
அத்தியாயம் – 21
“என்ன கார்த்திக், ஏதாச்சும் சொன்னானுங்களா” என்றான் ரிஷி, நேற்று அவனை தாக்க துரத்திக் கொண்டு வந்த ஆறுபேரும் லாக்கப்பில் அவனது முன்னிலையில் பம்மிக் கொண்டு அமர்ந்திருந்தனர், அவர்களை பார்வையிட்டவாறே தான் காரத்திக்கிடம் வினவினான் மிடுக்கான தோரணையில்….
“எஸ் சார்,.. அமைச்சர் சந்தன பெருமாளோட ஆளுங்க தான் இவனுங்க ஆறு பேறும், அவர் சொல்லி தான் உங்களை போட்டுதள்ள வந்திருக்கானுங்க, ஸ்டேட்மெண்ட் எழுதி வாங்கியாச்சு சார்” என்றான் கார்த்திக்,…
“எக்ஸ்பெக்ட் பண்ணேன்” என்று தாடையை தடவி கூறியவன்,… “சரி ஓகே, இவனுங்களை விட்டுடு” என்றான்,…
கொஞ்சம் அதிர்ந்தவன்,… “என்ன சார் விட்டுடுன்னு சொல்லிட்டீங்க, இவனுங்க உங்களையே கொலை பண்ண வந்திருக்காங்க, அவ்வளவு அசால்டா இவங்கள விடுறது நல்லதில்லைன்னு தோணுது சார்” என்றான் கார்த்திக்,…
“அந்த அமைச்சர் சொல்லி தான் இவனுங்க என்னை அட்டாக் பண்ண
வந்திருக்காங்கன்னு தெரிஞ்சு போச்சு, இனியும் இவங்கள வச்சு நாம என்ன பண்ணுறது, அனுப்பி விடு” என்றவன் அவர்களை ஒரு பார்வை பார்த்து விட்டு தனதறை நோக்கி நடந்து விட்டான்,….
சற்று நிமிடத்திற்கு பிறகு,…
“சார் நீங்க சொன்ன மாதிரி அவனுங்களை அனுப்பிட்டேன், ஆனாலும் உள்ளுக்குள்ள உறுத்திக்கிட்டே இருக்கு சார் அவனுங்களை விட்டிருக்க கூடாதோனு தோணுது” என்றான் ரிஷியின் முன்பு நின்ற கார்த்திக்,…
“ஏன்” ரிஷி கார்த்திகை அளவிட்டபடியே வினவ,… “என்ன சார் ஏன்னு கேட்கிறீங்க, மறுபடியும் அவனுங்க உங்களை அட்டாக் பண்ண மாட்டாங்கனு என்ன நிச்சயம்” என்றான்,…
“என்கிட்ட வாங்கிய உதைக்கு மறுபடியும் என்கிட்ட நெருங்க கூட முயற்சி பண்ண மாட்டாங்க” என்றவன்,… “அமைச்சர்க்கு இருக்க பதவி பலத்துக்கு ஆயிரம் அடியாளுங்களை கூட விலைக்கு வாங்க முடியும், இவனுங்க எங்கிட்ட வாங்கி கட்டிகிட்டதால மறுபடியும் இவனுங்களைகேயே ஏவி விட மாட்டாரு, வேறு ஏதாச்சும் பிளான் பண்ணுவாரு” என்றான்,….
“சார் அப்டினா உங்க உயிருக்கு ஆபத்து, கமிஷனர் கிட்ட சொல்லி உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சொல்லலாமா” என்றான் அவன் மீது அதீத அக்கறை இருப்பவன் போல,…
புருவங்கள் உயர அவனை ஏற இறங்க பார்த்தவன்,…. “பாதுகாப்பு எனக்கு தேவை இல்லை, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும், அதையும் விட அதான் நீ இருக்கியே கார்த்தி, எந்த நேரமும் என்கூடவே இருக்க, எனக்கு ஒன்னுன்னா நீ உதவிக்கு வரமாட்டியா?”என்றான் கூரிய விழிகளுடன்…..
