்பீடு தன் பெயரில் எடுக்கப்பட்ட அத்தனை காப்பீடுகளுக்கும் ஜீவனை  உரிமையாளனாகப் போட்டிருந்தார். மணிமேகலைக்கு அவரது சொத்துக்களைப் பிரித்துக் கொடுத்திருந்தவர்  அவரது திருமணத்திற்கு வேண்டி ஒதுக்கி வைக்கப்பட்ட பண இருப்பு விழிக்கு கொடுக்கப்பட வேண்டிய பங்கு என்று அத்தனையும் விலாவாரியாக எழுதி வைத்திருந்தார். 

 

நாட்குறிப்பின் நடுப்பக்கத்திற்கு மேல் அவரது மருத்துவச் செலவும் மருந்து மாத்திரைகள் பற்றிய தகவலும் இருந்தது.

 

ஜீவன் அதை எல்லாம் படித்து விட்டு நெஞ்சோடு அணைத்துக் கொண்டு கதறி அழுதான்.  சற்று நேரம் கழித்துத் தன்னிலை அடைந்தவன் கைபேசியை  இயக்க அது சக்தியின்றி உயிரை விட்டு இருந்தது.   சார்ஜ் போட்டதும் அதில் செய்திகளாக வந்து குவிந்திருந்தது அத்தனையும் வனஜாவின் கைபேசியில் இருந்து வந்திருந்த தவறிய அழைப்புகள் தான்…  அதிலேயே அவனுக்குத் தெரிந்து போனது  வனஜா தான் அவரை மிரட்டி இருக்க வேண்டும் என்று…

அத்தனையும் கூறி முடித்தான் ஜீவன்.

வேதாந்த் உறைந்து போய் அமர்ந்திருக்க,  ஜீவனே பேசினான் .

“அன்றிலிருந்து தேட ஆரம்பிச்சேன் டா அந்த வனஜாவை ,  அதனால் தான் அத்தை கிட்ட கூடப் பொண்ணு வீடு பத்தி விசாரிச்சேன்,  அந்தப் பொம்பளையைக் கொன்னு போட்டுட துடிச்சேன், ஆனால் நான் எதிர்பார்க்காத இடத்தில் வனஜா இருந்தது தான் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.  அந்தப் பரந்தாமன் கூட ஒரு நாள் காரில் போகும் போது அப்படியே அடிச்சு கொல்லத் தோன்றியது. ” என்று கை முஷ்டியை இறுக்கியபடி அமர்ந்திருந்தான் ஜீவன்.

“சரி அதை விடு,  நீ எப்போ போலீஸ் எல்லாம் ஆன எனக்குப் புரியவில்லையே …!! எனக்குத் தெரியாமல்… ” என்றதும் , ஜீவன் புன்னகை சிந்திட வேதா மூக்கை விடைத்தபடி முறைத்தான்.

“சரி சரி டென்ஷன் ஆகாத சொல்லிடுறேன் ” எனும் போதே மற்றவர்களும் வந்து விட்டிருந்தனர்.

“அத்தை நர்த்தனா எப்படி இருக்காங்க …?, எதுவும் சீரியஸ் இல்லையே சாரி அத்தை எவ்வளவோ முயற்சி செய்தும் அவங்களைப் பிரச்சினையில் இருந்து விலக்க முடியலை “என்று உண்மையாக வருத்தம் கொண்டான்  ஜீவா.

“இப்ப பரவாயில்லை டா ஆனா தான் வயிற்றில் கை வைத்தபடி , வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்து இருக்கா கஷ்டப்பட்டுச் சாப்பிட வச்சேன்… ரமேஷ் தான் அவளைப் பார்க்கவே முடியாது னு சொல்லிட்டான்…  அப்படியே ஊருக்குப் போகச் சொல்லிட்டு ஒரே பிரச்சினை,  கதிர் பார்த்துக்கிறதா சொல்லி எங்களை அனுப்பி வச்சார்…  ஆமா என்ன பண்றா அவ ?,  எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தா மறுபடியும் குடும்பத்துடன் வந்து சேர நினைப்பா ? என் அண்ணன் பட்ட கஷ்டம் எல்லாம் கொஞ்சமா  அவளைச் செத்தா கூட மன்னிக்கக் கூடாது டா ஜீவ் “என்று ஆவேசமாகப் பேசினார் மணிமேகலை.

