Loading

இது மாயவலை அல்லவா… (பாகம் – 1)

மாயமாய் போவாளோ…

 

டீசர் – முன்னோட்டம்

 

மேடையில் ஏறி, அங்கிருந்த மைக்கைத் தட்டி சரிபார்த்தவள், தன் மதுரக் குரலால் பேசத் தொடங்கினாள். “ஹலோ மை டியர் ஃப்ரெண்ட்ஸ்! வெல்கம் ஆல். இங்க நிறைய பேருக்கு என்னைத் தெரிஞ்சுருக்கும்னு நெனைக்கிறேன். தெரியாதவங்களுக்கு சொல்றேன். நான் தான் இந்த காலேஜோட சேர் பெர்சன். ஐ’ம் வைஷாலி, பி. டெக் பயோ டெக்னாலஜி ஃபைனல் இயர்.

நீங்க எல்லாரும் ஆவலோட எதிர்பார்த்த, நம்ம காலேஜ் ஆன்வல் டேவோட கல்சுரல் ஈவண்ட்ஸ் இப்போ தொடங்கப் போகுது. சோ, முதல்ல ஒரு இனாகுரேஷன் டேன்ஸ் பர்ஃபார்மன்ஸ் குடுக்குறதுக்காக, நம்ம காலேஜோட டாப்பர்ஸ்ல ஒருத்தர் வரப் போறாங்க.

ஒரு பெரிய கைதட்டலோட லெட்ஸ் வெல்கம் யங் அண்ட் சார்மிங் விஷ்வஜித், பி. டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபைனல் இயர்” என்றதில் அனைவரும் கைதட்ட மேடையேறினான் அவன்.

கீழே பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒருவன், கைதட்டியவாறே தன் அருகில் இருந்தவளிடம், “யங் அண்ட் சார்மிங்காம்… அதுக்கெல்லாம் சிரிச்சுக்கணும்…” எனக் கூறி சிரித்தான்.

அதைக் கேட்டவள், “ஓசில டீ வாங்கிக் குடுக்குறான்னு, என்னென்ன சொல்லுது பாரு அந்த நாயி… தனியா சிக்கட்டும் கவனிச்சுப்போம்” என்றவாறே வைஷாலியை முறைத்தாள்.

“சரி, அவன் ஆடப் போறான். நம்ம என்ன இப்டி கை தட்டவா வந்தோம்? ஏதாச்சும் சம்பவத்தப் பண்ணிவிடு” என அவன் கூறியதில்,

“என்ன பண்றது?” என அவள் யோசனையுடன் கூறும்போதே, பாடல் தொடங்கி விஷ்வா ஆடத் தொடங்கியிருந்தான்.

‘இன்னாடா இது சப்ப பீட்டு

கொளுத்துங்கடா…’

என ‘வாத்தி கமிங்’ பாடல் தொடங்க,

விஷமச் சிரிப்புடன், அருகிலிருந்தவனை நோக்கி, “கொளுத்திருவோம்…” என்றாள் அவள்.

“என்னடி பண்ணப் போற?” என அவன் கேட்க,

“தீபாவளி பர்ச்சேஸிங்…” என இளித்தவள், பேகிலிருந்து, சிறியளவிலான சரவெடி ஒன்றை எடுத்தாள்.

அவனைப் பார்த்து, “ம்ம்?” என அவள் புருவம் உயர்த்த,

“ம்ம்….” என வில்லங்க சிரிப்புடன், அனைத்து பக்கமும் தலையாட்டினான் அவன்.

மூன்று அடுக்காக இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்த அந்த கலையரங்கத்தில், நடுவிலிருந்த அடுக்கில், பின்வரிசையின் கார்னர் சீட்டில் அமர்ந்திருந்தவள், அந்த வெடியில் திரியைக் கிள்ளிவிட்டு, பற்ற வைத்து இரு அடுக்குகளுக்கு இடையே இருந்த இடைவெளியில் போட்டாள்.

இருவரும் தயாராக காதை மூடிக் கொண்டு, “த்ரீ, டூ, வன்…” என எண்ணி முடிக்க, அந்த பட்டாசு படபடவென வெடிக்கத் தொடங்கியது.

