
அத்தியாயம்:19
அஜய் குரூப் ஆஃப் கம்பெனியின் வாயிலில் நின்றிருக் கொண்டிருந்தனர் லாவண்யாவும், அஜய்யும். அவளோ அவனைப் பார்த்து புரியாது விழித்தாள்.
“என்ன மேன், இங்கே வந்து வண்டியை பார்க் பண்ணிட்டுத் திருத் திருன்னு முழிச்சிட்டு இருக்க?” எனத் துடுக்காய் அவள் கேள்வி கேட்க, அவளை ரசனையாய் மொய்த்தது அஜய்யின் பார்வை.
“என்ன லுக்கு மேன்” என முறைத்த படி கேட்டாள் லாவண்யா.
“அது ஒன்னும் இல்லைங்க குட்டி மேடம், இந்த இடம் உங்களுக்குப் பிடிச்சிருக்கா? பாருங்க மேடம்” என அவளின் உயரத்திற்க்கு குணிந்து அவள் காதுகளில் கிசுகிசுத்தான் அஜய்.
“என்ன இந்தக் கம்பெனில வேலை வாங்கித் தரணுமா ரெக்கமண்ட் பண்ணணுமா? அண்ணாகிட்ட சொன்னப் போதும் பண்ணிடும் கவலை படாதே. நீ வேற நல்லா கார் ஓட்டுற. அவரோட தங்கச்சிய பொறுப்பா வீடு வந்து சேர்த்திடுறன்னு உன் மேல் ஆதித் அண்ணாவுக்கு நம்பிக்கை ஜாஸ்தி தான்” என வாயாடினாள் லாவண்யா.
“நீங்க ரெக்கமெண்ட் பண்ணிணால் போதும் குட்டி மேடம்” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போது, எதார்த்தமாக அவளின் விழிகள், கருப்பு நிற மார்பில் சுவற்றில் தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்த பெயரில் அவளின் பார்வை பதி, அதிர்ந்து அவனை ஏறிட்டாள்.
“ஷாக்கை குறைங்க குட்டி மேடம்” எனச் சொன்னவன் அவளைத் தன்னுடைய அலுவலக அறைக்குக் கைப்பிடித்து அழைத்துச் சென்றான். அங்கிருந்த ஊழியர்கள் அவனுக்கு எழுந்து நின்று புன்னகைப்பதையும் பார்த்தபடி , அவனைப் பின் தொடர்ந்தாள்.
தன்னுடைய அலுவலுக அறையைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன் அவனுடைய இருக்கையில் அவளை அமரச் செய்தான். அவளோ அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள். அவனைப் பார்த்து என்ன கேட்பது என்று கூடப் பெண்ணவளுக்கு விளங்கவில்லை.
“சோ மை லவ்!!” என அவன் தொடங்கிய போது,
“வாட்?” எனக் கேட்டவள் மருண்டு விழித்தாள்.
“நீ கரெக்ட்டா தான் கேட்டிருக்க சந்தேகம் வேண்டாம், நான் லாவ்ன்னு சொல்லலை, லவ் ன்னு சொன்னேன், பிகாஸ் யூ ஆர் மை லவ்” என்றான் அதிரடியாய்.
“என்ன சொல்றீங்க அஜய்” என அவள் மரியாதையாய் அழைக்கவும்.
“நோ நே மை லவ்! யூ பீ யுவர்செல்ஃப், இந்த மரியாதை மண்ணாங்கட்டியெல்லாம் நம்ம காதலுக்கு நடுவில் தேவையில்லாத ஆணி” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
“நீ ட்ரைவர்ன்னு கூப்பிட்டாலும் வருத்தப்பட மாட்டேன், பிகாஸ் நம்ம காதல் வாகனத்தைக் காலம் முழுக்க ஓட்ட போற ட்ரைவர் நான் தானே” எனச் சொன்னதைக் கேட்டவள் இன்னும் அதிர்வில் இருந்து மீளவில்லை. அவளை அமர வைத்து விட்டு விலகியவன் அந்த அறையை அளக்க ஆரம்பித்தான்.
