Loading

நட்சத்திரம் 5

 

கடற்கரையின் ஓரமாய் நின்றிருந்த இளசுகள் அனைத்தையும் வீடியோவாகப் பதிவு செய்து வலைதளங்களில் பதிவிட உலகமே தெரிந்து போனது இவர்களின் காதல்.

கையில் குழந்தையைப் போல் தன்னவளை ஏந்தி அவன் வர, அவனைச் சூழ்ந்த இளசுகள் அவனைப் பேட்டி எடுக்கும் பாணியில் வந்து நின்றனர் அவர்கள் கேள்வி எழுப்பும் முன்,

“உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா.? ஒரு பொண்ணு தற்கொலை செஞ்சிக்கப் போறதை வீடியோவா எடுத்து லைக்ஸ் கமெண்ட்ஸ்காக என்ன வேணும்னாலும் செய்விங்களா கொஞ்சம் கூட யார்க்கிட்டையும் மனிதாபிமானமே இல்லை” எனச் சலித்துக்கொண்ட தீரனைப் பார்த்து,

“என்ன சார் அன்னைக்குக் கரையோரத்துல சம்பவம் இன்னக்கி நடுக் கடல்ல சம்பவம், இது உங்களுக்குத் தப்பா தெரியலையா? நீங்களும் ட்ரெண்டிங் கப்பிள் ஆகணும்னு தானே,இதெல்லாம் பண்ணுறிங்க” என அந்தப் பெண் கேட்க,

“புல் சிட், ஷி இஸ் மை வொய்ப் “ எனச் சொன்னவன் அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.

தன் காரின் பின் இருக்கையில் அவளை மெதுவாய் கிடத்தியவன் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டான்.

சென்னையின் மிகப்பெரிய மருத்துவமனையில் சேர்த்திருந்தான், நாலு முறை கையைப் பிடித்தற்கே இவ்வளவு சோர்வாகி விட்டாள் எனும் கவலை அவனை வாட்டி வதைக்க அவள் உடல் தெம்பிற்காக ட்ரிப்ஸ் ஏற்றபட, விஜயலட்சுமி அழுதபடி அங்கு வந்து சேர்ந்தார்.

“சாரி அத்தை இந்த முறை அவ கைய வேணும்னு பிடிக்கலை அவளைக் காப்பத்துறதுக்காகத் தான் பிடிச்சேன்” என அவன் சொல்ல

“நான் டிவில பார்த்தேன் தம்பி, நீங்க கவலை படாதீங்க மகிழ் சம்மதிப்பா எனக்கு அதுல நம்பிக்கை இருக்கு”

“இதெல்லாம் தெரிஞ்சா அவ என்னை ஏத்துக்கவே மாட்டா” எனச் சொன்னவன் மனதில் ரணமாய் வலித்தது அவளை நினைத்து நினைத்துப் பரிதவித்துப் போனான் மஹியின் தீரன்.

“மகிழ் ரூமுக்கு கூட்டிட்டு போங்க தம்பி, எல்லாம் சரியா நடக்கும் நான் அவகிட்ட பேசிப் புரிய வைக்கிறேன்“ என அவர் சொல்ல

“அத்தை ப்ளீஸ் கல்யாணத்தைப் பத்தி அவகிட்ட பேசாதீங்க, ஏற்கனவே சோர்வா இருக்கா, என்னால அவளை இப்படிப் பார்க்க முடியல” என வருந்தியபடி பேசினான். அவளிடம் உண்மையை சொல்ல முடியாத கவலையும் அவனுக்குள் தலை தூக்கி பார்த்தது.

“நான் பேசலை தம்பி உங்களுக்காகப் பேசமாட்டேன்  என மகிழினி அறைக்குள் சென்றார் விஜயலட்சுமி.

அவள் அனுமதிக்கபட்டிருந்த அந்த அறையிலிருந்த தொலைக்காட்சியில் எதோ செய்தி ஒளிப்பரப்பாகி கொண்டிருக்க அமர்ந்தபடி அதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மகிழினி வலது கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.

