விழியால் தொட்ட அழகே – 14

Loading

அத்தியாயம் – 14

“ஸ்டேஷன் போகாம ஏன் சார் இங்க வந்திருக்கோம்” பறவைகளின் சத்தத்தை தவிர வேறு எந்த வித இரைச்சலான சத்தமோ மனிதர்களின் சத்தமோ இல்லா ஆளரவம் இல்லா அந்த சாலையை சுற்றி நோட்டமிட்டபடியே வினவினான் கார்த்திக்,…

“ஸ்டேஷன் போனா என்னாகிட போகுது கார்த்திக், மிஞ்சி மிஞ்சி போனா ஒரு ரெண்டு நிமிஷம் இவன் லாக்கப்ல இருப்பானா? அது கூட டவுட் தான், நாம ஸ்டேஷன் போன நேரத்துல கரெக்ட்டா டிஜிபி அங்கே ஆஜராகிருப்பாரு, என்ன நான் சொல்றது கரெக்ட்டா? இல்லையா?” ரிஷி அனைத்தையும் கணித்து சரியாக கேட்க, கார்த்திக் ஆமோதிப்பதாய் தலையசைத்தான்…

“ம்ம்ம்… ஸோ அதான் இவனை இங்க அழைச்சிட்டு வந்தேன்” என்றான் விவேக்கின் மீது குரூர பார்வை வீசியவாறு,….

“இப்போ என்ன சார் பண்ணலாம்னு இருக்கீங்க” ரிஷியின் பிளான் தெரியாமல் அவனிடமே அவன் பிளானை பற்றி கேட்டிட…. “சிம்பிள், என்கவுன்டர் பண்ண போறேன்” நக்கல் தோரணையில் கூறினாலும் அவன் விழிகளில் அளவுக்கு அதிகமான ரௌத்திரம் தெரிந்தது…

அதிர்ந்து போன கார்த்திக்…. “சார் இதனால பிரட்சனை எதுவும் வந்திடாதா?” என்றான்,…

“பிரட்சனை வந்தா அதை எப்படி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும் கார்த்திக்” என்றவன்,… பயந்து நடுங்கி போய் நின்ற அமைச்சர் மகனின் புறம் பார்வையை திரும்பியவன், அவனை சினத்தை தேக்கி வைத்து பார்த்தவாறே கையில் தன் துப்பாக்கியை எடுத்தான்,…. “உன்னை துடிக்க துடிக்க கொல்லணும்னு தான் மனசு அடிச்சி துடிக்கிது, அப்படி பண்ணா சட்டத்தை மீறிட்ட அப்படி இப்படின்னு என் காக்கி சட்டையை உருவிடுவானுங்களே சில பிக்காளி பயலுங்க, எனக்கு என் ஜாப் ரொம்ப இம்பார்ட்டண்ட், ஸோ ஸ்ட்ரைட்டா” என பேசிக் கொண்டிருந்தவன் யோசிக்காமல் சட்டென்று விவேக்கின் நடு நெற்றியில் புல்லட்டை இறக்கிட, ரத்தம் வழிந்தோட தார்சாலையில் பொத்தென்று விழுந்து இறந்து போனான் அந்த காமுகன்…

கார்த்திக் திகைத்து போய் நின்றான், ரிஷி சட்டென்று சுட்டு விடுவான் என்று எதிர்பாக்கவில்லை, ரிஷியுடன் சேர்ந்து அவனும் பல என்கவுண்டரில் ஈடுபட்டிருக்கிறான் தான், ஆனால் தற்போது நடந்த சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது அவனுக்குள்…..

“சார்… இது வெளிய தெரிஞ்சா என்னாகும், அமைச்சர் உங்களை என்ன வேணும்னாலும் செய்வாரு சார்” அரண்டு போன பார்வையில் கூறினான் கார்த்திக்,….

