Loading

அத்தியாயம் 27

 

கத்திமுனையில் கடத்தபட்டு, நண்பன் என நம்பி ஏமாந்து போனவள் இப்போது மயங்கி கிடந்தாள். அவளைப் பார்த்தபடி எதிரில் அமர்ந்திருந்தான் மகேஷ். அவளை மட்டும் அவன் கடத்திக்கொண்டு வரவில்லை. அவள் ஆசையுடன் வளர்த்துக் கொண்டிருந்த வளர்ப்பு நாயான ஸ்கூபியையும். வீட்டில் இருந்த ரோஜா பூச்செடியையும் எடுத்து வைத்திருந்தான். அந்தப் பாழடைந்த வீட்டில் இருள் சூழ்ந்திருந்தது. 

 

வௌவாலின் கீச்சல்கள் அவள் செவிகளை எட்ட மெல்ல விழியைத் திறந்தாள் ஆரா. எதிரில் கத்தியுடன் அமர்ந்திருப்பவனைப் பார்த்து மிரண்டு போனவள். இரண்டடி பின்னே நகர்ந்து அமர்ந்தாள்.

 

“பயப்படாதே ஆரா! நான் உன்னை எதுவும் பண்ண மாட்டேன்” என்றான் அவன். அவன் மேல் துளியும் நம்பிக்கை இல்லதவளாய் அவனைக் கோபமாய்ப் பார்த்தாள் ஆரா. அவன் அமர்ந்திருந்த மரநாற்காலியில் ஸ்கூபியை கட்டி வைத்திருந்தான்.

 

“என்ன தான் கொல்லப் போற? எதுக்காக என்னோட ஸ்கூபியை தூக்கிட்டு வந்திருக்க ப்ளீஸ் அவளை விட்டுரு” கெஞ்சலாய் கேட்டாள் ஆரா.

 

“ஆரா! நான் சொல்றதை முதலில் கேளு”என்றான் அவன்.

 

“நீ சொல்றதைக் கேட்டகணும்னா, நான் க்ரிஷ்க்கிட்ட போன் பண்ணி பேசணும் அதுக்கு உனக்கு சம்மதமா?” எனத் தெளிவாய் கேட்டாள் ஆரா.

 

“ஹே ஆரா! நீ ரொம்ப க்ளவர்ன்னு தெரியும். அன்னைக்கி உன்னை இம்ப்ரெஸ் பண்ணுறதுக்காக ஆளுங்களை வச்சி உன்னைத் துரத்தின போது. விசில் ஊதிட்டே போனீயே, அப்போவே உன்னோட ப்ரெஸன்ஸ் ஆஃப் மைண்ட் எப்படி வேலை செஞ்சதுன்னு பார்த்திட்டு தான் இருந்தேன். நான் உன்னை வந்து காப்பாத்துற மாதிரி நடிச்சு உன் மனசுல ஒரு குட்டி இடத்தைப் பிடிச்சிடலாம்ன்னு போட்ட ப்ளானை அந்த ஆதித் கிருஷ்ணா ஒட்டு மொத்தமா கலைச்சுவிட்டுட்டான். இந்த முறை அப்படி நடக்க விட மாட்டேன் ஆரா” எனச் சொல்லி விசமமாய்ச் சிரித்தான் மகேஷ்.

 

“வாட்? அப்போ நீ அங்கே தான் இருந்தீயா?”

 

“என்ன ஷாக் ஆகுற ஆரா? அந்தப் பவுன்சர்ஸை ஏற்பாடு செய்ததே நான் தான்” அவன் பெருமைபட்டுக்கொண்டான்.

 

“ச்சீ!! தூ மனுசனா நீ? நான் உன்னோட ஃப்ரெண்ட் தானே மகேஷ்”

 

“அது உனக்கு ஆரா! நீ எப்போதும் எனக்குக் காதலி தான்.” என்றவன்,

 

“தோழியா என் காதலியா யாரடி என் பெண்ணே” என அவன் பாடியதைக் கேட்டு அறுவறுத்துப் போனாள் ஆரா.