“யாரு மேன் நீ??” என அதிர்வுடன் கேட்டாள் லாவண்யா.
“தெட்ஸ் மை லவ்! நீ அந்த மேன்னு கூப்பிடும் போது வாவ் வாட் எ ஃபீல். என்னைக் கொல்ற மை லவ்” எனச் சிலாகித்துப் பேசியைவனைப் பார்த்தவள், திருதிருவென விழித்தாள் லாவண்யா. அவனோ மேலும் தொடர்ந்தான்.
“இதற்கு மேல் உன்கிட்ட மறைக்க விரும்பல மை லவ்! எஸ் அஜய் குரூப் கம்பெனியோட முதலாளி நான் தான்” என அவன் சொன்னான்.
“அப்போ ஏன் ட்ரைவரா??” என அவள் கேட்டாள்.
“அது லவ், மை லவ், வேற டிபார்ட்மென்ட்” என்றவன் அவளைப் பார்த்து வசீகரமாய்ச் சிரித்தான்.
“ஏன்? எதுக்காக??” எனக் கேட்டாள் லாவண்யா.
“நானும் உங்க அண்ணன் ஆதித்தும் பிஸ்னஸ் ப்ரெண்ட்ஸ், ஒரு நாள் உன்னை டான்ஸ் க்ளாஸ்ல பார்த்தேன், சும்மா சொல்லக் கூடாது மை லவ் உன்னோட நடனத்திலயே, என்னை உன் வசம் ஆக்கிட்ட, உன்னைப் பத்தி விசாரித்ததில் ஆதித் கிருஷ்ணாவோட தங்கை லாவண்யா தான் என்னோட லவ்ன்னு தெரிஞ்சதும், தாமதிக்காமல் உங்க அண்ணன் கிட்ட போய்ப் பேசினேன், அந்த ராஸ்கல் தான் இவ்வளவு குழப்பத்துக்கும் காரணம்” எனச் சிரித்தபடி சொன்னான் அஜய்.
“ஹே மேன் அவர் என்னோட அண்ணா. மைண்ட் இட்” என விரல் நீட்டி எச்சரித்தவள் அந்த இருக்கையில் இருந்து எழ முயன்றாள். அவளின் தோள் தொட்டு அவளை அமரச் செய்தான். அவளோ சாவி கொடுத்த பொம்மை போல் எதுவும் பேசாமல் அமர்ந்தாள்.
“இங்கே உன்னோட விருப்பம் இல்லாமல் எதுவும் நடக்காது மை லவ். அண்ட் எஸ் உங்க அண்ணா சொல்லி தான் உங்க வீட்டில உன்னோட ட்ரைவரா சேர்ந்தேன். உன்னை லவ் பண்ண சொல்லி டார்சர் பண்ணக் கூடாதாம். உன்னை ஸ்டாக்கிங் பண்ணக் கூடாதாம். நீ படிக்கிற பொண்ணு டிஸ்டர்ப் பண்ணக் கூடாதுன்னு கன்டிஷனெல்லாம் போட்டு தான் என்னை ட்ரைவரா அப்பாயின்ட் பண்ணினான் ஆதித். நான் உன்னோட தரிசனத்தைத் தினமும் பார்க்கிறதுக்காக ஆக்டிங் டிரைவர் போல் ஜாயின் பண்ணினேன். உனக்காக மை லவ்” என்றவனின் குரலில் அப்படி யொரு வசீகரம். அவளின் மை பூசிய விழிகள் அதிர்ந்தோடு ரசனையாகவும் பார்த்து வைத்தது.
