Loading

நட்சத்திரம் 2

சென்னையின் பிரதான சாலையில் சிறகடித்த பறவையாய் தன்னுடைய மனதுக்குப் பிடித்த வேலையைத் தேடி தன்னுடைய முதல் பயணத்தைத் துவங்கியிருந்தாள் மகிழினி.

அவள் வந்து சேர்ந்த இடம் சென்னையின் மிகப் பிரமாண்டமான கட்டிடம், கட்டிடத்தின் நுழைவாயிலில் வாயிற்காவலரிடம் தன்னுடைய பெயர், கைப்பேசி எண்களை அவர் தந்த பதிவேட்டில் பதிவு செய்தவள் வந்ததற்கான காரணம் இன்டர்வியூ என எழுதினாள்.

“எந்த ஆபிஸ்க்கு மா வந்திருக்க” எனச் செக்யூரிட்டியின் கேள்வியில் திணறி,

“ரேடியோ ஸ்டேசன்” எனச் சொன்னவள் முகத்தில் பயத்தைக் கண்டவர்,

“ஆர்ஜே, ஆடிஷனிற்கு வந்திருக்கியாமா?” எனக் கேள்வியாய் பார்த்தார்.

“ஆமா” என வார்த்தைகள் தந்தியடிக்க அவள் திணறி போனாள்.

“பயப்படாம போ மா, இப்படிப் பேசுறதுக்கே பயந்தா, எப்படி.? செலக்ட் ஆவ, முதல் இன்டர்வியூ போல, நேரா போயி எஸ். செவன் பில்டிங் போ மா” என்றார் செக்யூரிட்டி.

ஏழாம் எண் அவளின் ராசியான எண், வேலை கிடைத்துவிடும் என நம்பிக்கை இருந்தாலும் முதல் நேர்காணல் பயம் எனும் பேய் அவள் மனதை பயமுறுத்த அவளின் இஷ்ட தெய்வத்தின் பெயரை வாயில் முணுமுணுத்தபடி “முருகா” எனச் சொல்லிக்கொண்டே ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்தாள்.

அந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தின் வாயிலில் எஸ் செவன் என எழுதியிருக்கச் செயற்கை நீருற்றை ரசித்தபடி உள்ளே நுழைந்தாள்.

ரிசப்ஷனிலிருந்த பெண்ணொருத்தி அவளின் பெயரைக் கேட்டுக் குறித்துக் கொண்டு அங்கிருந்த கண்ணாடி அறையில் அமரச் செய்தாள் அந்தப் பெண். சில மணி துளிகள் கடந்த நிலையில் “சார் கூப்பிடுறாங்க வாங்க” எனச் சொல்லி, அவளருகிலிருந்த அறைக்குள் அழைத்துச் சென்றாள் இருபத்தேழு வயது மதிக்கத் தக்க இளைஞன் அறைக்குள் அமர்ந்திருக்க, அவன் முன்னே இருந்த இருக்கையில் அமரும்படி சைகை செய்தான். இருக்கையின் நுனியில் அமர்ந்து முட்டை கண்களை உருட்டி அந்த அறையைப் பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்து அவனுக்குச் சிரிப்பு வரச் சிரித்தும் விட்டான்.

“பார்த்துங்க நீங்க முழிக்குறத பார்த்தா முட்டை கண்ணு வெளிய வந்து விழிந்துரும் போல” என அவன் சிரிக்க,

“இது ஒண்ணும் அவ்ளோ பெரிய காமெடி இல்லை, இதுக்கு எனக்குச் சிரிப்பும் வரல” என்றவளை பார்த்து மேலும் சிரித்தான்.

“சரி உங்களைப் பத்தி சொல்லுங்க மகிழினி, அதுக்கு முன்னாடி கொஞ்சம் கம்ஃபர்டபிளா உக்காருங்க” எனச் சொல்ல,

‘மானம் போச்சு’ என நினைத்தபடி நேராக அமர்ந்தாள் மகிழினி,

“என் பேரு மகிழினி, எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்து சென்னைல தான் இருக்கேன், பிகாம் படிச்சிருக்கேன், ரேடியொ ஜாக்கி என்னோட ட்ரீம் ஜாப், பிடிச்ச வேலைய செய்யணும், தான் இந்தப் பீல்ட் சூஸ் பண்ணிணேன்” எனச் சொல்லி அவன் முகத்தைப் பார்த்தாள்.