 

“என்ன பேசிட்டு இருக்க மகேஷ், கேட்கவே அசிங்கமா இருக்கு, நீ எனக்கு எவ்வளவு ஹெல்ப் பண்ணியிருக்க, ஆனால் ஆனால்” என அவள் வாரத்தைகள் தேடிய போது அவளை நெருங்கியவன்.

 

“ஆரா!! இவ்வளவு அழகா இருக்க, அறிவா பேசுற ஆனால் ஒரு செகண்ட் கூட உனக்குத் தோணலையா? இவனுக்குள்ள எதோ இருக்குறதால நமக்கு இவ்வளவு தூரம் ஹெல்ப் பண்ணுறான்னு தோணலையா? என்னோட காதலை நீ ஒரு தடவ கூட நீ உணரலையா ஆரா?” அவளின் கன்னம் தடவி அவன் கேட்ட போது. பட்டென அவன் கரங்களைத் தட்டி விட்டவள்,

 

“எது பேசினாலும் விலகி இருந்து பேசு மகேஷ்” விரல் நீட்டி அவனை எச்சரித்தாள்.

 

“சாரி! சாரி! உன் அனுமதி இல்லாமல் உன்னைத் தொட்டிருக்கக் கூடாது தான்” என விலகியவன் மீண்டும் அந்த மர நாற்காலியில் போய் அமர்ந்துக்கொண்டான்.

 

“இதோ பாரு மகேஷ்! நீ அப்படிப் பழகியிருக்கலாம், ஆனால் என்னோட மனசில க்ரிஷ் தான் இருக்கான்”

 

“உன்னோட கனவை பத்தி யோசிக்கதவன் உன்னோட காதலனா?” என நக்கல் தொனிக்கக் கேட்டான் மகேஷ்.

 

“அவன் என்னோட கனவை பத்தி யோசிக்கமால் போகட்டும், ஆனால் இப்படிக் கத்தியை காட்டி மிரட்டி, காதலிக்கிறவனை மறந்து என்ன வந்து காதலின்னு சொல்லுற அளவுக்குக் கேவலமானவன் இல்லை என்னோட ஆதித்.” அவள் சினம் கொண்டு பேசினாள்.

 

“ஆமா! ஆமா! செத்து போன உங்க அப்பா அம்மா இந்தக் கடல்ல தான் குதிச்சு செத்தாங்கன்னு அவன் அள்ளிவிட்ட கதையில் இம்ப்ரெஸ் ஆகி தானே அவனைக் காதலிச்ச?” எனத் திமிராய் கேட்டான்.

 

“கதையா? என்னோட க்ரிஷ் என்கிட்ட பொய்யே சொன்னதில்லை” எனத் தன் காதலின் மேல் இருக்கும் நம்பிக்கையில் பேசிக்கொண்டிருந்தாள் ஆரத்யா.

 

“அவன் உன்னோட அப்பா அம்மா பத்தி சொன்னதெல்லாமே பொய் ஆரா”

 

“பைத்தியம் மாதிரி உளராதே மகேஷ், நீ இப்படி என்னை கடத்தி வச்சிருக்கன்னு, க்ரிஷ்க்கு மட்டும் தெரிஞ்சது அவ்வளவு தான்” என அவனை மிரட்டினாள்.

 

“ஹா ஹா! அதெல்லாம் ஒன்னும் நடக்காது ஆரா, அவனுக்கு அவனோட வேலை தான் முக்கியம். இந்தப் பதினைஞ்சு நாள் மீட்டிங் அதில வர்ற கோடிக் கணக்கான பணம். அது மட்டும் தான் முக்கியம். உன்னோட கனவும் அவனுக்கு முக்கியம் இல்லை, உன்னோட காதலும் முக்கியம் இல்லை”

 

“ஜெஸ்ட் ஷட் அப் மகேஷ், என்னோட க்ரிஷை பத்தி பேச உனக்கு எந்தத் தகுதியும் இல்லை. இப்படி என்னை நீ கடத்திட்டு வந்துட்டால் உன் மேல் எனக்குக் காதல் வரும்ன்றது உன்னோட முட்டாள் தனம். என்னோட கனவை பத்தி ஆதித் யோசிக்காமலே இருக்கட்டும் அது எங்களோட பர்சனல். எங்களோட பிரச்சனை. அதில் உனக்கு எங்க டா வலிக்குது? மரியாதையா என்னை விட்டுரு அது உனக்குத் தான் நல்லது” என மீண்டும் மீண்டும் அவள் எச்சரித்த போதும் அவன் கேட்ட பாடில்லை.

