உன் விழியாக நானாகிறேன் அத்தியாயம் -12

Loading

அத்தியாயம் -12

அவனோ “எனக்கு இப்போ குழந்தை இருக்கு இந்த மாதிரி கேவலமாக நடந்துக் கொள்ள  மாட்டான்.ரொம்ப மரியாதையா இருப்பான், ஏன்னா அவனோட அம்மா ரொம்ப க்ளாஸி” என்று ஆதிரையை விட அவன் சந்தோஷமாக இருப்பதாக பதில் சொன்னான் அரவிந்த் அவளின் முன்னாள் கணவன்.

அதை எல்லாம் காதில் வாங்காது நேராக தன் இருப்பிடத்தில் போய் அமர்ந்தவள் படபடவென துடித்த இதயத்தியத்தை நீண்ட பெருமூச்சு விட்டு  தண்ணீரை குடித்து ஆசுவாசப்படுத்தினாள்.

அரவிந்த்  அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

ஆதிரை தன் வேலையில் கவனமாக இருந்தாள்.

மாலையில் வேலை முடியும் நேரம் அரவிந்த்யைப்  பார்க்க மாடர்ன் உடையணிந்து ஒருத்தி கையில் ஒன்றரை வயது ஆண்குழந்தையை கையில் பிடித்தப்படி வந்தாள்.

நேராக அவள் சென்றதும் அரவிந்த் அந்தப் பெண்ணின் தோள் மீது கைப்போட்டு அணைத்துக் கொண்டவன் தன் பிள்ளையை கையில் ஏந்திக் கொண்டான்.

இதை எல்லாம் ஆதிரை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு செய்தவன் அவளை பார்க்க அவளோ கோப்புகளை எடுத்துக் கொண்டு கிளம்ப தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவள் பார்த்து இருப்பாள் என்ற துணிவோடு அந்தப் பெண்ணோடு நடந்தான்.இவளோ எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் இருந்துக் கொண்டாள்.இவளோடு வந்த பெண் “மேம் நான் இன்னைக்கு கொஞ்ச நேரம் வெளியே போறேன் பர்ஸ்னல் வொர்க் இருக்கு நீங்களும் ஒரே இடத்துல தானே இருக்கீங்க வெளியேவும் போகலாமே மேம்” என்றாள்.

அவளைப் பார்த்து சிரித்தவள் “தாங்ஸ் இது ஒரு நல்ல யோசனை அப்புறம் நைட் எப்படியும் ரூம்க்கு வந்ததும் ரீச் ஆகிட்டேன்னு மெஸேஜ் ஒன்னு அனுப்பிடுங்க ஏன்னா  நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்” என்று மறைமுகமாக சொல்லிக் கொண்டுச் சென்றாள்.

அந்தப் பெண்ணோ சரியென்று தலையசைத்தாள்.

கோப்புகளை எல்லாம் அறையில் வைத்து விட்டு புடவையிலிருந்து உடை மாற்றி கொஞ்சம் தளர்வான ஆடையை அணிந்தவள் அப்படியே மெத்தையில் சரிந்தாள்.

அரவிந்த்  வந்து அவளை பார்த்த பார்வையே கண்முன்னால் வந்து போனது.இன்னும் எத்தனை நாட்களுக்கு இவனின் முகத்தை பார்க்க வேண்டுமோ என்பதை நினைத்து கோபமும் ஆற்றாமையும் வந்தது.

அதுவே அவளை இன்னுமாய் தொந்தரவு செய்ய எழுந்து அமர்ந்தவள் சிறிது நேரம் வெளியே செல்லலாம் என்று அறையிலிருந்து வெளியே வந்தாள் ஆதிரை.

இணையத்தின் உதவியால் யு.பி சிட்டி மால் வணிக வளாகத்திற்கு சென்றாள்.அங்கே கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்து விட்டு தாகமாக இருப்பதால் எதாவது குடிக்கலாம் என்று ஒரு கடையில் அமர்ந்தவள் மாதுளம் பழச்சாற்றை கொண்டு வரச் சொன்னாள்.

