Loading

அத்தியாயம் 16

மறுநாள் இருவரும் தத்தம் அலுவலுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, “மிஸ்டர் மலையாளி, என்னை கிளாம்பிங்ல ட்ராப் பண்ணிடு!” என்றபடி தலையை வாரினாள்.

“நின்டெ ஸ்கூட்டி எவிடே?” அவன் கடிகாரத்தை அணிந்தபடி வினவ,

“அது அப்பாவுக்கு அவசரத்துக்குத் தேவைப்படும்னு வீட்ல வச்சுட்டு வந்துட்டேன். வேற வாங்கணும்…” இறுதி வரியை மட்டும் தனக்குள் சொல்லிக் கொண்டாள்.

“அந்து (அன்னைக்கு) கார் ஓட்டியல்லோ?”

“அது ரிஷு” எனச் சொல்ல வந்தவள், “என் லவரோடது…” எனச் சீண்டினாள்.

அவன் தாடை இறுகுவதைத் திருப்தியாகப் பார்த்தவள், ‘டிராப் பண்றதுக்கு என்னவோ பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ணிருக்குற ரேஞ்சுக்குக் கேள்வி கேக்குறான்…’ என நொடித்திட,

அவளைப் பிடித்து இழுத்துத் தன் நெஞ்சோடு மோத வைத்தான், சற்று அழுத்தமாகவே.

“ஸ்ஸ்ஸ்… டேய் பைத்தியக்காரா, வலிக்குது.”

“எக்ஸ் லவர்!” எனக் காட்டத்துடன் திருத்தினான்.

இடையை அழுத்தமாக இறுக்கியதில், “விடு அகன்…” என நெளிந்தாள்.

“இனி மறக்குமோ?” கண்ணைச் சுருக்கியவனின் கர்ஜனையில் விழித்தவள், “விடு அகன், வலிக்குது.” என்று விடுபட முயன்றாள்.

“ஆ கார் யாருடேதா?” மீண்டும் கேட்டவனை நொந்து பார்த்தவள், “எக்ஸ் லவரோட…” எனச் சொல்ல வந்து விட்டு, “ரிஷுவோடது” என்றாள் உர்ரென.

“மச் பெட்டர்!” என்று அவளை விட்டதுமே அவனைப் படபடவென அடித்தாள்.

அனைத்தையும் வாங்கிக் கொண்டவன், அவள் வயிற்றில் குத்தியதில் “எடி… வேதனிக்குதுடி…” என வயிற்றைத் தேய்த்தான்.

“வேதனை கொடுக்கணும்னு தான அடிக்கிறேன்… மூஞ்சப் பாரு!” எனத் திட்டி விட்டுக் கீழே சென்றாள்.

அங்கு அமையா டைனிங் டேபிள் மீது அமர்ந்திருக்க, அவளுடன் விளையாடியபடி உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள் அன்விதா.

வீடே அமைதியாக இருந்ததில், “என்னக்கா, யாரையும் காணோம்?” என வினவியபடி அமர்ந்தாள்.

“அத்தையோட சொந்தக்காரங்க திடீர்னு தவறிட்டாங்களாம், அதான் எல்லாரும் போயிருக்காங்க.”

“ஓ!”

“உனக்குச் சாப்பாடு எடுத்து வைக்கட்டா?”

“நான் எடுத்து வச்சுக்குறேன்கா…” என மாடியைப் பார்த்தவள் அர்ஜித் இன்னும் வராததால், “அகன் சீக்கிரம் வாங்க, லேட் ஆகுது.” என்று சத்தம் கொடுத்து விட்டு, ஹாட் பாக்ஸைத் திறக்க அதில் ஆப்பம் இருந்தது.

“இங்க சவுத் இந்தியன் டிஷ் எல்லாம் செய்ய மாட்டீங்களா?” எனப் புலம்பிக் கொண்டவள், “அமையா குட்டி என்ன பண்ணிட்டு இருக்கீங்க?” எனக் கொஞ்சினாள்.

“ஃபசில்…” எனத் துண்டு துண்டாக இருந்த மிருகங்களைத் தூக்கிக் காட்டினாள்.

“சூப்பர், கரெக்ட்டா மேட்ச் பண்றீங்களே…”

“ம்ம்ம்” எனத் தலையாட்டிட, அந்நேரம் விஷ்ணு அகமொழியை முறைத்தபடி அவளுக்கு எதிரில் அமர்ந்தான்.

“ஹாய் ப்ரோ…” பிரணீத்தைப் போன்று அவனிடமும் பேசிட, அவன் பதிலே சொல்லவில்லை.

