Loading

வணக்கம் மக்களே வாங்க கதைக்குள்ள போகலாம் ……..

இன்பா என்ன பண்றதுனு]தெரியாம முழுச்சுட்டு இருந்தா ………..

எழில் : என்ன யோசனை அக்கா

அகில் : எமக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை

எழில் :இதில் யோசனை செய்ய ஒன்றும் இல்லை அக்கா நீ கிளம்பிவிடு

அகில் : இது தவறு இல்லையா

எழில் : என்ன தவறு நமக்கு பிடிக்காத வாழ்கை வாழ்வதை விட பிடித்த வாழ்வை வாழலாம்

அகில் : ம்ம்ம்

எழில் : நாளை காலை நாம் எப்போவும் சந்திக்கிற இடத்துக்கு செல்வோம்

அகில் : சரி எழில்

அடுத்த நாள் காலை ,

எழிலும் அகிலும் அவர்கள் எப்போதும் சந்திக்கும் இடத்திற்கு சென்றனர் …………அங்கு ஏற்கனவே ருத்திரனும் அவன் நண்பர்களும் இருந்தனர் …………

அகில் : ருத்திரா

ருத்திரன் : என்ன முடிவு எடுத்துறிக்கிறீகள்

அகில் : நாம் செல்வோம்

முகில் : நல்லது ……..அப்படியென்றால் இன்று இரவு இரண்டு மணி அளவில் நீங்கள் இருவரும் வெளியே வந்துவிடுங்கள்

எழில் : நான் எதற்கு

முகில் : நீ அங்கே இருப்பது எமக்கு சரி என்று தோன்றவில்லை அதான்

எழில் : சரி நானும் வருகிறேன்

ரகுபதி : சரி தற்பொழுது நீங்கள் செல்லுங்கள் இரவு சந்திப்போம்

அகில் : ம்ம்ம்……..

இரவு ,

எழில் : நாம் செல்வோமா

அகில் : செல்வோம்

இருவரும் மெதுவாக அரண்மனை விட்டு வெளியே வந்தனர் ………அவர்கள் எப்போதும் சந்திக்கிற இடத்துக்கு சென்றனர் ………..அங்கே ருத்திரன் மற்றும் அவர்கள் நண்பர்களும் இருந்தனர் ………..

அகில் : செல்வோமா

ருத்திரன் : செல்வோம்

முகில் : நீங்கள் ஊர் எல்லையை தாண்டும் வரை நாங்கள் உங்களுடன் வருகிறோம்

ருத்திரன் : சரி

அப்பொழுது அங்கே வந்தால் அவள் ………..மொழியாள் …………

மொழியாள் : அத்தான்

ருத்திரன் : சொல் யாழ்

மொழியாள் : தாங்கள் இவ்வாறு செய்வது நியாயமா

ருத்திரன் : நான் என்ன செய்தேன்

மொழியாள் : நான் தங்களை விரும்புவது தங்களுக்கு தெரியாதா …….

ருத்திரன் : நான் பல முறை கூறிவிட்டேன் எனக்கு உம்மிடம் அப்படி ஒரு எண்ணம் கிடையாது நான் விரும்புவது அகிலை தான்

மொழியாள் : அதை பற்றி எனக்கு கவலை இல்லை

அகில் : உமக்கு ஒரு தரம் கூறினால் புரியாதா வழியை விடு

மொழியாள் : முடியாது

ருத்திரன் : இங்கே பாரும் நான் இவ்விடம் விட்டு செல்லவேண்டும் வழியைவிடு …………

மொழியாள் : நீங்கள் இவ்விடம் விட்டு சென்றால் நான் என் உயிரை மாய்த்து கொள்வேன்

அகில் : அது தான் உன் விதி என்றால் நாங்கள் எதுவும் செய்ய இயலாது

இவர்கள் அவளை தாண்டி சென்றார்கள் ……………

மொழியாள் : என்னை ஊதாசினம் படுத்தி விட்டு செல்கிறீர்கள் நான் என் உயிரை விடப்போகிறேன் ஆனால் அடுத்த பிறவியில் தங்களை அடையாமல் விடமாட்டேன் …………….

அங்கிருந்த கிணற்றில் மொழியாள் விழுந்து உயிரை மாய்த்து கொண்டால்………….இது முன் சென்ற ஐவருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை ……………….

இவர்கள் ஐவரும் சென்றனர் …………ஊர் எல்லையை அடைந்து விட்டனர் ………

முகில் : பத்திரமாக செல்லுங்கள்

ருத்திரன் : ம்ம்ம்

முகில் : நம் காவல் தெய்வத்தை வணங்கிவிட்டு செல்லுங்கள்

ருத்திரன் : சரி

அகிலும் ருத்திரனும் ஒரு அடி எடுத்து வைத்தார்கள் ………எங்கிருந்தோ வந்த அம்பு ருத்ரனின் நெஞ்சை துளைத்தது ………

அகில் : ருத்திரா ………………

ருத்திரன் நெஞ்சை பிடித்து கொண்டு சாய்ந்தான் ……………..அகில் அம்பு வந்த திசை நோக்கி பார்த்தால் …………..அங்கே……..

