என் உள்ளத்தை ஈரத்த பூமுகம் -30 இறுதி அத்தியாயம்

Loading

முகம் 30 (இறுதி அத்தியாயம்) 

 

 

அங்கே வேதநாயகபுரமே ஜொலித்துக் கொண்டிருந்தது. இன்றும் ஐம்பது ஜோடிகளுக்கான திருமணம் நடைபெற இருக்கிறது.

 

இன்று அதிலும் சிறப்பு என்னவென்றால் பெரிய வீட்டின் வாரிசுகள் நால்வரும் அந்த ஐம்பது ஜோடிகளில் இருக்கின்றனர்.

 

சென்ற வருடமே இரு மகன்களின் திருமணத்தை வைத்துக்கொள்லாம் என சக்திவேல் பாண்டியன் சொல்லி இருக்க, தீரனோ வீட்டுப் பெண்களுக்கும் சேர்த்து எட்டு மாதம் கழித்து வரும் ஜோடித் திருமண நிகழ்விலேயே நான்கையும் ஒன்றாக வைத்துக் கொள்ளலாம் என்றுவிட்டான்.

 

இப்போதுதான் தந்தையும் மகனும் ராசி ஆகி விட்டனரே! அவன் பேச்சைக் கேட்காமலா இருப்பார்??

 

அவனிடம் இனி எதற்கும் “நோ” இல்லை அவரிடம்…

 

மகன் தான் அந்த வழக்குக்காக ஜனாதிபதியின் கைகளிலேயே விருதும் பாராட்டும் வாங்கி இருந்தானே! அதில் ஏக பெருமை அவருக்கு, பெருமிதமும் கூட…

 

மகன் செய்தது நாட்டுக்கு எவ்வளவு பெரிய விடயம் என்பதை அவர் அறிவரே!

 

இதோ நான்கு திருமணம், ஜெயதீரன் மயல்மொழி, முகிலின்பன் கயல்மொழி, கிருபாகரன் மலர்விழி. கிருஷ்ணா சிவரஞ்சினி…

 

ஆக மொத்தில் சித்தார்த் மற்றும் ஜோதியைக் கழட்டி விட்டு மற்றவர்களுக்கு திருமணம் நடக்கிறது.

 

சிவரஞ்சினிக்கு பார்க்கப்பட்ட மாப்பிள்ளை அவர்களது ஊரிலேயே சக்திவேலின் நண்பனின் மகன் தான். நல்ல குணமும் நல்ல குடும்பமும் இருக்க மனப்பூர்வமாக குடும்பத்தினர் சம்மதித்தனர்.

 

அவர்களுக்குள் இன்னும் காதல் அதன் அத்தியாயத்தை தொடங்கி இருக்கவில்லை. இனி வரும் காலத்தில் நிச்சயம் தொடராமல் இருக்கப் போவதுமில்லை.

 

 

 

அங்கே “டேய் ஜோதி, பூஜை தட்டு எல்லாம் எடுத்து வீட்டுலயே வெச்சிட்டு வந்துட்டேனே டா” என்று வேதவல்லி ஜோதியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

“ஆத்தா வேதா, இங்கன அங்கன்னு நடந்தே நான் இழைச்சு போயிடுறேன். அப்புறம் சாப்பிடுறது உடம்புல ஒட்டல, உடம்பு பூரா விஷங்குறீங்க” என்று புலம்பியபடியே அவன் அங்கே பெரிய வீட்டுக்குச் செல்ல,

 

சமரசம், சக்திவேல் இருவரும் வெளியே வந்து கொண்டிருந்தனர்.

 

இவனைக் கண்டதும் “நீ எங்கடா இங்க” என்று கேட்டார் சமரசம்,

 

அவனோ பவ்யமாய் “வீட்டுல பூஜை ஜாமான் இருக்காம் எடுத்துப் போக வந்தேன்னுங்கய்யா” என்று உள்ளே நுழையப் போக,

 

“எல்லாம் நடிப்பு சக்தி, முன்ன எல்லாம் எப்படி பேசுவான் தெரியுமா இப்போ அப்படியே பதுங்குறான்” என்று எப்போதும் போல் போட்டுக்கொடுக்க, சக்தியோ சிரித்தபடி அண்ணனை அழைத்துச் சென்றார்.

