
பத்து மணி அளவில் விழிப்புத் தட்ட முதலில் எழுந்தது நிதர்ஷனா தான். இருட்டில் தோன்றாத வெட்க ரேகைகள் இப்போதோ தோன்றி அலைக்கழித்தது.
“ஹையோ! இந்த அரக்கன் சும்மாவே ஆடுவான். நம்ம வேற சலங்கை கட்டி விட்டுட்டோமே…” எனக் கூச்சத்துடன் அவனிடம் இருந்து விலகி குளித்து விட்டு வந்தவளுக்கோ, வெட்கம் பிடுங்கித் தின்றது.
அவனை எழுப்பாமலேயே கீழிறங்கி வந்தவள், சில நிமிடங்களில் யாஷ் பிரஜிதனும் மாடியில் இருந்து இறங்கும் அரவம் கேட்டு அடுக்களைக்கு ஓடி விட்டாள்.
“நிதா நீ இன்னைக்கு ஆபிஸ்க்கு வரல. ஒரு முக்கியமான ப்ரெசென்ட்டேஷன் ரெடி பண்ணனும்…” நிதர்ஷனா அலுவலகத்திற்கு கிளம்பாமல் இருந்ததைக் கண்டு நிவேதன் கேட்டான்.
ஆடவனின் முகம் பார்க்க நாணி, அடுக்களைக்குள் சுற்றிக்கொண்டிருந்தவளை பிடித்திருந்தான் நிவேதன்.
அவனிடம் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் திணறியவள், “நீ முதல்ல போ நிவே. நான் யாஷ் கூட வர்றேன்” என்றாள் பலவீனமாக.
“என்னாச்சுடா உடம்பு சரி இல்லையா?” அவள் நெற்றி தொட்டுப் பார்த்த நிவேதனிடம், “அதெல்லாம் இல்ல நிவே” என சமாளித்தாள்.
“ஹே உடம்பு சுடுது நிதா. நேத்து நைட்டு தூங்குனதும் லேட்டு. நீ இன்னைக்கு ஆபிஸ்கு வர வேணாம் ரெஸ்ட் எடு… காலைல சாப்பிட்டியா?” எனக் கேட்க, கிருஷ்ணவேணி “டைனிங் டேபிள்ல சாப்பாடு எடுத்து வச்சுருக்கேன் சாப்பிடு நிதா” என்றார்.
“இல்ல இனிமே தான்… அந்த இட்லியையும் சட்னியையும் சாப்பிடவே முடியல” என்று உதட்டைப் பிதுக்கினாள்.
அவர்களுக்காக உணவு தயாரிப்பதற்கென்றே சமையல் ஆள்களை நியமித்து இருந்தான் யாஷ் பிரஜிதன். வீட்டினர் வரும்போது மட்டுமே அவர்களே சமைப்பர்.
நிதர்ஷனா, நிவேதன், கதிரவனுக்காக அசைவ உணவு வகைகளும் அவ்வப்பொழுது சமைக்கப்படும் என்றாலும், நிதர்ஷனாவிற்கு அது எல்லாம் அத்தனை சுவையாக தெரியவில்லை.
“காலைல எந்திரிச்சு நானே சமைச்சுடவா?” எனக் கேட்டு பார்த்து விட்டாள்.
“உனக்கு ஆபிஸ்லேயே டஜன்ஸ் ஆஃப் ஒர்க் இருக்கும் நிது. எதுக்கு தேவையில்லாத ரிஸ்க்” என்றான் கேலிநகை மின்ன.
“ரிஸ்க்கா?”
“ம்ம். உன் ஃபுட் சாப்பிட்டு எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்?”
“யோவ்!” இடுப்பில் கையூன்றி முறைப்பவளைக் கண்டு நன்றாக சிரிப்பவனிடம், “என் மாமியார் வீட்ல வைக்கிற தண்ணி சாம்பார் விட நான் நல்லா தான சமைப்பேன்…” என நொடித்துக் கொள்வாள்.
இன்றேனோ உண்ணப் பிடிக்காமல், “இன்னைக்கு உன் மச்சான் மாதிரி பழத்தை சாப்பிட்டே உசுரு வாழ்வோமானு யோசிக்கிறேன் நிவே” என்றதில் அதிருப்தியுற்றவன், அவளை வெளியில் அனுப்பி விட்டு களத்தில் இறங்கினான்.
சில நிமிடத்தில் சுடுகஞ்சியும் பருப்பு துவையலும் செய்து கொணர்ந்தவன், “இதை சாப்பிடு முதல்ல…” எனக் கொடுக்க, துவையலை வாசம் பிடித்தவள், “அவ்வ்… செம்ம ஸ்மெல் நிவே” என்றபடி அவசரமாக உண்டாள்.
அவர்களை பார்த்தபடி சோபாவில் அமர்ந்திருந்த யாஷ், “இட்லி சாப்பிடல?” எனக் கேட்டான்.
“ம்ம்ஹும்… கஞ்சி நல்லாருக்கு. உனக்கு வேணுமா?” என்றாலும் அவனுக்கு பங்கு தராமல் உண்ணுவதில் கவனமாக, அதற்குள் நிவேதன் மறுபடியும் அடுக்களைக்குள் புகுந்திருந்தான்.
மற்றவர்களும் வந்து விட, அனைவரும் டைனிங் டேபிளில் கூடினர்.
கதிரவனும் அவளைப் பார்த்து “என்னாச்சு நிதா. உடம்பு சரி இல்லையா?” என்று நெற்றியில் கை வைத்துப் பார்த்தான்.
“இல்லடா. நல்லாத்தான் இருக்கேன். கொஞ்சம் டயர்டு” என்று நாக்கை கடித்து விட்டு யாஷ் பிரஜிதனைப் பார்க்க, அவனோ “தெம்பாகிட்டேன்னு சொன்ன?” என்றான் அர்த்தமாய்.
