Loading

அத்தியாயம் முப்பது 

” ஐயோ பாப்பா ப்ளீஸ் என்கிட்ட பேசாம மட்டும் இருந்திராத…நான் செத்துருவேன் பாப்பா ” என்று கண்ணீருடன் தன்னவள் காலை பிடித்து கெஞ்சி கொண்டு இருந்தான் ஆனந்த். 

சென்னை மீட்டிங்கில் அமிழை பார்த்த போதே சந்துரு, மகி என்றாவது அமிழை பற்றி கேட்டாள் பயன்படும் என   யாரிடமோ கூறி அவளின் எண்ணை வாங்கி விட்டான். அது நல்லதாக போய்விட , நடந்த உண்மைகளையும் அழைத்து கூறிவிட்டான். தன்னவள் கையில் கிடக்கும் தண்டனைக்கு எவர் கொடுத்தாலும் ஒப்பாகாது என நினைத்தான் சந்துரு. அது உண்மையும் கூட , தான் நேசித்தவள் தரும் தண்டனை தானே இதயத்தை துளைத்தெடுக்கும் .

” என்ன இவ்வளவு நாள் ஏமாத்திடிங்கள …நா என்ன உங்களுக்கு பாவம் செஞ்சேன். உயிருக்கு உயிராய் காதலிச்சத தவிர, எதுக்காக சித்தார்தை கொலை பண்ண பாத்திங்க அதுவும் மகி கல்யாணம் பண்ணிருக்கானு தெரிஞ்சும் ” என்று அவன் பிடித்திருக்கும் தன் காலை இழுத்து கூறினாள் அமிழ். இத்தனை நாட்களாய் தான் முட்டாளாய் இருந்திருக்கிறோமே என்ற ஆதங்கம் தானே தவிர , அவன் காதலை அவள் துளியும் சந்தேகம் கொள்ளவில்லை.

” ப்ளீஸ் பாப்பா எங்க நீயும் என்ன விட்டு போய்ருவியோனு பயம் …அதான் பாப்பா. நீ வந்ததும் தான் என் வாழ்க்கையே மாறுச்சு …எனக்கு எல்லாமே நீ தான் பாப்பா , என்ன எவ்வளவு வேனும்னாலு அடி , திட்டு ஏன் என்ன கொன்னுட்டு கூட போ பாப்பா…ஆன என்ன தனியா  விட்டுட்டு மட்டும் போகாத பாப்பா ” என்று அவளை நகர விடமால் கைகளை இறுக பிடித்தவாறு எங்க அவள் சென்று விடுவாளோ என்ற பயத்துடன் கண்ணீர் மல்ல கேட்பனை பார்த்து யாருக்கு தான் பாவமாக இருக்காது. அமிழ் மட்டும் என்ன ஒதுக்கமா ‘ பாப்பா , பாப்பா ‘ என வார்த்தைக்கு வார்த்தை கூறினாள் யாருக்கு தான் மனம் இறங்காது.

” எப்படி‌ ஆனந்த் நான் உன்ன விட்டு போவேனு நினைச்ச…பணம் இல்லைனா உன்ன விட்டு போவேனா. நா உன் காதலுக்காக மட்டும் தான் உன் கூட இருந்தேன் , இருக்குறேன் , இருப்பேன்.ஏன்டா இப்படி பண்ண …ஏன் ” என்று அவளும் கண்ணீர் வடிய கேட்க, அவனால் பதில் கூறவே முடியவில்லை. 

” ஐயோ  புத்தி கெட்டு பண்ணிட்டேன் பாப்பா…என்ன விட்டு போகாத பாப்பா, இனி எதுவும் பண்ண மாட்டேன் , யாரையும் அழிக்க நினைக்க மாட்டேன் . எதுவுமே வேனாம் பணம், என் ஆபிஸ் , இந்த வீடு எதுவும் …நீ மட்டும் போதும் பாப்பா , என்ன மன்னிச்சிடு பாப்பா ” என்று அவளை கட்டிக் கொண்டு அழுதான் ஆனந்த். அத்தனை  கம்பீரம் இருந்தும் ஒரு பெண்ணின்  காதல் அவனை அனைத்தையும் இழந்தாலும் அவள் மட்டும் போதும் என நினைக்க வைத்தது. 

” நா உன்ன விட்டு போகமாட்டேன் ஆனந்த் … அழாத ” என்று அவளும் கட்டிக் கொண்டாள். இருவரும் அணைத்துக் கொண்டு அழுக, அமிழே ஒரு முடிவுக்கு வந்து  ஆனந்திடம் அதை கூற , அவனும் துளி கூட யோசிக்காது ஒப்புக் கொண்டான்.

____

மருத்துவமனை : 

மகி‌ இருந்த அறை முழுதும் கண்ணீரால் நிறையா குறை தான் , அவ்வளவு அழுகை அனைவரும் . ஒவ்வொருவரையும் தேற்றவே பாடாய் போனது மகிக்கு . படுத்திருந்தவளை எழவும் விடாமல் உறங்கவும் விடாமல் அனைவரும் அழுக, இவளுக்கே சற்று யோசனையாக இருந்தது . ஒருவேளை நிஜமா நம்மளுக்கு ரொம்ப அடி பட்டுறுச்சோ’  என யோசித்தாள். கை,  கால் சரியாக கண்டிப்பாக குறைந்தது இரண்டு மூன்று மாதங்களாவது ஆகும், இவர்கள் அழுகும் அழுகையை பார்த்தாள் ஏதோ உயிருக்கு போராடி , பல நாட்கள் கோமாவில் இருத்து கண்ணை முழித்தது போல் அழுதனர்.  கதிரவனும் தன் மனைவியை தேற்ற, எங்கே செல்விக்கு அழுகை நின்ற பாடு இல்லை. ஏற்கனவே ஒரு மகள் தன்னை விட்டு சென்றுவிட்டாள், இப்போது மகியும் தங்கள்  வீட்டில் இல்லாமல் திருமணமாகி சென்று விட அவருக்கு அனைத்தும் தன்னை விட்டு போனது போல இருந்தது. 

வெளியே தயங்கி கொண்டு நின்றவனுக்கு  ராதாவும் செல்வியும் ஒப்பாரி வைப்பதும் மகி மெல்லிய குரலில் தேற்றுவதும் நன்றாகவே கேட்டது. பொறுமை இழந்தவன்  கதவை திறந்து பார்க்க, மகியின்  ஆறுதல் வார்த்தைகள் நின்றது.  அவன் வருவதை பார்த்ததும் கதிரவன் தனிமையை உணர்ந்து தன் மனைவியை வெளியே அழைத்து செல்ல, அவர் பின்னே ராதாவும் சென்று விட்டார். வாசுதேவன் சென்னையில் மீட்டிங்கில் இருக்க, விசியம் அறிந்து புறப்பட்டு வருவதாய் கூறியிருந்தார்.

தன்னவன் வருவதை பார்த்து படுத்திருந்தவள் எழுந்து அமர பார்க்க, சித் தடுத்தும் கேட்காமல் மெல்லமாக ஏழுந்து  பார்க்க, அவனும் உதவி செய்கிறேன் என்று மகியின் கையை பிடித்து எழ உதவி செய்ய, பட படத்த மனதை அடக்கி கொண்டு தன்னவன் உதவியோடு எழுந்தவள்,  கண்களாலே தன்னவனுக்கு ஒன்றும் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். இருவரிடமும்  மௌனமே ஆச்சி செய்ய, தான் காதலித்தவள் மகி என உண்மையை தெரிந்து சித்தின் மனமோ இவ்வளவு நாள் செய்த துயரங்களில் இருக்க, என்ன பேசுவதென்றே தெரியவில்லை மகியின் கண்ணாவிற்கு. அவள் அருகில் அமர்ந்தவன் அப்படியே மகி மடியில் தலை சாய்ந்தான். அதில் தன் காஃபி நிற விழிகள் சாசர் போல் விரிந்து அவனை பார்க்க, சித்தோ மகியின் அடிபட்ட கையை இறகு போல் பிடித்து தன் கழுத்தில் வைத்து பிடித்துக் கொண்டான். மகி அதிர்ச்சியாக தன்னவனை பார்க்க, அவனோ அவளின் முகத்தை கூட ஏறிட்டு பார்க்கவில்லை. 

முதல் பரிசம் பெண்ணவளை பதற்றத்தில் நடுங்க செய்ய, சிறிது நேரத்தில் சமன் படுத்திக் கொண்டாள். நிமிடங்கள் கடக்க இருவரிடமும் ஒரு பேச்சு வார்த்தை கூட இல்லை , குற்ற உணர்ச்சியில் இருந்த சித்தின் கண்ணீர் துளிகளோ பெண்ணவளின்  மடியை நனைக்க, என்னவென்று காரணம் கேட்க தோன்றவில்லை அந்த கண்ணிகைக்கு.

