கிருஷ்ணாரத்யா 12

Loading

அத்தியாயம்:12

அவன் காதல் சொன்ன நொடியில் விக்கித்துப் போனாள் பெண்ணவள், அதற்கு என்ன பதில் சொல்வதென்றும் அவளுக்கு விளங்கவில்லை, இதுவரை ஆதித் கிருஷ்ணாவை அவள் அப்படியொரு கோணத்தில் மறந்தும் நினைத்து பார்த்ததில்லை. அவளின் கனவு மட்டுமே அவளுக்குப் பிரதானமாய் இருக்க மற்றவையெல்லாம் அவளுக்குத் தேவையற்றதாகவே தோன்றியது. சிறுபெண் என்பதால் அவனின் கூர்மையான பார்வையில் திணறிப் போனாள் அவன் இதுவரை பேசிய ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தம் கண்டுக்கொண்டாள், அவனை நிமிர்ந்து பார்க்க சக்தியின்றித் தொய்வாய் அமர்ந்தாள்.

சிறுமியைப் போல் சென்னை மாநகரத்தை சுற்றி வந்தவள், அவன் காதலை சொன்ன நொடியில் பெண்ணாய் உணர்ந்தாள், ஆனால் அப்பெண்ணினுள் உள் உணர்வுகள் ‘உன் கனவு என்ன ஆவது ஆரா.?’ எனக் கேள்வி எழுப்பியது. அந்த கேள்விக்கு என்ன பதிலை சொல்வது என்று புரியாமல் தன் முன் புன்னகை சிந்தி அமர்ந்திருந்தவனை கண்கொண்டு பார்க்க முடியாமல் தலை தாழ்த்தி அமர்ந்திருந்தவள் தன் துப்பாட்டாவில் தொங்கி கொண்டிருந்த மணிகளை ஆர்வமாய் ஆராய்ந்துக் கொண்டிருந்தாள்.

“இல்லை இதெல்லாம் எனக்குத் தேவையற்றது” எனத் தனக்குள் பேசிக்கொண்டாள், அவன் விழிகளை எதிர்கொள்ளப் பயந்து போய் அமர்ந்திருந்தவளுக்குத் தோன்றியதெல்லாம் இவனுக்கும் அந்த ஹரிக்கும் என்ன வித்தியாசம் இருந்துவிடப் போகிறது. அவனும் அவளிடம் இதே கேள்வியாய் தான் கேட்டான், இவனும் இதைத் தான் கேட்கிறான் என்ற கோபம் எழ,

“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா” அவள் அழகாய் க்ரிஷ் என்று அழைத்தது காணாமல் போயிருந்தது திசை மறந்த பாலகனை போல் அவள் விழியைப் பார்த்தவன் அவன் கரம் பற்றி,

“ஸ்மைலி ஜஸ்ட் லிசன்” என்றான்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க மிஸ்டர்.? முதலில் க்ளையண்ட், அப்பறம் ஃப்ரெண்ட்ஷிப், இப்போ உடனே காதல் அதெப்படி இரண்டு மூணு நாள்ல அப்படி என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரிஞ்சுதுன்னு லவ் சொல்றீங்க”

“ஹே ஆரா என் மனசில இருக்கிறதை மறைக்காமல் சொல்லணும்னு நினைச்சேன் தெட்ஸ் இட்”அவன் விளக்கினான்.

“உங்களுடைய மனசில் இருக்கிறதை சொல்ற உரிமை உங்களுக்கு இருக்கும் போது என்னோட மனசில் இருக்கிறதை சொல்ற உரிமை எனக்கும் இருக்கு, எனக்கு இதெல்லாம் பிடிக்கலை உங்க பணபலத்தைப் பயன்படுத்தி அந்த மண்ட கசாயத்தை வேணும்னா விலைக்கு வாங்கலாம் என்னை வாங்க முடியாது. நான் ஒன்னும் பொம்மை இல்லை நீங்க அடம் பிடிச்சு கேட்டவுடன் கிடைக்கிறதுக்கு ஜெஸ்ட் ஸ்டே அவே ஃப்ரம் மீ” எனத் திமிறிக்கொண்டு எழுந்தவளை மீண்டும் கரம் பற்றி அமர்த்தினான்.

“பேசி முடிச்சாச்சா.?நான் பேசலாமா.?”