 

“ஆரா! நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு என்ன முடிவு எடுக்கணுமோ எடுத்துக்கோ. நான் உன்னே தடுக்க மாட்டேன்” என்றவன் எழுந்து தன் பேக் பேக்கில் இருந்து சட்டம் போடப்பட்ட புகைப்படம் ஒன்றை எடுத்தான். அதை எடுத்து அவள் கண்ணில் விழும்படி காட்டினான்.

 

எண்பதுகளில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில். இருந்த பெண் முகத்தில் அழகான புன்னகை தலை நிறைந்து தோளாடு உரசி நின்றது மல்லிகை பூ. நெற்றியில் பொட்டு எனச் சிரித்த முகமாய் நின்றிருந்த பெண்ணின் அருகே அடர்ந்த மீசையுடன் நின்றிருந்தவரின் முகத்திலும் புன்னைகை குடிக்கொண்டிருந்தது.

 

“இவங்க தான் உங்க அம்மா அப்பா” என்றான் அவன். ஆராவுக்கு எது தெரியக் கூடாது என்று ஆதித் கிருஷ்ணா மறைத்தானோ. அந்த உண்மையை ஆராவிடம் சொல்லி ஆதித்திடம் இருந்து பிரிக்கத் தீட்டிய திட்டத்தைத் தான் தற்போது அரங்கேற்றிக் கொண்டிருந்தான்.

 

இமைக்காமல் பார்த்தாள் பெண். அந்தப் புகைப்படத்தில் இருந்த பெண்ணின் முகம் இப்போது இருக்கும் ஆராவின் முகத்தோடு எண்பது சதவீதம் ஒத்துப் போனது. தன் முகத்தைத் தொட்டு பார்த்தபடி,

 

“என்னை மாதிரியே இருக்காங்க” என அவனை நெருங்கியவள் அந்தப் புகைப்படத்தை ஆழ்ந்து உற்று நோக்கினாள். அது அவகளின் தாயாக இருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது என்பதை மனதில் நினைத்துக்கொண்டவள். மகேஷிடம் எதுவும் காட்டிக்கொள்ளவில்லை.

 

“என்னோட போட்டோ வச்சி சிஜி பண்ணி ரெடி பண்ணிருக்கச் சரி தானே மகேஷ்” என அவள் நம்பாததைப் போல் கேட்டாள்.

 

“நீ என்னை நம்ப மாட்டன்னு தெரியும் ஆரா”

 

“நீ நம்புற மாதிரி எந்தக் காரியமும் பண்ணலையே மகேஷ். நம்ம ஃப்ரெண்ட்ஷிப்க்குத் துரோகம் பண்ணி. இது எந்த இடம்னே தெரியலை கத்தியை காட்டி மிரட்டி கடத்திட்டு வந்த உன்னை நம்பச் சொல்றீயா மகேஷ்” என அவள் கோபமாய்க் கத்திக் கொண்டிருந்தாள்.

 

“ஆரா! இவங்க தான் உன்னோட அப்பா அம்மா, இவங்க போட்டோல இப்படிச் சிரிச்சிட்டு இருக்கவங்க தான், உன்னை கொலை பண்ண ட்ரை பண்ணினாங்கன்னு சொன்னால் நீ நம்பமாட்ட, ஆனால் அது தான் உண்மை. மாந்தீரிகத்துக்காக உன்னை உயிர்பலி கொடுக்க ட்ரை பண்ணினவங்க தான் இவங்க” என்றான்.

 

“பொய் சொல்லாதே மகேஷ்” என்றாள் அவள்.

 

“நிஜமாதான் ஆரா. ப்ளாக் மேஜிக்கை நம்பி, உன்னை அவங்க வணங்குற தெய்வத்துக்கு நரபலி கொடுக்க ட்ரை பண்ணிருக்காங்க, ஏன்னா நீ தான் அந்த வீட்டோட மூத்த மகள்.” என்றான்.

