Loading

எனதழகா – 35 ❤️

ஆருஷி தனது அன்னையின் ஆக்ஸிஜன் மாஸ்க்கை கழட்டி விட்டு ஆக்ரோசமாக கத்தினாள். மீரா மூச்சு விடுவதற்கே சிரமப்படுவதை காண சகிக்காமல் தலையில் அடிப்பட்டதை சிறிதும் கருத்தில் கொள்ளாமல் தனது மகளின் உயிரே முக்கியம் என்று நினைத்து மறுபடியும் அருகில் சென்று ஆருஷியை தள்ளி விட முற்பட்டார் லஷ்மி அம்மா.

வயதானவர் ஏற்கனேவே அடிபட்டதோடு மறுபடியும் அடிபட போகிறது என்று நினைத்து  பாமாவும் அருகில் சென்றார். ஆனால், ஆருஷி மீராவிற்காக வைத்திருந்த டிரிப் பாட்டிலை கழட்டி லஷ்மி அம்மாவின் தலையில் அடிக்க கை ஓங்கியவளை ஒரு கரம் இழுத்து பிடித்து நிறுத்தி அவள் கைகளை இறுக்க பிடித்துக் கொண்டது.

பாமாவும், அதிர்ந்து கண்ணை மூடியிருந்த லஷ்மி அம்மாவும் “விடு , விடு ” என்று கத்திய ஆருஷியின் குரல் அவர்களை நிமிர்ந்து பார்க்க செய்தது. அபி தான் அவளை எதுவும் செய்ய விடாமல் இறுக்கி அணைத்திருந்தான். அருகில் ஆதிரா ஏதோ ஒரு மருந்தை ஊசியில் ஏற்றி அவளின் கையில் போட , இவளின் சத்தம் அடங்கி மயக்க நிலைக்கு சென்று விட்டாள்.

அவள் மயங்கிய பின் அபி அவளை தூக்கி நோயாளிகளின் உறவினர் தூங்கும் படுக்கையில் அவளை கிடத்தி  விட்டு அவன் வெளியில் சென்று விட்டான். மீராவின் அறையில் இருந்து வெளியில் வருவதை கண்ட அர்ஜுன் அவனின் சட்டையை பிடித்தான். அசோக் அவர்கள் இருவரையும் பிரித்து நிற்க வைத்த பொழுது ஆதிரா வெளியில் வந்து அர்ஜுனின் தோளில் அடித்தாள்.

ஆனால், அபி எதற்கும் எதிர்வினை காட்டாமல் எப்பொழுதும் போல் நக்கலாக அவர்களை பார்த்து சிரித்தான். அந்நேரம், ஆகாஷ் மற்றும் ரியா அங்கே வந்தனர். ரியாவைக் கண்டு அவன் மனம் ஒரு கணம் கனத்தது போல் இருந்தது. ஏனென்றால், அபியைக் கண்டாலே அவளுக்கு பயம் தொற்றி அருகில் உள்ளவர்களின் பின்னால் சென்று மறைந்து கொள்கிறாள்.

அதை விட அவள் ஆகாஷின் பின்னால் நிற்பதே அவனுக்கு இன்னும் கோபமும் ஆக்ரோசமும் வந்தது. ஆனால், அதை காட்டும் நிலையில் அவன் இல்லை. அவளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவளின் பிம்பத்தை உள் வாங்கி கொண்டு சென்று விட்டான்.

அவள் செல்வதை அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த பொழுது கதவை திறந்து பாமா வேகமாக “ஆதிரா ” என்று கூறி பதட்டத்துடன் ஓடி வந்தார். அவரின் சத்தத்தில் அனைவரும் திரும்பி பார்த்தனர்.

பின்னால் லஷ்மி அம்மா தலையில் வரும் இரத்தத்தை பிடித்து தாங்கி கொண்டே வந்தவரை கண்டு அனைவரும் பதறிக் கொண்டு வரும் முன் கேசவர் முன்னே சென்று அர்ஜீனை அறைந்தார். தடுக்க வந்த அசோக்கிற்கும் விழுந்தது கன்னத்தில்.

அனைவரும் அதிர்ந்து பார்க்க, பாமா சேலை முந்தானையால் முகத்தை மூடி அழுதார். ஆதிரா தான் இவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்றாள். லஷ்மி அம்மாவிற்கு கண்கள் கட்டி மயங்கும் நிலையில் இருக்க ஆகாஷும் , ரியாவும் அவரிடம் சென்று விட்டனர்.