பற்களை நறநறவென கடித்தவள், “சும்மா இருயா!” என்று அடிக்குரலில் மிரட்டியதில், அவனிடம் ரகசியப்புன்னகை.
கண்மணியும் “நீங்க ரெஸ்ட் எடுங்க அண்ணி. இன்னைக்கு ப்ரசெண்டேஷன் நானும் சிந்தாவும் பாத்துக்குறோம்…” என்றதும், நிதர்ஷனாவும் சரியென்று விட்டாள்.
யாஷ் இந்த உரையாடலில் தலையிடவே இல்லை.
நிவேதன் ஏதோ சமைத்துக் கொண்டிருந்ததால், கதிரவன் சிந்தாமணி கண்மணியுடன் முதலில் கிளம்பிவிட, சிறிது நேரத்தில் நிவேதன் ரசத்தையும் கருவாட்டுக் கூட்டையும் எடுத்து வந்து டைனிங் டேபிளில் வைத்தான்.
“நிதா திப்பிலி ரசம் வச்சுருக்கேன். மிச்சம் வைக்காம சாப்பிடு மதியம்” என்றிட, அவளோ ஆர்வமாய் தலையாட்டினாள்.
“வாட்ஸ் தட் திப்பிலி?” யாஷ் புரியாமல் கேட்டதில்,
“அது ஒரு மருந்து பொருள் மாதிரி மச்சான். உடம்பு வலி, சளி, காய்ச்சல் இருந்தா நல்லா கேட்கும்!” எனப் பதில் உரைத்தான்.
அங்கு வந்த ஆதிசக்தி, “அடடா ரசம் வாசனையே தூக்குதே” எனப் புருவம் உயர்த்த நிவேதன் புன்னகைத்தான்.
“சரி நான் கிளம்புறேன் அத்த…” என்று அவன் அலுவலகம் கிளம்ப முற்பட,” இரு நிவே… நானும் வரேன் சேர்ந்து போகலாம்” என்று அவரும் கிளம்பினார்.
“இருங்க அத்தை ட்ரைவரை கூப்புடுறேன்…” என நிவேதன் கூறியதில், “வேண்டாம் நிவே. நம்மளே போகலாம்!” என அவரே ஓட்டுநர் இருக்கையில் அமர, அவரை யோசனையுடன் பார்த்தபடி அவனும் அமர்ந்தான்.
பாதி தூரம் வரை இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.
பின் ஆதிசக்தியே ஆரம்பித்தார்.
“ப்ராஜக்ட் எல்லாம் ஜெட் வேகத்துல முடியுதுனு கேள்விப்பட்டேன். குட் நிவே!”
“தேங்க்ஸ் அத்த…” முறுவலித்தான்.
“எதுவா இருந்தாலும் நேரா கேட்டுடலாம்னு தோணுது நிவே. கேட்கட்டா?” ஆதிசக்தி பொறி வைத்துப் பேச, நிவேதன் “என்கிட்ட எதுவும் பேசணும்னா தாராளமா பேசுங்க அத்தை” என்றதில்,
“ம்ம்… நீ கண்மணியை விரும்புறியா நிவே?” எனக் கேட்டிருந்தார்.
அக்கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை போலும்!
அதற்கு நேரடியாக பதில் உரைக்காமல், “இந்தக் கேள்வியை கண்மணிட்ட கேட்டீங்களா?” என வினவினான்.
“அவளோட பதிலை என்னால கணிக்க முடியும். அதான் உன்னோட அபிப்ராயம் கேட்குறேன்”
இதற்கு என்ன பதில் கூறுவது என்று புரியாமல் சாலையை வெறித்தவன், “முதல்ல கண்மணிட்ட கேளுங்க அத்த… உங்க கணிப்பு தப்பா கூட இருக்கலாம்ல!” என்றான்.
மறந்தும் தன் மனதைப் பகிரவில்லை.
அதனைக் குறித்துக் கொண்டவருக்கு, அவனது பதிலைத் தேடுவது ஒன்றும் கடினமாக இல்லை.
அலுவலகமும் வந்து விட, “ஒருவேளை அவள் எஸ்னு சொன்னா?” என ஆதிசக்தி கூர்மையாய் கேட்டார்.
கீழுதட்டைக் கடித்தவன், “இப்போதைக்கு என்னோட கவனம் எல்லாம், இந்த ப்ராஜக்ட் மேலயும், பிசினஸ் மேலயும் தான் இருக்கு அத்த…” என உரைத்தவன் அவரை நிமிர்ந்து பாராது இறங்கி விட்டான்.
வாழ்வில் ஒன்றும் சாதிக்காமல், உங்கள் பெண்ணைக் காதலிக்கிறேன் என்று எப்படி கூற இயலும்.
சில நாள்களேனும், போதையின் பிடியில் இருந்திருக்கிறான். என்ன தான் தற்போது கொஞ்ச கொஞ்சமாக அனைத்தும் கற்றுக்கொண்டாலும் கூட, படிப்பு என்ற ஒன்று இல்லை. இப்படி பல ஏற்றத் தாழ்வுகளை யோசித்து தயங்கினான்.
இதை அவளுக்கு வளையல் போடும்போதே யோசித்துத் தொலைய வேண்டியது தானே! அவனது மனமே அவனைக் காறி உமிழ்ந்தது.
‘நம்ம தகுதி நமக்குத் தான் தெரியணும்!’ ஒருமுறை கதிரவன் கூறியது இப்போது நினைவிலாடி அலைக்கழிக்க, அறைக்கதவைத் திறந்தவன் அங்கு கண்மணி கணினியில் புதைந்திருப்பதை கண்டு தயங்கி நின்றான்.