“மகிழ், அம்மாவை விட்டுப் போகணும்னு முடிவு செஞ்சுட்டல, உனக்கு எப்படி டி மனசு வந்துச்சு” என அவர் கேட்க,

“நீயும் என்ன துரத்தணும்னு முடிவு செஞ்சுட்டல மா உனக்குப் பாரமா இருக்கக் கூடாதுன்னு தான் நான் இந்த முடிவு எடுத்தேன்” எனச் சொன்னவளை,

“இதைப் பத்தி நான் பேசக்கூடாதுன்னு நினைக்குறேன் மகிழ் வேண்டாம் இதோட நிறுத்திக்கலாம்” என விஜயலட்சுமி சொல்ல,

“இல்லைமா நீ சொல்லு, அப்படி என்ன சொல்லி உன்னை மாத்தினாங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகணும். யாருனே தெரியாத ஒருத்தனை என் கனவுல வர்ற ஒரே காரணத்துக்காக நான் கல்யாணம் பண்ணிக்கணுமா? ” என அவள் மருத்துவமனையே அதிரும்படி கத்த,

பிரகதீரனும் அறைக்குள் நுழைந்தான் அவனோடு சேர்ந்து நீலவேணியும் வர,

“அத்தை அதைப் பத்தி பேசாதீங்கன்னு சொல்லி தான உள்ளே அனுப்பினேன், மஹி ரெஸ்ட் எடுக்கட்டும்” என அவன் சொல்ல,

“ஆண்ட்டி போய் அத்தையா மாறியாச்சு, அந்த அளவுக்கு உரிமை கொடுத்து வச்சிருக்க ?” எனக் கேள்வியாய் தன் அன்னையைப் பார்த்தாள் மகிழினி

“இப்போ அதுல என்னடி தப்பு, நீ என்ன சொன்ன நான் பாக்குற மாப்பிளையைத் தானே கல்யாணம் பண்ணுவேன்னு சொன்ன, நீ தான்டி இப்ப மாத்தி பேசுற, நான் பார்த்த மாப்பிளை தீரன் தான் அவர தான் நீ கட்டியாகணும்” என வருந்தி பேசிய விஜயலட்சுமியை, அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த நீலவேணி தேற்றினார்.

“நீங்க கவலைபடாதீங்க விஜிமா மகிழினி மாறுவா” எனச் சொன்ன நீலவேணியைப் பார்த்து,

“அய்யோ எதுக்கு நிம்மதியா இருந்த எங்க குடும்பத்தை இப்படிக் கலைச்சுவிட்டு வேடிக்கைப் பாக்குறிங்க, நீங்களெல்லாம் யாரு? உங்களுக்கு என்ன தான் வேணும்” என நீலவேணியைப் பார்த்து ஆக்ரோஷமாய்க் கத்தினாள் மகிழினி.

எதையோ சொல்ல வந்த நீலவேணியைத் தடுத்த விஜயலட்சுமி,

“சம்மந்தி அவ கிட்ட நான் பேசுறேன்”எனச் சொல்ல,

“அத்தை போதும், இதுக்கு மேல என்னால அவளுக்குப் புரிய வைக்க முடியாது அவ ஹெல்த் எனக்கு முக்கியம்” எனச் சொல்லி முகத்தை வேறுபுறம் திருப்பிக்கொண்டான் பிரகதீரன்.

“அம்மா நீ எனக்குப் பதில் சொல்லு, எப்படி இந்த மேரேஜ்க்கு நீ சம்மதம் சொன்னீயா?” எனக் கேள்வியாய் பார்த்தாள் மகிழினி.

“தீரன் உன் கைய பிடிச்சா உனக்கு என்ன நடக்குதுன்னு தெரியுமாடி? ஒரு தாய் எதைப் பார்க்க கூடாதோ அதைப் பார்த்தேன்டி “ என அழ ஆரம்பித்தார் விஜயலட்சுமி.