“வாழ்நாள் முழுக்க உனக்கு ட்ரைவரா இருக்க ஆசை படுறேன் மை லவ், வில் யூ பீ மை லவ்,” என அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவளோ பதில் எதுவும் பேசாமல் ஒரு மோன நிலையில் அவனையே பார்த்திருந்தாள்.
—
சேரும் வரை போகும் இடம் தெரியாதெனில்,
போதை தரும் பேரின்பம் வேறுள்ளதா?
பாதி வரை கேட்கும் கதை முடியாதெனில்,
மீதி கதை தேடாமல் யார் செல்லுவார்??
தேடல் இந்தத் தேடலின் முடிவில் ஒன்று அவனுக்கு ஆரா சொந்தமாகுவாள், இல்லையேல் அவளைத் தேடி தேடி தொலைந்து போவான் இந்தக் காதலன். இந்தப் பயணம் அவனுக்குப் புதிது. நெஞ்மெல்லாம் கொதித்துக் கொண்டிருக்கிறது. இத்தனை நாள் அவள் ஆபத்தில் இருக்கிறாள் என்று தெரியாமல் அவளை தேட முனையாமல் இருந்தது தவறு தான் என்று உணர்ந்தான் அவன். யாரிந்த மகேஷ்? ஆராவுக்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்? எதற்காக ஆரா அவன் காரில் ஏறிச் சென்றாள். இத்தனை நாள் குரல் பதிவுகளை அனுப்பியவள். மகேஷ் என் நண்பன் என்று ஒரு முறைக் கூடச் சொல்லாதது ஏன். அவன் மனதில் பல கேள்விகள், விடை கொடுக்க வேண்டியவளே வினாவாகி போயிருந்தாள்.
தன்னுடைய காரை இயக்கி கொண்டிருந்த நண்பன் ராகவனை ஏறிட்டான் ஆதித் கிருஷ்ணா. ராகவனோ மெல்ல அந்த டூவிலரை பின் தொடர்ந்து கொண்டிருந்தான். அந்த இருசக்கர வாகனம் தன் இயக்கத்தை நிறுத்தியதற்குச் சான்றாகச் சிவப்பு விளக்கு அணைந்ததைப் பார்த்து. கறுஞ்சிறுத்தையை ஓரமாக நிறுத்தினான் ராகவன்.
“ஆதித்!! நீ இங்கேயே இரு, நான் போய்ப் பார்த்திட்டு வரேன்” எனச் சொல்வதற்கு மறுப்பாய் தலையசைத்தவன்,
“அந்த மகேஷை பிடிச்சு ரெண்டு தட்டுத் தட்டினால் உண்மையைச் சொல்லிட போறான், எதுக்காக எதோ சீக்ரெட் ஆப்ரேசன் மாதிரி ஃபாலோ பண்ணிட்டு இருக்கோம் ராகவ்” அடக்கபட்ட கோபத்துடன் வெளிப்பட்டது ஆதித் கிருஷ்ணாவின் வார்த்தைகள். கோபமாய் இறங்கியவன் அங்கு டூவீலரை ஓரமாய் நிறுத்திவிட்டு அருகில் இருந்த வீட்டிற்குள் சென்ற மகேஷை நோக்கி கோபமாய் முன்னேறினான்.
அனைத்திற்கும் மகேஷ் தான் காரணம் என்பதே ஆதித் கிருஷ்ணாவிற்கு அதீத கோபத்தை ஏற்படுத்தியது. சீறும் சிங்கம் போல் முன்னேறியவனை இடையிட்டுத் தடுத்தான் ராகவ்.
“ஹே ஆதித்! நீ இன்னும் கம்ப்ளைன்ட்டே கொடுக்கலை, நம்ம அன் அஃபிசியலா தான் விசாரிச்சிட்டு இருக்கோம். முதல்ல ஆரத்யா இவன் வீட்டில இருக்காங்களான்னு பார்ப்போம்”எனத் தடுத்தான் ராகவ். கை நரம்புகள் புடைக்கச் சினம் கொண்டு நின்றவனை ராகவால் தடுக்க முடியவில்லை.