அகில் : தந்தையே

ராஜா : ஆம் நான் தான் ரணதீரங்கு உன்னை நான் விவாகம் செய்து தர முடிவு செய்தால் நீ என்ன காரியம் செய்கிறாய்

அகில் : நான் தான் கூறிவிட்டேன் நான் ருத்திரனை தான் விரும்புகிறேன் ஆனால் நீங்கள் எங்கள் காதலுக்கு சம்மதம் சொல்வது போல் கூறிவிட்டு எனக்கு துரோகம் செய்து விட்டர்கள் ………..

ரணதீரன் : நீ எனக்கு  மட்டும் தான் சொந்தம் நிலவுப்பெண்ணே

அகில் : இன்னோரு முறை நீ என்னை அவ்வாறு அழைத்தாய் உன் தலையை கொய்து விடுவேன்

ராஜா : அகில் என்ன பேச்சு இது

அகில் : அவ்வாறு தான் பேசுவேன்

இவர்கள் விடயம் தெரிந்து ராணி ஊர் மக்கள் அனைவரும் வந்துவிட்டார்கள் ………

அகில் : ருத்திரா ………..😭😭😭😭

ருத்திரனை அவள் மடியில் கிடத்தி ஆழுகிறாள் ……………

முகில் : என் நண்பனை கொன்ற உன்னை நான் விடமாட்டேன் ரணதீரா

முகில் தீரனை தாக்க சென்றான் ……..ஆனால் துரதிஷ்ட வசமாக ரணதீரனின் வாள் முகிலின் கழுத்தில் இறங்கிவிட்டது …………..முகிலும் அவ்விடத்திலேயே துடி துடித்து இறந்துவிட்டான் ………….

எழில் : முகில்…………..😭😭😭😭

கத்தி அழுது விட்டால் ………..

ராஜா : என்ன மகளே நீயும் இவனை விரும்புகிறாய் போலவே

எகத்தாளமாக வினவினார் …………….

ரகு : என் நண்பர்களை கொன்ற நீங்கள் உயிருடன் இருக்க கூடாது ………..

ரகு ராஜாவை தாக்க வர அவர் படையினர் ரகுவை அம்பு எய்தி கொன்றனர் ……………

ராஜா : நீங்கள் இருவரும் இப்பொழுது எங்களுடன் வாருங்கள்

எழில் : என் முகிலனை கொன்றுவிட்டீர்கள்

ரணதீரன் : ஆம் என்னை தாக்க வந்தான் அதனால் கொன்றுவிட்டேன்

எழில் : ஓ ………

ராஜா : செல்லுங்கள் இருவரும்

எழில் : என் முகிலை கொன்றவர்கள் அனுபவிப்பார்கள் ………நான் செல்கிறேன்

எழில் வேகமாக நடந்தால் ……..

ராணி : எங்கு செல்கிறாய் எழில் இங்கே வா

எழில் : எனக்கு யாரும் வேண்டாம் என் முகிலை கொன்றவர்கள் அனுபவிப்பார்கள் ……..

எழில் சொல்லிக்கொண்டே சென்று அங்கிருந்த கோவில் கிணற்றில் விழுந்து தன் உயிரை மாய்த்து கொண்டால் ………….

அகில் : எழில் 😨😨😨😨

ராஜா : எழில் ……..

ராணி : கடவுளே ……….

அகில் காளியாய் நின்று இருந்தால் ………..

அகில் : சந்தோஷம் தானே தந்தையே

ராஜா ; அகில்

அகில் : எம் பேரை கூற தங்களுக்கு அருகதை இல்லை

ரணதீர்க்கு இவ்விடம் நடந்த விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை …………..

அகில் : என் ருத்திரனை கொன்ற தாங்கள் இனி எத்தனை பிறவி எடுத்தாலும் தங்கள் மகள் மனைவியுடன் வாழ இயலாது ………….

ராணி : அகில் 😭😭😭😭

அகில் : கணவனின் சொல் தான் வேத வாக்காக நினைத்து மகள்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி வைத்த தாங்கள் இனி எப்பிறவி எடுத்தாலும் தங்களுக்கு பூவும் போட்டும் நிலைக்காது …………

ராணி : அகில் இவ்வாறு கூறாதே

அகில் : ரணதீரன் நீ என்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறினாய் அல்லவா இப்பிறவி இல்லை இனி எல்லா பிறவியிலும் உமக்கு திருமண யோகம் கிடையாது அற்ப ஆயுளில் தான் மடிவாய் …………..

ராஜா : மகளே ……….😥😥😥😥

அகில் : இம் மக்களுக்காக தானே என்னை ரணதீரன்க்கு விவாகம் செய்ய நினைத்தீர்கள் இந்த ஊரே மண்ணோடு மண்ணாகிவிடும் ……………மழை உணவு இல்லாமல் தவிச்சு துடி துடிச்சு இறந்து போவீர்கள் இதுவே என் சாபம் ……………….