 

“உனக்கு யார் இதெல்லாம் சொன்னது?”

 

“இந்த ஊர் மக்கள் தான் சொன்னாங்க, இந்த வீட்டை பேய் வீடுன்னு சொல்லுறாங்க, ஆனால் நான் அதை நம்பலை, இந்த வீட்டை கம்மியான பணம் கொடுத்து வாங்கிட்டேன். நம்ம கல்யாணத்துக்கு அப்பறம் இங்கே தான் நம்ம வாழப் போறோம்” என அவன் பேசியதைக்கேட்டுக் கோபம் கொண்டு கத்தினாள்.

 

“நோ! நீ சொல்றது எல்லாமே பொய், அப்பறம் நம்ம கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்வோம்ன்னு கனவெல்லாம் காணாதே மகேஷ்” என அவள் விரல் நீட்டி எச்சரித்த போது, மஹதியிடம் இருந்து மகேஷூக்கு அழைப்பு வந்தது.

 

“ஆரா ப்ளீஸ், கொஞ்ச நேரம் பேசாமல் இரு” எனக் கெஞ்சினான் அவன்.

 

“முடியாது, முதலில் உன்னோட போனை தா. நான் க்ரிஷ் கிட்ட பேசணும்” என அவளும் அதே கோபத்தில் கேட்டாள்.

 

“ஆரா! புரிஞ்சுக்கோ இப்ப மட்டும் நான் போன் எடுக்கலைன்னா நம்ம  இரண்டு பேரோட உயிருக்கும் ஆபத்து தான்.” எனப் பதறிய படி சொன்னவன்.

 

“சாரி ஆரா! என்னை தப்பா எடுத்துக்காதே. எல்லாமே நம்ம வாழ்றதுக்காகத் தான் பண்ணுறேன்” எனச் சொன்னவன் விரைந்து அவளை நெருங்கி அவளின் கைகளைப் பின்னால் கட்டியவன். மரநாற்காலியோடு அவளைச் சேர்த்துக் கட்டினான். வாயில் டேப் வைத்து ஒட்டிய பின் நீண்ட பெருமுச்சொன்றை விட்ட போது. நான்காவது முறையாக அவனின் அலைப்பேசி இசைந்தது. மஹதி தான் அப்போதும் அழைத்திருந்தாள்.

 

“என்ன பணத்தை வாங்கிட்டு ஏமாத்திட்டு ஓடலாம்ன்னு நினைக்கிறீயா?”கோபமாய் ஒலித்தது மஹதியின் குரல்.

 

“இல்லை மேடம், சாரி மேடம்” என மழுப்பலாய்ப் பேசினான்.

 

“ஆராவைக் கொலை பண்ணுறதுக்காகத் தானே உனக்குப் பணம் கொடுத்தேன்”

 

“ஆமாம் மேடம், ஆராவை கடத்தி பாண்டிச்சேரிக்குக் கொண்டு வந்துட்டேன்” என அவன் சொன்ன போது தான் பாண்டிச்சேரியில். தன் தாய் தந்தை வீட்டை ஆதித் ஆராவிடம் காட்டிய நினைவலைகள் ஆராவின் மனதில் வந்து போக. அந்தக் கட்டிடத்தைப் பார்த்தாள். அதே கட்டிடம் தான், இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரிந்தது என அவள் யோசனையில் இருந்த போதே.

 

“முடிச்சுடுவேன் மேடம்” என அவன் பேசிக்கொண்டிருந்ததைக் கவனித்தாள் ஆரா. அதே சமயம் ஆராவை அவன் அலைப்பேசியில் புகைப்படம் எடுத்து மஹதிக்கு அனுப்பியவன்.

 

“இப்போ நம்புறீங்களா மேடம்” எனக் கேட்ட போது, மஹதி சந்தோசத்தில் மிதந்தாள்.தன் தந்தையால் முடியாததைத் தான் சாதித்து விட்டதாகத் தனக்குத் தானே பெருமை பட்டுக்கொண்டாள்.