எத்தனை முறை ஏங்கி இருப்பாள் தன்னிடம் ஒரு நாளாவது பாசமாக , அக்கரையாக தன் காதலை புரிந்துக் கொண்டு ஒரு வார்த்தையாவது காதலுடன் பேசவேண்டும் என்று, அனைத்தும் இன்று தன்னவன் பேசவில்லை என்றாலும் அவை அனைத்தும் இன்று தன் மடியில் படுத்து அவன் கண்ணீராய் வெளியேறுவதில் உணர்ந்தவளின்  கண்ணீரும் தன் மன்னவன் கண்ணீரோடு கலந்தது. இருவரும் திட்டிக்களாய் வடித்துக் கொண்டு இருக்க, யாரும் முனைந்து தன்னவளை (னை) சரி செய்ய முயற்சி செய்யவில்லை.

” படுபாவி பயலே உடஞ்ச கால்ல போய் தலை வச்சுருக்கான் பாரு…எந்திரி டா ” என்றவாறே கதவை திறந்து கத்திக் கொண்டு வந்தான் சந்துரு. அதில் பதறி மகி விழிகளை திறக்க, அப்போது தான் தன்னவளுக்கு வலிக்கும் என்று சித்தும் எழுந்து தன் விழிகளை துடைத்துக் கொண்டான். ” வலிக்குதா மகிமா ” என அந்த வார்த்தைக்கே வலிக்கும் அளவு தன்னவளை பார்த்து கேட்க, இல்லையென தலையை மட்டும் ஆட்டி தலை குனிந்து தனது விழிகளையும்  துடைத்துக்  கொண்டாள். 

” மகி உனக்கு ஒரு சர்பிரஸ்  ‘   டன்டன்டா ‘ என இருகைகளையும் விரித்து விலகி பின்னாள் திரும்ப , மகியின் இருதோழிகளும் இருந்தனர்.  ‘ இது தான் சர்பிரைஸா…இதை காட்டத்தான் எங்களை பிரிச்சியா டா ‘ என மகி மனதில்  சந்துருவை திட்டி  முறைக்க , அவளின் எண்ணோட்டங்களை புரிந்து அவனிடம் பல்லை காட்டினான் சந்துரு. அதில் மகி தலையில் அடித்துக் கொள்ள, சித்திற்கே சிரிப்பு வந்தது, ஆனாலும் தங்களை பிரித்ததற்காக பிறகு தன் நண்பனை கவனிக்க வேண்டும் என குறித்துக்  கொண்டான். தோழிகள் நலவிசாரிப்பு நடைபெற , சித் வெளியே கிளப்பினான், சந்தியா விட்டு நகர மாட்டேன் என அடம்பிடித்த சந்துருவையும் தரதரவென இழுத்துச் சென்றான் சித்.

டாக்டரிடம் சென்று தன்னவளை காயங்களை பற்றி நன்றாக அறிந்து கொண்டவன் , அனைத்தையும் கதிரவன் , செல்வி மற்றும் ராதாவிடமும் கூறிவிட்டு கொஞ்சம் நேரம் கழித்து மீண்டும் மகியின் அறைக்கு வர, இன்னும் தோழிகளின் சபாசனை முடிந்த பாடு இல்லை. 

” அடேய் நீ எப்போ டா உள்ள வந்த ” என அதிர்ச்சியாகி சந்துருவை பார்த்து கேட்க, அவனோ பல்லை மட்டும் காட்டினான் . டாக்டரிடம் சித் செல்லும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மகியின் அறையில் நுழைந்து தன்னவளை விழுங்குவது போல வாயில் வாட்டர் பால்ஸ் வடிய சைட் அடித்துக் கொண்டு இருந்தான் சந்துரு. தன் நண்பனை பார்த்து முறைத்துக் கொண்டு தன் மகிமாவை  பார்க்க அவளோ தலை குனிந்து இருந்தாள். 

அவளின் மனமோ பல எண்ணோட்டங்களை சுமந்து இருந்தது. இத்தனை நாள் தன்னிடம் அக்கரையாக பேசாதவன் இன்று மட்டும் ஏன் இப்படி , ஒருவேளை அவன் உயிரை தான் காப்பாற்றியதற்கு நன்றியா?  அவனை விட்டு தான் சென்றாள் தானே தன்னவனுக்கு மகிழ்ச்சி என ஒன்றும் புரியாமல் பலவாறு குழம்பி தவித்தாள் பேதை. அவளின் என்னோட்டங்கள் எதையும் அறியாத சித்தோ , தான் உயிருக்கு உயிராய் காதலித்தவளும் தான் நேசித்த பயிர்களும் திருப்பி கிடைத்த  எல்லையற்ற சந்தோஷத்தில் மிதந்து இருந்தான் .

” சாப்டியா மகிமா ” என்று காதலுடன் அவன் கேட்க, தலையை மட்டும் ஆட்டியவள் வேறு எதுவும் பேச நினைக்க வில்லை. அவளுக்கோ தன் மேல் காட்டும் அக்கறை யாவும்  அவனின் நன்றியாய் தெரிய, சித்திற்கு அனைத்து உண்மைகளும் தெரியும் என்றும் அவன் காதலித்தது தன்னை தான் என்றும் அறியாதவள் இறுதியாய் ஒரு முடிவில் இருந்தாள்.

‘ இவ ஒருத்தி எப்போ பாரு அவனா பாத்தா மூஞ்சிய தொங்க போட்டுக்குவா …என்கிட்ட மட்டும் வாய் கிழிய பேசுவா ‘ என மனதிலுள் சந்துரு மகியை திட்டிக் கொண்டு இருக்க, அது மகிக்கு கேட்டதோ என்னவோ அவளுக்கு புறை ஏறியது. அதில் சந்துரு ‘ என்ன திட்டுனதும் இறுமுறா ‘ என திரு திருவென முழிக்க, சித்தோ அனைவரையும் தள்ளி கொண்டு தண்ணீரை அவள் வாய் அருகில் வைத்து  குடிக்க சொல்ல, அவளுக்கோ இதெல்லாம் அவன் நன்றிகடனாய் தெரிய அவள் மனமோ நெருப்பில் இட்ட பஞ்சாய் எறிந்தது.  தோழிகள் இருவரும் வாயை பிளந்து சித்தை பார்க்க, அவனோ எவரையும் கண்டு கொள்ள வில்லை. 

” மகிமா டாக்டர் கிளம்ப சொல்லிட்டாங்க …கிளம்பலமா ” என காதலோடு தன்னவள் என்ற உரிமையில் அவள் கைகளை பிடித்து கேட்க, அதை அவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரித்து

” சந்துரு நான் எங்க வீட்டுக்கு போய்ரேன் ” என ஒரே வார்த்தையில் முடிக்க, இப்போது உடைவது சித் முறையானது. 

அவள் ஏன் தன்னை விட்டு செல்கிறாள் இப்போதாவது அவள் காதலை தன்னிடம் கூறலாம் அல்லவா என புரியாமல் அவன் மனம் உடைய , ‘ இப்போ எதுக்கு நம்மல இழுக்குறாங்க ‘ என சந்துரு புலம்பினான்.

” இல்லை மகிமா நம்ம வீட்டுக்கு போலாம்” என மீண்டும் கேட்க, ஒரு முடிவில் இருந்தவளோ 

” இங்க பாருங்க சித் உங்கள மாத்திரலாம்னு தான் நான் நினைச்சே …அது எவ்வளவு பெரிய தப்புனு எனக்கும் இப்போ புரிஞ்சுது . நா என்னைக்கு உங்களுக்கு தகுதி இல்லாதவனு நல்லா தெரிஞ்சது, ஏதோ உங்க உயிர காப்பாத்திட்டேனு என் மேல அக்கறை பட்டு பேச வேண்டாம். என்ன பாத்துக்க எனக்கு தெரியும் அன்ட் நேத்தே நான் முடிவு பண்ணிட்டேன் உங்கள விட்டு நிரந்தரமா போறது பத்தி “என சித்திடம் சற்று ஓங்கிய குரலிலே பேசினாள்.  அதில் சித்திற்கு யாரோ தன்னை ஊசியால் இதயத்தை கிழிப்பது போன்று இருந்தது. தான் வேறு ஒருவரை காதலிக்குறேன் என்னை விட்டு சென்றுவிடு என எத்தனை முறை கூறியிருப்பான் அப்போதெல்லாம் அவனை காதலித்த மகியின் மனது எவ்வாறெல்லாம் துடித்திருக்கும் என நினைக்கையில்  உடைந்து போனான். ‘ நா உன்ன விட்டு போக மாட்டான் மகிமா…இத்தனை நாள் நம்ம இரண்டு பேரும் நம்மளையே ஏமாத்துனது போதும் ‘ என தனக்குள் பேசி தன்னவளை காண, அவளோ உன்னை விட்டு செல்ல நான் தயார் என விழிகள் தேக்கி அவனை பார்த்திருந்தாள்.

