காதல் வந்தால் …
இந்த உலகம் முழுவதும் அழகாக தெரியும் .
உன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றும்
பார்க்கும் எல்லாம் தமாஷாக தெரியும்
உன் முகம் மிகவும் அழகாகும் .
உன் முக மதிப்பு கூடும்.
நீ ஒரு கனவுலகில் இருப்பாய் .
காதலி தேவதை ஆவாள் .
அவள் அப்பன் வில்லனாக தெரிவார்.
ஸ்மார்ட் ஃபோன் கடவுளாகும் .
மெஸென்ஸர் தூது போகும் .
காதலி அருகில் இருக்க ,
பூமிசொர்க்கம் ஆகும்
காதலி இல்லையெனில் , அது நரகமாகும் .
கால நேரம் மறந்து போகும்.
பசி , தூக்கம் மறந்து போகும் .
நீ ஒரு தனி உலகில் இருப்பாய் .
மொத்தத்தில் நீ , நீயாக இருக்க மாட்டாய்
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
+1
1
+1
+1