ஆதிரா எவ்வளவு தடுத்தும் இருவரின் தோள்களிலும் கை வலிக்க அடித்தார்.
எத்தேசையாக வந்த தாஸ் தான் கேசவரை இழுத்தார். தாமரை பிள்ளைகள் இருவரையும் வேறு பக்கம் இழுத்து சென்றார். தாமரை திரும்பி பாமாவை  முறைத்து விட்டு “எவ்வளோ தப்பு செஞ்சாலும் வளர்ந்த பிள்ளைகளை அடிக்கிறது தப்பு அண்ணே ” என்று காட்டமாக கூறிவிட்டு, பாமாவிடம் “இப்போ கூட நீ வாயை திறக்க மாட்ட? ” என்று கேட்டார்.

அதில் அர்ஜுன் திரும்பி பாமாவை குற்றப் பார்வை வீசி விட்டு திரும்பி விட்டான். ஆகாஷ் தான் அனைவரின் கவனத்தை திருப்பி, “உங்க பிரச்சனையை அப்புறம் பாருங்க. அம்மாவை பாருங்க ” என்று சொல்லி எழுந்தவன், அருகில் இருந்த நர்ஸை அழைத்து லஷ்மி அம்மாவை அட்மிட் செய்வதற்கான அனைத்தையும் செய்தான்.

அந்நேரத்தில் ஆதிரா உள்ளே சென்று முதலுதவி செய்திருந்த மீராவிற்கும், வசுதேவருக்கும் அடுத்த கட்ட சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடு செய்தாள்.

இத்தனை நிகழ்வுகளில் அபி யாரும் அறியும் முன்னர் ரியாவை  தனியாக அழைத்து விட்டு சென்று விட்டான்.அப்படியென்று அவன்  நினைத்திருந்தான். ஆனால், உண்மையில் இதை அர்ஜுன் கவனித்து விட்டான். ஆனால், சூழ்நிலை கைதியாக அவ்விடத்தில் நிற்க வேண்டிய நிபந்தம்.

ஆனாலும், ரியாவை விட மனம் இல்லாமல் கார்ட்ஸிடம் தூரத்தில் இருந்து பார்க்கும் படியும், ஒருவேளை அபி ரியாவை காரில் அழைத்து செல்ல முயன்றால் மட்டுமே அவனை தடுக்கும் படி  செய்தியாக விஷயத்தை பகிர்ந்து விட்டான் .அதனால், கார்ட்ஸ்  அவளை பின் தொடர சென்று விட்டனர்.

மூவரையும் அவசர  சிகிச்சை பிரிவில் அனுமதித்திருந்தனர்.”வசுதேவரின் உயிருக்கு எதுவும் ஆபத்து இல்லை. ஆனால், அவரின் மனமும், வயதும் ஒத்துழைக்காமல் உள்ளது. அதற்கு நீங்கள் தான் முயற்சி எடுக்க வேண்டும். “என்று இருதய நிபுணர் கூறிவிட்டு சென்றார்.

யோசனையுடன் இருந்த அர்ஜூன் மற்றும் ஆகாஷை அழைத்து அந்த மருத்துவமனையின் டீன் “சார், சொல்லுறேனு தப்பா எடுத்துக்காதீங்க. வசுதேவர் சார் பத்தி தெரியும் என்கின்ற ஒரே ஒரு விஷயத்துக்கு மட்டுமே கூறுகிறேன். இனிமே ஆருஷி மேம் வராம பாத்துக்கோங்க. அது இவங்க மூணு பேருக்குமே நல்லது இல்லை. அதே மாதிரி எங்க மருத்துவமனைக்கும் நல்லது இல்லை. புரிஞ்சுக்குவீங்க நினைக்கிறேன். டாக்டர் ஆகாஷ் சொல்லி புரியவைங்க “என்று கூறி விட்டு அவர் சென்று விட்டார்.

அர்ஜுனை பார்த்து ஆகாஷ் ” இதைப் பற்றி அப்புறமா யோசிக்கலாம். மற்ற வேலையைப் பார்ப்போம் வா ” என்று கூறி, லஷ்மி அம்மாவை அனுமதித்து இருக்கும் அறை வாயிலுக்கு சென்றனர்.

