குமரி – 14
“எனக்கு பரிவட்டங்கள் வேண்டாமென்று சொல்லவில்லை. என் அன்னைக்கு அங்கு மரியாதை வேண்டும். என் அன்னை பெயரிலேயே ராணியை வைத்திருப்பவர் . ராணி சேரி, வீர மங்கை. அவரை ராணியாக்க இவர்களுக்கு கசக்கிறதோ. நாச்சியார் வளரும் வரை நீ ராணியாக இரு என்று என் அன்னையை சொல்லும் பொழுது எனக்கே வலித்தது. அப்படியென்றால் என் அன்னைக்கு எவ்வளவு வலிக்கும். அவர்களின் கண்களில் கண்டேன் அப்படியாகப்பட்ட அவமானத்தை” என்று பொங்கி பொறுமி கூறினான் ரவி வேந்தர அகவன்.
இவ்வாறு கூறுவதை பொறுமையுடன் கேட்ட அவனின் தந்தை “மைந்தா! கோபம் கொள்ளாதே. வேகத்தை விட விவேகம் மிகவும் முக்கியம். அதே போல், நாம் கோபப்படுவது தெரிந்தாலும் மாட்டிக் கொள்வோம். முதலில் சீமத்துரை சொன்னதை செய்! பிறகு மற்றதை பார்த்துக் கொள்ளலாம் ” என்று அவனுக்கு அறிவுரை வழங்கினார்.
பின்பு, சில உரையாடலகளுக்கு பின் , திட்டம் தீட்ட ஆரம்பித்தனர். அத்திட்டத்தின் படி , கேப்டன் மைக்கேல் கற்க போகும் சமயம் ரவி வேந்தரும் செல்வதே.
அதனால், அதை சீமத்துரையிடம் கூறிவிட்டு அந்நாளுக்காக காத்திருந்தனர்.
🌿🌿🌿🌿🌿
குறிச்சியான்களின் குடில்களின் பஞ்சாயத்து கூடத்தில் நடுவில் இரும்பொறை அமர்ந்து இருக்க , வலது புறத்தில் குந்தவையும், இடது புறத்தில் மொழியாள், அங்கை, இன்பன் மற்றும் செழியன் நின்று கொண்டிருந்தனர்.
” அய்யா, மன்னிக்கவும். எதிர்த்து பேசுகிறேன் என்று நினைக்க வேண்டாம். பெண்கள் வீட்டிற்குள்ளேயே முடங்க தேவையில்லை. அதே சமயம் எதிர்த்து நடந்து கொள்ளவும் கூறவில்லை. அவர்கள் இருவருக்கும் பிறவியிலேயே திறமை இருக்கின்றது. மொழியாள் அவளது ஏழு வயதிலிருந்தே புது வகையான பூக்களை உருவாக்குவது, மருந்துகளையும் தயாரித்து உள்ளாள். அங்கை இவளுக்கு வேறுபட்டவள். இவளுக்கு கத்தி சண்டை, கம்பு சண்டை , வாள் சண்டை இதில் அவளுக்கு ஆர்வம் அதிகம் உள்ளது. அதனால் தான், அவளை சிவகங்கைக்கு அனுப்பினேன். முதலில் இருவரையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று சிற்றனையிடம் கூறுங்கள் ” என்று கோபமாக கூறினான் இன்பன் தங்கைக்கு அடிப்பட்ட கோபத்தில்.
குந்தவையும் ” இவர்கள் இருவரால் தான் இவள் இப்படி உள்ளாள். இவளை யார் மணப்பார்? இதில் நான் நாச்சியார் வம்சம் என்று பெயரை கூட மாற்றிக் கொண்டாள். ஒரு அன்னையாக எனக்கும் பயம் இருக்க தான செய்யும். இவளின் அப்பன் இருக்கும் வரை அவர் கெடுத்தார். இப்பொழுது இவர்கள் ” என்று விட்டு கொடுக்காமல் தன் மனதின் பாரத்தை கொட்டிவிட்டாள்.