“ம்ம்ம்” வேண்டா வெறுப்பாய் தலையசைத்தாள்.

“ஹே ஸ்மைலி சாரி.! நான் இதைச் சொல்லிட்டேன்றதுக்காக நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பையும் சேர்த்து ப்ரேக் பண்ணிட்டு போகலாம்ன்னு நினைக்கிறியா.? நோ வே ஸ்மைலி.! உனக்கு விருப்பம் இல்லைன்னா ஓகே லெட் அஸ் பீ ஃப்ரெண்ட்ஸ்”

“நீங்க க்ளையண்ட்டாவே இருங்க இந்த ப்ரெண்ட்ஷிப்ன்ற பேர்ல நமக்குள்ள எதுவும் வேண்டாம்”என எழுந்து கோபமாய் நடந்து சென்றவள் கண்ணாடி கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்தாள்.

“போ.! போ.! ஸ்மைலி நீயே என்னைத் தேடி வருவ”என தனக்குள் பேசியவன் அவளை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். கண்ணாடி கதவை தள்ளி சென்றவள் இப்போது அதை இழுத்துக்கொண்டு அவனை நோக்கி நடந்து வந்தாள்.

காதலை தான் தன்னிடம் சொல் வருகிறாளோ?? என்று அவள் மனம் ஏங்கியது, வந்தவளோ அவன் விழியை நேரடியாய் பார்த்து.

“ஃபார் மை காஃபி!!” என பணத்தை மேசை மீது வைத்தாள்.

“ஆரா!! நம்ம ஃப்ரெண்ட்ஷிப்பை நீ கேவல படுத்துற?” என்றான் சற்று கோபமாக.

“நீங்க காதலை சொல்லி கேவல படுத்தின அளவுக்கு, நான் ஒன்னும் பண்ணலை மிஸ்டர்” என்றாள் பெண்.

“காதலை சொல்லுறது கேவலமா?? உன்னை எனக்கு பிடிச்சிருக்குன்னு வெளிபடையா சொல்லுறது அசிங்கமா??”

“நான் அதை தப்பா சொல்லவே இல்லை மிஸ்டர், உங்களை பத்தி எனக்கு தெரியும் ஆனால் என்னை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்?? நான் யாருன்னு தெரிஞ்சிக்க கூட நீங்க முற்படலை இதில் என்ன காதல் இருந்திட போகுது. பார்த்தவுடன் பரவசத்தில் வருவதெல்லாம் காதல் இல்லை” என பேசி நகர்ந்தவளை,

“ஆரா!!” என அழைத்து அவளின் நடையை தடை செய்திருந்தான்.

“ஆரா!! நீ என்ன தேடி வருவ” என்றான் உறுதியாய்.

“சாரி டூ சே திஸ், நீங்க மண்டகசாயத்தை வச்சி எதாவது ப்ளான் போட்டிருந்தால் அதை இப்போவே கேன்சல் பண்ணிடுங்க, பிகாஸ் நான் என்னோட வேலையை ரிசைன் பண்ண தான் கிளம்பிட்டு இருக்கேன்”

“யூ மே கோ!! நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன் ஆரா!! நான் தானே உன்னை கூட்டிட்டு வந்தேன் நானே உன்னை ட்ராப் பண்ணிடுறேன்” என அவளை தன்னுடன் வர சொல்லி அழைத்தான்.

“நோ நீட் மிஸ்டர், எனக்கு எப்படி போகணும்னு தெரியும். குட் பை” என பேசியவள் விரைந்து வெளியேறியிருந்தாள்.

********************************************************************************************************************

தன் மன நிம்மதிக்காக மேட்ரிமோனி வேலையை விட்டிருந்தாள் இரவு நேரம் வேலை செய்யும் ஐடி பணியில் சேர்ந்திருந்தாள் அவள் சேர்ந்து ஒரு மாத காலம் ஆகியிருந்தது அங்கு வாங்கிய சம்பளத்தை விட இங்குச் சற்று அதிகம் என்பதே ஆராவுக்கு நிம்மதியை கொடுத்தது. அவள் மேட்ரிமோனியை விட்டுச் சென்றதை போலவே சுதாவும் வேலையை விட்டுவிட்டு பாண்டிச்சேரி போயிருந்தாள்.