 

“வெல் டன் மகேஷ், அவளை முடிச்சிட்டு எனக்குப் போன் பண்ணு. அவளோட அஸ்தியை பாண்டிச்சேரி கடல்ல கரைக்க நானே வரேன்” என்றாள் மஹதி.

 

“இல்லை மேடம் நீங்க ரிலக்ஸா இருங்க நான் பார்த்துக்கிறேன்” என அழைப்பை துண்டித்தவன் ஆராவை தான் பார்த்தான்.

 

“ஆரா நான் சொல்றதை கொஞ்சம் கேளு, நீ இப்போ வெளியே இருந்த அந்த மஹதியால உனக்கு ஆபத்து தான். ஆதித் கிருஷ்ணா வருவதற்குள்ள உன்னைக் கொல்றது தான் அவளோட ப்ளான். நான் இல்லைனாலும் வேற யாரையாவது வச்சு இந்த ப்ளானை செஞ்சிடுவா” எனச் சொல்வதைக் கேட்டு ஆராவின் விழிகள் விரிந்தது.

 

“நான் சொல்றதை கேட்கிறதை தவிர உனக்கு வேற வழியில்லை ஆரா” எனச் சொன்னவன் மர்மமாய்ச் சிரித்தான்.

 

**************

அன்று மாலை ஐந்து மணி இருக்கும். கடற்கரையில் அமர்ந்து எதையோ யோசித்துக்கொண்டிருந்தான் மகேஷ். எல்லாம் அவன் நினைத்தபடி நடந்துக்கொண்டிருப்பதில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி.

 

அதே சமயம், கடற்கரை ஓரத்தில் அந்த உயர் ரகக் கார் ஒன்று வந்து நின்றது. எப்போதும் புடவையில் வரும் மஹதி இன்று சுடிதாரில் வந்திருந்தாள். காரை பார்த்துவுடன் அவள் தான் என அடையாளம் கண்டுக்கொண்டான் மகேஷ்.

 

“மேடம்!!” எனப் பல் இளித்தான்,

 

“சொன்ன மாதிரியே செஞ்சிட்ட போல” முகத்தில் சிரிப்புடன் கேட்டாள். அவனோ கடலை கைநீட்டி கண்பித்தான்.

 

“போட்டை வாடகைக்கு எடுத்திட்டு போய் அங்கே போட்டுட்டேன் மேடம்” என்றான்.

 

“நிஜமாதான் சொல்றீயா? ஆரா இனிமேல் ஆதித் லைஃப்ல வரமாட்டாளா?”

 

“சத்தியமா சொல்றேன் மேடம், கல்லை கட்டி தூக்கி போட்டு வந்திருக்கேன் யாரலையும் கண்டுபிடிக்க முடியாது” என அவன் சொல்லிக்கொண்டிருந்த போதே, அவன் கையில் அந்தப் பணப்பெட்டியை கொடுத்தாள்.

 

“நீ எனக்காகச் செஞ்ச சம்பவத்துக்கு, இனி நானும் ஆதித்தும் சந்தோசமா இருப்போம். அவ ஓடி போயிட்ட மாதிரி லெட்டர் எழுதி வச்சிட்டா என்னோட வேலை முடிஞ்சது” எனத் தன்னோட திட்டத்தை அவனிடம் சொன்னவள் புன்னகைத்தாள்.

 

“சந்தோசமா இருங்க மேடம்” என்றவன், பணப்பெட்டியை வாங்கிக்கொண்டான்.

 

“சரி அப்போ நான் புறப்படுறேன், இதைப் பார்ட்டி வச்சு கொண்டாடணும்” எனச் சந்தோசமாய் அவள் அங்கிருந்து நகர்ந்தாள். அவனோ வஞ்சகமாய்ச் சிரித்தான். அவளோ வந்த வழியே சென்று காரில் ஏறியவுடன். ட்ரைவர் காரை இயக்கியவுடன் கார் புறப்பட்டது. 

 

அருகில் இருந்த படகில் மறைந்துக்கொண்டு அனைத்தையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தாள் ஆரா. மஹதி பேசுவதையும் கேட்டுக்கொண்டு தான் இருந்தாள்.