அனைவருக்கும் ஒரு மாதிரி ஆகிவிட்டது. ஏன், அங்கை கூட முன் வந்து விட்டாள் . “இனிமேல் இது போல் நடக்காது. உங்கள் சொல் படி நடக்கின்றேன் ” என்ற கூற முனைந்து விட்டாள். அச்சமயம், மொழியாள் அவளின் கையைப் பிடித்து, அமைதியாக இருக்கும் படி கண் ஜாடை செய்து விட்டு இரும்பொறை முன் குரு வணக்கம் வைத்து விட்டு ” அய்யா, நான் செல்லக்கிளி ஆச்சியிடம் பயில்வது பெருமையாக இருக்கும் என் அம்மைக்கு என் தங்கை தங்களிடம் கற்பது பெருமை கொடுக்கவில்லை போல ” என்று கூறி விட்டாள்.
ஒரு நொடி குந்தவை துடித்து விட்டார்”அய்யோ, என்ன வார்த்தை சொல்லுற? நான் அப்படியெல்லாம் நினைக்கல அய்யா. அவள் நன்றாக கற்றுக் கொள்ளட்டும். கொஞ்சம் பெண்ணுக்கு உரிய அடக்கத்தோடு மட்டும் இருப்பதற்கு அறிவுரை கூறுங்கள் ” என்று கூறி விட்டு குடிலுக்கு சென்று விட்டார்.
மொழியாளின் பேச்சில் அனைவரும் அதிர்ந்து விட்டனர். குந்தவை பேசிவிட்டு சென்ற பின் , செல்லக்கிளி தான் மொழியாளின் பேச்சைக் கேட்டு அவளின் காதைப் பிடித்து திருகி ” ஒரு நிமிடம் உன் அன்னையை பித்துக் கொள்ள வைத்து விட்டாயே . பாவம் அவள் ” என்று அவருக்காக பரிந்து பேசினார்.
“மன்னியுங்கள் ஆச்சி, அவர்களும் இவ்வாறு செய்ய கூடாது அல்லவா ? நிதானமே இல்லாமல் இருக்கின்றார். எதற்கு எடுத்தாலும் கோபம் மட்டுமே முன் வந்து நிற்கின்றது. ஆனால், அவர் ஒரு வெகுளி ” என்று அவர் சென்ற பாதையை பார்த்து கூறினாள்.
” அதனால் தானம்மா உன் அப்பன் உங்கள மூவரையும் பாதுகாத்து கொண்டே இருப்பார் “என்று கூறி விட்டு அங்கையிடம் திரும்பி “இங்கே பாரு . உன் ஆர்வத்துக்கு தடை போட மாட்டேன். ஆனா , பெண்களுக்கு என்று ஒரு சில கடமைகள் இருக்கு. அதை நம்ம செய்து தான் ஆக வேண்டும். புரிகிறதா?” என்று கேட்க,
அங்கையும் “அது தெரிந்ததால் தான் நானும் கொஞ்சமாக என் இஷ்டப்படி நடக்கிறேன் ” என்று கட்டை விரலையும், ஆள்காட்டி விரலையும் சிறிது என்று காண்பிப்பது போல் காண்பித்தார்.
“எது கொஞ்சமாக ? “என்று செழியன், இன்பன், மொழியாள் மற்றும் செல்லக்கிளி கேட்க, அங்கை இரும்பொறைக்கு வணக்கம் சொல்லிவிட்டு சிரித்துக் கொண்டே ஓடிவிட்டாள்.