“ஐ டோன்ட் கேர்” ரிஷியின் அலட்சியமான வார்த்தையில் தொண்டை அடைக்க நின்றவனை நேர் கொண்டு பார்த்தவன் “அநீதி இழைக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கிறது தானே நியாயம் கார்த்திக், தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்காத போது அந்த தண்டனையை நாம நம்ம கையால கொடுக்கிறதுல தவறெதுவும் இல்ல, இந்த மாதிரி அயோக்கியன் உயிரோடு இருக்கும் வரை அன்னம் மாதிரி இன்னும் எத்தனையோ பொண்ணுங்க நாசமாக்கப்பட்டு சாகடிக்கப்படுவாங்க, அன்னைக்கே இதை நான் பண்ணிருக்கணும், பண்ணிருந்தா அந்த சின்ன பொண்ணு அவ்ளோ துயரப்பட்டு இறந்து போயிருக்காது” என்று மனமுடைந்து கூறியவன்,…. “இப்போ தான் நான் அணிந்திருக்கும் இந்த காக்கி உடைக்கு பெரும்மதிப்பு வந்தது போல ஃபீல் பண்ணுறேன்” என்றான் பூரிப்புடன்,…

“நீங்க சொல்றது எல்லாம் சரி தான் சார், இவனை மாதிரி ஒருத்தன் கண்டிப்பா உயிரோட இருக்க கூடாது தான், நீங்க பண்ணுனது நூறு சதவிகிதம் கரெக்ட், பட் இதை எப்படி நாம சால்வ் பண்ண போறோம்” என்றான் கார்த்திக்,…

“நாம சால்வ் பண்ணாத சிட்சுவேஷனா? கார்த்திக்” என்று உல்லாசமாய் கூறியவன்,… “உன் கன்னை வச்சு என்னை ஷூட் பண்ணு” என்றதும் “சார்” என்று அதிர்ந்து விழித்தான் கார்த்திக்,…

“ஏன் கார்த்திக் இவ்ளோ ஷாக், என்னை கொலை பண்ண சொல்லல, ஜஸ்ட் ஷூட் பண்ண தான் சொன்னேன், இங்கே சோல்டர்ல” ரிஷி கரத்தால் தட்டி காட்ட,… “உங்களை நான் ஷூட் பண்ணனுமா, முடியாது சார், என்னால முடியாது” என்றார் அவன் மறுப்பாய்….

“ஹேய் கமான் கார்த்திக், எனக்கு படாத குண்டடியா? எத்தனையோ சீக்ரட் ஆபரேஷன்ல நீயும் என் கூட இருந்திருக்க, தப்பி தவறி எதிராளிகளோட குண்டு என் உடல்லயும் பாய்ந்திருக்கு, அப்போ நான் ஒன்னும் செத்து போயிடலயே, இப்போ உன்னை சோல்டர்ல தான் ஷூட் பண்ண சொல்றேன், நெஞ்சுல இல்ல, நீ இப்போ என்னை ஷூட் பண்ணா தான் அந்த அமைச்சர் மகன் என்னை கொல்ல ட்ரை பண்ணான், தற்காத்து கொள்வதற்காக நான் அவனை ஷூட் பண்ணிட்டேன்னு சொல்லி கேஸை முடிச்சிடலாம் ” என்றவன்,… “கமான் கார்த்திக், கன்னை எடு” என்றான்,…

“சார்” என் அவன் தயங்க,… “சொன்னது புரியலயா” அவனது அதட்டலில் மிரண்டு போனவன், தன் இடுப்பில் சொருகிருந்த துப்பாக்கியை கையில் எடுத்தான், “ஹ்ம்ம்… ஷூட்” ரிஷி நிமிர்வுடன் விழிகளில் கொஞ்சமும் பயம் இல்லாமல் நிற்க, கார்த்திக்கோ,.. “சார் கண்ணை மூடிக்கிறீங்களா? உங்க பார்வை என்னை பயமுறுத்துது” அவன் கூற, சின்ன புன்னகையுடன் விழிகளை மூடிக் கொண்டான் ரிஷி,….