“ஆதித் சொல்றதை கேளு இதை மிஸ் பண்ணிட்டா ஆரத்யா பத்தி நமக்கு எந்தத் தகவலும் தெரியாமல் போயிடும்” எனச் சொல்லிக்
கொண்டிருந்த போது. மாடி படிகளில் ஏறி வீட்டின் கதவை திறந்துக்கொண்டிருந்தான் மகேஷ்.
“நீ கார்ல போய் உட்காரு ஆதித்” எனச் சமாதானம் செய்து ஆதித்தை அனுப்பிய ராகவ் மாடிபடிகளில் ஏறினான். அருகில் இருந்த ஜன்னலை திறந்த ராகவ். வீட்டினுள் நோட்டமிட்டான். நிசப்தம் நிலவிய அந்த வீட்டில் அறையின் கண்ணாடியின் முன் நின்ற படி தன்னுடைய உடைகளை மாற்றிக்கொண்டிருந்தான் மகேஷ்.
பச்சை சட்டையைப் போட்டவன், தன்னுடைய கண் கண்ணாடியை மறக்காமல் எடுத்து மாட்டிக்கொண்டான். அப்போது அவனுடைய கைப்பேசிக்கு அழைப்பு வந்தது.
“ம்ம் கிளம்பிட்டேன்,வந்திட்டே இருக்கேன்” என்ற பதிலைக் கொடுத்தவன் அழைப்பை துண்டித்து விட்டு. ஒரு பெரிய ட்ராவல் பையை எடுத்தான் அதில் தன்னுடைய துணிகளை நிரப்பினான். அதோடு சேர்த்து அவனுடைய பாஸ்போர்ட்டையும் விசாவையும் எடுத்து வைத்து விட்டு அந்தப் பையை மூடினான். அதில் சில பணக் கட்டுகளும் இருந்தது அது தவறாமல் ராகவின் கண்களில் விழுந்தது. தன்னுடைய கைப்பேசியை எடுத்து மீண்டும் யாருக்கோ அழைப்பு விடுத்தான் மகேஷ்.
“நான் கிளம்பிட்டேன், கார் எப்போ வரும் என்றான்”
அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த ராகவன் அவன் வீட்டின் விளக்குளை அணைத்த போது மாடி படிகளில் இருந்து வேகமாக இறங்கி கீழே வந்தான் ராகவ், மகேஷின் கண்களில் ராகவ் தென்படவில்லை.
“ஆதித் அவன் கார்ல எங்கேயோ போகப்போறான்” எனச் சொல்லிய படி ஓட்டுநர் இருக்கையில் அமர வந்தவனைத் தடுத்த ஆதித். ஓட்டுநர் இருக்கைக்கு மாறியிருந்தான். ராகவ் சொன்னது போல் ஒரு கார் வந்தது மகேஷின் வீட்டின் வாசலில் வந்து நின்றது. அது வாடகை வாகனம் என்பது அதில் இருந்த பெயரை வைத்தே இருவருக்கும் புரிந்து போனது.
அதில் மகேஷ் ஏறி அமர்ந்த நொடியில் கார் புறப்பட, இம்முறை ஆதித் கிருஷ்ணா அந்தக் காரை இயக்கிக்கொண்டிருந்தான்.
முன்னே சென்றுக் கொண்டிருந்த வெள்ளை நிற்க காரை, கருப்பு நிற கறுஞ்சிறுத்தை விரட்ட ஆரம்பித்தது, அதன் வேகத்திற்கு ஈடாக மகேஷின் காரும் சீறிப் பாய்ந்தது.
இரு வாகனங்களும் சென்னை பாண்டிச்சேரி நோக்கிய கிழக்கு கடற்கரை சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது.
“ஆராவை அவன் பாண்டிச்சேரியில் தான் மறைத்து வைத்திருக்கிறான்” என்றான் ஆதித்.
“எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுற ஆதித்?”
“அவளைத் தேட ஆரம்பிச்சதில் இருந்து என்னோட மனசு அந்தப் பாண்டிசேரியை தான் சுத்தி சுத்தி வந்திட்டு இருந்ததிச்சு. அங்கே இருக்கும் கடல் காற்றில் கூட அவளை உணர்ந்தேன்” எனச் சொன்னவன் இறுக்கமாய் அமர்ந்திருந்தான்.
“ஆராவை உனக்கு அவ்வளவு பிடிக்குமா ஆதித்??”என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் அவனிடம் இல்லை. கழுகு தன் இரையைத் தொடர்வது போல் மகேஷின் காரை தொடர்ந்து கொண்டிருந்தான்.
“இதோ முன்னாடி போயிட்டு இருக்கானே அவன் மட்டும் என்னோட ஆராவை எதாவது செஞ்சிருந்தான், அவனோட இறுதி மூச்சு என்னோட கண்ணு முன்னாடி துடி துடிச்சு தான் போகும். அந்த அளவுக்கு என்னோட ஆரா எனக்குள்ள கலந்திருக்கா” என அமைதியாய்ச் சொன்னான்.
“நான் உன் கூட இருக்கிற வரைக்கும் அதை நான் செய்ய விடமாட்டேன்” என ராகவ் பேசிக்கொண்டிருந்த போதே விக்கியிடம் இருந்து அழைப்பு வந்தது.
காரை இயக்கிய படி அழைப்பை ஏற்றான். அவனுடைய அலைப்பேசியைக் காரோடு இணைத்து வைக்கப்பட்டிருந்ததால். காரின் ஸ்பீக்கரில் விக்கியின் குரல் எந்தச் சலனமும் இன்றித் தெளிவாகக் கேட்டது.
“சொல்லு விக்கி” என்றான் ஆதித்.
“ஆதித்! விசாரிச்சுட்டேன், அந்த மகேஷோட சொந்த ஊர் கடலூர், வயசான அப்பா அம்மா அந்த ஊர்ல தான் இருக்காங்க”
“ம்ம்ம்” என்ற பதில் ஆதித்திடம் இருந்து.
“சின்னப் பையன் தான் நம்மளை விட அஞ்சு வயசு அவனுக்குக் கம்மியா இருக்கும்”
“ஆராவொட ஏஜ் குருப்பா?”
“மே பீ” என்றான் விக்கி.
“என்ன மே பீ?? க்ளியாரா எதையும் விசாரிக்க மாட்டியா?” எனக் கோபமாய்க் கத்தினான் ஆதித்.
“நீ சொன்ன மாதிரி தான் ஆராவொட ஏஜ் தான் கன்ஃபார்ம்” எனத் துரிதமாய்ச் சொன்னான் விக்கி.
“ம்ம்ம்” மீண்டும் அவன் சொல்வதைக் கேட்டு மகேஷை பற்றிச் சொல்ல ஆரம்பித்தான்.
“அவனோட அப்பா அம்மா கடலூர்ல தான் இருக்காங்க அப்போ அப்போ போய்ப் பார்த்திட்டு வருவானாம், அவனோட நண்பர்கள் கிட்ட விசாரிச்சதில் ஆரத்யா மேல அவனுக்கு ஒன் சைடா லவ் இருந்திருக்கு. கிட்டார் க்ளாஸ்ல பழக்கம் ஆகி, ராககீதம்ல சேர்த்து விட்டதுக்கும் இது தான் காரணமாம். ஆனால் ஆரா எல்லார்க்கிட்டையும் ஃப்ரெண்ட்லியா பழகுற மாதிரி தான் அவன் கிட்டையும் பழகிருக்கான்னு ட்ரூப்ல இருந்தவங்க சொல்லியிருக்காங்க” என்றான்.