“சிறு பிள்ளை தனமாக உள்ளாளே !” என்று செல்லக்கிளி புலம்பி கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு விடலை ஒடி வந்த ” ஆச்சி, உங்களைத் தேடி சீமத்துரை வந்திருக்கிறார்கள். ” என்று கூறியவுடன் , செல்லக்கிளி கிளம்ப, மூவரும் யோசனையுடன் இரும்பொறையைக் கண்டனர். பெருமூச்சு விட்டு தலையை இடவலமாக ஆட்டி விட்டு குடிலுக்கு சென்று விட்டார்.
இவர்கள் மூவரும் செல்லக்கிளி சென்ற இடத்திற்கு சென்றனர். அங்கு கேப்டன் மைக்கேலும், சிவகங்கை மாவட்டத்தின் ராஜகுமாரனின் தோழனான ரவி வேந்தர அகவன் நிற்பதை கண்டவுடன் மொழியாள் அதிர்ந்து விட்டாள்.
ஏனென்றால், அவளும் நாச்சியார் நடத்தும் பயிற்சி கூடத்தில் கலந்து கொண்டவள். “தனது சிற்றன்னை பிரிட்டனியரிடம் இருந்து விடுதலை கிடைக்க போராடி கொண்டிருக்கிறார். ஆனால், இவரோ அவர்களுடனேயே வருகிறாரே” என்று பரவ முடிச்சோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனால், அதற்குள் செல்லக்கிளி ஐந்து முறையேனும் மொழியாளை அழைத்திருந்துப்பார். இறுதியாக மொழியாளின் தோளைத் செழியன் தொட்டவுடன் தான் சுயத்திற்கு வந்தாள்.
செல்லக்கிளி வந்தவுடன் மைக்கேல் ரவி வேந்தர அகவனை அறிமுகம் செய்து வைத்தான். அதன் பின்பு, செல்லக்கிளியும் செழியன், இன்பன் ,அங்கை மற்றும் மொழியாளையின் பெறுமைகளை கூறி, அவர்களை அறிமுகம் செய்யும் பொழுது தான், பெண் என்றாலே அழகு என்பதற்கு சான்றாக அழகு ஓவியமாக நிற்கும் மொழியாளை கண்டு மெய்மறந்து நின்றான்.
அதன் பின் , அவளை பற்றியும் அவளின் திறமை பற்றி கூறும் பொழுதும் மெய் மறந்து நின்றான். ஆனால், இறுதியாக செல்லக்கிளி “அதை விட பெரிய விஷயம் அவள் வே… ” என்று கூறி முடிப்பதற்குள் , இரும்பொறை ” செல்லக்கிளி , பிள்ளைகளை நிற்க வைத்து என்ன பேசிக் கொண்டிருக்கிறாய்? அவர்களுக்கும் வேலை உண்டு ” என்று செல்லக்கிளியை திட்டி விட்டு மூவரையும் அவரவர் வேலைக்கு செல்ல சொன்னார்.
அதன்படி மூவரும் செல்ல, முல்லை மட்டும் இவர்களை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே செல்ல அதை ரவி வேந்தர் வேறு விதமாக நினைத்து கொண்டான். அதன் பின், செல்லக்கிளி இவர்களுக்கு சகல மருத்துவம் பற்றியும் கற்பித்தார்.
தினந்தோறும் அதிகாலையில் வருபவர்கள், ஆதவன் அஸ்தமனம் ஆகும் நேரம் சென்று விடுவர். இவ்வாறு தினந்தோறும் வந்து கற்றுக் கொண்டனர். முதலில், அவர்களை பழி தீர்க்க நினைத்து வந்த வேந்தன் ஈடுபாடு இல்லாமல் இருந்தான். ஆனால், கற்க கற்க ஆச்சரியமாக இருக்க , ஆர்வத்துடன் கற்க ஆரம்பித்தான். அதோடு , சில நேரம் முல்லையும் கற்று கொடுப்பாள். மற்ற நேரம் அவளின் அழகு இவனின் வயதுக்கு இளம் பெண்ணாக தெரிபவள், கற்பிக்கும் பொழுது குருவாகவே தெரிவாள்.