அர்ஜித்தும் அவர்களுடன் வந்து அமர்ந்து கொள்ள, அன்விதா இருவருக்கும் பரிமாறினாள்.

அமையா, “சித்தி மங்கி…” எனக் குரங்கு அட்டையைக் காட்ட, “கரெக்ட்டாய் பரயுந்து அமையா” என வாரினான் அர்ஜித்.

அவனை முறைத்தவள், “உன் சித்தப்பா தான் மங்கி!” என அவனிடம் நாக்கைத் துருத்தினாள்.

அன்விதா இருவரையும் கண்டு சிரிப்பை அடக்கிக் கொள்ள, பின் அகமொழியே “அக்கா, பாப்பாவை ஸ்பீச் தெரபி கூட்டிட்டுப் போகலாம்ல…” எனக் கேட்க விஷ்ணு நிமிர்ந்து சீறினான்.

“என் குடும்ப விஷயத்திலு நீ தலையிடாதே… எதை எப்ப எங்கனே செய்யனம்னு ஞங்களுக்கு அறயாம்…(எங்களுக்கு தெரியும்)” என முகத்தில் அடித்தது போலப் பேசியதில் அவள் முகம் சுருங்கியது.

அத்துடன் அமைதியாகி விட்டாள். ஆனால் விஷ்ணு விடவில்லை.

“இது எந்தா… ஸ்கூல்ல படிக்கப் போறா தான. பின்னே எதுக்கு அவளுக்கு டாய்ஸ் வாங்கிக் கொடுக்காதே, வீட்டிலேயும் புக்ஸ், பசிலுன்னு வாங்கி வச்சிரிக்கனது” எனத் திரும்பி மனையாளிடம் கொந்தளித்தான்.

“அவள் கொஞ்சம் கான்செண்ட்ரேஷன் பண்றான்னு தான் விஷ்ணு…” அன்விதா எச்சிலை விழுங்கியதில், அகமொழி தான் உதவிக்கு வந்தாள். அவளால் அல்லவோ இந்தப் பொருள்களை வாங்கினாள்.

“கொஞ்ச நேரம் ஓடாம உக்காந்திருப்பாள்ல ப்ரோ, அதான்…” என்றதில்,

அவனோ இப்போதும் அன்விதாவையே முறைத்தான்.

“ஏன், ஈ மகாராணி குழந்தையைக் கூட ஓடிப் பார்த்துக்க மாட்டீங்களா? உக்காந்த இடத்துலயே உக்கார வச்சுட்டு, நீ எந்தா செய்யான் போன? எப்பவும் வெட்டியாய் தன்னெயல்லே இரிக்கனது குழந்தையை நோக்கனது தவிர எந்து வேலை இருக்கு? கல்யாணத்துக்கு முன்னாடியே ரிஸார்ட்க்கு வந்து கூத்தடிச்சவ பரயனது கேட்டு நின்டெ இஷ்டத்தினு இரிக்கன வேலை எல்லாம் வச்சுக்காத.” என்று திட்டி விட்டான்.

அன்விதாவிற்கு மற்றவர்கள் முன்னிலையில் அவன் திட்டியதில் முணுக்கெனக் கண்ணில் நீர் கோர்க்க, அகமொழி அதிர்வுடன் அமர்ந்திருந்தாள்.

அர்ஜித் அகனோ நிமிர்ந்து பாராது அலைபேசியில் மூழ்கி இருக்க, பாதி உணவில் தட்டை எடுத்துக் கொண்டு அடுக்களைக்குச் சென்று விட்டாள் அகமொழி.

தட்டைக் கழுவிடும்போதே, “மொழி…” எனக் கடுமையாக அர்ஜித் அழைக்கும் சத்தம் கேட்க, தட்டை அப்படியே போட்டு விட்டு வேகமாக வெளியில் வந்தாள்.

“ம்ம்!” அவனைப் பாராது கேட்டிட, அவனோ அப்போதும் அலைபேசியில் இருந்து கண்ணை எடுக்கவில்லை.

“நீ ஏது டைம்ல ப்ரீயாய் இரிக்கும்?”

“ஒரு 5 டு 6… எதுக்கு?” அகமொழி குழப்பமாகக் கேட்க, “ஞான் டாக்டர் அப்பாயின்ட்மென்ட் வாங்கியிட்டுண்டு. அமையாவை ஸ்பீச் தெரபி கூட்டிட்டுப் போகனது நின்டெ பொறுப்பு. நீ அவளைத் தனியே மேனேஜ் பண்ணிடுவ தான?” என்றவனைத் திகைப்பும் தயக்கமும் கலந்து பார்த்தாள்.