“ம்ம் வாய்ஸ் ஓகே தான், இப்ப நீங்க ஒரு ப்ரோகிராம் பண்ணப் போறதா இமாஜின் பண்ணிக்கங்க உங்களுக்கான டாபிக் செல்போன் சிங்காரிகள், ஒண்ணு மறந்துராதீங்க நீங்க எப்படிப் பெர்ஃபாம் பண்ணுறிங்களோ அதைப் பொறுத்து தான் பைனல் ரவுண்ட்“ என அவன் சொல்ல,

தன் இமைகளை மூடியவள் கண்களைத் திறக்காமல் “வணக்கம் மக்களே நீங்கள் கேட்டுக்கொண்டிருப்பது உங்கள் அபிமான வானவில் எப்எம் 77.7 நான் உங்கள் ஆர் ஜே மஹி, என்னடா இது, இந்தப் பொண்ணு குரல் புதுசா இருக்கேன்னு பாக்குறிங்களா, சாரி கேட்டுக்கிட்டு இருக்கிங்களா நான் தான் இந்த எப்எமின் புது வரவு மகிழினி, சரி வந்தது வந்துட்டோம் ஒரு நல்ல கருத்தை நம்ம இன்னக்கி பேசப் போறோம் அது என்ன டாபிக்னா செல்போன் சிங்காரிகள், நம்ம வாழ்கையில இப்ப ஒரு அத்தியவாசிய பொருளா மாறிபோச்சு இந்தச் செல்போன்கள், இப்ப இந்தச் செல்போன் இல்லாத காலத்துக்கு உங்களைக் கூட்டிட்டு போறேன் அதுவரைக்கும் ஸ்டே ட்யூன் இது வானவில் எப்எம் 77.7 இனி வர்ணஜாலம் தான் உங்களுக்காக மகிழினியோட புதுவரவிற்காக அடுத்து வரப் போகும் பாடல் சிங்கபெண்ணே நம் பண்பலையோடு இணைந்திருக்கும் சிங்க பெண்களே உங்களுக்காக டெடிகேட் பண்ணுறேன்” என முடித்துக் கண்களைத் திறந்து பார்க்க எதிரே இருந்தவன் எழுந்து நின்று கைதட்டினான்.

“ஆசம்.! ஆசம்.! நீங்க பேசினதச் சேனல் ஹெட்கிட்ட போட்டுக் காட்டிட்டு வரேன் கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணுங்க” என அவன் சொல்ல,

“உங்க பேரு சொல்லவே இல்ல” என அவள் கேட்க,

“கதிரவன்” எனச் சொல்லிவிட்டு தன்னிடம் இருந்த ரெக்கார்டை எடுத்துக்கொண்டு வெளியே செல்ல, இவள் மறுடியும் அந்தக் கண்ணாடி அறையில் வந்து அமர்ந்துக்கொண்டாள்.

ஐந்து நிமிடத்திற்குப் பின் உள்ளே வந்த கதிரவன் “வாங்க போகலாமென அழைக்க அவன் பின்னே சென்றாள் மகிழினி.

“இங்க பாருங்க மகிழினி நீங்க செலக்ட் ஆகிட்டா நம்ம ரெண்டு பேரும் தான் சேர்ந்து ப்ரோக்ராம் பண்ண போறோம், இதுக்கு முன்னாடி இருந்த ஸ்டேசன் ஹெட் பத்தி தெரியும், சோ உங்களுக்கு இப்படிப் பேசுங்க அப்படிப் பேசுங்கன்னு சொல்லிக் கொடுத்திருக்கலாம் ஆனா இப்ப இருக்க ஸ்டேசன் ஹெட் புதுசு சோ நல்லா பெர்ஃபாம் பண்ணிருங்க” எனக் கதிர் சொல்ல,

“என்ன கதிரவன் பயமுறுத்துறிங்க” என அவனைப் பார்த்தவளின் கண்களில் அச்சம் அப்பட்டமாய்த் தெரிய,

“நீங்க கண்ண மூடிட்டு அங்க பேசின மாதிரி பேசிருங்க எப்படியும் ஓன் மன்த் ட்ரெயினிங் இருக்கும் அதுல பிக் அப் ஆகிருவிங்க” எனச் சொல்லிய படி அந்த அறைக்குள் அழைத்துச் செல்லக் கண்ணாடியிலான அறை அவளின் கனவு அவள் கண் முன்னே அவளால் அவள் கண்களை நம்ப முடியவில்லை அவள் உள்ளே வரும்போது பச்சை நிறமே பாடல் ஒளிபரப்பாகி கொண்டிருக்க,