 

ஜோதியோ போகும் அவர்களையே பார்த்தபடி “இவிங்களுக்குச் சீக்கிரம் ஒரு பதனியப் போட்டே ஆகணும். அவங்க ஒன்னு சேர்ந்துட்டு நம்மள வாங்குறாய்ங்க, நானே பழையபடி ‘டேய் சமரசம்னு’ வந்துடப் போகுதுனு பார்த்து பார்த்து பேசுனா இவரு வேற” என்றவன் உள்ளே நுழைந்திருந்தான்.

 

ஆம் சமரசம் இப்போது அவரது குடும்பத்துடன் இணைந்து இருந்தார்.

 

கோதையின் பிரச்சனை தான் உலகம் அறிந்ததாயிற்றே, அவர்கள் ஊருக்கும் தெரிய வந்திருந்தது.

 

அதனாலேயே ‘சமரசத்துக்கும் அதில் தொடர்பு இருக்கின்றது’ என்று ஊரே அவரை எதிர்த்து நிற்க, அந்த நேரம் அண்ணன் மகனுக்கு தோள் கொடுத்தது என்னவோ மாணிக்கவேல் தான். அவரை நம்பியதும் அவர்தான். பிறகு என்ன பாசமழை, அடைமழை தான்.

 

அங்கே மணமகன்கள் அறையில் நால்வரும் வேட்டி சட்டையில் நின்றிருக்க, தீரனின் வேட்டியை ஒரு பிஞ்சு கரம் இழுத்தது.

 

குனிந்து பார்த்து அந்தக் குட்டியைத் தூக்கிக் கொண்டவன் “அடடே தன்வி குட்டி ஒரு ஜடை தான் அம்மா போட்டு விட்டாங்களா?” என்று கேட்டபடி கலைந்திருந்த அவளது இன்னொரு குட்டி தென்னைமர ஜடையை சரி செய்தவன், அவன் கன்னத்தில் முத்தம் வைக்க, அவனது செல்ல எதிரி அங்கே வந்திருந்தான்.

 

அபி அவனை முறைத்தபடியே நிற்க, பார்வையாலேயே என்னவென்று கேட்டான் தகப்பன்.

“மிஸ்டர் தீரன், என் பாப்பாவக் கொஞ்சம் கீழ விட முடியுமா? அவளுக்கு ஒரு வயசு ஆகப் போகுது, சும்மா சும்மா தூக்கி வெச்சா அவ எப்போ நடக்கப் பழக” என்று அண்ணனாய் சண்டைக்கு நின்றான்.

 

“சரிங்க மிஸ்டர் அபி” என்றவன் அவன் அருகில் அவளை விட,

 

“தேனும்மா உங்கள பூவா சாப்பிட வரட்டாம் அண்ணா உங்கள கூட்டிட்டுப் போறேன் வரீங்களா?” என்று கேட்டு அவளை அழைத்துச் சென்றிருக்க, ஜோதியின் ஒன்றரை வயது குட்டி ராட்சசி தன்விதாவும் அண்ணனுடன் சென்றாள்.

 

 

தீரனோ மகனின் பேச்சை எண்ணி  சிரித்துக்கொண்டிருக்க, இப்போது மீண்டும் அவன் வேட்டிக் கரை இழுக்கப்பட்டதில், திரும்பியவனது கண்களை நிறைத்தாள் இணர்வி. அதுவும் பாவாடை தாவணியில்…

 

ஐந்து வயது இணர்விக்கு ஏற்றாற்போல் ஒரே துணியில் தாயும் மகளும் ஆடை தயார் செய்திருந்தனர்.

 

அதற்கு ஒரு மாதம் முன்னிருந்தது அவர்கள் செய்த அலும்பு கொஞ்சமா???

 

அவனைக் கடை கடையாக ஏறி, அவர்கள் கொடுக்கும் வர்ணத்தில் துணியை தேட வைத்திருந்தனர் தாயும் மகளும்…

 

சரி அவர்களை வெறுப்பேற்ற தானும் மகனுடன் ஒரே போல அணியலாம் என அவன் கணக்குப் போட்டால், மகனோ “யூ டூப்ப்பா வை மீ?” என்கிறான். தீரன் தலையில் அடித்துக் கொண்டது தான் மிச்சம்.

 

அபிக்கோ தந்தையுடன் வம்பிழுப்பது அத்தனை பிடிக்கும். அதனை தவறாமல் செய்துவிடுவான் ஆனால் இரண்டுபேருக்கும் அத்தனை நெருக்கம்.