எல்லோரும் எதாவது ஒரு நபருடன் வந்திருப்பதை கவனித்தாள்.இந்த உலகில் யாராவது ஒருவரின் இணக்கம் மனிதனுக்கு தேவையாகத் தானே இருக்கிறது.யாரையும் சார்ந்து வாழவில்லை என்பது எல்லாம் ஒரு குருட்டுப் பேச்சு. அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளாதே! என்று  தன் மனத்திற்கு ஆறுதல் நினைத்தாலும் அரவிந்த் அவன் மனைவியோடு செல்வது நினைவுக்கு வந்தது.

அப்போது தன் பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்த்தாள்.அரவிந்த்தோடு எப்போது வெளியே சென்றாலும் ஆதிரையிடம் “உனக்கு டிரெஸ்ஸிங் சென்சே இல்லை” என்று குறைப்பட்டுக் கொள்வான்.அதோடு அவ்வளவாக ஒப்பனை இல்லாமல் இருப்பதால் மற்ற பெண்களைப்  பற்றி புகழ்வதோடு அவர்களின் அந்தரங்களைப் பற்றி தன் மனைவியான ஆதிரையிடம் புகழ்ந்து பேசுவான்.

இதெல்லாமே அவளுக்கு அருவருப்பாக இருக்கும்.ஆனால் இப்போது இன்னொருவளுடன் அவனால் எப்படி இவ்வளவு இணக்கமாக வாழ முடிகிறது? என்ற யோசனையில் அப்படியே  அமர்ந்திருக்கும் போது “ஹாய் ஸ்லிப்பிங் பியூட்டி” என்ற குரல் அதுவும் ஆதிரை இத்தனை நாட்களாக தேடிக் கொண்டிருந்த குரல் அவளுக்கு அருகே கேட்டது.

யோசனையோடு திரும்பிப் பார்த்தாள்.முகம் முழுக்க புன்னகையோடு அவளை நோக்கி வந்தான் தர்ஷன்.அவன் தானா? என்று எழுந்து நிற்க அவனோ “ஹாய் ஆதி எப்படி இருக்கீங்க?” என்று அவள் கேட்காமலேயே எதிரே வந்து உட்கார்ந்தான்.

அவள் அப்படியே நின்றுக் கொண்டிருக்க அவனோ “மரியாதை மனசுல இருந்தா போதும் உட்காருங்க ஆதி” என்று சொல்லி சிரித்தான்.

இவளோ அவன் சொன்ன பதிலைக் கேட்டு முறைத்தப்படி “நல்லா இருகேன் நீங்க என்ன இந்தப்பக்கம் வந்து இருக்கீங்க” என்றதற்கு தலையை சாய்த்து சிரித்தப்படி அவளையே பார்த்தவன் “ரொம்ப ஆழ்ந்த யோசனை போல” என்றான்.

அவன் அப்படிக் கேட்டதும் கண்ணின் கருவிழிகள் இரண்டையும் அப்படி இப்படி அசைத்தவள் “ஒன்னுமில்லை” என்றாள்.

அவனோ விடாப்பிடியாக “சரி சொல்ல விருப்பம் இல்லை போல என்ன திடீர்னு பெங்களூருக்கு வந்து இருக்கீங்க?”

அவளோ “இந்த கேள்வியை நான் தான் முதல்ல கேட்டேன் பதில் சொல்லுங்க” என்றதும் அவனோ “பிஸ்னஸ் விஷயமா வந்து இருந்தேன் சரி அப்படியே சுத்திப் பார்க்கலாம்னு வந்தேன்” என்றான்.

“ம்ம்… ஓகே நானும் கம்பெனி விஷயமாத் தான் வந்தேன்” என்றாள்.

“என்னாச்சு?”

ஆதிரை தன் பிரச்சினையைப் பற்றி சொன்னாள்.