“என்னோட ஆராவை பத்தி எனக்குத் தெரியும், எவனோட சர்டிஃபிகேட்டும் தேவையில்லை. அவன் சீதையைக் கடத்தி வச்ச ராவணனா இருந்திட்டு போகட்டும். நான் என்னைக்கும் அந்த ராமனை மாதிரி என்னோட ஆராவை சந்தேகபடமாட்டேன், நான் ராமனும் இல்லை என்னவள் சீதையும் இல்லை. நான் மீராவின் கிருஷ்ணனும் அல்ல, என் ஆராவின் கிருஷ்ணன்” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.
“என்னை டென்சன் ஆக்காதே விக்கி, ஆராவை அவன் என்ன பண்ணினான் எங்கே கூட்டிட்டு போயிருக்கான் விசாரிச்சியா இல்லையா?” அதீத கோபத்துடன் கத்திய போது முன்னே சென்றுக்கொண்டிருந்த வாகனத்தின் மீது மோதியிருந்தான்.
மகேஷ் சென்றுக்கொண்டிருந்த கார் சேதமாகி போக. அந்த வாகனத்தின் ஓட்டுநர் விரைந்து இறங்கி ஆதித் கிருஷ்ணாவின் காரை நோக்கி வந்தான்.
“ஆதித் நீ இரு நான் பார்த்துகிறேன்” எனச் சொல்லிய ராகவ் வாகனத்தில் இருந்து இறங்கினான்.
“சாரி சார் எங்க மிஸ்டேக் தான்” என மன்னிப்பு வேண்டிய ராகவனைப் பாரத்து எகிறினார் அந்தக் கார் ஓட்டுநர். அதன் பின் உடைந்த காருக்கு சரி செய்ய வேண்டிய செலவை ஆதித் கொடுத்தபின் அமைதியாய் நகர்ந்தவர்.
“சார் பாவம் சார் என்னோட கஸ்டமர் அவசரமா போயிட்டு இருந்தாரு பக்கத்தில எதாவது பஸ் ஸ்டாப்பில் இறக்கி விட்டிங்கன்னா பஸ் பிடிச்சு போயிடுவாரு, கொஞ்சம் ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க” எனத் தன்மையாய் ஓட்டுநர் கேட்க, இதற்காகக் காத்திருந்தவன் போல் வேகமாய்த் தலையசைத்தான் ஆதித் கிருஷ்ணா.
மகேஷ் அந்தக் காரில் இருந்து இறங்கி ஆதித் கிருஷ்ணாவின் காரை நோக்கி நடந்து வந்தவன் பின்னிருக்கையில் அமர்ந்தான்.
“எங்கே சார் போகணும்” என ஆதித் வண்டியை இயக்கிபடி கேட்டான். அவன் அருகில் ராகவனும் அமர்ந்திருந்தான்.
“பாண்டிச்சேரி போகணும் ப்ரோ, நீங்க எங்கே போறீங்க:” என அவனுடைய முகத்தைப் பார்க்காமலே பதிலை சொல்லியிருந்தான் மகேஷ்.
“நாங்களும் அங்கே தான் போறோம் ப்ரோ, நீங்க கம்ஃபர்டபிளா உட்காருங்க ப்ரோ” எனச் சொன்னவனின் விழிகள் பளபளத்தது.
“ரொம்பத் தேங்கஸ் ப்ரோ, என்னை நினைச்சிட்டே ஒரு ஜீவன் அங்கே காத்திகிட்டு இருக்கு ப்ரோ, கொஞ்சம் சீக்கிரம் போங்க ப்ரோ” என மகேஷ் சொன்னதைக் கேட்டுக் கோபத்தைக் கட்டுபடுத்திய படி வாகனத்தை இயக்கினான் ஆதித். அவனை கொன்று விடும் அளவிற்கு கோபம் இருந்தாலும். ஆராவை அவன் எங்கு மறைத்து வைத்திருக்கிறான் என தெரிந்துக்கொள்ளும் பொருட்டு அமைதி காத்தான் ஆதித்.