இத்தனை நாள் பேசாதவன் இன்று  பாசமாக பேசுவதற்கு தானே வேறு மாறியாக நினைத்துக் கொண்டு அவனிடம் சற்று கத்த, சந்துருவோ

‘ ஐய்யோ இவ எதுக்கு இப்போ ஓவர் பர்ஃமான்ஸ் பண்றா…அதான் சித் இவளை தானே காதலிச்சான் .இது தெரிஞ்சா இப்படி பேச மாட்ட மகி, உன் திருவாய கொஞ்சம் மூடேன் …அய்யோ இப்போ இவன் ஏன் நம்மள முறைக்குறான் ‘ என தன் மனதுக்குள்ளே இருவரையும் மாத்தி மாத்தி திட்டினான் சந்துரு. 

” அப்போ என்ன விட்டு போக போற அப்படி தானே ” என கையை கட்டி தன் மகிமாவை பார்த்தே கேட்க, அவளும் அவனுக்கு சளைத்தவள் இல்லையென ஆம் என தலையை ஆட்டினாள்.

” திரும்ப வந்துருவேனு யோசிக்க வேண்டாம் , கண்டிப்பா நான் உங்கள தொல்லை பண்ண மாட்டேன் . நீங்க இத்தனை நாள கேட்ட டிவோர்ஸ குடுத்திடுறேன் ” என அவனை பார்த்து கூறினாலும் , அவளின் மனமோ துடியாய் துடித்தது. தன்னவள் கூற்றில் மேலும் மேலும் உடைந்து போன சித்தோ , பொறுமையை இழந்து மகி அருகே வேகமாக சென்றவன் அவளை தன் கையில் ஏந்தி கொண்டான் .

அதில் அவள் அதிர்ச்சியாக விழிக்க, அந்த விழிகளில் தொலைந்து போனவனோ அவளை காதலோடு பாத்தான். தான் காண்பது அனைத்தும் கனவோ என பெண்ணவளும் அவளின் தோழிகளும் விழிக்க, ‘ அட்ரா சக்க ‘ என தன் கைகளை தட்டி நடப்பதை சிரிப்புடன் வேடிக்கை பார்த்தான் .

” போவேனு தானே சொன்ன இப்போ போ ” என்ற சித் அவளை தன் கைவளைவுக்குள்ளே வைத்திருக்க, அவளோ இது அனைத்தும் அவன் பயிர்களையும் தன்னவன் உயிரையும் காப்பாற்றிய ஒரே காரணம் என நினைத்தவள், தன் கண்ணாவின் விழிகளில் இருந்த காதலை கவனிக்க தவறினால்.

” விடுங்க என்ன நா எங்க வீட்டுக்கு போரேன்  …சந்துரு விட சொல்லுங்க ” என அவள் திமிர, அதற்கு மசியாத சித்தோ

” ஆடாத மகிமா அப்பறம் உன் கையும் காலும் தான் வலிக்கும் ” என்றவன் அவளை தூக்கிக்கொண்டு அறையில் வெளியே நடக்க ஆரம்பித்தான். 

அதில் உள்ளே இருந்தவர்கள் ஆவென பார்த்திருக்க 

 

” வா சுருதி நம்மாலும் போலாம் ” என சந்தியா கையை பிடித்து சைடு கேப்பில் அவள் கையை பிடிக்க, சந்த்ருவை பார்த்து விழிகளை உருட்டி முறைத்தவள்…புருவத்தை உயர்த்தி அவனை பார்க்க, சந்துருவோ

“ என்னங்க அதான் எம்டி கிரவுண்ட் தானே … “ என்று கேட்க, வெட்கத்தில் தலை குனிந்த சந்தியாவோ

“ அதான் பட்டா நீங்க போட்டுடிங்களே “ என்றவள் அவன் கையை உதறித் கொண்டு வெளியே சென்று, அவன் பிடித்த கையையும் அவனையும் ஒரு முறை பார்த்து சிரித்துக் கொண்டாள். அதில் சந்தருவிற்கு ஆயிரம் பட்டாம்பூச்சி மனதினுள் பறக்க, மீண்டும் சந்தியா நோக்கி வரும்போது அறையின் கதவு அவன் மூக்கை பதம் பார்த்தது . நடந்து அனைத்தையும்  அதில் உள்ளே இருந்த சௌமியா வயிற்றை பிடித்துக் கொண்டு சிரிக்க, அவளிடம் பல்லை காட்டியவர் மூக்கை தேய்தவாறு வெளியே சென்றான்.  வெளியே சென்றவர்களை அனைவரும் தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த அமிழையும் ஆனந்தையும் பார்த்து  அப்படியே நின்றனர். 

செல்வி ஓடிச்சென்று தன் மகளை கட்டிக் கொண்டு அழ ஆரம்பிக்க, திருமணம் பிடிக்கவில்லை என கூறியிருக்கலாமே என கதிரவனும் வேதனையுடன் தன் மகளை பார்த்தார். தந்தையின் பார்வை உணர்ந்தவள் ஊமையாய் அழுக, சித்தை நோக்கி வந்த ஆனந்தோ அவன் காலிலே விழுந்து விட்டான்.

” சாரி சித்தார்த் ஏதோ ஈகோல தான் உங்கள கொள்ள ஆள் அனுப்பிடேன் …என்ன மன்னிச்சிடுங்க ” என அவன் காலை பிடித்துக் கொண்டு அவன் கெஞ்ச, தன்னவன் கைகளில் இருந்த மகியோ ஆனந்தை கொள்ளும் அளவு முறைக்க, இப்போதும் தன்னவள் பார்வையை உணர்ந்தவன்

” நம்ம வெற்றி நம்மளோட உழைப்பா இருக்கனுமே தவிர , அடுத்தவன கொன்னு தோக்கடிச்சதா இருக்க கூடாது அன்ட் ரொம்ப தேங்க்ஸ் ” என்றவன் விரு விருவென மருத்துவமனை வெளியே செல்ல பார்க்க, 

” அம்மா , அப்பா என்ன விட சொல்லுங்க …அத்தை ” என கத்திக்கொண்டு இருந்தவளை பொருட்படுத்தாது கையில் ஏந்தியவளை  காரின் பின் இருக்கையில் மெல்லமாக கிடத்தி காரை வீட்டை நோக்கி விட்டான்.நடப்பது அனைத்தும் கனவா என அனைவருக்கும் ஆச்சிரியமாக இருந்தது. 

சித் எதற்கு நன்றி கூறினான் என தெரியாது ஆனந்த் நின்று கொண்டு இருக்க, அமிழோ

” எங்கள எல்லாரும் மன்னிச்சிடுங்க…காதல் தான் பெருசுனு போய்டேன் ” என்று கண்ணீர் வடிக்க, அவளை அனைத்துக் கொண்ட ராதாவோ 

” உன் மேல தப்பு இல்லை மா … எல்லாம் எங்க மேல தான். என் பையன் யாரா காதலிச்சானு கூட தெரியாம பண்ணது  தப்பு தான் ” என அமிழின் விழிகளை துடைத்து அவளை ஆறுதல் படுத்தினார். 

சந்துரு தான் அனைவரும் நடந்த உண்மைகள் அனைத்தையும் கூறி இருந்தான் , ஏற்கனவே மகி மேல் அதிக பிரியம் கொண்டிருந்த ராதாவிற்கு , அவள் தன் சகோதரிக்கா இரண்டு வருட காதலை தியாகம் செய்தாள் என்றது வியப்பாகவும் அவளின் மேல் உள்ள மதிப்பையும் கூட்ட, அமிழ் மேல் எந்த தவறும் இல்லை என உணர்ந்த ராதாவும் செல்வியும் அவளை சமாதானம் செய்தனர்.  ஆனந்தை பார்வையில் எரித்துக் கொண்டிருந்த கதிரவனோ அமிழை வீட்டிற்கு வருமாறு கூறி அவரும் கிளம்பினார்.

ஒருவழியாய் இனியாவது தங்கள் தோழி வாழ்க்கை நன்றாக  இருக்கும் என மகிழிந்தவர்கள் தங்கள் வீட்டை நோக்கி புறப்பட பார்க்க, அவர்களை கை என்னும் கேட் போட்டு தடுத்திருந்தான் சந்துரு.

” நா உங்கள வீட்ல விடுறேன் … ஒருநிமிசம் ” என்றவன் ஆனந்த் நோக்கி சென்று ஓங்கி ஒரு அறையை விட்டான்.

