விழியால் தொட்ட அழகே – 15

Loading

அத்தியாயம் – 15

தோள்பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை முடித்து,
பதவி உயர்வு கிடைத்த சந்தோசத்துடன் ராமையாவின் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தான் ரிஷி, ரிஷியை கண்டு செவ்வந்தி கண்ணீர் விட, தர்மதுரையின் மனதிலும் வேதனை இருந்தாலும், பாட்டியின் அழுகையால் பேரனின் செய்வதறியாது நிலை கண்டு பேரனுடன் சேர்ந்து அவரும் மனைவியை சமாதான படுத்தினார்,…

“இதுக்கு தான் நீ போலீஸ் ஆக போறேன்னு சொன்ன போது நான் வேணாம்னு மறுத்தேன், ஏற்கனவே என் புள்ளையை இழந்துட்டு நிற்கிறேன், உனக்கு ஏதாவது ஆச்சுனா இந்த கிழவி தாங்க மாட்டாடா” என்று கூறி அழுது புலம்பியவரை, தன்னால் முடியுமானவரை சமாதான படுத்தியவன், கூடவே தனக்கு எதுவும் ஆகாது என்பதையும் அவருக்கு அழுத்தமாய் புரியவைத்து விட்டு, அவர் கொஞ்சம் இயல்பான பிறகே அறை நோக்கி நடந்தான்,…

“செய்தியில உனக்கு நடந்ததை கேள்வி பட்டதுல இருந்து என் பேத்தி ரூமை விட்டு வரவே இல்லை, நாங்க இருக்கும் நிலமையில எங்களாலயும் ஆறுதல் சொல்ல முடியல, முதல்ல போய் உன் பொண்டாட்டியை பாருப்பா” என மூத்தவர்கள் கூறியதை எண்ணிக்கொண்டே அறைக்குள் நுழைந்தவன், கட்டிலில் குப்புறப்படுத்துக் கொண்டு, முகத்தை தலகாணியில் புதைத்த நிலையில் படுத்திருந்த மனைவியை விழிகள் சுருங்க பார்த்தவன், தன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கினான்…

காலடி ஓசையிலேயே கணவன் வந்து விட்டதை அறிந்தவளும் வேகமாக படுக்கையிலிருந்து எழுந்தாள், அவனது காக்கி உடையில் படிந்து காய்ந்திருந்த அதிக்கப்படியான ரத்தத்தையும், அவன் இடது தோள்பட்டையில் போட்டிருந்த பெரிய பேண்டேஜையும் பார்த்து அவள் மனம் துடித்துடித்து போனது, டீவிசெய்தியில் கூறியதை கேட்டு பயந்து போனவளுக்கு அழுகை கட்டுப்பாட்டை மீறி வர, இத்தனை நேரமும் அழுது கொண்டு தான் இருந்தாள் கணவனை எண்ணி, அவனது உயிருக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று ராமையா மூலம் தெரிய வந்த பிறகும் அவள் மனம் படபடப்பதை நிறுத்தவில்லை, அவனை பார்த்தால் தான் மனம் நிம்மதி கொள்ளும் என்ற நிலையில் அவனுக்காக காத்திருந்தவளுக்கு அவனை முழுதாக கண்டுகொண்ட பிறகு தான் இத்தனை நேரம் அடைப்பட்டிருந்த மூச்சு சீராக வெளிப்பட்டது போல் இருந்தது,….