லஷ்மி அம்மாவிற்கு மன தைரியம் அதிகம் என்பதால், அவரின் உடல் சிகிக்சைக்கு ஒத்துழைத்தது. ஆனால், அவருக்கு இருக்கும் சர்க்கரை தான் காயம் ஆறுவதற்கு கொஞ்சம் கால தாமதம் ஆகலாம் என்று கூறிவிட்டனர்.

மீராவை சென்று பார்த்த பொழுது “முன்பு போல் தான் இப்பொழுது உள்ளார். அவருக்கு டிரீட்மென்ட் ஆரம்பிக்கிறேன்.”என்று அந்நிபுணர் கூறி விட்டார்.

பின்பு தான், ஆருஷியை காண இருவரும் சென்றனர். ஆருஷி தங்கியிருக்கும் அறைக்கு வெளியில் தாமரையும் , தாஸும் நிற்க, யோசனையோடு எட்டி பார்த்தனர் . அங்கு ஆருஷி பைத்தியம் போல் கத்த, ஆதிரா , அசோக், கேசவர், பாமா மற்றும் பிற மருத்துவர்கள் ஒரு சேர அவளை அழுக்கி மருந்து ஏற்றினர்.

அதை காணும் பொழுது மனநோயாளியின் செயல் போல் இருந்தது அனைவருக்கும். ஆகாஷிற்கு சந்தேகம் வந்து வெளியே வந்த ஆதிராவை கேள்வி கேட்க, அவள் “அவங்க அம்மா உபயோகப்படுத்தின கத்தியை வச்சு அவள் கையை அறுத்துக்கிட்டாள். ஆனால், இவளுக்கு வேறு மாதிரி உடம்பில் வேலை செய்கிறது. அதனால் அது பெர்பசைன் இல்லை

அனைவருக்கும் தலை சுற்றியது போல் இருந்தது. தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிவான் மற்றும் பரத்திற்கும் ஒன்றும் புரியவில்லை.

எனதழகா – 36 ❤️

ஒரு வாரம் கடந்த நிலையில் அர்ஜுனிற்கு அகிலனிடம் இருந்து அழைப்பு வந்தது. அதன் பின்னே, ராகவேந்தரின் ப்ராஜெக்ட் செல்லும் ஞாபகம் மூளையில் எட்டியது. சிறிது நேரம் தன்னை நிலைப்படுத்தி அவனின் அழைப்பை எடுத்தான்.

எடுத்த நொடியில் அகிலன் தொடங்கும் முன் “சார், நான் அசோக்கை உங்களிடம் பேச சொல்கிறேன். நான் இங்கு ஹாஸ்பிட்டலில் இருக்கிறேன். புரிஞ்சுக்கோங்க ” என்று  கூறி அகிலன் அடுத்து பேச வரும் முன் காலை கட் செய்து விட்டு அசோக்கிற்கு தகவல் கூறினான். அதற்குள் அங்கு ஆருஷி மறுபடியும் கத்த அதனை பார்க்க சென்று விட்டான்.

அங்கு அவளை அடக்கி தூக்க மருந்து கொடுத்து தூங்க வைத்தனர். அவள் எழும் போதெல்லாம் இவ்வாறு கத்துவதும் மறுபடியும் அவளுக்கு மருந்து கொடுப்பது என நாட்கள் சென்றது.

இரு நாட்கள் சென்றபின் நரம்பியல் நிபுணர் “மீராவிற்கு நான் செய்ய வேண்டிய அனைத்தும் செய்து கொண்டிருக்கிறேன். ஆனால், அவர் என் கண் பார்வையில் இருந்தால் நன்றாக இருக்கும். அவரின் உடலும் , மனமும் என் சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறது. என்னால் நிறைய நாட்கள் இங்கே இருக்க முடியாது. அதனால் , அவரை என் மருத்துவமனையில் என் கண் பார்வையில் வைத்திருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறோம் ” என்று வினவினார்.

எந்த வித யோசனையும் இன்றி ஆகாஷே சரி என்று கூறிவிட்டான். அனைவரும் அவனை பார்க்க கண்களை மூடி அனைவரையும் அமைதி படுத்தி மீராவிற்கான அங்கு செல்லப்படும் ஏற்பாடுகளை செய்ய சொல்லி விட்டான்.

டாக்டர் கிளம்பிய பின் , அவன் முதலில் தேடியது வெங்கடேஷனைத் தான். அப்பொழுது தான் மகளின் நிலைமையை கண்டு அதிர்ந்திருந்தவர் மற்றவர் கூறுவது எதுவும் அவரின் மூளைக்கு செல்லவில்லை. இருந்தும் அவரின் ஒப்புதலும் வேண்டும் என்று நினைத்து ஆகாஷ் அவரின் அருகில் சென்றான்.