 

“இந்தப் பணக்கார பசங்களே இப்படித் தான் ஆரா. காதலிக்க ஊர் சுத்துறதுக்குன்னு ஒரு பொண்ணைப் பார்ப்பாங்க ஆனால் கல்யாணம்னு வந்திட்டால் அவங்க வீட்டில சொல்லுற பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கத் தயார் ஆகிடுவாங்க, அப்படித் தான் இப்போ ஆதித் கிருஷ்ணாவும். இந்த மஹதியை கல்யாணம் பண்ணிக்கத் தயார் ஆகிட்டான். அதான் நீ உயிரோட இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறான்” என அவன் சொல்வதை நம்புவதைப் போல் தலையசைத்துக் கேட்டுக்கொண்டிருந்தாள் ஆரா.

 

“சரி மகேஷ் நான் முதலில் நார்வே போயிட்டு வந்திடுறேன். அதுக்கு அப்பறம் மத்ததைப் பார்த்துக்கலாம்” என்றாள் ஆரா.

 

“நீ போயிட்டு வந்தததும் நமக்குக் கல்யாணம் தான்” என்றான் வெட்கத்தில், அவளுக்கோ அவனை வெட்டி போட்டுவிடலாம் என்று தோன்றியது. ஆனால் அவனிடம் இருந்து அமைதியாகக் காரியம் சாதிக்க வேண்டும் என முடிவெடுத்தவள்.

 

“சரி பார்க்கலாம் மகேஷ், நான் ஸ்கூபியை போய் யார்கிட்டையாவது கொடுத்திட்டு வந்திடுறேன்” என்றாள்.

 

“ஏய் ஆரா, நீ எங்கேயும் போக வேண்டாம், நீ உயிரோட இருக்கிறது. அந்த ஆதித் கிருஷ்ணாவுக்குத் தெரிந்தால். அந்த மஹதி என்னைத் தேடி வந்திடுவா. எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன்” என்றான் அவன். அவளோ சற்று சுதாரித்துக்கொண்டாள்.

 

“முகத்தை மறைச்சிட்டு தான் போறேன்” என அவனிடம் சொல்லி நம்ப வைத்தாள்.

 

“நீ எங்கே போனாலும் நானும் வருவேன்” என அவனும் அவளுடன் இணைந்துக்கொண்டான். அவளின் நாயான ஸ்கூபியும், சிவப்பு நிற பெட்டியையும், அதோடு நிறம் மாறும் ரோஜா செடியையும் எடுத்துக்கொண்டு சுதாவை தான் பார்க்க சென்றாள் ஆரா. ஆனால் அப்போது முக முடிக் கொள்ளைகாரி போல் முகத்தை மறைத்து தான் சென்றாள். அவள் நார்வே செல்ல இருப்பதையும் சுதாவிடம் சொன்னவள். ஆதித்திடம் சொல்லவேண்டாம் என்பதையும் கேட்டுக்கொண்டாள். ஆராவின் இந்த அன்பான கட்டளையால் தான் அவள் யாரிடமும் இதைப்பற்றி வாய் திறக்கவில்லை.

 

ஆரா நார்வே செல்வதை அறிந்த சுதா. அவளை வழியனுப்ப தானும் வருவதாகச் சொன்னாள். மகேஷூம் வேறு வழியின்றிச் சம்மதித்திருந்தான். மஹதி அவனைக் காண்காணிக்க வாய்ப்பிருக்கிறது என்ற பயத்தில் அன்று அவளைச் சென்னை விமான நிலைய நுழைவாயிலிலே விட்டுவிட்டுச் சென்றிருந்தான் மகேஷ். அவனிடம் இருந்து எப்படியோ விடுதலை கிடைத்தது என நினைத்த ஆராவோ அவனின் இந்த அரக்க பிடியில் இருந்து தப்பிக்க, உடனிருந்த சுதாவிடம்.

 

“சுதா போன் கூடேன்” என அவசரமாக வாங்கினாள். ஆராவின் அலைப்பேசி மகேஷிடம் இருந்ததால் அவளால் ஆதித் கிருஷ்ணாவை தொடர்பு கொள்ள முடியவில்லை.