அவன் விழிகளை மூடிக் கொண்ட மறுநொடி, இங்கு கார்த்திக்கின் இதழில் குரூர புன்னகை, விழிகளில் அளவுக்கதிகமான கோபம், தன் பழிவாங்கல் படலத்திற்க்காக சரியான சந்தர்ப்பம் அமைந்ததாக நினைத்தவன், ரிஷியின் நெஞ்சிற்கு குறி வைத்தான்,….

விழிகளை மூடி நின்ற ரிஷியின் மனக்கண்ணிலோ அவனது மனையாள் தான் வந்து நின்றாள் சிரித்த முகமாக,… அவன் இதழ் அழகாக புன்னகைக்க, இங்கு அவன் நெஞ்சை குறி வைத்து நின்ற கார்த்திக் அவனது புன்னகையில் தடுமாறி,, எதுவும் கண்டுபிடித்துவிட்டானா எனும் பயத்தில் நின்றான்…

துப்பாக்கி பிடித்திருந்த கரம் ஆட்டம் காண, மற்றொரு கரத்தால் அழுத்திக் பிடித்துக் கொண்டவன், அவனை சுட ஆயத்தமாக, ரிஷியோ மனைவியின் நினைவலைகளிலிருந்து வெளிவந்து, இன்னும் அவன் ஏன் தன்னை சுடவில்லை என நினைத்து விழிகளை திறந்த மறுநொடி, கார்த்திக்கின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த குண்டு அவன் நெஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தது,…

துப்பாக்கி சூட்டில் கைதேர்ந்தவன், தன் கழுகு பார்வையால் அதனை கவனித்து கொஞ்சம் விலக, அந்த குண்டு அவனின் நெஞ்சு பகுதியிலிருந்து தள்ளி இரண்டு இன்ச் விட்டு போய் பாய்ந்தது,… ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அவன் விலகிய காரணத்தினால் மட்டுமே அவன் அன்று உயிர்பிழைத்தான், இல்லையென்றால் அன்றே அவன் உயிர் மாய்க்கபட்டிருக்கும்,…

ரத்தம் பீறிட்டுக் கொண்டு வெளியேறிய இடத்தில் தன் வலது கரத்தால் அழுந்த பொத்தியவன்,… “கார்த்திக் இப்போ என்ன பண்ண?” என்றான்…

“ஸாரி சார், பதட்டத்துல, ஐப்யோ ஸாரி சார், நான் வேணும்னு பண்ணல, கை நடுக்கத்துல குறி தப்பிடுச்சி” என துப்பாக்கியை கீழே போட்டுவிட்டு தரையில் முழங்காலிட்டு அமர்ந்தவனை, தன் கூர் விழிகளால் அளவிட்டான் ரிஷி மித்ரன்,,….

அடுத்த சில மணி நேரத்தில் தீயாய் பரவியது இச்செய்தி, நியூஸ் சேன்னல் எங்கிலும் இதுவே முக்கிய செய்தியாய் ஓடிக்கொண்டிருந்தது, மீடியாக்காரர்கள் போலீஸ் அதிகாரிகளை தங்கள் கேள்வியால் துளைத்தெடுத்தனர், ரிஷிக்கு காயம் பட்டிருப்பதால் அவன் மருத்துவ உதவியை நாடிக்கொண்டிருக்க, கமிஷனர் உதயகுமரனை பிடித்துக் கொண்டு கேள்வி மேல் கேள்விகளை எழுப்பினர் மீடியாக்காரர்கள்,…

“மித்ரன் சார் எப்படி இருக்காரு சார்? அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில இருக்காரா?”

“அமைச்சர் மகன் விவேக் தான் மித்ரன் சாரை ஷூட் பண்ணாரா? தன்னை பாதுகாத்து கொள்ள தான் மித்ரன் சார் அந்த விவேக்கை சுட்டு கொன்னுட்டாரா?”