 

இப்போதெல்லாம் தங்கள் வாரிசுகளின் குடும்பம் சகிதமான வாழ்க்கை, சக்திவேல் மீனாட்சி தம்பதியினரின் கண்களை மட்டுமல்லாது அவர்கள் மனதையும்தான் நிறைத்திருந்தது.

 

 

அதுவும் மூத்த மகன் உரிமையாய் அங்கே அந்தப் பெரிய வீட்டில் வளம் வருகையில் வேறென்ன வேண்டும் அவர்களுக்கு…

 

 

இதோ மகளைப் பார்த்து ஆச்சரியத்துடன் “அடடே என் பட்டுக்குட்டி பெரிய பொண்ணாகிட்டாங்களா?” என்று கேட்டு அவள் உயரத்துக்கு குனிந்து அவள் தலையில் முட்ட, அவன் நெற்றியில் முத்தமிட்டு ஓடி இருந்தாள் இணர்வி.

 

ஜோதியோ “சபா இந்த குடும்பஸ்தன் தொல்லை தாங்கலப்பா, அஞ்சு வயசுல ரெண்டு புள்ள வெச்சிருக்கிறவன் எல்லாம் இப்போ கல்யாணம் பண்ணுறானே! நமக்கு ஒரு வாய்ப்பு வருதா?” என்க,

 

வேற என்ன அவன் வாய்க்கு கெட்ட நேரம் கூடி வந்ததில் தேன்மொழி அவன் முன்னே நின்றிருந்தாள்.

 

“உங்களுக்கு நானே பெரிசு இதுல இன்னொன்னு கேக்குதா?? நம்ம கல்யாணத்துலேயே கல்யாணம் வேணான்னு மூக்கால அழுதவராச்சே நீங்க” என்று அவனை டேமேஜ் செய்தவள்,

 

“பிடிங்க இவனை, அங்க கல்யாண பொண்ணுங்க புடவை கட்டுற இடத்துல நின்னுட்டு புடவைய இழுத்துட்டு இருக்கான். என்ன செய்றதுனு யோசிச்சிட்டு இருந்தேன். அப்போதான் நீங்க பரணியத் தேடுறதா தீரா ஐயா கால் பண்ணாங்க” என்க,

 

தீரனோ “அப்படியே அப்பாவப் போல இல்லடா ஜோதிகா” என்று முடித்திருந்தான்.

 

ஜோதியோ ‘சடார் சடார்’ என மூன்று முறை தீரனைத் திரும்பிப் பார்த்தான்.

 

இன்பனோ எட்டிப் பார்த்து “அதிர்ச்சியாம்” என்க, அங்கிருந்தவர்கள் சிரித்து விட்டனர்.

 

கிருஷ்ணாவுக்கோ அவர்கள் அரட்டை அத்தனை பிடித்ததில், அமைதியாய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான்.

 

இன்பனோ அருகில் இருந்த கிருபனிடம் சத்தம் வராமல் போனதில் காதைக் கொஞ்சம் கூர்மையாக்க,

 

“சத்தியமா எனக்கு கிளிய விட குயில் தான்டா மலரு பிடிக்கும்” என்று சத்தியம் செய்து கொண்டிருந்தான் அவன்.

 

அதனைக் கேட்ட இன்பனோ “ஆத்தி நம்ம பார்த்த வேலையா இது” என்று அதிர்ந்து “அப்போ சொன்னா அதே மரமாடா???” என்று கிண்டலுடன் கிருபனைத் தட்டிக் கேட்க, அவன் விட்ட எத்தில் தூரப் போய் விழுந்தான் இன்பன்.

 

சித்தார்த்தோ “அப்பறம் மாப்பிள்ளைங்க எல்லாம் சீக்கிரம் பெரியவன் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கோங்க” என்று அவன் காலைக் காட்ட, எல்லாரும் வளைத்து வளைத்து தேடியதில் அவன் தான் அந்தப் பெரியவன் என போஸ்டர் அடித்து ஒட்ட வேண்டியதாகிப் போனது.

 

 

அப்போது அங்கே மீண்டும் வந்த அபியோ இன்பனிடம் “இன்பாச் சித்தப்பா, கயல் பெரியம்மாக்கு கால் வீங்கிடிச்சாம் உங்கள மருந்து போட வரச்சொன்னாங்க” என்று சொல்லி விட்டுப் பறந்துவிட,

 

பரஞ்ஜோதியோ “என்ற கன்றாவியான உறவுமுறைடா இன்பா இது?” என்று கேட்க, தீரனோ “தேனு” என்று ஆரம்பித்ததில் அவன் கட்சிப் ஆகிப்போனான்.

