Loading

அத்தியாயம் – 40

 

இன்று,

 

அங்கு கட்டிலில் அமர்ந்து அவனையே அவள் ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருக்க அவனின் உற்சாகமான குரலும் அவைன் பாடலும் அவளுக்கு கடுப்பைக் கிளப்பியிருந்தது.

 

“பொண்டாட்டி இங்க குத்துக்கல்லு மாதிரி உட்கார்ந்திருக்கேன் இவனுக்கு பாட்டு என்னைய பார்க்குறானா பாரு பக்கி இதுல பாட்டு ஒன்னு தான் குறைச்சல்” என முனுமுனுத்தவள் அவனை சைட் அடிக்கவும் மறக்கவில்லை.

 

அவன் கண்ணாடியில் அவள் செய்கையை ரசித்துக் கொண்டே வந்த சிரிப்பை அடக்கியவன் ,”ப்ரியவர்ஷினி ஈவ்னிங் நம்ம வெளிய போறோம் ரெடியா இரு” என தகவல் போல் கூறியவன் அவள் அடுத்த கேள்வி கேட்கும் முன் அங்கிருந்து எஸ்கேப் ஆகியிருந்தான்.

 

‘ப்ரியவ்ர்ஷினியாம்ல இருடா மவனே எல்லாத்துக்கும் சேர்த்து உன்னை வச்சுக்கிறேன்’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டவள் மாலைக்காக இப்போதிருந்தே காத்திருக்க ஆரம்பித்தாள்.

 

மாலை சொன்னது போல் அவளை வந்து அவன் அழைத்துக் கொண்டு செல்ல, எங்கே என அவள் கேட்டதற்கு சாப்பிட என்று மட்டும் பதிலளித்தான்.

 

அந்த பதிலில் அவளுக்கு சப்பென்று ஆகிவிட ,”சாப்பிட தானா என் கிட்ட சொல்லிருந்தா நானே சமைச்சிருப்பேனே” என்று அவள் அலுத்துக் கொள்ள,

 

கார்த்திக்கிற்கு ஒரு நிமிடம் அவள் சமயலை நினைத்து கார் கைகளில் தடுமாறியது, தன்னை சமாளித்துக் கொண்டவன் ,”ஆத்தா மகமாயி நான் வீட்டுக்கு ஒரே புள்ளை அதுவும் இன்னும் கன்னி கழியாத பச்சை மண்ணு அதுல மண்ணள்ளி போட்டு என்னை கொல்ல பார்க்காத” என எப்போதும் போல் அவளை கோபப்படுத்திவிட,

 

அவளும் அதன்பின் எதுவும் பேசாமல் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டு வந்தாள்(கோபமா இருக்காங்களாமா).

 

சற்று நேரத்திற்க்கெல்லாம் அந்த ஹோட்டல் வந்துவிட, இருவரும் பார்க் செய்துவிட்டு கார்த்திக் பதிவு செய்திருந்த அந்த டேபிளில் போய் அமர்ந்தனர்.

 

அவன் வந்ததிலிருந்து அவளைக் கண்டுகொள்ளாமல் தன் போனையே நோண்டிக் கொண்டிருக்க வர்ஷூவின் கோபம் எல்லையைக் கடந்தது..

 

“ஹேய் என் பொருமையை ரொம்ப சோதிக்குற நீ ..இப்போ எதுக்கு இங்க கூட்டிட்டு வந்துட்டு நீ போனையே பார்த்துட்டு இருக்க..உண்மையை சொல்லு போன்ல என்ன பண்ற கில்மா படம் தான பார்க்குற ” என இவள் கொஞ்சம் சப்தமாக கூறி விட,

 

பக்கத்து டேபிளில் இருந்தவர்களை இவனை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தனர்.

 

அதைக் கண்டு வர்ஷூ வாய்க்குள்ளே சிரிக்க ,அவளை முறைத்த கார்த்திக்,”அடியே போனா போகுதே இவ்ளோ நாளா குக்கர் பூரி,அடுப்புக்கரி அவியல்னு நீயா செஞ்சு நாக்கு செத்துப்போய் இருக்கியே நல்ல சாப்பாடு சாப்பிடலாம்னு கூட்டிட்டு வந்தா ஓவரா பண்ற..இரு இரு உன் குக்கர் பூரி மேட்டரை இங்க இருக்க செஃப் கிட்ட சொல்றேன்” என கிண்டலடித்தான்.

 

“ச்சி போ” என முகத்தை திருப்பிக் கொண்டவள் அந்த ரெஸ்டாரன்டை சுற்றி கண்களை சுழல விட்டாள்.

 

அது ஒரு Roof top restaurant …அந்த மதி மயக்கும் மாலை வேளையில் சில்லென்ற காற்று வீச பிண்ணனியில் லேசான இசை ஒலித்துக் கொண்டு மேலும் அந்த தருணத்தை அழகாக்கியது..