“விவேக் ஸ்பாட் அவுட்டா? இல்ல அவருக்கும் ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கா சார்?”

“காட்டுப்பகுதியில கிடந்த பொண்ணை அமைச்சர் மகன் விவேக் தான் வன்புணர்வு செய்து கொலை செய்தாரா?”

“அமைச்சர் மகன் பல பெண்களை பாலியல் வன்புணர்வு செய்ததா கூற படுற செய்தி உண்மையா? சார்”

“அமைச்சர் மகன் என்பதால தான் அவர் குற்றம் செய்தவர்னு தெரிஞ்சும் அவரை சட்டப்படி தண்டிக்காம இருந்தீங்களா?”

“அமைச்சர் சந்தன பெருமாள் உங்க போலீஸ் டிப்பார்ட்மெண்ட்க்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரு? பணத்துக்கு ஆசை பட்டு தான் விவேக் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காம இருந்தீங்களா?” என்று கமிஷனரை சுற்றி வளைத்து கேள்விக்கு மேல் கேள்வி எழுப்ப, இவர்களிடமிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தடுமாறியவர், தன்னை ஓரளவு சமன் படுத்திக் கொண்டு,… “இங்க பாருங்க, எஸ்பி ரிஷி மித்ரனின் உயிருக்கு எந்தவித ஆபத்தும் இல்ல, அவருக்கு ட்ரீட்மெண்ட் முடிஞ்சது, நல்லபடியா இருக்காரு, அமைச்சர் மகன் விவேக் உயிரோடு இல்லை அவர் இறந்து மூணு மணிநேரமாச்சு, அப்புறம் அமைச்சர் கிட்ட போலீஸ் டிப்பார்ட்மெண்ட் லஞ்சம் எதுவும் வாங்கல, அவர் மகன் குற்றம் செய்தார்ன்னு எங்களுக்கு போதிய ஆதாரம் கிடைக்காததால தான் நாங்க அமைதியா இருந்தோம், ஆதாரம் இல்லாம யாரையும் குற்றவாளியா நிரூபிக்க முடியாது அது உங்களுக்கும் தெரியும்,

காட்டு பகுதியில கண்டெடுக்கப்பட்ட அன்னம் என்கிற பொண்ணோட கொலை கேஸ்ல தான் எஸ்பி ரிஷி மித்ரன் ஆதராத்தை சேகரித்திருக்கிறார், முதல் ஆதாரம் அமைச்சர் வீட்டில் தோட்டகாரரா வேலை செய்கிற கோபால், தோட்டகாரர் கோபால் கண் எதிர்க்கவே பார்த்திருக்கிறார் அந்த சிறுப்பெண்ணை அமைச்சர் மகன் பாலியல் வன்கொடுமை செய்ததை, விவேக்கும் அவரை கண்டு கொண்டு இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா உன்னோடு சேர்த்து உன் குடும்பத்தையும் அழிச்சிடுவேணு பயமுறுத்திருக்கான், அந்த பயத்துல வாய் மூடியவர், அன்னத்தோட இறப்பை கேள்வி பட்டதும் மனசு கேட்காம போலீஸ்ல வந்து புகார் கொடுத்திருக்காரு, இரண்டாவது ஆதாரம் விவேக் தன் வாய்மொழியாகவே கூறி இருக்கிறான் ரிஷிமித்ரன் கிட்ட, அதை தன்னோட போன்ல ரெக்கார்ட் பண்ணிருக்காரு மித்ரன், விவேக்கை அரஸ்ட் பண்ணிட்டு வர வழியில தான் அவன் எஸ்ஐ கார்த்திக்கின் கன்னை கைப்பற்றி மித்ரனை கொலை செய்யும் நோக்கில் சூட் பண்ணிருக்கான், தன் உயிரை காப்பாற்றி கொள்வதற்காக மித்ரன் விவேக்கை சூட் பண்ணிருக்காரு, சம்பவ இடத்திலேயே விவேக் உயிர் போயிருக்கு, மித்ரன் தோள்பட்டையில் குண்டு பாய்ந்ததால அவர் உயிர் பிழைச்சுக்கிட்டாரு,” என்று தன் உரையை முடித்தார் கமிஷனர் உதயகுமார்,…