அர்ஜித் கண்ணைச் சுருக்கியதில், “ஹான் பண்ணிடுவேன்!” என வேகமாகத் தலையசைக்க, “ம்ம், நினக்கு வேலை இரிக்கன டைம்ல இன்பார்ம் பண்ணிடு, ஞான் கூட்டிட்டுப் போகாம்…” என்றதும் அவள் கையைப் பிசைந்தபடி விஷ்ணுவைப் பார்த்தாள்.

அவளைக் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டாமென அவன் மறுக்க, இவனோ அமையாவின் ஸ்பீச் தெரபி பொறுப்பை அவளுக்கே கொடுத்து, அவளது முக்கியத்துவத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிய வைத்தான்.

“அவள் எந்தினு கூட்டிட்டுப் போகனம், ஞான் அமையாவினு அச்சன்! (அவள் எதுக்கு கூட்டிட்டுப் போகணும். நான் அமையாவோட அப்பா)” எனக் கடுகடுத்தான் விஷ்ணு.

அலைபேசியை வைத்து விட்டு நிதானமான கோபத்துடன் விஷ்ணுவை நிமிர்ந்து பார்த்த அர்ஜித்தின் பார்வை விஷ்ணுவிற்குப் புரிந்ததோ இல்லையோ அகமொழிக்குப் புரிந்தது.

அவனது நிதானமான கோபத்தின் பின்விளைவுகள், நிதானமற்றது என அறிந்தவளாகிற்றே!

“நீ அச்சன் தன்னே. ஞான் இல்லாந்து பரஞ்சில்லல்லோ. ஆனா அவளை முழுக்க முழுக்க நோக்கனது ஏடத்தியானு. நீ வீட்டிலேக்கே ஏதோ கெஸ்ட் போலயானு வந்திட்டுப் போயிட்டு இரிக்கனது. (வீட்டுக்கே கெஸ்ட் போல தான் வந்துட்டுப் போற)

நின்டெ பிசினஸ்ல வந்து ஏடத்தி அபிப்ராயம் பரஞ்சா எங்கனே நினக்கு ஏத்துக்க முடியாதோ அதே போல தான், அவங்க குழந்தைக்கு எது நல்லது கெட்டதுன்னு அவங்களுக்குத் தெரியும். நிண்டெ அபிப்ராயம் இவிடே ஆவஸ்யம் இல்லா…”

“அதை நீ பரய வேண்டிய அவசியம் இல்ல அர்ஜி. நின்னைப் பற்றி வீடியோ வந்ததுமே ஞான் வீட்ல பரஞ்சிருக்கணம்.(சொல்லிருக்கணும்)” என்றதில் அகமொழி முகம் சுருக்கினாள்.

“இப்ப பிரச்சினை அமையாவோட ஸ்பீச் தெரபி பத்தி தான். அதைப் பத்தி மட்டுமே பேசுங்க. நீங்க தேவை இல்லாம எங்களோட பெர்சனலை இழுக்குறீங்க விஷ்ணு…” அவனைப் பற்றிப் பேசியதும் எதிர்த்துப் பேசி விட்டாள். ப்ரோவும் பறந்து விட்டது.

“உங்க பெர்சனல் உங்க பெர்சனலா இல்லையே…” விஷ்ணு நக்கலாகக் கூறிட,

“வெல், நின்டெ பெர்சனலும் பெர்சனலா இல்ல விஷ்ணு… நீ ஏடத்திட்ட பேசுன முறை, என்டெ ஒயிஃப் கிட்ட பேசுன முறை எதுவுமே சரி இல்லா… இதுவே கடைசியாய் இரிக்கட்டே!” முடிந்த மட்டும் பொறுமை காத்தான் அர்ஜித்.

“என்டெ பொண்டாட்டிகிட்ட ஞான் எங்கனே வேணாலும் பேசுவேன். அதைப் பத்தி நீ பரஞ்சு தரேண்ட ஆவஸ்யம் இல்லா.(அதைப் பத்தி நீ சொல்லவேண்டிய அவசியம் இல்ல)”

“அது நீ நின்டெ ரூமுக்குள்ள பேசுற வரை தான். டைனிங் ஹால்ல ஞங்கள்டெ (எங்களோட) முன்னாடி நீ அவங்களை இன்சல்ட் செய்தது எனிக்குப் பிடிச்சில்லா. அவங்களும் நினக்காகத் தன்னே அவங்க கேரியரை கிவ் அப் பண்ணிருக்காங்க.”