ஆகாஷின் கையைப் பிடித்து நிறுத்தி, அர்ஜுன் முன் சென்று வெங்கடேஷனின் கையை பிடித்தான். ” என் பிள்ளையையும், மனைவியையும் காப்பாற்றி கொடுப்பா . உன் கையை காலாக நினைத்திருக்கிறேன் ” என்று கூறி அர்ஜுனின் கையில் முகத்தை வைத்து அழுதார்.

அனைவருமே அதிர்ந்து நிற்க, ஆகாஷ் தான் சுதாரித்து மீராவுடன், லஷ்மி, வசுதேவர் மற்றும் ஆருஷியை அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு செல்ல முற்பட்டான்.

அவர்கள் சொல்வதை கேட்டு தலையை அசைத்தார், கூட்டி செல்லும் இடத்திற்கு எதுவும் கூறாமல் சென்றார், கையொப்பம் இட சொன்ன இடத்தில் கையொப்பம் இட்டார்.

பின்பு, கேசவர் வேறு யாரும் இங்கு இல்லை என்பதால் AA சொல்யூஷனஸ் மற்றும் மதுரா கல்லூரியின் பொறுப்பை அசோக்கிடம் கொடுத்து விட்டார். “ரியாவிற்கும் ஒரு நல்ல மாறுதல் ஏற்படலாம் என்று எண்ணி அவளையும் அங்கு அழைத்து செல்லலாம்” என்று ஆதிரா கூற, தாஸும் , தாமரையும் அதற்கு ஒப்புக் கொண்டனர்.

அதனால் வசுதேவர், ஆருஷி, மீரா, லஷ்மி, கேசவர், பாமா, ரியா, அர்ஜூன், ஆதிரா,தாஸ் மற்றும் தாமரை  கிளம்ப தயாராகினர்.

வகதேவரும் இல்லை, ரியாவும் இல்லை.வெங்கடேஷன் மற்றும் ஆருஷி கூட இல்லாததால்,  ரியாவைத் தவிர யாரும் என்ன என்று கூட பார்க்க முடியாத காரணத்தினாலும் ,சில நாட்கள் இருந்து அனைத்தையும் சீர்படுத்தி இணையதளம் மூலமாக அவள் பார்ப்தற்கு அனைத்தையும் மாற்றி அமைத்து விட்டு, வாரத்திற்கு இரு நாட்கள் ஆகாஷ் சென்று பார்ப்பதற்கு அவனுக்கும் சொல்லி கொடுத்து விட்டு வருகிறேன் என்று கூறி விட்டாள் ரியா .

கேசவருக்கும் , அர்ஜுனுக்கும் வேண்டாம் என்று சொல்ல கூட முடியாத நிலையில் இருந்தனர். அதைப் புரிந்து கொண்டு தாஸும் உதவுவதாக கூறினார்.

👥👫

இவர்கள் இவ்வாறு உரையாடும் நேரம் நிவான் சத்தமில்லாமல் ஆருஷியின் அறைக்கு சென்று அவளைக் காணச் சென்றான்.

ஆனால், இது எதுவும் தெரியாமல் ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள். அவளின் கைப்பிடித்து “ஆரா பாப்பா, நான் எதுவுமே பண்ணலடி. நான் போய் அத்தையை ……. உன் அப்பன்தான் நம்பல. நீயுமா நம்பல. அது தான்டி எனக்கு கோபம் வந்துருச்சு. ஆனா, உனக்கு என்னடி ஆச்சு. என் வாழ்க்கையே நீதான? உன் தம்பிக்கும், உன் பிரண்டுக்கும் நான் என்ன பதில் சொல்லுவேன் ? ” என்று மனதிற்குள்ளேயே புலம்பினான்,

ஏனென்றால், வெளியில் பேசி அச்சத்தத்தில் எழுந்து விடுவாளோ என்று பயம் கவ்வியது அவனுக்கு. ஆனாலும், அவளை தொடாமல் இருக்க முடியவில்லை. இரண்டே நொடி தான், இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்கையிலேயே அவள் விழித்து விட்டாள்.

இவன் சடாரென்று எழுந்து செல்வதற்குள், “நீ யார்? ” என்ற கேள்வி அவன் முதுகில் பட்டு தெறித்தது.