ஆராவுக்கு அன்று சம்பள நாள் வார இறுதியில் வந்தது அவளுக்கு மிகவும் வசதியாய்ப் போனது தன் அன்பு தோழி சுதாவை பார்க்க பாண்டிச்சேரி செல்வதாக முடிவு செய்தாள். ஆராவுக்கென்று இருக்கும் ஒரே உறவு சுதா மட்டும் தானே அவளுக்காக ஐடி வேலை பார்த்துக்கொடுத்ததும் அவள் தான் இரவு நேர பணி என்பதால் ட்ரூப்பில் பாடுவதை நிறுத்தியிருந்தாள். சுதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்பதற்காகச் சொல்லாமல் கிளம்புவதாய் முடிவு செய்து கிளம்பியும் விட்டாள் கேப் புக் செய்து பாண்டிச்சேரி நோக்கி பயணித்துக்கொண்டிருந்தாள் ஆரா. அவளின் செல்பேசி இசைந்தது சுதா தான் அழைப்பு விடுத்திருந்தாள்.

“சொல்லுடி சுதா”

“ஆரா.! உனக்குப் பேமெண்ட் எதுவும் வந்திருக்கா பாரு”

“பேமெண்ட்டா எனக்கா.? இரு பார்க்கிறேன்” என்றவள் தன் தொடுதிரைபேசியை ஆராய்ந்தாள் ஒரு லட்சம் அவள் கணக்கில் போடப்பட்டிருந்தது.

“ஹே சுதா வந்திருக்குடி யார் போட்டது.?”

“வேற யாரு நம்ம மண்டகசாயமாதான் இருக்கும்” சுதா மொழிந்தாள்.

“ஏய் இல்லைடி எனக்கு அதிகமா போட்டிருக்காருடி, அப்படியேனாலும் மண்டகசாயம் மனோகர் செக் தானே கொடுப்பாரு எப்போ பேமெண்ட் ஜீபே யில் போட்டு விட்டிருக்காரு.?”

“அட ஆமா ஆரா.! இதை நான் கவனிக்கலையே”

“அந்த நம்பருக்கு கால் பண்ணி பார்ப்போமா.? மாத்தி எதும் ட்ரன்செக்சன் போட்டு விட்டிருந்தால் என்ன பண்ணுறது.?”என ஆரா கேட்க,

“நீ சொல்றதும் சரிதான் ஆரா பேசுறது தான் நல்லது”

“ம்ம்ம் ஓகே நான் பேசிட்டு கூப்பிடுறேன்” என அழைப்பை துண்டித்தவள் அந்தப் புதிய எண்ணுக்கு அழைப்பு விடுத்தாள்.

“ஹலோ ஐ யெம் ஆரத்யா” என அவள் மொழிந்தாள்.

“ஃப்ரம் மெட்ரிமோனியா.?” நக்கலாய் ஒலித்தது அந்த ஆணின் குரல்.சற்று யோசித்தவளுக்குப் பிடிபிட்டது அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் ஆதித் கிருஷ்ணா என்று.

“என்ன பண்ணி வச்சீருக்கீங்க.? எதுக்காக எனக்கு ஒன் லேக் அனுப்பி வச்சிருக்கீங்க.?” கோபமாய்ச் சாடினாள்.

“என்ன ஸ்மைலி நீ பண்ணின வொர்க்குக்குச் சம்பளம் வாங்கமலே போயிட்டீங்க அதான் பேமெண்ட் அனுப்பி வச்சேன்”

“இங்கே பாருங்க மிஸ்டர் விளையாடதீங்க சேம் நம்பருக்கு நான் உங்க பணத்தை அனுப்பி விடுறேன்” எனச் சொல்லி அழைப்பை துண்டித்தவள் அவன் அனுப்பிய பணத்தை அதே எண்ணுக்கு திருப்பி அனுப்பி விட்டாள். அவள் அனுப்பிய சற்று நேரத்தில் வேறொரு எண்ணில் இருந்து பணம் அவள் கணக்கை வந்து சேர்ந்தது.

“மறுபடியும் அனுப்பினால் நான் சும்மா விடுவேனா.?” என மீண்டும் அனுப்ப முயற்சித்துத் தோல்வி அடைந்தாள் பெண். மீண்டும் ஆதித் கிருஷ்ணாவின் எண்ணுக்கு அழைப்பு விடுத்து.