இவ்வாறு இவன் இப்படி இருப்பதே அவளுக்கும் ஈர்ப்பு ஏற்பட ஆரம்பித்தது.
எப்பொழுதும் போல், இவன் பாடசாலைக்கு வருவது போல் வரும் நேரம், குடிலுக்கு அருகில் வரும் நேரம், அவனின் வலது தோள்பட்டடையில் உரசி சென்றது ஒரு கம்பு. அதிர்ந்து எதிரி தான் வந்து விட்டான் என்று நினைத்து இடுப்பில் சொருகியிருந்த விளை உருவி சண்டைக்கு தயாராக நிற்பது போல் நின்றான். அ
அவனின் தோற்றம் உடம்பில் ஏதோ ஊடுருவது போல் இருந்தது அங்கைக்கு .அவளின் பார்வையை அறிந்த இளந்தளிரான மாறன், அங்கையை அவனின் குட்டி கம்பால் அவளின் இடுப்பில் அடித்து “குந்தவை ஆச்சியிடம் சொல்லி விடுவேன். அவனை பற்றி தான் முல்லை அக்கா கூறினார் இல்லையா? “என்று அவன் அறிவுரைகளை வழங்கி கொண்டே இருந்தான்.
ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அங்கை “மாறா , அக்கா குறிப்பிடும் நபர் ரவி வேந்தர அகவன். இவர் அவரின் தம்பி. பெயர் ராகவ வேந்தர அகவன் ” என்று பொறுமையாக விளக்கம் கொடுத்தாள்.
மாறா , ” தம்பியா ? பார்க்க இருவரும் ஒன்று போலத் தானே இருக்கின்றனர். இரட்டை பிறவியர்களோ? “என்று நம்பாமல் கேட்டான்.
“இரட்டை பிறவியர்களாம் இல்லை. ஆனால், இருவரும் ஒன்று போல் இருப்பர்” என்று விளக்கம் கொடுத்தாலும் அவளின் பார்வை அவனைத் தவிர வேறு எங்கும் செல்லவில்லை.
அதனை உணர்ந்த அந்த இளம் மொட்டு “அவன் பிரிட்டானியரோடு சேர்ந்தவன். ஆகையால், அவன் நல்லவன் இல்லை, புரிகிறதா ? ” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறினான்.
அதில் கடுப்பாகி அவனின் தலையில் கொட்டி விட்டு ராகவ வேந்தரின் அருகில் வந்தான். பின்னால், யாரோ வருகின்றனர் என்று நினைத்து திரும்பி அவளின் கழுத்தில் கத்தியை வைத்தான். அங்கை அதற்கு முன் , அவனின் இடுப்பில் கத்தியை வைத்திருந்தாள்.
கண்களாலும், கத்தியாலும் தன்னை இழுப்பதை கடினப்பட்டு உதாசீனப்படுத்தினான். ஆனால், பலன் என்னவோ பூஜ்ஜியம் தான். இவர்கள் நிற்கும் தோரணையைக் கண்டு செல்லக்கிளி தான் ஓடி வந்தார்.
இருவரையும் பிரித்து “இளவரசே, இவள் என் பேத்தியைப் போல். விளையாட்டு பிள்ளை விட்டு விடுங்கள் “என்று ராகவரிடம் கூறி விட்டு, அங்கையிடம் திரும்பி “அங்கை, கையை எடு . நீ என் அருகில் வா . உனக்கு இருக்கிறது ” என்று பல் இடுக்கில் கூறினார். அதை பொருட்டுத்தாமல் அவள் நிற்க, தூரத்திலிருந்து குந்தவை சத்தமிட்டாள்.
அதோடு , ஓடி எங்கோ மறைந்து கொண்டாள். செல்லக்கிளி தான் மன்னிப்பு கேட்டார். ராகவர் சிரித்துக் கொண்டே “தான் அண்ணனை காண்பதற்காக வந்துள்ளேன் “என்று கூரியவுடன் அவரை ரவி இருக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார்.