இவ்வாறு கூறிவிட்டு அங்கே கோவிலில் இருந்த சூலத்தை எடுத்து அவள் வயிற்றில் குற்றி அவள் உயிரை மாய்த்து கொண்டால் …………..அங்கே இருந்த அனைவர்க்கும் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை ……………

ராஜா : 😭😭😭😭

ராணி : என் மகள்கள் இருவரும் இப்படி போக தான் நான் பெற்றேனா

ரணதீரனுக்கு இன்னும் நம்ப இயலவில்லை அகில் இறந்துவிட்டால் என்பதை அங்கே ராஜாவும் ராணியும் கதறி கொண்டு இருந்தனர் …………

ராஜகுரு : அரசே நாம் செல்வோம்

ரணதீரன் : ம்ம்ம் ……….

இங்கு ராஜாவும் ராணியும் அகில் மற்றும் எழில்கு செய்ய வேண்டிய காரியத்தை செய்து முடித்து விட்டு அரண்மனைக்கு திரும்பினர் …………..

ரணதீரன் அவை ,

ரணதீரன் சோகத்தின் திரு உருவமாய் இருந்தான் ……………

ராஜகுரு : அரசே

ரணதீரன் : சொல்லும் ராஜகுருவே

ராஜகுரு : தாங்கள் இவ்வாறு ஊன் உறக்கம் இல்லாமல் இருந்தால் நடந்து முடிந்தவை மீண்டும் சரி ஆகபோகுவதில்லை வந்து உறங்குங்கள்

ரணதீரன் : எம்மால் இன்னும் நம்ப இயலவில்லை ராஜகுருவே

ராஜகுரு : இந்த பானத்தை அருந்துங்கள்

ரணதீரன் : எமக்கு வேண்டாம் ராஜகுருவே

ராஜகுரு : அவ்வாறு தாங்கள் கூற கூடாது அருந்துங்கள்

ரணதீரன் : ம்ம்ம் ………

அப்பானத்தை வாங்கி அருந்தினான் …………அதை அருந்தி சிறிது நேரம் கழித்து ரணதீரனுக்கு உடலில் ஏதோ செய்தது ……..

ரணதீரன் : எனக்கு என்னவாயிற்று

ராஜகுரு : என் மகன்களை கொன்றாய் அல்லவா அதற்கான தண்டனை

ரணதீரன் : என்ன பிதற்றுகிர்கள்

ராஜகுரு : ஆம் என் மகன்கள் கார்முகில் ,ரகுபதி ,என் வளர்ப்பு மகன் ருத்திரனையும் தாங்கள் கொன்றிகள் அல்லவா அதற்கு தான் இந்த தண்டனை

ரணதீரன் : ஓஒ அவர்கள் உம் மகன்களா

ராஜகுரு : ஆம்

ரணதீரன் அவன் வைத்து இருந்த வாளை எடுத்து ராஜகுருவின் தலையை கொய்து விட்டான் …………

ரணதீரன் : அரசனுக்கு விசுவாசம் இல்லாமல் துரோகம் செய்தமைக்கு உனக்கான தண்டனை இது ………..நீ விமோச்சனம் அடையாமல் எத்தனை யுகங்கள் ஆனாலும் இப்பூமியிலே கருப்பு உருவமாய் திரிவாய் இதுவே உன் சாபம் ……………….

இவ்வாறு கூறிவிட்டு ரணதீரன் உயிரை விட்டான் ……………..சிறிது நாட்களியே ராஜாவும் ராணியும் இறந்தனர் …………ராஜா இறந்த பிறகு அவ்வூரில் இருக்கும் மக்கள் பஞ்சம் பட்டினியால் வாடி இறந்தனர் ……………

💖💖💖💖💖

முகில் : அப்டினா இப்போ அந்த ராஜகுரு எங்க

அஞ்சலி : முதல நான் யாரு இன்பா யாரு

ரகு :  இன்னுமா புரியல

அஞ்சலி : இல்லை

ரகு : நீ எழில்மதி , இன்பா அகில்மதி , இனியன் ருத்திரன் , முகில்  கார்முகிலன் , நான் ரகுபதி

அஞ்சலி : அப்போ மொழியாள்

இனியன் : என் அத்தை பொண்ணு யாழினி தான் அதுனு நினைக்குறேன்

இன்பா : அப்படி பார்த்தா இங்க ரணதீரன் இல்லை மொழியாள் இல்லை

அப்போ இவங்க கிட்ட யாரோ கேக்குறாங்க ……………..யாரு இங்க இல்லைனு …………..அந்த சத்தம் வந்த பக்கம் எல்லாரும் பாக்குறாங்க ……………எல்லாத்துக்கும் அதிர்ச்சி ……………….

யார் வந்துருப்பா……………பார்க்கலாம் அடுத்த அத்தியாயத்தில் ………………

மீண்டும் வருவாள்…………………

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்