“இந்தப் பாட்டு முடியும்போது நம்ம ப்ரோக்ராம் ஸ்டார்ட் பண்ண போறோம் கெட் ரெடி மகிழினி” எனச் சொல்லிவிட்டு அவள் அமரும் சீட்டைக் காட்ட அமர்ந்து ஹெட் போன்களை மாட்டிக்கொண்டவள் மைக் அருகே நெருங்கிவந்தாள் ஆப்ரேட்டிங் போர்ட் மேல் கை வைக்க,

“ஹே மகிழ் என்ன பண்ணுரிங்க எதையாவது அமுக்கி விட்டுறாதிங்க” எனக் கதிரவன் பதறப் பாடலும் முடிந்தது ஆன் இயரில் போனவள்,

“வணக்கம் மக்களே இது உங்கள் வானவில் எப்எம் 77.7, நான் உங்கள் ஆர்ஜே மஹி நம்ம ப்ரோகிராமோட பேரு ஃப்ரியா விடு, நீங்க பதறதை என்னால உணர முடியுது ஃப்ரிய விடு கதிர்கு பதில் வேற யாரோ பேசுறாங்கன்னு பயப்படுறது உங்க கதிர்க்கு ஒண்ணும் ஆகலை, இந்த ஷோவைக் கதிரோட சேர்ந்து நானும் பேசப் போறேன் சொன்னா நம்பிறாதீங்க, இப்ப உங்க கதிர் பேசப் போறாங்க கேட்டு என்ஜாய் பண்ணுங்க இது உங்கள் வானவில் எப்எம் 77.7 இனி எல்லாம் வர்ணஜாலமே“ எனச் சொல்லி முடிக்க,

“குட்மார்னிங் என் நேயர்களே, நம்ம மஹி கொஞ்ச நேரத்துல ஒரு குட்டி ஹார்ட் அட்டாக் கொடுத்துட்டாங்க, அதுல இருந்து வெளிய வர ஒரு குட்டி ப்ரேக் எடுத்திட்டு சின்ன டாபிக்கோட வரேன் அதுவரைக்கும் இந்தப் பாட்ட கேளுங்க இது உங்கள் வானவில் 77.7 இனி எல்லாம் வர்ணஜாலமே” எனச் சொல்லி ஆன் இயரிலிருந்து வெளியே வந்தவன் ஹெட்செட் கழட்டிவிட்டு ஒரு பெண்ணை அழைத்து ஸ்டேசன் ஹெட் ரூமுக்கு மகிழினியை அழைத்துச் செல்லச் சொன்னவன்,

“நல்லா பண்ணிங்க மகிழ் ஹெட்ட பார்த்திட்டு வாங்க” எனச் சொல்ல அவள் உள்ளே வரும்போதிருந்த பயம் இப்போது அவளுக்குள் இல்லை கொஞ்சம் தைரியமாகவே சென்றாள் மகிழினி அறையைக் காட்டிவிட்டு அந்தப் பெண் சென்று விட அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தாள்.

****—****

“எஸ் கம் இன்”என அந்தக் கம்பீரமான குரல் அவள் காதில் விழச் சுழற் நாற்காலியில் சுவர் புறம் திரும்பியிருந்தவனின் கையில் ஃபைல் அடைக்கலாமாக இருக்க,

“உக்காருங்க ஆர்ஜே மஹி” என அவன் சொல்ல,

‘அய்யோ ஓவரா வாய விட்டுடோமோ’ என நினைத்தவள் தன் தலையைத் தட்டிக்கொண்டாள்.

“இருந்தாலும் உங்களுக்கு ஓவர் கான்பிடன்ட் தான்” என மறுபடியும் அந்தக் கம்பீரமான குரல்.

