Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ………

இன்பா : ஆஆஆஆ

அஞ்சலி : ஹே என்னாச்சு

இன்பா : குத்திட்டா

அஞ்சலி : யாரு

இன்பா: அவ  தான்

அஞ்சலி : யாரு பா ஒன்னும் இல்லை

இன்பா : அப்போ தான் இன்பா நல்லா கண்ணு திறந்து பார்த்தா எல்லாமே கனவு

அஞ்சலி : கெட்ட கனவா

இன்பா : ம்ம்ம்

அஞ்சலி : ஒன்னும் இல்லை சரியா தூங்கு

இன்பா : ம்ம்ம் ………

மறுபடியும் ரெண்டு பேரும் தூங்க ஆரமிச்சுட்டாங்க …………

காலை ……….

இன்பா தான் முதல எழுந்தா ………….

இன்பா ; அஞ்சலி

அஞ்சலி : …………

இன்பா : அஞ்சலி

அஞ்சலி : சொல்லு டி

இன்பா : எழுத்துரு டி

அஞ்சலி : ம்ம்ம்

சோம்பல் முறிச்சுட்டே எழுந்தா ……….

அஞ்சலி : குட் மார்னிங்

இன்பா : குட் மார்னிங்

அஞ்சலி : சரி இப்போ நம்ப எப்படி குளிக்கிறது

இன்பா : சேம் டவுட்

அஞ்சலி : சரி வா அவங்க என்ன பன்றாங்கன்னு பார்க்கலாம் ………

இன்பா : ம்ம்ம்

ரெண்டு பேரும் டென்ட் விட்டு வெளிய வந்தாங்க …………..அவங்க டென்ட்க்குல போனாங்க ……….எல்லாம் தூங்கிட்டு இருந்தாங்க ……………

இன்பா : பாரு எப்படி தூங்குறாங்கனு ………….

அஞ்சலி : எழுப்புவோமா

இன்பா : கண்டிப்பா

அஞ்சலி : ஒன் ,டூ ,த்ரீ ………..

இன்பா ,அஞ்சலி : எழுந்திரிங்க ……….

இவனுங்க மூணு பேரும் அடுச்சு பிடுச்சு எழுந்தாங்க …………….

ரகு : ஏன் டி

அஞ்சலி : எழுந்திரிங்க

இனியன் : இதுக்கா இப்படி கத்துன

இன்பா : ஆமா

முகில் : ஏன் இப்போ எழுப்புனீங்க போங்க தூங்கலாம்

இன்பா : தூங்கலாமா கொன்றுவேன் எழுந்திரிங்க

இனியன் : ஏன் டி

இன்பா : பாத்ரூம் போகணும்

இனியன் : சாரி சாரி வாங்க

அஞ்சு பேரும் காட்டுக்குள்ள நடந்து போனாங்க ……………

அஞ்சலி : இன்னும் எவ்ளோ தூரம்

முகில் : கொஞ்சம் தான் வா

அஞ்சலி : ம்ம்ம் ……..

அஞ்சு நிமிஷம் நடந்தாங்க ………….ஒரு அருவி இருந்துச்சு ………..

ரகு : வாவ்

இனியன் : எவ்ளோ அழகு

அஞ்சலி : ஆமா

இவங்கல்லாம் இப்படி சொல்லிட்டு இருக்க இன்பாக்கு நிறைய கண்ணு முன்னாடி வந்துச்சு ………..

இன்பா : நமக்கு என்ன நடக்குது ………

தலைய பிடிச்சுட்டு அப்டியே கீழ உக்கார்ந்துட்டா …………

முகில் : ஹே இன்பா என்ன ஆச்சு

இன்பா : தெரில எனக்கு என்னென்னமோ தோணுது நெறய பேர் என் கண்ணனுக்கு வராங்க ………

முகில் : என்ன சொல்றாங்க …….

இன்பா : தெரில எனக்கு உருவம் மட்டும் தான் தெரிது

இனியன் : சரி முதல வா பிரெஷ் ஆகலாம்

இன்பா : ம்ம்ம் …………

எல்லாரும் பிரெஷ் ஆகிட்டு வந்தாங்க டென்ட்க்கு ………..

இன்பா : சரி அங்க கிடைச்ச படம்லாம் எடுங்க பார்க்கலாம்

முகில் : ஆமா வாங்க

முகில் படம்லாம் எடுத்து வெச்சான் …………

ரகு ; நான் தான் ஓபன் பண்ணுவேன்

இனியன் : சரி டா இந்தா ………

எடுத்து பார்க்க ஆரமிச்சாங்க ……….