 

அப்போது திடீரென்று ,

 

“ஒரு புன்னகை பூவே

சிறு பூக்களின் தீவே”

 

என்கிற பாடல் சப்தமாக ஒலிக்க,தன் மோன நிலையில் இருந்து கலைந்தவள் திரும்பி பார்க்க கார்த்திக் சேரில் இருந்து எழுந்து ஆட அவனைத் தொடர்ந்து அங்கிருந்து நிறைய பேர் இவனுடன் சேர்ந்து கொண்டு பிண்ணனியில் ஆடத் தொடங்கினர்..

 

“ஒரு புன்னகை பூவே

சிறு பூக்களின் தீவே

நீ என்னை மட்டும் காதல் பண்ணு

என் வாலிப நெஞ்சம்

உன் காலடி கெஞ்சும்

சிறு காதல் பிச்சை போடு கண்ணு

நான் கெஞ்சி கேட்கும் நேரம்

உன் நெஞ்சின் ஓரம் ஈரம்

அச்சச்சோ அச்சோ காதல் வாராதோ”

 

என பாடிற்கு ஏற்ப நடனமாடியவர்கள் கைகளில் அதற்கு தகுந்தாற் போல் பொம்மைகள்,ரோஜா கொத்துகள் என வைத்து ஆட, வர்ஷூவிற்கு நடப்பதை நம்பவே முடியவில்லை…’இவன் எப்போ flash mobலாம் ரெடி பண்ணான்..இவனுக்கு அவ்ளோ மூளை இருக்கா…அய்யோ நம்பவே முடியலையே..கேடி கேடி ப்ளான் பண்ணி தான் கூட்டிட்டு வந்திருக்கு’ என மனதிற்குள் செல்லமாக அவனை கொஞ்சிக் கொண்டாள்.

 

“சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும்

ஓடாதம்மா வீழாதம்மா

சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்

சூதாதம்மா ரீலுதாம்மா

உன் படுக்கை அறையிலே

ஒரு வசந்தம் வேண்டுமா

உன் குளியல் அறையிலே

விண்டர் சீசன் வேண்டுமா

நீ மாற சொன்னதும்

நான்கு சீசனும் மாற வேண்டுமா

லவ் பண்ணு

என்பது ஆண்டுகள் இளமையும் வேண்டுமா

மெய்யாகுமா மெய்யாகுமா

அட வெள்ளை வெள்ளையாய்

ஓர் இரவு வேண்டுமா

புது வெளிச்சம் போடவே

இரு நிலவு வேண்டுமா

உன்னை காலை மாலையும்

சுற்றி வருவது காதல் செய்யவே

லவ் பண்ணு ஐயோ பண்ணு”

 

என பாடி முடிக்க, அங்கிருந்த அனைவரின் கரவோசை காதைக் கிழித்தது..சுற்றி ஆடியவர்களின் வரிசையாக நிற்க அவர்கள் கையில் ஒரு ஒரு அட்டை இருந்தது ..ஒரே நேரத்தில்ந்த அட்டையை அனைவரும் திருப்ப,அதைக் கண்ட வர்ஷூ சந்தோஷத்தில் திக்கு முக்காடிப்போனாள்.

 

அந்த அனைத்து அட்டைகளையும் வரிசையாக சேர்த்ததில் இவளின் நிழற்படம் கிடைத்தது..

 

அவள் முன்னே அவள் உயரத்திற்கு ஒரு டெடி பொம்மையை கொண்டு வந்த கார்த்திக்,அவளிடம் அதை கொடுத்துவிட்டு அவள் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் ,

 

தன் பேன்ட் பாக்கெட்டிற்குள் இருந்து ஒரு பெட்டியை எடுக்க,’ஓ ரிங் வேறயா’ என அவள் நினைக்க,

 

அவள் நினைப்பை பொய்யாக்குவதைப் போல் உள்ளே மெட்டி இருந்தது..

 

அவள் கண்களோடு தன் கண்களை கலக்க விட்டவன்,”என்ன டா ரிங் போடாம மெட்டியை தூக்கிட்டு வந்திருக்கேனேன்னு பார்க்குறியா?? நான் உன் புருஷன்..ரெண்டு தடவை கல்யாணம் நடந்த போதும் உனக்கு நான் மெட்டி போடவே இல்லை..இது உன் காலுல இருக்க வரைக்கும் உன் காதலுக்கு அடிமையா உன் காலுக்கடில நான் விழுந்து கிடக்கேன்னு உனக்கு தோணனும்..அதுக்கு தான் இந்த மெட்டி வர்ஷூ..” என்றவன் அவள் காலை எடுத்து தன் மடியில் வைத்து மெட்டியை அணிவிக்க ,அவளுக்கு தேகமெல்லாம் சிலிர்த்தது..

