
மூவரும் மருத்துவமனைக்கு வந்தாயிற்று, மருத்துவரும் பரிசோதித்துவிட்டு இரு பெண்களின் உடல் நிலையை பற்றி விவரித்து சென்றிருக்க, ஆடவர்கள் மூவரும் கிளம்புவதற்கான வழிமுறைகளை முடித்து வர, பெண்களும் அனைத்தையும் எடுத்து வைத்து காத்திரருந்தனர்.
ஒரு காரில் தியா யாழிசை ஆர்யன் குழந்தை ஏறி கொள்ள, ரேயன் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து கொண்டான்.
மற்றொரு காரில் மீதி மீதி நால்வரும் அமர்ந்து கொள்ள, ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து ருத்ரன் ரேயனின் காரை பின் பற்றி சென்றான்.
***
யாழிசை தியாவின் தோலில் சாய்ந்து உறங்கியிருக்க, அவளை தோலில் தாங்கியபடியே கையிலிருந்த குழந்தைக்கு தட்டி கொண்டிருந்தாள் தியா.
முன்னால் இருந்த ஆர்யாவோ கண்ணாடி வழியே தன்னவளை பார்த்து கொண்டிருக்க, தமக்கை அவளை தங்குவதை கண்டு மெல்ல புன்னகைத்தவன், அப்போது ஜன்னல் வெளியே செல்லும் பாதையை கண்டு ரேயனிடம் “மாம்ஸ்.. தியா வீடு இந்த ரூட் இல்லையே” என்க,
அவனை பார்த்து புன்னகைத்தவன் “நான் தியா வீட்டுக்கு போறோம் சொல்லவே இல்லையே” என்றதை கேட்டு நெஞ்சில் கை வைத்த தியாவிற்கு,
அப்போது தான் நேற்று இரவு அவன் ஆர்யன் வீட்டிற்கு போவதை பற்றி சொன்னது நினைவில் வர, அதனை மறந்த தன்னை நினைத்து நொந்து கொண்டவள் தம்பியிடம் எப்படி புரிய வைப்பது என்று பார்த்திருக்க,
அவனோ தமக்கையின் பார்வையை கண்டு கொள்ளாமல் ரேயன் கூறியதில் கேள்வியாக “வேற எதுவும் வீடு பாத்திருக்கீங்களா மாம்ஸ்” என்றதுக்கு மறுப்பாக தலையாட்டிய ரேயன் “மாப்பிள உன் வீடு இருக்கும் போது.. மாமா ஏன்டா வெளியே வீடு பாக்குறேன்”
“கரெக்ட் தான்..” என்றவனுக்கு, அதன் பின் தான் அவன் கூறியது உரைக்க “எதே என் வீடா” என்று விழித்தவனுக்கு தூக்கி வாரி போட,
அவனின் பாவனையில் இதழ் மடித்து சிரித்த ரேயன் “என்ன மாப்பிளை மாமான்னு வாய் நிறைய கூப்பிடுற.. உன் வீடுன்னு பிரிச்சி பேசுற நம்ம வீடுடா” என்று கூறியவன், அவன் இடியை இறக்கியது கூட புரியாமல் சாலையில் கவனத்தை செலுத்த,
ரேயன் கூறியதை கேட்டு கஷ்டப்பட்டு சிரித்த ஆர்யன் “ஆமா ஆமா.. நம்ம வீடு தான்” என்று கண்ணாடி வழியே “எதாவது பண்ணுடா” என்பது போல் காணும் தமக்கையை கண்டு பல்லை கடித்து முறைத்தவன், பார்வை ஜன்னல் புறம் திருப்பி தன் பதற்றத்தை மறைத்து கொண்டான்.
இரு கார்களும் ஆர்யன் வீட்டின் முன் வந்து நின்றது, ஆர்யனுக்கோ பதற்றம் ஒருத்தரை சமாளிப்பதே பெரிய விஷயம் இத்தனை பேரை எப்படி சமாளிப்பது என்று எண்ணியப்படியே காரை விட்டு இறங்கியவன் ‘மாட்டினா எல்லாரும் ரவுண்ட் கட்டுவாங்களே’ என்று சிந்தித்தவனின் மூளையில் பல்பு எரிய,
சட்டென்று அனைவரின் முன்னே வந்து வழிமறைத்து நின்றவன் “எல்லாரும் இருங்க காய்ஸ்.. ஹாஸ்பிட்டல் இருந்து வந்திருக்கீங்க நான் போய் ஆரத்தி கரைச்சி எடுத்து வரேன்” என்க ரேயனோ “டேய் அத அவங்களுக்கு மட்டும் எடுத்தா போதும்டா”
“சும்மா இருங்க மாம்ஸ்.. நான் போய் எடுத்துட்டு வரேன்” என்று தியாவை பார்த்து கண்ணை காட்டிவிட்டு ஓடி விட, அவன் வரும் வரை பெண்ணவள் தான் சமாளித்து நிற்க வைத்திருந்தாள்.