முகில் : இதை பாருங்க

இனியன் : ஹே இது அப்டியே பார்க்க அஞ்சலி மாறி இருக்கே

அஞ்சலி : ஆமா டா என்னாலேயே நம்ப முடில

முகில் : அடுத்து எடு

இனியன் அடுத்த படத்தை எடுத்தான் …………

இனியன் : இங்க பாருங்க ………..

முகில் : இன்பா ………..

இன்பா : அப்டியே என்ன மாறியே இருக்கே

முகில் ; ஆமா இன்பா

இன்பா : அப்போ நான் அந்த புக்ல படுச்சதும் இந்த படத்துக்கும் ஏதாது சம்மதம் இருக்குமா

முகில் : என்ன புக்

அஞ்சலி : அந்த பிச்சைக்காரர் குடுத்தாரே அதுவா

இன்பா : ஆமா டி

முகில் : நீ என்ன படுச்ச

இன்பா : நான் இன்னும் முழுசா படிக்கலை

முகில் ; பரவலை படுச்ச வரை சொல்லு

இன்பா : அது ……….

இன்பா அந்த புக்ல அவ படுச்ச எல்லாத்தியும் சொன்னா ………..

முகில் : எனக்கு என்னமோ நம்ப தான் அதுனு தோணுது

இன்பா : எதுன்னு

முகில் : இந்த அரண்மனைல இருந்தது நம்ப தானு தோணுது ………..

இனியன் : எனக்கு புரில

முகில் : சரி புரிர மாறி சொல்றேன் …………நம்மளோட முன் ஜென்மம் தான் இந்த ராஜாகாலம் நம்மளோட அடுத்த பிறவி தான் இப்போ நம்ப இருக்கிறது

ரகு : யு மீன் நம்பலாம் அடுத்த பிறவி எடுத்திருக்கோம்னு சொல்றியா

முகில் : ஆமா

இனியன் : இப்டிலாம் கூட நடக்குமா

முகில் ; இந்த படத்தைலம் பாத்தீங்களா

அஞ்சலி ; ஆமா

இனியன் : இரு அடுத்த படத்தை பார்ப்போம்

இனியன் ஒரு படம் எடுத்தான் …….

இன்பா : மா ………அப்பா …….

முகில் : என்ன

இன்பா : ஆமா இது என்னோட அம்மா அப்பா ……….

அஞ்சலி : அப்போ முகில் சொன்ன போல நம்ப போன பிறவி எடுத்திருப்போமோ

இன்பா : தெரிலயே

இன்பா : ஹே இங்க பாருங்க நம்ப  இருக்கார்

அஞ்சலி : எங்க

ரகு : ஆமா நம்ப சார் கூட நம்பள மாறி பிறவி எடுத்துரைப்பார் போலயே

முகில் : எங்க காட்டுங்க

இன்பா : இந்தா ……..

முகில் : 😲😲😲😲 இது

இன்பா : என்ன ஆச்சு

முகில் : இவர் தான் என்னை கொன்னது

இனியன் : ஆமா இவர் பேரு என்ன

இன்பா ; தீரன்

அஞ்சலி ; ஒரு நிமிஷம் இரு அந்த புக்ல அவன் பேரு என்ன சொன்ன

முகில் : ரணதீரன்

இன்பா : அப்போ இந்த ஜென்மத்துல இவர் தான் ரணதீரன்

இனியன் : ஆமா

முகில் : உங்க ரெண்டு பேத்துல யாரு அகில்மதி யாரு எழில்மதினு மொதல்ல தெரியணும்

இனியன் : அவங்களது மட்டும் இல்லை நம்மளும் யார் என்னனு நமக்கு தெரியணும்

முகில் : ஆமா …………

முகில் : முதல அந்த புக்கை முழுசா படிக்கலாம் அப்போ தான் நமக்கு என்ன ஆச்சுன்னு தெரியும்

இன்பா : சரி தான் இருங்க படிக்குறேன்

இன்பா அந்த புக் எடுத்தா ……………..

முகில் : படி அப்போ தான் என்ன ஆச்சுன்னு தெரியும்

இன்பா : ம்ம்ம் ……….

🧡🧡🧡🧡🧡🧡

அகில் கோவமா அவளோட அறைக்கு போய்ட்டா ………….