 

மெட்டியை அணிவித்து விட்டு நிமிர்ந்தவன் அவள் கண்களை பார்த்து ,”I love you varshu..from the bottom of my heart.. என் மனசுல ரொம்ப வருஷத்துக்கு முன்னாடியே நீ நுழைஞ்சுட்ட.. உன்னை கடைசி வரைக்கும் பத்திரமா என் மனசுக்குள்ள வச்சு பார்த்துக்க ரொம்ப ஆசையா இருக்கு.. எனக்கு ஹரி மாதிரிலாம் என்னோட காதலை காட்ட தெரியாது.. ஆனா கண்டிப்பா உன்னை என்னைக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்..நீ சம்மதிக்கலனாலும் உனக்கு பாதுகாப்பா உன்னோட நிழல் போல வருவேன் வாழ்க்கை முழுக்க, நீ போதும் போதும்னு சொல்ற அளவுக்கு உன்னை சிரிக்க வைக்கிற இந்த காமெடி பீஸை உன் காதலனா ஏத்துக்க உனக்கு சம்மதமா?? ” என தன் காதலை அவன் பாணியில் உரைத்துவிட்டு அவள் பதிலுக்காக காத்திருந்தான்.

 

சுற்றியிருந்த அனைவரும் ,’மீ டூ ‘ சொல்லுங்க என கத்த ,

 

இதை விட அழகாக தன் காதலை யாரலும் சொல்லி விட முடியுமா என்று தான் வர்ஷூவிற்கு தோன்றியது.

 

அவளிற்கு சந்தோஷத்தில் வார்த்தைகள் வரவில்லை, மாறாக உதடு முழுக்க புன்னகையும் கண்கள் முழுக்க கண்ணீரோடு அவனுக்கு சமமாக மண்டியிட்டு அமர்ந்தவள் அவன் எதிர்பார்க்கும் முன் அவனை இறுக்கி அணைத்திருந்தாள்.

 

சுற்றியுள்ளவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைக் கிழிக்க, அவளோ அதையெல்லாம் கண்டுகொள்ளாது அவனை மேலும் அணைத்துக்கொண்டே அவன் காதோரம் “ஐ லவ் யூ டூஊஊஊஊஊ டா என் கேடி புருஷா” என கத்த, அவன் சந்தோஷத்தில் அப்படியே அவளைத் தூக்கி சுற்றி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினான்.

 

சரியாக அதே சமயம்,

“நீ கெஞ்சி கேட்கும் நேரம்

என் நெஞ்சின் ஓரம் ஈரம்

அச்சச்சோ அச்சோ காதல் வந்தாச்சோ” பெண் குரலில் வந்த அந்த வரிகளை அவர்கள் ஒலிக்க விட்டனர்..

 

“கேடி பாட்டு கூட ஓகே சொல்லுற மாதிரி தேடி பிடிச்சிருக்கான் பாரு..காதலிக்கும் ஆசையில்லை சாங்க் போட்டா லாஸ்ட்ல ரிஜெக்ட் பண்ணிருவேன்னு எப்படி வேலை பார்த்திருக்கான்.. என் அறிவுக் குட்டி ” என அவனைச் செல்லம் கொஞ்சியவள் அவன் நெற்றியில் தன் முதல் முத்தத்தைப் பதித்தாள்.

 

இருவர் மனதிலும் மற்றொருவர் மீது கொண்டுள்ள அந்த ஆழமான காதலை இருவரும் புரிந்து கொண்டனர், இனி என்ன ஒரே குஜால்ஸ் தான், வாங்க நம்ம எஸ்கேப் ஆய்ரலாம்.

 

“சந்து சந்து இன்னும் ஒரே ஒரு வாய் ப்ளீஸ்” என ஸ்ரீ சந்துவின் பின் சாப்பாட்டுத் தட்டை வைத்து சுத்திக் கொண்டிருக்க, சிறியவர்கள் மட்டும் ஹாலில் அமர்ந்து அதை ரசித்துக் கொண்டிருந்தனர்.

 

ஹரிக்கு இப்போது பரிபூரணமாக குணமாகி விட்டதால் பெரியவர்களெல்லாம் தங்கள் வேலையைப் பார்க்க மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றிருந்தனர்.

 

சந்துவை அழைத்துப் போக எவ்வளவோ கெஞ்சியும் ஸ்ரீ ஒற்றைக்காலில் நின்று மறுத்து விட்டதால் வேறு வழியில்லாமல் அவளை இங்கு விட்டுச் சென்றிருந்தனர்.

 

சித்துவையும் ஹரியின் கம்பெனியிலே பார்ட்னராக்கிக் கொண்டான் ஹரி, மேலும் சித்து சந்துவிற்கு தனிமை கொடுக்க வேண்டி அவர்களுக்கும் அந்த ப்ரென்ச் ஆன்ட்டியிடம் சொல்லி இன்னும் சில வாரங்களில் அவர்களின் ப்ளாட்டில் இருந்து காலியாகப் போகும் ஒருவரின் வீட்டை இப்போதே புக் செய்து வைத்திருந்தான்.

 

அது இவர்களுக்கு அடுத்த ஃப்ளோர் என்றாலும் ஒரே அப்பார்ட்மென்ட்டில் கிடைத்ததே பெரிது என அதை புக் செய்து வைத்துவிட்டான்.

