கீழே விழ இருந்தவளின் இடையை பற்றி நிறுத்தியவனின் கண்ணில் அவன் தேடலுக்கான விடை கிடைக்க, 5 ஆண்டுகளுக்குப் பிறகு இதமாக உணர்ந்தான்.
அவள் கண்களும் அதையே பிரதிபலிக்க, முகத்தில் புன்னகையுடன் அவனை ஏறிட்டாள்.
இருவர் கண்களும் ஒருவரை ஒருவர் கண்களில் நிரப்பிக்கொள்ள, ” உன்ன பாக்கவே முடியாதுன்னு நினைச்சேன். என்னை ரொம்ப அலைய விட்டுட்ட. ஏன் இப்படி பண்ணன?” என்ற அவனது கேள்விக்கு புன்னகையை மட்டும் பதிலாக அழித்தவள், நகர நினைக்க அவள் கைகளை பிடித்தான்.
“மறுபடியும் உன்னை ஓட விட, நான் என்ன முட்டாளா?”
*****
“உங்க பையனை கல்யாணம் பண்ண என் பொண்ணு குடுத்து வச்சிருக்கணும்.” என பெண்ணவளின் தந்தை கூற, பெண்ணவளின் கண்களோ தன் மணாளனே நோக்க, அவனும் அவளைப் பார்த்து கண்ணடித்தான். அதில் முகம் சிவந்தவள் தலைகுனிந்தாள்.
“அப்போ நம்ம பசங்க கல்யாணத்த எப்பவும் வச்சுக்கலாம் சம்மந்தி?”
“இப்போ எப்படி…” என அவர் யோசிக்க,
“டோன்ட் வர்ரி மாமா. கல்யாணத்தை சீக்கிரம் வச்சா, என்னோட ஷெட்டியூல் பாதிக்கும்ன்னு நினைக்க வேண்டாம். நான் எல்லாத்தையும் ரீஷெட்டியூல் பண்ணிக்குவேன்.”
அவரோ, ” என்ன மாப்ள கல்யாணத்தை சீக்கிரம் வச்சுடுங்கன்னு என்று குறிப்பு குடுக்குறீங்களோ?” என சிரிக்க அவனோ வழிய, அவனின் தந்தையோ, “ஏன்டா, பொண்ணு உனக்கு தான்னு முடிவு ஆயிடுச்சுல. அப்புறம் ஏண்டா அவசரப்பட்டு மானத்த வாங்குற.” என அவன் கேட்க அவனோ அவரை கவனித்தானில்லை.
அவனின் பேச்சில் வெட்கம் பூசிக்கொண்டு அவளின் மீதே இருந்தது.
*****
- காதல் அழகானது. ஆழமானது. காதல் எதையும் எதிர்பார்க்காதது. தன் காதலன் தன் காதலிக்காக உயிரையும் விட்டுக் கொடுப்பவர்கள் காதலர்கள். சில சமயம் அவர்களின் காதலர்களின் சந்தோசத்திற்காக மற்றவரின் கட்டாயத்துக்காக தன் காதலை எட்ட நின்னு அனுபவித்தவர்களும் இருக்கிறார்கள். தன் காதலே தன் காதலை அடுத்தவருடன் பகிர் கூறினால், காதல் கொண்ட மனது அதை ஏற்குமா? விடை தேட பயணியுங்கள், திருடிய இதயத்தை திருப்பிக் கொடுத்துவிடு நாவலுடன்…
யார் யாரோட காதலே அவங்களோட காதலுக்காக அவங்கள காதலிக்கறவங்களே விட்டே சொல்ல சொன்னது🤔🤔🤔🤔.
படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳🥳🥳.
Nandri sis
அய்யோ மகரே… நீயே உன் மானத்தை வாங்காதடா… கெத்து கெத்து போகுது டா 😂😂😂😜😜
சூப்பர் டீசர் சங்கு சக்கரம்… 😉😉
வெற்றி பெற வாழ்த்துக்கள்
நன்றி சகோதரி
Wow nice ma❤😍💯story eppo start pannuvinga