 

இவர்கள் இப்படி இருக்கே அங்கே மணப்பெண்கள் ஆளுக்கொரு குழந்தையுடன்..

 

“அவங்க எல்லாரும் ஜம்முனு அங்க ரெடியாகுறாங்க நம்ம நிலைமையை பாருங்க” என்ற துவா மகனுக்கு தோசை ஊட்டிபடி சொல்ல

 

மலரோ “உண்மையாவா?” என்று கிருபனிடம் கேட்க,

 

துவாவோ அவளிடம் கேட்கிறாளென்று “நான் என்னடி பொய்யா சொல்லறேன்” என்று திரும்ப, அங்கே அவள் அழைபேசியில் மூழ்கி இருப்பது தெரிந்தது.

 

 

துவா தலையிலடித்தபடி “இவ இன்னும் திருந்தல மாமா” என்க, அங்கே சிரிப்பொலி பெறுகியது.

 

“ஆஆஆஆ, வலிக்குது மொழி” என்று கயல் மேடிட்ட நிறை மாத வயிற்றைப் பிடித்தத அழற,

 

“சரி சரி சாரி” என்ற மயல் அக்காவின் முடியை மெல்ல பின்னலிடத் தொடங்கினாள்.

 

அப்போதுதான் கிருபனின் அழைப்பை துண்டித்த மலர் “இதுவே வலிக்குதாக்கா அப்போ இன்பா மாமா…” என்று ஆரம்பித்த அவள் வாயைப் பாய்ந்து மூடி இருந்தாள் சிவா. அவள் வாயைத் திறந்தால் தான் வண்ணமாய் வருமென அவள் அறிவாளே….

 

________________

 

அங்கே ஒரு தனி அறையில் தனிமையில் அமர்ந்திருந்தார் கோதை…

 

யார் இங்கே வாழத் தகுதி இல்லை என்றாரோ??? இன்று அவர்களுள் அவரும் ஒருத்தர்.

 

ஆம் மனநிலை பாதிக்கப்பட்டவர்களுடன் தான் அவருக்கு வாழ்வு…

 

அவர்களுள் அவரும் ஒருத்தர் என்ற எண்ணமே அவரை கொல்லாமல் கொன்று கொண்டிருக்கிறது.

 

உயிரை மாய்த்துக் கொல்லப் போனால் அன்று அவன் பேசிய வார்த்தைகள் காதில் கேட்க, அதனையும் செய்ய முடியவில்லை…

 

மொத்தத்தில் தினம் தினம் சாகிறார்.

 

அன்று அவர் பேசியது எல்லாம் இன்றுவரை அவருக்கே ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

அந்த அறையில் அவர் காலையில் எழும் போது ஆரம்பிக்கும் அந்தச் சத்தம் அவர் தூங்கும் வரை தொடரும். அது தீரனின் மாப்பிள்ளை பரிசு. பொதுவாக அது பெண் வீட்டில் இருந்து மாப்பிளைக்குக் கொடுப்பார்கள், கோதை தான் வித்தியாசமானவராகிற்றே! அதனால் அவன் கொடுத்திருந்தான்.

 

அவரது வாக்கு மூலத்தோடு சேர்த்து அதற்கான மக்களின் எதிர்ப்பு அதுவும் சேர்த்தே! அவரை இதுவரை கடவுளாகப் பார்த்தவர்கள் முன் அவர் அப்படி கீழிறங்கிப் போவதை அவரால் பார்க்க முடியவில்லை. அதையே தினம் தினம் பார்க்கையில் உண்மையில் பைத்தியமாகி விடுவோம் என அவரே எண்ணும் அளவுக்கு இருந்தது.

 

அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியை அடித்து நொறுக்கும் வேகம் அவரிடம்… ஆனால் செய்யப் பயம்.

 

ஆம் பயம் தான். கோதை இங்கே தான் பயத்தையே உணர்கிறார்.

 

போனமுறை உடைத்ததுக்கு அங்கே இருக்கும் அதிகாரிகள் கவனித்த கவனிப்பு இன்றுவரை ஞாபகம் இருக்கிறதே!

 

அங்கிருக்கும் அனைவரும் அவர் செய்வதை அறிவர், கோபம் வரும் போதெல்லாம் அங்கிருக்கும் பெண் அதிகாரிகளுக்கு அவரே விளையாட்டுப் பொருள்…

 

செய்த அனைத்துக்கும் சேர்த்தே அனுபவிக்கிறார்.