“இதைத் தானே பார்த்த எனத் தொலைக்காட்சியைக் காட்டினாள்” தொலைக்காட்சியில் அலைகளின் நடுவில் அழகாய் சங்கமித்த காதல் முத்தம் திரையில் படமாய் விரிய, ட்ரெண்டிங் ஆக வேண்டும் என்ற வலைதளப் போதையில் கடலில் அரங்கேறிய காதல் யுத்தம், இதில் இவர்கள் திருமணம் ஆனவர்களாம், எங்கே செல்கிறது சமூகம் சந்திப்போம் விவாத மேடையில் என அந்த நிகழ்ச்சி விரிவுரையாளர் சொல்ல.. அந்த வீடியோவை பார்க்கும் போதே மகிழினியை காப்பாற்றுவதற்காகத் தான் தீரன் அவளின் கைப்பற்றியிருக்கிறான் என்பதை விஜயலட்சுமியால் உணர முடிந்தது, விரைவாக வந்து தொலைக்காட்சியை அணைத்தார். விஜயலட்சுமி

“நீ இங்க ஆஃப் பண்ணிரலாம் ஆனா, இதை உலகமே பார்த்திருக்கும்” என அவள் சொல்ல,

“உன் மனசுல காதல் இல்லாமல் இதெப்படி மகிழ் நடந்திருக்கும்?” எனக் கேள்வியை அவர் கேட்க,

“நான் தான் சொல்றேன்ல அவன் ஏமாத்துகாரன்னு, உனக்குப் புரியலையா அவன் என்ன ஹிப்நாட்டைஸ் பண்ணிருக்கான்மா, உனக்குப் புரியுற மாதிரி சொல்லணும்னா நோக்குவர்மம்” என அவள் சொன்ன நொடி,

“அம்மா இவ சரிபட்டு வர மாட்ட , நீங்க அதைக் கொடுங்க” என நீலவேணியிடம் இருந்து பரம்பரை தாலியை வாங்கியவன்,

“அத்தை என்னை மன்னிச்சிருங்க” என்றபடி அவள் சங்கு கழுத்தில் மாங்கலயத்தைப் பூட்டியவன், அவள் விழிகளை பார்த்து சொன்னான்,

“இதை நீ ஏத்துக்குறியோ இல்லையோ, இனி இது தான் உன் வாழ்க்கை, இதை யாரலையும் மாத்த முடியாது உன் மனசை மாத்தி உன் சம்மதத்தோட தாலி கட்டணும் நினைச்சிட்டு இருந்தேன் ஆனா நீ இப்போ, தான் என் கண்ணுல பட்டிருக்க உன்னைத் தேடியே என்னோட இவ்வளவு காலமும் போச்சு ” என வருத்தமாய் அவன் பேச,

என்ன நடந்தென்று புரியாமல் விழித்தவளின் கழுத்தில் ஊஞ்சலாடிய தாலிக்கொடியை வருடியவள்,

“இதெல்லாம் என்னைக் கட்டுபடுத்தாது, ஒரு தாலிய கட்டினதும் உன் பின்னாடியே வர நான் என்ன உன் வீட்டு நாய்குட்டியா, இவ்வளவு நாள் என்ன தேடிட்டு இருந்தியா..? இதை நான் நம்பணும்..?” எனக் கேட்டவள் தாலியை கழட்டி வீசி எறிய போனவளின் கன்னத்தில் ம பளார் என விழுந்தது அறை அடித்தது விஜயலட்சுமி.

“இது கிடைக்காதா, நம்ம வாழ்கையில இப்படி ஒரு சம்பவம் நடக்காதான்னு எத்தனையோ பேர் இந்த மாங்கல்யத்துகாக ஏங்கிகிட்டு இருக்காங்க , என்ன திமிரு இருந்தா இதைக் கழட்டி தூக்கி வீசுற, இதுவரைக்கும் உன்ன நான் அடிச்சதே இல்லை , இந்த மாதிரி செயலை செஞ்சு என் கோபத்தை அதிகமாக்காத” எனச் சொன்னவரின் விழிகள் சிவந்திருக்க,

“அம்மா..” எனக் கண்களில் நீர் கோர்க்க அழைத்தவளை,

“மகிழ்” என்ற கேவலுடன் அணைத்துக்கொண்டார்.

“அவங்க எல்லாம் ஏமாத்துறாங்கமா , ஹாஸ்பிட்டல்கு தாலி கொண்டு வரணும்னு என்னமா அவசியம்” எனத் தேம்பி அழுதவளிடம் இவன் தான் உன் முன் ஜென்ம காதலன் என்றால் நம்பவாப் போகிறாள்?

“நீ அம்மாவ நம்புறல , நீ அவங்களோட வீட்டுக்கு போ இனி அது தான் உன் வீடு” என விஜயலட்சுமி சொல்ல,

“நான் போகமாட்டேன்மா , நான் உன் கூடதான் இருப்பேன்” எனச் சொன்னவள் கதறி அழ ஆரம்பித்தாள்.