“கண்டிப்பா சார், என் உயிரை கொடுத்தாவது நான் உங்களை பாதுகாப்பேன்” அவன் விறைப்பாக நின்று கூற,… “குட், தேங்க்ஸ் கார்த்தி” என்றவனின் பார்வை சில நிமிடங்கள் அவனை தான் அலசி ஆராய்ந்தது….
*********
“எப்படி? எப்படி? எப்படி அவன் தப்பிச்சான், யூஸ்லஸ் ஃபெல்லோஸ், ஒருத்தனை போட முடியாம, அவன் கிட்ட அடி வாங்கி ஸ்டேஷன்ல போய் உட்கார்ந்துட்டு இருக்காணுங்க, இவனுங்கள்லாம் ஒரு ஆளுன்னு இறக்கி விட்டிருக்க” தன் முன்னே நின்ற காரியதரசனை வசை பாடி கொண்டிருந்தார் சந்தனபெருமாள்,…
“எனக்கும் புரியல சார், பெரிய பெரிய வேலைகளை எல்லாம் அசால்டா செய்ற ஆளுங்க தான், இப்போ என்னாச்சுன்னு தெரியல, அடி வாங்கிட்டு வந்திருக்கானுங்க, டென்ஷன் ஆகாதீங்க சார், வெளியூர்ல இருந்து ஆளுங்களை வர சொல்லிருக்கு, கண்டிப்பா அந்த போலீஸ்காரனை இந்த வாரத்துக்குள்ளேயே முடிச்சிடலாம்” என்றான் அவரின் காரியதரசன்,….
“சும்மா பேசாத, செயல்ல காட்டு, என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது, அந்த ரிஷி மித்ரன், அவன் எனக்கு உயிரோட வேணும், அவனை நானே என் கையால துடிக்க துடிக்க கொல்லணும், என் பையன் அனுபவிச்சதை விட ஆயிரம் மடங்கு சித்ரவதை பட்டு அவன் சாகனும்” என்றார் முகத்தில் தெரிந்த அளவுக்கதிகமான வன்மத்தோடு,…
**************
“மித்து அவங்க யார்னு தெரிஞ்சதா? எதுக்காக நம்மள தாக்க வந்தாங்களாம்” என்றாள் நித்யா, நேற்று நடந்த சம்பவத்தால் கதிகலங்கி போயிருந்தவள் கணவனின் அக்கறையான வார்த்தையிலும் அரவணைப்பிலும் சமாதானமாகி உறங்கி போனாள், காலையில் எழுந்ததும் பயம் கொஞ்சம் விட்டு போயிருக்க, இப்போது கேட்ட கேள்வியை அப்போதும் கேட்டாள், அவனோ “தெரியல நித்து ஸ்டேஷன் போனா தான் தெரியும், நான் பார்த்துகிறேன், நீ அதை பத்தி யோசிக்காம இரு” என கூறிவிட்டு சென்றிருந்தான்,..
இப்போது கணவன் வேலை முடிந்து வரவும், அவள் முதல் முதலாக அந்த கேள்வியை தான் முன் வைத்தாள், ஏதாவது பெரிய பிரட்சனையாக இருக்க கூடுமோ என்று அவள் மனம் படபடத்துக் கொண்டே இருந்தது, அவன் வாய் மொழியாக பெரிய பிரட்சனை எதுவும் இல்லை என்று கூறினால் தான் அவள் மனம் அமைதிபடும் எனும் நிலையில் இருந்தவள் அவனிடம் அதை பற்றி மீண்டும் வினவினாள்,…
“உன்கிட்ட மார்னிங்கே நான் சொல்லிட்டு போனதா நியாபகம் நித்து, நேத்து நடந்ததை பத்தி எதுவும் யோசிக்க கூடாதுனு” என்றான் கண்டிப்பான பார்வையில்,….