“ஸோ மித்ரன் சார் தன்னை காத்து கொள்வதற்காக தான் விவேக்கை கொலை செய்திருக்கிறார் ரைட், அவர் செய்தது கொலைன்னு கூட சொல்ல முடியாது, அப்படி தானே கமிஷனர் சார்”

“எங்களை பொறுத்தமட்டில் விவேக் மாதிரி ஒருவனை கொலை செய்ததற்காக அவருக்கு பாராட்டு சான்றிதழ் தான் வழங்க வேண்டும், இதை கொலை என்பதை விட என்கவுன்டர்னு சொல்லி முடிக்கலாம்”

“எஸ் எஸ்… மித்ரன் சார் எத்தனையோ என்கவுன்டர் பண்ணிருக்காரு, அதுல இதுவும் ஒன்றாக இருந்துட்டு போகட்டுமே”

“என்ன கமிஷனர் சார் ஆன்சர் பண்ண மாட்டேங்கிறீங்க, மித்ரன் சாரை ட்ரான்ஸ்பர் பண்ண போறீங்களா? இல்ல டிஸ்மிஸ் பண்ண போறீங்களா?, இதுல ஏதாவது ஒன்று நடந்தாலும் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது”

“மித்ரன் சார் மாதிரி ஒரு நேர்மையான ஆபீசர் இந்த ஊருக்கு நிச்சயம் தேவை, அவரிடம் உண்மை இருக்கு, அவருக்கு தண்டனை கொடுகிறதா நினைத்து இந்த ஊரின் நிம்மதியை கெடுத்து விற்றாதீங்க” என்று ஒவ்வொருவரும் ரிஷியை விட்டுக் கொடுக்காமல் பேசுறதை கேட்கும் போதே, அவன் அவர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்திருப்பது புரிந்தது, இருக்காதா பின்ன அவன் எந்த ஒரு கேஸ் வெற்றிகரமாக முடித்தாலும் மீடியாக்காரர்களிடம் தானே முன் வந்து பேட்டி கொடுத்து விடுவான், அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விகளுக்கும் சளைக்காமல் நேர்மையாக தெளிவாக பதில் கூறி, அவர்களை தன் பக்கம் இழுத்து வைத்திருந்தான், அவனது நேர்மைக்கு கிடைத்த வெற்றி தான் இத்தனை பேரிடமிருந்து அவனுக்கு கிடைத்த ஆதரவான வார்த்தைகள், அவன் கொலையே செய்திருந்தாலும் அதில் நியாயம் மட்டுமே இருக்கு என்பதையும் அவர்கள் தெளிவாய் காட்டி கொடுக்க, மௌனமாய் நின்ற கமிஷனர்,… “மித்ரனை நான் டிஸ்மிஸ்ஸும் பண்ண போறதில்லை, ட்ரான்ஸ்பரும் பண்ண போறதில்லை, புரோமோசன் கொடுக்க போறேன்” கொஞ்சம் சிரித்த முகமாய் அவர் கூறவும், பெரிய கைதட்டல் ஒலி எழும்பியது அவரை சுற்றி நின்றவர்களிடமிருந்து, அன்றைய தினம் முதல் எஸ்பி ரிஷிமித்ரன், டிஎஸ்பி யாக நியமனம் செய்ய பட்டான்,….

Click on a star to rate it!

Rating 4.7 / 5. Vote count: 11

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
4
+1
7
+1
2
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்