ஜீவனோ வெறுமையாக ,”அவங்களுக்கு மன்னிப்பா , அது எல்லாம் மனுசங்களுக்குத் தான் அத்தை . அதுக்குக் கிடையாது…  விசாரணைக்கு உட்கார வைக்கும் போது கூட ஒரே அழுகை மன்னிக்கச் சொல்லி,  திரும்பியே பார்க்கலை வந்து விட்டேன்”  என்றான்.

“ஏன் ஜீவன் அவங்க ஓடிப் போனது தான் பிரச்சினையா உங்களுக்கு… ?”என்று தேவா கேட்டதும் அவளைத் தீயென முறைத்து விட்டு திரும்பி கொண்டான்.

“ஜீவ் தப்பா சொல்லலை…தெரிஞ்சுக்கத் தான் கேட்டேன் சாரி” என்று உடனே மன்னிப்பு கேட்டாள் தேவா.

“ம்ம்ம்ஹ்ம் அவங்க ஓடிப் போய்த் தான் ஆசைப்பட்ட விஷயத்தில் சாதிச்சிருந்தா கூட நான் மன்னிக்க வாய்ப்பு இருக்கு தேவ்.  இங்கிருந்து போய் ஒருத்தனுக்கு “என்று சொல்லவே முடியவில்லை அவனால்,  தவித்துப் போனான்.

“சாரி ! ஜீவ் வேண்டாம் அமைதியா இருங்க “என்று அமைதிப்படுத்திட ஜீவனோ,” ஐம் ஓகே தேவ்” என்றபடி மீண்டும் பேசினான்.

“அவங்க  அடுத்தவனுக்கு வைப்பாட்டியா இருக்கப் போனாங்க னு தான் என் வருத்தமே  … எங்களுடைய வறுமை தான் அந்த முடிவு எடுக்க வைத்ததாம்,  சொல்லும் போதே எனக்கு உடலெல்லாம் தீயாக எரிந்தது.  என் அப்பா  தன் உழைப்பால் எங்களை உயர்த்தித் தனிமையிலேயே வாழ்ந்து  இறந்தும் போயிட்டார்.  இதோ என் அத்தை அம்மா இடத்தில் இருந்து வளர்த்திருக்காங்க…  “என்றதும் விழிகள் விரிய மேகா ஜீவனைப் பார்த்தார்.

“என்ன அத்தை சரியா சொல்றேனா… !!  அண்ணன் பசங்க வளரும் வரை தனக்கொரு வாழ்க்கைத் தேவை இல்லை என்று வாழ்றது எல்லாம் எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா …?, உங்களுக்கு அப்போ பதினைந்து வயசு இருக்குமா ..?அப்பவே யோசிச்சு இருக்கீங்க” என்று சரியாகக் கூறினான்.

“ஜீவ் அதெல்லாம் ஒன்றும் இல்லை “என்று சமாளித்த மணிமேகலையைப் பெருமையாகப் பார்த்தவன் ,” ஐ க்நோ அத்தை உங்க தியாகம் தான் இப்போ நானும் விழியும்” என்றான்.

“ப்ப்ச் ! விடு டா இது ஒரு விஷயமா இதோ காத்திருந்ததால தான் கதிர் போல ஒரு  ஹஸ்பண்ட் கிடைச்சிருக்கார்…  இவ்வளவு கேரிங்கா நான் பண்ற சேட்டை எல்லாம் பொறுத்துக்கிட்டு போற மாதிரி ஹஸ்பண்ட் யாருக்கு கிடைக்கும்” என்று சிலாகித்த மணிமேகலையைப் பார்த்து சிரித்த வேதா ,”அது உண்மை தான் அத்தை அந்த மாதிரி தியாக உள்ளம் யாருக்கு வரும் கதிர் மாமாவைத் தவிர” என்று கிண்டல் செய்தான்.