அவனது வரவைக் கண்டதும் மலர்வாய் புன்னகைத்தவள், “ஹாய் நிவே!” என்க, வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தவன், “ஹாய் கண்மணி…” என்றபடி தனது இருக்கையில் அமர்ந்தான்.
“ப்ரசன்டேஷன் ஆல்மோஸ்ட் ஓவர்! அரை மணி நேரத்துல முடிஞ்சுடும்…” என அவள் தீவிரமாய் வேலையைத் தொடர, அவளையே நேசம் மறைத்து வேதனையாய் பார்த்திருந்தான் நிவேதன்.
—–
உண்டு முடித்தும் கூட, இருக்கையை விட்டு எழாமல் சோர்வாய் அமர்ந்திருந்த நிதர்ஷனாவின் நெற்றியில் முத்தமிட்டு விட்டு, “டேக் ரெஸ்ட்” என்று மடிக்கணினியுடன் சோபாவில் அமர்ந்து விட்டான் யாஷ் பிரஜிதன் .
“நீ ஆபிஸ் போகலையா அரக்கா?” நிதர்ஷனா புரியாமல் கேட்க,
“உன்னைத் தனியா விட்டுட்டா. நோப்!” எனத் தோளைக் குலுக்கிக் கொண்டதில், அவளிதழ்களில் ரசனைப் புன்னகை.
எழுந்து சென்று அவன் மடியிலேயே படுத்தவள், சிறிது நேரத்தில் உறங்கிப் போனாள்.
மடிக்கணினியை ஓரம் கட்டி விட்டு, தன்னவளின் முகத்தையே வெகு நேரம் இறுகிய தாடையுடன் வெறித்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
———-
சில நிமிடத்திற்கு மேல், கண்மணிக்கு வேலையில் கவனம் செலுத்தவே இயலவில்லை.
சுற்றி முற்றி அறையையே பார்த்தவள், “நிவே… இந்த ரூம்ல ஏதோ ஒரு பேட் ஸ்மெல் வருதுல” எனக் கேட்டதும், ஏதோ ஒரு கோப்பில் தீவிரமாக எழுதிக்கொண்டிருந்த நிவேதனும் “எனக்கு ஒன்னும் வரலையே” என்றான்.
“இல்ல ஏதோ ஸ்மெல் வருது…” என முகத்தைச் சுளித்தாள்.
அதன்பிறகே தனது கையை முகர்ந்து பார்த்த நிவேதன் அசடு வழிந்தான்.
“காலைல நிதாவுக்கு கருவாடு செஞ்சேன்ல. சோப்பு போட்டும் வாசனை போகல போல”
“எதே கருவாடா?” அடிவயிற்றில் எதுவோ பிரட்டியது அவளுக்கு.
“நீ வேணும்னா கதிர் ரூம்ல இரேன் கண்மணி” என்றவனுக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. விட்டால் வாந்தி எடுத்து விடுவாள் போலும்…
“இல்ல பரவாயில்ல. இதை முடிச்சுட்டுப் போறேன்… நீங்க கருவாடு சாப்பிட்டீங்களா?”
அவள் கேள்வியில் என்ன உணர்ந்தானோ, “இல்ல” என தலையாட்ட, “அப்ப சரி” என்று மீண்டும் வேலையைத் தொடர, நிவேதன் மட்டும் வெளியில் சென்றான்.
யாஷ் பிரஜிதனின் அறையில் கை கழுவும் லோஷனும், சானிடைசரும், மேலும் சில சென்ட் பாட்டில்களும் இருப்பதை பார்த்திருக்கிறான்.
அதை எல்லாம் இன்னைக்கு பூசிட வேண்டியது தான் என்ற முடிவோடு அவன் அறைக்குச் சென்றவன், கையை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு, இரண்டு மூன்று பாடி ஸ்ப்ரேயையும் அள்ளிப் பூசிக் கொண்டான்.
“இப்ப ஸ்மெல் வருதா?” எனத் தன்னையே முகர்ந்து பார்த்துக் கொண்டவன், “லைட்டா வருதோ… வேற சென்ட் இருக்கான்னு பார்க்கலாம்” என மற்றொரு டிராயரைத் திறக்க, அங்கோ சில ஊசி மருந்துகளும், மாத்திரைகளும் நிறைந்திருந்தது.
‘இவன் என்ன மருந்துக்கடையே வச்சிருக்கான்…’ என அசட்டையாக பார்த்தவனுக்கு, அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் தோன்ற, அதனை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டான்.
நிவேதன் தமிழ் வழியே ஆங்கிலம் பயிலவும், எந்த ஒரு சந்தேகத்தையும் நிவர்த்தி செய்து கொள்ளவும் தமிழ் செயற்கை நுண்ணறிவு கொண்ட ஒரு சிறிய ஏஐ அலைபேசியை கொடுத்திருந்தான் யாஷ் பிரஜிதன்.
அது அவனுக்கு மிகவும் உதவியாக இருந்ததோடு, மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் தேவையானதை தமிழிலேயே தெரிந்து கொள்ள வசதியாக இருந்தது.
ஒரு மருந்தின் புகைப்படத்தை அந்த அலைபேசியில் பகிர்ந்து விட்டு, “இது என்ன மருந்து” எனக் கேட்க, அந்த செயற்கை நுண்ணறிவும் தமிழில் பதில் கொடுத்தது, “குழந்தை உருவாகாமல் தடுக்கும் மாத்திரை” என.
அதனை தனியாகவோ அல்லது திரவப்பொருள்களில் கலந்தோ உண்ணலாம் என்று அறிவுரை கொடுக்க, நிவேதன் திடுக்கிட்டான்.
