Loading

ஹீரோ ஹீரோயின்ஸ் :

ஆஷா (30) – கார்த்திகேயன் (30)

அஷ்மி (5)
அக்ஷித் (5) (Twins)

அதிதி வர்மா (28) – ஆஷிஷ் வர்மா (30)

ஆருஷி வர்மா (4)
அர்ஷத் வர்மா (7)

சாக்ஷ்ஷி (28) – அவினாஷ் (32)

சமர் (6)

தீக்ஷ்ஷி (25) – அருள். (30)

சாரா (3)

(அது போக இன்னும் சில பேர் வருவாங்க மக்களே…)

வில்லன்ஸ் :

கபிலன் (17)
கனியன் (17)
கநிகா (17) (Triplets)

டீசர் :

ஆஷாவை ஒரு பெட்டில் படுக்க வைத்திருந்தனர். அனைவரின் கண்களும் ஒரு வித பதட்டத்துடன் அவளையே பார்த்திருந்தது.

ஆஷா : என்ன பண்றிங்க??? என்று தன் கையையும் காலையும் அசைக்க முயன்று தோற்று போனவளாய் கேட்டாள்.

அதற்கு பதிலேதும் கூறாமல் மற்றவர்கள் அமைதி காக்கவும், இவள் கொஞ்சம் கடுப்பானது உண்மையே. கோபத்துடன் கையையும் காலையும் அசைத்துக் கொண்டே அமர்ந்திருந்தவளை பார்த்தவர்களின் மனம் கொஞ்சம் கூட இறங்கவில்லை போலும்.

அதே நேரம் அந்த மர்ம நபர் கையில் ஒரு ஊசியுடன் அவள் அருகில் வரவும், இவள் “நோ…” என்று அலறினாள். அது என்னவென்று புரியாது நிலையுலும் கூட அவளுக்கு அபாய மணி அடித்தது. கண்களில் பயம் தெரிய கூடாது என்று அவள் நினைத்தாலுமே கூட அவள் மனதில் ஒட்டிக் கொண்டிருந்த சிறிய பயம் வெளியே தெரிந்தது.

அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த மர்ம நபர், அவளின் கையில் அந்த ஊசியை போட்டு விட்டு அவளை ஏறிட்டார். அவளோ சிறிது நேரத்தில் வலியில் துடிக்க ஆரம்பித்து விட்டாள். அவளது உடல் மேலே எழும்ப துடிக்க, அவளது கை மற்றும் காலில் கட்டப்பட்ட கயிர்கள் அதை தடுத்தது. இருந்துமே அவளது உடல் மேலே எழும்புவதை நிறுத்தவில்லை. அவளது உடலில் ஆங்காங்கே நீல வண்ணத்தில் ஏதோ மிளிர ஆரம்பித்தது. அதை பார்த்ததும் முதல் படி சக்சஸ்… என்பது போல் கட்டை விரலை தூக்கி காண்பித்தார் அந்த மர்ம நபர்.

சிறிது நேர்த்தில் அவளது உடல் அசைவற்று நின்று விட, கநிகா மட்டும் ஒரு வித பயத்துடன் அவளை பார்த்தாள். அவளது பயத்தை போக்கும் வகையில் ஆஷா கண் விழித்தாள். கண்கள் நீல நிறத்தில் பளிச்சிட்டது.

அதை அவள் உணராது ஒரு வகையான பயத்தில் இருந்தாள்.

“இது தப்போன்னு தோனுது.”என்று கூறியவளை திரும்பி பார்த்த கபிலன்  “அதெல்லாம் கவல படாத. இவங்களுக்கெல்லாம் பாவம் பாக்க கூடாது.” என்றான் முறைப்புடன்.

கநிகா எதையோ கூற வரவும், அவளை தடுத்தான் கனியன். “போதும் பேசாத…” என்று முறைப்புடன் கூறி விட்டு அவன் நகர்ந்து விடவும், இவளுக்கு தான் ஆஷாவை நினைத்து அழுகையே வந்து விட்டது.

ஆஷாவோ பயமும் சோர்வும் கலந்து கண்களை மூடியவாறு படுத்திருந்தாள்.

கநிகா அவளை தொட வரவும் கபிலன் அவளை அழைக்கவும் சரியாக இருக்கவும், இவளும் ஆஷாவை பாவமாக பார்த்தவாறு சென்று விட்டாள்.

*
*

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
2
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

    6 Comments

    1. ஆத்தாடி இது என்ன பயங்கரமான டீசரா இருக்கு. வில்லன் அந்த பிள்ளையை என்ன பண்ணுனான்? கதைக்காக வெறித்தனமா வெயிட்டிங் and all the best.

    2. என்ன ஊசிய போட்டானுங்க 🙄 அய்யோ பாவம் ஆஷா.. வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️