பின் அரத்தி தட்டுடன் வந்தவன் தியாவை பார்த்து கண் சிமிட்ட, பெருமூச்சு விட்ட தியாவிற்கோ எப்படி அனைவரையும் இங்கயிருந்து காலி செய்ய வைப்பது என்று யோசித்து மண்டை காய்ந்து நின்றிருந்தாள்.
ஆர்யனை முறைத்த ரேயனோ “ஏன்டா இத எடுத்து வர இவ்வளவு நேரமா” என்க,
அதற்கு அசடு வழிந்தவன் “ஒவ்வொன்னும் தேடி கரைச்சி எடுத்து வர வேண்டாமா.. சும்மா சும்மா சந்தேகப்பட்டுக்கிட்டு” என்று அவனை பார்த்து முகத்தை வெட்டி அனைவருக்குமே ஆரத்தி எடுத்தவன், தன்னவளுக்கு தனியாக சுற்றோ சுற்று என்று சுற்றி கொண்டேயிருந்தான்.
அவனின் செயலில் யாழிசை இதழ் கடித்து வெட்கப்பட, மற்றவர்களோ அவனை ஒரு மார்க்கமாக பார்த்து சிரித்து வைக்க, அவன் தோலில் தட்டிய ரேயன் “போதும் போதும் ஆரத்தி சுத்தியே இழச்சிடாதடா” என்று அவனை வீட்டிற்குள் இழுத்து செல்ல,
மற்றவர்களும் சிரித்தப்படியே உள்ளே நுழைய, தியாவின் முகத்தில் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் மட்டுமே இருந்தது.
ருத்ரன் சித்திராவை தூக்கி கொண்டு ஆர்யனிடம் கேட்டுவிட்டு ஒரு அறைக்குள் நுழைய போக, அவன் கையில் தவழ்ந்து கொண்டிருந்த சித்திராவோ “ஹால்ல உக்கார வை மாமா.. கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்”
“ரெஸ்ட் எடுடி” என்றதை கேட்டு முகத்தை சுருக்கி “பிளீஸ் மாமா..” என்று கெஞ்ச,
அதற்கு மேல் மறுக்க முடியாமல் பெண்ணவளை ஹாலியிருந்த சோஃபாவில் அமர வைத்து, அவள் காலை தன் மடியில் வைத்து பிடித்துப்படி ஆடவன் அமர்ந்து கொள்ள,
மற்றவர்களும் அவர்களை சுற்றி அமர்ந்து கொண்டனர்.
பின் ஆர்யன் தான் அனைவருக்கும் தேனீர் போட்டு கொண்டு வந்து கொடுக்க, அதனை குடித்தப்படியே வாகி “ஆர்யா.. நான் அந்த ரூம் எடுத்துக்கவா” என்று ஒட்டியிருந்த இரண்டு அறையில் அவள் ஒன்றை கை நீட்ட,
அவள் காட்டிய திசையை கண்டு தேனீர் குடித்து கொண்டிருந்த ஆர்யன் மற்றும் தியாவிற்கு ஒரே நேரத்தில் புரை ஏறி விட, தலையில் தட்டி இருமியப்படியே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
அவர்களை கூர்மையாக நோட்டமிட்ட ரேயன் “அது என்ன ரெண்டு பேருக்கும் ஒரே நேரத்துல புரை ஏறுது” என்றதை கேட்டு தியா முழிக்க,
ஆர்யன் தான் “சிப்ளிங்ஸ் இல்லையா அது சில நேரம் எங்களுக்குள்ள அப்படி தான் இருக்கும்” என்று அடித்து விட, ரேயனின் பார்வையில் சந்தேகம் இன்னும் அதிகரிப்பதை கண்டு நொந்த ஆர்யன் ‘ஒரு மணிநேரத்துக்கே போராட்டமா இருக்கு’ என்றப்படியே தமக்கை பார்த்து ‘எப்படியாவது அனுப்பி விடுடி’ என்பது போல் பார்த்து வைத்துவிட்டு வாகினியிடம் “வாகி சிஸ்.. அந்த ரூம் எனக்கும் இசைக்கும் பக்கத்து ரூம் சித்திரா இருக்கட்டும்.. நீ மாடி ரூம் எடுத்துக்க” என்றதை கேட்டு வாகி சரியென்று விட,
யாழிசை தான் கணவனை யோசனையாக பார்த்திருந்தால், பின்ன அன்று அந்த அறைக்கு தன்னை போகவே கூடாதென்று சொன்னவன், இன்று தன்னுடன் அங்கே தங்குவதாக சொன்னது பெண்ணவளுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.