‘இன்னக்கி வேலை கிடைக்காது தெரிஞ்சு போச்சு, நம்ம வாய்ல சனின்றது உண்மை தான் போல’ என நினைத்தவள்,

“சார் நீங்க வேலை இல்லைன்னு  சொல்லிட்டா வந்த வழியே போயிருவேன், ரொம்பச் சஸ்பன்ஸ் வைக்காதீங்க, என் குட்டி ஹார்ட் பர்ஸ்ட் ஆகிரும்” என அவள் சொல்ல,

“ஹா ஹா.,”சத்தமாகச் சிரித்தவன் சுழல் நாற்காலி சுழற்ற அவன் முகத் தரிசனம் கண்டு அதிர்ந்தவள் இமைகள் இமைக்காமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அலையெனக் கேசம், கன்னக்குழி சிரிப்பழகன், அரும்பு தாடிக்காரன் வெந்நிற சட்டையும் நீல நிற கோட்டும் அணிந்திருந்தான் காற்றில் முன் நெற்றியில் கேசம் பறக்க அவன் விழிகள் அவளை உச்சி முதல் பாதம் வரை பார்த்து “மஹி” என மெல்ல அழைத்ததை அவள் உணரவில்லை.

“ஐ யெம் பிரகதீரன்” எனச் சொன்னவனை பார்த்து “ஒரு நிமிசம் சார் வெளியே போய்ட்டு வந்திடவா.?”

“ஓகே போயிட்டு வாங்க“

‘அய்யோ இங்க இருந்து தப்பிக்கணுமே பகவானே என்ன காப்பாத்து’ என நினைத்தவள்,

பதறி அடித்து வெளியே வந்தவள் அவசர அவசரமாகச் செல்பேசியை எடுத்து விஜயலட்சுமிக்கு அழைப்பெடுத்தாள்,

“அம்மா அம்மா” எனப் பதட்டம் குரலில் அழைக்க

“என்னடி தங்கம் என்னாச்சு.? பெப்பர் ஸ்பேர, போன்ல காவலன் ஆப்லாம் இருக்குல நீ ஏன்டி பதறிப்போய் பேசுற” என இன்னும் விஜயலட்சுமி பதற

“விஜிமா கனவுல வந்தவன் நேர்ல வந்துட்டான், எனக்குப் பயமா இருக்கு விஜிமா” என மகிழினி சொல்ல,

“அடியே இதுதான் விசயமா, மொத ஓடுறத நிறுத்து எதுக்கு இப்ப ஓடுற” எனத் திட்ட,

“நிறுத்திட்டேன், சொல்லு அவனைக் கொன்னுறட்டுமா தாலி கட்டிருவானோன்னு பயமா இருக்கே” என மகிழினி சொல்ல,

“அடிக் கழுதை, மொத உக்காரு, அம்மா கொடுத்த லஞ்ச் பேக் எடுத்து அதுல லெமன் ஜூஸ் வச்சிருக்கேன் அத மொத குடி” எனக் கட்டளையிட்டார் விஜயலட்சுமி.

“குடிச்சுட்டேன் அம்மா” என்றாள் மகிழினி.

“இப்ப கண்ண மூடி நடந்ததைச் சொல்லு” எனக் கேட்டார் விஜயலட்சுமி.

நடந்தவற்றைக் கண்களை மூடிப் பொறுமையாய் சொல்லி முடித்தாள்.

“அவன் உன்னைப் பார்த்ததும் எதாவது ரியாக்ட் பண்ணினானா?” என விஜயலட்சுமி கேட்க,

“இல்லைமா” என்றாள் மகிழ்.

“இது கிட்டதட்ட உனக்கு வேலை கிடைக்கப் போற டைம் ஒரு கனவ நம்பி, உன் கனவு வேலைய விடப்போறியா.இது உனக்கு மட்டும் வந்த கனவு அவனுக்கு வரலை, இப்ப போய் அவன தைரியமா ஃபேஸ் பண்ணு” என விஜயலட்சுமி சொல்ல,

“ஹம்ம சரி மா” எனச் சொல்லி எழுந்தாள்.

“ஆமா அவன் நேர்ல அழகா இருக்கானாடி” என ஆர்வத்தோடு கேட்டார் விஜயலட்சுமி,

“அம்மா.” என உறுமினாள்.

“ஒரு வேளை தாலி கட்டினாலும் பிரச்சனை இல்லைடி, மருமகனைக் கையோட கூட்டிட்டு வந்துரு ஆராத்தி தட்டோட மாமியார் வெயிட்டிங்னு சொல்லு” என மறுபடியும் விஜயலட்சுமி வம்பிழுக்க,

“அம்மா உன்னை வந்து வச்சிக்கிறேன், இப்ப நான் போறேன்“ எனப் பிரகதீரன் அறைக்குள் நுழைந்தாள்.