 

அன்று நீதிமன்றத்தில் எந்த வித வாத விவாதமும் இல்லாத ஒரு வழக்கு, நீதிபதி தீர்ப்பு எழுத வேண்டியது மட்டும் தான் இறுதியில் இருந்தது…

 

கோதையின்  வாக்கு மூலமே பெரிதாய் இருக்க, எதற்கு வாத விவாதம் எல்லாம்.

 

அன்று அவரது அத்தனை தொழில் சம்பந்தப்பட்ட ஆவணங்களும் பறிக்கப்பட்டு, அவரது மனநிலை பாதிக்கப்பட்டது எனத் தீர்ப்பாகி, மனநல மருத்துவமனையில் ஆயுள் கைதியாக்கப்பட்டார்.

 

கூடவே விஷால் முரளிதரன் இருவருக்கும் அவர்களது தொழில்முறை ஆவணங்கள் பரிக்கப்பட்டு சிறையில் ஆயுள் தண்டனை எனத் தீர்ப்பாகி இருந்தது.

 

 

தீர்ப்பைக் கேட்ட கோதை கொதித்து விட்டார் ‘தான் மனநலக் காப்பகத்திலா’ என்ற கோபம் தாங்காமல் அங்கிருந்த காவல் அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை எடுத்துத் தன்னைச் சுட்டுக்கொள்ளப் போக,

 

“சூப்பர் மாமியாரே! அப்போ இந்த உலகத்துல வாழ உங்களுக்கும் தகுதி இல்லனு முடிவு பண்ணிடீங்க போலயே! அப்ப நீங்க வாழவே தகுதி இல்லாத ஜீன்னா?” என்று கேட்ட அந்தக் குரல் இன்றும் அவர் காதுகளில்…

 

அன்று இங்கே மாட்டிக்கொண்டவர் தான் ஆயுள் முழுவதும் இங்கே இன்னும் சில வருடங்களில் உண்மையில் அவர்களுள் ஒருத்தியாய் அவர்….

 

______________

 

கெட்டி மேளம் கொட்ட, மாணிக்கவேல் தாலி எடுத்துக்கொடுத்து திருமண வைபவத்தை ஆரம்பித்து வைத்திருந்தார்.

 

தீரனோ “என் வாழ்க்கை மொத்ததுக்கும் எனக்கு முதலாளியா வர உனக்கு சம்மதமா மயல்?” என்று கேட்க,

 

அவளோ “ஐயையோ அதெல்லாம் முடியாது, வேணும்னா என் அப்பாகிட்ட வேலை வாங்கி தரவா?” என்று அன்று போல் அதே கேள்வியைக் கேட்டாள் தீரனின் மயில்…

 

அவனும் மனம் நிறைந்த புன்னகையுடன், அவள் கழுத்தில் மூன்று முடிச்சிட்டிருந்தான்.

 

அப்படியே அனைத்து ஜோடிக்கும் திருமணம் முடிந்திருக்க,

 

ஜோதியோ “ஆஆன் எல்லாரும் வாங்க லேட்டாகிடிச்சாம், கை வலிக்குதாம், டைம் இல்லையாம், சட்டுனு வாங்க போட்டோ ஒன்ன புடிச்சி முடிச்சி உடுவோம்” என்க, அவனைப் பார்த்து அவனைவரும் குழம்பி நிற்க,

 

“ரைட்டர ச்சீ.. போட்டோ கிரோபர சொன்னேன், ஊருல வெள்ளம் மழை தண்ணி அவர் ஊருக்கு போக வேணாமாப்ப்பா” என்று தலையில் துண்டை போட்டுகொண்டவன்,

 

“இந்தம்மா நான் தான் ஜோக்கர்னு, வசனத்தை தந்துட்டு போயிடுது நான் இல்ல பேச்சு வாங்குறேன். என்னையும் கொஞ்சம் ஸ்கோர் பண்ண விடுங்கடா” என்று புலம்ப,

 

“என்ன அங்க சத்தம்?” என்று தேன்மொழி அங்கே வந்துவிட்டாள். இனி எங்கே ஜோதி பேசுவது???

 

முன் வரிசையில் இருக்கை போட்டு நடுநாயாகமாக மாணிக்க வேல் பாண்டியன் அமர்ந்திருக்க, அவருக்கு இரு புறமும் ராம்பிரசாத்தும் கங்காவும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு அருகில் சமரசமும் சக்திவேலும் அமர்ந்திருக்க, அவர்கள் அருகே அவர்களது துணைவியர்கள் சாவித்திரி மற்றும் மீனாட்சி அமர்ந்திருந்தனர்.