தினமும் இரவு அனைவரும் அறைக்குச் சென்றபிறகு யாஷ் அடுக்களையில் பால் காய்ச்சுவதும், அதை வலுக்கட்டாயமாக நிதர்ஷனாவைக் குடிக்க வைப்பதும் அவன் அறிந்தது தான்.
ஆனால் அதில் இப்படி ஒரு விஷயம் இருக்குமென்று அவன் எண்ணவில்லை.
அவள் மீதிருக்கும் அக்கறையில் அல்லவா கொடுப்பதாக நினைத்தான்.
ஏதோ ஒரு ஏமாற்றம் நெஞ்சை அழுத்த, கோபம் வேறு கனன்றது.
சில நாள்களுக்கு முன்பு கூட, தேநீர் இடைவெளியில் அவனும் நிதர்ஷனாவுமாக பேசிக்கொண்ட உரையாடல் நினைவில் ஆடியது.
எப்போதும் தேநீரை வாங்கியதும் சுடச் சுட பருகும் வழக்கம் கொண்ட நிதர்ஷனா, இப்பதெல்லாம் சற்றே ஆறிய பிறகே குடிப்பதை வழக்கமாக்கி இருக்க,
“என்ன நிதா… டீ ஆறிப்போச்சு. வேற வாங்கிட்டு வரவா?” எனக் கேட்டான்.
“இல்ல இல்ல வேணாம். நான் தான் ஆற வச்சு குடிக்கிறேன்” என லேசாய் நெளிந்து கூறிட,
“ஏன்?” என்றான் புரியாமல்.
“அது… அது வந்து… பேபிக்கு ட்ரை பண்றப்ப சூடா ஏதும் குடிக்க கூடாதாம் அதான்” என்றாள் டேபிளை சுரண்டிபடி.
தங்கையின் வெட்கம் தாங்கிய வதனம் நிவேதனுக்கு சிரிப்பையும் சுவாரஸ்யத்தையும் கொடுக்க, “நானும் என் மருமகனை பார்க்க தான் வெயிட்டிங்” என்றான் ஆர்வமாய்.
“ச்சு போடா எனக்கு வெட்கி வெட்கியா வருது…” என்று முகத்தை மூடிக்கொண்டவளை விசித்திரமாகப் பார்த்த நிவேதனுக்கு, சிரிப்பை அடக்க இயலவில்லை.
அவள் முகத்தில் கண்ட சிவப்பும் பூரிப்பும் தான் எத்தனை அழகு!
அதனை மொத்தமாக கறுக்கிக் கொண்டிருக்கும் யாஷ் பிரஜிதனின் மீது கடுங்கோபம் எழுந்தது.
மாலை வரை கடுகடுவென அமைதியாய் இருந்தவனை விசித்திரமாய் ஏறிட்ட கண்மணி, “என்னாச்சு நிவே” என வினவ, “ஒன்னும் இல்ல” என்றவன், மாலை வரை பொறுத்திருந்து வீட்டிற்குச் சென்றான்.
யாஷின் பிறந்தநாளிற்காக அன்று இரவு அனைவருமாக இணைந்து பஃபே செல்வது தான் திட்டம்.
அதற்காக அனைவருமே மதிய நேரத்திலேயே வீட்டை அடைந்து விட்டனர். நிவேதன் மட்டுமே தாமதமாய் கிளம்பினான்.
“நிது கிளம்பிட்டியா?” யாஷ் பிரஜிதன் அவளுடன் கடற்கரைக்குச் சென்று விட்டுப் பின், ஹோட்டலில் இணைந்து கொள்வதாக இருக்க, யாஷ் முதலில் கிளம்பி வந்தான்.
“இதோ வந்துட்டேன் யாஷ்…” என்றபடி மாடியில் இருந்து இறங்கியவளைக் கண்டு கண்ணிமைக்க மறந்து போனான்.
அவளைக் கோவிலில் திருமணம் செய்யும் போது, அவளுக்காக தேர்ந்தெடுத்த சிவப்பு நிற பட்டுப்புடவையை இன்று உடுத்தி இருந்தாள்.
ஏதோ நடிப்பிற்காக திருமணம் செய்வதாகக் கூறி விட்டு ஒவ்வொன்றையும் அவளுக்காகவே தேர்ந்தெடுத்து, தாலியைக் கூட நிறுத்தி நிதானமாகக் கட்டினானே! வார்ட்ரோபில் இந்தப் புடவையைப் பார்த்திருந்தலிருந்தே அதனைக் கட்ட வேண்டுமென ஆசை பிறந்தது அவளுக்கு.
இன்று அதனை நிறைவேற்றிக் கொண்டவள், அழகுப்பதுமையாய் அவன் முன் நின்றதில் கிறங்கியது யாஷ் தான்.
“ஆஸம் ஆலம்பனா… யூ லுக் காட்ஜியஸ்” என்றான் ரசித்து.
வெட்கப்புன்னகை பூத்தவளிடம், “தட் ஃபோர்ஹெட் ஆர்னமெண்ட் போடல…” நெற்றிச்சூட்டியைச் சுட்டிக் காட்டிக் கேட்டான்.
“அது எதுக்கு?”
“இரு எடுத்துட்டு வரேன்…” என இரண்டிரண்டு படிகளாகத் தாவி மீண்டும் அறைக்குச் சென்றான், அவளது மறுப்பைக் கண்டு கொள்ளாமல்.
நெற்றிச்சூட்டியை எடுத்து விட்டே அவன் இறங்கி வர, “வேணாம்னு சொல்றேன்ல யாஷ்” என சிணுங்கிக்கொண்டே நின்றவளை வேதனையாய் பார்த்தபடி வந்தான் நிவேதன்.
அந்நேரம், நிவேதனைப் பார்க்க வேகமாய் திரும்பியவள், தலைச் சுற்ற அப்படியே மயங்கி விழுந்தாள்.