ராகவை பார்த்தவுடன் கற்பித்துக் கொண்டிருந்த முல்லை, எழுந்து “இளவரசே வணக்கம் ” என்று கூறியவுடன் , ராகவை திரும்பி பார்த்தார் ரவி .
புருவ முடிச்சோடு பார்க்க “தாங்களை அன்னை அழைத்தார்கள் ” என்று கூறியவுடன், முல்லையை பார்த்து “மன்னிக்கவும், நான் கிளம்ப வேண்டும். உத்தரவு தாருங்கள் ” என்று கூறி பணிந்து நிற்க, “அய்யோ இளவரசே, இன்றோடு உங்களது பாடசாலை முடிவடைகிறது . நீங்கள் இருவரும் அனைத்தும் கற்றுக் கொண்டீர்கள் ” என்று கூறியவுடன் மைக்கேலுக்கு திடீரென்று ஒரு யோசனை தோன்றியது.
வேகமாக செயல்பட்டவர், சிப்பாயியை அழைத்து ராணி சேரி இறந்ததாக கூறு என்று சொல்லியவுடன், வேகமாக அச்சிப்பாயியும் ஒரு ஓலை தயார் செய்து, கீழிருந்து மேலே ஓடி வருவது போல் வந்து ராகவர் மற்றும் ரவி நிற்கும் இடத்திற்கு வந்து “அய்யா, உங்களுக்கு ஓலை வந்துள்ளது “என்று கூறி பணிவுடன் கையில் கொடுத்தான்.
அதை பார்த்தவுடன் இருவர் கண்களிலும் கண்ணீர். அதை கண்டு பதறி அருகில் வந்தாள் மொழியாள். மைக்கேலும் பதறிக் கொண்டு வருவது போல் வந்தான். “என்னாயிற்று ? ஏன் பதறுகிறீர்கள் ? “என்று மொழியாள் கேட்க, “என் அன்னை இறந்து விட்டாள் “என்று கூறினான் ரவி.
தாய்க்கு பின் தாரம் தான் என்பதற்கு இணங்க , அவளை தாரமாகவே நினைத்து கூறினான் .
ஆனால், அங்கு வந்த அங்கையோ “பதவிக்கு ஆசைப்பட்டால் இது தான் கதி . உங்களுக்கும் இதே தான்”.மைக்கேலை சுட்டிக் காட்டி ” இவனோடு சேர்ந்தால் சர்வ நிச்சயமாக சாவு உண்டு.”என்று கூறியவுடன் மைக்கேல் துப்பாக்கி எடுத்து சுடும் முன்பு, குந்தவையின் வயிற்றில் கத்தி பட்டு கதறினார்.
அதிர்ந்தனர் அனைவரும். செல்லக்கிளி ,முல்லை மற்றும் அங்கை பதறிக் கொண்டு ஓடினர் . ஆனால், அங்கையின் கைகளைப் பிடித்து ” இப்பொழுது உன் தாயார் சாகப் போகிறார் அவர் பணத்தாசை பிடித்தவரா ? ” என்று கேட்ட நொடி, சென்ற முல்லை அதிர்ந்து திரும்பி “வேந்தா” என்று வனம் அதிர கத்தினாள்.
“யாரை பார்த்து பெயரை சொல்கிறாய் ? அவர் இளவரசர். நீ அவரின் சிற்றனையினிடம் சண்டைப் பயிற்சி கற்றுக் கொள்ளும் சிப்பாயி. நீ பேசுகிறாயா? ” என்று மைக்கேல் முந்திக் கொண்டு கேட்டான்.