” என் மச்சானோட காதல் உன்னால கிடைச்சதுனு உன்ன எதுவும் பன்னாம இருக்கான், இல்லேனா நடக்குறதே வேற …அப்பறம் எல்லாம் உண்மையும் சொன்ன நான்… ஏன் நீ அமிழ பயன் படுத்தி தான் கதிரவன் மூழியமா சித்தோட பயிர அழிக்க பாத்தேனு சொல்லல தெரியுமா ? என்ன அமிழ் இதை கேட்டதும் அவ உயிர் விட்டா கூட ஆச்சிரிய படுறத்துக்கு ஒன்னும் இல்லை… ச்சீ காதலிச்சவள போய் ” என மீண்டும் ஒரு அறையை கொடுத்து அவனிடம் கத்தி சென்றான் சந்துரு.

தூரத்தில் தன்னவன் அடிவங்குவதை பார்த்து அவனிடம் ஓடி வந்தவள் இருவருக்கும் இடையே நின்று

” அண்ணா பிளீஸ்…அவரு எல்லாத்தையும் உணர்ந்த்துடாறு…அடிக்காதிங்க ” என கைகளை கூப்பி கேட்க, அமிழுக்காக அவ்விடத்தை விட்டு சென்றான் சந்துரு. 

இவ்வளவு நேரம் சிரித்து கொண்டு கலாய்த்தவன் இப்போது கன்னங்களே தொங்கும் அளவு அடித்ததை பார்த்து சந்தியா சற்று மிரண்டு தான் போனாள்.

ஆனந்திடம் இருந்து தன்னவளை நோக்கி வந்தவன் அவளிடம் பல்லை காட்டி 

” போலாமாங்க ” என கேட்க, தன்னவன் எந்த கேட்டகிரி என குழம்பி போனாள் சந்தியா . தன்னவன் தான் சந்தியாவிற்கு எப்போதோ  சந்துருவை பிடிக்க ஆரம்பித்திருந்தது , வேண்டும் மென்றே தான் அவனை அழைய விட, அதை உணர்ந்த சந்துருவும் தன்னவளை விடாது இருந்தான். இருவரையும் வீடு வரை விட்டு வருகிறேன் என்று சந்துரு கிளம்பி விட்டான். ராதாவும் தன் வந்த டிரைவருடன் கிளம்பி விட, தயக்கத்துடனே நின்ற ஆனந்தையும் அமிழையும்  செல்வி அவர்களின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார். 

___

” எதுக்கு இப்படி என்ன தொல்லை பண்றிங்க …அதான் போறேன்னு சொல்லிட்டுன்ல  விட்டு தொலைய வேண்டியது தானே ” என கத்திக் கொண்டு வருபளை மதிக்காது கண்ணாடியில் அவளை தன் விழிக்களுகுள் நிறப்பிய வாரே காரை செலுத்தினான் சித். 

”  போ போனு தானே சொன்னிங்க அதான் நானே டிவோர்ஸ் தரேனே அப்புறம் என்ன …இன்னும் என்ன அசிங்கமா பேசி கஷ்டப்படுத்தனுமா  ” என்றவளின் கூற்றை கேட்டு உடைந்து போனவனோ பின்னால் தன்னவளை நோக்கி அடி பட்ட பார்வை பார்க்க, அதற்கு மேலும் தன் கண்ணா படும் கஷ்டப்படுவதை பார்க்காது எதுவும் பேசாது வந்தாள். இருவரும் அமைதியின் உருவமாய் வர , சித்திற்கு தான் எப்படி தன்னவளுக்கு தன் காதலை உணர்த்துவது என புரியாது யோசித்தான். மகி இருக்கும் மனநிலையில்  எவ்வாறு கையாள்வது என தெரியாது தினறினான் சித் . காரை சித்தார்த்தின் வீட்டை அடைய, தன் இருக்கையை விட்டு இறங்கியவன் மகிக்கு கதவை திறந்து விட்டு கைகளில் தூக்க செல்ல

” என்ன ஒன்னும் தூக்க வேணாம்…அதான் வீல் சேர் இருக்குல்ல ” என குழந்தை போல  கூறுபவளை பார்க்க, அவனுக்கு சிரிப்பாக வந்த்தாலும் இத்தனை நாட்கள் இதை எல்லாம் கவனிக்காது முட்டாளாக இருந்ததை என்னி தன்னை தானே திட்டிக் கொண்டு , அவளை கைகளில் அள்ளினான்.

” அதான் சொல்லுறேன்ல ” என அவள் கத்துவதையும் பொருட்படுத்தாது அவன் மகியை காதலோடு பார்க்க, தன் கண்ணாவின் விழிகள் தெரிவது உண்மையாயென என்று  தன் காஃபி நிற விழிகளை இறுக மூடிக் கொண்டாள் மகி. அவளுக்கு அவன் நன்றி கடனாய் இத்தனையும் பார்த்து எங்கே தன் கண்ணா மேல் உயிரை வைத்திருந்த மனம் அவனிடம் சென்று விடுமோ என்ற பயம் . மூடியவளின் விழிகளில் இருந்தே கண்ணீர் வடிய , அதை எல்லாம் பார்த்த  பொழுது சித்திற்கே அதிகம் வலித்தது. 

அவன் அறைக்கு சென்றவன் தன் மகிமாவை மெல்லமாக படுக்க வைத்து கால்களை வருடி விட, அதையெல்லாம் பார்க்க பார்க்க வெறி ஏறியது மகிக்கு

” போதும் நிறுத்துங்க சித்… இதெல்லாம் எதுக்கு பண்றிங்க உங்க உயிரையும் உங்களோட உயிருக்கு உயிரான பயிரையும் காப்பத்துனால தானே …ஜெஸ் ஸ்டாப் திஸ் ” என்ற அவள் கூற்றில் சற்று உறைந்து தான் போனான் சித் இத்தனை நேரம் தான் அக்கறையாக செய்தது அவளுக்கு நன்றி கடனாக தெரிகிறதா என துடித்தவன் தன்னவள் அருகில் அமர்ந்தே கொண்டு அவள் முகத்தை கையில் ஏந்த

” எ..ன்ன என்..ன பண்..றிங்க ” என மகியின் வார்த்தைகள் தந்தியடிக்க , தன்னவள் நெற்றியோடு தன் பிறையை ஒட்டிக் கொண்டு ஊமையாய் கண்ணீர் வடித்தான் அவளின் கண்ணா . எதற்காக அழுகிறான் என தெரியவில்லையென்றாலும் தன்னவன் கண்ணீரை கண்டு தன் விழிகளும் கலங்கி நீரை கொட்டியது .

” ஏன்டி ஏன் …நீ மட்டும் அன்னைக்கு சரியான டைம்க்கு வந்திருந்த இன்னேரம் நம்ம எவ்வளவு சந்தோஷமா இருந்திருக்கலாம்  ” என சித் ஆரம்பிக்க எதுவும் புரியவில்லை மகிக்கு, அதை அவளின் முகத்தை வைத்தே கண்டு பிடித்தவன் 

” சொல்லு டி சொல்லு …இரண்டு வருஷமா கண்ணுல படமா என்ன ஏங்க விட்டு , ஒவ்வொரு தடவையும் உன் கவிதையால என்ன மயக்கி, எல்லா முறையும் உன் காதலால என்ன வியக்க வச்சு , கடைசி ஒரு நாள் என்ன பாக்க வரேனு சொல்லிட்டு அன்னைக்கு நீ அங்க இருக்காம எதுக்காக அமிழ இருக்க வச்ச ” என அவன் கேட்க கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது மகிக்கு , அதில் அவள் விழிகளில் இருந்து உப்பு நீர் அருவியாய் வெளி வர 

சொல்லு டி சொல்லு ஏன்… இவ்வளவு நேரம் திட்டுன இப்போ சொல்லு ,  இப்படி லவ் பண்ணவ எப்படி கல்யாணத்தன்னைக்கு என்ன விட்டு போனானு வருத்தபட கூற நேரம் தரமா உன்னை கல்யாணம் பண்ணி வச்சாங்களே அப்போ கூட நானும் உங்கள  காதலிச்சேனு சொல்லிருந்தா  கூட சந்தோஷமா இருந்திருக்கலாமே … கண்ணா கண்ணானு இரண்டு வருசமா உருகுனியே ஏன் டி என்ன இத்தனை நாளா ஒரு முறை கூட கண்ணானு கூப்பிடல, அதை வச்சாச்சும் உன்ன தான் நான் காதலிச்சேனு கண்டு பிடிச்சுருப்பேனே டி…ஏன் ஏன் இத்தனை நாள் என்ன தவிக்க வச்ச. நீ  அழும்  போதும் வருத்தப்படும் போதும்  எல்லாம் காரணமே இல்லாம என் மனசு வருத்த பட்ட அப்போ கூட எனக்கு புரியலையே நீ தான் என்னவள்னு … அன்னைக்கு உன்ன நெருங்குன அப்போ கூட  நான் அதுக்குள்ள காதலிச்சவள மறந்துட்டு இன்னொருத்திய மனசு நினைக்குதுனு தானே அப்படி பேசுனே , அடுத்தும் நான் தானே டி துடிச்சேன். ஒரு முறை கூட என்கிட்ட ஏன் காதலை சொல்ல தோனலையா ” என ஆற்றாமையுடன் அவன் கண்ணீர் திட்டிக்களை வடித்து கேட்க, தன்னவன் தன்னை தான் காதலித்தானா என வியப்பும் மகிழ்ச்சியும் ஒருசேர கொண்டவளுக்கும் கண்ணீர் கரைபுரண்டு வடிந்தது.