நிலை புரிந்து நிவேதன் தங்கையைப் பிடித்துக் கொள்ள, மொத்தக் குடும்பமும் பதறி விட்டது.
“நிதா என்ன ஆச்சு?” என நிவேதன் அவளது கன்னத்தைத் தட்ட, யாஷ் பிரஜிதன் செயலற்று நின்றான்.
முதன்முறை சட்டென மயங்கி விழுந்ததும், பின் உயிர் வேதனை தந்ததுமே நினைவில் ஆடி தவிப்பையும் பயத்தையும் ஏற்படுத்த, அவனது இரும்புக் கரங்களும் நடுக்கம் கொண்டது.
கதிரவனுக்கும் அதே நினைவு வந்தது போலும், நிதர்ஷனாவைப் பார்க்காமல் அவன் நேராய் யாஷை தான் பார்த்தான்.
அவனது முகபாவனையைக் கண்டு கதிரவனுக்கு இதயமே நடுங்கி விட்டது.
அவளுக்கு இனி எந்த பிரச்சினையும் இல்லை என்று தானே சொன்னான். பின் எதற்காக இவன் முகத்தில் இத்தனை பயம்!
ஆதிசக்தி நிதர்ஷனாவின் முகத்தில் நீர் அடித்து எழுப்ப முயற்சிக்க, சில நொடிகளில் கண் விழித்து விட்டாள்.
அவள் விழித்ததும் தான் யாஷ் பிரஜிதனுக்கு மூச்சே சீரானது.
அவளது பக்கம் வரக்கூட பயந்து படிக்கட்டின் வாயிலிலேயே நின்றிருந்தான். அவனைக் கதிரவனைத் தவிர வேறு யாரும் கவனிக்காததால் பெரியதாய் சந்தேகம் வரவில்லை.
நிவேதன் கண்ணில் நீர் துளிர்க்க, “என்னாச்சு நிதா… பயந்தே போய்ட்டேன்” என அவளை நெஞ்சில் சாய்த்து கொள்ள,
“ஒன்னும் இல்ல நிவே. சட்டுனு தலை சுத்திடுச்சு அவ்ளோ தான்… நீ ஏன்டா இதுக்குலாம் அழுதுருக்க லூசு” என்று திட்டினாள்.
ஆதிசக்தியோ, சற்றே யோசனையுடன் “முதல்ல இவளை ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போகலாம்…” என்க,
“ஐயோ அத்த அதெல்லாம் வேணாம்…” என மறுத்ததில், “சும்மா இரு நிதா. நம்ம போயிட்டு வரலாம். எந்திரி” என்றான் கண்டிப்பாக.
“நிதா ஒரு நிமிஷம் வா!” என ஆதிசக்தி அவளைத் தனியாய் அழைத்துச் செல்ல, யாஷிற்கு சுயநினைவே அதன்பிறகே வந்தது.
அதுவரை சிலைபோல நின்றிருக்கிறான்.
அப்போது தான் ரித்திகாவும் வந்தவள், “என்ன எல்லாரும் கூட்டமா ஹால்ல நின்னுட்டு இருக்கீங்க?” என வினவ,
கண்மணி, “நிதா அண்ணி மயங்கி விழுந்துட்டாங்கண்ணி. கொஞ்ச நேரத்துல பயமுறுத்திட்டாங்க” என்று இயல்பாகக் கூற, ரித்திகா திகைப்புடன் யாஷை பார்த்தாள்.
கதிரவன் அதையும் குறித்துக்கொள்ள, அவளுள் பயப்பந்து உருண்டோடியது.
இங்கோ, ஆதிசக்தி மருமகளிடம், “நாள் தள்ளிப்போயிருக்கா நிதா?” எனக் கேட்க, அவளுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.
“ஆமா அத்த” என நெளிந்தாள்.
“வாவ்! இத முன்னாடியே சொல்லலாம்ல” அவரோ அதிகபட்ச மகிழ்வுடன் கொண்டாட,
“இதுக்கு முன்னாடியும் இப்படி பீரியட்ஸ் தள்ளி தள்ளி வந்துச்சு அத்த. இப்பவும் அப்படி தான் இருக்கு. சரி ஒரு வாரம் பார்த்துட்டு சொல்லிக்கலாம்னு இருந்தேன்” என்றாள்.
“யாஷ்கு தெரியுமா?”
“ம்ம்ஹும்!” இடவலமாய் தலையாட்டி வெட்கப்புன்னகை பூத்ததில், “சரி இரு… கண்மணி” என மகளை அழைத்தார்.
கண்மணி அறைக்குச் சென்றதும், “வாட்ச்மேன்ட்ட சொல்லி மெடிக்கல் ஷாப்ல நான் சொல்றதை வாங்கிட்டு வர சொல்லு” என்றதில், கண்மணியின் விழிகள் விரிந்தது.
திடுதிடுவென வாசலுக்கு ஓடியவள், வேண்டியதை வாங்கி விட்டு மீண்டும் அறைக்கு ஓட, ‘இவள் ஏன் இப்ப மின்னல் மாதிரி அங்க இங்க ஓடிட்டு இருக்கா’ என சிந்தாமணி குழம்பி நின்றாள்.
யாஷ் அறைக்கு செல்ல முற்பட, “அண்ணா அண்ணா இருங்க… டூ மினிட்ஸ்ல அண்ணியே வந்துடுவாங்க” என்று வெளியில் வந்து கதவை அடைத்த கண்மணியைப் புரியாமல் ஏறிட்டவன், “என்ன பண்றீங்க?” என்றான்.
“ஒரு டூ மினிட்ஸ் அண்ணா ப்ளீஸ்!” என அவளும் பதற்றத்துடன் காத்திருக்கத் தொடங்கினாள்.