ரவி ஏதேனும் கூற மாட்டானா என்று ஏங்கிப் பார்க்க, அவன் அவளை மனுஷி என்றும் மதியாமல், மைக்கேலிடம் திரும்பி “தாங்கள் சொன்னதை இப்பொழுது முடிக்கிறேன் ” என்று கூறி அவனின் பதுங்கி இருந்த ஆட்களை அழைத்து அனைவரையும் கொன்று விட ஆணையிட்டான்.
ராகவ் அண்ணனின் சொல்லுக்கு இணங்க அவனும் அனைவரையும் கொன்றான். பார்க்கும் அனைவரையும் வாளால் வீசிக் கொண்டே வந்தான் மொழியாளை தவிர.ஆனால், மொழியாள் கண்களில் கண்ணீர் சிந்திக் கொண்டே தம் மக்களை காப்பதற்காக அவளும், அங்கையும், சில பெண்கள் மற்றும் ஆண்களும் சண்டையிட்டனர். ஆனால், இவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் முடியாமல் சரிய ஆரம்பித்தனர்.
மைக்கேல் இரும்பொறையைத் தான் தேடினான். அதை உணர்ந்த மொழியாள், மாறனோடு ஒரு சில சிறுவர்களோடு. வயதானவர்கள் ,பெண்மணிகள் அனைவரையும் வேறு வழியாக அனுப்பி விட்டாள். மாறனையும் அவனின் அண்ணன் கபிலனையும் அழைத்து “நம் மக்களை காப்பதே உங்களது தலையாய கடமை செல்லுங்கள் ” என்று இன்னும் பல அறிவுரைகள் கூறி அவர்களுக்கு மட்டுமே தெரிந்த சுரங்க பாதையில் அனுப்பி வைத்தாள்.
அதிலிருந்து சின்ன ஒட்டையின் உள்ளே இருந்து பார்த்து கொண்டிருந்தனர் இருவரும். இவர்களை விட்டு திரும்பிய நொடி அவளின் முதுகை கூறு போட்டான். திரும்பி பார்த்தவள் “வேந்தா ” என்று கூறி சரிந்து விட்டாள். கத்தும் நிலையில் இல்லாத சமயம் இன்பனின் மனைவியையும், செழியனின் மனைவியையும் அனைவர் முன்பும் பெண்மையை களவாடினர்.
அப்பொழுது குளுரைத்து கொண்டான் இன்பன் மற்றும் செழியன் மறுஜென்மத்தில், உங்களை கொல்ல இவர்களே வருவார் என்று . அங்கையும். இரும்பொறையும் அனைவர் முன்பும், உயிரோடு இருக்கும் போதே தீயில் இட்டனர்.
மாறன் அழுது புலம்பினாலும், இப்பொழுது தைரியம் தான் முக்கியம் என்று தப்பி சென்று விட்டான். எவ்வளவு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை.
பின்பு, ரவியை தேடி வந்த மைக்கேல் கண்ட காட்சி, முல்லையை மடியில் வைத்து அழும் ரவியைத் தான். அவன் புலம்புவது அதன் பின்பே புரிந்தது.
வந்த இரண்டாம் நாளிலேயே முல்லையிடம் காதலை கூறி, இவர்கள் இருவரும் காதலில் மூழ்கி இருந்தனர். தனியாக சந்திக்கும் நேரத்தில் எழுதியது தான் வேந்தன் ❤️ மொழியாள் என்பது. அதுவும் அவள் எழுதியது உடைந்த பட்டையில் .அதை கொஞ்சம் காலம் கழித்து இங்கே பார்க்க வந்த மாறன் எடுத்துச் சென்றான்.
ரவி புலம்புவதை கேட்டு பின்னிருந்தே அவனையும் கொன்று விட்டான் மைக்கேல். அவனின் ஆட்களிடம் கூறி ராகவையும் கொன்று விட்டு, அவர்கள் சேகரித்த பொருட்களை எடுத்துக் கொண்டு சென்று விட்டான்.
கீர்த்தி ☘️