“டேய் ! வேதம் அடி விழும் “என்றவர் ஜீவனிடம் திரும்பி ,”இப்போ சொல்லு டா எப்போ இந்தப் போலீஸ் வேலை இதெல்லாம் நான் கேட்டதுக்குச் செலக்ட் ஆகலை அத்தை அது எனக்குச் செட் ஆகாது னு சொன்ன “என்றார் புருவம் உயர்த்தி.

“இது ஒரு சீக்ரெட் மிஷன் அத்தை . ஹைலி கான்பிடன்சியல் ( Highly confidential ) கிட்டத்தட்ட இது ரெண்டாவது கேஸ் எனக்கு…  பர்ஸ்ட் எங்களுக்குக் கம்ப்ளைண்ட் வந்ததே  பெண்கள் அதுவும் வயசுப் பொண்ணுங்க மிஸ் ஆகற கேஸ் தான்… பதினைந்து பொண்ணுங்க காணாமல் போனதாகத் தகவல் வந்தது. அவங்க எல்லோரும் இந்த முத்தரசன் கிட்ட சீடர்களாகவும் பக்தைகளாகவும் வந்தவங்க  இங்கே மடத்திற்குப் பஜனைக்காக வர்றவங்க வீடு திரும்புவதில்லை எனப் புகார் வந்துட்டே இருந்தது போலீஸ் ல தெரிஞ்சவங்களை அனுப்பாமல் புதுசா தான் ஆள் அனுப்ப பேசினாங்க நானும் சந்துரு அப்புறம் இன்னும் ரெண்டு பேர் செலக்ட் ஆனோம். யாரிடமும் தகவல் பகிரக் கூடாது என்பது எங்களுக்கான விதிமுறைகள்…  அதன்படி நடந்ததால் தான் இன்னைக்கு நாங்களே எதிர்பார்க்காத ஒன்று நடந்திருக்கு  மொத்தமாக ஐநூறு கோடி பிடிச்சிருக்கோம், “என்றான்.

“அப்போ நல்லசிவம் ஐ மீன் சந்துரு உன் கிட்ட சொல்லிட்டு தான் எங்களுக்கு உதவினாரா …?” என்று வேதா கேட்டதும்,” ஆம் ” என்று தலையாட்டினான்.

நான் உண்மையில் குடுத்து வச்சிருக்கணும் டா உன்னை மாதிரி  ஃப்ரெண்ட் கிடைக்க அவ்வளவு மெனக்கெட்டு இருக்க இல்ல,  பெருமையாக இருக்கிறது டா ஆனால் நீங்க பண்ண வேலையில் தான் முத்தரசன் ஈசியா எங்க கிட்ட மாட்டினான். செண்பாக்கா அவங்களுக்கே தெரியாம குடுத்த தகவல் தான் எங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தது  .  தேவாவை மட்டும் தான் அனிமேஷன் ல வச்சு முத்தரசனை பயமுறுத்தி வச்சோம் அப்புறம் தான் அப்பாவோட இமேஜையும் வச்சுப் பயம் காட்டினோம்…  சந்துரு உண்மையில் அவ்வளவு தூரம் குடும்பத்தை விட்டு வந்து இதைச் செய்திருக்கான் தெரியுமா …?”என்று சொல்ல தேவான்ஷி இடை புகுந்தாள்.