” இல்..லை நா..ன் அமி..ழ் கா..ல்..ல அடி பேப்பர் …” என் அவளின் உதடுகள்  தந்தி அடித்தது

” என்ன மன்னிச்சிடு மகிமா ..பிளீஸ் டி என்ன விட்டுப் போறேன்னு மட்டும் சொல்லாத…நா பண்ணது தப்பு தான் ” என வலியுடன் கேட்க,

” உங்க மேல எந்த தப்பும் இல்லை ..எல்லாம் என் மேல் தான். எதுக்கு நான் உங்கள மன்னிக்கனும் என் கண்ணா மேல் எனக்கு கோபமே இல்லை ஏக்கம் , போராசை என் கண்ணா காதலிச்சு பொண்ணு அமிழா இல்லாம நானாக இருந்திருக்கலாமேனு . இனி எப்பவும் உன்ன விட்டு போக மாட்டேன் ” என கண்ணீருடன் கதறுபவளை பார்த்து தானும் கண்ணீர் வடித்தவன், மகிமை அனைத்துக் கொள்ள

“என்..ன…பண்றி…” என தந்தியடிக்கும் தன்னவள் இதழை தனதாக்கி கொண்டான் அவளின் கண்ணா . 

முதல் இதழ் முத்தத்தில் மகியின் கண்கள் விரிய,  ‘ என் கண்ணா என்ன தான் லவ் பண்ணிருக்கான் … நன் மட்டும் தான் என் கண்ணா மனசுல இருந்துருக்கேன் ‘ என அளவில்லா மகிழ்ச்சி கொண்டவள் தன்னவன்   இதழ் முத்தத்தில் தானும் கரைய ஆரம்பித்தாள் . மோகம் இன்றி இத்தனை நாட்கள் பிரிந்த ஏக்கம், மன்னிப்பு , மகிழ்ச்சி என அனைத்தையையும் தன்னவளை இனி ஒரு நொடி பொழுதும் விட மாட்டேன் என்று அவன்  நிமிடங்கள் தாண்டி கவி தீட்ட , மகியும் இத்தனை நாட்கள் ஏக்கத்தில் இனைந்து கொடுத்தாள். 

” கருமம் கருமம் இதெல்லாம் கதவை அடிச்சிட்டு பண்ணி தொலைங்க டா ” என்று கீழே யாரையும் காணாது தன் நண்பன் அறைக்கு வந்தவன் கண்டதில் திரும்பி நின்று பொறும ஆரம்பித்தான்.

சந்துருவின் குரல் கேட்டு மகி இதழை பிரித்துக் கொள்ள, மனம் இல்லாமல் விலகிய சித்தோ  தன் நண்பனை முதலில் போட்டுத் தள்ள வேண்டும் என நினைத்திருந்தான்.

” என்ன மகி உன் கண்ணா உன்னை மட்டும் தான் லவ் பண்ணிருக்கான் போதுமா …இனியாச்சு அழுக சீன் ஓட்ட மாட்டியே ” என சந்துரு நக்கலடிக்க , தன்னவன் முத்தத்தில் திளைத்திருந்த மகிக்கோ கன்னங்கள் செம்மை பூசி குனிந்து கொண்டாள் சித்தின் மகிமா .

அதில் மேலும் நெருங்கி அதனை வருடி சித் அவள் முகம் அருகே செல்ல 

” அடேய் நான் இருக்கேன் டா…முதல்ல அவ கை கால் சரியாகட்டும் டா ” என தலையில் அடித்து கொள்ள , அப்போது தான் அவளுக்கு வலித்ததோ என பதறி விலக , நல்ல வேலையாக மகியின் வலக்கை பக்கம் இருந்தான்.

” சந்துரு இப்போ நீ போகல …நடக்குறதே வேற ” என அவனை பார்த்து முறைக்க, எங்கே அடித்து விடுவானோ என கீழே ஓடினான் சந்துரு. 

” எதுக்கு டா இப்படி ஓடி வர…மகி எங்க  இப்போ எப்படி இருக்கா  ” என வாசலில் நுழைந்த வாறே கேட்ட வாசுதேவன் மேலே செல்ல பார்க்க, அவர் கையை பிடித்து தடுத்தான் சந்துரு

” அப்பா அவன் என்ன அசிங்கமா கேட்காத குறையா வெளிய அனுப்புனான்…சாரு காதல் பண்ணிட்டு இருக்காரு நீங்க அப்பறம் போங்க ” என தன் நண்பனை போட்டு கொடுக்க, அவர் புரியாது விழித்ததும் நடந்ததை அனைத்தையும் கூற, வாசுதேவனோ ‘ அட பிக்காலி பயலே ..லவ் பண்ண பொண்ண  மாத்திட்டியே டா ‘ என்று மனதார திட்டினாலும் அவருக்கும் மகிழ்ச்சியே .

ராதா , செல்வி, கதிரவன் ,அமிழ் , மகியின் தோழி அனைவருக்கும் ஏதோ கல்யாணம்  வந்துருங்க என்று போனில் உரைப்பது போல போனை போட்டு இருவரும் காதலையும் கூற அனைவருக்கும் அளவில்லா மகிழ்ச்சி.

தன்னவளை எங்கு நகராது தன்னுடனே சித் வைத்துக் கொண்டு தன் மகிமாவிற்கும்  தேவையான அனைத்தையும் அவனே செய்து இத்தனை நாள்கள் பிரிந்திருந்த காதலை சேர்க்க, தன்னவன் காதலில் உருகி தான் போனாள் மகி. சந்துருவை அலுவலகம் பக்கம் அடித்து விட்டு தான் வீட்டிலே இருக்க, மகிக்கு தான் அவன் திகட்டா காதல் இனிய இம்சையாகி போனது.

ஒரு மாதங்களுக்கு பின்பு : 

” சொல்லுங்க சார் உங்க வெற்றியை நீங்க எப்படி பாக்குறீங்க ” என ஒருவர் பேட்டி எடுக்க, 

விதை நெல் அனைத்தையும் வழக்கத்தை விட அதிக விளைச்சல் செய்து சாகுபடி செய்திருந்த சித்தோ , உள்ளே வெள்ளை நிற சர்ட்டும் அதற்கு மேல் கருப்பு நிற ஓவர் கோட் அனிந்து ஆளுமை கண்களில் நிறைந்து இருக்க , இத்தனை வருடம் பட்ட கஷ்டங்களுக்கு கிடைத்த பரிசாய் பதிலளித்தான் .

” இதுக்கு  நா மட்டும் காரணம் இல்லை இதோ இங்க நிக்குற என் நண்பன் மற்றும் என் மனைவியும் தான் ” என சந்துருவை கை நீட்டி கூற , நண்பனை பற்றி தெரிந்தவன் மகிழ்ச்சியோடு அனைத்துக் கொண்டான். வீட்டில் இருந்து தன் கண்ணாவை டீவியில் பார்த்திருந்த மகிக்கோ அவ்வளவு மகிழ்ச்சி தன்னவன் வெற்றியில் . தன்னவன் கவனிப்பில் கை மட்டும் ஏதோ தேரியிருக்க, இன்னும் கால்கள் சரியாக வில்லை அதனாலே வீட்டில் விட்டு சென்றான் அவளின் கண்ணா இல்லையேல் அவளையும் கூட்டி இல்லை இல்லை கட்டிக்கொண்டு சென்றிருப்பான். அனைவரும் மகிழ்ச்சியோடு பார்த்திருந்தனர் சித்தார்த் கிருஷ்ணன் பேட்டியை.