 

இவர்களின் இந்த பாசமழையோடு சேர்த்து அங்கு எப்போதும் அடித்துக் கொள்ளும் வர்ஷூவும் கார்த்திக்கும் வேற கொஞ்சிக் கொண்டு அமர்ந்திருந்ததை என்றும் போல் இன்றும் வியப்புடன் பார்த்த விஜய் ஹரியின் காதில் ,” டேய் என்ன டா நடக்குது இங்க?? எலியும் பூனையுமா இருந்தா எல்லா பக்கிங்களும் ஏதோ ஃபெவிகால் போட்டு ஒட்டுன மாதிரி ஒட்டிக்கிட்டு திரியுதுங்க…இந்த கார்த்திக் கூட ஏதோ டான்ஸ் ஆடி மயக்கிட்டான்னு வச்சுக்கிட்டாலும் இந்த சந்துவும் ஸ்ரீயும் எப்படி ஒன்னா ஆனாங்க அது தான் சிதம்பர இரகசியம் மாதிரி மண்டையை போட்டு பிக்க வைக்கிது..எல்லாரும் பொறுக்காம ஒரு நாள் ரெண்டு பேர்கிட்டயும் கேட்டும் பார்த்துட்டோம் பக்கிங்க வாயைத் தொறக்க மாட்டேனுதுங்க” என அவன் புலம்பித் தள்ள,

 

அவன் சொல்வதைக் கேட்டு ஹரி இரகசியமாக புன்னகைக்க, அதைக் கண்டுகொண்ட விஜய் ,”என்னடா ஒரு மார்க்கமா சிரிக்குற?? அப்போ உனக்கு அந்த இரகசியம் தெரியுமா?? தெரிஞ்சா சொல்லு டா மண்டை வெடிச்சிரும் போல” என விஜய் ஆர்வமாக கேட்க,

 

“இல்லை டா எனக்கு மட்டும் எப்படித் தெரியும்” என அவனுக்கு பதிலளித்த ஹரியின் மனதில் ஸ்ரீ மனதில் இருக்கும் மொத்த இரகசியங்களையும் தெரிந்து கொண்ட நாள் கண்முன் விரிந்தது.

 

 

அன்று ஸ்ரீக்கு ப்ராஜெக்டின் கடைசி கட்டமான வைவா, அப்போது ஹரிக்கு அடிபட்டிருந்த சமயமாதலால் அவனை விட்டு நகரமாட்டேன் என அடம்பிடித்தவளை வலுக்கட்டாயமாக அனைவரும் அனுப்பி வைத்திருந்தனர்.

 

அவள் சென்றதும் அந்த இடமே வெறுமையாக காட்சியளிக்க, ஏதாவது வேலையில் கவனத்தைச் செலுத்தலாம் என்று நினைத்த போது தான் அவனுக்கு அன்று ஸ்ரீயின் டைரியை எடுத்து வைத்தது நியாபகம் வந்தது.

 

அதை நினைத்ததும் மனதெல்லாம் பூரிப்பாக,”அப்படி எனக்குக் கூடத் தெரியாம இந்த குட்டச்சி அப்படி என்ன தான் எழுதி வச்சிருக்கா” என நினைத்தவன் அதை தன் கபோர்டில் இருந்து எடுத்து , கதவைப் பூட்டிவிட்டு வந்தவன் கட்டிலில் அமர்ந்து கொண்டு ஆவலாக அதைப் பிரித்து படிக்க ஆரம்பித்தான் அதற்குள் இருக்கும் பூகம்பத்தைப் பற்றி அறியாமல்.

 

பாதி பக்கத்திற்கும் மேலாக ஹரியைப் பற்றி தான் கிறுக்கி வைத்திருந்தாள் அந்த காதல் கிறுக்கி, அவன் சிறுவயதில் அவளிடம்,”எழுந்துக்கோ லட்டு ஸ்கூலுக்கு லேட் ஆச்சு” என்றது முதல் கடைசியாக ,”ஐ லவ் யூ ஆனா உனக்கும் எனக்கும் இருந்த காதல் இன்னைக்கோட செத்துப்போச்சு” என்று அவள் மனதைக் கொன்றது வரை அனைத்தையும் ரசித்து, வலித்து,சிரித்து, அழுது எழுதி வைத்திருந்தாள்.

 

அனைத்தையும் படித்தவனுக்கு அவளின் காதலைப் பற்றி முன்பே தெரிந்தாலும் , இன்று அவளின் கைப்பட எழுதியதைப் படித்து தெரிந்து கொள்ளும் போது வியப்பாகவும், பிரம்மிப்பாகவும் இருந்தது.

 

ஒருவரால் இப்படி பைத்தியக்காரத்தனமாக நேசிக்கப்படுவது எவ்வளவு பெரிய வரம் என்று ஹரி அப்போது உணர்ந்தான்.

 

ஒரு சிலிர்ப்புடனே அடுத்த பக்கத்தை திருப்பியவன் அதில் எழுதியிருந்த வரிகளைக் கண்டு அதிர்ந்து போனான்.