—-
பிரக்னன்சி டெஸ்ட் பேடில் இரு கோடுகள் காட்டியதில், நிதர்ஷனாவிற்கு மகிழ்ச்சி தாளவில்லை.
“ஹையோ!” என வெட்கம் வேறு உருண்டோடியது.
ஆதிசக்திக்கோ நெஞ்சே அடைக்கும் அளவு மகிழ்ச்சி.
யாஷிடம் உணராத குழந்தைப் பருவத்தை, பேரனிடம் உணர்ந்திட வேண்டுமென்ற துடிப்பு தானாய் உருவானது.
நிதர்ஷனாவின் கன்னம் கிள்ளி கொஞ்சியவர், “இரு நான் யாஷ வர சொல்றேன்” என்று வெளியில் வந்து விஷயத்தைக் கூற, அனைவரின் முகமும் புன்னகையைத் தத்தெடுத்தது.
நிவேதனுக்கு மற்றவை மறந்து போக, சிறு வயதில் நிதர்ஷனாவின் கைப்பிடித்து நடந்து சென்றதும் தற்போது அவளது மகனே தனது கைப்பிடிக்கப் போவதுமாக மனக்கண்ணில் காட்சியாக, காலம் தான் எத்தனை வேகமாய் கடக்கிறதென்ற வியப்பில் தங்கையைக் காண ஆவலாய் உள்ளே சென்றான்.
இளவேந்தனுக்கோ, தனது தங்கைப் பேரக்குழந்தையை கையில் தொட்டுப் பார்த்து விட வேண்டுமென்ற ஆசை.
இப்படி ஒவ்வொரு வரும் ஆனந்தக் கனவில் அறைக்குச் சென்று விட, யாஷ் மட்டும் எதையும் நம்ப இயலாமல் உறைந்து நின்றிருந்தான்.
ரித்திகாவும் தான். அவனைப் பார்த்தபடி நின்றிருந்த கதிரவனும் கூட அங்கேயே நிற்க, யாஷ் விருட்டென தனது அறைக்குச் சென்றான்.
கதிரவனும் அவன் பின்னாலேயே சென்றிட, மெத்தையில் தலையில் கை வைத்து அமர்ந்திருந்தவனின் தோளைத் தொட்டான்.
“இங்க என்ன நடக்குது யாஷ்? நீ ஏன் இப்படி இருக்க. அதுவும் இவ்ளோ சந்தோசமான விஷயத்தை கேள்விப்பட்டும்… அவளுக்கும் ஒன்னும் பிரச்சினை இல்லைல!” எனும்போதே யாஷிற்கு அழைப்பு வர, அவனுக்கு பதில் கூறும் முன் அலைபேசியைக் காதில் வைத்தான்.
ஏதோ மொழியில் யாரிடமோ கத்திப் பேசியவன், அலைபேசியைத் தரையில் போட்டு உடைத்திருக்க, கதிரவன் மிரண்டு நின்றான்.
“டேய் என்னடா ஆச்சு? எனக்குப் பதறுது!”
“ப்ச், அவளுக்கு மெடிகேஷன் குடுத்துட்டு இருக்கேன். எப்படி ப்ரெக்னன்ட் ஆனான்னு தெரியல” என்று சோர்வாய் கூறியவனை குழப்பமாய் பார்த்தான்.
அத்தனை பேர் தன்னருகில் இருந்தும், யாஷ் வராமல் போனதில் நிதர்ஷனாவின் முகம் சற்றே வாடிப்போனது.
நிவேதனும் சற்றே நிதானித்தபடி, யாஷ் இல்லாததைக் கவனித்தவன், அடங்கிப்போன ஆத்திரம் மெல்ல மேலெழும்ப, யாரும் கவனியாத நேரம் யாஷ் பிரஜிதனின் அறைக்குச் சென்றான்.
அங்கு யாஷ் கூறியதைக் கேட்டபடி உள்ளே வந்தவன், “ஏன்டா இப்படி பண்ணுன?” என்று அவன் சட்டையைப் பிடித்திருந்தான்.
“டேய் என்னடா பண்ற?” கதிரவன் நிவேதனைத் தடுக்க,
“இவன் டெய்லி அவளுக்கு மருந்து குடுத்துருக்கான் மாசமாகாம இருக்க… ஏண்டா இப்டி பண்ணுன?” என்று நிவேதன் கொந்தளிக்க கதிரவனும் திகைத்து நின்றான்.
“கையை எடு நிவே” யாஷ் பிரஜிதன் கோபத்தை அடக்கியபடி அவனது கையை எடுக்க முற்பட,
“உன்னை அவள் எவ்ளோ நம்புறா. குழந்தைக்காக அவ்ளோ ஆசைப்பட்டா தெரியுமா? நீ ஏண்டா அவளுக்கு அப்படி ஒரு மருந்தை குடுத்த. இப்ப அவள் உண்மையாவே மாசமா இருக்காளானு கூட பயமா இருக்கு. இது அவளுக்கு பண்ற துரோகம் இல்லையா?”
இம்முறை நிவேதனை அடித்திருந்தான் யாஷ்.
“நீ அடிச்சுட்டா பதில் சொல்லத் தேவையில்லன்னு அர்த்தம் இல்ல. எனக்கு காரணம் தெரிஞ்சே ஆகணும். உன் அப்பன் எங்களை பைத்தியக்காரன் மாதிரி ரோட்டுல அலைய விட்டான். நீ எங்களை உண்மையாவே பைத்தியமாக்குறியா. உனக்கும் உன் குடும்பத்துக்கும் நாங்க என்னடா பண்ணுனோம்?” நிவேதன் சீறலுடன் அவனது நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டு, வார்த்தையையும் விட்டிருக்க, யாஷின் முகம் இறுகிப்போனது.