“இல்ல அது,… என்னால முடியல மித்து, நேத்து நடந்ததை மறக்க முடியல, தயவு செஞ்சு சொல்லுங்களேன், பிரட்சனை எல்லாம் எதுவும் இல்லையே, யார் அவங்க, ஏன் நம்மள துரத்திட்டு வந்தாங்க” என்றாள் அப்பாவியாய்,…
அவளருகில் வந்து அவளது இரு தோள்களையும் பற்றியவன்,… “நித்து நேத்து நைட்டே சொன்னேன், எனக்கு பல பிரட்சனைகள் இருக்க தான் செய்யும், என் வேலை அப்படி, நீ அதை பத்தி யோசிக்க வேணாம், ம்ம்” அவன் பொறுமையாக கூற,… “அப்படினா போலீஸா இருக்குறவங்களோட உயிருக்கு உத்திரவாதம் கொடுக்க முடியாதுன்னு சொல்றீங்களா?” என்றாள் உதடுகள் துடிக்க….
“நான் எப்போ அப்படி சொன்னேன், சரி நீ ஏன் இப்போ அழறதுக்கு ரெடியாகுற, எப்போ பார்த்தாலும் அழுமூஞ்சியாவே இருக்காதே நித்து, ஏற்கனவே நைட் என்னை பட்டினி போட்டுட்ட, அவசர அவசரமா என் பொண்டாட்டி கூட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம்னு கிளம்பி வந்தா, நீ ஒப்பாரி வச்சுக்கிட்டு இருக்க, டூ பேட்” அவன் முகத்தை சுழித்து கூற,… அவன் சொல்லின் பாவனையில் மற்றதை மறந்து, கொஞ்சம் வெட்கம் கலந்த பார்வை பார்த்தவள், அவனது மார்பில் சாய்ந்து கொண்டு,… “மித்து” என்றாள் முணங்களாக…
அவள் ஏதோ சொல்ல வருகிறாள் என்பது அறிந்தவன்,… “என்ன நித்து, எனகிட்ட ஏதாச்சும் சொல்லனுமா?” என்றான் சிலவற்றை எதிர்பார்த்து,…
“ம்ம்” அவள் முணங்க,… “என்ன” என்றான் ஆவலோடு,…
“அது” அவள் இழுக்க,… “நித்து ப்ளீஸ் ரொம்ப இழுக்காம சொல்லிடேன்” என்றான்,… “ம்ம்” என்றவள்,.. “அது வந்து நான்” அவள் ஆர்வமாக ஏதோ சொல்ல வந்த நேரம் சரியாக அவனது போல் அலறியது,…
“ப்ச்… அது கிடக்கு நீ சொல்லு” அவன் அவளை ஊக்க,.. போன் கத்திக் கொண்டே இருந்த காரணத்தினால் அவளால் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிற்று, அதனால் “நீங்க போன்ல யார்னு பாருங்க, ஏதாச்சும் முக்கியமான காலா இருக்க போகுது” என்றாள்…
“உன்னை விட எனக்கு வேறு எதுவும் முக்கியம் இல்ல, நீ சொல்லு” அவன் ஆழ்ந்த பார்வையுடன் கூற,… முதல் முறை அவனை காதலாக பார்த்தவள்,…. “இந்த போன் எனக்கு டிஸ்டர்பன்ஸா இருக்கு, ப்ளீஸ் நீங்க முதல்ல அது யாருன்னு பார்த்துட்டு வந்துடுங்களேன்” என்றாள்,…
அவள் விழிகளில் தெரிந்த அந்த பார்வை அவனை மயக்க முயல, தலையை சிலுப்பிக் கொண்டு, தன்னை சமன்படுத்திக் கொண்டவன், போனை ஏற்று காதிற்கு கொடுத்தான்,… அந்த பக்கம் உள்ளவர்கள் என்ன கூறினார்களோ அவன் முகத்தில் ஒரு வித மாற்றம், அது எதனால் வந்த மாற்றம் என்ன வகையான மாற்றம் அவனை கண்காணித்து கொண்டிருந்த அவளால் கணிக்க முடியவில்லை,…
சில நிமிடத்தில் பேசிமுடித்து விட்டு போனை வைத்தவன், மனைவியை நோக்கி,… “நித்து ஒரு குட்நியூஸ்” என்றான்,…