 

” பிறந்ததும் கருவில் சுமந்தவளால் அனாதையாக்கப்பட்ட என்னை

இத்தனை வருடமாக மனதில் சுமந்தவனும் அனாதையாக்கிவிட்டான்”

 

என்ற வரிகளைத் தொடர்ந்து சில கண்ணீர் துளிகள் இதை அவள் எழுதிய போது அழுதிருந்ததை அவனுக்கு எடுத்துக் கூறியது.

 

இதே போல் தான் அன்றும் அவள் தூக்கத்தில் ,”நீயும் என்னை அனாதையா விட்டுட்டு போய்ராத ஹரி” என்று உளறியது அவனுக்கு நினைவில் வர, இதற்கு என்ன அர்த்தம் என தெரிந்து கொள்ள நடுங்கும் விரல்களுடன் அடுத்த பக்கத்தை திருப்பினான்.

 

சாருமதி பல வருடங்கள் கழித்து கருவுற்றிருந்ததில் அந்த குடும்பமே அவரை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடியது. சாருமதியும் நல்லசிவமும் தங்களின் முதல் வாரிசை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்க, அவரின் பிரசவநாளும் வந்தது.

 

ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பை பொய்யாக்கும் வகையில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்தது.

 

அதே சமயம் தான் அதே மருத்துவமனையில் ஸ்ரீயும் பிறந்தாள். அவள் பிறந்ததுமே அவளை விட்டுவிட்டு அவளின் அன்னை தப்பித்துச் சென்றுவிட,பிறந்த சில நிமிடங்களிலே அநாதையாகிப் போன ஸ்ரீயை எண்ணி வருந்திய அந்த மருத்துவர், அதை ஒரு நர்ஸிடம் புலம்ப, யதேச்சையாக அந்தப்பக்கம் வந்த கலையின் காதுகளில் அது விழுந்தது.

 

ரோஜாப்பூ போல் சிறியதாக அந்த பூந்துவாலைக்குள் இருந்த ஸ்ரீயை அநாதை என்று சொல்வதே கலையின் மனதைப் பிசைய, எதையும் யோசிக்காமல் அவரிடம் குழந்தையை தான் வளர்க்கப்போவதாகச் சொல்லி வாங்கி வந்து விட்டார்.

 

மருத்துவருக்கும் எங்கோ இவள் ஆசிரமத்தில் கஷ்டப்படுவதை விட, இந்த வீட்டில் மகாராணியாக வாழட்டும் என அவர்களிடமே மகிழ்ச்சியாக தந்துவிட்டார்.

 

அவர் ஸ்ரீயை தன் மகளாக வளர்க்க தான் வாங்கி வந்தார், ஆனால் அந்த சமயம் சாருமதியின் குழந்தை இறந்து பிறக்க, அப்போது பார்த்து தங்கள் வீட்டிற்கு வந்த குழந்தை இறைவன் தனக்காக அனுப்பி வைக்கப்பட்ட தேவதை என சாருமதி குழந்தையை ஆசையுடன் வாங்கிக் கொண்டார்.

 

அதன் பின் அவளே அந்த வீட்டின் இளவரசியாக தங்கத் தட்டில் வைத்து அனைவரும் தாங்கினர். இருந்தும் அவளுக்கு ஹரியின் மீது ஏனென்றே தெரியாத பாசம், இது தான் ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் போலும்.

 

அவளிற்கு மட்டுமல்லா வீட்டில் உள்ள பெரியவர்களைத் தவிர யாருக்கும் இந்த உண்மை தெரியக்கூடாது என்பதில் அனைவரும் அதிக கவனம் எடுத்து அவள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்தனர்.

 

அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்தது ஸ்ரீக்கு நான்கு வயதைத் தொடும் வரை, அவளின் நான்காவது பிறந்தநாளின் போது வந்திருந்த உறவினப் பெண்மனி ஒருவர் அந்த மருத்துவமனையில் வேலை செய்த பெண் மூலம் காற்று வாக்கில் ஸ்ரீயைப் பற்றி விழுந்த உண்மையை கலையையும் சாருமதியையும் அழைத்து விசாரிக்க,

 

அறைக்குள் ஏதோ எடுக்க வந்த ஸ்ரீயின் காதிலும் இவர்களின் பேச்சு விழுந்தது.

 

அவர்கள் கூறியதை முதலில் மறுத்த இருவரும் அவரின் தொல்லை தாங்க முடியாமல் ஸ்ரீ அநாதை தான் என ஒத்துக்கொள்ள, அது அந்த பிஞ்சின் மனதில் ஆழமாக பதிந்து போனது. ஸ்ரீ அப்போதே விரைவில் எது சொன்னாலும் சட்டென புரிந்து கொள்ளும் ஆற்றல் உடையவள், அது போல் தான் டிவியில் பார்த்ததை வைத்து அநாதை என்றால் என்ன அன்பது அவளுக்கு நன்றாக புரிந்து போக மனம் மிகவும் வலித்தது.

 

அவர்கள் அதை வேறு யாரிடமும் சொல்லக்கூடாது என அந்தப் பெண்மனியை மிரட்டி விட்டே சென்றனர்.