எல்லாவற்றையும் பொறுமையாகக்  கேட்டான்.பதில் சொல்லாமல் யோசனையோடு அமைதியாக இருந்தான்.

அதைப் பார்த்தவள் “என்னோட பிரச்சினையை விடுங்க அன்னைக்கு ஏன் சொல்லாமல் போயிட்டீங்க?” என்று கேட்டாள்.

“ஏன் ரொம்ப பிலிங்கா இருந்துச்சா?”

அவளோ முறைத்துப் பார்த்து “எனக்கு இல்லை சிந்தியா ரொம்ப கவலைப்பட்டா அதனாலத் தான் கேட்டேன்” என்றாள்.

அவள் சொன்னதும் மெலிதாக புன்னகைத்தவன் “ நான் மதனுக்கு மெஸேஜ் அனுப்பிட்டு தானே போனேன்” என்று சொல்லி விட்டு குறுகுறு பார்வையோடு ஆதிரையைப் பார்த்தான்.

‘’மாட்டிக் கொண்டோம்’ என்று நினைத்தவள் “அதெல்லாம் தெரியாது சிந்தியா நீங்க உடனே கிளம்பிட்டீங்கன்னு சொன்னாள்” என்று மறுபடியும் பொய் சொல்கிறோம் என்று நினைத்து உண்மையைச் சொன்னாள்.

அவள் சொல்லியிருந்த பழச்சாறும் வந்திருக்க அதைப் பார்த்தவன் அதைக் கொண்டு வந்தவரிடம் “இன்னொரு க்ளாஸ் கொண்டு வாங்க என்றவன் ஆதிரையிடம் “இந்த மாதுளம் பழ ஜீசை முழுவதும் குடிச்சா வயிறு நிரம்பிடும் அதனால நீங்க பாதி நான் பாதி குடிச்சிட்டு வெளியே எனக்கு தெரிஞ்ச ஒரு கடை இருக்கு அங்கே போய் சாப்பிடலாம்” என்றான்.

அவளிடம் அனுமதி கேட்காமலேயே தர்ஷன் முடிவெடுத்துச் சொன்னான்.உடனே ஆதிரை “நான் எங்கேயும் வரலை” என்று பட்டென்று பதில் சொன்னாள்.அதைக் கேட்டு  மனதினுள் நினைத்து சிரித்தவன் “ஆதி தனியாகத் தானே வந்து இருக்கீங்க,இங்கே நான் அடிக்கடி வந்து இருக்கேன் ஒரு ரவுண்டு போய்ட்டு வரலாமா? ப்ளீஸ் எனக்காக ருத்ராவிற்காக” என்று அவளிடம் கெஞ்சினான்.

அவளோ “நாளைக்கு சீக்கிரமா கம்பெனிக்கு போகனுமே!” என்று பொய்யாக நடித்தாள்.

‘அவளுக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும் ஆசை தான் தனியாக வந்தவளுக்கு எங்கே செல்ல வேண்டும் என்று தெரியவில்லை.ஆனால் சட்டென்று ஒத்துக் கொண்டாள் தவறாக எண்ணிக் கொள்வானோ?’ என்ற எண்ணம் தடுத்தது.

உடனே அவளோ அமைதியாக இருந்தாள்.

“ப்ச் வாங்க ஆதி டைம் இப்போவே லேட் ஆகிடுச்சு” என்று அவள் வாங்கிய பழச்சாற்றை பருகியபடி சொன்னான்.

உடனே ஆதிரை  “சரி ரொம்ப லேட் ஆகிடாதீங்க தர்ஷன் சீக்கிரம் ரூம்க்கு போகனும்” என்றதற்கு சரியென்பது  போல் தலையசைத்து விட்டு இருவரும் பழச்சாற்றை குடித்து விட்டு சென்றனர்.