 

பத்துக்கு மேற்பட்ட முறை ஆதித் கிருஷ்ணாவிற்கு அழைத்திருப்பாள் ஆனால் அவனுடைய அலைப்பேசி அணைத்து வைக்கபட்டிருந்ததே அவன் டெல்லியில் இருந்து புறப்பட்டுவிட்டான் ஃப்ளைட்டில் இருப்பதால் அலைப்பேசியை அணைத்து வைத்திருக்கிறான் என்பதை ஆரா உணர்ந்த அதே சமயம் மகேஷிடம் இருந்து அழைப்பு வந்தது.

 

“யாரு ஆரா?” என அலைப்பேசியை வாங்கிய சுதா.

 

“சொல்லு மகேஷ்” என்றாள்.

 

“ஆராவை கூட்டிட்டு வெளிய வா சுதா. நார்வே போக அவசியம் இல்லை ப்ரோக்ராம் கேன்சல்” எனப் படபடப்புடன் சொன்னான் மகேஷ்.

 

“ஏய் ஆரா! ப்ரோக்கிராம் கேன்சலாம், வா போகலாம்” எனச் சுதா சொல்ல வேறு வழியின்றி அவளைத் தொடர்ந்து சென்றாள் ஆரா. வெளியில் காரை வைத்து காத்துக்கொண்டிருந்தவன் முகம் பயத்தில் வெளிரிப் போய் இருந்தது. இருவரும் ஏறியவுடன் கார் புறப்பட்டது.

 

“சுதா! எங்க இரண்டு பேரையும் ராககீதத்தில் இருந்து வர சொன்னாங்க, நீ உன்னை எங்க இறக்கி விடணும்னு சொல்லு விட்டுட்டு போறேன்” என்றான் வாகனத்தை இயக்கியபடி மகேஷ்.

 

“இல்லை சுதாவும் நம்ம கூட வரட்டும்” என ஆரா சொன்னாள்.

 

“சுதா போகாதேடி” எனக் கெஞ்சலாய் ஒலித்தது ஆராவின் குரல்.

 

“ஆரா, நான் சென்னை வந்ததுக்கு விக்கியை பார்த்துட்டு கிளம்புறேன் இன்னொரு நாள் மீட் பண்ணலாம்” என வாகனத்தில் இருந்து இறங்கி கொண்டாள் அவள்.

 

அவள் இறங்கிய பின் வாகனம் வேகமாய்ச் சீறிப் பாய்ந்தது.

 

“மெதுவா போ மகேஷ்” என்றாள் ஆரா.

 

“அந்த ஆதித் நீ உயிரோட இருக்கிறதை கண்டுபிடிச்சுட்டான்” எனப் 

பதற்றத்தில் சொல்லி மேலும் சீறிப் பாய்ந்தான்.

 

“உனக்கு எப்படித் தெரியும் மகேஷ்”

 

“அதெல்லாம் அப்படித் தான் எனக்குத் தெரியும்” அவன் அலட்சியமாய்ப் பதில் சொன்னான்.

 

“இப்போ க்ரிஷ் எங்கே இருக்கான்னு தெரியுமா?”

 

“டெல்லில தான் இருக்கான். அங்கே இருந்துகிட்டே எவ்வளவு வேலை பார்க்கிறான் பாரு”

 

“போதும் உன்னோட நாடகத்தை இதோட நிறுத்திக்கோ” என துணிச்சலாய் சொன்னவள். கோபத்தில் அமர்ந்திருந்த இருக்கையின் முன், காரில் இணைந்திருந்த பெட்டியை ஓங்கி தட்டினாள். மகேஷின் கத்தி அவள் மடியில் வந்து விழுந்தது. கையில் எடுத்தவளின் பார்வை கத்தியை விட கூர்மையாக இருந்தது. சற்றும் யோசிக்காமல் அந்தக் கத்தியை அவன் கழுத்தில் வைத்தாள்.

 

“இப்போ நான் சொல்றதை நீ கேட்கணும் மகேஷ்” என்றவள் விஷமமாய் சிரிக்க,

 

“ஆரா ப்ளீஸ் நோ” எனக் கத்தியிருந்தான் மகேஷ்.

 

 

Click on a star to rate it!

Rating 1 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்