எழில் : அக்கா என்னவாயிற்று

அகில் : அந்த ரணதீரன் என்னவெல்லாம் பேசுனான் தெரியுமா உமக்கு

எழில் : என்னவாயிற்று முதலில் அதை கூறு

ரணதீரன் கூறியதை எழிலிடம் கூறினால் …………

எழில் : என்ன மனிதன் இவன் எல்லாம்

அகில் : இதை முதலில் ருத்திரனிடம் கூற வேண்டும்

எழில் : நாளை காலை கூறிவிடலாம்

அகில் :ம்ம்ம் …………..

அடுத்த நாள் காலை ,

அகிலும் எழிலும் ருத்திரனை காண சென்றார்கள் ……..

அகில் : இன்னும் ருத்திரனை காணவில்லையே

எழில் : அதோ வந்துவிட்டார் …………

ருத்திரன் : என்ன தங்கையும் உடன் வந்து இருக்கிறாள் என்ன விடயம்

அகில் : ருத்திரா ……………நேற்று

ருத்திரன் : நேற்று என்னவாயிற்று

அகில் : அது …………..

நேற்று நடந்தவையெலாம் அகில் ருத்திரனிடம் கூறினால் …………

ருத்திரன் : இவனுக்கு எவ்ளோ துணிச்சல் இருந்தால் இவ்வாறு கூறி இருப்பான் அவனை

எழில் : அத்தான் இப்பொழுது கோவம் கொள்வது சரியல்ல

அகில் : என்ன செய்வது

ருத்திரன் : நாளை இதே இடத்திற்கு வாருங்கள் நான் கூறுகிறேன் ………..

அகில் : சரி

இவர்கள் இருவரும் சென்று விட்டார்கள் ……………

ரணதீரன் அவை ,

ராஜகுரு : அரசே

ரணதீரன் : கூறும் ராஜகுருவே

ராஜகுரு : தாங்கள் மணக்க விருக்கும் மங்கை

ரணதீரன் : ஆம் என் நிலவுப்பெண்

ராஜகுரு : அவள் வேறொரு ஆடவனை விரும்புகிறாள்

ரணதீரன் : அதுனால் என்ன ராஜகுருவே நானும் அவளை விரும்புகிறேன்

ராஜகுரு : ஆனால் இது தவறு அரசே

ரணதீரன் : தவறு தான் ஆனால் எமக்கு பிடித்தது தான் நடக்க வேண்டும்

ராஜகுரு : அரசே

ரணதீரன் ; போதும் ராஜகுருவே கிளம்புங்கள்

ராஜகுரு : ம்ம்ம்ம்

ரணதீரன் : என் நிலவுப்பெண்ணே நீ எமக்கு மட்டும் தான் சொந்தம் ……….

அடுத்த நாள் காலை ,

அகிலும் எழிலும் அவர்கள் இடத்திற்கு வந்தார்கள் ………..

ருத்திரன் : மதி

அகில் : ருத்திரா

ருத்திரன் ; நமக்கு வேறு வழி இல்லை நாம் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும்

எழில் : எவ்வாறு அத்தான்

ருத்திரன் பின்னால் யாரோ வருவது போன்ற சத்தம் கேட்டது …………..

எழில் : யாரோ வருகிறார்கள்

ருத்திரன் : என் நண்பர்கள் தான்

அகில் : ஓஒ

அப்பொழுது அவர்கள் இருவரும் வந்தார்கள் ……………….

ருத்திரன் : இவன் ரகுபதி , இவன் கார்முகில்

எழில் : இவரை தெரியுமே

ருத்திரன் : எவ்வாறு

எழில் : அது ……..அது……

முகில் : நான் கூறின பெண் இவள் தான் ருத்திரா

ருத்திரன் : என்ன

அகில் : இங்கே என்ன நடக்கிறது

ருத்திரன் : உன் தங்கை என் நண்பனை விரும்புகிறாள்

அகில் : எழில்

எழில் : அது ………

அகில் : கூறு

எழில் : ஆம்

அகில் : இது எப்பொழுதில் இருந்து

எழில் ; அன்று நான் அத்தானை காண வந்த பொழுது நான் பார்த்தது இவரை தான் அப்பொழுதில் இருந்து ……..

அகில் : அடிக்கள்ளி …….

எழில் : 🙈🙈🙈🙈🙈

ருத்திரன் : நம்மை பற்றி பேசுவோமா

அகில் : ஆம்

முகில் : நீங்கள் இருவரும் இவ்விடம் விட்டு செல்ல வேண்டும்

அகில் : என்ன

முகில் : ஆம் வேறு வழி இல்லை

அகில் என்ன முடிவு எடுப்பாள் …………..பார்ப்போம் அடுத்த அத்தியாயத்தில் …………….

மீண்டும் வருவாள் ……………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்