ரித்திகா தான் வேகமாய் ஓடி வந்து இருவரையும் தடுத்தாள்.
“நீங்க ஏன்டா இப்படி சண்டை போட்டுட்டு இருக்கீங்க? நிவே ப்ளீஸ்” ரித்திகா நிறுத்த முற்பட,
“எப்படி ரித்தி என்னால சும்மா இருக்க முடியும்? இவன் ஆபிஸ் ரூம்ல அந்த மருந்தை எல்லாம் பார்த்ததும் எப்படி வலிச்சுதுனு எனக்குத் தான் தெரியும்…” என்றான் ஆத்திரமாக.
“டேய்… அப்ப அதைக் கொடுக்கும்போது அவனுக்கு மட்டும் வலிக்காதா?” ரித்திகா கத்திட,
“எதுக்கு குடுக்கணும்னு கேட்குறேன். என்ன நடக்குது இங்க?” நிவேதன் தன்னிலை மறந்து கத்தினான்.
“ஐயோ நிவே! நீ நினைக்கிற மாதிரி அது கருத்தடை மாத்திரை மட்டும் இல்ல. அவள் மூளைல இஞ்செக்ட் ஆகிருக்குற மருந்தை செயலிழக்க வைக்கிற மருந்து. அது கொடுக்கும்போதே, கருத்தடை மாத்திரையும் கொடுக்குறது தான் பெஸ்ட்னு டாக்டர் குடுத்தது தான். அந்த வைரஸ வெளில எடுக்குறதுக்கான ப்ரொசீஜர்கு உலகத்துல இருக்குற டாப் சைன்டிஸ்ட், டாக்டர்ஸ்னு எல்லாரையும் வச்சு இவன் ரிசர்ச் பண்ணிட்டு இருக்கான்.
அவன் அப்பாவும் நம்ம அப்பாவும், என்ன தான் கண்டுபிடிச்சு தொலைஞ்சாங்கனு வாயைத் திறக்கவே மாட்டுறானுங்க. முதல்ல அதை கண்டுபிடிச்சா தான், அதுக்கான மருந்தை கண்டுபிடிக்க முடியும். அந்த வேலைல தான் நானும் இவ்ளோ நாள் இத்தாலில இருந்தேன். ஆனா இன்னும் கூட, எங்களால அந்த வைரஸோட பேஸ் ஃபார்முலாவைக் கண்டுபிடிக்க முடியல…” என்றதில், இருவரும் அதிர்ந்தனர்.
இடுப்பில் கையூன்றி கடுமையாய் நின்று கொண்டிருந்த யாஷிடம், “என்ன யாஷ் இவள் என்னன்னமோ சொல்றா. அவளுக்கு ஒன்னியும் பிரச்சினை இல்லைனு தான சொன்ன…” கதிரவன் அழுதே விட்டான்.
“அந்த வைரஸ் பிரச்சினை பண்ணாத வரை பிரச்சினை இல்ல. ஆனா அது சட்டுனு பிரச்சினை பண்றதுக்குள்ள அதுக்கான சொலியூஷனை கண்டுபிடிச்சே ஆகணும்…”
“ஆனா அது தான் பெயிலியர் ஆகிடுச்சுன்னு சொன்னியே”
“ஆமா பெயிலியர் தான். அது தான் பயமே! ஒருத்தன் ஒரு போட்டில சக்ஸஸ் ஆகிட்டா அவனோட ரியாக்ஷன் ஒன்னு தான். ஹேப்பினஸ். இதே தோத்துட்டா? அவன் வருத்தப்படுவானா? இல்ல ஜெயிச்சவனை பார்த்து பொறாமைப்படுவானா? வஞ்சம் வச்சுப்பானா? கேஷுவலா எடுத்துப்பானா? அது அவனோட மனநிலையைப் பொறுத்து. அதே மாதிரி தான் வெற்றியடைஞ்ச ஒரு ரிசர்ச்சோட விளைவை விட, தோல்வி அடைஞ்ச ஒரு ஆராய்ச்சியோட விளைவு ரொம்ப ஆபத்தானது!” அடக்கி வைத்திருந்த வேதனையில் விளைவாய் அவன் முகமே சிவந்து போயிற்று!
“அவள் ப்ரெக்னன்ட் ஆக சான்ஸே இல்ல. பட் இப்ப டாக்டர் சொல்றாங்க, மே பி ஒரு பெர்சன்ட் சான்ஸ் இருந்துருக்கலாம். மெடிகேஷன் மீறி நடக்குறதுனு… இடியட்ஸ்!” என்றான் பல்லைக்கடித்து.
நிவேதனுக்கோ தலையே சுற்றியது. என்னவோ ஆதங்கமும் கோபமும் தீரவில்லை போலும்.
அவன் மீது ஏற்கனவே இருந்த அதிருப்தியும் எரிச்சலும் தற்போது வெளிப்பட,
“அப்படி அவள் ப்ரெக்னன்ட் ஆகக் கூடாதுன்னா, அவள்கிட்ட சொல்லிட்டே மருந்தை குடுத்துருக்கலாம்ல? ஏன் கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தணும்? இவ்ளோ ரிஸ்க் இருக்குன்னா அவளுக்கு ஆஸ்பத்திரில வச்சே மருந்து குடுக்கலாம்ல. சரி பண்ணிட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்… ஏற்கனவே அவள் உசுருக்கு ஆபத்து. இதுல இப்ப உன்னோட பார்ட்னரா ஆக்கி என்னையும் சேர்மன் ஆக்கி இன்னும் எதுக்காக ஆபத்த வர வச்ச யாஷ்?” என்றான் மூச்சிரைக்க.
“டேய் என்னடா பேசுற?” கதிரவன் சங்கடமாய் கேட்டான்.