அந்த இரைச்சலில் அனைவரின் கவனமும், இந்தப் புறம் திரும்ப, தன் நடனத்தைக் கெடுத்து விட்ட கடுப்பில், இருவரையும் வெறியாக முறைத்தான் விஷ்வா.

ஹேண்ட் மைக்கை எடுத்த வைஷாலி அதீத கோபத்தில், “வைஜெயந்தி, பி.இ மெக்கானிக்கல் ஃபைனல் இயர், வெற்றி, பி. டெக் பயோ மெடிக்கல் ஃபைனல் இயர் ரெண்டு பேரும், ப்ரோக்ராம கெடுக்காம ஒழுங்கு மரியாதையா எழுந்து ப்ரின்சிபல் ரூம்க்கு போங்க…” எனக் கத்தினாள்.

“எந்த கெட்டப் போட்டாலும் எப்டி கரெக்டா கண்டுபுடிக்கிறாய்ங்க? மண்டைல இருக்க கொண்டைய மறந்துட்டோமா?” என வைஜெயந்தி எழ,

“நம் ராஜதந்திரங்கள் அனைத்தும் வீணானதே, இன்னும் பயிற்சி வேண்டுமோ?” என வெற்றியும் அவளுடன் இணைந்து வெளியே நடந்தான்.

 

________________________________________________________________________________

வாழ்க்கைங்குறது ஒரு வட்டம் மாதிரி. என்னடா இவ தளபதி டையலாக் சொல்றாளேன்னு பார்க்காதீங்க. அது தான் உண்ம. உலகம் உருண்டைங்கறத எத்தன தடவ ஃபீல் பண்ணிருப்போம்? நம்ம ஆசைப்பட்டு, ஆனா முடிக்காம பாதில விட்ட விஷயம், எதிர்பாராம நடக்குறதும், பார்க்கவே முடியாதுனு நெனைச்சவங்கள, தற்செயலா பாக்குறதும், ‘ஹப்பாடா பிரச்சின முடிஞ்சதுடா’னு நெனைக்கும்போது, அடுத்த செட் பிரச்சின வரிச கட்டி நிக்குறதும், ‘என்னடா ஒரே பிரச்சினையா போகுதே’னு யோசிக்கும்போது, டக்குனு எல்லாம் முடிஞ்சு போய் ஹாயா உட்கார்றதும் கண்டிப்பா நம்ம லைஃப்ல நடந்துருக்கும். நெஜமாவே இந்த வாழ்க்க ஒரு வட்டம் தான். எல்லாம் தொடங்குன இடத்துலயே முடியும்கறதால இல்ல, ஏதோ ஒருநாள் நிச்சயமா இந்த வாழ்க்க முழுமையடைஞ்சுரும் அப்டிங்கறதால.

                                -வைஷாலி…

 

____________________________________________________________________________________

லைஃப் இஸ் அ ஜர்னி. அதுவும் நெறைய ட்விஸ்ட்ஸ் அண்ட் டர்ன்ஸ் நெறைஞ்ச ஜர்னி. இதுல எதுவுமே நிலையே இல்லாதது. சில நேரம் சின்னதா ஸ்கிட் அடிப்போம். சிலநேரம் பெரிய ஆக்சிடண்ட்ல விழுந்து வாருவோம். சிலநேரம் பெட்ரோல் தீர்ந்து வண்டி பாதிலயே நின்னுரும், அப்புறம் உருட்டிட்டுப் போகணும். சிலநேரம் புதுசா யாராச்சும் நம்ம வண்டில, லிஃப்ட் கேட்டு ஏறுவாங்க. அதுல சிலபேர் இந்த பயணத்த அழகாக்குவாங்க, சிலபேர் அலங்கோலமாக்குவாங்க. ஆனா, யாரா இருந்தாலும் ஒரு கட்டத்தில இறங்கிப் போயிருவாங்க. உலகம் உருண்ட தான், ஆனா, ஒவ்வொரு மனுஷனும் ஒரு தனி உலகம். அது அவங்கள மட்டும் தான் சுத்தும். வாழ்க்க ஒரு இலக்கில்லாத பயணம், அது முடியும்போது தான் நமக்கேத் தெரியும் எங்க வந்து சேர்ந்துருக்கோம்னு.