“மஹி நீ உங்க அம்மா கூடவே இரு, நீயா எனகிட்ட வருவ எனக்கு நம்பிக்கை இருக்கு” எனச் சொன்ன தீரனை அந்த அழுகையிலும் தன் பார்வையிலே சுட்டெரித்தாள் மகிழினி.

“இல்லை தீரன் தம்பி அவ உங்க வீட்ல இருக்குறது தான் நல்லது, ஊர் உலகம் தெரிய நீங்க கணவன் மனைவியாகியாச்சு , இனி அவ எங்க வீட்ல இருக்குறது சரி வராது” எனச் சொன்னவரைப் பார்த்து,

“நான் அவளுக்காகத் தான் தாலி கட்டினேன்னு என்னைக்குப் புரிஞ்ச்சுக்குறாளோ, அன்னைக்கி என் மனைவியா வீட்டுக்கு வரட்டும்” எனச் சொன்னவனைப் பார்த்துக் கோபமாக வந்தது மகிழினிக்கு,

“உன்னை புரிஞ்சுகிட்டு தான் மனைவியா வரணும்னா இப்ப எதுக்கு என் கழுத்துல தாலி கட்டின, எங்க அம்மாவ ஏமாத்திட்ட என் ஏமாத்தலாம்னு பார்காதே” எனச் சொன்னவளை நெருங்கி வந்தவன்,

“மஹி உன் நிலைமை எனக்குப் புரியுது, நீயும் என் நிலைமையைப் புரிஞ்சுக்கிற நாள் வரும். இதெல்லாம் நடந்துக்குக் காரணம் உனக்கு தெரிய வரும் மஹி” எனப் பேசியபடி அவளை நெருங்கி வர,

“என்னை டச் பண்ணாத, யூ சீட், ப்ளடி” எனச் சொன்னவளை பார்த்து எள் அளவும் அவனுக்குக் கோபம் வரவில்லை பரிதாபமாகவே இருந்தது.

அதன் பின்னும் அவளின் அடம் குறையவில்லை, மகிழினியுடன் சேர்ந்து தீரனின் அரண்மனைக்கு விஜயலட்சுமி வருவதாகச் சொன்ன பிறகே, தீரன் வீட்டுக்குச்  செல்ல சம்மதித்தாள் மகிழினி, இதுவரை சந்தோசம் மட்டுமே கண்ட மகளின் முகத்தில் புன்னகை கண்டே பல நாள் ஆனது போலிருந்தது விஜயலட்சுமிக்கு, சம்மந்தி வீட்டில் தங்குவதற்கும் சங்கடமாய் இருக்க, மகளின் வாழ்கையைச் சரி செய்தாக வேண்டும் என்ற உறுதியுடனே அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

******

அவர்கள் அரண்மனை வந்தவுடன் கையில் ஆரத்தியுடன் நின்ற மீரம்மாவை பார்த்து மிகவும் கோப்பட்டாள் மகிழினி ஆராத்தி எடுத்து இருவரின் நெற்றியில் திலகமிட்டவர்,

“மீரம்மாவின் வாக்கு பொய்த்ததில்லை , நல்லாசியுடன் பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க” என வாழ்த்தி சிரித்தவரை,

“ஹேய் சூனியாக்கார கிழவி எல்லாம் உன்னால தான், இவன் பேச்சை கேட்டு உன்னை பார்க்க வந்தேன் பாரு” எனத் தலையில் அடித்துக்கொண்டாள் மகிழினி.

“ஹா..! ஹா..! நீ என்ன வேணும்னாலும் பேசு தாயி அதைக் கேக்க தானே நான் இருக்கேன்” எனச் சிரித்தவர் ஆரத்தியை கொட்டி வரச் செல்ல,

‘இதுங்களுக்கெல்லாம் சூடு சொரணையே இருக்காது போல என்ன திட்டினாலும் சிரிச்சுட்டே இருக்குதுங்க’ என மனதில் நினைத்தாள் மகிழினி.