அவளது கலங்கிய முகமே அவள் வெகு நேரம் அழுதிருப்பதை பறை சாற்ற,… “என்ன நித்து,… அழுதியா என்ன, பட் வை” என அவன் கேட்டது தான் தாமதம், அவனது வலது மார்பில் சாய்ந்து கொண்டு மிச்சம் மீதி வைத்திருந்த மொத்த அழுகையையும் கொட்டி விட்டாள் நித்யா,… ரிஷிக்கு உண்மையில் அவள் அழுகை வருத்தத்தை தரவில்லை, அதிக படியான சந்தோசத்தை தந்தது, அவன் மனைவி அழுகிறாள் அதுவும் அவனுக்காக? நினைக்க நினைக்க பட்டாம் பூச்சியாய் பறந்தது மனது, இதழில் இன்றும் கர்வ புன்னகை,…

கொஞ்ச நேரம் அவளது அழுகையை ரசித்தவன், அவள் ஏங்கி கொண்டே போகவும்,… “ஹேய் நித்து போதும்மா” அவளது முதுகை தன் வலது கையால் நீவி விட,… “நான் எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா” அழுகையுடன் சேர்ந்து வந்த அவளுடைய வார்த்தைகளால் அவன் காதில் தேன் வந்து பாய்ந்ததை போல் உணர “அப்படியா” என்றான் உல்லாசமான குரலில்,…

அவள் மீண்டும் அழுகையை நீடிக்க,… “ஓகே ஓகே நித்து, ஐம் பர்ஃபெக்ட்லி ஆல்ரைட், நீயே பாரேன், கைல சின்னதா ஒரு பேண்டேஜ் அவ்ளோ தான், இதெல்லாம் சர்வ சாதாரணமா எப்போதும் நடக்குறது தான்” என அவளது கண்ணீரை துடைத்து விட்டு, அவள் தாடையை பற்றி தன்னை காண வைத்தவன்,… “ஏன் நித்து,.. என் மேல உனக்கு அவ்வளவு பாசமா?” என்றான் கண்கள் பளிச்சிட அவளது பதிலை எதிர்பார்த்து..

அவளோ பதில் பேசாமல் கலங்கிய விழிகளோடு அவனது விழிகளை நோக்கிக்கொண்டிருந்தாள், அவள் உதடுகள் சொல்லாத ஏதோ ஒன்றை அவள் விழிகள் சொல்வது போல் தோன்றியது,… ஆனால் அவனுக்கு அவளது விழியின் மொழி தேவை இல்லை, வாய்மொழி தான் தேவைப்பட்டது, ஆகவே,…. “சொல்லு நித்து” என ஏக்கத்துடன் கேட்க,… பார்வையை திருப்பிக் கொண்டவள், “வலிக்கிதா” என்றாள் அவனது காயம்பட்ட இடத்தை பட்டும் படாமல் தன் பூக்கரத்தினால் வருடியபடி,…

புருவத்தை சுருக்கியவன்.. “இல்ல” என்று வெடுக்கென்ற குரலில் கூறிவிட்டு அவளை விட்டு நகர்ந்து சென்றுவிட்டான்,…

தன் வலது கரத்தினால் சட்டை பட்டனை கழட்டினான், அவனுக்கு உதவி செய்வதற்காக அவள் முன்வர, “நோ தேங்க்ஸ் நித்து, என் வேலையை எனக்கு பண்ணிக்க தெரியும்” அவள் பதில் கூற வில்லையே என்ற கோபமும் ஏக்கமும் அவனுக்கு,…

“ப்ளீஸ் மித்து” அவளது இறைஞ்சும் குரலில், தன் சிறு கோபத்தை தூரபோட்டவன், அவள் இஷ்டத்திற்கு விட்டு விட்டான், மெதுவாக மிகவும் மெல்லமாக அவனுக்கு வலித்து விடுமோ என்ற பதட்டத்திலும் பயத்திலும் அவனது சட்டையை அவன் உடலிலிருந்து உருவி எடுத்தாள்,…

அவன் காயத்தை பார்க்க பார்க்க இருதயம் ஒரு மாதிரி வலி எடுக்க, கண்கள் கலங்கியது மீண்டும், மூக்கை உறிஞ்சு தன்னை சமாதானம் செய்து கொண்டவள், அவன் இலகுவான உடைக்கு மாற உதவி புரிந்தாள்,…

“நான் சாப்பிட கொண்டு வரேன்” என்று கூறி நகர்ந்தவளை அவன் தடுக்கவில்லை, உணவு கொண்டு வந்தவள், அவளே ஊட்டி விட்டாள், டாக்டர் கொடுத்தனுப்பிய மாத்திரைகளை எடுத்து கொடுத்து போட சொன்னாள்,…