“அல்லெங்கில் மட்டும்… மேடம் கேரளாவிலே கலெக்டர் ஆயிரிக்கும். வீட்டு வேலை நோக்கானே அவளுக்கு வலிக்கும். தலை வலி, கால் வலி, வயிறு வலின்னு காரணம் பரஞ்சிட்டுப் போய் படுத்திருவா. அவள் நோக்கன ஒரே வேலை அமையாவை நோக்கனது மட்டும் தான். அதையும் சில நேரம் நிங்கள்டெ தலைல கட்டிட்டுப் போயிடுவா…” எனச் சொல்லும்போதே விஷ்ணுவின் காலுக்கடியில், கண்ணாடி ஜக் ஒன்று உடைந்து சிதறியது. அதன் கண்ணாடித் துண்டுகள் விஷ்ணுவின் காலையும் பதம் பார்க்க,

“இன்னும் ஒரு வார்த்தை பரஞ்சா, தாழே வீணது (தரையில விழுந்தது) நின்டெ தலையில் வீழும். இனி நின்னோடு பேசி பிரயோஜனம் இல்லா. ஞான் அச்சனோடு பேசிக்கிறேன்…” என முடிவுடன் மிரட்டி விட்டு விறுவிறுவென வாசலுக்குச் செல்ல, அன்விதா கன்னத்தில் வழிந்த நீருடன் நிற்பதைப் பரிதாபமாகப் பார்த்து விட்டு அவன் பின்னே சென்றாள் அகமொழி.

இருக்கும் மொத்தக் கோபத்தையும் காரின் வேகத்தில் காட்டினான்.

“அகன், கொஞ்சம் மெதுவா போ!” அகமொழி வருத்தமாகக் கூற, அவனது புஜங்களும் இறுகி நின்றது.

“இதைப் பெருசு பண்ண வேணாம் அகன்… அவர் என்மேல இருக்குற கோபத்துல கூட அக்காவைத் திட்டிருக்கலாம். அத்தை மாமா வரைக்கும் இந்த விஷயம் போக வேணாமே.”

“எந்தாடி பரயனது. அவன் பரஞ்சது எல்லாம் கரெக்ட்டா?” அவளிடம் எரிந்தான்.

“தப்பு தான். அக்காவை அவர் அப்படிப் பேசிருக்கவே கூடாது. பட், ஏதோ கோபத்துல பேசி அப்புறம் அவங்களே சமாதானம் ஆகிட்டாங்கன்னா, நீ இதைப் பெருசு பண்ணி அவங்களுக்குள்ள இன்னும் பிரச்சினை ஆகிடக் கூடாதுல அகன், அதான் சொல்றேன்.”

“அவங்க சண்டை போடட்டும், ஆர்கியூ பண்ணட்டும், அடிச்சுட்டு உருளட்டும். அதுல ஞான் தலையிடல. பட் அவன் பேசியது எல்லாம் ஏடத்தியை மட்டம் தட்டுற மாதிரி இருக்கு. எந்தோ எனிக்கு எதுவும் சரியாய் தோணுந்தில்லா” என்றவனின் கோபம் தீரவில்லை.

அகமொழியைப் பேசியதும் இந்தக் கோபத்தீக்கு முக்கியக் காரணம் என அவளுக்கும் புரியவில்லை.

“இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நடந்திருக்கா?”

அவன் மறுப்பாகத் தலையாட்டினான்.

“அப்புறம் என்ன, வீட்ல பெரியவங்க இல்ல. நம்ம தான இருக்கோம்னு நினைச்சுப் பேசி இருக்கலாம். அதை நியாயப்படுத்தல அகன்… ஆனா, அவங்க கபிள் ஸ்பேஸ்ல நாம ரொம்ப இன்வால்வ் ஆக முடியாதுல. அத்தை மாமாவுக்குத் தெரிஞ்சுட்டா அக்காக்கு இன்னும் சங்கடம். அதான் சொல்றேன். ப்ளீஸ்டா இதை விட்டுடேன்.” என்றாள் கெஞ்சலாகவே.

“அவன் எந்து பேசி இருந்தாலும் ஞான் விட்டிரிக்கும். ஆனா, இதை விட முடியலடி. மேல் சால்வனிஸ்ட் மாதிரி சம்சாரிக்குனு. இடியட்! அவனுக்காக ஏடத்தியும் நிறைய சாக்ரிபைஸ் பண்ணிருக்காங்க. 70 / 30 இருக்கலாம். பட் 0 / 100 இருந்தா அவிடே ரிலேஷன்ஷிப் எங்கனே ஹெல்தியா இரிக்கும்?” எனச் சீறினான்.