” முதல்ல ரொம்ப நன்றி சொல்லனும் என் பயிருக்கு அங்கிகாரம் தந்ததுக்கு, இனி பல நோய்கள் பயிரை தாக்காது அண்ட் ஒன்மோர் திங் முடிஞ்ச அளவு கெமிக்கல்ஸ், பூச்சி மருந்து அதை எல்லாம் தாவரங்களுக்கு அடிப்பதை நிறுத்துங்க…நம்ம இயற்கையாகவே எல்லாத்தையும் சரி பண்ணிரலாம் . கெமிக்கல்ஸ் யூஸ் பண்ரனால நம்ம நினைச்சு பாக்க முடியாத பல நோய்கள் மனிதனுக்கு வரும் பல கெமிக்கல்ஸ் நம்ம உடம்புக்குள்ள போறனால ஏன் கேன்சர் கூட வரலாம் சோ இயற்கையான முறையை கையாளுங்க. அது தான் எல்லாருக்கும் நல்லது  நம்ம பாரம்பரியமும் அழிஞ்சு போகாது. அதே மாறி பாஸ்ட் புட் கூட அவாய்ட் பண்றது நல்லது. ஏன்ன இப்போ ஒவ்வொரு சாப்பாட்லையும் ஒவ்வொரு விதமான கெமிக்கல்ஸ், பவுடர்ஸ் , எஸ்ஸன்ஸ் இருக்கும் அதெல்லாம் மொத்தமா வயித்துக்குள்ள போனா என்ன ஆகும்னு நீங்களே யோசிங்க … நம்ம உடம்புக்குள்ள எடுத்துக்கிற ஒவ்வொரு பொருளும் நம்மளுக்கு நன்மை தருமானு திங்க் பண்ணி செஞ்சா ஆரோக்கியம் வாழலாம் ” என மனநிறைவுடன் கூறி தன் கூலிங் கிளாசை மாட்டியவன் தான் வாங்கி விருதை  தன் மகிமாவிடம்  காட்ட அவன் வீட்டை நோக்கி பயணித்தான்.மற்ற வேலைகள் அனைத்தையும் சந்துரு பார்த்து கொள்ள , அனைத்து கனவுகளும் தன் காதலும் கிடைத்த இந்த உலகத்தில் யாரும் அடைந்திடாத இன்பத்தை அடைந்தவானாய் தான் தோன்றியது சித்திற்கு. வீட்டு வாசலில் அனைவரும் நின்று மகிழ்ச்சியாய் நின்று வரவேற்க , அனைவரிடமும் ஒரிரு வார்த்தைகள் கூறியவன் தன் அறையை நோக்கி படிகள் ஏறி  ஓடினான். மகனின் செய்கையில் வாசுதேவனும் ராதாவும் சிரிக்க, கதிரவனும் செல்வியும் தன் மகள் வாழ்க்கை நல்லபடியானதை நினைத்து மகிழ்ந்தனர். அமிழும் ஆனந்தும் மறுபடியும் சென்னைக்கே சென்று விட இருவரும் ஒன்றாய் இனைந்து வேறு கம்பெனியை தொடங்கியிருந்தனர். 

” மகிமா ” என ஓடி வந்தவன் மெத்தையில் படுத்திருந்தவளின் பக்கத்தில் சென்று தானும் அவளோடு ஒன்றி கொள்ள, பாவம் இந்த திகட்டாத காதல் மகியை ஆட்டி வைத்தது. 

” நா இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன் மகிமா ” என அவளை பார்த்து கூற , தன்னவன் மகிழ்ச்சியில் தானும் சந்தோஷம் கொண்டவளாய் அவன் கன்னத்தில் இதழை பதித்தாள் . 

” நீ இன்னும் நிறையா பண்ணனும் கண்ணா ” என்றவள் அவனை  படுத்தவாறே  அனைத்துக் கொண்டாள். இப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் அவள்  கண்ணா என்று  அழைப்பது காதல் தேனாய்பாய தன் மகிமாவை அனைத்திருந்தவன் சட்டென அவளை விலக்கி 

” மகிமா உனக்கு என்ன என்ன எல்லாம் கனவு இருக்கு சொல்லு…நம்ம காதலிக்கும் போது என்ன என்னலாம் யோசிச்ச ” என குழந்தை போல அவன் மகியின் கன்னத்தை கிள்ளிக் கொண்டே கேட்க, யோசிப்பது போல் பாவனை செய்தாள் சித்தார்த்தின் மகிமா.

” சொல்லு மகிமா என்ன ஆசை  இருக்கு ” என அவன் மீண்டும் அதையே கேட்க , தன்னவனுடன் வாழும் கனவை  பாட்டாக பாட ஆரம்பித்தாள் மகி 

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம்

சொல்லவே ஓர் நாள்

போதுமா அன்பே இரவை

கேட்கலாம் விடியல் தாண்டியும்

இரவே நீளுமா….

என் கனவில்  ஆ ஹா… நான் கண்டஆ

ஹா… நாளிது தான்

கலாபக்காதலா பார்வைகளால் ஆ ஹா… பல கதைகள் ஆ ஹா

பேசிடலாம் கலாபக்காதலா…

பெண்களை நிமிர்ந்து பார்த்திடா

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே!!  கண்களை நேரா பாத்து தான் நீ பேசும்

தோரணை பிடிக்குதே! 

தூரத்தில் நீ வந்தாலே என் மனசில்

மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடல் ஒன்றை உதடுகளும்

முணுமுணுக்கும்…

மந்தகாசம் சிந்தும் உந்தன் முகம் மரணம்

வரையில் என் நெஞ்சில்

தங்கும் உனது கண்களில் எனது கனவினை காண

போகிறேன்

ஒன்றா ரெண்டா ஆசைகள் எல்லாம்

சொல்லவே ஓர் நாள் போதுமா 

அன்பே இரவை கேட்கலாம் விடியல் தாண்டியும் இரவே நீளுமா….

சந்தியாக் கால

மேகங்கள் உன் வானில்

ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ

நெஞ்சிலே உன் நடையின்

சாயலே தோணுதே

நதிகளிலே நீராடும்

சூரியனை நான் கண்டேன்

வேர்வைகளின் துளி வழிய

நீ வருவாய் என நின்றேன்

உன்னால் என் நெஞ்சில் ஆணின் மனம்

நானும் சொந்தம் என்ற

எண்ணம் தரும் ..

மகிழ்ச்சி மீறுதே வானைத் தாண்டுதே

சாகத் தோன்றுதே தோன்றுதே !…

என பாடியவள் வாயை தன் இதழ் கொண்டு அணைபோட்டு அனைத்து கனவுகளும் நிறைவேற்றுவேன் என கூறாமல் கூறினான் மகியின் கண்ணா .

விதியின் வலியினால்  உள்ளத்தில் தேக்கிய மகியின் காதல்

அவள் உதிரத்தை பார்த்தபிறகு

அவளவனுக்கு உணர்த்தி சேர்த்தது !! 

அவள் உயிர் கண்ணாவிற்கு 😍💋

இனியாவும் நன்மையாக அமையட்டும் என கூறி விடைபெறுவோம் 🥰❤️.

முற்றும் . 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
35
+1
0
+1
2

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    15 Comments

    1. Antha kaiyaaa kuduyaaaa ithuuuuuu kaiiii illayaaaa uliiiii ennamaaa kathayaaaa sethuki irukaaaaaaaaa❤️😍😍😍😍😍💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙

    2. APA da epdiyo mahi love pannathu sidh tha thanu sidh ku terinjuruchu ama athu innum mahi ku terilaye sidh ku Ella unmaiyum terinjuruchu u athu teriyama Ava enna enna moo pesitu irukaa😠😠pavom la sidh manasu evolo kasta padum ……..☹️ Intha problem la yum chandru Avenoda velaya mattum aven crt ta pakuran paa sandhiya va love pannuran 😩anga un frd da poye paru da potato ithula kaiya vera pidichu ilukuran …ayo ayo 🤦😁 sidh enna da pannura public place la vekkama illa ya unaku unaku iruko illayoo enaku iruku daa🙈🙈🤭 paravailla press people ta Mahi ya yum sollirukan super apro Namma natpu chandru va yum sollirukan super da sidh..✨😘 ipo la avanga vetri adancha athuku na tha Karanam nu solluvanga ana ni apdi illa super da ni ..💖😍😘 apro innum enna la asai irukunu thidirunu ketta Ava epdi solluva irunthalum oru song la apdiye sollita ni ketathum …super my fav song ……ur story was very amazing sister … waiting for next epi ini may la poda mudiyathu so waiting for next story podalam la 😜😁waiting…….🔥🔥🔥🔥🔥

    3. Janu Croos

      அழகான…ஆழமான காதல்…பார்த்து பேசி பழகினா தான் அது காதலா…பாக்கமாலே ஒருத்தங்கள நேசிக்கலாம்னு புரியவச்சது சித் மகியோட காதல்…