படுக்கையில் சாய்வாக அமர்ந்தவன்,… “நீயும் சாப்பிட்டு வா நித்து” என அவளை அனுப்பி வைத்தான், இன்டர்காமின் மூலம் தன் மனைவியை வயிறு நிரம்ப சாப்பிட வைத்து அனுப்புங்க பாட்டி என்று கூறி, ‘ஏன் நீ சொன்னா தான் நான் செய்வேனா, அதெல்லாம் என் பேத்தியை நான் உன்னை விட அக்கறையா பார்த்துப்பேன்’ என்ற பாட்டியின் நக்கல் பேச்சையும், மீண்டுமொரு விசாரிப்பையும் பெற்றுக் கொண்டான்,…

நித்யா அறைக்கு வந்த போது ரிஷி, கண்களை மூடி படுத்திருந்தான், தூங்கி விட்டார் போலும் என நினைத்து சில நிமிடங்கள் அவனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தவள், “என்ன நித்து படுக்குற ஐடியா இல்லயா?” என்ற அவனது குரலில், அப்போதும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தவள், வாய் திறந்து எதுவும் பேசவில்லை, அமைதியாக படுத்துக் கொண்டாள் அவனை பார்த்தவாறே,….

“என்ன மேடம் இன்னைக்கு ஒரு மாதிரி பார்வையெல்லாம் தூக்கலா இருக்கு, அது சரி எங்கே மல்லிகை பூ” என்றான் கள்ள புன்னகையுடன்,…..

அவன் எதற்காக இதை கேட்கிறான் என்பதன் அர்த்தம் புரிந்தவள்,… “இப்போ உங்களுக்கு மல்லிகை பூ தான் ரொம்ப முக்கியமா போச்சு இல்ல” என்றாள் கொஞ்சம் வருத்தமான குரலில்,…..

தள்ளி படுத்திருந்தவளை இழுத்து தனக்கு நெருக்கமாக்கி கொண்டவன்,…. “ஆமா.. சரி ஆரம்பிக்கலாமா?” என கண்சிமிட்டி கேட்க, அவனது காயம்பட்ட தோளை பார்த்தவள்,…. “வேணாம் மித்து, நாளைக்கு” என்று அவள் முழுதாக கூறி முடிக்கும் முன்னே, அவளது இதழை முற்றுகையிட்டிருந்தான், தன் உயிர் போகும் நிலமையில் இருந்தாலும் அவளுடன் உயிரோடு உயிராக சங்கமித்த பிறகே தனதுயிரை துறப்பானே தவிர, அவளை விலகி சென்றுவிட மாட்டான்,… இன்றும் அப்படி தான் தோளிலிருந்த காயம் வலி தந்தாலும், அவளால் கிடைத்த சுகம் அவனது வலியை இருந்த சுவடே இல்லாமல் காணாமல் ஆக்கியது,…

அடுத்த நாள் ரிஷியை பார்ப்பதற்காக நித்யாவின் அன்னை செந்தூர வள்ளியும் தமையன் வருணேஷும் வந்து விட்டனர், இரவே போனில் விசாரித்து உடனே கிளம்பி வருகிறேன் என்ற வருணேஷை ரிஷி தான் வர வேண்டாம் என்று சொன்னாலும் கேட்கமாட்டான் என்று காலையில் வர சொல்லியிருந்தான், செந்தூரத்தின் முகத்தில் வேதனை தெரிந்தது மருமகனின் காயத்தை கண்டு, மாமியாரை சமாதானம் படுத்தியவன், நண்பனிடம் கதை அளந்து கொண்டிருந்தான்,…..