அகமொழி தான் திகைத்து விட்டாள். ஒரு முறை ரிஷானுடன் அவள் கூறியதும் இதுவே தானே.

உள்ளம் மெல்லச் சறுக்கும் அபாயம் ஏற்பட, “ப்ளீஸ் அகன், பிரச்சினை வேணாமே. கடைசியா என்னால தான் பிரச்சினை வந்ததா மாறிடும்டா. எனக்கும் கில்டியா இருக்கும். ப்ளீஸ்ஸ்!” கியரைப் பற்றி இருந்த அவனது கரத்தைப் பிடித்தாள்.

அவளது கூற்றில் மெல்ல வேகம் குறைத்துக் காரை ஓரமாக நிறுத்தியவன், “ம்ம்!” எனக் கோபம் தணியாது கூற,

“இன்னும் நீ நார்மல் ஆகலையா? அவர் பேசுனது உனக்கே கோபம் வருதுன்னா, எனக்கு எவ்ளோ வரணும். அக்காவுக்காகத் தான் நான் உன்னையும் பொறுமையா இருக்கச் சொல்றேன்…”

“ஏடத்திக்காகத் தன்னே அந்த ஜக்கை அவன்டெ தலையிலு போடாம இருந்தேன்.” அவனும் கடுகடுக்க, அவனுக்குத் தமையனையும் மீறி அன்விதாவின் மீதிருந்த அன்பு புரிந்தது.

“டேய்… என்னைக் கெஞ்ச விடணும்னு எவ்ளோ நாள் ஆசை உனக்கு. இப்படியே விடுடா இதை… இன்னொரு தடவை இப்படி நடந்தா பார்த்துக்கலாம்…” என விறைத்திருந்த தோள்பட்டையை அமுக்கினாள்.

அதில் தான் அவள் புறம் திரும்பியவன் மெல்ல நிதானித்து, “ஒரு கிஸ் தா… ஞான் நார்மல் ஆகிடுவேன்…” எனக் கேட்க,

“எதே… நீ கோபமாவே இரு ராசா. என்னை இறக்கி விட்டுட்டு நீ வேணும்னா 120 – ல போ. மலைக்கு மேல பறந்து கூட போ!” என்ற வாசகம் அவன் இதழ்களில் தஞ்சமடைய, வேண்டுமட்டும் முத்தத்தில் தணலைக் குறைக்க முயன்று அதில் வெற்றியும் கண்டான்.

அவனை விலக்கத் தோன்றாதவளாக, கண் கொட்ட விழித்திருந்தவளுக்கு உள்ளங்கை எல்லாம் குளிரெடுக்கும் உணர்வு.

நடுக்கம் தாளாது, அவனது பின்னந்தலை முடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள, அவனின் முத்தத்தின் ஆழம் இன்னும் நீண்டு வெளியில் கேட்ட ஹார்ன் சத்தத்தில் முடிவுக்கு வந்தது.

“நவ் பெட்டர்!” முற்றிலும் இறுக்கம் தளர்ந்தவனாக ஒரு முறை மூச்சு விடத் தவித்திருந்தவளை ரசித்து விட்டுக் காரை எடுக்க, ‘கிஸ் பண்ணா எப்படிக் கோபம் போகும்?’ என்ற சூட்சமம் புரியாது சிவந்த முகத்தை ஜன்னல் புறம் திருப்பிக் கொண்டாள்.

அவள் எண்ணத்தில் பதிந்து போன ஆடவனுக்கும், தற்போது தன்முன்னே சினந்து கொண்டிருப்பவனுக்கும் மலையளவு அல்லவா வித்தியாசம்! இதில் எது அவனது உண்மைக் குணம்? உண்மை அறியும் வேளையில் உள்ளமும் உயிர் பெறுமா?

அகன் வசமாவாள்
மேகா

Click on a star to rate it!

Rating 4.9 / 5. Vote count: 77

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
3
+1
62
+1
2
+1
4

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

2 Comments

  1. அன்வி, விஷ்ணுவுக்குள்ள வேற ஏதோ misunderstanding இருக்கு.. அகன் அண்ணிக்காக பேசியது👍🏻..wife மேல அகனுக்கு காதல் கூடிட்டே போகுது…💖💜💛💞💕

    Nice ud 💚💙

  2. அகன் ரொமான்ஸ் கியூட்.