“உங்களுக்கு ஏன் என்னால பேமெண்ட் அனுப்ப முடியலை ப்ளாக் பண்ணிட்டீங்களா.?” அவன் மீது கோபம் கொண்டாள்.

“நோ.! நோ.! ஜிபேல ஒரு நாளைக்கு ஒன் லேக் தான் அனுப்ப முடியும், உங்களுக்குப் பணம் வேண்டாம்னா நேர்ல வந்து கொடுங்க ஆரா வாங்கிகறேன்” எனச் சொன்னவன் மெல்ல சிரித்தான்.

“ஓ.! இது தான் உங்களுடைய ப்ளானா.? உங்க பணத்தை நாளைக்கு ட்ரன்ஸ்ஃபர் பண்ணுறேன், இப்போ அர்ஜென்ட்டா பாண்டிச்சேரிக்கு போய்கிட்டு இருக்கேன்” ஆரா சொன்னாள்.

“நானும் பாண்டில தான் இருக்கேன் நீங்க பொறுமையாய் வந்து இன்றைக்கே தரலாம் ஆரா”

“ரொம்ப ஸ்மார்ட்ன்னு நினைக்காதீங்க மிஸ்டர் உங்களைச் சந்திக்கிறதால நான் உங்க மேல காதல்ல விழுந்திருவேன்னு தப்பு கணக்கு போடாதீங்க, வில் மீட் யூ அட் பாண்டி” என்றவள் பட்டென அழைப்பை துண்டித்துவிட்டு சுதாவுக்கு அழைப்பெடுத்து விசயத்தைச் சொன்னவள். தான் பாண்டிச்சேரி வருவதாகச் சொல்லி விட்டாள்.

சில மணி நேர பயணத்திற்குப் பிறகு பீச் வீயூ ரிசார்ட்டின் வாயிலில் நின்றபடி அவளுக்கு அழைப்பு விடுத்தாள் ஆரா.

“ஆரா.! வந்துட்டியா.? டியூட்டில இருக்கேன் இன்னும் டென் மினிட்ஸ்ல முடிஞ்சிடும் வா வந்து ரிசப்சன்ல வெயிட் பண்ணு” எனச் சுதா பதில் கொடுக்க ரிசப்சனில் இருந்த இருக்கையில் அமர்ந்திருந்தாள் ஆரா. சுதா சொன்னதைப் போல் பத்து நிமிடத்தில் அங்கு வந்து சேர்ந்தாள். அவளின் சீருடையில் இருந்து எளிமையான சுடிதாருக்கு மாறி இருந்தாள் சுதா.

“சுதா.!” என்று தாவி அணைத்துக்கொண்டாள் ஆரா.

“உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுறேன்டி” எனச் சுதாவின் விழிகளில் நீ துளிர்த்தது.

“ஹே இதுக்கெல்லாமா அழுவ.?” அவளின் விழிநீரை துடைத்து விட்ட ஆரா, “உனக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன் டி”

“என்ன சர்ப்ரைஸ்.?”

“வா வா உன்னோட ரூம்க்குப் போய்ப் பேசலாம்” என ஆரா அழைத்த போது,

“ஆரா.! எனக்கு இங்கேயே அக்காமடேசன் கொடுத்திட்டாங்கடி அங்கே கெஸ்ட் எல்லாம் அழைச்சிட்டுப் போகக் கூடாது” எனத் தட்டு தடுமாறி சொல்லி முடித்தாள் சுதா.

“ஏய் ஃபீலிங்க்ஸை கம்மி பண்ணு, நான் இங்கே வந்ததே இந்த வீக் எண்டை என்ஜாய் பண்ணுறதுக்கு, வா ரூம் புக் பண்ணுறோம் ஃபன் பண்றோம்” என ஆரா தலையாட்டி புன்னகைக்க.

“எப்படி டி ஆரா.?”

“எனக்குச் செலரி கரெடிட் ஆகிடுச்சு” எனத் தன் தோழியைக் கட்டி அணைத்து குதிக்க ஆரம்பித்தாள்.

“ஹே அது உன்னோட ட்ரீம்ஸ்காகச் சேர்த்து வைக்கிறதா சொன்னீயே.?”