வந்த மாத்திரத்திலேயே தாயும் தமையணும் எதை கவனித்தார்களோ இல்லையோ நித்யாவின் முகத்தில் தெரிந்த அளவுக்கதிகமான வேதனையை நன்றாகவே கவனித்திருந்தனர், அதை கண்டு வருணேஷின் முகத்தில் நிம்மதி படர்ந்தது, செந்தூரம் தன் பக்கத்திலிருந்து மகளுக்கு சில ஆறுதலான வார்த்தைகளை கூறினார்,…

நலம் விசாரித்து, ஆரஅமர்ந்து பேசிவிட்டு, ரிஷி நலமாக இருப்பதை கண்ட நிம்மதியில்  இருவரும் விடைபெற, தாயையும் தமையனையும் வழி அனுப்பி வைப்பதற்காக வாசல் வரை வந்தாள் நித்யா,….

“என்ன ஸ்ரீ இப்போ கூட அண்ணன் கிட்ட பேச மாட்டீயா? அவ்வளவு கோபமா இந்த அண்ணன் மேல” பொறுத்து பொறுத்து பார்த்த வருணேஷ், அவள் வீட்டிற்கு வந்தும் அவளிடம் பேசாமல் செல்வது மனதை அதிகமாக உறுத்த தன் கோபதாபத்தையெல்லாம் விட்டுவிட்டு பேசிவிட்டான்,…

அவளுக்கு மட்டும் தமையனிடம் பேசாமல் இருப்பது என்ன சந்தோசத்தையா கொடுக்கும், அவளும் மருகி தானே கொண்டிருக்கிறாள், போதா குறையாக ரிஷிக்கு ஏற்பட்ட விபத்து வேறு அவள் மனதை ரணமாய் தாக்கிருக்க,… “அண்ணா” என்ற கூவலுடன், அவனை அணைத்து வெடித்து அழுதாள்,…

தங்கையின் கண்ணீரை கண்டு வருணேஷின் கண்களும் கலங்கி விட, தன் பிள்ளைகளை சமாதானம் செய்யும் பொருட்டில் செந்தூரம் இறங்கினார்,…

“அண்ணன் உன் மனசை நோகடிச்சிருந்தா மன்னிச்சிடுடா” அவன் வருத்தத்துடன் கூறவும்,… “அப்படியெல்லாம் சொல்லாதண்ணா” என்று விசும்பியவளுக்கு அதற்கு மேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை…..

“என்னடா…. ரொம்ப பயந்துட்டியா?” அவள் விழிகளில் தெரிந்த பயமும் வேதனையும் அப்பட்டமாய் தெரிய அவள் கூந்தல் வருடி அனுசரணையாக கேட்டான் வருணேஷ்,…

அவள் பதில் கூறாமல் இமைகளை தாழ்த்திக் கொள்ளவும், சின்னதாய் சிரித்தவன்,…. “உன் புருஷனை எப்பேர்பட்ட வீர சூரனாலயும் ஒன்னும் பண்ண முடியாது, அவனை சுற்றி பல எதிரிகள் இருந்தாலும் அவனை பாதுகாத்துக் கொள்ள அவனுக்கு தெரியும், போலீஸ்காரனுக்கு இந்த மாதிரி காயம் படுறதெல்லாம் சகஜம், இதை நினைச்சு நீ கவலை படாத” என்று தங்கைக்கு ஆறுதல் கூறியவன் அப்போது அறிந்திருக்கவில்லை தன் நண்பனின் ஆயுட்காலம் மிகக்குறைவு என்று, மனிதனின் வாழ்க்கை விதியுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த ஒன்று, அதை மாற்ற எந்த வழியும் இல்லை என்பது தான் கவலைக்கிடமானவிஷயம், விதியை மனிதன் முன்னமே கணித்து விட்டால் கடவுள் இருப்பதை மறந்து விடுவானே, இது தான் விதியின் விளையாட்டா?….

Click on a star to rate it!

Rating 4.8 / 5. Vote count: 12

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
2
+1
11
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள் 

1 Comment

  1. ரிஷிக்கு எதுவும் ஆக வேண்டாம். பெற்றோரை இழந்த பின் இப்ப தான் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்கிறான்..