இருவரும் ஒன்றாக நடக்க ஆரம்பித்தனர்.தர்ஷன் ஆதிரையிடம் “ஆட்டோல போகலாமா? இல்லை நடந்தா?”

 

அவனைப் பார்த்து முறைத்தவள் “வெளியே சாப்பிட கூடிட்டு போறேன்னு சொல்லிட்டு இப்போ நடராஜா சர்வீஸா?” என்று கிண்டலாகக் கேட்டாள்.

 

உடனே அவனோ சிரித்துக் கொண்டே “வேகமாக போய் என்னச் செய்யப் போறோம் அப்படியே வெளியே வேடிக்கைப் பார்த்துட்டு நடந்து போகலாமே இங்கிருந்து இருபது நிமிசம் தான் போயிடலாம்” என்று சொல்லி அவளையும் தன்னோடு அழைத்துக் கொண்டு வேடிக்கைப் பார்த்தபடியே நடந்தனர்.

 

அமைதியாக நடந்துக் கொண்டிருக்கும் போது சட்டென்று நின்றவன் “ஆதி இந்த கடைக்கு போய் ஒரு பொருள் வாங்கனும் வாங்க போலாம்” என்று உள்ளே சென்றான்.இவளும் அவன் பின்னாலேயே சென்றாள்.

 

அது ஒரு நகைக்கடை.ஆதிரை சுற்றிப் பார்த்த படியே “யாருக்கு என்ன வாங்கப் போறீங்க?” என்று விழிகளை அங்கும் இங்கும் சூழல விட்டப்படி கேட்டாள்.

 

அவனோ “என்னோட ப்ரெண்ட்டுக்கு சின்னதா ஒரு கிப்ட் வாங்கனும் செலக்ஷன் பண்ண ஹெல்ப் பண்ணுறீங்களா?”

 

“ம்ம்… சரி” என்று அவளை மோதிரம் இருக்கும் பக்கம் அழைத்துச் சென்றான்.

 

அங்கிருந்தவரிடம் “ஜோடியாக போடுற மாதிரி மோதிரம் காட்டுங்க” என்று சொன்னான் தர்ஷன்.

ஆதி மெதுவாக “வெட்டிங் ரிங்கா வாங்க போறீங்க?”

 

“அந்தளவுக்கு ரொம்ப காஸ்லியா இல்லை ஆனால் வெட்டிங் மோதிரம் தான்” என்றான்.

 

அங்கே நிறைய வகையான சேகரிப்பு மாதிரிகள் இருந்தன.அதைப் பார்த்த தர்ஷன் “நல்ல அழகா ஒன்னு பார்த்து செலக்ட் பண்ணுங்க ஆதி” என்றான்.அவளோ எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டபடியே “அளவுக்கு என்ன பண்ணுறது?”

 

தர்ஷன் “பிரச்சினை இல்லை நானும் நீங்களும் போட்டு பார்த்து வாங்கலாம்” என்றான்.அவன் சொன்ன பதிலை கேட்டு ஒருநொடி இவளும் யோசனையோடு சரியென்று ஒவ்வொன்றாக பார்த்தவள் இன்னும் சில வித்தியாசமான மாடல்களை கொண்டு வரச் சொன்னாள்.

 

அதில் ஒன்றை பார்த்ததும் அவள் கண்கள் ஆச்சரியத்தில் விரிய அதை எடுத்து தன் விரல்களில் போட்டு பார்த்தவள் “ரொம்ப அழகா இருக்குல்ல தர்ஷன் இங்கே பாருங்க” என்று தன் கையை திருப்பி அவனிடம் காட்டினாள்.

 

அவனோ “ரொம்ப அழகா இருக்கு” என்றவன் அதனுடைய ஜோடி மோதிரத்தை தன் விரல்களில் அணிந்தவன் “ம்ம்… நல்லா இருக்கா?” என்று கேட்டான். அவளோ கைவிரலை மடக்கி “சூப்பர்” என்றாள்.