      தான் காதலிச்சவன தன்னோட அக்கா காதலிச்சானு நினைச்சு மகி விட்டுக்குடுத்தது ரொம்பவே நெகிழ்ச்சியா இருந்துது…அது அக்காக்காக தன்னோட காதல விட்டுக்குடுத்தாளா….இல்ல தான் காதலிச்சவன் அவன் நினைச்ச வாழ்க்கைய வாழனும்னு விட்டுக்குடுத்தாளானு தெரிய…ஆனா அது யாருமே செய்ய துணியாத காரியம்…
      சித்தார்த்துக்கு உள்ளுக்குள்ள மகிமேல காதல் இருந்தாலும் அவன் அத உணரலனது ஒருபக்கம் இருந்தாலும்…இன்னொருத்திய காதலிச்சிட்டு கல்யாணம் நடந்ததுக்காக இன்னொருத்திய ஏத்துக்கனுமான தடுமாற்றத்துல அவன் இருந்தான்…ஆனா எப்போ அவனோட காதல் மகினு தெரிஞ்சுதோ அப்போவே அவனோட தயக்கம் எல்லாம் இல்லாம போயிடிச்சு…
      சந்த்ரு…நல்ல நண்பன்…எல்லாருக்கும் இப்படி ஒரு நண்பன் இருக்கனும்ன ஆசை இருக்கும்…சித்தார்த்துக்கு ஒண்ணுனா அவன் என்ன வேணா பண்ணுவான்…கலகலனு இருக்கவன் கோவம் வந்தா மட்டும் கை நீட்டிடுவான்…

      ஆனந்த் அமிழ் மூலமா இனியாவது நல்லவனா திருந்துனும்…

      கதைகூடவே தாவரங்கள் பத்தியும் மண்வளம் பத்தகயும் பயிர்வளர்ப்பு பத்தி எல்லாம் சொன்ன தகவல்கள் அவ்வளவு அருமையா இருந்துச்சு….
      அருயையான அழகான கதை….
      தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்….

      1. Bullet vedi
        Author

        மிக்க நன்றி சகி 🥰🥰😁❤️❤️❤️❤️🤗🤗..உங்க கமெண்ட் எனக்கு நிறைய பூஸ்ட் தந்துச்சுகு 🤗🤗…இப்படி சின்ன சின்ன எழுத்தாளரை உங்களை போல் ஊக்குவித்தால் அவர்கள் புனைவு மேலும் கூடும் 😌😌🤗🤗

    4. Super love story…💖💖💜💜💜💜💝💝💝💝😍😍😍😍

    5. Archana

      (ஜாரி புல்லட் பொங்கல் அதுவுமா கமெண்ட் போட டைம்மாயிடுச்சு🙈🙈🙈🙈 அதுவும் இல்லாம லாஸ்ட் எபி வேற சிறப்பா கமெண்ட் பண்ண வேணாம🤪 அதான் இந்த தாமதம்).
      முதலே சிறப்பா கதையே தொடங்கின போல முடிச்சதுக்கு வாழ்த்துக்கள்🤩🤩

      விவாசாயத்தை இயற்கை முறையில்ல முடிஞ்ச அளவு எப்படி பண்ணனும்ன்னு சித் பையனே விட்டு அழகா சொல்லியாச்சு.

      இதோட சோர்ஸ் கலெக்ட் பண்ண நீங்க எவ்வளவு கஷ்ட பட்டீங்கன்னு தெர்ல👏👏👏👏 அந்த ஃப்ளைட் பேக்ட்ரியா பத்தி சொன்னதெல்லாம் சூப்பரா இருந்துச்சு🤩🤩

      கதையில்ல எனக்கு பிடிச்ச கேரக்டர்னா அது சந்துரு பையன் தான்🤣🤣🤣🤣🤣 அவன் வர சீன்ஸ்கெல்லாம் நல்லா சிரிப்பேன், இப்படி ஒரு காமெடி பீஸே🤪🤪🤪 ஐ மீன் பிறரே சிரிக்க வெக்குற ஜீவனே நினைச்சு பீலிங்க் proud🤣🤣🤣

      என்ன சந்தியாவோட டூயட் பாடுறதெல்லாம் கடைசி எபிலே கையே புடிச்சு போறதோட முடிச்சாச்சு🤧🤧🤧 என் தலைவனும் எவ்வளவு தான் பொறுத்திருப்பான் ஒரு ஹக்கீஸ் என்ன லவ் கூட இந்த புள்ள சந்தியா சொல்லாம சொல்லிட்டு போய்டுச்சு🤣🤣🤣

      அவ்வளவு தான் சித்தப்ஸ் உன் கனவு அவ்வளவு தான்னு, ஒவ்வொரு தடவ ட்ரீம்லே டூயட் பாடும் போது எங்க இருந்து தான் இந்த சித் பையலுக்கு மூக்கு வேர்க்குமோ தெரிலே வந்துடுவான் ட்ரீமே ஆசிட் விட்டு கழுவ🤣🤣😂😂

      மகியோட லவ் ஒவ்வொரு விதத்திலையும் பிரமிக்க வெச்சுருக்கு🥰 தன்மானத்தை காத்துக்குற ஹீரோயினா, பாசக்கார சிட்டுகுருவியா, அன்ப காமிக்குற பொண்ணா, வலம் வந்தது எனக்கு அவ்வளவு பிடிச்சிடுச்சு மகியே😄😄😄😄

      சித் பையன், கொடுமக்காற “சித்”தா சின்ன புள்ள தனமா அவன் மகி மேல வெறுப்பு காட்டும் போது எல்லாம் எனக்கு அவனே மூக்குலே குத்தனும் போல இருக்கும்🤣🤣 பட் புல்லட் சித்தோட மனநிலை என்னன்னு எனக்கு தனிப்பட்ட விதத்துலே புரிய வெச்சிட்டீங்க அவன் இடத்திலே இருந்தா கொஞ்சம் சிட்டுவேஷனே ஹாண்டல் பண்ண கஷ்டம் தான்.

      ஆனாலும், அவன் பேசினதுக்கு மகி கெஞ்ச விட்டது எனக்கு ரொம்ப பிடிச்சுச்சு😝😝😝 “பேச்சா மேன் பேசுனே பேச்சு, மன்னர் பரம்பரை மண்ணாங்கட்டி பரம்பரை இப்போ மாவுகட்டு பரம்பரை ஆக்கிட்டாங்களே” இப்படி தான் இருந்துச்சு மகியோட பதிலடி🤣🤣

      அமி,மகி ஆரம்பத்திலையே ட்வின்ஸ்ன்னு நான் கெஸ் பண்ணேன் அது உண்மையா ஆன உடனே வாவ்ன்னு இருந்துச்சு😅😅

      ஆனந்த் பையன் இவ்வளவு கேடி வேலை பார்த்தும் அவனுக்கு பெருசா தண்டனை கிடைக்கலையே😒😒 பட் ஒரு விதத்திலே அவன் காலம் பூரா அமி விட்டு போய்டுவாளோன்னு பயப்படுறதே என்ன பொறுத்த மட்டு தண்டனை யா தான் இருக்கும்.

      கதை முழுசுமே நல்லா இருந்துச்சு🤩🤩 எரர் மிஸ்டேக், அமியே பத்தி இன்னும் சொல்லிருக்கலாம், ஆனந்த எதோ கஷ்டபட்டேன்னு சொன்னானே அப்படி அவன் சின்ன வயசிலே என்ன நடந்துச்சு, சின்ன வயசிலேயிருந்தே அமியே எப்படி லவ் பண்ணான்னு சொல்லிருந்தா கொஞ்சம் இன்னும் பெட்டரா இருந்திருக்கணும்ன்னு தோணுச்சு😁 எரர் மிஸ்டேக், டைப்போஸ் மட்டும் கரெக்ட் பண்ணிடுங்க😇😇😇😇

      படைப்பு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🥳🥳🥳🥳🥳 , all the best for your future endeavors ❤❤❤❤❤

      1. Bullet vedi
        Author

        மிக்க நன்றி சகி 🥰🥰😁❤️❤️❤️❤️❤️❤️❤️..எரர் மிஸ்டேக் சரி பண்ணிட்டு இருக்கேன் .. நிறைய பேர ரொம்ப காமிக்க மூடியாம போன காரணம் லிமிட் 😑😑😑…கவலை வேண்டாம் கதை ரிசல்ட் வந்ததும் எபி லாக் போடலாம் 😂😂😁 அப்போ உங்க சந்துரு கல்யாணத்தை நடத்திறேன் 😌😂

    6. story super 🤩🤩🤩love story ya matum eluthama organic farming pathi neraya soninga rummpa Nandri😘😘😘😘♥️♥️ valthukal 🤗🤗

    7. அவல் பொங்கல்

      என்னை விட்டுப் பிரியாதே!! புல்லட் வெடி.

      இதும் ஒரு இதமான கொஞ்சம் முட்டாள் தனமான காதல் கதை தான்.

      ஆனா காதல்ல முட்டாள்தனம் எவ்ளோ அழகானா விஷயம்ன்னு சொல்ற கதை.