“சுதா அதுக்காக லைஃப்ல இருக்கிற சின்னச் சின்னச் சந்தோசங்களை இழந்திற கூடாதே, என்னோட மொத்த சந்தோசமும் நீ தான் சுதா. அந்த மண்டகசாயம் ஆபிஸ்ல சேர்ந்ததுக்கு நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் நீ மட்டும் தான் சுதா”

“முதலில் ஃப்ரெஷ் ஆகிட்டு சாப்பிடணும் நல்ல ப்ளேஸ் சொல்லு தங்குறதுக்கு”

“இங்கேயே தங்கிகலாமாடி, நான் இங்கே எம்ப்ளாயியா இருக்கிறதால உனக்கு என்னால டிஸ்கௌண்ட் அப்ளை பண்ண முடியும்” எனச் சொன்னால் சுதா.

“ம்ம் ஓகேடி” எனத் தலையசைத்தாள் ஆரா, ஆராவின் பெயரில் ரூம் த்ரி நாட் த்ரீ புக் செய்யபட்டது.குளித்துவிட்டு ப்ரெஷ் ஆனவள் உணவை ரூம்கே வரவழைத்து இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

“சுதா.!”

“ம்ம் சொல்லு ஆரா.!”

“இந்த ஒன் லேக்கை திருப்பிக் கொடுக்கணும்டி ஒரே ஷாட் அ அகௌண்ட்க்கு ட்ரென்ஸ்ஃபர் பண்ண முடியுமா.?”

“ம்ம் பண்ணலாமேடி உன்கிட்ட ஆன்லைன் பேங்கிங் இருக்குல மாத்தி விட்டுடலாம்” எனச் சொன்னாள் சுதா.

“அதுக்கு அவர் அகௌண்ட் டீடெய்ல் வேணுமே, ஜிபே நம்பர் மட்டும் தான் இருக்கு” என்றாள் ஆரா.

“அச்சோ இப்போ என்னடி பண்ணுறது ஆரா!! போன் பண்ணி பேசி பாருடி” என்றாள் சுதா.

“அது சரி வராதுடி சுதா, ஆதித் கிருஷ்ணா எங்கே இருக்காருன்னு கேட்டு மீட் பண்ணி கொடுத்திட்டு வந்திடலாமா.? இந்தப் பணம் அகௌண்ட்க்கு வந்ததில் இருந்து என் தலைக்குத் தான் டென்சன் ஏறுது எதோ பாவத்தைச் சுமந்துகிட்டு இருக்கிற ஃபீல் தான் வருது” என ஆரா புலம்ப ஆரம்பித்தாள்.

“கவலைபடாதே ஆரா.! கொடுத்திடலாம்” எனத் தன் தோழிக்கு ஆறுதல் சொன்னாள் ஆரா.

******************************************************************************

சுதாவும், ஆராவும் ஆதித் கிருஷ்ணா அனுப்பியிருந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க அவன் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்து இருந்தனர். சில மணி துளிகள் காத்து இருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டுக்கு அருகே இருந்த ரெஸ்டாரண்ட்டிற்கு வரவழைத்திருந்தான் ஆதித் கிருஷ்ணா.

மழை வரப்போவதாய் மேகங்கள் கூடிக்கொண்டிருந்த அந்த மாலை வேளையில் அந்த ரெஸ்டாரண்டின் காத்திருந்தவள் அவ்வப்போது அவன் வருகிறானா என்று பார்த்தபடி சுதாவுடன் பேசிக்கொண்டிருந்தாள்.

“ஹேய் ஆரா.! அதான் ஒன் லேக் வந்திருக்கே வச்சு என்ஜாய் பண்ணலாம்ல எதுக்குத் திருப்பிக் கொடுத்திட்டு இருக்க. நல்லாவா இருக்கு.?” எனத் தன் தோழியிடம் கேட்டாள் சுதா.

“சுதா அது என்னோட அமௌண்ட் இல்லைடி, அந்த மண்ட கசாயம் மனோகர் கிட்ட தானே வேலை பார்த்தேன் இவன்கிட்டாயா பார்த்தேன்.? இவன் எதுக்கு எனக்குத் தரணும், பணத்தை அனுப்பி விட்டால் மயங்கி அவன் பின்னாடியே போயிடுவேன்னு நினைப்பு அவனுக்கு, வரட்டும் இன்றைக்கி இரண்டுல ஒண்ணு பார்த்திட வேண்டியது தான்” என அவள் கோபமாய்க் கத்திய போது,

“கோபத்தில் காட்டுற இந்த உரிமையை, காதலிலும் காட்டினால் நல்லா இருக்குமே” என்ற குரல் கேட்டு சுதாவும் ஆராவும் அதிர்ந்து திரும்பி பார்த்த போது புன்னகையால் அவளை வசீகரித்தான் ஆதித்.