 

அவர்களை அடுத்து ஒவ்வொரு பக்கமாய் வேதவல்லியும் வரலாட்சுமியும் அமர்ந்திருக்க அருகில் அவர்களது கணவன்கள் குமரவேல், கருணாகரன்.

 

இளசுகள் பெரியவர்களின் பின்னே தத்தமது துணைவியர் குழந்தைகளுடன் நின்றிருக்க,

 

அந்த புகைப்பட கலைஞரோ அழகாக அவர்கள் குடும்பத்தைப் படமாக்கி இருந்தார்.

 

அந்த நேரம் அவர் தொலைபேசியோ,

 

‘எப்போதும் உன் மேல் ஞாபகம்… என் உள்ளதத்தை ஈர்த்த பூமுகம்’ என்று பாட, கணவன்கள் தத்தமது மனைவியைக் காதலாய் பார்த்து வைத்தனர்.

 

அழைப்பை உயிர்பித்த அந்த புகைப்படம் கலைஞர் “யம்மா நீ சொன்ன பாட்டு தான் மா வெச்சிருக்கேன். மறுபடியும் எடுக்காத இதோ முடிஞ்சிடுச்சு நான் கிளம்பப் போறேன்” என்றவன் அழைப்பை துண்டித்து அவர்களுக்கு சரி எனக் கை காட்ட, கூட்டம் கலைந்தது.

 

எல்லோரும் சென்ற பின்னும் ஜோதி அந்த புகைப்படக்காரனையே பார்த்துக்கொண்டிருக்க,

 

“என்ன” என்றான் அவன்…

 

“இல்ல அந்தம்மாவா?” என்று கேட்க,

 

“அதான் அதான் அவ தான். ஒரு சின்ன ரோல்னு கூட்டிட்டு வந்து என் உசுர வாங்குது” என்றான்.

 

எப்போதும் உன்மேல் ஞாபகம்…

என் உள்ளதை ஈர்த்த பூமுகம்…

 

என்று அழைபேசி மீண்டும் ஒலிக்க, அந்தச் சத்தத்தில் இருவரும் தெரித்து ஓட, அப்படியே நீங்களும் கூடவே நானும் ஓடிடலாம்.

 

எல்லா ஜோடியும் சண்டை சமாதானம்னு நிறைய காதலோட வாழட்டும்னு வாழ்த்தி விடைபெறுவோம்.

 

 

..சுபம்…

 

 

References👇👇👇

 

நான் கதையோட சுருக்கத்துல இது ஒரு உண்மை சம்பவத்தோட ஒரு விஷயம் உள்ளடங்கி இருக்கும்னு சொல்லி இருப்பேன்…

 

அது வேற ஒன்னும் இல்ல நம்ம கோதை தான்…

 

கோதை அளவுக்கு பயங்கராமா இல்லன்னாலும் இவங்களும் அதே யூஜினிக் (eugenic) கொள்கைய சேர்ந்தவங்க தான்.

 

‘Aurora rodriguez carballeriea’ இதுதான் அவங்க பெயர்.

 

ஆரோனா ரோட்ரிக்ஸ் கார்பயேலேரா (பிறப்பு: 23 ஏப்ரல் 1879) — மகளாகவே ஒரு “சிறந்த” பெண்ணை உருவாக்க முயன்று, மகளான ஹில்டெகார்டைக் கடுமையாக கட்டுப்படுத்தினாள். 1933 ஜூன் 9-ந் தேதி, பெண் தன் கட்டுப்பாட்டை மீறிய மனஅழுத்தமும் பயமும், தான் உருவாக்கிய சாதனை திட்டம் சிதைந்த கோபத்திலும் காரணமாக அவள் மகளை கொன்றதற்கு பிறகு கைது செய்யப்பட்ட ஆரோனா பின்னர் சிறையில்/மனச்சிகிச்சை நிலையத்தில் அண்மையில் வாழ்ந்து 1955 டிசம்பர் 28-ம் தேதி இறந்தார்.

 

Aurora, தனது மகளை ஒரு ‘சிற்பம்’ போல உருவாக்கப்பட்ட படைப்பாகவே பார்த்ததால் — அந்த திட்டத்துக்கு எதிராக சென்றதால் அவளை கொன்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 4.5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
1

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்