“சாரி சார் அம்மா ஃபோன்” என மழுப்பலாய் பதில் சொன்னாள் மகிழினி,

“நோ மோர் சார், கால் மீ, தீரன்“ என அவன் சொல்ல,

“இல்ல வயசுக்கு மரியதை கொடுக்கணும்னு அம்மா சொல்லிருக்காங்க” எனத் திரு திருவென முழித்தவளைப் பார்த்து,

“அப்ப என்ன வயசான கிழவன்னு சொல்லுறிங்களா மஹி மேடம்” என எழுந்து நின்றவன் தன் ட்ராவிலிருந்து எதோ ஒரு பொருளைக் கையில் எடுத்து அவள் இருக்கையின் பின் வந்து நிற்க,

‘அய்யோ தாலி கட்டிருவானோ.? ‘ எனக் குழம்பி போனவள்,

“தீரன் எதுவா இருந்தாலும் முகத்துக்கு முன்னாடி வந்து பேசுங்க” என வார்த்தையில் அழுத்தத்தைக் கொடுத்தாள்,

“ஏன் மஹி” என அவன் கேட்க,

“எனக்கு முதுகுக்குப் பின்னாடி பேசினா பிடிக்காது” என அவள் சொல்ல அவன் முகத்தில் புன்னகை அரும்பினாலும் அதைக் காட்டாமல் மறைத்தான்.

“வெல் மஹி விசயத்துக்கு வரேன், நீங்க ஸ்டுடியோக்குள்ள பண்ணின விசயம் சரின்னு நினைக்குறிங்களா, ஒரு லைவ் ஸ்ட்டிரீமிங்ல போய்ச் சீனியர் இன்ட்ரோ கொடுக்குறதுக்கு முன்னாடி உங்களை நீங்களே இன்ட்ரோ கொடுத்துப் பேசலாமா, டோன்ட் யூ, திங்க் திஸ் இஸ் ராங்க்“ என அவன் கேள்விகளை அடுக்க,

“தப்பில்லை சார் ஆக்ச்சுவலா அவர் என்ன கூட்டிட்டுப் போனது லைவ் ஸ்டீரிம்மிங் கிடையாது அது ரொக்கார்ட்டிங் ரூம்” என அவள் சொல்ல,

“வெல் குட்” என அவனின் பதில் வர,

நான் பேசினது ஒலிப்பரப்பாகணுமா இல்லையான்னு டைரக்டர் தான் முடிவு பண்ணுவாங்க, சோ இட்ஸ் ஜெஸ்ட் ஆடியோ ரெக்கார்டிங் ரூம்” எனச் சொன்னவள் புன்னகை உதிர்க்க,

“நீங்க சிரிச்சா அழகா இருக்கிங்க மஹி, கீப் யூவர் ஸ்மைல் ஆல்வேஸ் வித் யூ, அண்ட் பைனல் ரவுண்ட்காகப் பார்மல் டாபிக் நீங்க சொல்லி ஆகணும்”

“வித் ப்ளஷர் தீரன்” என அவள் சொல்ல,

“ஓகே உங்களுக்கான டாபிக் ஹோட்டல் சாப்பாடு, யுவர் டைம் ஸடார்ட்ஸ் நவ்” எனப் பிரகதீரன் சொல்ல,

“அய்யயோ ஹோட்டல் சாப்பாடா? அதெல்லாம் சாப்பிட்ட உடம்புக்கு கேடு, குழந்தைய சுமக்குற பெண்களைவிட இந்த ஜென்ரேஷன் பெண்கள் நீர்கட்டிய தான் சுமக்குறாங்க, அதனால மக்களே உணவே மருந்தா இருக்கட்டும் மருந்தே உணவா மாத்திறாதீங்க வீட்ல சமைச்சு சாப்பிடுங்க, அதுவே நம்ம அடுத்த ஜென்ரேஷனுக்குச் சொல்லிக்கக் கொடுக்குற பாடமா இருக்கட்டும்” என அவள் சொல்லி முடித்து அவன் முகத்தைப் பார்க்க,

“அடுத்த டாபிக் கனவில் வந்த கணவனே” என அவன் சொல்லிச் சாதாரணமாக இருக்க,

‘இவன் தாலி கட்டிதான் வீட்டுக்கு அனுப்புவான் போல’ என நினைத்த மகிழினி உச்சகட்ட பதட்டத்தில் இருந்தாள்.

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 4

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
1
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்