🏙️AA சொலியூஷன்ஸ்

அசோக்கிடம் அர்ஜுன் கூறியுவுடன் பிரகாஷ் மற்றும் சாராவை அழைத்து ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்தான்.

பின்பு, அர்ஜுனிடம் போன் செய்து அவனையும் அம் மீட்டிங்கிற்கு  ஒரு மணி நேரம் மட்டும் வரக் கூறினான். கேசவருக்கு புரிந்ததால் ஆதிரா மற்றும் ஆகாஷ் இருப்பதால்  கிளம்பி போகச் சொன்னார்.

பின்பு , கலந்தாய்வு அறையில் நால்வரும் அமர்ந்திருந்தனர். சாரா முன்னே சென்று இந்த ஒரு வாரத்தில் எவ்வளவு வேலைகள் ஒவ்வொரு ப்ராஜெக்டில் முடிந்தது என்று கூறினாள்.

“சார், ஆர். ஏ சாப்ட்வேர் கிட்டதட்ட கடைசி ஸ்டேஜ்க்கு வந்துருச்சு. மேகா மேம் கொடுத்த ரிப்போர்ட் படி இன்னும் இரண்டு நாளில் முடிச்சிருவாங்க ” என்று கூறியவள், மீதி நான்கு ப்ராஜெக்டின் நிலவரத்தையும் ரிப்போர்ட்டாக சப்மிட் செய்தாள்.

பொறுமையாக கேட்டு கொண்டிருந்த இருவரும் பிராகாஷை பார்த்தனர். அவன் எழுந்து ஒரு வீடியோவை ஒளிபரப்பினான். அதில் பரத் (விக்ரமின் தம்பி ) ரெகார்டிங் மேனேஜருடன் ஏதோ பேசுவது தெரிந்தது. அதுவும் கையில் ஏதோ கொடுப்பது போல் இருந்தது.

அதனைப் பார்த்து அர்ஜுனும், அசோக்கும் எந்த வித படப்படப்பும் இல்லாமல் இருந்தனர். சாராவிற்கு ஆச்சர்யம் ஏன் இவ்வாறு இப்படி இருக்கிறார்கள் என்று. இறுதியில் முடியாமல் கேட்டே விட்டாள் அர்ஜுனிடம்.

ஆனால், அவன் எதுவும் கூறாமல் அமைதியாக அவளை கூர்ந்து பார்த்து விட்டு அரை மணி நேரத்திற்கும் மேலாக அனைத்து ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளையும் பார்த்து விட்டு, ஒரு சில நிறை குறைகளை குறிப்பேடாக எடுத்து கொண்டான்.

பின்பு, அசோக்கும் அது போல் செய்து விட்டு பிராகஷிடம் அந்த வீடியோவை வாங்கி விட்டு, சாராவிடம் திரும்பி ஐந்து ப்ராஜெக்ட் குழுவையையும் தனித் தனியாக மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்ய கூறினான் அசோக்.

அதை குறிப்பேடாக எடுத்துக் கொண்டவள் “சார் டைமிங் ? ” என்று கேட்டாள்.

மெச்சுதலாக ஒரு பார்வை பார்த்தவன் “டூ ஹவர்ஸ் இங்க இருப்பேன். அதுக்குள்ள எல்லா டீமும் வந்திருக்கனும் ” என்று கூறி விட்டு வெளியில் செல்ல கதவை திறந்தவன் என்ன நினைத்தானோ திரும்பி “சாரா ” என்று அழைத்தான்.

டீமிற்கு  நேரம் நியமித்து கொண்டிருந்தவள் , அவன் கூப்பிட்டதும் எழுந்து நின்றாள்.

“பாதி நேரம் அறிவா பேசற,பாதி நேரம்  குழந்தை மாதிரி யோசிக்கிற . உன்னோட பதிலை உன் புருஷன்கிட்ட கேளு .அவனுக்கு தெரியலைனா என்கிட்ட கேட்க சொல்லு ” என்று கூறி மடமடவென வெளியேறி விட்டான்.

ஆணி அடித்தாற் போல் அவ்விடத்திலேயே பேச்சின்றி நின்றது சாரா , பிரகாஷ் மட்டும் அல்ல. அசோக்கும் அதிர்ந்து நின்றான் இவனுக்கு எப்படி தெரியும் என்று .

நமக்கும் தெரியாது அர்ஜுனுக்கு எப்படி தெரியும் என்று !

கீர்த்தி☘️

 

 

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
1
+1
0
+1
0

    உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்