அவள் தலையில் குட்டியவர் “இனிமேல் பெரியவங்களை மரியாதை இல்லாம பேசின நீயே எல்லாத்தையும் பார்த்துகோ, இங்கயே தனியா விட்டுட்டு போயிருவேன்” என மிரட்டிய விஜயலட்சுமியை பார்த்து,

“எல்லாத்தையும் மொத பெரியவங்க மாதிரி நடந்துக்கச் சொல்லு, சும்மா சும்மா பல்லை காட்டிட்டே இருக்காங்க எனக்கு யாரையும் பிடிக்கலை நான் இப்படித் தான் நடந்துக்குவேன், உனக்குப் பிடிக்கலைனா சொல்லு, நம்ம ரெண்டு பேரும் இங்கயிருந்து ஜாலியா போயிறலாம்” என விஜயலட்சுமியிடம் கிசுகிசுத்தாள் மகிழினி.

‘இவகிட்ட பேசி ஜெயிக்க முடியாது’ என நினைத்தவர் பிரகதீரனை நினைத்து கவலை கொள்ள ஆரம்பித்தார்.

‘அமைதியான பய இவக்கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு படப் போறனோ? ‘ என நினைத்த படி இருந்தார் விஜயலட்சுமி.

அனைவரும் வீட்டிற்குள் நுழைய “நானும் அம்மாவும் எந்த ரூம்ல தங்கணும் சொல்லுங்க” என வீட்டிற்கு வந்த விருந்தாளி போல் அவள் பேச,

“நீ என் கூடதான் தங்க போற, அதுவும் என் ரூம்ல உங்க அம்மாக்குக் கெஸ்ட் ரூம் ரெடி பண்ணச் சொல்லியாச்சு, உனக்குக் கம்ஃபர்டபிளா இருக்கணும்றதுக்காக, நம்ம ரூம் பக்கத்துல தான் ரெடி பண்ண சொல்லிருக்கேன்” எனத் தீரன் சொல்ல,

“வாட் யாருனே தெரியாத ஸ்ட்ரேஞ்சர் கூடலாம் என்னால தங்க முடியாது, எனக்குச் சில போபியாஸ்லாம் இருக்குது சோ அம்மா இல்லாம எங்கயும் தங்க முடியாது “ எனச் சொன்னவள் தன் உதட்டை சுழிக்க

“ நான் உனக்குத் தாலி கட்டின புருசன், உன்னோட நெகட்டிவ் அண்ட் பாசிட்டிவ் தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்கு” எனச் சொன்ன தீரனை முறைத்தவள்,

“முன்ன பின்ன கல்யாணம் எதாவது பாத்திருக்கிங்களா தீரன்.?, கல்யாணம்னா மேள தாளங்கள் முழங்கும் , அக்னி சாட்சியா, உறவுகள் சூழ, சடங்கும், சம்பிரதாயங்களுடன் , சந்தோசமும், நிறைந்தது தான் திருமணம் அதுல முக்கியமா மணமக்கள் முகத்தில சந்தோசம் இருக்கும், மணமகளோட முழு மனசோடையும் சம்மத்தோடையும் நடக்குறது தான் கல்யாணம், நான் சொன்னதுல எதாவது ஒண்ணாவது இப்ப நடந்த ட்ராமால இருந்துச்சா மிஸ்டர் தீரன்” என வார்த்தைகள் கொண்டு வதைத்தாள் மகிழினி.

“மஹி மாடில ரைட்ல பர்ஸ்ட் ரூம் நம்மளோடது நீ போய் ரெஸ்ட் எடு, உனக்குச் சாப்பாடு மாடிலையே தர சொல்றேன் “ என அவன் சொல்ல,

“தாலி மட்டும் கட்ட தெரிஞ்சுதுல இப்ப பதில் சொல்லு” என மறுபடியும் வம்புக்கு இழுத்தவளை, கையோடு வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு தீரன் அறைக்குள் அனுப்பி வைத்தார் விஜயலட்சுமி.