“இங்கே பாருங்க காதல் கத்திரக்கானேல்லாம் பேசிட்டு இருக்காதீங்க அவ்வளவு தான், நீங்க நினைக்கிற சராசரி பொண்ணு நான் இல்லை, என்னோட ட்ரீம்ஸ் வேற, உங்களை மாதிரி பணக்காரங்களுக்கு இது புரியாது”

“காதலிக்கிறேன்னு சொன்னது தப்பா ஸ்மைலி.?” என அவளின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து அவள் முகம் பார்த்துக் கேட்டான்.

“ஆமா ஃப்ரெண்ட்ஸ் ஆகி ஜெஸ்ட் டென் மினிட்ஸ்ல சொன்னது தப்பு தான்” கோபமாய் அவனை முறைத்தாள் ஆரா.

“என்னது ஃப்ரெண்ட்ஸாகிட்டிங்களா.? என்கிட்ட சொல்லவே இல்லை” இடையில் புகுந்தாள்” சுதா.

“ஹாய் சுதா.! நைஸ் டூ மீட் யூ” எனக் கரம் நீட்டி சுதாவிடம் கைகுலுக்கினான் ஆதித்.

“ஹாய் சார்.!”

“இது தான் நம்ம ஃப்ர்ஸ்ட் மீட்டிங் நினைக்கிறேன்” எனப் புன்னகைத்தான்.

“ஆமாம்” எனத் தலையசைத்தாள் சுதா,

“பை தி பை உங்க லவ் எப்படிப் போகுது” என அவன் விசாரிப்பதை பார்த்து விழி விரித்தாள் ஆரா.

“சுதா.?” ஆச்சரியத்தில் பார்த்தாள் ஆரா.

“ஹே சாரிடி ஆரா” என அவள் கரம் பற்றித் தடுத்தவளின் கை உதறி மேலும் நடக்க முற்பட்டவளை,

“ஸ்மைலி.!” என் பணத்தைக் கொடுக்காமல் எங்கே போறீங்க.?” இந்த முறை அவன் குரலில் வசீகரித்தான்.

“மிஸ்டர் ஆதித் கிருஷ்ணா உங்களோட பணத்தை நான் திருப்பிக் கொடுத்திருவேன்” எனச் சினம் கொண்டவள், சுதாவை ஏறிட்டாள்.

“சுதா யாரைடி லவ் பண்ணுற என்கிட்ட கூடச் சொல்லாமல்” எனக் கோபமாய்க் கேட்டாலும், தன்னிடம் எதையும் மறைக்காத தோழி இதை மறைத்து விட்டாளே என்ற வருத்ததுடன் மிரட்சியாய் அவள் பார்த்தாள்.

“நானே சுதா மனசில் இருப்பது நானே” என்று ராகமாய்ப் பாடியபடி விக்கி இடையில் குதிக்க, மூவராய் இருந்தவர்கள் நால்வராகிப் போயிருந்தனர்.

“சுதா அப்படியா.?” அதிர்ந்து போனாள் ஆரா.

“சரி வாங்க ஆரா லவ்வர்ஸ்க்கு நடுவில் எதுக்கு கரடி மாதிரி நம்ம இருக்கணும்” என அவளின் கரம் பற்றி இழுத்து சென்றவின் பின்னே அவள் சென்றதோடு அவள் மனமும் அவனைத் தொடர்வதை உணர்ந்தாள்.

 அவன் சொல்லிவிட்ட காதல் இவள் மனதை கத்தி இன்றிக் கிழித்தெடுத்தது, முடிவெடுக்கத் தடுமாறினாள் பெண், அவனுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றால் போதும் என்று இன்னொரு மனம் சொல்லியது.

“நீங்க எதுக்குப் பணம் அனுப்புனீங்க.? என்ன அந்த மனோகர்க்கு அடிமை ஆகிட்டீங்களா.? அவர் பணத்தைப் போட்டு விடச் சொன்னாரா.? அவர் தர வேண்டிய சம்பளத்தை எதுக்கு உங்களைப் போட சொல்றார்”வரிசையாய் கேள்விகளை அடுக்கியவள் கரம் பிடித்தவனின் கரத்தை உதறினாள்.

