Loading

முன்னோட்டம் – 2

     ” இப்ப அழுறத நிறுத்தப்போறீயா இல்லையா ” என்று தனது கோபத்தினைக் குரலில் வெளிப்படுத்தினான் ருத்ரன் . பெயரில் இருந்த ருத்ரத்தினை இதுநாள் வரை கண்டிராத அவளும் ஒருநொடி பயந்து போனாள். 

   ” இப்ப என்ன இழவு விழுந்து தொலைச்சு னு இப்படி அழுதுட்டு ஒரு மூலை ல ஒடுங்கி இருக்குற … உனக்கு என்ன பைத்தியமா ” என்று தனது இயலாமையை வார்த்தைகளில் வெளிப்படுத்தினான் . 

   ” ஆமா பைத்தியம் னே வச்சுக்க … பைத்தியம் பிடிச்சு மென்டல் ஹாஸ்பிடல் ல சேர்த்திருந்தா கூட பரவால. நான் அதைத் தாங்கிப்பேன். ஆனா இதை என்னால ஏத்துக்கவே முடியாது  ” என்று அவனுக்கு ஈடாய் கத்தினாள் . 

   ” ப்ச் ஏன் இப்படி பண்ணுற … நீ அவ்வளவு தானா  … பெரிய புடுங்கி மாதிரி ‘ கோழையா ஒளியாத  எழுந்து நில்லு … இந்த உலகத்துக்கு நீ யாருனு காட்டு ‘ னு சொல்லுவ … உனக்கு ஒரு விஷயம் தெரியுமா  … உன்னோட ‘ வலியை மீறிய அவளின் வாழ்க்கை ‘ என்ற கதை புக்கா பப்ளீஷ் ஆகிடுச்சு . அந்த புக் படிச்சு எத்தனை பேர் வாழ்க்கையைப் புதுசா வாழ்றாங்க தெரியுமா …. பலரோட வாழ்க்கை ல ஒளியேற்றுன நீ ச்சை … நீ ஒரு கோழை டி … இந்த உலகத்தைப் பார்த்து பயந்து ஓடுற கோழை… நான் அந்த மக்கள் கிட்ட பேசுறேன். ‘ இனி நீ ஒரு கோழை . அவளால எதுவுமே முடியாது . எடுத்த காரியத்தை ஒழுங்கா முடிக்க முடியாத முட்டாள் னு ‘ ” என்றவன் , அருகில் இருந த அவளது டேபை போட்டு உடைத்திருந்தான். 

   ” ருத்ரா ஓட் ஆர் யூ டூயிங் … இட்ஸ் மை லைஃப் “

   ” ஓ… லைஃப் அ … அதுல அப்படி என்ன பெரிய லைஃப் இருக்கு . ஹான் நெக்ஸ்ட் கதை எழுத ஆரம்பிச்சுட்ட போல … இனிமே நீ கதையே எழுத கூடாது. ஒரு கோழை கதை எழுதி யாரும் வீரமா மாற வேண்டாம். இனிமே இந்த அறைல பேப்பர் பேனா ஃபோன் னு எல்க்ட்ரானிக் ஐட்டம்ஸ் எதுவுமே கிடையாது . இந்த அறையை விட்டு எண்ணைக்கு வெளியே வர்றியோ அண்ணைக்குத் தான் எல்லாம்; எல்லாமே … ஏன் என் பாசம் கூட ” 

   ” பரவால ருத்ரா… ஒரு பொண்ணா என் வலி உனக்குப் புரியாது . ஏன்… உனக்குக் கூட ஒரு தங்கச்சி இருக்கால … ” 

    ” ஏண்டி இந்த டையலாக்க மட்டும் மாத்தவே மாட்டிங்களா … என்ன சொன்ன … கமான் சே அகெய் … என் தங்கச்சி அ… டூ யூ நோ அபௌவ்ட் ஹெர்… எங்க இசையோட முகமே ஆசிட் பட்டது தான்டி … அவ உன்னோட அந்த கருமம் பிடிச்ச புக் படிச்சுட்டு இன்ஸ்பயர் ஆகி , வெளியே வந்து உலகத்துல சாதிக்குறாடி… கிட்டத்தட்ட இரண்டு வருஷம் கழித்து தான் சர்ஜரி பண்ணி இவ்வளவு தூரம் சரி பண்ணுனோம் இடியட் ” என்று கத்தியவன் , அறையை விட்டு வெளியேறினான். 

    இத்தனை சொல்லியும் கூட அவள் , ” ஆசிட் பட்டிருந்தா கூட பரவால… ஆனா இதை என்னால ஏத்துக்க முடியாது ” என்று அரற்றியபடி இருந்தாள் . எதிர் அறையில் இதனைப் பார்த்துக் கொண்டிருந்த உதிரனோ கோபம் தாளாது எழுந்து வந்து , அவளின் தொண்டையை நெருக்க , மூச்சுக்கு ஏங்கித் தொய்ந்து போயிருந்தாள் பெண்ணவள் … 

உடைந்திடாமல் …

    இரண்டாவது முன்னோட்டம் பற்றிய உங்களின் கருத்துக்களை கூறும்படி தாழ்மையாய்க் கேட்டுக் கொள்கிறேன்.

– என்றும் அன்புடன்

குட்டி சரன் வெடி 😜

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
5
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்