“இங்க பாருடி தீரன் வீட்ல இருக்கும் போது, நீ அவர் கூடத்தான் இருக்கனும், சும்மா அம்மா கூடத்தான் இருப்பேன் ஆட்டுக்குட்டி கூடத்தான் இருப்பேன் சொல்லி வம்பு பண்ணின, யார்கிட்டையும் எதுவும் சொல்லாம கண்கானா தூரம் போயிருவேன்” என விஜயலட்சுமி மிரட்ட,

“சரி இருக்குறேன் எல்லாம் என் விதி” எனச் சொல்லியபடி தீரனின் அறைக்குள் சென்றாள்

அந்த அறையே எதோ மியூசியம் போல் பழங்காலப் பொருட்கள் நிறைந்து வழிந்தபடி இருந்தது அதிலும் புத்தகங்களை அதிகமாகச் சேகரித்து வைத்திருந்தான் அவன் அறையிலிருந்த பால்கனிக்கு சென்று பார்த்தவளுக்கு அங்கிருந்த தொலைநோக்கி பார்த்ததும் அதைப் பயன்படுத்த ஆசை ஏற்பட மெல்ல அதனைத் தொடச் செல்ல தீரனின் குரல் கேட்டு வேகமாக அறைக்குள் வந்து சாதாரணமாக நின்றுக்கொண்டாள்.

“மஹி” என உள்ளே நுழைய,

“சொல்லுங்க தீரன்” என்றாள் மகிழினி.

‘சம்தீங் ராங்க் இவ இப்படிப் பேச மாட்டளே எதோ சேட்டை பண்ணிருக்கா, சரி போட்டு வாங்குவோம்’ என நினைத்தபடி அருகில் வந்தவன் அவள் கண்களை ஆழ்ந்து நோக்க,

“இங்க பாருங்க இப்படியெல்லாம் என்ன பார்க்காதீங்க தீரன், அப்பறம் நீங்க என்ன ஹிப்நாட்டைஸ் பண்ணிருவிங்க முதலில் தள்ளி நில்லுங்க, நீங்க எது பேசுறதா இருந்தாலும் இரண்டடி இல்ல இல்ல நாலடி தள்ளி நின்னேப் பேசுங்க” என அவள் சொல்ல,

“இல்ல உன் முகத்துல எதோ கள்ளத்தனம் தெரியுதே” என ஆராய்ச்சியாய் அவளைப் பார்த்தவனை,

“நான் ஒண்ணும் பண்ணலை அங்க இருக்க டெலஸ்கோப்பைப் பார்க்க அழகா இருக்கேன்னு கிட்ட போனேன் அதுக்குள்ள வந்துட்டிங்க “ என அவள் நெளிய,

“சரி சரி அவ்ளோ தானா, நானும் வேற எதோன்னு நினைச்சுட்டேன், இந்த ரூம்ல இருக்க எல்லாப் பொருளையும் நீ யூஸ் பண்ணிக்கலாம் டெலஸ்கோப் தவிர, இங்க இருக்க எல்லாப் புக்ஸையும் படிக்கலாம் ஆனா இது என்னோட பர்சனல் கப்போர்ட் நீ ஓபன் பண்ணவேக் கூடாது “ எனச் சொன்ன தீரனை,

“அந்த டெலஸ்கோப் வச்சு என்ன பார்ப்பீங்க தூரத்துல இருக்குறது பக்கத்துல தெரியுமா” என அவள் கேட்க,

“ஆமா ஆமா, இங்க இருந்தபடியே உன் வீட்ல நீ என்ன செய்றன்னு பாரப்பேன்” என அவன் சொல்ல சிரித்துவிட்டாள்.

“நீ போய்க் குளிச்சு ப்ரஷ் ஆகிட்டு வா முக்கியமான இடத்துக்குப் போகணும் “எனச் சொன்னவனை,

“நான் எங்கயும் உங்க கூட வர மாட்டேன், ஊரே என் பேரை கேவலபடுத்தி வச்சிருக்கீங்க நான் வரவே மாட்டேன்” என மகிழினி சொல்ல,

“நீ வரணும் வந்தே ஆகணும், உனக்கு வேற வழியில்லை” என அவளை நெருங்க,

“வரமுடியாது என்ன பண்ண முடியும்” என அவள் கேட்க,

“ஹிப்நாட்டைஸ் பண்ண முடியும்“ சொல்லி அவன் வில்லதனமாய்ச் சிரித்தான்.

“ஜென்மங்கள் கடந்த காதல்..!

ஈடேறிய தருணம் 

மங்கையிவள் கழுத்தில் 

மாங்கல்யம் ஏற 

காதலில் இணைவாளா..?

தீரனின் மஹி..!”

 

 

Click on a star to rate it!

Rating 3.5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்