அவளுக்குப் பிரச்சினை இருப்பது தெரிந்தும் உன் சுயநலத்திற்காக அவளைத் திருமணம் செய்து குடும்பம் நடத்தியது தவறு என்ற நிவேதனின் கூற்று மூவருக்கும் புரிய, ரித்திகாவும் தவிப்பாய் நின்றாள்.
நிவேதனின் சட்டையை பற்றுவது இம்முறை யாஷ் பிரஜிதனின் முறையானது.
“உன்னைக் கொன்னுடுவேன் நிவே!” அதிகபட்ச சீறல் அவனிடம்.
“கொன்னுடு. இப்படி எங்களை சாகடிக்கிறதுக்கு மொத்தமா கொன்னுடு மச்சான். உன் அப்பன் கையாலேயே நாங்க செத்துருந்தா, இப்படி தினம் தினம் சாக வேண்டியது இல்லைல!” குமுறலுடன் நீர் தளும்ப அவனைத் தள்ளி விட, “ஐயோ நிறுத்துங்கடா ப்ளீஸ்…” என்று ரித்திகாவும் கதிரவனும் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
யாஷ் பிரஜிதனோ கதிரவனை ஏறிட்டு, “உனக்கு வேற என்ன சந்தேகம் இருக்கு?” என அவனிடம் காய,
“எனக்குத் தெரியல யாஷ். ஆனா ஒன்னு மட்டும் தெரியும். நீ அவளுக்கு எது பெஸ்ட்டோ அதை மட்டும் தான் செய்வ. பாக்குற எங்களுக்கு உன்னைத் தப்பா காட்டிக்கிட்டாலும், அவளுக்குனு வரும்போது நீ கொஞ்சம் கூட காம்ப்ரமைஸ் ஆக மாட்ட! இதுக்கும் ஒரு ரீசன் இருக்கும். அவனும் புருஞ்சுப்பான் யாஷ்” என்றவனின் நம்பிக்கையில் ஒற்றைப் புருவம் உயர்த்தியவன், ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டான்.
நிவேதனின் முகம் பாராமல், “ஐ லவ் ஹெர் அ லாட்! அப்படி அவள் கூட பெட் ஷேர் மட்டுமே பண்ணிக்கனும்னா, முதல் தடவை அவள கடத்தி நடிக்க வைக்கும்போதே, என்னோட ப்ளஷரை ஃபுல்ஃபில் பண்ணிட்டு அனுப்பிருப்பேன் கதிர். பட் மை இன்டன்க்ஷன் இஸ் நாட் ஹெர் பிளடி பாடி!” என்றதில் நிவேதன் சட்டென நிமிர்ந்தான்.
யாஷ் மேலும் தொடர்ந்து, “அவளோட மூளைல இருக்குற வைரஸ், நார்மல் வைரஸ் இல்லை. அது எமோஷனல் அண்ட் ஹார்மோன் ஃப்ளக்சுவேஷன்கு ரியாக்ட் ஆகும். மெடிகேஷன் மட்டுமே போதும்னு இல்ல.
அவளோட பாடியும் மூளையும் சேர்ந்து இயற்கையா ரிலீஸ் பண்ற, ஒரு நியூரோகெமிக்கல் காம்பினேஷன் வேணும். எஸ்பெஷலி, ஆக்சிடாக்சின், என்டோர்ஃபின்ஸ் மிக்ஸ். அது தான் வைரஸை கண்ட்ரோல் பண்ணும். அந்த லெவல்ல ரிலீஸ் ஆகுற சூழ்நிலை, ஃபிஸிக்கல் இன்டிமசில தான் நடக்கும்.
மேரேஜ் பண்ணாம, அவள்கூட ரிலேஷன்ஷிப் வச்சுக்குறதுல எனக்கு எந்த பிரச்சினையும் இல்ல. பட் அவள் இந்த விஷயத்துல சென்சிடிவ். தட்ஸ் வை, மேரேஜ் பண்ணுனேன். மேரேஜ் பண்ணதும் ஆட்டோமேட்டிக்கா அவள் என் பிசினஸ் பார்ட்னர் ஆகிடுவா” எனப் பேசி முடிக்க அறையில் பலத்த அமைதி நிலவியது.
நிவேதனுக்கு தலையே சுற்றிய நிலை. சத்தியமாக இப்படி ஒரு விளக்கத்தை அவன் எதிர்பார்க்கவில்லையே!
கதிரவனுக்கோ சின்னச் சின்ன விஷயத்தையும் எப்படி இவனால் அவள் ஒருவளுக்காகவே யோசிக்க இயல்கிறது என்ற வியப்பு மேலிட, நிவேதனின் கன்னத்தில் அறைந்தான்.
“போதுமாடா. இப்ப சந்தோசமா? நான் ஆரம்பத்துல இருந்து சொல்லிட்டு இருக்கேன். ‘இவன் மேல நீ தேவை இல்லாம, அதிருப்தியை ஏற்படுத்திக்காத, அவன் செய்ற எதுவும் நமக்கு புரியாது. ஆனா கரெக்ட்டா தான் செய்வா’ன்னு…” என்று திட்ட, அவனுக்காக தனது நண்பன் தன்னையே அறைந்ததை நம்ப இயலாமல் பார்த்த நிவேதனுக்கு, இந்த அறை தேவை என்று தான் தோன்றியது.
யாஷ் பிரஜிதன் நிவேதனை அப்போதும் பார்க்கவில்லை. பார்வையை வேறு புறம் திருப்பியவன் சற்றே திகைத்தான்.
அறை வாயிலில் அதிர்ந்த வதனத்துடன், உணர்வற்று நின்றிருந்தாள் நிதர்ஷனா.
அரக்கன் தொடரும்
மேகா
இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
9
+1
72
+1
1
+1
உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்
You must be logged in to post a comment.


Semma ah twist than