மகேஷோ வழியைச் சொன்னபடி வந்தான், அதைக் கேட்டு இறுதியாய் வந்து நின்ற இடத்தைப் பார்த்து அதிர்ந்து போனான் ஆதித்.
ஆராவின் தாய் தந்தை வாழ்ந்த வீடு எனச் சொல்லி அவன் காட்டிய அந்த வீட்டின் முன் தான் வந்து நின்றிருந்தது ஆதித் கிருஷ்ணாவின் வாகனம். அந்தப் பாழடைந்த வீடு இப்போது புதுப்பிக்கப் பட்டிருந்தது.
“இந்த வீடா ப்ரோ??” எனக் கேள்வி கேட்டான் ஆதித்.
“ஆமா ப்ரோ” என விரைந்து இறங்கிய மகேஷ், நன்றி சொல்ல ஓட்டுநர் இருக்கையை நோக்கி விரைந்தவன் நன்றி சொல்ல குணிந்த போது ஆதித் கிருஷ்ணாவின் முகத்தைப் பார்த்து அதிர்ந்ததிலே புரிந்து போனது ஆதித்திற்கு, தன்னைப் பற்றி இவன் தெரிந்து வைத்திருக்கிறான் என்று,
“ஆரா எங்கேடா?” நேராக விசயத்திற்கே வந்தான் ஆதித் கிருஷ்ணா. காரை விட்டு இறங்கியவன் அவன் சட்டையின் காலரை பிடித்து உலுக்கினான்.
“சார் அங்கே” என வீட்டை நோக்கி கையைக் காட்டினான் மகேஷ். அவன் முகம் பயத்தில் வெளிரி போயிருந்தது. அவன் சொன்னதைக் கேட்ட ராகவ் வீட்டின் கதவை தட்டினான்.
கதவை திறந்து கொண்டு வெளியே வந்தாள் அவள்.
“வந்துட்டியா? எனக்காக வந்துட்டியா” என அழுது அழுது வீங்கிய கன்னங்களுடன். பொழிவிழந்த முகத்துடன். தடதடவென இறங்கி வந்தாள் கிருஷ்ணாவின் ஆரத்யா.
“ஸ்மைலி!!” மென்மையாய் உச்சரித்தது அவனின் செவ்வதரங்கள். அவளைப் பார்த்த நொடியில் மகேஷின் சட்டை காலரை விடுவித்தவன்.
“ஆரா!!” என உரக்க கத்திய அந்த நொடியில் மிரண்டு விழித்தவள் அவனை யாரோ போல் கடந்து சென்று மகேஷை கட்டிபிடித்துக் கதறி அழுதாள்.
“நான் ரொம்பப் பயந்துட்டேன் மஹி” என்றாள் அவள்.
காதல் பரிபாஷை பேசி விழிகளிலே, காதலை எனக்குள் புகுத்தியவள். யாரெனத் தெரியாத ஒருவனைக் கட்டிக் கொண்டு கதறி அழுகிறாள். நான் யாரோ ஆகி போனேன். ஆறுதல் தேட கூட நான் தகுதியற்ற காதலனா? என் காதல் அந்தக் கடல் காற்றில் மெல்ல கரைந்து பறந்து போவதை கண்கொண்டு காண இயலாமல் தவிக்கிறேன் என்னுயிரே!!
அலைந்து உன்னை
அடைவது வாழ்வில் சாத்தியமா??
நான் நடந்துகொண்டே எரிவது
உனக்கு சம்மதமா??
அடி உனக்கு
மனதிலே என் நினைப்பு
இருக்குமா??
வாழ்ந்த
வாழ்வெனக்கும்
வாழும் நாட்களுக்கும்
பொருளே நீதான் உயிரே
வாராய்!!!