 

உடனே தர்ஷன் “இந்த மோதிரம் எவ்வளவு?” என்றதற்கு அதை விற்பவர் “இதுல டைமண்ட் கல் பதிக்கப்பட்டு இருக்கு கொஞ்சம் காஸ்ட்லி சார்” என்றார்.

 

உடனே தர்ஷன் “வேண்டாம் நம்ம பட்ஜெட்டுக்கு வராது போல” என்றவன் ஆதிரையிடம் “வேற எதாவது நல்ல டிசைனா செலக்ட் பண்ணுங்க”  என்றதும் வேறு ஒன்றை அவள் தேர்வு செய்து கொடுத்தாள்.அது தர்ஷன் நினைத்த அளவிற்கான பணமதிப்பில் இருக்கவும்  அதையே வாங்கிக் கொண்டான்.

 

இருவரும் திரும்பவும் கொஞ்ச தூரம் நடக்கவும் அங்கே சாலையோரத்தில் அழகான பொம்மைகள் இருப்பதைக் கண்டவள் “தர்ஷன் இங்கே என் பொண்ணுக்கு எதாவது வாங்கிட்டு வரேன்” என்று ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தாள்.அவளுக்கு எது எடுக்கவென்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தாள்.

 

அதைப் பார்த்த தர்ஷன் “மற்றவர்களுக்காக உடனே செலக்ட் பண்ணுறீங்க ஆனால் உங்களுக்காக அப்படின்னா முடிவெடுக்க முடியலை இருங்க “ என்று கடைக்கு சென்று இரண்டு  அழகிய பொம்மைகளை எடுத்து வந்து ஆதிரையிடம் கொடுத்தவன் “வியன்கைவுக்கு இது என்னோட பரிசு” என்றான்.

 

ஆதிரையோ “எதுக்கு தர்ஷன் தேவையில்லாத செலவு?” என்றாள்.

 

அவனோ “நீங்க வாங்கி கொடுக்கும் போது நான் அதை அன்பான பரிசாகத் தானே பார்த்தேன் அதையே நான் வாங்கிக் கொடுக்க போது எதுக்கு அவாய்ட் பண்ணுறீங்க?” என்று நேரிடையாகவே கேட்டு அவள் கையில் திணித்து விட்டு வேகமாக முன்னால் நடந்தான்.

இவளோ “தர்ஷன் தர்ஷன் ப்ளீஸ் நில்லுங்க” என்றதற்கு அவனோ திரும்பிப் பார்க்காமல் முன்னால் நடந்துச் சென்றான்.

 

ஆதிரை கொஞ்சம் பதற்றமாகி “தர்ஷன் ருத்ரா” என்று வேகமாக சென்றவள் சட்டென்று நின்றவனின் தோளில் வேகமாக வந்ததில் மூச்சு வாங்க அவன் மேல் கைவைத்தவள் “சாரி ருத்ரா  ப்ளீஸ் சாரி நான் உங்களை ஹேர்ட்  பண்ணனும் சொல்லலை சாரி” என்றாள்.

 

அவனோ அமைதியாக நிற்கவும் இவளோ அவளையும் அறியாமல் அவனின்  தோள்  மீது அழுத்தம் கொடுத்தவாறே “ரொம்ப கோவப்படுறீங்க ருத்ரன் சாரி” என்றாள்.

 

அவனோ சரியென்பது அவளைப் பார்த்தான்.

அவனின் தோளின் மீது  இன்னும் கைவைத்திருந்தாள்.அதை அவளும் கவனிக்க பதறிப்போய் கரங்களை விலக்கிக் கொண்டாள்.

“சரி வாங்க போகலாம் ஆதி இது தான் கடைசி முறை” என்று அவள் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டு நடந்தான்.அடுத்த ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் வந்தது.இருபது நிமிடத்தில் வர வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் கழித்து வந்தனர்இருவரும் எதிரெதிர்  இருக்கையில் அமர்ந்தார்கள்.

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
0
+1
1
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்