 

அந்த உண்மை தெரிந்ததில் இருந்து தான் ஸ்ரீயின் நடவடிக்கையில் மாற்றம், எங்கே தான் அநாதை என்பதால் இவர்கள் முக்கியமாக அவளின் உயிரான ஹரி தன்னைப் பிரிந்து சென்று விடுவானோ என்ற பயத்தில் தான் அவள் அவனை யாரிடமும் சேர விடாமல் தினமும் சண்டை பிடித்தாள்.

 

அவளுக்கு தான் அநாதை என்று புரிந்தாலும் தன்னால் இந்த குடும்பத்தையும் ஹரியையும் விட்டு பிரிந்து செல்ல முடியாது என உறுதியாக நம்பியவள் , அவனை யாரிடமும் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

 

ஹரிக்கு சந்துவை பிடிப்பதால் அவளுக்கும் சந்துவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் அவளுடன் ஹரி பாசமாக பழகினால் எங்கே சந்துவிற்கு ஒருநாள் உண்மை தெரிந்து அவள் ஹரியிடம் இருந்து தன்னைப் பிரித்துவிட்டால் என்று பயந்து தான் அவள் சந்துவையும் தன்னையும் சம்பந்தப்படுத்தி அடிக்கடி தன்னையும் அவனையும் வருத்திக் கொண்டிருந்தாள்.

 

மற்றபடி சந்துவிடம் தனியாக இருக்கும் போது மிகவும் பாசமாகத் தான் பழகுவாள்.

 

ஆதிராவை விட அவளுக்கு அமைதியாக எப்போதும் ஸ்ரீ அக்கா என்று தன்னைச் சுற்றி வரும் சந்துவைத் தான் மிகவும் பிடிக்கும்.

 

அவளை எந்த அளவு பிடிக்குமென்றால், ஹரியின் அளவிற்கு அவள் நேசித்த ஒன்று ஓவியம், அதை அவளுக்காக விட்டுக்கொடுத்தாள் ஸ்ரீ.

 

ஆம் அவளுக்குள் அவளையும் அறியாமல் ஒளிந்திருந்த திறமை தான் படம் வரைவது.

 

சந்துவும் நன்றாக வரைவாள் ஆனால் ஸ்ரீயின் அளவிற்கு வராது. ஸ்ரீ தன்னுள் இருந்த திறமையை உணர்ந்துகொண்டது அவள் ஐந்தாவது படிக்கும் போது தான் , அவர்கள் பள்ளியில் அப்போது சிறுவர்களுக்கான ஓவியப்போட்டி நடந்தது, அவளின் வகுப்பாசிரியர் அவள் புத்தகத்தில் கிறுக்குவதைக் கண்டு அவளின் பெயரையும் இந்த போட்டியில் சேர்த்துவிட, சந்துவும் அதில் கலந்து கொண்டாள்.

 

ஸ்ரீ அழகாக என்றோ தன் மனதில் பதிந்த தஞ்சை பெரிய கோவிலை வரைய, அது அப்படியே தத்ரூபமாக வந்திருந்தது.

 

நிஜமாக அது ஒரு பத்து வயது சிறுமி வரைந்தது என கற்பூரம் அடித்துச் சொன்னால் கூட யாரும் நம்ப மாட்டார்கள் அந்த அளவிற்கு அச்சு பிசகாமல் வந்திருந்தது, சந்துவிற்கு ஓவியத்தின் மீது தீராத காதல் என்று தான் சொல்ல வேண்டும் அவளுக்கு அது அவ்வளவு பிடிக்கும், அவள் அன்று கிருஷ்ணரின் படத்தை வரைந்திருந்தாள்.

 

அவளைப் பற்றி தான் தெரியுமே அனைத்திற்கும் பயப்படுபவள் , அன்றும் ரிசல்டை நினைத்து பயந்து ஸ்ரீயிடம் புலம்ப, ஸ்ரீக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

 

சந்துவைப் பற்றி அவளுக்குத் தெரியும், நிச்சயம் இதில் தோற்றுப்போனால் அடுத்து அவள் வரைவதற்கே பயப்படுவாள், எனவே ஏற்கனவே தன்னுடைய ஓவியத்திற்கு தான் முதல் பரிசு என அவளின் வகுப்பாசிரியை சொன்னதை நினைத்து வருந்தியவள், சந்துவிற்காக தனக்கு மிகவும் பிடித்த ஒன்றை அன்று விட்டுக் கொடுத்தாள்.

 

அவளின் ஆசிரியரிடம் சென்று கெஞ்சிக் கூத்தாடி தன்னுடைய ஓவியத்தை அங்கு காட்சிக்கு வைக்காமல் தான் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறி அவரிடம் பல திட்டுக்களை வாங்கிக் கொண்டு அவளின் ஓவியத்தை பெற்றுக் கொண்டாள்.

 

அவள் நினைத்ததைப் போல் முதல்பரிசு சந்துவிற்கே கிடைக்க, அவளை கைகைளில் பிடிக்க முடியவில்லை.