“ஹே ஸ்மைலி.! என் இவ்ளோ கோபம்.? நீ சிரிக்கும் போது இருக்கிற ப்ளஷ், நீ கோபப்படும் போது இன்னும் கூடிடுது, கோபத்தைக் கொஞ்சம் கொறைச்சிக்கோ பிகாஸ்.” என அவன் சொல்லி வசீகரமாய் அவளைப் பார்த்தான். நாணப்பூக்கள் அவள் முகத்தில் அரும்ப அதைப் பட்டென மறைத்து மீண்டும் கோப முகம் பூசிக்கொண்டாள்.

“லிசன் க்ரிஷ்.!”

“ம்ம் அப்படித் தான் இப்போ கிட்ட நெருங்கிட்ட என் பெயரை சொல்லி” என மீண்டும் அவளைச் சீண்டினான்.

“இதென்ன விளையாட்டு க்ரிஷ்.! நீங்க நல்ல ஃப்ரெண்டா இருக்கிறதை தான் நான் விரும்புறேன், இந்த ஒரு மாசத்துல உங்களைப் பார்க்கணும்னோ பேசணும்னோ எனக்குத் தோணவே இல்லை, உங்களுக்கு இருக்கிற அதே உணர்வு என்கிட்ட இல்லை, ப்ளீஸ் இப்படிப் பணத்தை எல்லாம் அனுப்பி விளையாடதீங்க”

“புரியுது ஸ்மைலி.! நான் அனுப்பின அமௌண்ட் உங்களுடையது தான், பிகாஸ் மேட்ரிமோனியை நான் டேக் ஓவர் பண்ணிட்டேன், என்னோட ஓல்ட் எம்ப்ளையீஸ்க்குப் பெண்டிங் இருக்கிற சேலரியை அனுப்பி வச்சேன், பட் இந்தக் காதல் இருக்கிற மனசு உன்னைப் பார்க்க ஏங்கிச்சு அதான் உன்கிட்ட இந்தக் குட்டி கேமை விளையாடிடுச்சு” என அவன் விளக்கிய பின்,

“என்ன க்ரிஷ் எனக்குச் சிக்ஸ்ட்டி தான் பெண்டிங்”

“ஆமாம் மீதி அந்தக் காயத்ரி பொண்ணை ஃபலோ பண்ணினதுக்காக, ஒன் டே டிடெக்டீவா இருந்ததுக்கு”

“அய்யோ அதெல்லாம் வேண்டாம் மண்டகசாயம் சொன்னாருன்னு தான் வந்தேன்”

“பட் நான் மனோ சார்க்கிட்ட சொன்ன பணத்தைத் தான் உங்களுக்குப் பேமெண்ட்டா கொடுத்திருக்கேன் ஸ்மைலி” என அழகாய் புன்னகைத்தான்.

“அந்த வேலையை தான் நான் முடிக்கலையே”

“நோ! நோ!! நீ வொர்க்ல சின்சியரா தான் இருந்த ஆரா” என அவளை பாரட்டினான் அவன்.

“தேங்க்யூ இது என்னோட டெஸ்டினேசன்க்கு உதவியாய் இருக்கும்” எனத் தலையசைத்து கூறியவளுக்குத் தன் உழைப்பிற்க்கு ஏற்ற பலனை பெற்றதில் விழி நீர் ஊற்றெடுத்தது.

“ஹே ஸ்மைலி ஏன் அழற.?” அவள் விழிநீர் கண்டு மனம் கொதித்தெழுந்தது, அவளின் விழிநீரை துடைக்கும் உரிமைக் கூட அவனுக்கில்லை என்று வருத்தம் கொண்டான். அவளின் கண்ணீர் இவன் மனதை மெல்ல கரைத்தது

“இது ஹப்பி டியர்ஸ், தேங்க்ஸ்” கண்ணீருடன் புன்னகைத்தாள்.

“தேங்க்ஸ்லாம் வேண்டாம், நான் ஒரு பார்ட்டி அரெஞ்ஜ் பண்ணிருக்கேன் யூ ஆர் இன்வெய்ட்டட்” என மந்தகாச புன்னகை சிந்தியவனையே பார்த்திருந்தாள் ஆரா.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Click on a star to rate it!

Rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
0
+1
0
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்