      சித்தார்த்கிருஷ்ணன் வெட்ஸ் அமிழ்தினி ன்னு ஆரம்பிக்கிற் கதை எப்படி சித்தார்த் கிருஷ்ணன் லவ்ஸ் மிகிழினி ன்னு முடியிறது தான் கதை.

      சித்தார்த் காதலிச்சி கல்யாணம் வரை கொண்டு வந்த அமிழ் ஏன் கல்யாணத்துக்கு முதல் நாள் வீட்ட விட்டு ஓடி போகனும்ன்னு நமக்கு டவுட் வர அதே நேரத்துல, தன்னோட கண்ணா மேல இருந்த லவ் போச்சுன்னு லவ் ஃபெயிலியர்ல சுத்திட்டு இருக்க மகி சித்த கல்யாணம் பன்னதுக்கு அப்பறமும் என் கண்ணாவ நினைச்சி ஏங்கி போய் கவிதை எல்லாம் எழுதனும்ன்னு நம்மள நல்லா மண்டைய காயவிட்டு பாதில கதையோட டிவிஸ்ட் எல்லாம் ஓபன் பன்றாங்க.

      சமுதாய சிந்தனையோட கதை எழுதனும்ன்ற ரூல்லக்கு மேட்ச்சா இயற்கை விவசாயத்தை கையில எடுத்துருக்காங்க நம்ம புல்லட்டு.

      அதுக்கு ஏத்த மாதிரி மகியும் சரி சித்தும் சரி இயற்கைய எந்த அளவுக்கு நேசிச்சிருக்காங்கன்னு அவங்க கேரக்டர்ர அழகா வடிவமைச்சிருக்காங்க.

      எனக்கு ரொம்ப பிடிச்சது மகி தான்.

      உயிரில்லா தன்னோட வண்டிய கூட சீட்டான்னு நேசிக்கிறது, எந்த சூழ்நிலைலயும் தன் மனகாயங்களை மறைச்சி நம்மள நேசிக்கிறவங்களுக்காக சிரிக்கிறது. இப்படி இருந்தாலும் தான் சித் சொன்ன ஒற்றை வார்த்தையில் எனக்கும் தன்மானம் இருக்குன்னு வேலைக்கு போனதுன்னு அவ கேரெக்டர்ர ரொம்ப அழகா வடிவமைச்சிருக்காங்க.

      சந்துரு, சந்தியா, சௌமின்னு நட்புன்னா என்னன்னு சொல்றதுக்கு பெஸ்ட் எடுத்துக்காட்டு.

      சந்தியா லவ்ல குட்டியா ஜாதி பிரச்சனைய மென்ஷன் பன்னிருக்காங்க.

      சந்துருவ ஒரு காமடி ஆக்டர்ராவோ இல்ல ஹீரோ பிரண்டாவோ காட்டாம அவனையும் இன்னொரு ஹீரோ ரேன்ஜ்க்கு சரியா மெயிண்டெயின் பன்னிருக்காங்க..

      காதல், காதல்ன்னால வர அத்தனை உணர்வுகளையும் ரொம்ப இதமா சொல்லிருக்காங்க.

      கதை எங்கயும் ஸ்டாப் ஆகாம அது பாட்டுக்கு முடிக்கிற வர ஈஸியா போய்கிட்டே இருந்தது.

      ஒரு நல்ல கோதுமை ஹல்வா சாப்பிட்ட ஃபீல்..

      வாழ்த்துக்கள் புல்லட் வெடி!

      அன்புடன்

      அவல் பொங்கல்..

    8. 9தானிய பொங்கல்

      என்ன இது இல்ல என்ன இதுனு கேக்குறேன் அது என்ன அக்கா கல்யாண மண்டபத்துல இருந்து பொண்ணு ஓடி போய்ட்டா தங்கச்சிய கட்டி வைக்கிறது… அவளுக்கும் ஆசை இருக்கும் கனவு இருக்கும்னு நினைக்குறதே இல்லல😔😔😔
      இப்படி ஒரு நிலமையில நம்ம ஹீரோவ கட்டிகிட்டவ தான் நம்ம ஹீரோயினி மகி… ஆனா அவ மனசுல 2 வருஷமா கண்ணா இருக்கான். ஆனா அத பத்தியேல்லாம் யோசிக்காம மாப்பிள்ளை மற்றும் அவங்க வீட்டுகாரர்கள் மானம் போககூடாதுனு instant மணப்பெண்ணா அக்காக்கு பதிலா மகிய கட்டிவைகிறாங்க.
      உருகி உருகி காதலிச்சவ கல்யாண்ம் வரை விட்டுட்டு போனதும் பெற்றோர் வற்புறுத்தலால் காதலிச்சவளின் தங்கையை கட்டிகிட்ட சித்..
      இப்படி இரண்டு மனநிலையில் இருக்கவங்க வாழ்க்கையில் ஒன்றிணைந்தால் என்ன நடக்கும் இது தாங்க கதை…. அவ்வளவு அழகா சொல்லியிருக்காங்க நம்ம ரைட்டர்😍

      சரி அந்த ஓடி போன பொண்ணு அமிழ் சித் அ ல்வ் பண்ணுனா னு அப்படி இருக்க கல்யாண்ம் அன்னைக்கு எதுக்கு இவ ஓடி போகனும்🤔
      அமிழ் அ லவ் பண்ணிட்டு மகிய கட்டிகிட்டதால மகிய வார்த்தைகளால கொல்லுறதும்….. அவள வெறுக்குறதும்…. என்ன நியாயம்.அய்யோ பாவம் மகி.. இதுல சித் அவன் தப்ப உணர்ந்தானா🤔 இல்லையா🤔
      அவசர கல்யாண்ம் instant பொண்ணா மாறியிருந்தாலும் சித் அம்மா அப்பாவுக்கு ஒரு நல்ல மருமகள்.
      வாழ்க்கையில் நல்ல நட்பு கிடைத்தால் அதுவே பெரிய பலம்…
      அப்படி தான்
      சித்துக்கு சந்துரு
      மகிக்கு சந்தியா & சௌமியா💕💕💕💕
      சந்துரு நீ எல்லாம் special piece டா😂😂😂
      அவளே காதல் தோல்வி ல கைய அறுத்துகிட்டு ஆஸ்பத்திரில இருக்கா அவள போய் பார்த்தோமா அறிவுரை சொன்னோமானு இல்லாமா என்னடா இது😂😂😂😂😂 இப்படி ஒருத்தன் propose பண்ணி பார்த்ததே இல்ல😂😂
      சித்துக்கு எல்லா இடதுலயும் பக்க பலமா இருக்குறதுல வேற லெவல்😍😍
      சித்— இயற்கையை நேசிப்பவன்.. விவசாயத்துல புரட்சி பண்ண காததுகிட்டு இருப்பவன்….
      இது சம்பந்தமான விடயங்கள் பற்றி இவ்வளவு அழகா ஆழமா சொல்லி இருக்கீங்க👏👏👏👏
      மகி— குறும்பு நிறைந்தவள். இவளும் ஒரு வகையில் இயற்கையை நேசிப்பவளே… தன்னவனின் பலவருட முயற்சி அந்த ஆனந்தின் சதி வேலையால தோல்வியடையிற நிலையில் அவனுக்கே தெரியாம அவனுக்கு உறுதுணைய இருப்பவள்.
      இப்படி ஒரே விதமாக இயற்கையை நேசிப்பவர்களாக இருந்தாலும் இஷ்டம் இல்லாம கட்டிக்கிட்ட இவங்க இரண்டு பேரும் வாழ்க்கையில் ஒன்னு சேர்ந்தாங்களா🤔
      மகியின் கண்ணா என்ன ஆனான்🤔
      அமிழ் ஏன் ஓடிப்போனா🤔
      அந்த ஆனந்துக்கு என்ன தண்டனை கிடைத்தது🤔 இதெல்லாமே அழகா சொல்லியிருக்கீங்க👌
      என்னா அறை….
      சந்துரு கிட்ட இருந்து ஆனந்துக்கு இப்படி ஒரு அறை எதிர்ப்பாக்கவே இல்லை.
      மகி சந்தியாவுக்கு 👌 கட்டாயம் அவளுக்கு அறையவே வேண்டும்.. தற்கொலை எதற்க்குமே தீர்வாகாது…
      மகி சித்துக்கு… (சித் பாவம் தான் இருந்தாலும்) எதுக்கு அறைந்தாள்னு சொல்லமாட்டேன் கதையில தெரிஞ்சுகோங்க😁😁😁😁😁
      அழகான ஒரு கதை.. காதல் கலாட்டா சமூக நலன் எல்லாம் கலந்து தந்தமைக்கு பாராட்டுக்கள்.👏👏
      (Oru sinna suggestion niraiya idangalil eluthu pilai ullathu athai konjam kavanathil eduthal nallathu)