அவள் என்ன என்பது போல் பார்க்க,.. “கருணாக்கு இந்த வீக்லயே சர்ஜரி, சர்ஜரி முடிந்த சில நாட்கள்லயே அவன் முழுசா கியூர் ஆகிடுவான்னு டாக்ர் கேரண்டி கொடுத்துட்டாரு, எண்ணி இன்னும் சில நாட்களிலேயே கருணா கண்முழிச்சிடுவான், ஓரிரு நாட்கள் ரெஸ்ட்ல இருந்தா போதும், அப்புறம் சகஜமா அவன் நடமாட ஆரம்பிச்சுடலாம்னு டாக்டர் சொன்னாரு” அவன் கூற, அவளால் அதை எண்ணி சந்தோசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை,… “நிஜமாவா மித்து” என்றாள் முக முழுக்க சந்தோசமாய்,…
அவள் முகத்தில் தெரிந்த சிரிப்பையும் சந்தோஷத்தையும் அவனால் ரசிக்க முடியவில்லை, உள்ளுக்குள் ஒருமாதிரி வலித்தது அவள் கருணாவிற்காக சந்தோஷப்படுவதை கண்டு, அவள் கேட்டதற்கு “ம்ம்” என்ற முணங்களோடு நிறுத்திக் கொண்டவன்,… “நான் ஃபிரஷ்அப் ஆகிட்டு வரேன்” என உள் அறைக்குள் நுழைந்து கொண்டான்,…
தன் சந்தோசத்தினால் ரிஷியின் முகம் மாறிவிட்டதை அவளும் கண்டுகொண்டாள், அவர் முன்னிலையில் சந்தோசப்பட்டிருக்க கூடாதோ என்று கூட வருந்தினாள், ஆனால் கருணா குணமாகி சீக்கிரமே எழுந்து வர போகிறான் என்ற செய்தியை கேட்டதும் அவளால் சந்தோசம் கொள்ளாமல் இருக்க முடியவில்லையே! அவள் என்றோ முடிவு செய்து விட்டாள் தன் வாழ்க்கை தன் கணவனோடு தான் என்று, கருணா வந்த பிறகு அவனுக்கு தன் நிலையை புரிய வைத்து, அவனுக்கும் நல்ல ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் தான் அவள் மனம் நிம்மதி கொள்ளும், அவளும் முழு மனதோடு கணவனுடன் சந்தோசமாக வாழ முடியும்,…
அவள் இப்படி ஒரு சிந்தனையில் இருக்க, அதை அறியாத அவள் கணவனோ, கருணாவினால் அவளுக்குள் உண்டான சந்தோசத்தை கண்டு முகம் இறுகி போய் நின்றான், ஷவரிலிருந்து விழுந்த குளிர்ந்த நீரில் நின்ற போதும் மனதும் சரி உடலும் சரி கொஞ்சமும் குளிர்ந்து போகவில்லை, ஒரு மாதிரி அனலாய் எரிவது போலிருந்தது, தன் மனைவியை அவன் விட்டுகொடுக்க விரும்பவில்லை, அவளுக்கு வாக்கு கொடுத்ததை எண்ணி அவசரப்பட்டுவிட்டோமோ என்று கூட தோன்றியது, நேற்று அவள் தனக்காக தவித்த தவிப்பு கண்முன் தோன்றி மறைந்தது,..
‘உங்களுக்கு ஏதாச்சும் ஒன்னுன்னா நான் உயிரோடவே இருக்க மாட்டேன்’ என்று அவள் கூறிய வார்த்தைகள் அவன் உயிரின் ஆழம் வரை சென்று தித்தித்தது, இரவு சந்தோசத்தில் தூக்கம் கூட வரவில்லை, விடிய விடிய தூங்கும் மனைவியை தான் அணுஅணுவாய் ரசித்துக் கொண்டிருந்தான், தற்போது கருணாவின் செய்தி வரவும் எவ்வளவு முயன்றும் மனம் அமைதி படவில்லை, அதே சமயம் சட்டென்று மூளை வேறொன்றை பற்றியும் யோசிக்க,.. ‘அவள் முடிவு அவள் கையில், தான் கண்டிப்பாக தலையிட கூடாது’ என மனதை வலுக்காட்டயமாய் சமாதானபடுத்திக் கொண்டவன், குளியலறையிலிருந்தது வெளிவந்தான்,…