 

வீட்டில் உள்ளோர் அனைவரும் அவளைப் புகழ, ஸ்ரீ அதை சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருந்தாள், கார்த்திக் அவளை ‘உன்னோடதை அங்க வைக்க கூட முடியாத அளவுக்கு கேவலமா இருந்துச்சோ’ என கிண்டல் செய்த போது வலித்தாலும் சந்துவிற்காக அதைப் பொருத்துக் கொண்டாள்.

 

ஹரிக்கு முக்கியமாக இது தெரியக்கூடாது தெரிந்தால் நிச்சயம் அவன் தன்னுடைய திறமையை அனைவரும் பாராட்டும் வண்ணம் வளரச் செய்ய முயல்வான், அது சந்துவை ஏதாவது ஒரு வகையில் பாதித்துவிடும் என்று நினைத்தவள் தனக்குள்ளேயே அந்த திறமையையும் தன் மனதையும் மறைத்துக் கொண்டாள்.

 

இது ஒரு சாதரணமான விஷயமாகத் தெரிந்தாலும் நிச்சயம் ஒரு கலைஞருக்கு அவனுடைய கலைத் திறமையை தனக்குள்ளே ஒளித்துக் கொள்வது எவ்வளவு பெரிய வலி என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும், அதை ஸ்ரீ தாங்கிக் கொண்டதற்கு ஒரே காரணம் சந்து.

 

அவள் அன்று ஒரு நாள் சந்துவைத் திட்டியதற்கு காரணம் அவளின் முகம், அவளின் முகம் அப்படியே கலையை உரித்து வைத்திருக்கும், வீட்டில் உள்ள அனைவருக்குமே லேசாக முகஜாடை ஒத்துப்போகும் ஆனால் சந்து மட்டுமே தன் அன்னையை உரித்து வைத்து பிறந்திருப்பாள்.

 

அன்று வந்த உறவினர் ஒருவர், சந்துவையும் ஸ்ரீயையும் பார்த்துவிட்டு ,ஸ்ரீயைப் பார்த்து ,”இந்த பொண்ணு உங்க குடும்பத்துக்கே சம்பந்தம் இல்லாதது போல இருக்கு, ஆனா நம்ம சந்து அப்படியே கலை மதினியை உரிச்சு வச்சிருக்கா” என சாதரணமாக கூறியது ஸ்ரீயின் மனதில் பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியது.

 

எங்கே இதே போல் ஹரியும் நினைத்து உண்மையைக் கண்டுபிடித்துவிடுவானோ என பயத்தில் இருக்கவும், அதற்கேற்றாற் போல் ஹரி அன்று போன் வேறு செய்யாதது அவளின் மூளையை மழுங்கச் செய்திருந்தது.

 

அப்போது பார்த்து சந்து வந்து ஹரியைப் பற்றிக் கேட்க, அவளுக்கு அவள் முகமும் அந்த பெண்மனி சொன்னதும் மாறி மாறி மனதில் ஊர்வலம் போக, எங்கே இவளும் ஹரியும் தன் ரகசியத்தை கண்டுபிடித்துவிடுவார்களோ என்ற பயத்தை மறைக்க கோபமாக அவளை திட்டி விட்டாள்.

 

அதன் பின் அவளை விட இவள் வருந்தியது தான் அதிகம் இருந்தும் அவளிடம் மீண்டும் சென்று பேசினால் எங்கே அவள் முகத்தைப் பார்க்கும் போது தன்னையும் மீறி அவளை காயப்படுத்தி விடுவோமோ என்று ஒரு பக்கம் பயந்தவள் , இன்னொரு புறம் எங்கே அவளுக்கு என் முகத்தைப் பார்க்க பார்க்க அந்த பெண்மனி சொன்னதைக் கொண்டு நான் அநாதை என கண்டுபிடித்துவிடுவாளோ எனவும் பயமாக இருந்ததால் தான் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தாள்.

இருந்தும் அவளுக்கு ஒன்று என்றால் முதலில் துடிப்பது ஸ்ரீயாகத் தான் இருக்கும், அதன் பின் நடந்ததெல்லாம் அவனுக்கு அன்று சிந்தியா வீட்டில் கூறியதிலிருந்தே தெரிந்துவிட,

 

கடைசியாக இந்த நான்கு வருடமும் சந்துவையும் ஹரியையும் இழந்துவிட்டு குற்றவுணர்ச்சியும் கவலையும் சேர்ந்து தினமும் அவள் மனம் வெதும்பி போய் எழுதிய கதையைப் படிக்க முடியாமல் அப்படியே மூடி வைத்துவிட்டான்.

 

அந்த டைரியை வைத்தவனுக்கு மனதில் யாரோ சம்மட்டியைக் கொண்டு அடித்ததைப் போல் வலித்தது, இப்போது அவளின் செயல் ஒவ்வொன்றிற்கும் அவனுக்கு காரணம் புரிந்தது.

 

வீட்டினர் ஏன் அவளிடம் இவ்வளவு அன்பு வைத்திருந்தார்கள் என்றும் வெகு தாமதமாய் புரிய வந்தது. முன்பு அவளின் செயல் தவறென்று கோபப்பட்டதெல்லாம் அவள் மனநிலையிலிருந்து பார்க்கும் போது சரியாகப்பட்டது.