பின் ரேயன் தான் “வாகி நீயும் பாட்டியம் ஒரே ரூம்ல தங்கிக்கங்க.. நானும் யாழியும் நம்ம வீட்டுல தங்கிக்குறோம்” என்க, அவன் கூறியதை கேட்டு பெண்ணவள் நொந்து விட,
ஆர்யனோ ‘அடிப்பாவி என்ன தனியா கோர்த்து விட்டியே’ என்று முறைத்து வைக்க, அவளோ தம்பியிடம் ‘சிக்க வச்சிடாதடா’ என்றப்படி பார்வையாலே கெஞ்சி கொண்டிருந்தாள்.
இரவு சாப்பிட்டு முடிய, தியா யாழினி குழந்தையுடன் அங்கிருந்து விடை பெற, நிஷா குட்டியோ “அப்பா நானும் வரேன்” என்று அடம்பிடிக்க,
அவளையும் கூட்டி கொண்டு இருவரும் அங்கிருந்து ஆடவனின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
பின் அவளை அறைக்குள் அழைத்து வந்து அவள் குளியல் அறைக்குள் தன்னை சுத்தப்படுத்தி வருவதற்குள் குழந்தையுடன் குழந்தையாக தன்னவள் உறங்கும் அழகை ரசித்தவன் அருகிலிருந்த சோஃபாவில் படுத்து கொண்டான்.
***
காலை போல் கண் விழித்த தியாவிற்கு எப்போதும் இருக்கும் வெறுமை நீங்கி, இழந்த அனைத்தும் கைவசம் வந்தது போல் உணர்ந்தவள், தன்னை இறுக்கமாக கட்டிபிடித்து உறங்கும் நிஷாவை கண்டதும் பெண்ணவளின் இதழில் மெல்லிய புன்னகை எழ,
தன்னருகிலிருந்த இரு குழந்தைகளும் முத்தமிட்டு அவர்கள் தூக்கம் களையாதப்படி எழுந்தவளின் கண்ணில் சோஃபாவில் குறுகி படுத்திருந்த அவளின் ரே விழுந்தான்.
அவனின் அருகில் சென்றவளின் கண்களோ, அவனின் வெற்று மார்பிலிருந்த பெயரை கண்டு அதிர்ச்சியோடு கண்களும் கலங்கி விட்டது.
பின்ன அவனின் நெஞ்சிலிருந்தது ரேவின் யாழி அல்லவா,
அதனை ஆசையாக வருடியவளின் கையை உணர்ந்து பெண்ணவளை இழுத்த ஆடவன், அவளின் இதழை சிறை பிடித்து கொண்டான்.
இம்முறை பெண்ணவள் அழுகவில்லை மாறாக, அவனுக்கு ஈடாக அவளும் பதில் முத்தம் கொடுக்க,
இருவருமே யார் வெல்வதென்று போட்டி போட்டு கொண்டிருக்க, குழந்தை அழவும் தான் பெண்ணவளை விடுவித்தான்.
பின் முகம் சிவந்த பாவையோ, அவனின் பார்வையை தாங்க முடியாமல் குழந்தையுடன் வெளியே வந்து விட, வெட்கப்புன்னகையுடன் சோஃபாவை விட்டு படுக்கையில் இடம் பெயர்ந்தவனோ தன்னவள் வாசம் பதிந்த தலையணையை கட்டிக் கொண்டு விட்ட தூக்கத்தை தொடர்ந்தான்.
***
பின் இவர்கள் இருவரும் குழந்தைகளுடன் ஆர்யன் வீட்டிற்கு வந்து விட, அப்போது தான் அனைவரும் சோஃபாவில் அமர்ந்து தேனீர் அருந்தி கொண்டிருக்க,
உள்ளே வந்த தியாவின் பார்வை ஆர்யனை வட்டமிட, அதை புரிந்து கொண்டு அவனும் கண்கள் மூடி திறக்க, அவர்களுடன் இருவரும் இணைந்து கொண்டனர்.