                                -விஷ்வஜித்…

 

___________________________________________________________________________________

இந்த வாழ்க்க ஒரு நதி மாதிரி. நிக்காம ஓடிட்டே இருக்கும். இது பூக்கள சுமக்கலாம், கிளிஞ்சல சுமக்கலாம். கற்களையும், கட்டைகளையும் கூட சுமக்கலாம். தெரிஞ்சோ, தெரியாமலோ தனக்குள்ள மீன்கள வாழ வைக்கவும், தெரிஞ்சோ, தெரியாமலோ உடைப்பெடுத்து சுத்தி இருக்கவங்கள சாக வைக்கவும் நதிக்குத் தெரியும். நம்ம வாழ்க்கையும் அப்டி தான். சிலர வாழ வைக்கும், சிலர வீழ வைக்கும். ஆனா, ஒன்னு நிச்சயமா அது நின்னு போயிடாது. தன்னோட டெஸ்டினிய அடையுற வர தேங்காம ஓடிக்கிட்டே இருக்கும்.

                                       -வெற்றி…

 

___________________________________________________________________________________

லைஃபுங்கறது முழுக்க, முழுக்கவே தேடல்களால நிறைஞ்சது. பசிச்சா சாப்பாடத் தேடுவோம். அடிச்சா அழ ஆறுதலத் தேடுவோம். இப்டி சிம்பிளா தேட ஆரம்பிச்சு அப்புறம் படிக்க நல்ல கோர்ஸத் தேடுவோம். அத சொல்லித் தர நல்ல இன்ஸ்டிடியூட்டத் தேடுவோம். படிச்சு முடிச்சதும் வேலையைத் தேடுவோம். வேலை கிடைச்சா நம்மள வச்சு மேய்க்க ஒரு இளிச்சவாயனத் தேடுவோம். அவனும் கெடைச்சதும், நம்மள மாதிரியே எதத் தேடுறோம்னே தெரியாம, எதையாச்சும் தேடுவோம்னு தேடித் தேடி மென்டலாக, ஒரு குழந்தையத் தேடுவோம். அதுவும் பொறந்ததும் நமக்குத் தேடுன, எல்லாத்தையும் அதுக்குத் தேடுவோம். அதுக்கப்புறம் எல்லாத்தையும் தேடி அலைஞ்சாச்சு, இதுக்கு மேல முடியாதுடா சாமி, இனிமேலாச்சும் ரிலாக்ஸா இருக்கலாம் அப்டினு நிம்மதியத் தேடுவோம். இவ்ளோ தேடுனோமே எதையாச்சும் கண்டுபுடிச்சோமானு, மிச்சம் இருக்க நேரத்துல பழைய ஞாபகத்தத் தேடுவோம். கடைசியா தேடுன வரையும் போதும்னு முடிவெடுத்துட்டு, அப்புறமும் சாவு இப்ப வருமா, அப்ப வருமான்னு அதையும் தேடிட்டு தான் இருப்போம். இவ்ளோ தாங்க லைஃப். தேடிக் கண்டுபிடிக்க முடியுதோ, முடியலையோ தெரியாது. ஆனா, தேடுறத மட்டும் எப்பவும் நிறுத்தவே முடியாது.

                                        -வைஜெயந்தி…       

 

_____________________________________________________________________________________

 

இப்டி வாழ்க்கையை வெவ்வேறு கோணத்துல இருந்து அழகாப் பாக்குற, நாலு பேரோட வாழ்க்கைப் புள்ளி இணையுற கோலம் ஆபத்தா இருந்தா?

போற போக்கில வாழ்க்கைய கடக்குற இவங்க எல்லாரும் போற பாதை போர்க்களமாகிட்டா?

சும்மா சுத்துற நாலு பேரையும், சூழ்ச்சி சுழல் சூழ்ந்துட்டா?

ஒவ்வொரு கணத்தையும் ரசிச்சு வாழ்ற, இவங்களோட வாழ்க்கையே கனமாகி, ரணமாகிட்டா?

சிம்பிளா போய்க்கிட்டு இருக்க இவங்க வாழ்க்க சிக்கலான சிலந்தி வலைல சிக்கிக்கிட்டா?

சிறகடிச்சுப் பறக்குற இவங்களோட லைஃப் இனி சிறப்பாகுமா, சின்னாப்பின்னமாகுமா?

 

                                 -மாயவலை சூழும்…

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்