 

சிறுவயதிலிருந்து அந்த பயத்தோடு அவள் வாழ்ந்து வந்தது அவனுக்கு மரணவலியைத் தந்தது.

 

இப்போது சந்து எவ்வாறு இவளுடன் ராசியானாள் என்பது அவள் சொல்லாமலே அவனுக்கு புரிந்து போனது. என்ன தான் மனம் பேதலித்து போனாலும், ஒருவரின் பிடித்தங்களில் மாற்றம் இராது, அதே போல் தான் சந்துவிற்கு ஓவியத்தின் மீதுள்ள காதலை அறிந்து கொண்ட ஸ்ரீ அதை வைத்து தான் அவளுடன் ராசியாகியிருப்பாள் என சரியாக யூகித்த ஹரிக்கு, குற்றவுணர்ச்சியாக இருந்தது.

 

அந்த டைரியை எடுத்து அவள் வைத்திருந்த இடத்திலே வைத்தவன் , தன் மனதில் உள்ள பாரம் குறையட்டும் என குளித்து விட்டு வந்தான்.

 

 

தண்ணீர் மேனியில் பட்டதும் அவனுக்கு புத்துணர்ச்சி தோன்ற, புது ஹரியாக மாற நினைத்தான்.

 

‘இதுவரை தெரிந்தும் தெரியாமலும் இருவருமே பல தவறுகளைச் செய்து பட்டு தெளிந்து விட்டோம் இனிமேல் நம் வாழ்க்கையை அழகாக மாற்ற வேண்டியது நம் கையில் தான் உள்ளது ‘ என தனக்குள் கூறிக்கொண்டவன்,

 

இனிமேல் அவளிற்கு எந்த சூழ்நிலையிலும் உண்மை தெரிந்தாலும் கூட ஹரி நம்மை விட்டுச் செல்ல மாட்டான் என்று எண்ணும் அளவிற்கு அவளிற்கு ஒரு தாயாக, தந்தையாக, நண்பனாக, காதலனாக, கணவனாக தான் இருக்க வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்டவன், அவள் என்னிடம் இருந்து மறைக்க நினைத்த விஷயங்கள் மறைக்கப்பட்டதாகவே இருக்கட்டும், அவள் என்றும் என் அத்தை பெத்த பூங்குயிலே எங்கள் குடும்பம் என்னும் கூட்டை அவள் வரவால் அழகாக்கிய பூங்குயில் தான் அதில் மாற்றம் இல்லை என தனக்குள் கூறிக் கொண்டான்.

 

முன்பிருந்தே அவள் மேல் பித்தனாக இருந்தவன் , அதற்குப் பின் அவள் எதிர்பார்க்கா அளவு அன்பை வாரி வழங்கி அவளை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி முத்தெடுக்க வைத்தான்.

 

இவை அனைத்தையும் அவன் நினைத்துப் பார்க்க, சந்துவிற்கு ஊட்டிவிட்டு அவன் அருகில் வந்த ஸ்ரீ அவன் தோளில் இடித்துக் கொண்டு அமர, தன் நினைவிலிருந்து கலைந்தவன் புன்னகையுடன் அவளை ஏறிட்டான்.

 

“என்ன சார் யோசனை எல்லாம் பலமா இருக்கு எந்த கோட்டையை பிடிக்க போறீங்க” என கிண்டல் செய்ய,

 

 

“கோட்டையெல்லாம் பிடிக்கலை நம்ம குழந்தையை எந்த ஸ்கூல்ல சேர்க்கலாம்னு யோசிச்சுகிட்டு இருந்தேன்” என அவன் கண்ணடித்துக் கூறினான்.

 

“அட ஆமா ஹரி இப்போலாம் ஸ்கூல்ல சீட் கிடைக்கிறதைவிட, நிலாவுல போய் வடை சுடுறது ஈசியா இருக்கு.. இப்போவே போய் லைன்ல நின்னா தான் பாப்பாக்கு சீட் கிடைக்கும்” என அவளும் அவனை ஒத்துப் பேச,

 

கார்த்திக் இருவரையும் பார்த்து ,”ஜாடிக்கேத்த மூடி..நல்லா வருவீங்க கர்மம் கர்மம்” என மண்டையில் அடித்துக் கொண்டான்.

 

“போடா உனக்கு பொறாமை” என பலிப்புக் காட்டியவள் ஹரியில் மார்பில் சாய்ந்து கொள்ள,

 

அவனும் அவளை அணைத்துக் கொண்டான் ,அந்த அணைப்பு ,”உயிர் விடும்வரை உனக்கு என்றும் நான் இருப்பேன் கண்மனி” என சொல்லாமல் சொல்லியது அவனின் காதலை!!!!!!

 

Click on a star to rate it!

Rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

இந்த படைப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
+1
1
+1
9
+1
0
+1
0

உங்கள் மேலான கருத்தை பதிவிட்டு எழுத்தாளரின் எழுத்துக்கு நாணயங்களையும் வழங்கி ஊக்குவியுங்கள்