அதன் பின் தம்பியின் தோலில் கைப்போட்ட தியா “ஆர்யா உனக்கு யாழிசைக்கும் ரிசப்ஷன் போல வைக்க நினைக்கிறேன்” என்றதும் யாழிசை முகம் சிவந்து விட,
அவளை ரசித்துவிட்டு தமக்கையை யோசனையாக பார்த்த ஆர்யன் “எனக்கு ரிசப்ஷன் வைக்கிறது இருக்கட்டும்.. உன் கதை என்ன.. எப்போ கல்யாணம் பண்ணிக்கிற ஐடியா” என்றவனின் பார்வை ரேயனையும் தீண்ட, அவனோ தன்னவளின் பதிலை அழுத்தமாக பார்த்திருந்தான்.
பெண்ணவளோ குனிந்து இதழ் கடித்துவிட்டு தம்பியை ஏறிட்டு பார்த்தவள் “சில விஷயங்கள் தப்பே இல்லன்னு தெரிஞ்சாலும் ஆறாத வடுக்கள் ஆர்யா.. நடந்த எதுவுமே அவ்வளவு சீக்கிரம் மாறதே.. ஏற்கனவே பட்டதே போதும்.. இனி குட்டி பாப்பா கூடவே காலத்தை கழிச்சிக்குவேன்.. சோ என்ன யாரும் டிஸ்டர்ப் பண்ணாம அவங்க அவங்க கதைய பாருங்க” என்றவளின் பார்வை ரேயனை பதம் பார்க்க,
அவளின் நிலை புரிந்த ஆடவனின் பார்வையோ பெண்ணவளை உணவற்று வெறிக்க, தோழியின் முடிவில் கடுப்பான ருத்ரன் “பைத்தியமா மச்சி.. அதான் ரேயனுக்கும் வாகிக்கும் நடுவுல எதுவுமே இல்லன்னு க்ளியரா தெரிஞ்சி போச்சு தான.. அப்புறம் என்ன தான் பிராப்ளம்”
“பிளீஸ் ருத்ரா.. என் மனச மாத்த டிரை பண்ணாதீங்க யாரும்”
“ஓகே இதான் உன் முடிவுன்னா.. என் முடிவ கேட்டுக்க உனக்கு கல்யாணம் நடக்காம சித்திரா கழுத்துல நான் தாலி கட்ட மாட்டேன்.. உன் மேல சத்தியம் மச்சி” என்றதும் தியா அதிர்ந்து விட,
கோவமாக எழுந்த ரேயன் “ஸ்டாப் இட் ருத்ரா.. யாரு வாழ்க்கையும் யாருக்காகவும் வெயிட் பண்ணாது பைத்தியம் மாதிரி சத்தியம் பண்ணி தேவியோட சந்தோஷத்த கெடுக்காத..”
“என் முடிவுல எந்த மாற்றமும் இல்ல.. அவள கல்யாணத்துக்கு சம்மதிக்க வை” என்க,
அவனை முறைத்த ரேயன் பெண்ணவளின் எதிரே வந்து “அவன் தான் கேக்குறான்ல வாய திறந்து சொல்லேன்டி.. நான் பண்ணினது தப்பு தான் இல்லன்னு சொல்லவே இல்ல என் சூழ்நிலை அப்படி.. அதுக்காக நமக்குள்ள இருக்கிற உறவு இல்லவே இல்லன்னு ஆயிடுமா..” என்றதை கேட்டு கலங்கிய கண்களுடன் நிமிர்ந்தவள்
“இது உனக்கு இப்போ தான் தெரியுதா அன்னைக்கு அத்தன பேரும் பேசும் போது அந்த உறவு எங்க போச்சு ரே.. நான் உங்க அம்மா நடிக்குறாங்கன்னு அவ்வளவு தூரம் சொல்லியும் நம்பாம என்ன தூக்கி போட்டியே ரே.. அப்போ அந்த உறவு உன் கண்ணுக்கு தெரியலா.. பிளீஸ் வேண்டாம் ரே பழச பேச வைக்காத தூக்கி போட்டது தூக்கி போட்டதாவே இருக்கட்டும்” என்றவளின் குரலில் உள்ள வலி அப்பட்டமாக ஒலிக்க,
அவளின் பேச்சில் இதயத்தில் ரண வலியை அனுபவித்த ரேயன், முகத்தில் காட்டாது மறைத்து அவளை அழுத்தமாக பார்த்திருந்தவன் “அப்போ அப்படியே தூக்கி போட்டுட்டு போக வேண்டி தான.. இத இன்னும் ஏன்டி சுமந்துட்டு இருக்க” என்று கத்திவிட்டு, பெண்ணவள் உணரும் முன்னே கண நேரத்தில் பாவையின் ஷார்ட்டில் பாதுகாத்து வைத்திருந்த தான் அணிவித்த தாலி செயினை இழுத்திருக்க
அப்போதும் பெண்ணவள் அமைதியாய் அதனை வெறித்திருக்க, பாவம் மற்றவர்கள் தான் அவளின் கழுத்திலிருந்த தாலியை கண்டு உறைந்து நின்றனர்.