“அப்போ அந்தக் கனகவேலை ஆக்ஸிடன்ட் பண்ணும் போது நிஜமாகவே நீங்க தான் ஹெல்ப் பண்ணிங்களா…!!” என்றாள் தீவிரமாக

“ஆமா தேவ் அவன் ஒரு பொம்பளை புரோக்கர் ஆக்ஸுவலி அவனைப் பிடித்து உள்ளே போட தான் ப்ளான். பட் நீ அவனை ஆக்ஸிடன்ட் பண்ணிட்ட , அப்படியும் அவன் சாகவில்லை அதான் நானே முடிச்சுட்டேன் வித் பர்மிஸன் தான். சிசிடிவி கேமராவில் பதிவான உன் வீடியோ முதற் கொண்டு மாற்றி வைத்தேன்…  தென்  அந்த அடியாட்களை அடிச்சு ஹாஸ்பிடல் ல போட்டது எல்லாம் அடியேன் தான் பட் உன் பேரண்ட்ஸ் விஷயத்தில் தான் என் கணக்குத் தவறாகிப் போனது”  என்று அமைதியானான்.

“விடுங்க “என்று தேவா சமாளித்தாலும்  ,”அப்போ அனுவை காப்பாத்த தான் என்னை அன்னைக்குப் பிடிவாதமாக அழைச்சுட்டு போனிங்களா… “என மீண்டும் கேட்டாள் .

“ஆமாம் தேவ் அனுவை அன்றைக்கு நாம அழைச்சுட்டு வரலை என்றால்  முத்தரசன் அன்றே அவளைக் கடத்தி இருப்பான்.  மறுநாள் அவளை மும்பையில் “எனும் போதே அனு குலுங்கி குலுங்கி அழுதாள்.

வேதா சமாதானம் செய்தான்.

“அனு விடு அது தான் எதுவும் ஆகவில்லையே விடும்மா…” என ஆறுதல் படுத்தினான்.

“நீங்க மட்டும் இல்லைன்னா நானும் அக்காவும்… “என்ற அனுவால் பேசவே இயலவில்லை.

“ரிலாக்ஸ் அனு…  விட்டுடு இதைப் பேச வேண்டாம் ஜீவா அடுத்து என்ன டா அவங்களைத் தான் அரெஸ்ட் பண்ணியாச்சே , இதுக்கு மேல மேரேஜ் பண்ணிக்கலாம் இல்லையா வயசுப் பொண்ணை எத்தனை நாளைக்கு இப்படி வைத்திருப்பது என்று மணிமேகலை கேட்க, ஜீவனோ “வெகு விரைவில் எங்கள் திருமணம் தான்” என்று உறுதி அளித்தான்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே சந்துருவிடம் இருந்து ஜீவனுக்கு அழைப்பு வந்தது.

“சொல்லு சந்துரு,  என்ன ஆச்சு…?,  இப்போ தானே அங்கிருந்து வந்தேன் “என்று கேட்க

“——–“

“ஓஓஓ எப்போ ப்ப்ச் எவ்வளவு தூரம் செக்யூரிட்டி போட்டு இருந்தோம் அப்புறம் எப்படி ?”

“——“

“சரி வரேன்.. ம்ம்ம் ம்ம்ம்… நீ அங்கேயே இரு வந்திடுவோம்” என்று இணைப்பை துண்டித்தான்.

“என்ன ஆச்சு டா… ?”வேதா கேட்க

“தேவ் உன் பேரண்ட்ஸ் சூசைட் அட்டம்ப்ட் பண்ணிட்டாங்க நீ அனு ரெண்டு பேரும் என்னோடு வாங்க வேதா நீ இங்கே பார்த்துக்கச் செக்யூரிட்டி ரீசன் டா “என்று சொல்ல வேதா சரி என்று சம்மதித்தான்.

…. தொடரும்.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
10
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    2 Comments

    1. Janu Croos

      ஓஹ் அப்போ எல்லாம பிளான்.தானா…நல்ல வேளை ஜேபிக்கு முன்னாடியே தெரிஞ்சதால போச்சு இல்லானா.என்ன ஆகி இருக்கும். மண்றதெல்லாம் பண்ணிட்டு இப்போ சூசைட் அட்டெம்டா.

    2. Archana

      குற்றம் உள்ள நெஞ்சு தான் குறு குறுக்கும் அதான் இந்த முடிவு எடுத்துட்டாங்க போல😒😒😒😒