பின் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்த ஆர்யன் தமக்கை புறம் வந்து “என்ன தியா இதெல்லாம் அப்போ உனக்கும் மாம்ஸ்க்கும் கல்யாணம் ஆயிடுச்சா..” என்றவன் பெண்ணவளை குலுக்கி “தியா வாய் திறந்து சொல்லுடி..” என்க,
அவனை தள்ளிவிட்ட தியா “ஆமா ஆமா எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு இதோ இவன் தான் என்கிட்ட கூட கேட்காம தாலி கட்டினான்.. அப்புறம் எனக்கே தெரியாம என்ன விட்டுட்டு போயிட்டான்.. அப்போவே தாலி கழட்டி வீச தான் நினைச்சேன்..
ஆனா, அவன் நினைப்பா இது மட்டுமாவது என்கிட்ட இருக்கணும் தான் போட்டுருக்கேன்.. அதுக்காக எல்லாத்தையும் மறந்துட்டு போய் குடும்ப நடத்துறளவு.. நான் தரங்கெட்டு போயிடல” என்று கத்தியவள் சோஃபாவில் அமர்ந்து கொண்டு சுவற்றை வெறிக்க,
வாகினிக்கோ இவர்களின் நிலைக்கு தானே காரணம் என்றதில் குற்றயுணர்சி எழ, அவளின் அருகில் அமர்ந்து கையை பற்றியவள் “என்ன மன்னிச்சிடு தியா.. எல்லாத்துக்கும் நான் தான் காரணம்.. ரொம்ப வலிக்குது தியா.. உனக்கு ஒரு ப்ரெண்டாவும் தோத்துட்டன் தங்கச்சியாவும் தோத்துட்டன்” என்றதில் அவளை நிமிர்ந்து பார்த்து விரக்தி புன்னகை சிந்தியவள் “நான் பொண்ணாவே தோத்துட்டன் வாகி” என்க,
இருவரின் பேச்சில் மற்றவர்கள் மேலும் அதிர, ஆர்யா தான் என்ன உணருகிறோம் என்று புரியாமல் இருவரின் அருகில் அமர்ந்தவன் “தியா.. வாகி சிஸ் சொல்..லுறது உண்..மையா” என்றவனுக்கு உணர்ச்சியில் வார்த்தைகள் தண்டியடிக்க,
அவனின் கையை பற்றிய வாகியோ “ஆர்யா.. நானும் உன் அக்கா தான்டா.. நீ பிறந்த அதே அப்பாக்கு தான்டா நானும் பிறந்தேன்” என்று குலுங்கி அழ,
வேகமாக தன் அறைக்குள் சென்று வந்தவன், வாகியின் முன் இதய வடிவிலிருந்த சையினை காட்டி “இது உன்னோடது தான” என்றவனின் கண்கள் கலங்க,
அதை வாங்கி இதயத்தை திறந்து பார்த்தவள், அதில் தந்தையும் தாயுமிருந்த புகைப்படத்தை கண்டு பெண்ணவள் குலுங்கி “ஆர்யா” என்று அவனை கட்டிக் கொள்ள,
ஆர்யனும் “அக்கா” என்று அணைத்தவனுக்கு இத்தனை வருடம் தேடிய தமக்கையை கண்டு கொண்ட மிகுதியில் கண்ணீர் நிற்காமல் வடிந்தது.
இவர்களின் பாச போராட்டத்தை கண்டு மற்றவர்கள் கலங்கி நிற்க, தம்பியை விச்சித்திரமாக பார்த்த தியா “உங்க பாசபோராட்டத்த உள்ள போய் வச்சிக்குறீங்களா.. அப்புறம் தூங்குற குழந்தைங்க எழும்பிடும்” என்றதும் வாகியை விட்டு பிரிந்த ஆர்யன் “தியா” என்று அழைக்க,
அவள் அமைதி காத்ததில் கடுப்பானவன் “தியா இன்னும் என்னலாம் ரகசியம் மறைச்சு வச்சிருக்க சொல்லி தொலடி.. உங்க மூணு பேரு வாழ்க்கைலயும் என்ன தான் நடந்துச்சு..” என்றதை கேட்டு, ரேயன் தியா மற்றும் வாகி மூவரின் நினைவுகளும் இறந்த காலத்தை நோக்கி பயணித்தது.
தொடரும்..
– ஆனந்த மீரா 😍😍

